பிறப்பால்,மொழியால் தமிழனாக இருப்பதால் தமிழீழம் குறித்த ஆசையும் கனவும் வருவது இயற்கையான ஒன்று.ஆனால் ஒரு மனிதன் சிங்கள மொழியில் பிறந்து மனிதத்தையும் தமிழனையும்,தமிழீழத்தையும் நேசிப்பவனாக இருந்தால் ஆச்சரியமல்லவா?அப்படி ரதியின் இந்த பதிவால் நோம் சாம்ஸ்கியைத் தெரியும்,அருந்ததி ராயைத் தெரியும் இது யார் Brian Senewiratne எனக்கேட்டு அறிமுகமானவர் சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை.விடுதலைப் புலிகளின் துவக்க காலம் முதல் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்திருக்கிறார்.ஆஸ்திரேலியாவில் தனது தோட்டத்து செடிகளை அகற்றியதற்காக குற்றம் சாற்றப்பட்டு நிலத்துக்கு அடிமாட்டுக்காசு கொடுத்து விடுகிறோம் என்பதோடு தப்பை ஏற்றுக்கொள் என்று அரசு சொல்ல, நான் தவறு செய்யவில்லையென்று நீதிமன்றத்தில் போராடி தனது மொத்த வருமானத்தையும் ,சேமிப்பையும் இழக்கும் சோக நிலையில் இருக்கிறார் என்று தேடலில் கிடைத்த தகவல்.
Dr.Brian Senewiratne with Archbishop Desmond Tutu
சாக்ரடிஸ் சிந்திக்கச் சொல்லி கற்றுக்கொடுத்து இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று குற்றம் சொன்னது மாதிரி தமிழகத்தில் இவரது அனல் பறக்கும் ஆங்கிலப் பேச்சுக்களைக் கேட்டு அரங்கத்தை விட்டு தனது காருக்குப் போகும்போது கூட புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறை இவரை மொய்த்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பாயில்லை!அப்படியென்ன இவர் மீது பற்றுதல் என்றால் இலங்கையின் நல்ல எதிர்காலத்துக்கு கொழும்பில் சிங்கள ஒரு இன அதிகாரக் குவிப்பு இல்லாமல் வன்னியிலும் தமிழீழம் பிறக்க வேண்டுமென்கிறார்.எல்லோரும் பிரபாகரனையும்,விடுதலைப் புலிகளையும் குறை சொல்லும் போது பிரியன் செனவிரத்னே ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கு புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்துகிறார்.
ராஜபக்சே அரசை நீதிமன்றத்தில் நிறுத்தவும்,போராடவும் பணம் தேவைப்படும் நேரத்தில் புலம் பெயர்த் தமிழர்கள் உண்டு கழித்து இந்துக் கோயில்களைக் கட்டிகிட்டு ஈழம் அமைவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்கிறார்.விடுதலைப்புலிகள் போராடும் குணத்தையும் அவர்களால் இயன்றதை செய்து முடித்திருக்கிறார்கள்.இன்னுமொரு ஆயுதப்போர் சாத்தியமில்லை என்கிறார்.சிங்களவர்கள் எல்லாம் முடிந்து விட்டதென்று குதுகலிக்கிறார்கள்.ஆனால் ஒரு போராட்டத்தின் துவக்கமே இனிமேல்தான் என்கிறார்.விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் முத்திரை குத்தியது போல் தன்னையும் தீவிரவாதியென்று மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்கிறார்.காங்கிரஸ் ஆட்சியும்,தமிழக தி.மு.க ஆட்சி மத்திய அரசின் நிலைப்பாட்டால் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு நிலையை எடுக்கும் போது பிரியன் ராஜபக்சேவுக்கு சவுக்கு சுழட்டுகிறார்.
அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் பூகோள ரீதியாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததோ அதே போல் சீனாவுக்கான எண்ணை,ஏனைய பொருளாதார ஏற்றுமதி,இறக்குமதி காரணமாக இப்பொழுது இலங்கையும் முக்கியத்துவம் வாய்ந்த பூமியாக அமைந்து விட்டது.இந்து மகா சமுத்திரத்தை தமது கட்டுக்குள் கொண்டு வரும் நீர்வள உலக போட்டியாக இலங்கை இப்போது மாறி விட்டது.
மேலே சொன்ன இவரது கருத்துக்களோடு எனது ஆதங்கமாக இந்த பாராவை நான் எடுத்துக்கொள்கிறேன்.தனது முழு ஆதிக்கத்தில் இருந்த பரந்த நீர்பரப்பை தவறான வெளியுறவுக் கொள்கை அமைத்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா.இனி வரும் காலங்களில் பேய் முழியோடு திரு திருவென இந்தியா முழிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று உள் உணர்வு சொல்கிறது.பார்க்கலாம்.
ஆஸ்திரேலியவில் புலம் பெயர்ந்த டாக்டர் பிரியன் செனவிரத்னே பண்டாரநாயக்கின் உறவினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்டாரநாயகா, சந்திரிகா போன்றவர்களையும் இலங்கைப் பிரச்சினைக்கு குற்றம் சுமற்றுகிறார்.மேற்கத்திய நாடுகளில் தமிழர்களிடையே கருத்தரங்கம் நிகழ்த்துவதோடு போர்க் குற்றங்களை காணொளித் தகடுகளாக பலருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் Apartheid இனப்போராட்டம் வென்றதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவது பொருளாதாரத் தடை,இரண்டாவது கிரிக்கெட் விளையாட தடை. இந்த இரண்டையும் இலங்கை மீது திணிப்பதன் மூலமே தமிழீழம் வெல்வதற்கு சாத்தியம் என்கிறார்.வயதான காலத்திலும் போராட்டக் குணம் கொண்ட தமிழீழவாதி டாக்டர் செனவிரத்னேக்கு எனது வணக்கங்கள்.
டாக்டர் பிரியன் செனவிரத்னேயின் கருத்தரங்க காணொளி காண
இங்கே http://www.youtube.com/watch?v=3N24uZSW87E
இங்கே http://www.youtube.com/watch?v=fw5b2fcmfgA&NR=1
இங்கே http://www.youtube.com/watch?v=GuB6QDMrDGo&NR=1
இங்கே http://www.youtube.com/watch?v=VoBA72i48D4&NR=1
22 comments:
பாராட்டுக்கள் ...
ராஜ நட,
நல்லதோர் அறிமுகம் உங்கள் தளத்தில் Brian Senewiratne அவர்களுக்கு. உண்மையில் இவர் எழுத்துக்களை படித்தால் தான் தெரியும் இவர் இலங்கை என்கிற மண்ணை, மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று. நான் பிரமிக்கும் மனிதர்களில் ஒருவர்
தமிழ் இளையோர் செய்யவேண்டிய எத்தனயோ முன்னெடுப்புகளை தமிழர்களுக்காய், தான் நேசிக்கும் மண் ராஜபக்க்ஷே போன்ற கும்பலிடமிருந்து தப்பவேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர். ராஜபக்க்ஷே அரசு இவருக்கு கொடுத்த மரியாதை இவர் இலங்கைக்குள் போக முடியாது என்று தடை. .
ஓர் தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணமும் செய்துகொண்டார்.
அவரது மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருக்கலாம் என்பது என் கருத்து. நற்றமிழன் என்பவர் இவரின் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சாத்தியமா என்கிற கட்டுரையை தமிழாக்கம் செய்திருந்தார். கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டியது. முடிந்தால் இணைப்பு கொடுங்கள். கீற்று இணையத் தளத்தில் பார்த்த ஞாபகம்.
நல்ல செய்தி...அனைவர்க்கும் சென்றடைய வாக்களித்துவிட்டேன்,,! :-)
ரதி செய்யவேண்டிய அறிமுகத்தை தாங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள் ராஜநட வாழ்த்துகள்.
// சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள்///
ஆச்சர்யமா இருக்கேய்யா...!!!!
நல்ல அறிமுகம்....
//பாராட்டுக்கள் ...//
வாங்க கருன்!வார இறுதியில் அம்மணிக்கு எடுபிடி வேலைகள் செய்ததால் உடனடியாக மறுமொழியளிக்க இயலவில்லை:)
ரதி!இவரின் அறிமுகத்துக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.எப்படி இவர் பெயர் அடையாளம் தெரியாமல் மங்கிப் போனதென்று இன்னும் எனக்கு ஆச்சரியமே.கனடா,ஆஸ்திரேலிய மக்களும் ஏனைய ஐரோப்பா புலம்பெயர் தமிழர்களும் இவருக்கு ஆதரவோட அவர் தார்மீக அடிப்படையில் சந்திக்கும் செடியை வெட்டி விட்டார் என்ற வழக்குக்கு முடிந்த உதவிகள் செய்யலாம்.
தமிழ் ஆதரவு என்பதை விட அதிகார பரவலாக்கல் என்ற அவரது கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நீங்கள் கேட்டபடி அவரது இமெயில்
email briansen@bigpond.net.au
மேலும் அவரது கடிதமாக உலக மக்களுக்கு இங்கே
http://www.sangam.org/taraki/articles/2006/06-07_Realistic_Approach.PDF
//நல்ல செய்தி...அனைவர்க்கும் சென்றடைய வாக்களித்துவிட்டேன்,,! :-)//
வாங்க பரமக்குடி கவிஞரே!இணைந்து கொள்வோம்.
ராஜபக்சே அரசுவின் போர்க்குற்ற ஐ.நா அறிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் மெல்லிய குரல்கள் எழுவதைக் காண்கிறேன்.இவை தனித்தனிக் குழுக்களின் குரலாக அமைவதால் இதன் தாக்கம் குரல் கொடுத்து ஓய்ந்து விடுமென நினைக்கின்றேன்.
நீங்கள் சொல்லும் அனைவருக்கும் சேரும் சக்தியால் மட்டுமே இந்திய நிலைப்பாட்டை ஆட்டம் காண வைக்கவும் ராஜபக்சேவுக்கு செக் வைக்கவும் முடியும்.இல்லையென்றால் மத்திய அரசின் காதில் ஊதிய செவிட்டு சங்காகவே முடியும்.
//ரதி செய்யவேண்டிய அறிமுகத்தை தாங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள் ராஜநட வாழ்த்துகள்.//
மூன்று வருடங்களுக்கும் மேலாக ஈழம் குறித்த பார்வையில் இருக்கும் எனக்கு இவரின் பெயர் தெரியாமல் போனதில் ஆதங்கமே.
Still better late than never.
//// சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள்///
ஆச்சர்யமா இருக்கேய்யா...!!!!//
மனோ!நீங்க போடும் ஆச்சரியக்குறிதான் எனக்கும்.அவரது பேச்சுக் காணொளி காணும் போது வை.கோவின் தமிழ்க்குரல் டாக்டர் செனவிரத்னே வின் ஆங்கிலக் குரலில் கேட்கிறது.கூடவே தமிழகத்தில் ஆற்ற இயலாத கடமையாக மக்களுக்கு மருத்துவம்,பொது நலத் தொண்டு என காந்தியின் மறுபக்கம் என்பேன்.
இவரை இனிமேலாவது நினைவில் கொள்வோம்.நன்றி.
ஆமா!மாம்பழமெல்லாம் சாப்பிட்டு முடிஞ்சாச்சா இன்னும் மீதியிருக்குதா:)
ராஜ நட,
என்னுடைய இன்னோர் எண்ணத்தையும் இங்கே விட்டுச்செல்கிறேன். புலத்தில் தமிழர்கள் இவரை புறக்கணித்தார்கள் என்று சொல்லமுடியாது. அண்மையில், நாடுகடந்த தமிழீழ அரசை அதன் காலத்தேவையை இவர் மூலமும் அதிகமாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன், படித்தேன். ஆனாலும், புலத்து தமிழர்கள் பற்றிய இவர் பார்வை ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.
ஈழத்தமிழர்களில் எட்டப்பன்கள், தமிழக அரசியலில் வாரிசுப் பிரச்சனைகள், சொத்துப்பிரச்சனைகள். ஆனால் இவரோ பண்டாரநாயக்கா குடும்பம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்காய் தான் பணம் முதல் அரசியல் ரீதியாகவும் செய்ய வேண்டிய கடமையை செய்கிறேன் என்கிற போது வெட்கித் தலை குனிய நேரிடுகிறது எங்களுக்கு.
தன்76 வயதிலும் எவ்வளவு ஆக்ரோஷமாய் ஓர் இனத்துக்காய் உழைக்கிறார். நீங்கள் சொன்ன பின் தான் யோசித்தேன். ஈழத்தமிழனுக்காய் பேசுவதில், செயற்படுவதில் இவர் ஓர் ஆங்கில வை.கோ. தான்.
ஈழம் வரலாற்றுக்காக பல தரவுகளை படித்த போது நான் உணர்ந்த உண்மை ஒன்று இந்த கட்டுரையில் ஒழிந்துள்ளது. சிங்கள அரசியல்வாதிகளின் சிங்கள இனவாதம் என்பதும் எப்போதுமே பின்னால் நிற்கும். ஆனால் அவர்களுக்கு முன்னால் எப்போதும் நிற்பது என்ன தெரியுமா? தான் பதவிக்கு வரவேண்டும். வந்த பிறகு காப்பாற்றிக் கொள்ள வேண்டும். காப்பாற்ற முடியாவிட்டால் அவர் தமிழன் என்றாலும் சிங்களன் என்றாலும் போட்டுத்தள்ள வேண்டும். சேனநாயகா குடும்ப ஆட்சியை ஒழித்து மேலே வந்த சந்திரிகா அப்பா முதல் அம்மா மகள் என்று தொடங்கி இன்று வரையிலும் இப்படித்தான். சந்திரிகா காலத்தில் இது போன்ற சிங்களர்களை பழிவாங்கியது அதிகம்.
புலம்பெயர் தமிழர்களைப் பற்றி அவர்களின் போக்குகளைப் பற்றி ரதி எழுத வேண்டும்.
நல்லதோர் அறிமுகம், பிரய்ன் சேனவிரத்னே போல ஒரு மாமனிதரை இலங்கைப் பெற்றதுக்கு கொடுத்துத் தான் வைத்திருக்க வேண்டும், ஆனால் இப்படியான நடுநிலையார்களுக்கு இலங்கையின் அரசியலிலோ, வாழ்வியலிலோ பங்கேற்க முடியாமல் போனது அந்நாட்டின் தீப்பயன். இனக் குரோதம் நிரம்பிய இலங்கையில் சில மகாத்மாக்களும் முளைத்தது நன்று.
ஆனால் இப்படியான நடுநிலையாளர்கள் இன்றளவும் தமிழர்களில் வராமையால் - பிரச்சனைகள் தான் எஞ்சியது, தமிழர்களில் ஒன்று சிங்கள விரோதிகளாகி விடுவார்கள் அல்லது சிங்கள அடிமைகள் ஆகிவிடுவார்கள். நடுநிலையாளர் என்று தற்காலத்தில் எவனும் இல்லாமல் போய்விட்டார்கள் .........
அருமையான பகிர்வுங்க
ரதி!நான் எப்பொழுதும் உங்களிடம் சொல்லுவதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.தற்போதைய நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அந்த அந்த நாடுகளில் சிலரது ஆதரவுடன் இயங்கும் ஜனநாயக அதிகாரபூர்வ ஒரே இயக்கம் நாடுகடந்த தமிழீழ அரசு.இதனை இன்னும் வலுப்படுத்துவதும் அது சார்ந்த முன்னெடுப்புக்களுமே இலங்கை குறித்த உலக நாடுகள் ஆதரவுக்கு வழி வகுக்கும்.
தமிழகம் குறித்த இப்போதைய குரல்கள் தேர்தல் கடந்த ஒன்றாக காணப்பட்டாலும் ஒருமித்த குரலாக இல்லாமல் இருப்பதும் இணைப்பு சக்தியில்லாமல் இருப்பதும் தமிழகம் இன்னும் நொண்டிக்குதிரையே என்பதைக் காட்டுகிறது.
பிர்யன் செனவரத்னேவை இன்னும் முன்னிலைப் படுத்துவது நலம் தரும்.குறைந்த பட்சம் ஐரோப்பிய நாடுகளுக்கு கருத்தரங்களுக்கு அழைத்து அவரது கருத்தையும் ஆதரவையும் வரலாற்றில் பதிவு செய்யலாம்.
இக்பால் செல்வன்!
பிரய்ன் சேனவிரத்னே தான் சரியான உச்சரிப்பாக இருக்கும்.தமிழ்ப்படுத்தலுக்காக பிரியன் என்று மாற்றி விட்டேன்:)
தமிழர்கள் இவர் பெயரை நழுவ விட்டாலும் நடுநிலை சிங்களர்கள் இவரை எப்படி மறந்தார்கள் என்றும் தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் உக்கிரமாக இயங்கிக் கொண்டு இருந்த காலத்திலும் கூட சில சிங்களவர்களின் கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன்.போர் வட கிழக்கில் மட்டுமே நிகழ்கிறதென்றும் கொழும்பு சார்ந்த தென் பகுதியில் பிரச்சினையில்லை என்று மட்டுமே பொதுவான கருத்து சொல்வார்கள்.
பின்னூட்டம் நீளுவதால் அடுத்து தொடர்கிறேன்.
இக்பால் செல்வனின் பின்னூட்டத்துக்கு தொடர்ந்து.....
மேலும் வளைகுடா நாடுகளில் வாழும் தேவை கருதியோ அல்லது மனதுக்குள் சார்பு நிலைகள் இருந்தாலும் வெளிப்படையாக ஒன்றாக இருக்கும் மனப்பக்குவம் முந்தைய காலத்தில் இருந்தது என்பதை இவர்களிடம் பழகிய முறையில் தெரிகிறது.
ஆனால் போருக்குப் பின்னான இறுதி கட்டத்துக்கு அப்பால் இனக்குரோதம் இப்பொழுது வளர்ந்திருப்பதையும் அவரவர் குரல்களிலிருந்து உணர முடிகிறது.
ராஜபக்சே செய்த மிக முக்கியமான முட்டாள்தனம் இந்தியா பாகிஸ்தான் போல் மக்களை பிரித்ததுதான்.நீங்கள் சொல்வது போல் தமிழர்களில் ஒன்று சிங்கள விரோதிகளாகி விடுவார்கள் அல்லது சிங்கள அடிமைகள் ஆகிவிடுவார்கள் என்பதும் உண்மையே.
மக்களுடன் மக்கள் கலந்துரையாடல் மட்டுமே நீண்ட கால தீர்வுக்கு வழி வகுக்கும் சாத்தியம் என்பதோடு சக மனிதன் என்ற உணர்வும் சம பங்களிப்பும்,அதிகார பங்கீடும் இல்லாத வரை இலங்கை இனியும் கண்ணீர் தேசமாகவே இருக்கும்.
ஜோதிஜி!நீங்கள் சொல்லும் நாற்காலி கனவு அந்த மந்திர மரத்தில் உட்காரும் அனைவருக்குமே வந்திருக்கிறதென்பது வரலாறு சொல்லும் உண்மை.இதில் பண்டார நாயக்கா,ஜெயவர்த்தனே,சந்திரிகா என பிரித்துப் பார்க்க இயலாது என நினைக்கிறேன்.
புலம் பெயர் தமிழர்களின் குரல்கள் பொதுக் கருத்து பரிமாற்றங்களில் இணைய வேண்டும்.மேலும் இப்பொழுதும் விடுதலைப்புலிகள் இயங்கிக் கொண்ட காலத்திலும் புலம் பெயர் தமிழர்களின் தொலைக்காட்சி ஊடகங்கள் காளான் மாதிரி பூக்கவும் பின் மறைந்து போவதும் எனக்கு ஆச்சரியாய் இருக்கும்.மொத்த ஊடகங்களும் தமிழ் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்கி விட்டன.ஆங்கில நாடுகளில் வாழ்ந்தும் 2000க்கு அடுத்து குறுகிய காலத்தில் பிரபலமான அல்ஜசிரா போன்று ஒரு ஆங்கில தொலைக்காட்சியை யாரும் நிறுவவில்லை என்பதும் தமிழர்கள் சார்ந்த கருத்துக்கள்,பிரச்சினைகளை,விவாதங்களை உலக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
இன்னும் சில ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.ஐ.நா அறிக்கை ஈழப் பிரச்சினையை பொது உலகின் கண்களுக்கு கொண்டு வந்திருக்கிறது.இதனை துவக்கப் புள்ளியாக இன்னும் தமிழீழம் என்ற கனவை வலுப்படுத்த வேண்டியது புலம்பெயர்ந்தவர்களின் கரங்களில்.
//அருமையான பகிர்வுங்க//
ஞானசேகரன்!வழக்கமாய் விசாரிக்கும் நலம் விசாரிப்பாய் எப்படியிருக்கீங்க?
ப்ரயனை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் கட்டுரையாகவே இதைப் பார்க்கிறேன்.வாழ்த்துகள்.
//ப்ரயனை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் கட்டுரையாகவே இதைப் பார்க்கிறேன்.வாழ்த்துகள்.//
எங்கள் ஊரில் திருடர்களுக்கே விளம்பரம்.கொள்ளையடிப்பவனே கதாநாயகன்,கதாநாயகி.பொய்யை உண்மையாக்க வாதாடுபவனே சட்ட வழக்கறிஞன்:(
Post a Comment