Followers

Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்துக்களுடன் படப் போட்டிக்கு



அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் நானும் பந்திக்கு வந்து சேர்ந்து விட்டேன்.


பொட்டிய கிளிக் செய்ய ஒண்ணும் அதிக நேரம் இல்லை.கையில் கட்டிய கடிகாரமும் புதியதாக கிடைத்த காலண்டரும் சேர்ந்து உடனடி ஐடியா தயார்.ஆனால் போட்டோஷாப்பில் தலை கவிழ்ந்த நேரம் அதிகம்.இந்த மாதப் போட்டிக்கு என்னால் முடிந்த படங்கள் இரண்டு.கூடவே சர்வேசன் நாட்டாமைகிட்ட பேர் வாங்கலாமுன்னு ஹெச்.டி.ஆர் படமும் போட்டு ஐஸ் வெச்சு ஜெயிக்கலாமுன்னு படம் எடுத்தா பரிட்சிக்க முடியாம போட்டி தேதி நெருங்கிட்டதால வீட்டு வேலை அம்பேல்.இந்த முறை போட்டி படங்களின் தரம் அதிகமாகவே தெரியுது.பொட்டிக்காரர்கள்,நாட்டாமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Friday, December 14, 2007

மலர்கள் டிசம்பர் மாத போட்டிக்கு

வேலைப் பளுவின் காரணமாக இந்த முறை கடைசி பெஞ்சில் வந்து ஒட்டிக் கொள்ள வேண்டிய சூழல்.இடையில் குறுகிய இடைவெளியில் இதுவரை வந்த போட்டி படங்களுக்கு பின்னூட்டம் போட மட்டும் கால அவகாசம்.
இந்த சூழலில் நாட்டாமைகள் தரும் பட நுட்பங்கள் மற்றும் உதவிகள் இந்தக் கலையில் மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது.காஷியன் பிளர் என்னன்னு பார்க்கும் முன் மேக்ரோவின் பதிவு.அட நமக்கு கொஞ்சம் தெரிந்த பாடம்தானேன்னு எலிக்குட்டிய அந்தப் பாடத்துக்கு ஓட்டும் போதே ஹெச்.டி.ஆர் ன்னு நமக்கு தெரியாத பாடங்கள்.பாடங்கள் சுவாராசிய்மாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தப் பாடங்களை படித்து வாருங்கள் சொல்லி வீட்டுவேலை தரும் போது அதனைப் பரிட்சித்து பார்க்க அவகாசம் கிடைப்பதில்லை.இருந்தாலும் இனிமேலும் நாட்டாமைகளுக்கு நல்ல பிள்ளையாக எல்லா வகுப்புக்கும் விடாமல் வருகிறேன்.இப்போதைக்கு இந்தப் பரிட்சை முடிந்ததும் ஹெச்.டி.ஆர் பாடம்தான்.

இனி மெல்லிய முகச்சாயங்களுடன் படங்கள் பார்வைக்கு.படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.மற்றவை பார்வைக்கு மட்டும்.

பட வரிசை தலைகீழாக 5லிருந்து துவக்கம்.இது தரவிறக்கம் செய்யும் போது எண் வரிசை தலைகீழாகப் போனது.எனவே நாட்டாமைகள் அதுக்கு மட்டும் கொஞ்சம் மார்க் குறைச்சுகிட்டு பாஸ் மார்க் போட்டு புதுவருச புது வகுப்புக்கு அனுப்பவும்.

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.




5



படம் ஐந்து பார்வைக்கு






4


படம் நான்கு பார்வைக்கு

3

படம் மூன்று- பார்வைக்கு.






2





1



படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.



ஆசிரியர் குழு,பின்னூட்ட வீரர்கள் மற்றும் சுவையாக பதிவுகளிடும் அனைவருக்கும் எனது நன்றி. கூடவே இந்தப் பதிவினை தமிழ்மணத்துக்கு அனுப்பும் போது அங்கே ஒட்டிக் கொள்ளாமல் வம்பு செய்கிறது.யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்.

Saturday, November 10, 2007

நவம்பர் மாத புகைப்பட போட்டிக்கு









நவம்பர் மாத அறிவிப்பு சாலைகள் என்று வந்தவுடன் அட!தெரு முழுவதும்தான் பாதைகளா கிடக்குதே....சும்மா அசத்திரலாம் என்று அன்றாடப் பணிகளை பார்த்துக் கொண்டும் வரும் போட்டி படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கும் போதுதான் போட்டி படங்களின் நம்ம ஊர் பசுமைகளின் வனப்பிலும்,வாத்து நடையிலும்,ஒட்டகத்தின் உயரத்திலும்,தொழில் நுணக்கங்களிலும் வந்த பயத்தில் சரி நாம இரவு நேரத்து இருக்கும் வெளிச்சத்தில் ஏதாவது முயற்சி செய்யலாம் என்று கிளிக்கியதில் ஏதோ இரண்டு படம் சுமாராக இருந்த மாதிரி தோன்றியது.நாட்கள் இருக்கின்றதே என்று கால தாமதப் படுத்தியதன் பயன் CVR அவர்கள் அழகாக பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க என்று கூப்பிட்ட பதிவு மூலம் மேலும் சில நுணக்கங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.விளைவு எடு பெட்டியை என்று இருட்டில் இருந்து வெளிச்தத்துக்கு வந்த இரண்டு படங்கள் பின் தயாரிப்பின் கற்றலோடு போட்டிக்கு.

கொசுரு:வெளிச்சத்தில் எடுத்த படங்கள் Pentax K10D காமிராவுடன் 18mm - 55mm லென்ஸ்.

இரவில் எடுத்தது அதே காமிரா ம்ற்றும் Tamron 70 - 300mm.

இருக்கும் பட்டன்களை பரிட்சிக்காமல் பச்சைக் கோட்டில் வைத்து ஒரே அமுக்கு. 3 மற்றும் 4 போட்டிக்கான படங்களும் நாட்டாமைகளின் பார்வைக்கும் காலை வெளிச்சத்தில் எடுத்தவை.இரவு நேரத்து கார்களின் வெளிச்சத்தில் எடுத்தவைகள் 1 மற்றும் 2 சும்மா போனஸ் பார்வைக்கு.
வணக்கம் அனைவருக்கும்.மீண்டும் காண்போம்.

Monday, November 5, 2007

சுப.தமிழ்செல்வனுக்கு இரங்கல்

சக தமிழன் என்ற உணர்வில் எனது துக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.இலங்கைப் பிரச்னையில் விடியலுக்காக செல்லும் பாதை இன்னும் கரடு முரடாகவே உள்ளது.முடிச்சுக்கள் மேலும் மேலும்.இதன் சிக்கல்கள் தீரும் நாள் என்றோ?

Saturday, October 27, 2007

போட்டோ கலவை




எல்லோரும் சிஎஸ்3 என்கிறார்களே அது என்ன என்று பார்த்ததின் துவக்கம் இது.போக வேண்டிய தூரம் அதிகமாகவே இருந்தாலும் புதிய முயற்சி மனதுக்கு மகிழ்ச்சியே தருகிறது.இது இரண்டு படங்களின் கலவை.படம் அமுக்கி வெட்டலும் ஒட்டலுமானவை.நண்பர் சதா (வலைப்பக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்)விற்கு எடுத்தவைகளின் பிரதிகள் இவை.அவர் பணி செய்யுமிடத்தில் இருந்த முந்தைய வியாபாரப் படங்கள் வெறும் சிவப்பு பின்புலத்தில்(உபயம் கோகோகோலா) உண்வுப் படங்களைக் கொண்டது.சரி நாம் புதிய பின்புலம் அமைப்போமே என்று நினைத்ததின் விளைவு இந்த படங்கள்.