Followers

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, December 3, 2015

தமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு

தற்போதைய தமிழக வெள்ளத்தில் உடனடி நிவாரண உள் கட்ட்மைப்பு அரசும்,தனியார் துறையும்,பொது ஆர்வலர்களும் பொது மக்களும் சார்ந்தது. என்னைப்போன்ற பரதேசிகளால் ஏதாவது உதவ இயலுமா என்று யோசித்ததில்...

முன்பு ஒரு முறை இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணை வியாபாரம் பற்றி கடிதம் எழுதினால் கூட அதற்கு மறு பதில் சொல்லுமளவிற்கு நேரமில்லாமலோ அல்லது அலட்சியம் காரணமாகவோ புறக்கணித்து விடுவார்கள்.பின் டெண்டர்,அரசு துறை சுற்றுக்கள் என்ற கால விரயம் காரணமாக பெட்ரோலிய கச்சா பொருட்களில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய தமிழக மழை வெள்ளம் சூழலில் இந்த பதிவு தகவல் மூலமாக அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் தொழில் துறை சார்ந்தவர்களோ பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமில்லாமல் மழை வெள்ளம் போன பின் மீள் கட்டமைப்பை மட்டும் கவனத்தில் கொண்டு செயல் பட நினைப்பவர்கள் அணுகவும். 

செயல்பாட்டுக்கான கச்சா பொருட்கள் மெட்ரிக் டன் எனப்படும் கணக்கில்

1. பழைய இரும்பு கம்பிகள் 500 டன் ஒரு மாத கால தவணை இறக்குமதி. ஓரளவுக்கு தரமான கம்பிகள் என்பதால் அப்படியே உபயோகிக்கலாம் அல்லது மறு உருவாக்கம் செய்யலாம்.
2. தார் ரோடு போடும் கலவையில் கலக்கும் வொய்ட் ஸ்பிரிட் சுமார் 16 மெட்ரிக் டன்னும் அதற்கு மேலும்.
3. கெரோசின் எனும் வாசனை மற்றும் வாசனையில்லாத மண்ணெண்ணை

வொய்ட் ஸ்பிரிட் என்பது தார் ரோடு தவிர பெயிண்ட்டில் கலக்கும் மற்றும் டர்பன் டைன் பெயிண்டைக் கழுவுவதற்கான மாற்று. மரச்சாமான்கள், பூச்சிக்கொல்லி,கொசு,ஈ மருந்து என பல கெமிக்கல் துறை சார்ந்தது. கூகிள் மற்றும் இந்திய தொழில் தகவல் படி மும்பாய் துறைமுகமும்,சென்னை துறைமுகம் மட்டுமே அதிக அளவில் வளைகுடா நாடுகளிலிருந்து வொய்ட் ஸ்பிரிட் இறக்குமதி செய்கிறார்கள். 

இந்த வொய்ட் ஸ்பிரிட் பெட்ரோலிய உப பொருள். இதனை டாஸ்மாக் கலவையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். டாஸ்மாக் எதனால் அடிப்படையானது.பெட்ரோலிய வொய்ட் ஸ்பிரிட் ஹைட்ரோ கார்பன் அடிப்படையானது.

4. தமிழகத்தில் அரிசி போகம் செய்தாலும் தற்போதைய மழை சூழலில் பயிர்கள் மோசமாகி இருந்தால் டெல்லி,ஹரியானா பகுதிகளிலிருந்து பசுமதி,சம்பா வகை அரிசிகளை கொண்டு வந்து விடலாம்.

5.தேயிலை டீ,தேங்காய்,எண்ணை,பருப்பு போன்றவை தமிழகத்திலேயே உற்பத்தியாகின்றன. தமிழக அரசு தேவைகளை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். முடியாத பட்சத்தில் ஏற்றுமதி பொருட்களை தமிழகம் நோக்கி திருப்பி விடலாம்.

கொஞ்சம் நிலைமை சீராகிய பின் ஈரான்,துபாய் எண்ணை வளங்களை உபயோகிக்க முடியுமா என பார்க்கலாம்.

மாற்று ஆலோசனைகளை யாராவது தெரிவித்தாலும் செயல் படுத்த இயலுமா என முயற்சி செய்யலாம்.லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் வாகன பொருள் இடமாற்றங்கள்,பணம் பட்டுவாடா என்ற இரண்டு நிலைகளை கடக்கும் வலிமையில் பிரச்சினைகளை ஓரளவுக்கு சீர் கொண்டு வந்து விட முடியும்.

இதில் தமிழக நலன்,பொருள் தேடல் தவிர எனது சுய நலம் எதுவுமில்லை என்ற டிஸ்கிளைமர் போட்டு விடுகிறேன்.

Wednesday, December 2, 2015

வாழ்வை பிரதிபலிக்காத இலக்கியவாதிகள்.

இந்த பதிவின் தலைப்பை 2009ம் வாக்கில் எழுதியிருக்க வேண்டும்.எழுதும் நேரமும்,வாசிப்பின் காலமும் இன்னும் சொல்லபோனால் ஒரு நேரப் பசியையாவது காசாக எழுத்தால் பார்க்கும் தமிழ் இலக்கியவாதிகள் என்று அக்மார்க் ஒட்டிக்கொண்ட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முள்ளி வாய்க்கால் கால கட்டத்தில் மூடிக்கொண்டே இருந்தார்கள்.

சரி அதுதான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு விவகாரம்...வழியில் எவனோ படுத்துக் கிடந்தாலோ,இருவர் சண்டையிட்டுக்கொண்டாலோ வேடிக்கை பார்க்கும் சென்னை கலாச்சாரத்தில் ஊறிய பழக்க தோசம் என்றாலும் தன் வீட்டுக்கும்,தான் நடக்கும்,பிரயாணம் செய்யும் ரோட்டில் அடை மழை அடித்து துவைத்து விட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு எழுத்தாளர் ருமாலி ரொட்டி எப்படி செய்வது என்று பாடம் எடுக்கிறார்.

ருமாலி ரொட்டி என்பது தட்டையான ருமாலியை இரு கைகளிலும் பரப்பி தலைக்கு மேல் விசிறி ருமாலி கவிழ்த்துப் போட்ட வடச்சட்டி மேல் வந்து உட்காரும்ங்கிற தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது?

எதிர் கோஷ்டியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் புர எழுத்தாளரோ தமிழ் ஹிந்துவில் கண்ட பயணிகள் ஊர்தியின் படம் போட்டு புலம்பிக்கொண்டுள்ளார்.தன்னைச் சுற்றிய நிகழ்வுகள் கூட பாதிக்காமல் என்ன எழுத்தோ கட்டுரையோ! தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கே  சென்னை வெள்ளம் மனம் பகீர் என்கிறது.

ஒரு புறம் சகிப்புத்தன்மை விவாதம் பாரளுமன்றத்தில் நிகழ்ந்தாலும் சிரமங்களுக்கு இடையிலும் வாழும் சென்னை வாழ் மக்கள் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் அடையாளம்.

பெயர் சொல்லிக்கொள்ளூம் படியான டாட்டா,அம்பானி,மிட்டல்களின் இந்திய பொருளாதார மேம்பாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிக்காப்பவர்கள் கையேந்தி பவன் துவங்கி,உணவு விடுதிகள்,சிறு தொழில்கள்,மிதமான பணக்காரர்கள்,பணத்தோடு கொஞ்சம் மனித நேயத்தையும் அன்பளிப்பவர்கள் என்பவர்களின் சராசரியில் இந்திய பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.

 பிளாஸ்டிக் போடுற, அதனால்தான் மழை வந்து உன்னை அடிச்சுப்போட்டுச்சுன்னு எதிர் லாஜிக் கருத்துக்கள் தென்படுகின்றன. பிளாஸ்டிக் போட்ட, அடைச்சு வீடு கட்டிகிட்ட இதெல்லாம் பிளாஸ்டிக் போட்டவன்,வீடு கட்டிகிட்டவன் குத்தமா? காசுன்னா எதுவுமே தப்பில்லைங்கிற இந்திரா காந்தி காலம் தொட்டு இப்ப ஜெயலலிதா ஆட்சி வரைன்னு தொடரும் சுய மரியாதையின்மை அது.ஆக்டோபஸ்களாக விஸ்வரூபமாய் எங்கும் பரவியிருக்கிறது. 

எனது அப்பாவித்தனத்தால் இந்தியன் படம் வரும் போது அரசாங்க பணியாளர்கள் ஒரு சிலராவது திருந்தி விடுவார்கள் என நினைத்தேன். நற்குணங்கள் ஜீனில் உருவாகுவதோடு வாழ்க்கையின் அனுபவங்களோடு, சூழல்களோடு சார்ந்தது என மெல்ல இப்பொழுது புரிகிறது.

ஒரு உணவு நிறுவனத்தில் முன்பு பணியாற்றும் போது 150கிலோ எறா மீன் தேவைப்படும்ங்கிற கணக்கில் நீ 350 கிலோவுக்கு கணக்கு போடுன்னு அரபிக்காரனும்,எகிப்தியனும் சொன்ன கூட்டுக்களவானித்தனத்துக்கு நான் உடன்படாததால் என் வேலை போனது.பொழக்கத் தெரியாதவன் என்ற கிண்டல் அவர்களிடமிருந்து அப்பொழுது வந்தாலும் இப்பொழுது நினைப்பதற்கு மனம் நிறைவாகவே இருக்கிறது.

பொருளாதாரம்,உற்பத்தி,தொழில் என உலக மொத்த சூட்டுக்கு முக்கிய காரணிகளாக இப்பொழுது அமெரிக்கா முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும்,மூன்றால் நிலையில் இந்தியாவும் என திங்கட்கிழமை பஞ்சாயத்து பேசின உலக தலைவர்கள் ஒபாமா உட்பட புலம்பியிருக்கிறார்கள். 

இந்திய வாழ்க்கை முறை சுகாதார முன்னுரிமைமையற்றது  என்ற போதிலும்,மலை,மேகங்கள்,மரங்கள்,செடி கொடிகள்,ஏரி,குளம்,ஆறு,கடல் என இயற்கையின் நன்கொடையோடு வாழும் நமக்கு வானிலை அறிக்கை ரமணன் சொல்லாமல் போனாலும் நமக்கு பூகோள புவிச்சூட்டில் அடை மழை வரும்.50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கொண்டு வரும்.

அங்குமிங்கும் மனித நேயங்கள் சில அவ்வபோது வெளிப்படத்தான் செய்கின்றது. ஹேப்பி கிறுஸ்மஸ் சொல்லும் நடுராத்திரி 12 மணிக்கு நான் எனது சகோதரியின் மகனோடு ஆட்டோவில் சென்னையில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெரிய லாரி பாரம் சுமந்து கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. லாரிக்கும், ஆட்டோவுக்கு மிடையில் மோட்டர் பைக்கில் பயணித்த ஒருவர் திடீரென லாரிக்குள் சறுக்கி விட்டார். 

தங்கை பையனோடு பேசிக்கொண்டிருந்த நான் கவனிக்கவில்லை.ஆனால் தங்கை பையன் ஆட்டோக்காரரை திடிரென பிரேக் போட வைத்து மோட்டார் பைக் காரரை நோக்கி ஓடி சக்கரத்துக்கு வெளியே இழுத்து விட்டான்.பார்த்தால் மோட்டார் பைக்காரர் மப்பு. உதவும் இந்த பழக்க தோசத்தில் இன்னொரு முறை விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை காப்பாற்றினான்.இப்பொழுதும் அவர்கள் நட்பு தொடர்கிறது.

பிரதி உபகாரம் நோக்காமல் சென்னை மழையில் யாராவது யாருக்காவது உதவும் முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இருக்கலாம்.உங்கள் நல்ல மனித நேய உள்ளங்களுக்கும் உதவும் கரங்களுக்கும் ,சென்னை மழையின் அவதிக்கு அக்கறையோடு கருத்து வெளிப்படுத்தும் பதிவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

Saturday, October 24, 2015

பதிவுலக ராதாரவிக்கு

நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.

தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம். 

பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.

திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.

முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.

பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன். 

கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ?  

எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.

பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.

எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.

பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.

பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.

அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)

Monday, July 20, 2015

உப்புவேலியும்,ரோப்வேயும்

பதிவர் கிரியின் உப்புவேலி குறித்த தகவலில் ராய் மாக்ஸம் (Roy moxham) பிரிட்டிஷ் உப்பு சத்தியாகிரக காலத்து உப்பு வரிக்கு காவலான இப்பொழுது காணாமல் போன உப்பு வேலி பற்றி கூறியிருந்தார்.

மொகஞ்சோதாரோ,ஹரப்பா காலம் தொட்டு இந்திய வரலாறு சரியாகவே இல்லை.ஏதோ அங்கொன்றும்,இங்கொன்றுமாக சிதிலமடைந்த கட்டிடங்கள்,கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள்,முப்பாட்டன்கள் எழுதிவைத்த பாடல்கள்,கூத்து,நகர்ப்புற பாடல்கள் என கிடைப்பதை வைத்து காதும்,கண்ணும்,மூக்கும்,வாயும் வைத்து நிலைத்து நிற்பவையே இந்திய சரித்திரம். அரசு சார்ந்த அறங்காவல் துறை மூதாதையர் சொத்து என பலவற்றை பாதுகாத்தாலும் இரும்பு கதவோடு அரசு இயந்திர கதவும் சேர்ந்து என்பதால் ஆராய்ச்சி குறித்த தேவைக்கு பலருக்கும் சென்றடைவதில்லை என அன்பர் ஒருவர் புலம்பியிருந்தார்.

மொழிகள் உருவாகியது எப்படி  என்ற ஆர்வம் குறித்த தேடலில் தமிழ் மொழி குறித்து ஏராளமான தகவுகள் இருப்பது பற்றி தமிழ் தனது தொன்மை சார்ந்தும்,வரலாறு சார்ந்தும் எப்பொழுதும் பெருமை பட்டுக்கொள்ளலாம்.மனு காலம் தொட்டு இருக்கிறேனாக்கும் என்று சொல்லும் சமஸ்கிருதம் தத்துவார்த்தம் சார்ந்தும்,இப்பொழுது கோயில் மொழியாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அகண்ட பாரதம் வரலாறு சொல்வதில்லை. வரலாற்று முக்கியத்துவத்தை பாடம் படிப்பவர்களுக்கு கொடுத்திருந்தால் ஒருவேளை இந்திய வரலாற்று தொகுப்பு இன்னும் செழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை.காமிராவின் புகைப்படக்கலையை பொழுது போக்காக மட்டுமின்றி வரலாற்று பாடத்தின் ஒரு பகுதியாக வைப்பது நிகழ்வுகளை தொகுப்பதற்கு உதவும். இப்போதைய கணினி யுகம் இந்திய வரலாற்றை மென்மேலும் மேன்மை படுத்த உதவும்.

இந்த ஆதங்கத்தை தொடர்ந்து ராய் மாக்ஸம் தளத்திற்கு சென்றால் அவர் வெள்ளைக்கார துரையாக தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்தவர் என்ற தகவல் அறிய நேர்ந்தது. 

இனி கல்லூரி காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து  வால்பாறை வரை சுமார் 120 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த நினைவுகளிலிருந்து.

இப்பொழுது ஆழியார் அணைக்கட்டு முதற்கொண்டு வால்பாறை வரை சுற்றுலா பகுதியாகி விட்டன. முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும் பதிவர் கந்தசாமி அவர்களே கூட அந்த காலகட்டத்தில் அட்டகட்டி தாண்டியிருப்பாரோ என்பது கூட எனக்கு சந்தேகமே:) காரணம் பொள்ளாச்சியில் துவங்கும் பஸ் பயணம் எங்கும் நிற்காது அட்டகட்டியில் டீகுடிக்க,ஒண்ணுக்க அடிக்க என இடை நிறுத்தம் செய்து வாட்டர்பால்ஸ்,கவர்க்கல்,ஐயர்பாடி,ரொட்டிக்கடை,புதுதோட்டம்,வால்பாறை என முடியும். ஆனைமலை,ஆழியார் கிராம வாகனங்களுக்கு ஆழியார் அணையின் வளைவுகளை கண்டாலே நடுக்கம் என்பதால் அந்தப்பக்கமே போகாது என்பதாலான ஊகம்.எனவே என்னை மாதிரி சைக்கிள் பேர்வழிகளுக்கும்,மோட்டார் சைக்கிள்காரர்களுக்கு மட்டுமேயான அபூர்வ அனுபவங்கள் எனலாம்.பேச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் நேரமின்மை காரணத்தால் சுருக்கமாக பயணிப்போம்.

முன்பு மனிதன் மிருகங்களை வேட்டையாடிய காலம் போய் இப்பொழுது பாரஸ்ட் ரேஞ்ச் எனும் காவல் கட்டுப்பாடு,விலங்குகள் மனிதனை வேட்டையாடும் பயத்தில் வாகனம் தவிர சைக்கிள் பயணம் சாத்தியமில்லை. 

இயக்குநர் பாலாவின் பரதேசி ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் ஆழியார் அணைக்கட்டைத் தாண்டி கிட்டத்தட்ட வேதாந்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில்,அதனை அடுத்த குரங்கு நீர்வீழ்ச்சி தாண்டிய வளைவிலிருந்தாவது கதை துவங்கியிருக்கலாம். மனிதன் துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்வின் இனிமைகளை ரசிப்பதாகவே வாழ்கிறான். இந்த நோக்கு பிரிட்டிஷ் காலத்து மழை,குளிர்,மரக்குடிசை,காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டை,பெண்களின் நனைந்த தாட்டு (தேயிலை கொழுந்து பறிக்க  உடைக்கு மேல் உடுத்திக்கொள்வது) என பல சிரமங்களுக்குள்ளூம் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை ஒட்டியே.

 முந்தைய ஆங்கிலேய நிர்வாக முறைகள் மாறி இப்பொழுது இந்திய வணிக நிறுவனங்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கின்றன. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்திலிருக்கும் நிறுவன அலுவலகத்துக்கு பெண்கள் வெட்டும் தேயிலையின் எடை கணினி கார்டு பதிவின் வழியே போய் விடும் வசதி வந்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் தேயிலை தொழிற்சாலை போர்மென் தனியாக காட்டிற்கு போய் பெரும் கொம்புகள் கொண்ட மானை வேட்டியாடிய காலம் போய் இப்பொழுது புலிகளும்,சிறுத்தைகளும் தேயிலைத்தோட்ட மனிதர்களை வேட்டையாடும் காலம் வந்தும் அங்கே உழைக்கும் மக்கள் இடம் நகர்வதாக காணோம்.
முன்பெல்லாம் டீ என உருவாகும் தேயிலை தொழிலாளர்களுக்கு கூட சிறிதும் பங்கீடில்லாமல் கோவையில் தேயிலை யூனியன் மூலமாக கொச்சின் வழியே வெளிநாடுகளுக்கு சென்று விடும். தேயிலை தோட்ட கண்காணியின் வேலையே பெண்கள் இளம்தளிர்களை பறிக்கிறார்களா என பார்வையிடுவதுதான். ஒரு பெரும் இலை,ஒரு தளிர்,ஒரு மொட்டு என மூன்றே இலைதான். 

இப்பொழுது பெண்களுக்கு இயந்திரம் கொடுத்து மொத்தமாக கத்திரிக்கோல் மாதிரி வெட்டி விடுகிறார்கள்.தரம் எப்படியென தெரியவில்லை.ஆனால் நிறைய தேயிலை வால்பாறை துவங்கி,ஆழியார்,பொள்ளாச்சி என தாரளமாக கிடைக்கிறது.

இப்பொழுது பரதேசி படத்தை நினைக்கும் போது கதைக்களத்தை பாரதிராஜா கையாண்டிருக்கலாமோ என தோன்றுகிறது..காரணம் பாரதிராஜா சினிமா துறைக்கு வருவதற்கு முன் அந்த பகுதிகளில் மலேரியா இன்ஸ்பெக்டராக சுற்றித் திரிந்ததாக கேள்வி ஞானம். இதனை பாரதிராஜாவே வந்து ஆமாம் இல்லை என கமெண்டினால் ஒழிய இந்த தகவலும் தமிழக திரைப்பட வரலாற்றில் இல்லாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.

பாரதிராஜாவுக்கான மலை,காடு,வான் மேக முட்டம் என கொஞ்சம் சினிமா தேவதைகளை மட்டும் பயணத்தோடு கொண்டு சேர்த்தால் அழகாக படம் பிடித்துக்கொண்டு திரும்பியிருக்கலாம்.கூகிள்  மக்களின் துயர் பகுதிகளை விடுத்து கூகிள் தேடல் கூட அழகியலை மட்டும் வெளிப்படுத்துகிறது.இதன் காரணம் கூகிளின் பெரும்பாலான படங்கள் சுற்றுலா பயணிகள் சார்ந்திருக்கலாம்.

பரதேசி அழுது புரளாமல் அழகியலோடு சேர்ந்திருப்பான். பாலா சொன்னதில் இடமாற்றங்கள்,,சோகங்கள் உண்மையென்பது மட்டும் உண்மையென்பதை படம் பார்த்தும்,அந்த வாழ்வியலோடு வாழ்ந்த ஒரு வயதான பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலில் நிலவுக்கு போன மாதிரி வால்பாறைக்கு முதன் முதலாக பஸ் வாகன போக்குவரத்தை கொண்டு வந்தவர் நா.மகாலிங்கம் அவர்களின் அப்பா நாச்சிமுத்து பெரியவர்.
முதல் வாகனத்தின் பேருந்து ஓட்டுநரையும் திரு. நா.மகாலிங்கம் சார்ந்தவர்கள் ஆவணப்படுத்தினால நல்லது.

மற்றபடி தினசரி வேலைகள் தவிர வீட்டைச் சுற்றி காய்கறி தோட்டம் போடுதல்,மதுரை வீரன்,மாரியாத்தா,நாகம்மாள்,ஏசுவே பிதாவே,சப்பாரம்,அல்லாவை மனதிற்குள்ளே தொழுத குத்புதின்,ராவுத்தர் என கெடாவெட்டும்,திருவிழா, கொண்டாட்டம் என வாழ்வின் மறுபக்கத்தையும் ருசித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.முன்பு தேயிலைத் தோட்ட வேலை,வீட்டுத்தோட்டம்,வீட்டு வேலை என மூன்று மடங்கு உழைத்த மக்கள் தேயிலைத்தோட்ட வேலையை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் குளிருக்கு இதமாக போர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.இதற்கு தோதாக புலி,யானை பயம் என்பதால் இருட்டிய பிறகு குடிமக்கள் தவிர யாரும் வெளியில் நடமாடுவதில்லை.

தமிழகத்தில் ஊட்டி,வால்பாறை பகுதிகள் தவிர இலங்கை,டார்ஜிலிங் தேயிலைகளும் உலக பிரசித்தம்.வாழ்க்கை முறை ஒப்பீடுகளில் தமிழக தேயிலை தோட்டங்கள் தொடர் போராட்டங்களாலும்,தொழிற்சங்கங்களின் உதவியினாலும், தொடர் போராட்டங்களாலும் ஒரு படி மேல் எனலாம். 

நகரம் , கிராமம் சாராத இரண்டையும் தொட்டும்,தொடாமலுமான மூன்றாவதான வாழ்க்கை முறை தேயிலை மலைக்காடுகள்.

சாரு புகழும் லத்தின் அமெரிக்காவின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர உதவும் ஒரே இயந்திரம் ரோப்வே மட்டுமே.அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் அறுந்து போகுமோ என்று அஞ்சக்கூடிய கம்பிகளை உயிரை பணயம் வைத்து பயணம்.
சமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி,தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில்  வந்து சேரும்படியான ரோப்வேக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. இதனை நிருபிக்கும் ஒரே ஆவணப்படம் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் படம் மட்டுமே. முள்ளூம் மலரும் கூட கொஞ்சம் தொட்டு விட்டு ரஜனி,ஷோபா அண்ணன் தங்கை பாசமலருக்கு டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.

நிலம் தவிர மனிதர்கள் காணமல் போனார்கள்.வாழ்ந்த வாழ்க்கை முறை திருப்பூர் போன்று இடம்,சமூக மாற்றங்கள் என காணாமல் போயின.
காணாமல் போன உப்புவேலியைப் போலவே இப்பொழுது கூகிள் உட்பட அந்த ரோப்வேயையும் காணோம்.

Thursday, October 31, 2013

வந்துட்டானய்யா!வந்துட்டான்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு கேசு தொலைந்ததேன்னு யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியல.ஆனாலும் புதுகை அப்துல்லா,வவ்வால்,இக்பால் செல்வன்,ஜோதிஜி என ஆளைக்காணோமே என குசலம் விசாரிப்பது மகிழ்ச்சிக்குரியதே.எனது நன்றியை சொல்லிட்டு இங்கே வந்தால் அப்படியே குந்த வச்சு உட்கார்ந்துக்குவோமோ என்ற பயத்தோடு கூடவே சென்னையின் பத்தில் ஒரு சதவிகிதம் ஏரியா கூட இல்லாத குவைத்தில் வியாபாரம் பண்ணலாம் வாரியான்னு மொபைல் பேசுற நிறுவனத்திலிருந்து கப்பல் விடுறவன் கிட்ட போய்,தாய்லாந்து,இந்தியா,அவ்வளவு ஏன் நம்ம சிவகாசிக்கு கூட பிள்ளையார் மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கிட்டே கூப்பிட்டால் ஒருவரும் மசிய மாட்டேன்கிறார்கள்.

அப்படியும் வருகிற சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர் பிள்ளையார் காலண்டர் விற்பனைக்கு தயாராக இருக்கிறது என சேம்பிள் அனுப்புகிறார்.ஒருத்தர்கிட்ட விற்கிற பொருள் இருக்குது.இன்னொருவருக்கு வாங்க வேண்டும்.இடையில் இருக்கும் கடலை கடப்பதுதான் பிரச்சினையே.சரி இதுதான் வேண்டாம் லோக்கலா டீல் பண்ணலாமென்றால் பொட்டிக்கடை வைத்திருக்கும் பெங்காலிக்கும்,ஈரானிக்கும் தொழில் நுட்பம் தெரியமாட்டேங்குது.இப்ப என்னமோ மொபைல் ஆப்புன்னு என்னமோ விற்குதாமே அதுகூட தெரியாத அரபிக்காரன் கூகிள் அண்ணாத்தே தயவால் முகப் புத்தகம்,டிவிட்டுகிட்டு உன் கடைக்கு டிராபிக் என்னங்கிறான்:)

இப்படியான நிலைமையில் போடாத குரங்கு வித்தை குட்டிக்கரணம் போட்டும் கடையில் போணியாகாத சோகத்தில் இருக்கும் என்னிடம் வந்து எங்கய்யா ஆளைக்காணோம்ன்னு கேட்டால் சிவாஜி ஸ்டைலில் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.நம்ம நிலைதான் இப்படின்னு பார்த்தால் டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடத்திற்குள் மெகா ஸ்கைஸ்கிரேப்பர் மாடிக்கட்டிடங்களை நிறுவதற்கு இந்த எக்ஸ்காவேட்டர்களும் ஒரு காரணம்.இந்தியாவில் வெள்ளைப்பணத்தோடு யாராவது சட்ட வரைமுறைகளோடு வங்கி மூலமாக் வாங்குவதற்கு ஆட்கள் இருந்தால் அனுப்பி விடலாம்.Caterpillar,Volvo போன்ற பெயர் பெற்ற நிறுவன தயாரிப்புக்களை விட விலை குறைவு.காரணம் தயாரிப்பு நிறுவனம் சீனா.

அமெரிக்காவில் போணி பண்ண முடியாமலோ என்னவோ ஹாரி என்ற அமெரிக்கர் Dream lites,Slushy magic என்ற குழந்தைகளின் பொருட்களை கொஞ்சம் மார்க்கெட் செய்து தரச்சொல்லி முயன்று கொண்டிருக்கிறேன். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உணவகங்களில் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருளை தேடி குஜராத் ஓடினால் எங்கள் நிறுவன ஒப்பந்த நிறுவனத்தை குவைத்தில் அணுகவும் என திருப்பி கடிதம் போட்டு விட்டார்கள். இங்கே போய பார்த்தால் அவர்கள் 12 வருடம் குப்பை கொட்டி பெருக்கி அழகாக நிறுவனம் அமைத்துள்ளார்கள்.

சிவகாசி கதையை கேளுங்களேன்.2014 வருகிறதே!யாருக்காவது 2014 காலண்டரை மொத்த விலைக்கு விற்கலாம் என கூகிள் தேடலில் சிவகாசிக்குப் போனால் SFA என்ற நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி திறனில் சிறந்து இருப்பது மாதிரி தெரிகிறதென்று அணுகினால் நீங்கள் மும்பைக்குத்தான் அயல்நாட்டு விற்பனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று போனில் சொல்லி விட்டார்கள்.சரியென மும்பைக்கு கடிதம் எழுதினால் அவர்கள் என்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு நீங்கள் இனி துபாயோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

துபாயிலிருந்து வந்த விலைப்பட்டியலைப்பார்த்தால் சிவகாசி உற்பத்தி விலை+மும்பை லாபம்+துபாய் லாபம் என நமக்கு ஏதும் மிஞ்சாத நிலைமை. ஒரு முறை தமிழ் புகைப்படக்கலை தலைகளுக்கு கடிதம் போட்டு விட்டு பதில் வராத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹாபின்னு சொல்லிகிட்டே க்ளிக் செய்வீங்க?சிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம் அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓ! நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல! சரி நம்ம திருவிளையாடல் தருமி ஸ்டைலில் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுங்கன்னு சொல்லிப்பார்த்தேன்.யாரும் கண்டுக்கல.நாதாஸ் மட்டும் எனது விளம்பர உதவிக்காக வேண்டி ஒரு அழகான பெராரி கார் அனுப்பினார்.

இன்னுமொரு கதை கேளுங்களேன்!குவைத்தில் நீளமா,உயரமா கட்டிடம் கட்டி வச்சிருக்காங்க.யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாதேன்னு கூகிள் எர்த்தோடு அவர்கள் கட்டிடத்தை போகஸ் செய்து விடலாம் என கூகிள் ஸ்கெட்சப் சான்றிதழ் வாங்கின நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.நம்மாளுக ஹாலிவுட்டுக்கே சவால் விடுறவங்ளாச்சே.....(வவ்வால்!விஸ்வருபம்!விஸ்வரூபம்:)) என யாராவது Motion graphics design advertisement கோடம்பாக்க வல்லுனர்களையும் கூகிளில் தேடுகிறேன்.யாரும் அகப்பட மாட்டேன்கிறார்கள்.இங்கே கூட்டத்துக்குள் யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உள்ளேன் நண்பா என தலையை காட்டவும்.

talabat.com என ஒரு வளைகுடா முழுவதும் வளைத்துப்போட்டு விட்ட ஒரு நிறுவனம் என் தூக்கத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.யாராவது தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தால் அந்த நிறுவனம் வாங்கும் ஒரு KFC ஆர்டருக்கு கமிசன் ரூபாய் 100 எனபதை நான் ரூ 80க்கு தருகிறேன் என போட்டி போடலாம். தேவையான வை மென்பொருளும் KWD payment gateway மட்டுமே. 

நீ ஆணியே புடுங்க வேண்டாம்.உன் மூலமா யாரையாவது பொருள் வாங்கச்சொல்லு என அமேசன் விற்பனை தளம் கடிதம் போடுது.

Idea that sells என்கிற இணைய கோட்பாட்டில் விற்பதற்கும்,வாங்குவதற்குமான வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு பக்கங்களையும் இணைப்பதற்கான நெட்வொர்க்,நம்பகமான மனுசன் என வெளிச்சம் போட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. 

அமேசன் என்றவுடன் இன்னுமொரு எண்ணம்.அது ஏன் அமெரிக்கா வரைக்கும் போக வேண்டும். வளைகுடாக்களில் தினாரையும்,திர்காமையும் வைத்துக்கொண்டு சொந்தங்களுக்கு சில நேரங்களில் டெலிபோன் வாழ்த்துக்கள் சொல்வதோடு பிறந்தநாள்,திருமண நாள்,தீபாவளி,புது வருட நினைவுகள் பலருக்கு முடிந்து விடுகிறது.பட்டுப்புடவைகள், கேக்,மல்லிகை,ரோஜா போன்றவற்றை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கலாம்.மாவட்டம் தோறும் முக்கியமாக தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளில் கூரியர் உதவியோடு கொண்டு சேர்க்கும் அதே விற்பனை நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

கடன் தரும் வங்கி,மாமல்ல புர பொழுது போக்கு பார்க் மாதிரி மல்டி மில்லியன் நிறுவனங்களுக்கு தரமான நிறுவனங்களாச்சே என ஒப்பந்தம் செய்யாமல் விளம்பர யுக்திகள் செய்து விட்டு காசு வராமல் அல்லாடுகிறேன்.இப்போதைக்கு அனுபவங்கள் மட்டும் வரவு.

இன்னும் நிறைய அனுபவங்கள் வரும்.மொத்தமா சேர்த்து வச்சு அப்புறமா சொல்லுகிறேன்.



Monday, April 18, 2011

கழக கண்மணியிடம் துண்டு வாங்கிய கதை!

தேர்தல் முடிஞ்சும் கூட அரசியல் பதிவான்னு யாரேனும் முகம் சுழித்தால் இது தேர்தலையொட்டிய பதிவல்ல.முன்னாடியே சொல்லியிருந்தா தேர்தல் பதிவு மாதிரியாத்தான் ஆகியிருக்கும்.திருச்சி ரயில் பயணத்தில் திடீர் நண்பர்களிடம் பேசிக்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ரயில் திருச்சி ஜங்சனில் நின்றது.நான் ஜன்னலோரம் தனியாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருக்க கோச்சில் முதலில் நான்கு இளைஞர்கள் வந்து மூவர் இருக்கையின் இரு புறமும் ஆளுக்கு இரண்டு பேர் என வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.அதன் பின் வெண்ணிலா கபடிக்குழுவில் ஐம்பது புரோட்டா சாப்பிடுவர் உருவத்தில் ஒருவரும்,குள்ளநரிக்கூட்டத்தில் வெள்ளந்தியா போனைக் கொடுத்து விட்டு தேடி ஓடும் குண்டான உருவத்தில் ஒருவரும் வந்து ஆளுக்கு ஒரு புறமாக மீதமிருந்த இரு இருக்கையில் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டார்கள்.வண்டி கிளம்பியது.

கபடிக்குழு புரோட்டாக்காரர் சில உணவுப் பொட்டலங்களை வெளியே எடுத்தார்.பின் தண்ணீர் பாட்டிலையும் பக்கத்தில் வைத்தார்.அடுத்து கைப்பையைத் தேடி சரக்கு பாதி மில்லியை எடுத்தார்.கைவசம் கொண்டு வந்திருந்த கண்ணாடி கிளாசில் அளவு பார்த்து விட்டு தண்ணீரைக் கலந்து ஒரு கிளாசை குள்ளநரிக்கூட்ட குண்டு நண்பருக்கு கொடுத்து விட்டு தனது சரக்கை ஒரே ஃகல்ப் செய்தார்.அதுவரை மௌனமாக இருந்த நான் என்னங்கண்ணே ஒரே மொடக்குல குடிக்கிறீங்க!உடம்புக்கு நல்லதில்லை என போதைக்கு போதனைக்காரனானேன்.கபடிக்குழு புரோட்டா நண்பர் தனது நண்பரைக் காட்டி இவர்கிட்ட கேட்டுப் பாருங்க ஒரு ரவுண்டுக்கு நான் எவ்வளவு நேரம் எடுப்பேனென்று.நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் இந்த வேகம் என்றார்.அதற்கு குண்டு நண்பர் அவர் மெல்லத்தான் சாப்பிடுவது வழக்கமென்றார்.

பேச்சு குசலங்கள் விசாரித்த போது புரோட்டாக்காரர் தான் காஞ்சிபுரம் தி.மு.க வட்ட செயலாளர் என்றும் நண்பரும் ஏதோ கழக பதவியில் இருப்பதாகவும்,தேர்தலுக்கு விளம்பர போஸ்டர்கள்(அப்ப அவருக்குத்தான்  தெரியுமா இல்லை நான் தான் கனவு கண்டேனா தேர்தல் ஆணையம் ஆப்பு வைக்குமென்று),கேக் மற்றும் கழக துண்டுகள் ஆர்டர் செய்வதற்காக சிவகாசி போய் விட்டு திருச்சி வந்து சென்னை திரும்புவதாக சொன்னார்.ஆகா!நமக்கு பயணத்துக்கு ஒரு கண்மணி கிடைச்சதேன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டு முதல் கணையே ஸ்பெக்ட்ரத்தை எடுத்து விட்டேன்.என்னங்க பத்திரிகைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரத்தைப் பத்தியே பேசுறாங்க என்றேன்.அதற்கு புரோட்டா கண்மணி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி மக்களுக்கு என்னங்க தெரியும்?கலைஞர் மக்களுக்கு நிறைய செஞ்சிருக்காரு.அதனால தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமென்றார்.

இந்தக் கதை நடக்கும் போது ராசா ஜெயிலுக்குப் போகலை.அதனால அடுத்த பிரம்மாஸ்திரத்தை விட்டேன்.கலைஞர் ஆயிரம் நல்லது செய்திருக்கட்டும்.ஆனால் ஈழப்பிரச்சினை ஒன்றில் தான் சேர்த்து வைத்திருந்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார.நானும் கூட முன்பு தி.மு.க அனுதாபிதான் ஆனால் இப்ப இல்லை என்றேன்.அதற்கும் அவர் விட்டுக்கொடுக்காமல் இதில் கலைஞரை மட்டும் குறை சொல்ல முடியாது,காங்கிரஸ்க்கு இதில் அதிக பங்கு என்றார்.இதற்கிடையில் ஈழப்பிரச்சினை பேச்சில் வந்தவுடன் மற்ற நான்கு பேரில் ஒருவர் என்னிடம் நீங்க சொல்றதுதான் சரி இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையும் எதிரொலிக்குமென்றார்.

பேச்சுக்கிடையில் புரோட்டா நண்பரும்,குண்டு நண்பரும் இரண்டாவது ரவுண்டுக்குப் போய் விட்டார்கள்.பேசிக்கொண்டே வறுத்த கோழியை ஒரு கடி கடித்து விட்டு பக்கத்தில் புலிச்சாதம், தயிர்ச் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் நீங்க இந்த பிரியாணியை எடுத்துகிட்டு தயிர்ச் சாதத்தைக் கொடுங்க என்றார்.தயிர்ச்சாதக்காரர் நான் கை வைத்து விட்டேனே என்று கேள்வி எழுப்பினார்.புரோட்டா கண்மணி அதனாலென்ன கொடுங்க என்று இலவசமா பிரியாணிய கொடுத்து விட்டு தயிர்ச்சாதத்தை வாங்கிக் கொண்டு சாப்பிட்டார்.எனக்கோ இது ஒரு புதிய காணல் அனுபவம்.இதென்ன சரக்கோட தயிர்ச்சாதம்!இது கிக் ஏத்துறதுக்கா அல்லது குறைக்கிறதுக்கா?சாப்பாடுன்னு சொன்னவுடன் சொல்ல வந்ததை விட்டு விடுவேனே:)

தயிர்ச்சாதம் கொடுத்து பிரியாணி சாப்பிட்டவர் என்னைப்பார்த்து நீங்க துணிச்சலா உங்க கருத்தை முன் வைக்கிறீங்க.அதுவும் வட்டச் செயலார்கிட்டேயே என்று சிரித்தார். ரயிலின் தடபுட சத்தத்திற்கு இணையாக எங்கள் பேச்சுக்குரலும் இருந்தது.

அப்புறம் என்னாச்சுன்னா ஈழப்பிரச்சினையைத் தொடர்ந்து செயலாளர் கண்மணி...  மக்களுக்கு விழிப்புணர்வு இல்லீங்க.சீரியல் பார்க்குறாங்க,சினிமா பார்க்குறாங்க!.யாராவது டி.வில நியூஸ் பார்க்குறாங்களா?போரில் நிறைய மக்கள் இறந்துட்டாங்கன்னு செய்தி வந்து ரெண்டு நாளா சரியா தூங்கல தெரியுமா என்றார்.இதோ இந்த சரக்கடிக்கறதக் கூட விட்டுடனும்.இதனால குடும்ப வாழ்க்கையே நாசமாப் போவுது என்று வருத்தப்பட்டார்.ஏனைய இருக்கையில் அருகில் இருந்தவர்கள் எல்லாம் கண்மணியையும்,என்னையும் கவனித்துக் கொண்டு தமக்குள் சிரித்துக்கொண்டுமிருந்தார்கள்.இதுவரை அதிகம் பேசாமல் பேச்சில் சிரிப்பை மட்டும் உதிர்த்துக் கொண்டிருந்த குண்டு நண்பர் புரோட்டா நண்பரிடம் ஏதோ கேட்டு விட்டு பைக்குள் கையை விட்டுத் துலாவி நான்கைந்து கழக தோள் துண்டுகளை வெளியே எடுத்தார்.கரை போட்ட துண்டை விரித்து எனக்கு பொன்னாடை போர்த்தி விட்டார்.காஞ்சிபுரம் வந்தால் கட்டாயம் வரும்படி போன் நம்பரெல்லாம் துண்டு நண்பர் கொடுத்தார்.எனக்கு காஞ்சிபுரம் போக நேரமில்லை. அருகில் இருந்தவர்கள் கைதட்ட ஜீன்ஸ்,சர்ட்டோட கரை துண்டு ஒரு புது அனுபவமாக இருந்ததால் நான் நெய்வேலி போய் சேர வரைக்கும் துண்டை தோளிலிருந்து கழட்டவேயில்லை:) 
 
இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கும்  களம் காஞ்சிபுரம்.


Thursday, September 30, 2010

உண்ணாவிரதம் ஒரு சுயபரிசோதனை

வந்துவிட்டேன் ஆட்டத்துக்கு:) என்னமோ தெரியலை பகிர்தலுக்கான மனநிலை இல்லையென்றாலும்,பதிவுகள் எழுதாவிட்டாலும் அன்றாடம் தமிழ்மணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிற பழக்கம் மட்டும் போகவில்லை.இன்றைக்கு இதை சொல்லி வைப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் பதிகிறேன்.

பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் ,செவ்வாய் என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி விரதம் இருக்கிறார்கள். ரம்ஜான் காலத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 40 நாள் விரதமென வெஜிடேரியன் மட்டுமெனவும் கூட கடவுள் சிந்தனைகளோடு உணவை கலக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக 3 மணி நேரம்,2 நாட்கள் என சீன் காட்டுவதும் உண்டு.காந்தி மூன்றுமுறை தனது கோரிக்கைகளுக்காக நீராகாரம் மட்டும் அருந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்.பின்னர் முடித்துக்கொண்டார்.ஆனால் கொண்ட கொள்கைக்காக திலீபன் நீர் கூட அருந்தாமல் இறந்துபோனதும் சுயமாக மனிதனால் இயலாத ஒன்றும் முக்கியமாக என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான விசயம்.

வாழ்க்கையின் போக்கில் நடந்துகொண்டிருந்த நான் முதல் முறையாக உண்ணாவிரதத்தின் தாக்கம் எப்படி இருக்குமென்று உணர்வதற்காக உணவு உண்ணாமல் சுயபரிசோதனை செய்து பார்த்தேன்.இதில் முக்கியமாக நான் அறிந்து கொள்ள விரும்பியது உண்ணாமை இயலுமா என்பதும்,உடலின் வலுவில்,அன்றாட அலுவல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்று அறிவதும்,முக்கியமாக எத்தனை நாட்கள் உணவு இல்லாமல் இருக்கமுடியுமென்பதும்.

திங்கட்கிழமை இரவு பால்,பழம்,நீர் என்று ஆரம்பித்து

செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு அலுவலக வேலை.முந்தைய நாளின் உடல் கழிவுகள் அகற்ற வேண்டி காலை ஒரு முறை நீரும், மாலை ஒரு முறை ஆரஞ்சு ரசமும் அருந்தினேன்.உடலில் தங்கியிருக்கும் உணவு,கொழுப்பு சக்திகள் காரணமாகவோ என்னவோ எந்த விதமான மாற்றங்களும் இல்லை.

புதன் கிழமை காலை எழுந்து காலை மறுபடியும் ஒரு முறை நீர் அருந்தி விட்டு அன்றாட வேலைகளை கவனித்தேன். காலையிலிருந்து மாலை வரை எப்போதும் போல உடல் மாற்றமில்லை.இரவு வயிறு கடிக்க ஆரம்பித்த மாதிரி இருந்தது.ஆலோசனையில்லாத பரிட்சை என்பதால் இரவு ஒரு வாழைப்பழமும் சிறிது நீரும் அருந்தினேன்.

வியாழக்கிழமை வந்து விட்டது.இன்று களைப்பின் அறிகுறி மெல்ல மெல்ல.உண்ணாவிரதத்திற்கான காரண காரியங்கள் இருந்தால் நீராகரம்,பழரசங்களுடன் இன்னும் ஓரிரு நாட்கள் வயிற்றுக்கு ஈயாமல் இருக்கலாம்.இருந்தாலும் முதல் முறையாக இப்போதைக்கு இந்த பரிட்சை போதுமென்று கொஞ்சம் மோர் அருந்திவிட்டு ரசம் சாதம் சாப்பிடலாமென்றிருக்கிறேன்.

இந்த சுயபரிசோதனையில் எனக்கு புரிந்த விசயங்கள்

1. முதல் நாள் உடல்நிலை கெடாமல் நீர் அருந்தியோ அல்லது அருந்தாமலோ ஒரு நாள் உண்ணாமல் இருப்பது சாத்தியமானது
2. இரண்டாம் நாளும் அன்றாட அலுவல்களை சோர்வின்றி நீர் மட்டும் அருந்தி இருக்க இயலும்
3. மூன்றாம் நாள் உடல் சோர்வு ஆரம்பமாகிறது.ஆனாலும் ஆபத்தில்லை
4. உணவுக்கு மனம் யோசிக்கும் ருசி உணர்வும் ஒரு காரணம்.எதை யோசிக்காமல் இருக்கணுமின்னு நினைக்கிறோமோ அதுவே இந்த வார நட்சத்திரம் ஜோதிஜின்னு பேர் சொல்லி உண்டு உறங்கி விடு செரித்து விடும் ன்னு கண் முன்னால் படம் காட்டுது:)
4. நான்காம் நாளே உண்ணாவிரதத்தின் உடல் மாற்றங்கள்.
5. மூன்று நாட்கள் வயிற்றைக் காலியாக வைப்பதால் உடல் மிதப்பது மாதிரி கனமில்லாமல் இருக்கிறது.
6. வயிற்றில் வாய்வு சேர்ந்து கொள்ளாமல் இருக்க சிறிய உடற்பயிற்சி அவசியம்.
6. உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ள இயலுமானால் பால்,காய்கறி,பழவகைகளை வாரத்தில் ஓரிருநாள் சேர்த்துக் கொள்ள இயலும்.

இருந்தாலும் மெதுவா எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த வாரம் காய்கறி,பழவகை சோதனை செய்து பார்க்க வேண்டும்!இப்ப எந்திரன் படம் பார்த்துட்டு யார் முதலில் கதை சொல்றாங்கன்னு பார்க்கலாம்:)

Sunday, April 4, 2010

ஈரோடு கதிரின் புலம்பலும்,ஒரு நில ஏய்ப்பு அனுபவமும்

நன்செய் விளைநிலங்கள் எல்லாம் எப்படி பிளாட்டுகளாக விற்கப்படுகின்றன என்ற ஈரோடு கதிரின் பதிவு படித்ததும் மனம் துணுக்குற்றது.பதிவுக்கான சுட்டி இங்கே.அந்தியூர் போன்ற இடங்களில் விளைநிலங்கள் கூட விற்கப்படுவதென்பதற்கும் பின்புலங்கள் என்ன?தண்ணீர் பற்றாக்குறையா?90களில் வீரப்பனின் நடமாட்ட எல்லைக்கான பூமியா?மக்களின் நகர்நோக்கிய பயணமா?முன்பு போல் விவசாயம் பார்க்க ஆட்கள் கிட்டாத விவசாயிகளின் போராட்டங்களா?அல்லது இவைகளுக்கும் மேலாக பணம் சேர்க்கவேண்டும் என்ற சிலரின் பேராசையா?இப்படி தெரிந்த காரணிகளை தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

ஆனால் மொத்த நிலங்களையும் ஒருவர் வாங்குகிறாரென்றால் அங்கே தவறுகளுக்கான அடிப்படைகள் உருவாகின்றது.(உயர்நீதி மன்ற நீதிபதி தினகரன் விவகாரங்களும் கூட அதனையே நிரூபிக்கின்றது.)அரசு நிறுவனங்கள் சரியாக செயல்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறனும்,வளர்ச்சியும் அதிகம்.அந்த வளர்ச்சியின் சுழற்சியில் உள்நுழைந்து விட்ட பின் இருப்பதை தக்கவைக்க வேண்டியும்,இனியும் நிறுவன கட்டமைப்புக்களாகவும் குறுக்கு வழிகளும்,சில சமயம் குடும்ப சிக்கல்களும் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் துயரத்தின் வலைக்குள் சிக்க வைத்து விடுகிறது.அப்படியொரு நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூட இருந்து பார்த்த நிலம் சார்ந்த ஞாபகம் இது.

உள்ளூருக்குள்ளேயே நிலைத்து நிற்பதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அந்தளவுக்கு வெளிநாட்டு முதலீடு தேடுவதில் இல்லையோ என்று நினைக்கும் படி வீட்டு நிலம்,வீடுகட்டுதல் போன்ற நிறுவனங்கள் HDFC உதவியுண்டு என்ற விளம்பரங்களுடன் அடிக்கடி வளைகுடா வருகை.

நவீன CEO க்களின் நடை,உடை,பாவனைகளில் விமானம் ஏறும் வசதியும் ஷெராட்டன் போன்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதியும்,பத்திரிகை விளம்பரங்களும்,இலவச VCR டேப்களுடனும்,200-300 பேருக்கான விருந்துக்கான செமினாரும்,பேச்சுத் திறனும்,அல்லக்கையாக இரண்டு பேரும் வைத்துக்கொண்டால் நீங்கள் இடும் திட்டத்தில் முக்கால் வெற்றியடைந்த மாதிரி.மீதி கால் பங்கு முன்பணம் கட்டியதும் மீதிப்பணத்தை வசூல் செய்வதில் சிரமம் இருக்கப் போவதில்லை.அப்படித்தான் VHF Selve என்ற திட்டத்துடனும் அதிக போனஸாக ராஜிவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் அவரது கையால் அவார்டு வாங்கினவர் என்ற முத்திரையுடனும் ஜெகநாதன் என்பவர் வளைகுடா நாடுகள் முழுவதுக்கும் வருகை தந்தார்.

மேற்சொன்ன ஷெராட்டன் ஸ்டைல் செமினாருடன் அவருடைய திட்டம் இதுதான்.5 தேக்கு மரம்,3 மாமரம்,2 கொய்யா மரம் போன்றவற்றுடன் தோட்ட வளாகத்திலேயே ஒரு வீடு கட்டிக்கொள்வதற்கான நிலமும் அரசு அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.இதற்கான பணத்தை முழுவதுமாகவோ,இயலாவிட்டால் ஒரு வருட கால தவணையில் கட்டி முடிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று வளைகுடா மக்களை கவர்ந்தார்.அந்த கால கட்டங்களில் பெங்களூர்,தமிழகம் போன்றவை இணைய தொழில் நுட்பத்துறையில் கலக்கும் நேரம் வேறு.இயற்கையாகவே பெங்களூரில் வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் இருக்கிற காசுக்கு தமிழ்நாட்டிலும்தான் ஒரு இடத்தை பிடிச்சு வைப்போமே என்ற கோவாவின் பீட்டர் போன்றவர்களும் VHFல் முதலீடு செய்தார்கள்.என்னோட நண்பர்களாய் விஜயராகவனும்,ஆந்திராவைச் சேர்ந்த சுந்தரராஜன் போன்றவர்களும் இதில் பங்குதாரர்கள்.என்னையும் இதில் இணைக்கப் பார்த்தார்கள்.எனக்கும் நண்பர்கள் சொல்வதற்காக வேண்டி இணையலாம் என்ற எண்ணமிருந்தாலும் வீட்டு உடன்படிக்கையின் ஒரு வரிசை மூளைக்கு தந்தி அடிக்கிறது.

அதாவது இந்த வீட்டுப்பத்திர உடன்படிக்கையின் படி தேக்கு வளரும் காலம் 20-25 வருடங்கள்.20 வருடத்திற்கும் நிலத்தை பாதுகாப்பது ஜெகநாதனின் கடமை.இத்தனை வருட கால இடைவெளிக்குள் காய்க்கும் காய்கறி,மா,கொய்யா(மரம் வளர்க்கும் திட்ட லக்கிலுக்கோ, நணபர்களோ கவனிக்க) போன்றவைகளை விற்று வரும் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.20-25 வருட காலத்திற்கு ஜெகநாதனே அதிகார பூர்வ நில உரிமையாளர்.இத்தனை வருட காலத்துக்கும் நிலபத்திரம் கிடைக்காது என்ற உடன்படிக்கை ஓட்டை காரணமாக நான் ஷெராட்டனின் புஃபே நன்றாக முழுங்கி விட்டு வந்து விட்டேன்:)

அதற்கு பின் VHF திட்டத்தில் பணம் செலுத்தியவர்கள் பெரும்பாலோருக்கு செலுத்திய பணம் வீணாகப் போனது.மொத்தமாக பணம் கட்டியவர்கள் சிலபேர் சுதாரித்துக் கொண்டு நில உரிமையை உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதையும்,ஜெகநாதன் இறந்து விட்டார் என்பதையும்,அவர் மகன் ஜெகநாதனின் வியாபாரத்தை தொடர்வதாகவும்,அவரும் காணாமல் போனவர்கள் வரிசையில் என்பது இணையம் தேடலில் தெரியவந்தது.அதற்கான நுகர்வோர்குறைகள் வலைத்தளமும் இங்கே காண நேர்ந்தது.சீட்டு பணம்,கந்துவட்டி,நில வியாபாரம்,ஆன்மீக ஏமாற்றுதல்கள்.எப்படி நம்ம மண்ணுல மட்டும் இவைகள்?

வீடு கட்ட எவ்வளவு பொட்டல் நிலங்கள் இருக்கின்றன.விளையுற பூமில வீடு கட்டுறது நியாயமா?எனவே ஈரோடு கதிரின் இடுகையும்,விளைநிலங்கள் அழிவதோடு அதற்கான பின்புலங்களாய் பணமோசடிகளும் கூட நிகழும் வாய்ப்புகள் இருக்கலாம்.இந்தியாவின் மண்ணும்,வாழ்க்கையும் விவசாயம் சார்ந்த ஒன்று.இதனை மேம்படுத்த சாலை வசதிகள்,(நல்ல சாலைகள் போட்டாலே பாதி மக்கள் படிச்சு முன்னேறிடுவாங்க)கிராமத்து கட்டமைப்பு வசதிகள் இவைகளுக்கும் மேலாக மக்கள் கிராமங்களில் வாழ்வதற்கு சாதகமாய் இரட்டை கிளாஸ் இல்லாத சமவாழ்க்கை நிலை போன்றவைகள் அவசியம்.இதெல்லாம் நடக்குற காரியமாய்யான்னு சங்க மனப்பான்மையோடு நினைத்தால் இந்த இடுகையப் படிக்கிறவங்க ஆளுக்கு ஒரு பெட்ரோல் டேங்கர இங்கே அனுப்பவும்.பெட்ரோல் விற்று பொழப்பு நடத்திக்கலாம்.

Wednesday, April 29, 2009

ஒரு பின்னூட்டம் தந்த பதிவு

நறுக்குன்னு நாலு வார்த்த கேட்கும் பதிவர் பாலா ஜெய்ஹிந்த்புரம் பதிவில் போட்ட பின்னோட்டம் ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.

http://jaihindpuram.blogspot.com/2009/04/blog-post_26.html

பாலாவின் வரிகள் அடைப்பானில்.

//மன்னிக்கணும். நொடிச்சி விழுந்தாலும் தன்னம்பிக்கையோட திரும்ப எழுந்து கம்பீரமா நடக்கிறத பாசிடிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். அங்கயே உக்காந்து அழுது யாராவது தூக்கமாட்டாங்களானு இருக்கிறதுதானே இன்றைக்கு இயல்பா இருக்கு.//

தன்னம்பிக்கை என்பது பொதுவாக இந்திய மனப்பான்மையில் இல்லையென்பதற்கும் அது ஒளிந்து கிடக்கிறதென்பதற்கும் ஒரு சின்ன உதாரணம்.

கோவாவில் Flee market ல் மேடான இடத்தில் ஒரு ஹிப்பி உட்கார்ந்திருந்தான்.அவனுக்கும் கீழே கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்னப் பாறையும் மேடும்.கொஞ்சம் தூரத்தில் கடற்கரை மணலும் கடல் அலையும்.

கடற்கரைப் பக்கமிருந்து வந்த ஒரு நடுத்தர இந்தியர் நடந்து வந்து பாறைக்கு அருகில் வந்ததும் மேடு மேல் ஏறி வருவதற்கு கொஞ்சம் தயங்கினார்.அருகில் இருந்த ஹிப்பியிடம் கையை நீட்டி உதவி கேட்டார்.ஹிப்பி சொன்னான் " your legs and hands are alright.climb up and come " என்றான்.வேறு வழியில்லாமல் இந்தியர் கொஞ்சம் சிரமப் பட்டு மேலே வந்து விட்டார். உனக்கு நீயே உதவி என்ற மனப்பான்மையினால்தான் cliff hanging (தமிழென்ன!யாராவது உதவுங்களேன்)கூட மேலை நாட்டில் சாத்தியப் படுகிறதென நினைக்கிறேன்.

Wednesday, March 11, 2009

மை டியர் நாய்க்குட்டிகள்

அம்மா ஆடு வளர்க்கல,மாடு வளர்த்தாங்க,கோழி வளர்த்தாங்க கூடவே சித்தப்பா பையன் தங்கராஜ் எங்கிருந்தோ பிடிச்சிகிட்டு வந்த ஒரு நாய்க்குட்டியும் வளர்த்தாங்க.சோறு போடுவதில் அம்மாவுக்கு வாலாட்டினால் எப்பவாவது தண்ணிக்குள்ள முக்கி விளையாட்டு காட்டுவதால எனக்கும் கொஞ்சம் வாலாட்டும்.

வாயில எளிதா நுழைந்த வார்த்தை ஜிம்மின்னு பெயராச்சு.தங்கராஜ் அமெரிக்க மாடு மேய்ப்பவன் ஸ்டைலில் அவன்,மாடு,ஜிம்மி என ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்குப் போய்விட்டான்.மாடு மேய்ந்து கொண்டிருந்தது.ஜிம்மி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது.மேய்ந்து கொண்டிருந்த மாடு திடிரென புஸ்,புஸ் என மூச்சு விட்டது.படுத்துக்கொண்டிருந்த ஜிம்மி நால் கால் பாய்ச்சலில் மாட்டின் பக்கம் திடீரென ஓடியது.தம்பி ஜிம்மி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.மாட்டின் அருகில் ஓடின ஜிம்மி ஒரு பாம்பை வாயால் இடதும் வலதுமாக கடித்து துப்பிவிட்டு இறந்து விட்டது.தம்பி அலறி அடித்துக் கொண்டு ஜிம்மி பக்கம் போய் பார்த்தான்.ஜிம்மியும் பாம்பும் இறந்து கிடந்தன.பின் வீட்டிற்கு வந்து அம்மா,அப்பாவிடம் சொல்லி நாயை,பாம்பை தனித் தனியாக அங்கேயே புதைத்தார்கள்.நேரடியாகப் பார்க்காததால் தம்பி சொன்ன ஜிம்மியின் வீரக்கதை சோகத்தை ஏற்படுத்தினாலும் அதி மன அதிர்வுகளை எனக்கு ஏற்படுத்தவில்லை.

குவைத்தில் முந்தைய பிரதமரும்,இளவரசுருமான ஷேக் அப்துல்லா அல் சபாவின் மகளின் வாகன ஓட்டுனராக ஜேம்ஸ் என்ற நண்பன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அந்தம்மா இந்திய மதிப்பில் அப்போதைக்கு 1 1/2 இலட்சம் விலையுள்ள ஒரு நாயை லண்டனிலிருந்து கொண்டி வந்தார்.அது breed செய்த நாலைந்து குட்டிகளில் முடி புசு புசுவென்று இருந்த அழகான நாய்க்குட்டியை ஜேம்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து தந்தார்.அல்சேசன் உடல்வாகு,பொமரேனியன் முடி ஸ்டைல் என ஒரு புதிய தோற்றம் அது.பழக்கதோசத்தில் அதுவும் ஜிம்மியாயிற்று.

துவக்கத்தில் பால் பின் நாங்கள் சாப்பிடும் உணவே அதன் உணவுமானது.மாமியார் வீட்டில் இருந்ததால் வேளை வேளைக்கு உணவளித்துக் கொண்டிருந்தாங்க.துவக்கத்தில் குளியல் அறையில் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் பழக்கப் படுத்தினோம்.குளியல் கதவு திறந்திருந்தால் அதுவாகவே போய் விடும்.தினமும் குளியல்,சாப்பாடு என நாட்கள் நகர்ந்தன.மூன்று மாத வளர்ச்சிக்குப் பிறகு ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதென்றால் அதுவாகவே வாசல் கதவை பிராண்ட ஆரம்பித்தது. கதவை திறந்தால் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கிழே ஓடி குப்பைத் தொட்டி அருகில் போய் உட்கார்ந்து திரும்ப தானாகவே வீட்டுக்கு வர ஆரம்பித்தது.யாரும் பழக்காமல் தன்னியல்பான அதன் செய்கைகள் எங்களை ஆச்சரியப் பட வைத்தது.நாளுக்கு நாள் கூடிய நட்பில் அய்யா படுக்கையிலும் வந்து அமைதியாக உட்கார ஆரம்பித்து விட்டார்.லொள்,லொள் என எப்பொழுதும் சப்தமிட்டதில்லை.குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டது.இப்படி இனிமையாக போய்க் கொண்டிருந்த நட்பு பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் மூலம் இறுதிக்கு வந்தது.

புதியதாக வாங்கிய கணினியை பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் வேண்டுமென்று கேட்டதற்கு வச்சுக்கோ காசு எப்ப தரமுடியுமோ அப்ப தந்தால் போதுமென்று சொல்லி கொடுத்து விட்டேன்.ஒரு வருட காலமாகியும் காசு தேறுவதாகக் காணோம்.சரி காசு கேட்டுப் பார்க்கலாம் என காசு கொடேன் என்று கேட்டதற்கு இன்னும் மூன்று நாட்களில் தந்து விடுகிறேன் என்றான் சேட்டன்.மூன்று நாட்கள் பின் ஒரு வாரமாகியது.பின் பத்து நாட்கள் ஆகியது.இதற்கிடையில் மாமியார் சேட்டனின் மனைவியிடம் வாய் கொடுக்க சேட்டனின் மனைவி நாங்கள் ஒன்றும் உங்களிடம் கம்ப்யூட்டர் வாங்கவில்லை என்று வாதம் திரும்பி விட்டது.

ஒரு நாள் வார இறுதி வெள்ளிக்கிழமை ஹாயாக சோபாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.கதவு பெல் ரிங்.கதவைத் திறந்தால் போலிஸ்காரன் நின்று கொண்டிருக்கிறான்.ஜிம்மி தலையை எட்டி நோக்கி விட்டு சப்தமில்லாமல் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்டது.டிராபிக்கில் போலிசைக் கண்டாலே எனக்கு அலர்ஜி.அதுவும் வீட்டில் வந்து போலிஸ் நின்றதும் மனசு திக்.பக்கத்தில் சேட்டன் இன்னொரு இந்தியனுடன் சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்.போலிஸ் அரபியில் என்னமோ சொல்கிறான்.பக்கத்தில் நின்று கொண்டிருந்த இந்தியன் நீ ஏன் வீட்டில் நாய் வளர்க்கிறாய்.பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது என்றான்.அடப்பாவி!தொலைக்காட்சி சத்தமாவது தொந்தரவுன்னு சொல்லியிருந்தாலாவது பொருந்தும்.சத்தமிடாத தனக்குத் தானே ஒழுங்குகளைக் கற்றுக்கொண்ட ஜிம்மி தொந்தரவென்றால்?எனது பயந்த தோற்றத்திலும் அரபி தெரியாத முக லட்சணத்தையும் பார்த்து போலிஸ் என்னை ஸ்டேசனுக்கு கொண்டு போய் கம்பியில்லா ஒரு அறையில் நிறுத்தி வைத்து விட்டான்.அரைமணி நேரம் கழித்து போலிஸ்காரனுக்கு அதிகாரி வந்ததும் என்னிடம் ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டதும் வாய் படபடவென வார்த்தைகளை ஜிம்மியின் பூர்வீகம் பற்றி கொட்டியது.பிளாட்களில் நாய் வளர்ப்பது தவறு என்று சொல்லி எனது ஐ.டி கார்டை திரும்பத் தந்து கேஸ் பதிவு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

சேட்டனின் தொல்லையால் யாருக்காவது கொடுத்து விடலாம் என்று ஜிம்மியை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிய குவைத்தி டாக்டர் ஒருவர் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டோம்.ஜிம்மிக்காக நான்,மனைவி,குழந்தைகள்,மாமியார் என நாள் முழுவதும் அழுதோம்.

புத்திர சோகத்திலும்,போலிஸ் ஸ்டேசன் போன அவமானத்திலும் சேட்டன் மீது முறையாக நீதிமன்றத்தில் மனு பதிவு செய்து வாய்தா மேல் வாய்தாவாக சேட்டன் நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து இறுதியில் பிடிவாரண்டில் போலிஸ் கைதியாக ஒரு வாரம் சிறைபட்டான்.சிறைவாசத்திற்கு பின் கோர்ட்டுக்கு ஒழுங்காக வந்து காசை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தருவதாக உறுதியளித்தான்.கோர்ட்டிற்கு வெளியே ஏண்டா இப்படி செய்தாய் எனக் கேட்டேன்.என் மனைவியின் தூண்டுதலால் இப்படியாகி விட்டது மன்னித்துக் கொள் என்றான்.நான் முழுப்பணத்தையுமே மன்னித்து விட்டேன்.அவன் சல்மியாவிலிருந்து வீட்டைக் காலி செய்து விட்டு வேறு ஒரு பகுதிக்கு குடித்தனம் புகுந்து விட்டான்.

Monday, February 23, 2009

240 கி.மீ சைக்கிள் அனுபவம்

முந்தைய பதிவில் பொள்ளாச்சி பற்றி நினைத்ததும் கோவையிலிருந்து வால்பாறை வரையும் (சரியாகச் சொன்னால் ஐயர்பாடி தேயிலைத் தோட்டம்) பின் அங்கிருந்து கோவை வரையிலும் சைக்கிள் மிதித்து சென்று வந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.

சைக்கிள் என்றதும் சின்ன வயதில் சைக்கிள் கற்றுக் கொள்வதற்கு கூட்டாளிகளே துணை என்ற நிலை.வாடகை சைக்கிள் கடையில் காசு கட்டி சைக்கிள் எடுத்தால் சின்னப்பன்,சக்திவேல் கூட சித்தப்பா பையன் தங்கராஜ் என்ற சைக்கிள் அனுபவம் உள்ள அனுபவம் கொள்ள முயற்சிக்கும் நண்பர்கள் ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் அவனுகளே வழித்து விட்டு பேருக்கு 10 நிமிசம் உட்கார வச்சி அதிலும் 10 அடி தூரம் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின் தனியே தள்ளி விட்டு விடுவான்கள்.எவனாவது ஒருத்தன் சைக்கிளை விட்டதுதான் தாமதம்,உடல் வளையும் வளைவிலும்,சைக்கிள் பெடல் காலுக்கு சரியா எட்டாத தூரத்திலும் பெடலின் அலுமினிய பாகம் நங்கென்று காலில் குத்தி சிராய்ப்பு ஏற்றும் அல்லது ரத்தம் கக்க வைக்கும்.

இப்படியே இரண்டு மூன்று முறை சின்னப்பனுக்கும்,சக்திவேலுக்கும் காசை அழுது சைக்கிள் சரியாக கற்றுக்கொள்ளாத சோகத்தில் இது சரிப்பட்டு வராது என்று அவன்கள் வேற விளையாட்டுக்குப் போன நேரமா பார்த்து சைக்கிள் கடைக்கார அண்ணாச்சியிடம் சைக்கிளை எடுத்து தள்ளிக் கொண்டே போய் கல் நண்பன் எவனாவது அகப்பட்டால் சைக்கிளைப் பக்கத்தில் வைத்து மெல்ல ஏறி,தடுமாறி,விழுந்து பின் சைக்கிளின் ஹேண்ட்பார் லகான் கைக்கு லாவகமானது.பத்தடி,இருபது அடிக்கு முன்னாடியே பாதையில் நடக்கிறவங்களுக்கு டிங்,டிங் சைக்கிள் பெல் சத்தம் கொடுப்பதில் துவக்கத்தில் மக்களே வழிய விடுங்கய்யா என்ற பயமும் பின் நானும் சைக்கிள் ஓட்டுவேனாக்கும் என்ற மனதுக்குள் மகிழ்ச்சியும்.

இப்பொழுது பைக்,கார் வசதிகள் வந்து விட்டதால் பெரும்பாலோருக்கு இந்த மாதிரி சாகசங்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.ஒருநாள் காலை 5 மணிக்கு சைக்கிள் மிதித்து ஆழியார் கடந்து அட்டகட்டி வளைவுகளைக் கடந்து மலையேறி மீண்டும் திரும்ப கோவை தனி ஆளாக திரும்ப இயலுமா என்ற ஆர்வம் தோன்றியது.

,அட்லஸ்,பி.எஸ்.ஏ,ஹீரோ போன்ற சைக்கிள் குதிரைகள் உலவி வந்தாலும் ராலே என்ற சைக்கிளுக்கு மட்டும் மற்ற சைக்கிள்களுக்கு இல்லாத ஒரு பியரிங் சுழலும் சப்தமும் அதனால் சைக்கிளை அழுத்தி ஓட்டுவதில் ஒரு லகுவும் கிட்டும்.அதிகாலை சைக்கிளை திருச்சி ரோடு ராமநாதபுரம் பக்கமிருந்து எடுத்து அரசு மருத்துவமனை,ரயில்வே பாலம்,உக்கடம் என கடந்து வெளியேறி பொள்ளாச்சி சென்றடைந்து அங்கே வழியிலேயே வயிற்றுக்கு சாப்பிட்டு விட்டு ஆழியார் கடந்து அட்டகட்டி மேட்டில் சைக்கிளை மிதித்தும் தள்ளிக்கொண்டும் போய் வால்பாறை அடைந்தால் இரவு ஆகிவிட்டது.பின் அடுத்தநாள் மீண்டும் கிளம்பி காடம்பாரை, வாட்டர்பால்ஸ் கடந்து அட்டகட்டி வளைவு முனை பாதை (ஹெர்பின் பெண்ட்) கடப்பதொன்றும் சிரமமாக இருக்கவில்லை.சைக்கிளின் வேகத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று.

இப்படி அதிக தூர சைக்கிள் ஓட்டிய அனுபவம் குவைத் வந்தும் விடவில்லை. மும்பாய் மருத்துவ பரிசோதனை செலவு தவிர எந்த ஒரு வேலை வாய்ப்பு ஏஜண்டுக்கும் ஒரு பைசாவும் கொடுக்காமல் பணியிடம் செலவில் விமான டிக்கட்,சாப்பாடு,தங்குமிடம்,சம்பளம் என்று ஒரு பேச்சிலர் கேம்ப்பில் வந்து சேர்ந்த அனுபவம் அது.சுலேபியா என்ற தங்குமிடத்துக்கும் சுவைக் என்ற பணிபுரியுமிடத்துக்கும் சுமார் 15-20 கி.மீ தூரம்.அலுவல் பஸ் பயணம் போரடித்துப் போனதாலும்,உடல் பயிற்சிக்கு ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்திலும் Made in London என்ற சைக்கிள் கண்ணில் பட்டதும் வாங்கி விட்டேன்.அதிகாலை 6 மணிக்கு குளிருலும் உடல் வேர்க்க சுமார் ஒரு மணி நேரம் சைக்கிள் சவாரி மீண்டும் தங்குமிடம் சேர ஒரு மணி நேரம் என சுமார் 40 கி.மீ தூரம் ஒரு வருடம் சைக்கிள் ஓட்டினேன்.வாழ்க்கையின் சுழற்சியில் இப்போ சைக்கிளின் இடத்தை கிராண்ட் செரோக்கி பிடித்துக் கொண்டாள்.

Tuesday, February 10, 2009

மரபு வழி மாற்றங்கள்

முந்தைய பதிவான ஐ.நா வை பதிவேற்றம் செய்து விட்டு பிலாபில் எனும் அரபி வடைக்குள் பண் அமுக்குன உணவும் பக்கத்திலிருந்த பக்காலா எனப்படும் நம்மூர் பொட்டிக்கடையில் ஐஸ் கிரிமும் ஒரு ஆரஞ்சும் வாங்கினேன்.

இறுதியாக ஆரஞ்சை உரித்தால் அது genetically modified எனப்படும் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட பழம்.மரபு வழி மாற்றம் செய்யப் பட்ட உணவிற்கும் ,விவசாயத்திற்கும் உலகம் முழுதும் எதிர்ப்பு கிளம்புகிறது.காரணம் விதை தானியத்திற்கு அதற்கு உரிமம் உள்ளவர்களிடமே கையேந்த வேண்டி வருவதும்,விவசாயம் சில சமயங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுடன் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை என்பதும்.சில தினங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் விவசாயி ஒருவர் மாட்டுச்சாணம்,மூத்திரம் மற்றும் நீருடன் கலந்தவற்றையே இயற்கை உரமாக இடுவதும் அதனால் அவரது செலவினங்கள் குறைவானது என்பதும்.

மாட்டுச்சாணம் பற்றி கூறும்போது கோவை நினைவு ஒன்று வருகிறது.வழியில் நான் பாட்டுக்கு போயிட்டுருந்தவனை மாட்டுப் பக்கம் நின்றிருந்த சுமார் ஒரு 18 வயதுப்பெண் கூப்பிட்டு "கொஞ்சம் கோமியம் எடுத்து தாரேளா" என்றாள்.எனக்கு கோமியம் என்றால் என்ன என்று திரு திரு. மேலும் பெண் பேசுவதால் கூச்சமும் கோமியம் என்றால் சாணமா மூத்திரமா என்றும் அந்தப் பெண்ணிடமும் கேட்க கூச்சம்.அதற்கும் மேலும் மாட்டுப் பக்கம் போக பயம்.துணிந்து மாட்டுப் பக்கம் நகர்ந்தால் மாடு இடதும் வலதுமாக இரண்டு சிலுப்பு சிலுத்துச்சு.எனக்கு மாட்டுப் பக்கம் போக பயமுங்கன்னு சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்.பின் நாட்களில் அடிச்சு பிடிச்சு சரியான பெயர் தெரிந்த போது எனது அசட்டுத்தனம் புரிந்தது.

இனி மீண்டும் மரபு வழி மாற்றத்துக்கு தாவல்.ஆரஞ்சுப் பழத்தை உரித்தேனா.தோல் எளிதாக பிய்த்துக் கொண்டு வந்தது.முன்பெல்லாம் ஆரஞ்சென்றால் கடித்து சாப்பிடுவதாயிருந்தாலும் பழரசமாக சாப்பிடுவதென்றாலும் ஒரே ஆரஞ்சுதான்.ஆனால் இப்பொழுது பழரசத்திற்கென்று ஒரு வகையும் சாப்பிடுவதற்கென்று ஒரு வகையும் வந்து விட்டது.அப்படி சாப்பிடும் வகை ஆரஞ்சை உரித்தால் தோல் சிரமப்படாமல் தனியாக வந்தது.பழத்தை உரித்தால் அதில் ஒரு விதை கூட இல்லாமல் சாப்பிடுவதற்கு சுவையாக இனிப்பாகவும் விதைகளை துப்பும் சிரமம் இல்லாமல் இருந்தது.

விவசாயிகளின் பார்வையில் பழங்களின் போகம் கூடுதலாகவும் அதே சமயத்தில் சுய சார்பில்லாமலும் பல் காரணங்களால் இழப்புகளின் பாதிப்புக்கள் அதிகம்.நுகர்வோர் தரப்பில் பார்த்தால் பழம் ருசி.நோகாமல் பழம் சாப்பிடலாம்.

Tuesday, January 20, 2009

மசாலா தோசையும் குஜராத்தி குஜிலிகளும்

கல்லூரிக் காலங்களில் பெங்காளி முகர்ஜி,சேட்டன் பிரவின், மதராசி நானும் ஒன்றாக ஓடித் திரிந்து கொண்டிருந்தோம்.அப்படி மும்பாயில் ஒரு நாள்...

சென்னையின் திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமோ அப்படி ஒரு பிரம்மச்சாரிகளின் வில்லா ஒன்று விலே பார்லேவில் இருந்தது.அப்போதைய மெட்ராஸையும் பம்பாயையும் இணைக்கும் பாலமாக இருந்தது அந்த பிரம்மச்சாரிகளின் கட்டிடம்.

காலை வேளையில் 11 மணி வாக்கில் பக்கத்திலிருக்கும் உடுப்பி ஓட்டலில் ஏதாவது கொட்டிக்கலாமுன்னு மூவரும் சென்றோம்.மும்பையின் பெரும்பாலான உடுப்பி உணவு விடுதிகளின் மேசைதளம் பளிங்கு மார்பிள் கல்லால் செய்யப்பட்டிருக்கும்.பளிங்கு மார்பிள் விலை குறைவின் காரணமாகவோ அல்லது உண்டு முடித்தவுடன் சுத்தம் செய்வதற்கு வசதியாகவோ அந்தக் கல் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.உணவுத் தட்டுகளும்,டம்ளரும் சில்வர் பண்டங்களாகவே இருந்தன.தண்ணீரில் போட்டு முக்கி எடுக்கவும்,உடையாத காரணத்தாலும்,வாடிக்கையாளர்களைக் கவருவதற்கும் ஏற்ற பாத்திரங்கள்.நானும்,முகர்ஜியும் ஒரு பக்கமும் எதிர்த்தார் போல் பிரவினும் உட்கார்ந்து கொண்டான்.உபசரிப்பவரிடம் 3 மசாலா தோசை ஆர்டர் செய்து விட்டு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது எங்கள் பார்வையில் படும் படியாக 4 குஜராத்தி குஜிலிகள் வந்து பக்கத்து நாற்காலிகளில் வந்து உட்கார்ந்து கொண்டன.பெண்களை லுக் விடுவதில் முகர்ஜி முதலினம்,நான் இடையினம்,பிரவின் மெல்லினம்.பார்வைகள் சரசமாடிக் கொண்டிருந்தன.

அதற்குள் எங்களது மசாலா தோசை,சட்னி,சாம்பார், சில்வர் முள்கரண்டி,ஸ்பூன் சகிதம் வந்து டேபிளில் உட்கார்ந்து கொண்டது.மூவருமே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் கரண்டியையும்,ஸ்பூனையும் தோசைக்கு அப்பால் நகர்த்தி விட்டு கையால் மசால் தோசையை சாம்பார் சட்னியுடன் பதம் பார்க்க ஆரம்பித்தோம்.பக்கத்து சீட்டு குஜிலிகளின் களுக்கென்ற சிரிப்பு சத்தம்.முகர்ஜி என்னிடம்" nat! they are laughing at us because we are using fingers" என்று கிசு கிசுத்தான்.பிரவின் ஒன்றும் பேசாமல் எங்கள் இருவரையும் பார்த்து மெல்லிதாய் சிரித்து விட்டு தோசையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

இந்த நேரத்தில் குஜிலிகளுக்கும் தட்டுக்கள் வந்தது.பார்த்தால் 4 மசாலா தோசைகள்.நானும்,முகர்ஜியும் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து விட்டு கண்களால் எதிர் மேசையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு குஜிலி துவக்கமாக ஸ்டைலாக முள்கரண்டியையும்,ஸ்பூனையும் வைத்துக் கொண்டு மெல்ல மசாலா தோசையை குத்த ஆரம்பித்தது.தோசை சில்வர் தட்டுடன் பளிங்குக் கல்லில் ஒரு சுற்று வட்டம் வந்தது.அதற்குள் இன்னொரு குஜிலியும் தோசை சுற்றலில் இறங்க எனக்கு மனசுக்குள் சிரிப்பும் முகர்ஜி நேரிடையாகவே "Hey look look, watch the fun" என்றான்.மச்சா this is our turn to laugh என்றேன் நான்.குஜிலிகளும் பிடிவாதமாக தோசையை சுத்துவதிலும் சிரமப் பட்டு முள்கரண்டி யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.தாளி ( சரியா?) சாப்பாட்டுத் தட்டென்றால் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ளும் தட்டு தோசைக்கு மட்டும் செக்குமாடு மாதிரி சுத்தறமாதிரி பாத்திரங்கள் அடிப்பகுதி வட்டம் சற்று மேல் நோக்கிய் வண்ணம் குவிந்து போய் விடுவது பளிங்கு கல்லின் அணைப்புக்கு ஏற்புடையதாயில்லை.நாங்கள் காபி சொல்லி அருந்திவிட்டு பில்லைக் கொடுத்து விட்டு வந்தோம்.(அப்பவெல்லாம் இந்தி தெரியாத காரணத்தால் எனக்கு வாயாடி வேலை எதுவும் இல்லாமல் போய் விட்டது)

மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.

நீங்க எப்படி?

பின் குறிப்பு: கல்லூரி என்றதும் நான் பதிவுப் பக்கம் வந்ததே வெட்டிப்பயலின் கல்லூரிக் கலாட்டா கோழி பிடிக்கிறப் பதிவைப் பார்த்துத்தான்:)வெட்டிப்பயலுக்கு மீண்டும் ஒரு நன்றி.

Saturday, July 26, 2008

காமிரா அனுபவம்

நண்பர் ஒருவர் மூலமாக காமிராவும் காமிரா உபகரணங்களும் ஒருவரிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக ஒரு வாரம் போன்முயற்சி செய்து நேற்று மீண்டும் அவரது நேரடித் தொடர்பு கிட்டியது.

நானோ சுதந்திரமாக ஒருத்தரை சந்திக்க நினைத்தமாத்திரத்தில் கால அவகாசத்துக்குத் தகுந்த மாதிரி அனுசரித்து சந்திக்கும் பழக்கம் உடையவன்.அவரோ நேரம் தவறாமையினை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் என்பது அவரது தொலைபேசி மூலமான நேரம் குறிப்பில் தெரிய வந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6.00 மணிக்கு இருவரும் சந்திப்பதாகக் கூறி என்னை அவர் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் வந்து விடுமாறு சொன்னார்.நானும் நகரின் தெருக்களையெல்லாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் திமிரில் 4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன்.வாகனப் பாதையின் ரவுண்ட் அபவுட் எனும் ஒரு சுற்று வட்டின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் சொன்னபடியே யாரும் நிற்காத வட்டத்துக்குள் நமது ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.

வந்தவர் சுமார் 60 வயதுக்கும் மேலானவர்.கண்ணாடி அணிந்திருந்தார். இருவரும் கைகுழுக்கிய சம்பிராதயத்துக்குபின் என்னை அழைத்துக்கொண்டு ஒரு புராதனமான பாழடையும் நிலையிலுள்ள பழையதோர் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நேரே வாசலுக்கு இடது புறமான ஒரு கதவைத் திறந்தார்.திறந்த கதவின் உள்ளே நுழைந்ததும் ஒரு வித்தியாசமான இடத்துக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.காரணம் பழைய கட்டிடமும் அதற்கேற்றார் போன்றே நெரிசலான முன் அறையின் பொருட்களின் ஆக்கிரமிப்பும்.முன்னறைக்குப் பதிலாக நேரே படிப்பு படுக்கையென இருநிலை கொண்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆல்ஃப்ரட் ஹிட்சாக் மற்றும் ஆங்கில திகில் படத்துக்கு இணையாகவும் நமது திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் எந்தவித செட் எனப்படும் அமைப்புகளுக்கு தேவையில்லாமல் காமிராக் கோணம் அமைக்கவும் உகந்த இடம்.கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்,கீழ்த் தட்டில் தூசு தட்டாமல் நிக்கான் FG எழுத்துக்களுடன் காமிராவும் அதன் பக்கத்தில் லென்ஸ் ஒன்றும் அதன் முகமூடியும் அதையும் ஒட்டி ஒரு பொலராய்ட் காமிராவும் அடுத்து மமியா C220 எனும் நெற்றிப்பொட்டுடன் இன்னொரு காமிராவும் இன்னும் பொருட்கள் உள்ளே ஒளிந்து எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது.இதன் அருகில் எனக்கு அவர் இருக்கை தந்தார்.



வழக்கமாக இருவர் சந்திக்கும்போது உள்ள லதானந் சித்தர் கூறுவது மாதிரியான break the ice சங்கடங்களை நான் நேர் கொள்வதில்லை.ஒன்று எதிரில் இருப்பவரை அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது மனுசன் சங்கோஜப் பேர்வழி மாதிரி தெரிந்தால் ஸ்டார்ட் மீசுக் சொல்வதுதான் எனது வழக்கம்.ஆனால் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை அவர் தராமல் அவரே உரையாடலைத் துவங்கினார்.

பேச்சு துவக்கமாக ஒரு நாள் இடது கண் எதை நோக்கினாலும் சிவப்புக் கலரில் தெரிந்ததாகவும் அதனால் அவரது இடது கண் கார்டியாக் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிப் போனதாகக் கூறினார்.இரவு நேரங்களில் வெளியே போக வேண்டுமென்றால் தெரு விளக்குகளுடன் டார்ச் விளக்கின் ஒளியும் கூடுதலாகத் தேவைப்படுகிறதென்றார்.

இங்கே மருத்துவர்கள் சரியில்லையென்றும் இந்திய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை என்றார்.தான் கிறுஸ்துவ வழிமுறை வாழ்ந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களுக்குள் பார்வை கிட்டியதாகவும் சொன்னார்.தற்போது யாரும் இறப்புக்குப் பின் கடவுளுக்குப்பதில் சொல்லவேண்டிய பயமில்லாமல் வாழ்வதாகவும் சொன்னார்.

மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.நான் இங்கும் வாழ்வியலை மதம் சார்ந்த ஒழுங்கியலோடு வாழ்பவர்கள் உள்ளார்கள் என்றேன்.தனக்கு அப்படிப் படவில்லை என்றும் மேலும் எனக்குப் பேசுவதற்கு எந்தப் பங்களிப்புமில்லாமல் கிறுஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து துவங்கி அப்போதைய காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.

அவரது பழைய ஏற்பாட்டின் பேச்சு கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நீண்டது.இவர் எப்பொழுது காமிரா விசயத்திற்கு வருவார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரது இன்னொரு அலமாரியின் புத்தகங்களைப் பார்வையிடுகிறேன்.ஒரு ஆங்கில டிக்சனரியும்,ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்பும் தவிர பெரும்பாலோனவைகள் பைபிள் புத்தகங்கள் என்று தோற்றம் தரும் கருப்புக் கலர் முகம் கொண்ட புத்தகங்கள்.எனது பார்வை பைபிளில் சென்றதும் பல மொழி பைபிள்களை ஒவ்வொன்றாய் சோதித்து விட்டு தான் கனடா,லண்டன்,இஸ்ரேல்,சிரியா,எகிப்து,லெபனான்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சுற்றி வந்துள்ளதாகவும் பின் என்னிடம் தமிழ் பைபிள் ஒன்றை நீட்டினார்.நான் வலது கையில் வாங்கி விட்டு இடது கையில் மேசை மேல் வைத்தேன்.அவர் இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லையென்றும் அதற்கான தருணம் வரும் சமயத்தில் மாத்திரமே நான் பைபிளைத் திறப்பேன் என்றும் சொன்னார்.

நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு அவரிடம் சொன்னேன்.இந்துவாகப் பிறந்து,அரசினர் பள்ளியிலும் பின் கிறுஸ்தவப் பள்ளியிலும் படித்து இப்போதைக்கு ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மத எல்லைகளைக் கடக்கும் மனப்பக்குவம் வந்து விட்டதால் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை அணப்பதுமில்லையென்றேன்.நான் இங்கு வந்ததே உங்களிடம் காமிரா பற்றிப் பேசத்தான் என்றேன்.

அவர் மேசையினுள்ளே கையை விட்டு 35MM பிலிம்காமிரா ஒன்றையும் அதனுடன் ஒட்டிய பிளாஷ் இணைப்பையும் காட்டினார்.காமிரா பெயர் நிக்கான் F3, பிளாஷ் பேனாசோனிக்.தன் வாழ்வின் பெரும்பங்காக இந்த காமிராக்களும் இசையும்தான் பொருளாதார ஆதாரம் என்றார்.ஒரு மணி நேரத்துக்கு KD 5/= (சுமார் ரூ750)இசைக் கற்றுக்கொடுக்க பணம் வாங்குவதாகக் கூறினார்.என்கையில் நிக்கான் F3 யைக் கொடுத்துவிட்டு தன்னிடம் இன்னுமொரு நிக்காமேட்டிக் காமிரா இருப்பதாகவும் சொன்னார்.என்னடா மனுசன் நிக்கான் FG,பொலராய்ட்,மமியா,நிக்காமேட்டிக்ன்னு இத்தனைக் காமிராவை வைத்திருக்கிறாரே என்று பார்வையை சுவர்ப்பக்கம் திருப்புகிறேன்.

சுவற்றில் சின்ன வெள்ளைப் பலகையில் பைபிளின் வாசகம் ஏதோ ஆந்திர மொழியில் எழுதி வைத்துள்ளார்.அதற்கும் கீழே யமாஹா கீ போர்டு.அதற்கும் அடுத்து பேனாசோனிக் டெக்னிக்ஸ் என்ற பெரிய கீ போர்டு.எல்லாமே விற்பதாகக் கூறினார்.பரணில் கிடக்கும் வீடியோ லைட்டை எடுத்தார். அதே மாதிரி இன்னொன்று இருப்பதாகவும் அந்த ஜெர்மன் மாடல் தற்போது தயாராவதில்லையென்றும் சொன்னார்.சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் மற்ற நாட்டின் பெயர்ப்பலகைகளைக் காண்பது ரொம்ப அபூர்வம்.எனவே அவர் சொல்வது சரியெனப்பட்டது.

பின் வரலாறாகிப்போன பழைய தட்டச்சு மெசினைக் காட்டினார்.இத்தனைக்கும் நடுவில் அறையை அதிகமாக ஆக்கிரமிப்பது காகிதக் கட்டுகளும் பிளாஸ்டிக் பைகளில் மூடி மூடி வைத்திருக்கும் எனக்குத் தெரியாதப் பொருட்கள். முன்பு கடந்து வந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். வெளி ஹாலுக்குச் சென்று ஒரு நீண்ட ஏணியைக் கொண்டு வந்து பரண்மேல் ஏறினார்.அங்கேயிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை ஏணியிலிருந்தவாறே என்னிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்.

கீழே வந்து வெளிநாட்டில் புகைப்படமே கதியாகக் கிடக்கும் புகைப்படக்கலைஞர்கள் உபயோகப் படுத்தும் டோம் என்று சொல்லப்படும் போட்டோ ஸ்டியோவில் உபயோகப்படுத்தும் ரிஃப்ளக்டர் எனப்படும் விளக்குச் சாதனங்கள்.தயாரிப்பு பிரிட்டன்.அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை தேறும்.சின்ன டிஷ் ஆண்ட்டனா மாதிரியான அதன் பின்பாகம் இரண்டு பெரிய பெட்டிகளில் பரண்மீது தூங்குவதைக் காண்பித்தார்.

அப்பொழுதுதான் கவனித்தேன்.அவர் நிறுத்திய ஏணிக்கு அப்பால் தொலக்காட்சிப் பெட்டி இருந்தது.அதன் பக்கத்தில் VHS காலத்து வீடியோக் காமிரா ஒன்று பேனாசோனிக் M3000 முத்திரையுடன்.நான் அவரிடம் இப்பொழுது எல்லாமே கணினி மயமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டதாலும் இந்த மாதிரிப் பொருட்களை இபே பொன்ற தளங்களில் குறைந்த விலையில் வாங்கிவிடலாமென்றும் மனுசனை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தேன்.அவரோ அசருகிறப் பாட்டைக் காணோம்.

எனது கண்ணும் மனக்கணக்கும் எப்படியாவது அவரிடம் ஒரு காமிராவையும் விடியோ மற்றும் காமிரா விளக்கையும் வாங்கி வந்து சி.வி.ஆரிடம் ஒரு நல்ல பெயர் வாங்கிவிடவேண்டுமென்பது:) ஆனால் பெருசு ஒன்றும் விலை அசைக்கிறப் பாட்டைக்காணோம்.தொட்டதுக்கெல்லாம் சும்மா குத்து மதிப்பா ஐம்பதியாயிரம் கணக்கு சொல்கிறார்.

அப்புறம் இவ்வளவு நேர உரையாடலில் அவரது பேச்சின் பங்கே பெரும்பான்மையாக இருந்தாலும் நான் களைப்படைந்ததாக நினைத்து சமையல்க் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக சமையல்க் கட்டு.எல்லாமே ஒரு நேர்த்தியுடன் தான் பொருட்கள் இருக்குது.ஆனாலும் அந்தப் பெண்ணியப்பாங்கும் அழகுணர்ச்சியும் இல்லாமல் போனது.

உள்ளே போனதும் அவரது குளிர்சாதனப் பிரிட்ஜை திறந்தார்.உள்ளே வரிசையாக மூன்று தளங்களில் சின்னச்சின்ன பிளாஸ்டிக் வெள்ளை டப்பாக்கள்.அவையெல்லாம் தனது 3 மாதமாதத்திற்கான (கவனிக்கவும் மூன்று மாதம்)

சமைத்துக் குளிர்பதனப்பட்ட காலிபிளவர்,காரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட் போன்ற காய்றிகளின் கலவை மற்றும் எண்ணையிடப் படாத உப்புமாவும்.இந்தச் சின்னச்சின்ன டப்பா உணவுகளுடன் பக்கத்து வீட்டு அமீரகத்துக்காரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன கோதுமை குப்புஸும்தான் அவரது உணவு.மனுசன் மூன்று மாதத்திற்கும் ஒரே முறையாக சமைத்து வைத்துக்கொள்கிறாராம். இருபது வருடங்களுக்கு முன் கனடாவில் இரண்டு வருடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கதோசம் இதுவரை விடவில்லையாம்.அந்தப் பாழடைந்த கட்டிடத்திலேயே பதினெட்டு வருருச்த்துக்கும் மேலாக வாழ்கிறாராம்.அதே காரணத்தினாலும் அந்த பழைய கட்டிடம் காரணம் கொண்டும் துவக்கத்தில் கட்டிய வீட்டு வாடகை சுமார் 15000 இன்னும் தொடர்கிறதாம்.என்கிட்டேயெல்லாம் இரட்டிப்பாக 30000க்கும் மேல் பிடிங்கிக்கொள்கிறார்கள்:)

இவ்வளவு நேரம் தட்டச்சு செய்ததை கையில் விடியோக் காமிராக் கொண்டு போய் இருந்தால் நிகழ்வுகளை முக்கியமாக அந்த ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் அறையின் சூழலை படம் பிடித்து வந்திருக்கலாம்.முதல் சந்திப்பு என்பதாலும்,அப்படிப் பட்ட சந்திப்பில் காமிராக் கண்ணனாயிருப்பது இயலாத காரணத்தாலும் முடியவில்லை.இல்லையென்றால் பிரேம்ஜி,சின்னக்குட்டி ஸ்டைல்ல படம் பாருங்க சொல்லி சின்னக்குறிப்புகள் கொடுத்து பதிவின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

மீண்டும் ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை (குழந்தைகள் உட்பட) அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் முக்கியமாக அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)

டிஸ்கி: 25 வருடமாக அவர் இந்தியா செல்லாததற்கு நான் பொறுப்பல்ல.

Tuesday, July 8, 2008

சோளம்,கம்பு,கேழ்வரகு

கிரியண்ணன் ரொம்ப வருத்தப்பபட்டுகிட்டாரு முந்தைய பதிவு ரொம்ப சின்னதா இருக்குன்னு.அவருடைய ஆதங்கத்த தீர்க்கிறதுக்கு இந்த பதிவு.

குழந்தைகளுக்கு தரும் சத்துணவின் பலன் அவர்களின் பருவ வயதுக்குப் பின்னே தெரிகிறதாம்.இந்த தலிபான்களை புடிச்சி அடைச்சு வைச்சாரே ஜார்ஜ்
புஷ் கொத்மலான்னோ என்னவோ ஊர்ப் பேரு.அந்த ஊருல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி சோளக்கஞ்சிய ரெண்டு மூணு கிராமத்து
குழந்தைகளுக்கும் சத்தில்லாத ஒரு இனிப்பு உணவை ஒரு கிராமத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்துகிட்டு வந்தாங்களாம். ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.


முன்னாடியெல்லாம் நம்ம ஊர் பக்கமெல்லாம் சோளம்,ராகி(கேழ்வரகு),கம்புன்னு அரிசிக்குப் போட்டியா நிறைய தானியங்களின் வளர்ப்பும்,வளர்த்த
தானியத்தை வக்கணையா கொளம்பு வச்சி சாப்டற பழக்கமும் இருந்தது.சாப்பிட்டு மிச்சமிருக்குறதை தண்ணிர் ஊற்றி பானைக்குள்ள மூடி வச்சிட்டு அடுத்த நாளைக்கு சூட்டு காலத்துக்கு சும்மாவோ அல்லது கொஞ்சம் மோரையோ விட்டுக் கலந்து குடிக்கிற சுகம் தனிதான். கடிச்சுக்க ஒரு
வெங்காயம்,ஒரு மொளகா.

கம்பு மட்டும் தாராபுரத்துல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது பசங்களுக்கு அப்பாமார்கள் முளைவிட்ட கம்பு,வெல்லம்ன்னு கொண்டு
வருவாங்க,கூட்டாளிக எனக்கும் கொஞ்சம் பங்கு தருவாங்க.

இப்ப கம்பக்காணோம்,ராகியக் காணோம்,சோளத்தை மட்டும் வெளிநாட்டுக்காரன் ஓட்ஸ்ன்னு பேர் சொல்லிகிட்டு திரியறான்.அதையும் யாரும் பெரிசா சாப்டறதாக் காணோம்.ஏதோ கார்ன்பிளேக்ஸுன்னு கொஞ்சம் ஓடுது.

கோயம்புத்தூர்ல மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்த்தாப்ல அந்தக் காலத்து பொட்டி தட்டுற மக்கள் வேகாத வெயில்ல உட்கார்ந்து
பெயர்,தகப்பனார் பெயர்ன்னு விண்ணப்ப படிவம் தட்டச்சிகிட்டு இருந்தாங்க.கொஞ்சம் நேராப் போனா ஆனந்தபவன் சைவ உணவகம்.வாழை இலையில தோசையோ ரவா தோசையோ சாப்பிட்டு விட்டு ஒரு ராகிமால்ட்.அதுதான் ராகிமால்ட் கடைசியா குடிச்ச அனுபவம்.
(யாராவது ராகிமால்ட் குடிச்சவங்க இருக்குறீங்களா?


சோளம்,கம்பு,ராகியோட இடத்தையெல்லாத்தையும் அரிசி குத்தகைக்கு எடுத்துகிட்டமாதிரி அந்த ராகிமால்ட் இடத்தை இப்ப பூஸ்ட்டும்
போன்விட்டாவும் புடிச்சிகிச்சு.

கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்.அலுவலக வேலை வா வான்னு கூப்பிடுது.வர்றேன்.