முந்தைய பதிவின் விட்ட குறை தொட்ட குறையாக பதிவுலக நட்பு என்பது பதிவுகளை ரசித்துப் பின் ஆளைக் காணோமே என்று தேடி திடிரேன திரும்ப வரும் பதிவர் வவ்வால் வருகையின் நீள் உறக்கம் மகிழ்ச்சி மாதிரி இருக்க வேண்டும்:) அதே மாதிரி தலைப்புல உட்கார்ந்துகிட்டு இருக்கிற ஹாலிவுட் பாலாவும் மீள் தரிசனம் தந்தால் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நிறைய தேடல்களில் பதிவுகளில் புதிய தகவல்களை தரலாமென்பதோடு எனது சுயதேவையாகவும் சில புதிய முயற்சிகளை செய்யலாமே என்று நினைத்ததில் மைக்ரோசாப்ட்,சோனி பயில்வான்களின் போட்டியில் சில ஃபாரம்களில் வேடிக்கைப் பார்க்க போக பதிவுகளில் கவனத்தை செலுத்த முடியாது போய் விட்டது.விசயம் என்னன்னு சொல்வதற்கு அக்கரை சீமை பதிவர் ஹாலிவுட் பாலாவிலிருந்து துவங்க வேண்டும்.அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் காணாமல் போனதோடு சொல்லிக்கொள்ளாமல் ஹாலிவுட் பாலாவும் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.யாரோ ஒரு பதிவுலக நண்பர்(கேபிள் சங்கரா?) அவரது பதிவுகளைப் பின்னூட்டம் நீங்கலாக மீண்டும் இணையத்தில் இணைத்திருக்கிறார்.மீண்டும் இணைத்தவர் ஒருவேளை இந்தப் பதிவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு எனது நன்றி.இந்தப் பதிவின் கால கட்டத்துக்கு ஆப்பிள் ஐபோனும்,ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து போனதும் பிரபலமானவை.ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இரமணிதரன் அவர்கள் ஒரே வார்த்தையில் Jobs well done என்று ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தைப் போட்டு அஞ்சலி முடித்துக்கொண்டார்!
ஹாலிவுட் பாலாவோ ஸ்டீவ் ஜாப்ஸ் இன்ன பிற குழுவினர் பட்ட வாழ்க்கை அனுபவங்களை தமிழ் சினிமாவுக்கெல்லாம் எட்டாத ஸ்கிரிப்ட் மாதிரி சொன்னதோடு கூடவே பிரிஞ்சு மேய முயன்றது பிக்ஸார் அனிமேசன் தொழில்நுட்ப கோனார் நோட்ஸ்.பிக்ஸார் நிறுவனம்,தொழில்நுட்பம் பற்றியும்,ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும்(வால்ட் டிஸ்னியும்ன்னு சேர்த்து சொன்னா நிறைய பேர் அடிக்க வருவீங்க...நீங்களாச்சு...ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் இணைப்பாச்சு) பதிவுலகத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழில் அறிமுகப்படுத்தியது ஹாலிவுட் பாலா மட்டுமே!வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கனுமென்று அடம் பிடித்தால் பெரியவர்களுக்கோ சீரியல் அல்லது செய்தி,விளையாட்டு சேனல்களின் பட்டனை அழுத்தும் ஆர்வம் இருக்கும்.ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் புரிதலுக்குப் பின் பெரியவர்களுக்கும் கார்ட்டூனில் ஆர்வம் வரலாம்.
உங்களுக்கு வந்ததோ இல்லையோ கார்ட்டூன்கள் வீடு முழுதும் சிதறிக்கிடக்க இது நம்ம ஏரியா இல்லைன்னு இருந்த நான் நேற்று பிக்ஸார் ஸ்டோரி டாகுமெண்டரி பாதி பார்த்து விட்டுத்தான் குறட்டையே விட்டேன்.கூடவே அடுத்தநாள் Toystory 3 வேறு.குழந்தைகளுக்கு கார்ட்டூன் முன்னுரிமையெனும் போது குழந்தைகள் கார்ட்டூன் மாய உலகில் சுற்றித் திரிவது வாழ்வியலின் ஒரு மிகப்பெரிய அதிசயம்.நம்ம தலைமுறைக்கு எல்லாம் கிடைக்காத அம்புலிமாமா,சிந்துபாத்தை விசுவலாக பார்க்கும் வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.இனி பெரியவர்களுக்கு குழந்தைகளுடன் கும்மியடிக்கவும்,வால்ட்டிஸ்னியும்,பிக்ஸார் தொழில் நுட்பமும்,ஸ்டீவ் ஜாப்ஸும்,ஜார்ஜ் லூகாஸ்களுடன் பயணம் செய்ய ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் பதிவுகள் துணை புரியும்.
அதோடு அன்று 14 இன்ஞ்ன்னு சொல்லிக்கிட்டு 30 வரைக்கும் பெருத்த இடை தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி,பிளாஸ்மா, எல்.சி.டி இஞ்சி இடுப்பையும் தாண்டி இப்போது இடுப்பே இல்லாத எல்.இ.டி பெட்டிகள் விற்பனை நிலையங்களை அலங்கரிக்கின்றன.இப்போதைய விஞ்ஞான வளர்ச்சிகளை தங்கள் மதப்புத்தகங்களில் அப்போதே சொல்லி வைத்து விட்டார்கள் என்று இறை நம்பிக்கையாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது போல் ஹாலிவுட் பாலா நிறைய விசயங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்.
அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஒன்று PS3.இங்கே துவங்குகிறது சோனியின் விளையாட்டு.தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ங்கிற மாதிரி சோனி பிளேஸ்டேசன் மாதிரி ஒரு பன்முகப்பட்ட கன்சோல் எனும் பெட்டியை இனியெங்கும் காணோம் என சொல்லலாம்.இந்த கன்சோல் சாதனம் ஒரு விளையாட்டு மைதானம்.ஒரு இணையதளம்.ஒரு கலந்துரையாடல் களம்.ஒரு சினிமா தியேட்டர்.விளையாட்டு ப்ளு ரே தட்டுக்களை ஆன்லைனிலே வாங்கும் கடை என பல வசதிகள் கொண்டது..
இதோடு லினக்ஸ் இயங்குதளமாகவும் உபயோகிக்கலாம் என்று 2003ல் இணையத்தில் சுற்றுபவர்கள் அத்தனை பேரும் ரொம்ப......நல்ல பசங்கன்னு தமிழ்மணம் நம்பிய மாதிரி சோனி 80GB வரையிலும் லினக்ஸ் மாற்று இயங்குதளத்தையும் இணைக்கும் வசதியை சேர்த்திருந்தது.இப்படியெல்லாம் சோனி மாதிரி ரொம்ப நல்ல பிள்ளைன்னு ஆங்கிலத்தில் நல்ல ரிவுயூ செய்தா டாலர் கூட கொடுப்பதாக கேள்வி.நமக்கு நல்லதும் சொல்லி அதன் குளறுபடிகளும் சொல்லாட்டி தூக்கம் வராது என்பதாலும் சோனி சிக்ஸாஸிஸ்ல வளவளா பதிவு தட்டச்சு செய்யறுதுக்கும் சோனி தரவிறக்க கண்சிமிட்டல் செய்யும் நேரத்துல குட்டி தூக்கம் போடும் பொறுமையெல்லாம் இல்லையென்பதால் இது நமக்கு ஆவுறதில்ல.
சோனி அறிமுகப்படுத்தியது.விளையாட்டு போதை பிரியர்களுக்கும்,விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்று எனும் லினக்ஸ் பிரியர்களுக்கும்,கூடவே ஹேக்கர்களுக்கும் நான் முன்பே சொன்ன ஐஸ்கிரிமுடன் கிரிம் காரமலை கலந்து சாப்பிட்ட மாதிரி ஒரே கொண்டாட்டம்.இந்த கொண்டாட்டம் நீடிக்க விடாமல் அடுத்த வெர்சன் ஸ்லிம் மாடலில் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுத்தியதோடு முன்பு வாங்கியவர்கள் பிளே ஸ்டேசனை அப்டேட் தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் வாங்கும் நீலக்கதிர் வட்டுக்கள்(ப்ளு ரே) போன்றவற்றுடன் சோனியில் பன்முக பலன்களை அனுபவிக்க முடியாது என்று தடா,பொடா,கெடா வெட்டியது.போடா என்றார்கள் ஹேக்கர்கள்.உபயோகிப்பாளர்களோ சோனியை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார்கள்.ஹேக்கர்களோ ப்ளே ஸ்டேசனை அப்டேட் செய்யாதீங்க!மாற்று வழிகளை உருவாக்கித் தருகிறோம் என சவால் விட்டார்கள்.
ஹேக்கர்களுக்குப் பயந்த அப்பாவிகளோ சோனி செய்வதை செய்கிறேன் என்று அப்டேட் செய்யப் போக உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என மூட்டைப்பூச்சி(bug),இடை நிறுத்தம்(crash) என்று அலறிக்கொண்டிருக்க இன்னும் சிலர் இவங்க சண்டை முடியட்டும் என்று லினக்ஸ் போகாமலும்,அப்டேட் செய்யாமலும் இயங்கிக்கொண்டிருக்க,லினக்ஸ் நரி குருக்கள் வடை போச்சேன்னு வருந்திக்கொண்டிருக்க மைக்ரோசாப்ட்டுக்கு மார்க்கெட் நிலவரம் மூக்கு வேர்த்து தயாரித்த கன்சோல்தான் எக்ஸ்பாக்ஸ் (Xbox 360).
அல்லது சோனியின் விளையாட்டு தாதா பிம்பம் உடைக்க எக்ஸ்பாக்ஸ் பயன்பட்டாலும் வடிவமைப்பில் சோனியின் பிளே ஸ்டேசன் முன்பு Xbox 360 மற்றும் Nintendo போன்ற விளையாட்டு வீரர்கள் நிற்க முடியாது.
இதை உதாரணத்தோடு சொல்லனும்ன்னா சச்சினோடு ஏனைய பேட்ஸ்மென் ஒப்பீடோ அல்லது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாதிரி சோனி பிளே ஸ்டேசன்.நம்ம ஊர் அம்பாசிடர் கார் மாதிரி மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ்.மைக்ரோசாப்டின் இயங்குதளம் விளையாட்டுக்கு மட்டும் என எளிதாக வடிவமைக்கப் பட்டது.2000 ரூபாய்,4000 ரூபாய் கொடுத்து ப்ளு ரே வட்டுக்களை வாங்கி விளையாடுவதை விட எக்ஸ்பாக்ஸ் குறைந்த விலையிலோ வழக்கமான திருட்டு டி.வி.டி மாதிரியாகவோ விளையாடுற மாதிரி.
ஆனால் சோனியை விட ஒரு புத்திசாலித்தனமான வேலையை மைக்ரோசாப்ட் செய்தது.நமக்கு அவதார் படம் தெரியும்தானே.அதன் 3D அனிமேசன் என்பதெல்லாம்(மறுபடியும் பிக்ஸார்,பாலா,ஜார்ஜ் லூகாஸ் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் etc..etc) ஒருவர் பின்புலத்திலிருந்து உடல் அவயங்களை அசைக்க அதற்கு தகுந்த மாதிரி நமக்கு திரைப்படத்தில் அனிமேசன்கள் ஓடுவதோ,நகர்வதோ,காதல் செய்வதோ வரும்.இதேமாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் கைநெக்ட்(Kinect)என்ற கேட்ஜட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360(Xbox 360) இணைத்து இயக்குகிற மாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது.சோனியின் விளையாட்டு எப்படின்னா ப்ளு ரே வட்டை பிளே ஸ்டேசனில் இட்டு வயர்லெஸ் சிக்ஸாக்கிஸ்(Sixaxis)பட்டன்களை நகர்த்தி விளையாடுவது.ஆனால் எக்ஸ்பாக்ஸ்+கைநெக்ட்,அதோடு கூட அட்வென்ஸர் கேமை இட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாடி 2 மீட்டர் தள்ளி நின்று உங்கள் உடல் அசைவுக்குத் தகுந்த மாதிரி தொலைக்காட்சி பிம்பம் இயங்கும்.அதாவது நீங்களே டான்ஸர்,நீங்களே பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர்:).
இல்ல எனக்கு டான்ஸெல்லாம் வராது,சினிமான்னா கண்கொட்டாமல் பார்ப்பேன் என்று டி.வி.டி பிளேயரில் படம் பார்ப்பவர்களுக்காக இன்னும் கொஞ்சம் விவரிக்க முடியுமா என்பது அடுத்த பதிவில்....
ஹாலிவுட் பாலா மயில் ஆடிய அழகைக் கண்டு மயங்கிப் போன வான்கோழி நான்.பாலா அசல் மாதிரி உள் கட்டுமானமெல்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது.மென்பொருட்கள் பற்றி தொடர்ந்து சசிகுமார் சொல்லி வருகிறார்.ஆனால் மென்பொருட்களை இயக்கும் கேட்ஜட் பல அமெரிக்க சந்தையில் தூங்கி எழுந்த காலையிலே அறிமுகமாகும்.நமக்கு திருட்டு வி.சி.டி மாதிரியெல்லாம் தேடி அலைய வேண்டி வரும்.அது மாதிரியான குறைகளைப் போக்கவும்,தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு நாமும் கூடவே பயணிக்கவுமான எனது அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.நான் தமிழ்ச் செய்திகளுக்கே சிங்கி அடிக்கும் போது(இந்த லட்சணத்துல தமிழ்மணம் தடை ?) இணையத்தில் இநியுஸ்,ஜிநியுஸ் வாசிக்கிறேன் கேளேன் என்று அமெரிக்க அம்மணிகள் உசுப்பேத்துனா எப்படியிருக்கும்...
ஹாலிவுட் பாலாவோ அல்லது ஆப்பிள்,மைக்ரோசாப்ட்,சோனி தமிழ் உஸ்தாதுகள் யாராவது இந்த பதிவைப் பார்த்தால் சிரிக்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.அனிமேசன்,கார்ட்டூன் போன்றவை 2Dயிலிருந்து 3Dக்குப் பயணித்து விட்டது.தொலைக்காட்சிகள் கூட 3D என்ற விளம்ப்ரங்கள் வந்து விட்டன.பழையன நகர்தலும் புதியன புகுதலும் என நுகர்வு கலாச்சாரம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.அவற்றில் சில கடுகுகளை மட்டுமே போட்டு தாளித்திருக்கிறேன் நானும் தொழில்நுட்ப பதிவு போடுகிறேன் பேர்வழியென:)
அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் நுனிப்புல் தகவல்களுடன் வருகிறேன்.நன்றி.
12 comments:
நல்ல பதிவு நண்பா
இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?
அருமையான பதிவு மக்கா...!!!!
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பதிவு நண்பா//
நலமா இருக்கிறீர்களா ராஜா?
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?//நடக்கட்டும்!இப்படியும் சில பதிவுகள் வராமல் போனால் இப்படி ஒரு கட்சி இருந்ததே நமக்கெல்லாம் மறந்து போகுமில்ல:)
//MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பதிவு மக்கா...!!!!//மனோ!பின்னூட்டத்தோடு பதிவுகளையும் மீண்டும் தொடரலாமே!சில சமயம் ரொம்ப சென்சிடிவா இருப்பீங்க போல தெரியுதே!
நலமா நடராஜன்.
ஹாலிவுட் பாலா பற்றி எழுதியிருக்கீங்க. மற்ற கணினி சமாச்சார ஜாம்பவான்கள் பற்றி என்னால் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது. நமக்கு ரொம்ப தூரம். நாம் இன்னமும் ஒட்ட போன் தான். நீங்களும் ஏமாற்றி விட்டீங்க. கோவிச்சுக்க வேண்டாம்.
பொதுவா வலையுலகில் எந்த அளவுக்கு நெருங்கி பழகினாலும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கும். பல காரணங்கள்.
ஆனால் பாலாவுடன் பழகிய (கைபேசி அழைப்பு) ஒரு நாளில் அன்றே தினத்தில் இருவரும் பேசியது ஏறக்குறைய 5 மணி நேரம்.
என்னை பத்து வயது குறைவு என்றபோதிலும் அவர் சொன்ன என்ன நீங்க பத்து வருடம் பழகியது போல இந்தளவுக்கு தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க என்று ஆச்சரியப்பட்டார்.
ஆனால் என் எழுத்துக்களை புத்தக வடிமாக்கிய அவரின் அசாத்தியமான உழைப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். அவருக்கு எல்லாமே தூசி.
என்னுடைய பார்வையில் நம்ம தெகா மற்றும் பாலா இருவரும் அமெரிக்கா போய் இருக்கக்கூடாது.
தெண்டமா அங்கே போய் வாழ்ந்து கொண்டு அவர்கள் திறமைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்து இது.
என் தளத்தில் பக்கவாட்டில் பாலாவின் மின் நூல் நிரந்தரமாக இணைத்து உள்ளேன். படித்துப் பாருங்க.
அதைப்பற்றி மூன்று விமர்சனங்கள் எழுதி உள்ளேன். பழைய பதிவில் பாருங்க.
ராஜ்,
ஆஹா பின்னுறிங்க, நான் மீண்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி என்னையும் மகிழ்வில் திளைக்க வைச்சுடிங்க...நன்றி!
ஹாலிவுட்பாலா அந்த காலத்திலேயே படா பதிவர், பாஸ்டன் பாலா என்பதும் இவர் தானா?
கேம் கன்சோல்கள் பத்தி அருமையா சொல்லி இருக்கிங்க, பிக்சார், டிஸ்னி இவர்கள் எடுத்த படங்களின் மேக்கிங் பாருங்க , அனிமேஷன், கார்டூனுக்கு இவ்வளவு கஷ்டமானு தெரியும்.இந்தியாவில எல்லாம் அது பக்கத்தில கூட போக முடியாது, ஷ்ரெக், ரங்கோ, டாய் ஸ்டோரி என ஏகப்பட்ட படங்கள், எதை சொல்ல எதை விட.
பின்குறிப்பு:
கூடன்குளம் பத்தி ஒரு மாற்றுப்பார்வையில் பதிவு போட்டு இருக்கேன்(படிச்சா தானே அது மாற்றுபார்வையா ஏமாற்றுப்பார்வையானு தெரியும்) பாருங்க.
ரொம்ப நாளாகிட்டதால் தமிழ்மணத்தில் இணைக்கமுடியலை அதான் இப்படி!
nice post..... please keep blogging with technical news.... www.rishvan.com
நடா...எப்பிடி இருக்கிறீங்க.நல்ல பதிவொண்டு போடுங்கோ !
நீண்ட இடைவெளி பதிவு எழுதுவதில்... :)
சரி, ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டுப் போக வந்தேன்.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள், ராஜ நட :)
ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க.பாராட்டுக்கள் திரு பாலாவின்'பிக்ஸார்ஸ்டோரி' சில தினங்களுக்கு முன் படித்தேன். மிக நன்றாய் அனிமேஷன் உலகின் வரலாற்றை அவருக்கே உரித்த பாணியில், முடிக்காமல் எழுந்து போக முடியாத அளவுக்கு எழுதி இருந்தார்.உங்கள் பகிர்வு பிடித்திருக்கிறது.ஊடே ஊரு கின்ற இடை வெட்டுக்களும் வாழ்த்துக்கள் அன்புடன் ..
Post a Comment