பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 2012 ஜனவரி வாழ்த்துக்கள்.இந்தப் பதிவு ஆட்டத்துல நானும் இன்னும் இருக்கேன்னு நினைவு படுத்தவும்,எழுதப்பட்ட வரலாற்றின் ஒற்றைப் புள்ளியை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த வரலாற்றையே திருப்பி போட நினைக்கும் சில பேர்வழிகளுக்கு அச்சாரமாக (நிச்சயமாக உள்குத்து)உதாரணமாகவும்,கூடவே சாத்தியமா என்று என்னில் எழுந்த கேள்வியாகவும் கூட இங்கே பதிவு செய்யப்படுகிறது.
அமெரிக்காகாரனிடமும்,பிரிட்டிஷ்காரனிடமும்,பிரெஞ்சுக்காரனிடமும் உள்ள ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால் எதனையும் ஆவணப்படுத்தல் என்பதோடு சில குறிப்பிட்ட வருடங்கள் ரகசியமானது என்றோ பொதுப்பார்வைக்கு உட்பட்டதல்ல(clacified) ஏன்று பாதுகாத்து விட்டு பின் காலப்போக்கில் பொதுவில் வைக்கும் ஆவணமாக மாறுவதுண்டு. அவ்வாறு மாறியதில் குறிப்பாக ஹிட்லரின் டைரி,உயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.ஹிட்லரின் உயில் ஒரு சுவாராசியமான கதை.அதைப் பற்றி கதைக்க! ஆரம்பித்தால் பதிவின் சாரம் வேறுபக்கம் திரும்பி விடுமென்பதால் குறிப்போடு நிறுத்திக் கொள்வோம்.
நாம் இங்கே பேசும் பொருள் ஆவணப்படுத்தல் மட்டுமே.ஐன்ஸ்டீன் இப்ப மட்டும் பெரிய ஆளு இல்ல.அணுகுண்டு கண்டு பிடிச்சதாலும் பெரிய ஆளாக மாறி விடவில்லை.அதற்கும் முன்பே கல்லூரிப் பேராசிரியராக,விஞ்ஞானக் கட்டுரைப் பேச்சாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் உலகம் சுற்றும் வாலிபனாக ஜப்பான்,சிங்கப்பூர் சிலோன் என பயணம் செய்தும்,லண்டனில் நிறைய கரவொலிப் பேச்சாளர்.1933ம் வருட வாக்கில் ஹிட்லர் அட்டகாசமாக அடித்து ஆடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் யூத வெறுப்பின் உச்சத்தில் ஐன்ஸ்டீன் அமெரிக்கா குடியேறுகிறார்.இப்ப பதிவுப் பக்கமா இன்னும் கொஞ்சம் நகரலாம்.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லை தூங்கு மூஞ்சியா மெல்ல செய்தி வெளியிட்டாலும் கூட ஆங்கிலச் செய்திப் பத்திரிகைகளில் இந்து பத்திரிகைக்கு ஒரு தனித்துவம் உண்டு.இன்னும் 50 வருடங்கள் கழித்து ஆவணமாக ஏதாவது தேடினாலும் கூட கிடைக்கும்.உதாரணமா நடிகை வித்யாவின் இறுதி வாழ்வு பற்றிய தேடலில் அவரது கணவர் ஜார்ஜ் போட்ட சொத்து வழக்கு நீதிமன்ற நிராகரிப்பு காணக்கிடைத்ததை உதாரணமாகச் சொல்வேன்.ஆவணப்படுத்தல் என்பதோடு ஊரே 2ஜி ராசாவைக் கும்மும் போது ராசாவுக்கு சாதகமான செய்திகள் வந்ததையும் சொல்லலாம்.சமீபத்து காண்ட்ரோவர்சியாக Mullaperiyar சொற்பதத்தை கூறலாம்.கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம்.இந்தப் பதிவு முல்லைப்பெரியாறு பற்றியது இல்லையென்றபோதிலும் இடைச்செறுகலாக முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் இடைப்பட்ட ஊரெல்லாம் நீரில் அமுங்கி விட்டு கொச்சியில் எர்ணாகுளம் வந்து அரேபியக் கடலுக்குப் போய் விடுமென்ற கதைகள் மெல்லக் காணாமல் போயுள்ளன.இப்ப ஐன்ஸ்டீனை தொடர்பு படுத்த கேரளாவில் அமுங்கிப் போய்விடுமென்ற பயத்தின் எல்லையான எர்ணாகுளத்தின் மட்டாஞ்சேரிக்குப் பயணிக்கலாம்.
மட்டாஞ்சேரிக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.தமிழகத்தின் பீட்டர்களான எனது ஆங்கிலோ இந்தியன் நட்பு வட்டாரம் போல் மட்டாஞ்சேரிக்குள்ளும் கேரள பீட்டர்கள் உள்ளார்கள்.வாஸ்கோடா காமா மண்டையைப் போட்ட கல்லறை,யூதர்களின் synagogue எனப்படும் யூத புனித தலம் போன்ற சிலவற்றையும் செம்மீன் போன்ற படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வாங்கித் தரும் நோகாமல் நொங்கு மீன் சாப்பிடும் கரையோர மீன் வலைகள் போன்றவை வரலாற்றின் தொடர்கதைகள்.ஐன்ஸ்டீனுக்கு இன்னும் கொஞ்சம் தூரம்தான்.மட்டாஞ்சேரி மலபார் யூதர்கள் 1568 வாக்கில் குடியேறினார்கள் என்றும் இப்பத்தான் பெட்ரோலுக்கு மவுசு,அப்பொழுதெல்லாம் குருமிளகு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை,கிராம்பு,கசகசா போன்றவையே தங்கம் மாதிரி.இல்லாட்டி போர்ச்சுகீசிய,,டச்சு,பிரெஞ்சு,ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.இந்த கரம் மசாலா விற்பன்னர்களாக மட்டாஞ்சேரி யூதர்கள் இருந்துள்ளார்கள்.இப்பத்தான் ஐன்ஸ்டீன் மெய்யாலுமே கதைக்குள்ள வருகிறார்.
15ம் நூற்றாண்டு யூதக் கோயில்,தான் சார்ந்த மக்கள் இருந்தும் ஐன்ஸ்டீன் முன்னாடி சொன்னது போல் ஜப்பான்,சிங்கப்பூர்,சிலோன்,லண்டன்,ஜெர்மன் என தனது உலகம் சுற்றும் பயணத்தை முடித்துக்கொண்டார்.ஹிட்லர் கையில் மாட்டும் யூதர்களையெல்லாம் ஆராய்ச்சி எலியாகவும்,மாட்டுக்கொட்டில் இடத்திலும் வைத்திருந்த கால கட்டத் துவக்கத்தில் அதாவது 1933 வாக்கில் ஐன்ஸ்டீன் அமெரிக்க தஞ்சம் புகுந்து விட்டார்.ஜெர்மானியர்களுக்கு இல்லாத அக்கறை,அமெரிக்கனுக்கு இல்லாத ஆவணப்பதிவு நம்ம இந்து பத்திரிகைக்கு எந்த மூல ஆதாரத்திலிருந்து கிடைத்தது எனத் தெரியவில்லை.
அதாவது அப்போதிருந்த திருவாங்கூர் ராஜாவின் திவான்(திவான்னா பிரைம் மினிஸ்டர்ன்னு இந்து பத்திரிகை அடைப்புக் குறி வேற) அப்போதைய இந்திய சம்பளம் ரூ6000/-க்கு வைஸ் சான்ஸ்லராக ப|ணி புரிய வருமாறு அழைத்ததாகவும் நம்ம அண்ணாத்தே ஐன்ஸ்டீன் நான் பிரின்ஸ்டனுக்கு பிரின்ஸ்பலா போறேன்னு அமெரிக்கா ஓடிவிட்டதாகவும் செய்தி சொல்கிறது.ஐன்ஸ்டீன் சேர நாட்டுக்கு சேவை செய்ய வந்திருந்தால் நல்லாத்தான் இருந்திருக்கும்.காலம் கடந்தாவது இந்தியா ஐன்ஸ்டினையும் சேர்த்து கொண்டாடியிருக்கும்.கூடவே அணுகுண்டு என்ற ஒன்று கண்டுபிடிக்காமலேயே போயிருக்கும்.நியூக்ளியர் விஞ்ஞானம் வேறு திசை நோக்கிப் போயிருக்கும்.இந்தப் புலம்பலை ஒருவர் கூட இதுவரை முன் வைக்கவேயில்லை.
சரி இப்போது என்னோட சந்தேகம் என்னன்னா ஐன்ஸ்டீன் 1933ல் அமெரிக்காவுக்குப் போய் விடுகிறார்.ஐன்ஸ்டீனை வாத்தியார் வேலைக்கு கூப்பிட்ட திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதோ 1937ம் ஆண்டு.திருவிதாங்கூர் மன்னருக்கோ அல்லது திவான் சர்.சி.பி ராமசாமி ஐயருக்கும் ஐன்ஸ்டீனுக்குமிடையே நிகழ்ந்த கடிதப் போக்கு வரத்து ஆவணமோ இதுவரை கிடைக்கவில்லை.இந்த செய்தியைச் சொன்ன வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஏ.சிரிதர மேனன் காலமாகி விட்டார்.கடிதத்தை இனிமேல்தான் தேடனும் என்று இன்னுமொரு எழுத்தாளரும்,பேராசிரியுமான எம்.ஜி.சசிபூஷன் என்பவர் குறிப்பிடுகிறாராம்.
நம்ம சேட்டன்கள் பத்தி நிறைய கோபம் சார்ந்த பதிவுகள்,நிகழ்வுகள் காணக் கிடைத்தது.என்னைக் கேட்டா கலாச்சார ரீதியாகவோ,மொழி ஒட்டுதலுடனோ இரு மாநிலங்களுக்கும் வித்தியாசமே இல்லை.இன்னும் சொல்லப்போனால் நம்ம ஆண்களுக்கும்,கேரளப்பெண்களுக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தம் ரொம்பவே.பத்மினி காலம் முதல் நயன் தாராக்கள் வரை திரையுலகம் இதனை பறைசாற்றுகிறது.முல்லைப் பெரியாறு விசயத்தில்தான் சேட்டன்கள் கொஞ்சம் சறுக்கி விட்டார்கள்.ஆனால் ஆவணப்படுத்தலில் கேரளத்தவர்கள் ஒன்றும் சோடை போனவர்களுமல்ல.
பதிவுக்கான சாரம் இது: http://www.thehindu.com/news/states/kerala/article2769514.ece?homepage=true
தொடுப்புக் கொடுக்கலாம்தான்.ஆனால் தனக்கே உரிய பாணியில் இந்து பத்திரிகை அவ்வப்போது நீக்கி விடும் முன் அனுபவத்தால் தொடுக்கவில்லை.
டிஸ்கி: இப்பத்தான் கவனிக்கிறேன்.முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்ட சிலருக்கு மறுமொழி சொல்லவில்லையென.மன்னிக்கவும்.
18 comments:
நல்ல தகவல் தொகுப்பு நண்பா
I had the same question when I saw the Times of India
article! May they are doing some pr work to impress
the north!
ராஜபாட்டை ராஜா!எப்படியிருக்கீங்க?
//peace said...//
Peace be upon you!இதுதான் உண்மையான வாசகம்:)
It is quite obvious to observe that hindu stands with it's own opinion in favour of Kerala focused readers but my argument here is that whatever said and written to have a consolidate proof especially a historic fact like ''Einstein was offered post of Travancore varsity Vice-Chancellor ''.
அப்பாடா..ரொம்ப நாளைக்குப் பிறகு நடா என்னமோ பதிவு போட்டிருக்கார்ன்னு ஓடி ஓடி வந்தேன்.ஒண்ணும் புரில.ஆனாலும் சந்தோஷம்.2012ல் சந்தோஷமா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது.வாழ்த்துகள் நடா !
//Rathnavel said...
நல்ல பதிவு.
//ஐயா!உங்கள் தொடர் பார்வைக்கு நன்றி.
ஹேமா!பின்னூட்டம் சொல்லனும்ங்கிற பதிவுகளுக்குப் போய் வந்துகிட்டுத்தான் இருந்தேன்.ஆணி வேறு அக்கு வேறா எல்லாப் பதிவுகளையும் பார்க்க இயலாத படி புதுப் புராஜக்ட்.மீண்டும் பதிவுகளை தொடர முயற்சி செய்கிறேன்.
சி.பி உங்களுக்கு ஒரு பதிவுல கமெண்டுனாரே கவனிச்சீங்களா:)
சிபி பதிவு போட்டு கலாய்ச்சிருந்தரே.
அதையா சொல்றீங்க.ஏதாவது நான் என் பதிவுகளை சரிபண்ணணுமா ?
ராஜ நட, அயன்ஸ்டீன் திருவாங்கூர்,கேரளா போயிருந்தா அது வரலாற்றில் ஒரு திருப்பம் தான்.
அதே போல் பின் லாடனும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரினாராம். பிரித்தானியா அவரது விண்ணப்பத்தை மறுத்துவிட்டதாம்.
ஏற்றுக்கொண்டிருந்தால் வரலாறு வேறு விதமாய் திரும்பியிருக்காதா :(
இன்னும் சொல்லப்போனால் நம்ம ஆண்களுக்கும்,கேரளப்பெண்களுக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தம் ரொம்பவே.பத்மினி காலம் முதல் நயன் தாராக்கள் வரை திரையுலகம் இதனை பறைசாற்றுகிறது//
இது என்னமோ சத்தியமான வரிகள், இதில் எனக்கும் அனுபவங்கள் நிறைய உண்டு, ஆண்கள் [[மலையாள]] நம்மை வெறுத்தாலும் கேரளா பெண்கள் நம்மை கொண்டாடுகிறார்கள், இது என் அனுபவ உண்மை...!!!
//ஹேமா said...
சிபி பதிவு போட்டு கலாய்ச்சிருந்தரே.
அதையா சொல்றீங்க.ஏதாவது நான் என் பதிவுகளை சரிபண்ணணுமா ?//
ஹேமா!சி.பி கலாய்ச்சது கவிதை மற்றும் உரைநடை தளங்களில் ஒன்றே ஜொலிக்கிறதென்றார்.அதென்னமோ அட்சர சுத்தமா ஈழமொழி வழக்குகளை உரைநடையில் கொண்டு வந்தாலும் உங்கள் கவிதைகள் மட்டுமே அதிகமாக ஜொலிக்குது.
ரதி!ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!நல்லாத்தான் இரண்டு புத்தாண்டு கொண்டாடுகிறோம் நாம்:)
பெரும்பாலான அரேபியர்கள் முன்பும் நியுயார்க் பயணம் செய்வதை விட லண்டன் பயணமே அதிகம் மேற்கொண்டார்கள்.நெருங்கிய தூரம் என்பது ஒரு காரணமாகவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்காக செல்வதற்கு எளிதான காரணமாக இருக்கலாம்.போர்ச்சுகலில் இடம் வாங்கி வீடு கட்டியவர்கள் நிறைய பேர்.
முந்தைய இறுக்கமான இஸ்லாமிய மத உணர்வுகள் வளைகுடா நாடுகளில் முக்கியமாக சவுதியில் பரந்து கிடந்ததற்கு பின்லாடனின் சொத்துக்கள்,ஷரியா பின்பற்றும் மன இறுக்கம்,தலிபானிசம் போன்றவைகளுக்கும்,ஆப்கான்,பாகிஸ்தான்,இந்தியா மதஉணர்வு சலசலப்புக்கு பின்லாடனே காரணம்.
பின்னூட்ட துவக்கத்திலேயே சொன்னது போல் ஐரோப்பிய நாடுகளில் வீடு கட்டியே குடியிருக்கும் அரேபியர்களுக்கான உரிமை பின்லாடனுக்கு மறுக்கப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும்?
பின்லாடன் தஞ்சம் கோரும் காலகட்டம் காலம் கடந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.உதாரணமாக கடாபி லிபிய புரட்சியின் இறுதிக்கால கட்டத்தில் தஞ்சம் புக விண்ணப்பித்தால் எந்த நாடுதான் ஏற்றுக் கொண்டிருக்கும்?
மனோ!புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதுவருட பார்ட்டி எப்படி?இந்த மாதிரி விழாக் காலங்களில் துபாய்,பஹ்ரைன் போன்றவையே உசத்தி.
நம்ம ஊருல சரக்கடிக்கிற சேக்குக எப்படியோ தேத்திடறாங்க.எனக்கெல்லாம் பெப்சியும்,செவன் அப்பும்தானாம்:)
நான் கொஞ்ச நாளா அரசு மருத்துவ மனை கேடரிங்கில் இருந்தேன்.நர்சுகள்,டைட்டீசயன் என எல்லோரும் நட்பாகவே இருந்தார்கள்.
இப்பொழுது பணி புரியும் நிறுவனத்தில் கூட கேசியர் பெண் ஓணம் ஸ்பெசல்,மாசக்கடைசியில் கொடுக்கல் வாங்கல்ன்னு ஒட்டுறவு நல்லாவே இருக்குது.
தனிப்பட்ட விதத்தில் கேரள மக்களுக்கும்,தமிழர்களுக்கும் பிரச்சினையொன்றுமில்லை.அரசியல் ரீதியாக முல்லைப்பெரியாறு விசயத்தில் கேரளாவை நம்ம வழிக்கு கொண்டு வருவது அவசியமான ஒன்று.அடுத்த மாதம் உச்சநீதி மன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதென்று பார்ப்போம்.
ராஜ்,
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனுக்கும் முல்லைப்பெரியாருக்கும் ரிலேட்டிவிட்டி தியரிக்கண்டுப்பிடிச்ச விஞ்ஞானி நீர்! :-))
//அணுகுண்டு கண்டு பிடிச்சதாலும் பெரிய ஆளாக மாறி விடவில்லை.//
அவர் எங்கே அணுகுண்டுக்கண்டுப்பிடிச்சார் ஓப்பென் ஹுமர் குழு தானே எல்லாம் செய்தது.
ஐன்ஸ்டீன் செய்தது எல்லாம் ரூஸ்வெல்ட்டிற்கு ஒரு ரெபெரண்ஸ் லெட்டெர் அனுப்பி அணுக்குண்டு செய்ய வாய்ப்பு இருக்கு , இன்னார் இதுல கெட்டி, என்று சொன்னது தான்.அமெரிக்காவ உசுப்பி விட ஜெர்மன் காரன் இதுல தீவிரமாக இருக்கான்னு சொன்னது. இந்த ஆய்வு செய்தவர்கள் fermi,szillard, ஆகியோர் ஐன்ஸ்டீன் நண்பர்கள்.
இங்கே போய்ப்பாருங்க ஐன்ஸ்டீன் லெட்டர் இருக்கு
Einstein letter to roosevelt
ஒருவேளை இராமர் ,அணில் போல இதுவும் எடுத்துக்கொள்ளலாம்.
//மட்டாஞ்சேரி மலபார் யூதர்கள் 1568 வாக்கில் குடியேறினார்கள் என்றும்//
கிங் ஸமோரின் காலத்திலேயே அதாவது 2 ஆம் நூற்றாண்டில், யூதர்களின் முதல் டயாஸ்போராவிலேயே மலபார் வந்து விட்டதாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சொல்லுறார்.
1568 இல் வந்தவர்கள் நசரேனியன் கிருத்துவர்கள் எனப்படும் மலபார் சிரியன் கத்தோலிக் கிருத்துவர்கள். தோமையர் குருப் இவர்கள் (st.thomus) வாட்டிகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள். எனவே போர்ர்சுகீசியர்கள் இவர்கள் பைபிளை எரித்து, சர்ச்சுகளை இடித்து ஒரு ஆட்டம் ஆடினார்கள்.
ஹி. ஹி நான் சொன்னது ஒரு குத்துமதிப்பாகத் தான் ,சரியா இன்னும் விவரம் தெரியலைப்பார்க்கணும்.
//சரி இப்போது என்னோட சந்தேகம் என்னன்னா ஐன்ஸ்டீன் 1933ல் அமெரிக்காவுக்குப் போய் விடுகிறார்.ஐன்ஸ்டீனை வாத்தியார் வேலைக்கு கூப்பிட்ட திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதோ 1937ம் ஆண்டு..//
திவான் பல்கலை ஆரம்ப்பிக்கும் எண்ணம் வந்த உடனே லெட்டர் போட்டாரோ என்னமோ?
திவான் என்றால் காரியஸ்தர் அல்லது அந்தரங்க காரியஸ்தர் என்று வைத்துக்கொள்ளலாம் சுருக்கமாக சொன்னா கணக்குப்பிள்ளை வேலை தான் செய்தார்கள்.அதாவது revenue officer வேலை.
கணக்கு பிள்ளை வேலைனு சொன்னா மதிப்பாக இருக்காதுனு இந்து பிரைம் மினிஸ்டர் ஆக்கிடுச்சு :-))
வவ்வால்!இந்தப் பதிவுக்கு காரணம் நான் மட்டாஞ்சேரியெல்லாம் சுத்துனதாலேயும் ஐன்ஸ்டீன் சிங்கப்பூர்,சிலான் வந்துட்டு எப்படி மட்டாஞ்சேரி போகாமல் இருந்திருக்க முடியும்ங்கிற கேள்வியால்தான்.
நீங்க சொன்ன மாதிரி முன்பே விண்ணப்பிதில்லையா?4 வருடம் ஒன்றும் அவ்வளவு பெரிய இடைவெளிக்காலம் இல்லையே என்ற சந்தேகம் எனக்கும் தோணிச்சு.ஆனால் பதிவில் சொன்னமாதிரி ஆவணப்படுத்தலில் அமெரிக்கர்கள் செம கெட்டி.குறிப்பாக பத்திரிகைகள் நோண்டியெடுத்து துப்பறிபவர்கள்.எனக்கு என்னமோ இந்துப்பத்திரிகையின் செய்தி இடைச்செறுகல் மாதிரியாகவே படுது.
ஐன்ஸ்டீனின் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் முன்பே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.நினைவு படுத்தலுக்கு இன்னுமொரு முறைப் பார்த்தாப் போச்சு.
ஓப்பென் ஹுமர் குழு நீங்க நினைவுப் படுத்தித்தான் எனக்கே நினைவு வருது.இது எப்படியிருக்குன்னா நிலவுல காலை வச்ச ஒரு ஆளு பேரு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்ன்னு எல்லோருக்கும் தெரியும்.இன்னொரு ஆளு பேர் என்னன்னு கேட்டா பெரும்பாலோர் பெப்பேதான்.இதோ எனக்கே காலின்ஸ் தவிர முழுப்பெயர் நினைவில்லை.
நான் கிறுஸ்தவப் பள்ளியில்தான் படித்தேன்.(ஏகப்பட்ட அக்கப்போர்,குறும்பு,தேறாத கேசுன்னு ஹாஸ்டல் வனவாசம் வேற)நீங்க சொல்ற ஒன்றைக்கூட சொல்லிக்கொடுக்கவேயில்லையே! ( இதோ முந்தாநாள் 7ம் தேதிதான் ஆர்தோடக்ஸ் சிரியன் கிறுஸ்தவர்கள் கிறுஸ்மஸ்ஸே கொண்டாடினாங்க...இதுக்கு வேற காரணத்தை நான் தேடிகிட்டுப் போகனும்)
யூத டயஸ்போரா,நீலகண்ட சாஸ்திரி,நசரேயனியன் கிறுஸ்தவர்கள்,மலபார் சிரியன் கத்தோலிக்கர்கள்,தோமா என்று Antiques செய்திகளை எங்கேயிருந்து புடிக்கிறீங்க.தெரிஞ்சா நாங்களும் யாருக்காவது எதிர்ப்பின்னூட்டம் போட பயன்படுமில்ல?
//கணக்கு பிள்ளை வேலைனு சொன்னா மதிப்பாக இருக்காதுனு இந்து பிரைம் மினிஸ்டர் ஆக்கிடுச்சு :-))//
இது உட்டுப்போச்சே!அதென்ன மதிப்பாக இருக்காது?நாமளே கணக்குப்பிள்ளையத்தான் பிரைம் மினிஸ்டராக்கியிருக்கிறாம்!
யாரங்கே!கபில் சிபலா!நானில்ல...நானில்ல...வவ்வால்தான்:)
ராஜ்,
உள்குத்துனு கொடுத்ததை கேட்கனும்னு இருந்தேன் மறந்துட்டேன், அது ஜெமோக்கு தானே?
//ஆனால் பதிவில் சொன்னமாதிரி ஆவணப்படுத்தலில் அமெரிக்கர்கள் செம கெட்டி.குறிப்பாக பத்திரிகைகள் நோண்டியெடுத்து துப்பறிபவர்கள்.எனக்கு என்னமோ இந்துப்பத்திரிகையின் செய்தி இடைச்செறுகல் மாதிரியாகவே படுது.//
நம்ம ஆட்களும் ஆவணப்படுத்துவாங்க ஆனால் அந்த ஆவணம் எங்கே இருக்குனு தெரியாது , சுலபமாக காணாமல் போய்டும். சமிபத்தில ஒரு செய்திப்படிச்சேன், தமிழ்நாடு ஆவணக்காப்பத்தில இருந்து ஒரு லட்சத்திற்கும் மேல காணவில்லையாம்.
ஆவணங்களை டிஜிட்டலாகவோ, அல்லது ரேடியோ டேக்கிங்க் செய்தோ பராமரிக்க வேண்டும்.
இந்து செவி வழி செய்திய ஆவணப்படுத்தி இருக்கும் போல :-))
//இதோ எனக்கே காலின்ஸ் தவிர முழுப்பெயர் நினைவில்லை.//
எட்வின் காலின்ஸ் என நினைக்கிறேன். ஆனால் அவர் நிலவில் காலே வைக்கவில்லை. கலத்தைப்பார்துக்கொண்டார்.
பஸ் ஆல்ட்ரின் தான் அடுத்த காலுக்கு சொந்தம். நாசா திட்டப்படி ஆல்ட்ரின் தான் முதலில் இறங்க வேண்டும். ஆர்ம்ஸ்ட்ராங் அதைப்படம் எடுக்க வேண்டும். ஆல்ட்ரின் நிலவைப்பார்த்து கொஞ்சம் ஷாக் ஆகி உட்கார்ந்துட்டாராம் அந்த கேப்பில ஆர்ம்ஸ்ட்ராங் குதிச்சு குட்டைய குழப்பிட்டாராம்..
இதனால் நிலவில் கால் வைத்த முதல்ல் நபர் என்ற பெருமைப் பறிபோனதால் ஆல்ட்ரின் மனம் உடைந்து குடிக்கு அடிமை ஆனதாக செய்தி.நிலாவுக்கே யாரும் போகலை எல்லாம் உடான்ஸ் என்று கூட சொல்கிறார்கள்.
//யூத டயஸ்போரா,நீலகண்ட சாஸ்திரி,நசரேயனியன் கிறுஸ்தவர்கள்,மலபார் சிரியன் கத்தோலிக்கர்கள்,தோமா என்று Antiques செய்திகளை எங்கேயிருந்து புடிக்கிறீங்க.தெரிஞ்சா நாங்களும் யாருக்காவது எதிர்ப்பின்னூட்டம் போட பயன்படுமில்ல?//
இதெல்லாம் டாவின்சி கோட் படிச்சபோ என் பங்குக்கு நெட்ல தேடினது.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரினு சுஜாதா கதைல அடிக்கடி மேற்கொள் காட்டுவார் சர் என்ன தான் அவர் சொல்றார்னு பார்க்க படிச்சது.
//நாமளே கணக்குப்பிள்ளையத்தான் பிரைம் மினிஸ்டராக்கியிருக்கிறாம்!//
இது கல்லுப்பிள்ளையார் உலகமே ரெண்டா உடைஞ்சாலும் ,சோனியா சொன்னா தான் ரிஆக்ட் செய்வார் :-))
//யாரங்கே!கபில் சிபலா!நானில்ல...நானில்ல...வவ்வால்தான்:)//
பத்த வைச்சுட்டிங்களே ராஜ் :-))
வவ்வால்!நீங்க தொடுத்த ஐன்ஸ்டீன் கடிதத்தைப் பார்த்தேன்.கூடவே அணுகுண்டு கிரியா ஊக்கியாக ஐன்ஸ்டீன் கடிதம் மட்டுமல்ல அவரது புகழ்பெற்ற ரிலேட்டிவிட்டி தியரியல்லவா அணுகுண்டுக்கு அடிப்படை அவர் நேரடியாக குண்டு தயாரிப்பதில் ஈடுபடாவிடிலும்.
In 1905, as part of his Special Theory of Relativity, he made the intriguing point that a large amount of energy could be released from a small amount of matter. This was expressed by the equation E=mc2 (energy = mass times the speed of light squared). The atomic bomb would clearly illustrate this principle.
கல்யாண சமையலில் எத்தனை பேர் சமைக்கிறாங்க?சமையலோட ருசிக்கு பேர் யாருக்கு:)
Post a Comment