Followers

Saturday, November 10, 2007

நவம்பர் மாத புகைப்பட போட்டிக்கு









நவம்பர் மாத அறிவிப்பு சாலைகள் என்று வந்தவுடன் அட!தெரு முழுவதும்தான் பாதைகளா கிடக்குதே....சும்மா அசத்திரலாம் என்று அன்றாடப் பணிகளை பார்த்துக் கொண்டும் வரும் போட்டி படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கும் போதுதான் போட்டி படங்களின் நம்ம ஊர் பசுமைகளின் வனப்பிலும்,வாத்து நடையிலும்,ஒட்டகத்தின் உயரத்திலும்,தொழில் நுணக்கங்களிலும் வந்த பயத்தில் சரி நாம இரவு நேரத்து இருக்கும் வெளிச்சத்தில் ஏதாவது முயற்சி செய்யலாம் என்று கிளிக்கியதில் ஏதோ இரண்டு படம் சுமாராக இருந்த மாதிரி தோன்றியது.நாட்கள் இருக்கின்றதே என்று கால தாமதப் படுத்தியதன் பயன் CVR அவர்கள் அழகாக பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க என்று கூப்பிட்ட பதிவு மூலம் மேலும் சில நுணக்கங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.விளைவு எடு பெட்டியை என்று இருட்டில் இருந்து வெளிச்தத்துக்கு வந்த இரண்டு படங்கள் பின் தயாரிப்பின் கற்றலோடு போட்டிக்கு.

கொசுரு:வெளிச்சத்தில் எடுத்த படங்கள் Pentax K10D காமிராவுடன் 18mm - 55mm லென்ஸ்.

இரவில் எடுத்தது அதே காமிரா ம்ற்றும் Tamron 70 - 300mm.

இருக்கும் பட்டன்களை பரிட்சிக்காமல் பச்சைக் கோட்டில் வைத்து ஒரே அமுக்கு. 3 மற்றும் 4 போட்டிக்கான படங்களும் நாட்டாமைகளின் பார்வைக்கும் காலை வெளிச்சத்தில் எடுத்தவை.இரவு நேரத்து கார்களின் வெளிச்சத்தில் எடுத்தவைகள் 1 மற்றும் 2 சும்மா போனஸ் பார்வைக்கு.
வணக்கம் அனைவருக்கும்.மீண்டும் காண்போம்.

Monday, November 5, 2007

சுப.தமிழ்செல்வனுக்கு இரங்கல்

சக தமிழன் என்ற உணர்வில் எனது துக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.இலங்கைப் பிரச்னையில் விடியலுக்காக செல்லும் பாதை இன்னும் கரடு முரடாகவே உள்ளது.முடிச்சுக்கள் மேலும் மேலும்.இதன் சிக்கல்கள் தீரும் நாள் என்றோ?

Saturday, October 27, 2007

போட்டோ கலவை




எல்லோரும் சிஎஸ்3 என்கிறார்களே அது என்ன என்று பார்த்ததின் துவக்கம் இது.போக வேண்டிய தூரம் அதிகமாகவே இருந்தாலும் புதிய முயற்சி மனதுக்கு மகிழ்ச்சியே தருகிறது.இது இரண்டு படங்களின் கலவை.படம் அமுக்கி வெட்டலும் ஒட்டலுமானவை.நண்பர் சதா (வலைப்பக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்)விற்கு எடுத்தவைகளின் பிரதிகள் இவை.அவர் பணி செய்யுமிடத்தில் இருந்த முந்தைய வியாபாரப் படங்கள் வெறும் சிவப்பு பின்புலத்தில்(உபயம் கோகோகோலா) உண்வுப் படங்களைக் கொண்டது.சரி நாம் புதிய பின்புலம் அமைப்போமே என்று நினைத்ததின் விளைவு இந்த படங்கள்.

Tuesday, October 23, 2007

வெட்கப்படும் சூரியன்


மீண்டும் ஒரு காமிரா கண்.நம்மவர்களுக்கு இந்த மாதிரிப் படங்களெல்லாம் பால பாடம்தான்.காரணம் எண்ணிக்கையில்லா திரைப்பட ஒளி வல்லுனர்கள் நமக்கு கணக்கிலடங்கா செல்லுலாய்ட் கவிதைகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.அதையெல்லாம் கண்ணிலே ஒற்றியெடுத்த நகல் மட்டுமே இது.

Sunday, October 7, 2007

அன்னாசியும் ஆகாரமும் போட்டியில



போட்டி எப்படி போகுதுன்னு பார்த்திட்டு மெல்ல களத்தில இறங்கலாமுன்னு பார்த்தேன்.சரி நம்மெல்லாம் இவங்க பேட்டைக்கு புதுசுதானே.நமக்கு போட்டில கலந்துக்குறதே பரிசு வாங்குனது போலதான்னு மனசுல நினைச்சுகிட்டு நம்ம அன்ன தேவதைகள் வர்ராங்க!வர்ராங்க.எல்லோரும் ஜோரா ஒரு முறை பின்னுட்டமிடுங்கள் பார்க்கலாம்.