தேர்தல் முடிஞ்சும் கூட அரசியல் பதிவான்னு யாரேனும் முகம் சுழித்தால் இது தேர்தலையொட்டிய பதிவல்ல.முன்னாடியே சொல்லியிருந்தா தேர்தல் பதிவு மாதிரியாத்தான் ஆகியிருக்கும்.திருச்சி ரயில் பயணத்தில் திடீர் நண்பர்களிடம் பேசிக்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ரயில் திருச்சி ஜங்சனில் நின்றது.நான் ஜன்னலோரம் தனியாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருக்க கோச்சில் முதலில் நான்கு இளைஞர்கள் வந்து மூவர் இருக்கையின் இரு புறமும் ஆளுக்கு இரண்டு பேர் என வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.அதன் பின் வெண்ணிலா கபடிக்குழுவில் ஐம்பது புரோட்டா சாப்பிடுவர் உருவத்தில் ஒருவரும்,குள்ளநரிக்கூட்டத்தில் வெள்ளந்தியா போனைக் கொடுத்து விட்டு தேடி ஓடும் குண்டான உருவத்தில் ஒருவரும் வந்து ஆளுக்கு ஒரு புறமாக மீதமிருந்த இரு இருக்கையில் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டார்கள்.வண்டி கிளம்பியது.
கபடிக்குழு புரோட்டாக்காரர் சில உணவுப் பொட்டலங்களை வெளியே எடுத்தார்.பின் தண்ணீர் பாட்டிலையும் பக்கத்தில் வைத்தார்.அடுத்து கைப்பையைத் தேடி சரக்கு பாதி மில்லியை எடுத்தார்.கைவசம் கொண்டு வந்திருந்த கண்ணாடி கிளாசில் அளவு பார்த்து விட்டு தண்ணீரைக் கலந்து ஒரு கிளாசை குள்ளநரிக்கூட்ட குண்டு நண்பருக்கு கொடுத்து விட்டு தனது சரக்கை ஒரே ஃகல்ப் செய்தார்.அதுவரை மௌனமாக இருந்த நான் என்னங்கண்ணே ஒரே மொடக்குல குடிக்கிறீங்க!உடம்புக்கு நல்லதில்லை என போதைக்கு போதனைக்காரனானேன்.கபடிக்குழு புரோட்டா நண்பர் தனது நண்பரைக் காட்டி இவர்கிட்ட கேட்டுப் பாருங்க ஒரு ரவுண்டுக்கு நான் எவ்வளவு நேரம் எடுப்பேனென்று.நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் இந்த வேகம் என்றார்.அதற்கு குண்டு நண்பர் அவர் மெல்லத்தான் சாப்பிடுவது வழக்கமென்றார்.
பேச்சு குசலங்கள் விசாரித்த போது புரோட்டாக்காரர் தான் காஞ்சிபுரம் தி.மு.க வட்ட செயலாளர் என்றும் நண்பரும் ஏதோ கழக பதவியில் இருப்பதாகவும்,தேர்தலுக்கு விளம்பர போஸ்டர்கள்(அப்ப அவருக்குத்தான் தெரியுமா இல்லை நான் தான் கனவு கண்டேனா தேர்தல் ஆணையம் ஆப்பு வைக்குமென்று),கேக் மற்றும் கழக துண்டுகள் ஆர்டர் செய்வதற்காக சிவகாசி போய் விட்டு திருச்சி வந்து சென்னை திரும்புவதாக சொன்னார்.ஆகா!நமக்கு பயணத்துக்கு ஒரு கண்மணி கிடைச்சதேன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டு முதல் கணையே ஸ்பெக்ட்ரத்தை எடுத்து விட்டேன்.என்னங்க பத்திரிகைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரத்தைப் பத்தியே பேசுறாங்க என்றேன்.அதற்கு புரோட்டா கண்மணி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி மக்களுக்கு என்னங்க தெரியும்?கலைஞர் மக்களுக்கு நிறைய செஞ்சிருக்காரு.அதனால தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமென்றார்.
இந்தக் கதை நடக்கும் போது ராசா ஜெயிலுக்குப் போகலை.அதனால அடுத்த பிரம்மாஸ்திரத்தை விட்டேன்.கலைஞர் ஆயிரம் நல்லது செய்திருக்கட்டும்.ஆனால் ஈழப்பிரச்சினை ஒன்றில் தான் சேர்த்து வைத்திருந்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார.நானும் கூட முன்பு தி.மு.க அனுதாபிதான் ஆனால் இப்ப இல்லை என்றேன்.அதற்கும் அவர் விட்டுக்கொடுக்காமல் இதில் கலைஞரை மட்டும் குறை சொல்ல முடியாது,காங்கிரஸ்க்கு இதில் அதிக பங்கு என்றார்.இதற்கிடையில் ஈழப்பிரச்சினை பேச்சில் வந்தவுடன் மற்ற நான்கு பேரில் ஒருவர் என்னிடம் நீங்க சொல்றதுதான் சரி இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையும் எதிரொலிக்குமென்றார்.
பேச்சுக்கிடையில் புரோட்டா நண்பரும்,குண்டு நண்பரும் இரண்டாவது ரவுண்டுக்குப் போய் விட்டார்கள்.பேசிக்கொண்டே வறுத்த கோழியை ஒரு கடி கடித்து விட்டு பக்கத்தில் புலிச்சாதம், தயிர்ச் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் நீங்க இந்த பிரியாணியை எடுத்துகிட்டு தயிர்ச் சாதத்தைக் கொடுங்க என்றார்.தயிர்ச்சாதக்காரர் நான் கை வைத்து விட்டேனே என்று கேள்வி எழுப்பினார்.புரோட்டா கண்மணி அதனாலென்ன கொடுங்க என்று இலவசமா பிரியாணிய கொடுத்து விட்டு தயிர்ச்சாதத்தை வாங்கிக் கொண்டு சாப்பிட்டார்.எனக்கோ இது ஒரு புதிய காணல் அனுபவம்.இதென்ன சரக்கோட தயிர்ச்சாதம்!இது கிக் ஏத்துறதுக்கா அல்லது குறைக்கிறதுக்கா?சாப்பாடுன்னு சொன்னவுடன் சொல்ல வந்ததை விட்டு விடுவேனே:)
தயிர்ச்சாதம் கொடுத்து பிரியாணி சாப்பிட்டவர் என்னைப்பார்த்து நீங்க துணிச்சலா உங்க கருத்தை முன் வைக்கிறீங்க.அதுவும் வட்டச் செயலார்கிட்டேயே என்று சிரித்தார். ரயிலின் தடபுட சத்தத்திற்கு இணையாக எங்கள் பேச்சுக்குரலும் இருந்தது.
அப்புறம் என்னாச்சுன்னா ஈழப்பிரச்சினையைத் தொடர்ந்து செயலாளர் கண்மணி... மக்களுக்கு விழிப்புணர்வு இல்லீங்க.சீரியல் பார்க்குறாங்க,சினிமா பார்க்குறாங்க!.யாராவது டி.வில நியூஸ் பார்க்குறாங்களா?போரில் நிறைய மக்கள் இறந்துட்டாங்கன்னு செய்தி வந்து ரெண்டு நாளா சரியா தூங்கல தெரியுமா என்றார்.இதோ இந்த சரக்கடிக்கறதக் கூட விட்டுடனும்.இதனால குடும்ப வாழ்க்கையே நாசமாப் போவுது என்று வருத்தப்பட்டார்.ஏனைய இருக்கையில் அருகில் இருந்தவர்கள் எல்லாம் கண்மணியையும்,என்னையும் கவனித்துக் கொண்டு தமக்குள் சிரித்துக்கொண்டுமிருந்தார்கள்.இதுவரை அதிகம் பேசாமல் பேச்சில் சிரிப்பை மட்டும் உதிர்த்துக் கொண்டிருந்த குண்டு நண்பர் புரோட்டா நண்பரிடம் ஏதோ கேட்டு விட்டு பைக்குள் கையை விட்டுத் துலாவி நான்கைந்து கழக தோள் துண்டுகளை வெளியே எடுத்தார்.கரை போட்ட துண்டை விரித்து எனக்கு பொன்னாடை போர்த்தி விட்டார்.காஞ்சிபுரம் வந்தால் கட்டாயம் வரும்படி போன் நம்பரெல்லாம் துண்டு நண்பர் கொடுத்தார்.எனக்கு காஞ்சிபுரம் போக நேரமில்லை. அருகில் இருந்தவர்கள் கைதட்ட ஜீன்ஸ்,சர்ட்டோட கரை துண்டு ஒரு புது அனுபவமாக இருந்ததால் நான் நெய்வேலி போய் சேர வரைக்கும் துண்டை தோளிலிருந்து கழட்டவேயில்லை:)
இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் களம் காஞ்சிபுரம்.
27 comments:
நான் திருவாரூர். உங்கள் தகவலுக்காக.
இப்போது திமுக மட்டுமல்ல எந்த கட்சியிலும் உண்மைத் தொண்டர்கள் என்று எவருமே இல்லை. அணைவருக்கும் நன்றாக தெரிந்து விட்டது. அரசியல் என்பது எளிதில் சம்பாரிக்க உதவும் ஒரு இடம் என்பது. எவரும் கொள்கைகள், நோக்கங்கள் குறித்து அதிக அக்கறை பட்டுக் கொள்வதில்லை. நம்மால் சம்பாரிக்க முடியும்? முடியாது? வாய்ப்பு இருக்குமா? அல்லது வாய்பை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் அமையுமா? எத்தனை பேர்களால் பெரிய அளவில் பணத்தை இறங்கி முதலைகளுடன் போட்டியிட முடியும். அவவாறு முடியாதவர்கள் மற்றவர்களுக்க அல்லக்கைகளாக மாறி முடிந்தவரைக்கும் தேத்திக் கொள்ள வேண்டியது தான்.
வலைதளங்களில் கட்சி சார்பாக கூவும் மக்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாருங்க. எப்படியாவது யார் பார்வையாவது நம் மேல் பட்டு விடாதா? ஒரு வேளை பாருங்க? நான் வலைதளத்தில் என்ன கூவு கூவியிருக்கேன். கூவுனதுக்கு கொஞ்சம் போட்டுக் கொடுங்களேன் என்பதற்கான முதல் அடியாக எடுத்துக் கொள்ளுங்க நடராஜன்.
உண்மையான தொண்டர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை.
எனக்கு கலைஞரை சுத்தமாக பிடிக்காது. காரணம் கேட்டால் தெரியாது. எம்ஜிஆரை ரொம்ப பிடிக்கும். இதுவொரு இனம்.
டேய் எம்ஜிஆரைப்பற்றி ஏதாவது பேசினா கொலையே செய்துவிடுவேன். சிலர் செய்தும் விடுவார்கள்.
இரண்டு பக்கமும் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் நிறைய உண்டு.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாலபாடம் இது இதுவே மட்டும் தான்.
நீங்கள் சந்தித்த நபர்களிடம் வேறு விதமாக கேட்டிருக்கலாம்.
ஏதாவது சம்பாரித்து இருக்கீங்களா என்று?
ஒரு வேளை பயணச்சீட்டுக்கான காசும், வாங்கித் தின்ற புரோட்டாவுக்கும் சேர்த்து 2000 ரூபாய் கிடைத்து இருக்கக்கூடும்.
நாலு நாளைக்கு குடும்பத்தின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தப்பித்து வர உதவியிருக்கும்.
ஜோதிஜி!தி.மு.க மட்டுமல்ல எந்த கட்சியிலும் உண்மைத் தொண்டர்கள் இல்லையென்கிறீர்கள்.அப்படியென்றால் அனைத்தையும் விமர்சனப் பார்வையோடு ஏன் பார்க்க மறுக்கிறார்கள்?நான் சந்தித்த நண்பருக்காவது வட்டச்செயலாளர் என்ற பிடிப்பு இருக்கிறது.இங்கே பதிவுகளில் எட்டிப்பார்க்கும் கழககண்மணிகளும் கூட அவ்வாறான சுய தேவைகளின் காரணமாக தங்கள் கருத்தை இங்கே பக்க சார்போடு பதிவு செய்கிறார்களா?எதற்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்ற நிலையில்,அதுவும் தற்போதைய நிலையில் கழகத்திற்கு எதிரான விசயங்கள் பல இருந்தும் ஏன் கழகத்திற்கு மார் தட்டுகிறார்கள் என்பது இன்னும் எனக்குப் புரியாத விசயம்.
எனது முந்தைய பின்னூட்டத்தின் சந்தேகம் உங்களின் இரண்டாவது பாராவில் ஒளிந்து கொண்டிருக்கிறதா:)
கலைஞரைப் பிடிக்காது,கேட்டால் காரணம் தெரியாதுங்கிற மாதிரி அவரைப் பிடிக்கும்,காரணம் கேட்டால் தெரியாதுங்கிற தொண்டர்களும் இருப்பார்கள் அல்லவா?
இரண்டு பக்கமும் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் என்பதுவே தமிழக அரசியலின் சூழலுக்கு காரணம்.
மணிரத்னத்தின் இருவர்கள் திரைப்படம் இன்னும் கூட ஆய்வுக்குட்பட்டது.
ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?
நல்லகாலம் ஜீன்ஸு. இல்லன்னா துண்டப் போட்டு வேட்டிய உருவீருப்பானுவோ:))
/நசரேயன் said...
ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?/
வந்துட்டாருய்யா. உலகமகா துண்டர்:))
//ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?//
நசர்ஜி!இந்த மாதிரி பதிவு போடறபோதெல்லாம் முதல் உதவிக்கு வந்திடுருங்களே:)
ஜோதிஜி!உங்களுக்கு உதவி ஏதாவது தேவையா:)
//நல்லகாலம் ஜீன்ஸு. இல்லன்னா துண்டப் போட்டு வேட்டிய உருவீருப்பானுவோ:))
/நசரேயன் said...
ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?/
வந்துட்டாருய்யா. உலகமகா துண்டர்:))//
பாலாண்ணா!சின்ன மீனப் போட்டு பெரிய மீன் புடிக்கிற மாதிரி துண்டைப்போட்டு வேட்டிய உருவறதும் கழகக் கொள்கையா:)
உலக மகா துண்டர் நசர்ஜி:)
ஜோதிஜி!உங்களுக்கு உதவி ஏதாவது தேவையா:)
எங்க வீட்டு முகப்பு அறையில் நசர் மூஞ்சிய மாட்டி வைக்கனும். வாய்ப்பு இருக்குதான்னு கேட்டுச் சொல்லுங்க?
கரைதுண்டு வாங்கியாச்சா ராஜநட போட்டுகிட்டு ராஜநட நடந்தீங்களா ...
உண்மைதொண்டர்கள் எல்லாம் உட்டாலக்கடி பார்டிகளால் காணமல்போய் வருசங்கள் ஆகியாச்சு...
கலைஞருக்கே இது தெரிஞ்சாலும் உட்டாலக்கடி பார்டிய தவிர்க்க முடியாம தக்கவைச்சிகிறார் ராஜநட..
//ஜோதிஜி!உங்களுக்கு உதவி ஏதாவது தேவையா:)
எங்க வீட்டு முகப்பு அறையில் நசர் மூஞ்சிய மாட்டி வைக்கனும். வாய்ப்பு இருக்குதான்னு கேட்டுச் சொல்லுங்க?//
ஜோதிஜி!நடக்கிற மாதிரி ஏதாவது சொல்லுங்க.பஸ்ல பக்கத்து சீட்ல துண்டு போட்டாலும் கூட இவருதான் நசர்ஜின்னு கண்டு பிடிக்க முடியுமா உங்களால்:)
//கரைதுண்டு வாங்கியாச்சா ராஜநட போட்டுகிட்டு ராஜநட நடந்தீங்களா ...
உண்மைதொண்டர்கள் எல்லாம் உட்டாலக்கடி பார்டிகளால் காணமல்போய் வருசங்கள் ஆகியாச்சு...
கலைஞருக்கே இது தெரிஞ்சாலும் உட்டாலக்கடி பார்டிய தவிர்க்க முடியாம தக்கவைச்சிகிறார் ராஜநட..//
உட்டாலக்கடிகளா,உடன்பிறப்புக்களாங்கிறது தேர்தல் முடிவுல தெரிஞ்சுடுமில்ல:)
வாங்க சரி:)
கலைஞர் ஆற அமரும் இடங்களிலெல்லாம் அவருக்கு பத்திரிகைகள் படிக்க கிடைக்கிறதுன்னு நேற்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார்.ஒப்புக்கு சப்பாணி செய்தி படிச்சிட்டு வலைப்பக்கம் அவர் வந்திருந்தாலே மக்களின் நாடி பார்க்கிறதுக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.மக்களுக்கு சில நல்லது செய்தாலும் அவருக்கு எதிராக பூதாகரமானவைகளே கண்முன் நிற்கின்றன.
//ஈழப்பிரச்சினை பேச்சில் வந்தவுடன் மற்ற நான்கு பேரில் ஒருவர் என்னிடம் நீங்க சொல்றதுதான் சரி இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையும் எதிரொலிக்குமென்றார்.//
ஆனால் பெரும்பான்மையான திமுகவினர் ஈழப்பிரச்சனையின் தாக்கம் தேர்தலில் இருக்காது என்று சொல்கிறார்கள்..அப்படி இருந்திருந்தால் அது நாடாளுமன்ற தேர்தலோடு முடிந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
//எந்த கட்சியிலும் உண்மைத் தொண்டர்கள் என்று எவருமே இல்லை. அணைவருக்கும் நன்றாக தெரிந்து விட்டது. அரசியல் என்பது எளிதில் சம்பாரிக்க உதவும் ஒரு இடம் என்பது//
உண்மையான வார்த்தைகள்.. எல்லோரும் எதிர்பார்ப்புக்களுடன் தான் இருக்கிறார்கள். இப்போது ரசிகர் மன்றங்களில் இருப்பவர்கள் கூட பிற்கால அரசியல் பலனை எதிர்பார்த்துதான் இருக்கிறார்கள்..
//ஆனால் பெரும்பான்மையான திமுகவினர் ஈழப்பிரச்சனையின் தாக்கம் தேர்தலில் இருக்காது என்று சொல்கிறார்கள்..அப்படி இருந்திருந்தால் அது நாடாளுமன்ற தேர்தலோடு முடிந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.//
வாங்க பாரத்...பாரதி!ஈழப்பிரச்சினையின் அத்தனை அவலங்களும் மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பதும் அப்படி சேரவிடாமல் செய்த பங்கு தி.மு.க சார்பு ஊடகங்களின் வேலைகள் என்பதையும் தாண்டி இணையங்களில் வலம் வருபவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தல் காலத்திலே தெரிந்ததுதான்.இணையத்தின் தாக்கத்திற்கு நிகராகவே முத்துக்குமார் தீக்குளிப்பில் கல்லூரி மாணவர்கள் கோபம்,வழக்கறிஞர்கள் போராட்டம்,கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் பெ.தி.க போராட்டம்,வை.கோ,சீமான்,திரைப்படத்துறையினர் என அத்தனை கோபத்தையும் புஸ்வானமாக்கும் சக்தியும்,காவல்துறை,புலனாய்வு துறை என அதிகாரமும்,பதவியும் கருணாநிதியிடமிருந்தது.மேலும் கருணாநிதியை மட்டும் குறை சொல்ல இயலாமல் ஒருமுகப்படுத்தும் சக்தி ஏனைய தலைவர்களுக்கும் இல்லாமல் போனதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.பாராளுமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு விசயங்கள் சரியாகப் போய்ச் சேரவில்லை.அதற்கும் பிற்பட்ட காலம் துவங்கி தேர்தல் வரை ஈழத்தின் முழு வீச்சு தெரியாவிட்டாலும் அரசல் புரசலாகவும், சீமான் பிரச்சாரம், கைது,விடுதலை கூடவே சீமானின் தேர்தல் பிரச்சாரமும் போன்ற விசயங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமென்றே நினைக்கின்றேன்.
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதாவது இப்போது தமிழக மக்களிடம் சரியாகப் போய்ச் சேருமா?அல்லது அடுத்த தேர்தல் வரை டமாரமடிக்க வேண்டுமா என்பது நம் முன் இப்போதுள்ள கேள்வி.நன்றி.
////எந்த கட்சியிலும் உண்மைத் தொண்டர்கள் என்று எவருமே இல்லை. அணைவருக்கும் நன்றாக தெரிந்து விட்டது. அரசியல் என்பது எளிதில் சம்பாரிக்க உதவும் ஒரு இடம் என்பது//
உண்மையான வார்த்தைகள்.. எல்லோரும் எதிர்பார்ப்புக்களுடன் தான் இருக்கிறார்கள். இப்போது ரசிகர் மன்றங்களில் இருப்பவர்கள் கூட பிற்கால அரசியல் பலனை எதிர்பார்த்துதான் இருக்கிறார்கள்..//
பாரத்...பாரதி!அப்ப ஒன்னு செய்வோம்.பேசாம சாதி கட்சிகளைக் களைந்து விட்டு ரசிகர் மன்றங்களை கட்சியா மாற்றி விட்டால் என்ன?
ஒரு படம் ரிலிஸ் ஆனா ஒரு கல்லா!இது எப்படி இருக்குது:)
கழக கண்மணியிடம் துண்டு வாங்கிய கதை!//
என்ன சால்வை வாங்கிய கதையா...ஹி..ஹி...
யோவ் இவளவு நாளும் நான் உமக்கு பாலோவர் ஆகாமலா இருந்தேன் அடடடா ஸாரி மக்கா...இதோ வந்துட்டேன்...
//அரசியல் என்பது எளிதில் சம்பாரிக்க உதவும் ஒரு இடம் என்பது. எவரும் கொள்கைகள், நோக்கங்கள் குறித்து அதிக அக்கறை பட்டுக் கொள்வதில்லை. நம்மால் சம்பாரிக்க முடியும்? முடியாது? வாய்ப்பு இருக்குமா? அல்லது வாய்பை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் அமையுமா? எத்தனை பேர்களால் பெரிய அளவில் பணத்தை இறங்கி முதலைகளுடன் போட்டியிட முடியும். அவவாறு முடியாதவர்கள் மற்றவர்களுக்க அல்லக்கைகளாக மாறி முடிந்தவரைக்கும் தேத்திக் கொள்ள வேண்டியது தான்.//
இதுதானே இப்போ நடக்குது....!!!
பார்ப்போம் யாரு கொள்ளை அடிக்க வாராங்கன்னு ம்ஹூம்....
அதுவரை மௌனமாக இருந்த நான் என்னங்கண்ணே ஒரே மொடக்குல குடிக்கிறீங்க!//
சைட் கப்பில நம்ம சகோ ஹீரோவாகிட்டாரு..
இவர்கிட்ட கேட்டுப் பாருங்க ஒரு ரவுண்டுக்கு நான் எவ்வளவு நேரம் எடுப்பேனென்று.நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் இந்த வேகம் என்றார்.அதற்கு குண்டு நண்பர் அவர் மெல்லத்தான் சாப்பிடுவது வழக்கமென்றார்.//
ஹி...ஹி...நகைச்சுவை.. அதுவும் டைம்மிங் காமெடு.,, அசத்துறீங்க
பிரயாணத்தின் போது இடம் பெற்ற நிகழ்வுகளை நகைச்சுவைகளுடன் கலந்து ஒரு அரசியல் ஆய்வாகவும் தந்துள்ளீர்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ் தகவல்களைச் சொல்கிறது..
திமுக வெற்றிக்கான தொகுதி காஞ்சிபுரம் என்றா. அதிமுக எந்த தொகுதி என்று சொல்லாவல் விட்டுட்டீங்களே சகோ?
//என்ன சால்வை வாங்கிய கதையா...ஹி..ஹி...//
நிருபன்!இப்பத்தான் உங்களை கூர்மதியன் கவிதையில் பார்த்தேன்.
சால்வைன்னா நம்ம தாத்தா மஞ்ச கலருல போட்டுக்கிறது.துண்டுன்னா சில புகைப்படங்களில் எம்.ஜி.ஆர் தோளில் போட்டுக்கொள்வது.
துண்டு பெரிசா?சால்வை பெருசா:)
//யோவ் இவளவு நாளும் நான் உமக்கு பாலோவர் ஆகாமலா இருந்தேன் அடடடா ஸாரி மக்கா...இதோ வந்துட்டேன்...//
மனோ நான் பக்கத்து வீட்ல (குவைத்)இருந்துட்டு பஹ்ரைன் பற்றி சொல்லுங்கன்னு பின்னூட்டம் போட்டேன்.தொடர்ந்தும் உங்க ஊமக் குசும்புகளை பின்னூட்டத்தோட ரசிச்சுகிட்டுத்தான் வாரேன்:)
//பார்ப்போம் யாரு கொள்ளை அடிக்க வாராங்கன்னு ம்ஹூம்....//
மனோ!இப்ப கொஞ்சம் மாற்றங்கள் வருகிற மாதிரி தெரியுது.ராசா கைது,புதுச்சேரி கவர்னர் சிங் போலி பாஸ்போர்ட் கொடுத்தார்ன்னு விசாரணைக்குட்படுத்துவது மாதிரி சில அதிரடிகள்.நமக்குத் தெரியும் தானே அரபிகள் தண்டனைகள் எப்படி கொடுப்பாங்கன்னு அந்த மாதிரி சிலரை பலிகடா ஆக்கினால் பலருக்கும் கொஞ்சம் பயம் வந்துடும்.திருடுறதுக்கு கூட ஒரு முறைக்கு மறுமுறை யோசிப்பாங்க.
//அதுவரை மௌனமாக இருந்த நான் என்னங்கண்ணே ஒரே மொடக்குல குடிக்கிறீங்க!//
சைட் கப்பில நம்ம சகோ ஹீரோவாகிட்டாரு..//
சகோ!நான் மது அருந்துவதில்லை.மொடக்க கூடாதுன்னு இல்ல.காஞ்ச இடத்துல வந்து மாட்டிகிட்டதால அதுவே பழக்கமாயிடுச்சு:)
//திமுக வெற்றிக்கான தொகுதி காஞ்சிபுரம் என்றா. அதிமுக எந்த தொகுதி என்று சொல்லாவல் விட்டுட்டீங்களே சகோ?//
சகோ!வட்டச் செயலாளர் நண்பர்கள் கட்சிப்பற்றுல நிச்சயம் நிறைய களப்பணி செய்திருப்பாங்க!அதனால்தான் காஞ்சிபுரம் முடிவில் ஆர்வம்.
எனக்கு எம்.ஜி.ஆர் துவக்கம் முதலே அ.தி.மு.க மீது ஈடுபாடு கிடையாது.அதனால் அதன் வெற்றியிலும் மகிழ்ச்சி கிடையாது. நீங்க ஜோதிஜி,கபிஷ்ன்னு எப்பவாவது பதிவு போடும் சிலர் எம்.எஸ்.உதயமூர்த்தின்னு ஒருத்தர்,அமெரிக்காவுல நல்ல வேலையை விட்டுட்டு மக்களுக்கு உழைக்கணும்ன்னு தமிழ்நாடு வந்து, இருக்கும் சாக்கடைய சுத்தம் செய்ய முடியாம ஒதுங்கிட்டாரு.அந்த மாதிரி மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்யனும்ன்னு யாராவது வருவாஙகளான்னு கனவு கண்டுட்டிருக்கிறேன்.வருவாங்களான்னுஇப்போதைக்கு சொல்ல முடியல.ஆனால் அந்த கனவு எனக்குப் பிடிச்சிருக்குது:)
Post a Comment