Followers

Thursday, January 20, 2011

சேவலு 1500 ரூவா

அலோ!யார் பேசறது?
ஆ...சொல்லுங்ண்ணா
இல்லீங்ண்ணா நான் வாங்கினதே 1500 ரூபாய்க்கு
எனக்கு கட்டுபடியாகுதுங்ண்ணா!
இல்லீங்ண்ணா! 1600ன்னா புடிச்சிட்டு போங்கண்ணா இல்லேன்னா விட்டுட்டுப் போயிடுங்க
சரிங்ண்ணா!அம்முனிகிட்ட போன் சொல்லி சொல்றேன்.புடிச்சிட்டுப் போங்க...

இப்படி பொள்ளாச்சி பஸ்ல நின்னுகிட்டே போனில் பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்துல நின்றுகொண்டிருந்த நண்பரிடம்,நம்ம காளியப்பண்ண!வாங்குன வெலக்கி கொறவா கேக்குறாரு” என்றார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு குறுகுறுங்குது.ஆட்டு விலையத்தான் பேசிக்கிறாங்களோன்னு.எங்கடா வாயைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்ன்னு பயணிக்கிற எனக்கு கேட்கவா வேண்டும்?

நான்:அண்ணா!ஆட்டு விலையா 1500 சொன்னீங்க?
பயணி::இல்லீங்ண்ணா!சேவக்கோழி என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டார்.
நான்:என்னங்ண்ணா!சேவலுக்கா இந்த வெல?
பயணி:ஆமாங்ண்ணா!இது பந்தயத்துக்கு விடறது என்றார்
நான்:பந்தயம்ன்னா நீங்க போட்டிக்கு விடறவரா?
பயணி:இல்லீங்ண்ணா!கோழிய வாங்கி பழக்கி விற்கறதோட சரி
நான்:கோழிய எங்கயேருந்து வாங்குவீங்க
பயணி:பல்லடம்,அவினாசி,திருப்பூர்,பொள்ளாச்சி,திண்டுக்கல்ன்னு
நான்:எத்தன ரூவாய்க்கு பந்தயம் போகும்.
பயணி:1 லட்சம் 2 லட்சத்துக்கு கூட போகும்.

காங்கயம் காளைய பொள்ளாச்சி சந்தையில வித்துகிட்டிருந்த காலம் போய் இப்ப சண்டைக்கோழியும்,கோழிப்பண்ணையும் கொங்கு நாட்டின் வணிகப் பெருக்கங்களா?

மதுரக்காரங்க வருசத்துக்கொரு தடவ ஜல்லிக்கட்டு விளையாண்டா இங்கே வருசம் முழுதும் கோழிச்சண்டையா இல்ல இதுவும் ஜல்லிக்கட்டுக்கு பங்காளியா?தெரிஞ்சவங்க சொல்லுங்க!

பதிவுக்கு மத்தளமா மணவாடு ஆந்தராவில் கோதாவரி கோழிச்சண்டை கூகிளண்ணன் கிட்ட கடன் வாங்கி இளகாத கோழி பிரியர்களுக்காக இங்கே.

எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.

10 comments:

பழமைபேசி said...

இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக் கூடப் போயிருந்தனே?!

http://maniyinpakkam.blogspot.com/2010/08/blog-post_09.html

Chitra said...

எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.


.....அங்கே மிகப் பெரிய அளவில் நடக்கும் என்று ஒரு பிலிப்பினோ சொல்ல கேட்டிருக்கேன்.

ராஜ நடராஜன் said...

//இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக் கூடப் போயிருந்தனே?!//

என்னது?12000 மா!!!

நான் தொடுப்புக்கு போயிட்டு அங்கே பதில் சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

//எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.


.....அங்கே மிகப் பெரிய அளவில் நடக்கும் என்று ஒரு பிலிப்பினோ சொல்ல கேட்டிருக்கேன்.//

நான் சொல்றது குவைத்ல:) நாடு விட்டு நாடு போனாலும் இந்தியாக்காரனும்,பாகிஸ்தானிக்காரனும் கிரிக்கெட் விளையாடுற மாதிரி இந்த பசங்களுக்கு சேவக்கோழி.

ஹேமா said...

நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது !

Philosophy Prabhakaran said...

ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா...

நசரேயன் said...

சேவல் கறி என்ன விலை ?

ராஜ நடராஜன் said...

//நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது !//

ஹேமா!கோழிச்சண்டையெல்லாம் எனக்கே புதுசுங்கிற போது உங்களுக்கு தெரியாததில் ஆச்சரியமேயில்லை.

பழமை பேசி அவரது தளத்தில் (முதல் பின்னூட்டம்)சேவல்களை ஆவணப்படுத்தியிருக்கார் பாருங்க.அருமை.

சேவல் சண்டை நமக்கு புதுசானாலும் சேவல் கொடியெல்லாம் கலாச்சாரத்தோடு சேர்ந்தது தானே!

ராஜ நடராஜன் said...

//ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா...//

பிரபாகரன்!கோழிச்சேவல் மெல்ல தனது கால்களை கொங்கு நாட்டில் பரவ விடுகிறதென்பது மட்டும் நிச்சயம்.

ராஜ நடராஜன் said...

//சேவல் கறி என்ன விலை ?//

நசர்!அதை ஏன் கேட்கிறீங்க?மக்கள் கறியில்லாமல் இருக்க மாட்டேங்குறாங்க.

காலையில் ஆப்பத்துக்கே கோழிக்கறிதான்னா பார்த்துக்கோங்களேன்.

வயசான அம்மாவுக்கே காய்கறி கொழம்புன்னா ”என்ன இவ்வளவு சாப்பாடு போட்டிருக்கே”ன்னு தங்கையிடம் கோவித்துக்கொள்வதும அதுவே கறியின்னா வாரம் முழுவதும் சாப்பிடுவதும் சொல்லிக்க வேண்டாம்.

தலப்பாக்கட்டு தலப்பாக்கட்டுங்கிறாங்களேன்னு ஒரு தலப்பாக்கட்டு கடைல நுழைஞ்சா ஒரே எண்ணெயும் வறுத்த கோழி விவேக் காக்கா தின்ன மாதிரி ஒன்னும் நல்லாவேயில்லை.

தமிழக சேவல் கறி விலை எவ்வளவுன்னு யாராவது பின்னூட்டம் போடுங்களேன்.

குவைத்தில் ஐஸ் கோழி சுமார் 160 ரூபாய்.