Followers

Wednesday, February 20, 2008

ஒரே பதிவில் வவ்வாலாரும் சத்யாவும்.

இந்த ஒரே கல்லில் இரண்டு மாங்கா பழமொழிதானுங்க மேலே உள்ள தலைப்பு.இரண்டு பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தின் பேரில் இந்த பதிவு.

நான் பாட்டுக்கு சி.வி.ஆர் காட்ற படம் உண்டு நான் உண்டுன்னு போய்ட்டு இருந்தவனை சத்யா அவர்கள் என்னமோ கொக்கி போட்டிருக்கேன் பாருங்கன்னு சொல்லி நாட்கள் பல ஆயிடிச்சு.களத்தில் அடிச்சு ஆட்ற அம்புட்டு பேரையும் விட்டுட்டு என்கிட்ட வந்து கொக்கி போட்டா நான் என்ன செய்யறது?நம்மளையும் மதிச்சு ஒருத்தர் கூப்பிட்டதால சரி நமக்கு புடிச்ச ஒரு பதிவப் பத்தி சொல்லலாம்ன்னு மனசுல நினைச்சா நினைக்கிற நேரம் ஒரு தூக்கம் போட்டு விழிச்ச நேரமா இருக்கும். அரைத் தூக்க சுகத்தில கணினிய தொடறதாவது?இந்த உலக கணினி மயம் ஆனதிலிருந்து மனுசனுக்கு 24 மணி நேரமென்பது ரொம்ப கம்மிங்க.நாளொரு வண்ணமா எல்லாமே புதுசு.இருக்கிற இட நெருக்கடியில் கொக்கி,சாவி க்கெல்லாம் நேரமே போதறதில்லை.இருந்தாலும் 2007ல் எனக்குப் பிடிச்ச பதிவர்களில் ஒருத்தரப் பத்தி எப்பவாவது நேரம் வரும்போது சொல்லிடனும்ன்னு மட்டும் ஆசை.

இப்படியே போய்ட்டிருந்தேனா.... திடீர்ன்னு நமக்கு ஒரு பின்னூட்டம்.படம் காட்றதிலேயே கவனமா இருக்கீகளே எழுதற பாட்டையே காணோமின்னு நமக்குப் பிடிச்ச வவ்வாலார்கிட்ட.நிலைமையப் பாருங்க அவருக்கு பதில் சொல்லக்கூட நேரமில்லாம தலைக்குள்ள அத்தனை மெட்டீரியலிசங்கள்.
சரி இன்றைக்கு வவ்வாலாரையும் சத்யாவையும் ஒரு முகமா சந்திக்கலாமுன்னு மேலே கண்ட தலைப்பு.

வவ்வாலார் போன வருடத்தில் எழுதிய சிறந்த பதிவும் என்னைக் கவர்ந்ததும் எல்லா டாக்டர் பசங்களும் கொஞ்சம் கிராமத்துக்குப் போங்கன்னு அன்புமணி விடுத்த அழைப்பு.எதையுமே விவாதத்துக்குள்ளாக்கி உருப்படியில்லாமல் செய்வதில்தான் நமக்கு நாமே சமத்தாச்சே.அதுமாதிரி கிராமக் கனவும் வீணாகிப் போனது வருத்தத்திற்குரிய விசயம்.நீங்க எந்த பொருளையும்,கருவையும் எடுத்துகிட்டாலும் வெட்டியும்,ஒட்டியும் பேசுவதென்பது இயல்பான விசயமென்றாலும் தர்க்கத்தை சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம்,கூர்மை எத்தனை பேருக்கு சாத்தியம்?அந்த விதத்தில் வவ்வாலாரின் பெரும்பாலான பதிவுகள் விசய ஞானத்தோடு கூடியதாக, பதிவை ஆழ்ந்து ஆராயும்படி இருக்கும்.கூடவே பின்னூட்டங்களை அலசும் போது தான் பிடித்த பதிவுக்கு மூணே கால்தான் என்று தர்க்கம் செய்கிறாரோ என்று கூடத் தோன்றும்.ஆனாலும் அவரின் விசய ஞானம் அவர் சொல்வது மட்டுமே சரியோ என எண்ணத்தூண்டும்.எப்படியிருந்தாலும் கிராம டாக்டர் பதிவு சென்ற ஆண்டின் அவரது சிறந்த பதிவுகளில் ஒன்றாகவும் எனக்குப் பிடித்த கொக்கிகளில் ஒன்றுமாகும்.நமது தேசத்தின் கனவுகள் கிராமங்களிலேயே ஒழிந்து கொண்டிருக்கின்றன.

அப்பாடா! பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமுமாச்சு.கொக்கிக்கு கொக்கியுமாச்சு.

Wednesday, February 13, 2008

பிப்ரவரி மாத படப்போட்டிக்கு

தினசரிக் கூட்டாளி வண்டிச் சக்கரம் பார்வைக்கு

சூரிய வட்டம் பார்வைக்கு
2. தகவல் தொடர்பு கட்டிடம்


1. சந்திரன



பூமிப் பந்து பார்வைக்கு

இதோ நானும் வந்து சேர்ந்திட்டேங்க.இந்த மாதப் போட்டியின் தலைப்பைப் பார்த்தவுடன்தான் தெரிகிறது தினசரி வாழ்க்கையில் எத்தனை வட்டங்கள் என்று.போன மாதம் மெனக்கெட்டுப் படம் எடுத்தும் பின்தயாரிப்பு சொதப்பிடுச்சு.இந்தமுறை நேற்றுப் பொட்டியத்திறந்து கிளிக் செய்து இன்று அனுப்பும் முன் எந்த பிக்சலையும் குறைக்காமல் படத்திற்கான எல்லை,பெயர்,கட்டிங் தவிர எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.நம்ம மாதிரி கற்றுக்குட்டிக்கு இதுவே போதும் என்ற நினைப்பில் படம் ரிலீஸ்.

சர்வேசன் அவர்களின் HDஆரை ஒரு முறை முயற்சி செய்யனுமின்னு ஆசை.பள்ளியிலிருந்து இதுவரைக்கும் வட்டமே வாங்கிப் பழக்கப் பட்டுப் போனதால் இந்த முறையும் ஒரு வட்டம் உறுதி என்பதில் சந்தேகமில்லை.இருந்தாலும் இந்தப் போட்டி ஒரு மனநிறைவைத் தருகிறது.ஒன்றுமே அறியாமல் விட்டுப்போன தமிழைத் தொட்டுப் பார்க்கலாம் என்று தமிழ்மணத்துக்கு வந்ததில் உருப்படியாக செய்யும் ஒரே காரியம் இந்த போட்டிகளில் கலந்துகொள்வதுதான்.எல்லோரும் ஆள்ரவுண்டர்களாய் அடிச்சு ஆடும்போது நான் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து கொண்டு இந்தப் போட்டிகளுக்கு மட்டும் உள்ளேன் ஐயா சொல்லிக் கொண்டுள்ளேன்.

இனிப் படத்தைப் பற்றி சில வரிகள். சந்திரனையும் சூரியனையும் பூமிப் பந்தோடு போட்டிக்கு அனுப்பலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் சூரிய ரசிகர்கள் களத்தில் நிறைய பேர் இருப்பதாலும் கண்கட்டு வித்தை முயற்சிக்கான காலமும் தொழில் நுட்பமும் இல்லாமலும் தெரியாமலும் சூரியனும் பூமிப் பந்தும் ஜகா வாங்கிக்கொண்டார்கள்.அவர்களிடத்தில் தகவல் தொலைத் தொடர் கட்டிடம் இரவின் விளக்கொளியோடு போட்டிக்கு.கொசுறாக மற்ற படங்கள் பார்வைக்கு.

போட்டிக்கான படங்கள்.

1. சந்திரன்

2. தகவல் தொடர்பு கட்டிடம்