Followers

Tuesday, January 17, 2012

ஆதாமிண்டே மகன் அபு + பழேரி மாணிக்யம்

ஜார் மன்னர்களின் வாழ்க்கை, நிக்கோலஸ்,ரஷ்புடின்,லெனின்,ரஷ்ய புரட்சிஅமெரிக்க உள்நாட்டுப் போர்,ஹிரோசிமா என நிறைய தலைக்குள் சுற்றுவதால் பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த பதிவில் இந்திய திரைப்பட வரிசையில் கேரள அரசின் பரிசு பெற்ற இரண்டு மலையாளப் படங்களை கதைத்து விட்டு விக்கிபீடியா மாதிரி யாரும் ஆட்டத்துக்கு குறுக்கே யாரும் வராமலிருந்தால் மீண்டும் ஆங்கில திரைப்படங்களை நோக்கி பார்வையை செலுத்தலாம்.

திரைப்படத்துக்கும்,விக்கிபீடியாவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்க கூடாது.சிலர் விகடன்,குமுதம் தரும் மார்க் பார்த்து தமிழ்ப்படங்கள் பார்க்குற மாதிரி இப்பொழுது ஆங்கிலத்தில் தேர்வு செய்த படங்களை பார்த்து விட்டு சில சமயம் புரியாத ஆங்கில டயலாக்,கதை பற்றியெல்லாம் ஓர் பார்வை பார்த்து அசைப் போடுவது வழக்கமாகி விட்டது.பதிவுகளில் பகிர்வதற்கும் கூட சந்தேகங்களுக்கான உதவி விக்கிபீடியாவே. எனவே விக்கிபீடியா பற்றி சிறிய முன்னுரை சொல்லி விட்டு திரைப்படப் பார்வைக்குப் போகலாம்.

அரேபிய இலையுதிர் காலத்துக்கு இணைய தளமும் ஒரு காரணம் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இல்லாவிட்டால் டுனிசிய,எகிப்திய புரட்சிகள் சாத்தியமாகியிருக்காது அல்லது புரட்சிகள் இன்னும் கால அவகாசம் கேட்டிருக்கும்.

கட்டுபாடற்ற இணைய தளம் வேண்டுமென சமூக கருத்துக்கள் பதிப்பிக்கும் தளங்கள்,பத்திரிகைகள்,சுதந்திர பேச்சு பிளாக்குகள், விக்கிலீக்ஸ், ஹேக்கர்கள், டோரன்ட்,முகநூல்,தட்டர் எனும் ட்விட்டர் முக்கியமாக கூகிள் போன்றவை ஒரு பக்கமும்,

தங்கள் உரிமைகள் மீறப்படுவதாக திரைப்பட,இசைத்துறை,மென்பொருள் நிறுவனங்கள்,வயது வந்தோருக்கு மட்டுமுள்ள ரகசியங்கள் குழந்தைகளுக்கும் போய் சேருகிறதென்று கவலையான பெற்றோர்கள்,

இவற்றை விட கொடுமையாக தங்களது ஊழல் வண்டவாளங்கள் பொதுப் பார்வைக்கு வந்து விடுகிறதே என்று ஊழல் அரசியல்வாதிகள்,ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்குபவர்கள என்று மறுபக்கமும் என இணைய தளத்தின் சேவைகள் குறித்தான இரு விதமான கருத்து சார்பாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இரு தரப்புமே விரும்பும் விக்கிபீடியா போன்ற சாது தளம் கூட அமெரிக்காவின் பைரசி சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுத்து நாளை ஒரு நாளை(18 புதன் 2012) அடையாள எதிர்ப்பாக தனது தளத்தை இருட்டடிப்பு செய்கிறது.கருத்துரிமைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் விக்கிபீடியாவுடன் இணைந்து கொள்வோம். 

முந்தைய மட்டாஞ்சேரியும்,ஐன்ஸ்டீனும் பதிவில் கேரளத்தவர்கள் ஆவணப்படுத்தலில் சோடை போனவர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக பழேரி மாணிக்யம் என்ற பெண்ணின் கொலை பற்றிய நிகழ்வு நாவலாக,நடிகர் மம்முட்டி நடித்த அதே படத்தின் பெயரையும் குறிப்பிடலாம். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேரூன்றுவதற்கும் அதற்கு முன்பு நக்சல்பாரி இயக்கத்தின் பாதிப்பு இருந்ததற்கு காரணம் என்பதற்கு விடையாக கூட பழேரி மாணிக்யம் கதை அமையலாம்.காரணம் நிலச்சுவான்தார்கள் பெண்களை தமது காமப்பசிக்கு இறையாக்கி விட்டு அல்லக்கைகள் மூலமாக அப்பாவிப் பெண்ணை கொலை செய்வதை சொல்லும் கதை.இடைச்செறுகலாக மம்முட்டி மூன்று கதாபாத்திரம் வேண்டுமென்று அடம் பிடித்தாரோ என்னவோ ஒரு தளத்திலிருந்து இன்னொரு களத்துக்கு மாறி பின் கதை சொல்லி துப்பறிவது மாதிரி முடிந்து விடுகிறது.
 
ஒப்பீடாகப் பார்த்தால் தமிழகத்து கிராமப்புறங்களில் கூட நிலச்சுவான்தார்களின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்தே விடப்பட்டும் கிராமத்து போலிஸ்,பஞ்சாயத்து என்ற பாதுகாவலில் தப்பித்துக்கொள்கிறார்கள்.இந்த வன்முறைகளை பொதுவெளிக்கு கொண்டு வராமல் விவேக்கின் நகைச்சுவை மூலமாக கொச்சையாகிப் போவது தமிழ் சினிமாவின் இன்னொரு அவலம்.
 
தமிழில் புத்தக இலக்கியமாக நிறைய வந்துள்ளன.மெரினா பீச்சு நீளத்துக்கு நம்மிடம் எழுத்தாளர் பட்டியல் இருப்பதால் பெயர் சொல்வானேன்?
புனைவுகள்,சிறுகதைகள்,நவீனம்,நாவல்,துப்பறி,நகைச்சுவை,நாடகம்,வரலாறு என நிறையவே புத்தகப் பதிவுகள்.குற்றம்,நடந்தது என்ன என தற்போதைய நவீன தொடர் தொலைக்காட்சி செய்திகளுக்கோ பஞ்சமில்லை..

மம்முட்டியான் இறந்த காலத்தின் ஒரு மனிதனை ஆவணமாக அல்லாது பதிவு செய்துள்ளது.மம்முட்டியானை விட வீரப்பன் கதை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் அரசு குற்றப்பத்திரிகை ஆவணம் எனலாம். ஆனால் தமிழகத்தில் உண்மைக்கதையின் துவக்கவுரை யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது?ஒருவேளை நல்லதங்காள் வாய்ப்பாட்டு வழி வந்த கதையாக இருக்கலாமோ?.ஆனால் அரசு ஆவணப்படுத்தலாக எதுவென்று யோசித்தால் பொதுப்புத்தியில்,அறிந்த தகவல்களில் நானறிந்து தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

கேரளத்து எழுத்து வாசமோ அல்லது தான் சார்ந்த காலச் சூழலில் எழுத்தில் சொல்லியது பின் ஆவணமாகிப் போனது போல் கேரள காவல்துறையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒரு நாவலாகவும் பின் அதே திரைப்படப் பெயரில் பழேரி மாணிக்யம்-ஒரு பதிரகொலபாதகத்தின் கதா.திரைப்படத்தின் கதை  மம்முட்டியின் மூன்று வேட ஆசையில் தொடர்ச்சியாக இல்லாமல் போனாலும்.கதையின் மையப்புள்ளியான சோக்கு நிலவான் ஹாஜியின் நடிப்பும் அந்தக் கால கட்டத்து கதையின் காரணமாக கேரள மாநில விருதைப் பெற்ற படம்.ஸ்வேதா மேனனின் பிளாஷ்பேக் கிளுகிளுப்பு காட்சிகள் தவிர முதிய வயதாகிப் போன கால கட்டத்து நடிப்புக்காக ஸ்வேதாவுக்கும் கேரள மாநில விருதை வாங்கிக் கொடுத்த படம்.

இப்ப கேரளாவிலிருந்து இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஆதாமிண்டே மகன் அபு கதைக்களத்திற்கு செல்லலாம்.கேரள மலபார் பகுதியில் வாழும் அபு,ஆயிஷம்மா என்ற இரு வயதானவர்கள் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே அதிகம் தலை காட்டியிருந்த சலீம் குமாருக்கு நடிப்பதற்கு நல்ல தீனி.கூடுதலாக ஜரினா வஹாப்பின் இயல்பான நடிப்பு.யதார்த்தமான,நல்ல இஸ்லாமியன் எப்படியிருப்பான் என்பதையும் இஸ்லாமிய,இந்து,கிறுஸ்து மத நம்பிக்கை  மனிதர்களை அவர்களது பெயர்ச் சொல்லோடும் அபுகாவின் ஹஜ் கனவு, வியாபார,நட்பு என்ற கோட்டுக்குள் கொண்டு வந்து கட்டிப்போடுகிறது.

கதையோடு இணைந்த மது அம்பட்டின் காமிரா.(Arriflex D-21 Camera 35mm film ).சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்திற்கான அனுபவம் இயல்பான எளிமை கொண்ட இஸ்லாமிய சம்பிரதாயங்களோடு 1970-80களில் வாழ்ந்த எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய பொருளாதாரம் சார்ந்த இந்திய அனுபவம் எனலாம்..அபுவின் ஹஜ் கனவிற்கு பணம் தந்து உதவ விரும்பும்,கோபி மாஸ்டர் என்ற பள்ளி ஆசிரியர்,ஹஜ் பயணத்திற்காக ,ஜான்சன் என்ற மரமில்லின் உரிமையாளரிடம் வளர்த்த பலாமரத்தை விற்று முன்பணம் பெறுவதும் பின் பலாமரம் சொத்தை மரமென்றும் இருந்தாலும் சொல்லிய பணத்தை தான் தரவிரும்புவதாக ஜான்சன் என்ற மர அறுவை மில் உரிமையாளர் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இணைவதை கோடிட்டு காட்டுவது மட்டுமே படத்தின் அடிப்படை. கருப்பொருள்.எளிமையான யதார்த்தமான கதாபாத்திரங்களோடு போட்டி போடுவது மது அம்பட்டின் காமிராக் கண்களே.தலைக்கு மேல் உயரத்தில் பலாப் பழம்.......ழ....ழ....ழ!!,

அம்மிக்கல்லு மேலே கூட இரண்டு பலாப்பழத்தை தேமேன்னு உட்கார வைத்த நேர்த்தி,கோழிகள் இயல்பாய் சுத்துவது (பாரதிராஜா புடிக்காத கோழியான்னு நினைவுக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக் கோழி ஓடுற கோழி!கமலுக்கு ஓட்டம் காண்பிக்கிற கோழி!கேரளக் கோழி அம்போன்னு எற பொறுக்குது!அபு அவர் பாட்டுக்கு ஹஜ் கதை பேசிகிட்டிருக்கார்)  

திரைக்கதை விபரிப்பு அவ்வளவு யதார்த்தம்.கலையும்,இலக்கியமும் அழகியல் சார்ந்தவை.அழகியலை எங்கிருந்தாலும் ரசிப்போம்.நல்ல கலையும், இலக்கியமும் மனித வாழ்வை மேம்படுத்த உதவுபவை.அபுவோட கதை அந்த வகை.அப்ப டேம் 999 கலை வரிசையில் சேருமா?..

16 comments:

Riyas said...

ஆதாமிண்டே மகன் அபு Classic Malayala Cinema..

Bibiliobibuli said...

கொஞ்ச நாளா அமெரிக்காவிலும் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் சில வழிவகைகள் இணையத்தின் வழி வரலாம் என்று படித்தேன். இப்ப என்ன நிலையோ தெரியவில்லை. அதை தொடரவேண்டும்.

கோவி.கண்ணன் said...

சிறப்பான எழுத்து நடையுடன் தொகுப்பு அருமை.

ambuli 3D said...

arumai nanbare

http://ambuli3d.blogspot.com/

Amudhavan said...

ஜனநாயகம், தனித்தனிக்கூத்து, ஒண்ணுமே புரியலே, நீங்க நல்லாத்தானே இருந்தீங்க...இந்த விவகாரம் எல்லாம் முடிந்துவிட்டதா? எல்லாருக்கும் விளங்கிவிட்டதா, அல்லது நீங்கள் எல்லாருக்கும் விளக்கிவிட்டீர்களா?

ராஜ நடராஜன் said...

//Riyas said...

ஆதாமிண்டே மகன் அபு Classic Malayala Cinema..//

ரியாஸ்!முதல் வருகைக்கு நன்றி.மலையாளப்படத்தின் கிளாசிக்கல் என்பதோடு மானுடம் போற்றும் மையக்கருவே என்னை அதிகம் கவர்ந்தது.

ஹேமா said...

இந்தப் படம் பார்த்திருந்தேன் நடா.அரசியல் தெரியாது.ஆனால் படத்தின் ஓட்டம் மொழி தெரியாமலே சலிப்பில்லாமல் பிடிச்சிருந்தது !

ராஜ நடராஜன் said...

//Rathi said...

கொஞ்ச நாளா அமெரிக்காவிலும் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் சில வழிவகைகள் இணையத்தின் வழி வரலாம் என்று படித்தேன். இப்ப என்ன நிலையோ தெரியவில்லை. அதை தொடரவேண்டும்.//

ரதி!அமெரிக்காவின் பைரசி சட்டம் மேம்போக்காக மென்பொருள்,இன்டலக்சுவல் பிராப்பர்ட்டியாளர்களைப் பாதுகாக்க வந்த சட்டம் மாதிரி மேலோட்டமாகத் தெரிந்தாலும் அதன் உள் சரத்துக்கள் ஒரு தளத்தை முடக்கும் அதிகாரம் FBIக்கு உள்ளதாக சட்டத்துக்கு எதிரானவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

சீனாவின் பொருளாதார கம்யூனிசத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் சமூக கலந்துரையாடல் தளங்களை சீனா ஆதரிப்பதில்லை.

இந்தியாவிலோ அரசியல்வாதிகளின் முகங்கள் வெளிப்படுத்துவதை இணைய தள இன்சார்ஜ் கபில் சிபல் விரும்புவதில்லை.அன்னாஹசாரேவுக்கான ஆதரவும் எதிர் விமர்சனங்களும் பொது கலந்துரையாடலில் வைப்பதை ஆளும் காங்கிரஸ் விரும்பவில்லை.

இப்படி ஒவ்வொருவரும் தமது நலன்கள் பாதிப்பதால் மட்டுமே புது வரைவுகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

//கோவி.கண்ணன் said...

சிறப்பான எழுத்து நடையுடன் தொகுப்பு அருமை.//

கோவி!வணக்கம்.நீங்க ஒரு பதிவு தள்ளிப் பார்த்திருக்கலாம்:)

வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//ambuli 3D said...

arumai nanbare

http://ambuli3d.blogspot.com/

அம்புலி!நாந்தான் வாரேன்னு சொன்னேனே!நினைவு படுத்தலுக்கு நன்றி:)

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

இந்தப் படம் பார்த்திருந்தேன் நடா.அரசியல் தெரியாது.ஆனால் படத்தின் ஓட்டம் மொழி தெரியாமலே சலிப்பில்லாமல் பிடிச்சிருந்தது !//

ஹேமா!இரண்டு படம் அலசியிருக்கிறேன்.நீங்க எந்தப் படத்துக்கு பின்னூட்டம் போடுறீங்க!

மலையாளம் ஒன்றும் அப்படி கடினமில்லை.நம்மிடமிருந்து ஓடி அரபிக்கடல் தண்ணி குடிச்சதுல நாக்கு கொஞ்சம் கொள கொளன்னு ஆயிடுச்சு.அவ்வளவுதான்:)

கேரளப்பெண்கள் முண்டு உடுத்துவதில் ஆடைக்கலாச்சாரத்தில் இலங்கையின் பாதிப்பும் கூட இருக்குது என்பது உங்களுக்கு கூடுதலான தகவல்.

வவ்வால் said...

ராஜ்,

இந்த வாரம் திரைப்பட வாரமா? :-))

வரிசையா திரைப்படங்கள் தரவிறக்கி வச்சுட்டிங்களா? நல்லது தான

//சிலர் விகடன்,குமுதம் தரும் மார்க் பார்த்து தமிழ்ப்படங்கள் பார்க்குற மாதிரி இப்பொழுது ஆங்கிலத்தில் தேர்வு செய்த படங்களை பார்த்து விட்டு சில சமயம் புரியாத ஆங்கில டயலாக்,கதை பற்றியெல்லாம் ஓர் பார்வை பார்த்து அசைப் போடுவது வழக்கமாகி விட்டது.பதிவுகளில் பகிர்வதற்கும் கூட சந்தேகங்களுக்கான உதவி விக்கிபீடியாவே.//

கூடவே ஐம்டிபி தளமும். நீங்க சொல்றதுல ஏதோ உள்குத்து இருக்காப்போல தெரியுதே. ஒலகப்பட விமர்சனம் எழுதுற மக்கள் இப்படித்தான் செய்றாங்க, ஆனா சொல்லிக்கொள்வதில்லை என்பதை போட்டு தாக்குறிங்களோ :-))

ஹி..ஹி நான் பெரும்பாலும் படிச்சுட்டு அப்புறமா பார்க்கலாம்னு தேர்வு செய்வேன்.மிஷன் இம்பாசிபில்-கோஸ்ட் ப்ரோடோகால் கு கூட முதலில் விக்கி, ஐம்டிபினு பார்த்து வச்சுக்கிட்டேன்.இல்லைனா யார் வில்லன், ஹீரோனு சில படங்களில் தெரிய மாட்டேன்குது. :-))

இன்னிக்கு விக்கி தளம் போன கறுப்பு அடிச்சு வச்சு இருக்கிறாங்க , இதுக்கு பேரு தான் பிளாக் அவுட் ஆஹ்.

உணர்ச்சிக்கு ஒன்று , உணர்வுக்கு ஒன்று என ரெண்டுப்படம் பார்த்திங்களா :-))

பழவெறி மாணிக்கம்னு படிச்சுட்டேன் படத்து பேர என்ன இப்படிலாம் பேரு வைக்கிறாங்களேனு திரும்ப படிச்சேன் பேர.ரெண்டில் ஆதாம் படம் பத்தி மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கேன். எதுவும் பார்க்கவில்லை.(உங்க நேரம்)

//மம்முட்டியான் இறந்த காலத்தின் ஒரு மனிதனை ஆவணமாக அல்லாது பதிவு செய்துள்ளது.மம்முட்டியானை விட வீரப்பன் கதை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் அரசு குற்றப்பத்திரிகை ஆவணம் எனலாம். ஆனால் தமிழகத்தில் உண்மைக்கதையின் துவக்கவுரை யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது?ஒருவேளை நல்லதங்காள் வாய்ப்பாட்டு வழி வந்த கதையாக இருக்கலாமோ?.ஆனால் அரசு ஆவணப்படுத்தலாக எதுவென்று யோசித்தால் பொதுப்புத்தியில்,அறிந்த தகவல்களில் நானறிந்து தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.//

தமிழ்சினிமா தனது துவக்கத்தை ஆவணப்படுத்துதலாகவே ஆரம்பித்தது எனலாம். அப்போ எல்லாம் கதைக்கு ரூம் போட்டு யோசிக்காமல் மக்களிடையே காவியமாகவும், நாட்டார் பாடல்களாகவும் புகழ்ப்பெற்றவைகளயே திரைப்படம் ஆக்கினார்கள்.

ஆரிய மாலா, காத்தவராயன், நல்ல தங்காள், மதுரை வீரன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன் இன்ன பிற என.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் தமிழ் சினிமாவின் வணிக சின்னங்களா உருமாறிய போது அவர்களுக்காக புனைவுகள் உருவாக்கப்பட்டது. மதுரை வீரனில் எம்ஜிஆர் மாறு கால் ,கை வாங்கப்பட்டு இறப்பது போல் பின்னாளில் கதை வைக்க முடியாத சூழல் மாறியது. ஏன் எனில் எம்ஜிஆர் இறப்பது போல் வைத்தால் ரசிகர்கள் விட மாட்டார்கள்.

அரசு ஆவணம் என்றால் எந்த அரசு ஆவணத்தை சொல்கிறீர்கள். மன்னராட்சி அல்லது பிரிட்டீஷ் ஆட்சி. மன்னர் ஆட்சி எனில் குலோத்துங்கன் -2 இன் மாநியத்துடன் ,அவரது அமைச்சராக இருந்த சேக்கிழார் தொகுத்த பெரிய புராணமே எனக்கு தெரிந்து அதிகாரப்பூர்வமான அரசு ஆவணம்.63 நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் சென்று தொகுத்துள்ளார்.

பின்னர் இபின் பத்துதா
பயண குறிப்புகள்*, மாயவரம் வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்(இதுவும் ஒரு கொலைக்கதை தான்), பிரிட்டீஷ் இந்தியாவின் இறுதி காலத்தில் என்.எஸ்.கே, பாகவதர் சம்பந்தப்பட்ட லட்சுமிகாந்தம் கொலை வழக்கு என நிறைய இருக்கு.

யுடுயுபில் ஸ்வேதா மேனன் கிளு கிளி சீன் போடுறாங்களே அது இந்த படமானு தெரியலை.பிட் பார்க்கும் பழக்கம் யுடுயுப் மூலம் இன்னும் தொடருது போல :-))

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

ஆதாமின்ட மகன் அபு போன்ற பாரத விலாஸ் டெம்ப்ளேட் கதைகள் எப்போவும் இந்திய சினிமாவில் வந்து கொண்டே இருக்கும் சாகாவரம் பெற்ற கதை தளம். முக்கோண செண்டிமெண்ட் கதை (ஐங்கோணம், அறுங்கோணம் கூட உண்டு) அப்போ அப்போ ஊருக்கு, மொழிக்கு ஏற்ப வடிவம் மாறி வருவது வழக்கம்.

படம் கொஞ்சம் பழைய காலத்தில் நடைப்பெறுவதாக ஏன் காட்டப்படுகிறது என்று தொ.கா பார்க்கும் போது எழும்பியது எனக்கு. அதுக்கு எதாவது காரண , காரியம் இருக்கா?

ஏன் எனில் ஹஜ் மாநியம் என ஒன்று மத்திய அரசாலும், ஆங்காங்கே மாநில அரசுகளும் மாநியம் தருகின்றன. இதெல்லாம் நிகழ் காலம். இதனை தவிர்த்து கஷ்டப்பட்டு செல்வதாக காட்ட கதையை முற்காலத்திற்கு கொண்டு போயிட்டாங்களோ.

இந்திய அரசு தரும் மானியம் 300 கோடி , பலன் பெறுவோர் 1.25 லட்சம் பேர் , தலா 24000 ரூபாய் கிடைக்கும்.(மாநியம் வேண்டாம் கையில காசா கொடுக்க சொல்லி இதுக்கும் ஒரு போராட்டம் நடக்குது, ஏர் இன்டியாவில போகனும் மாநியம் பெற) அப்புறம் அந்த அந்த மாநில அரசுகளைப்பொருத்து. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முழு செலவும் அரசால் ஏற்கப்படுகிறது.

இதெல்லாம் பார்த்துட்டு காவியங்கள் சும்மா இருக்குமா, கைலாஷ் யாத்திரைக்கும் அரசு மாநியம் தரவேண்டும்னு ஒரு கேஸ் போட்டு இருக்காங்க.

ஹி ..ஹி வழக்கம் போல படத்த தவிர எல்லாம் பேசுகிறேன்(படம் டி.வில போட்டா பார்த்துட்டு சொல்கிறேன்)

ராஜ நடராஜன் said...

//Amudhavan said...

ஜனநாயகம், தனித்தனிக்கூத்து, ஒண்ணுமே புரியலே, நீங்க நல்லாத்தானே இருந்தீங்க...இந்த விவகாரம் எல்லாம் முடிந்துவிட்டதா? எல்லாருக்கும் விளங்கிவிட்டதா, அல்லது நீங்கள் எல்லாருக்கும் விளக்கிவிட்டீர்களா?//

தாமதமாக உங்கள் பின்னூட்டம் கண்டேன்.

நட்சத்திர வாரம் கொண்டாடி பொங்கலும் கொண்டாடி முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எல்லோருக்கும் விளங்கி விட்டாலோ விளக்கிவிடும் திறன் இருந்தாலோ பிரச்சினையே இல்லீங்களே:)

பார்வையுள்ளவர்கள் பார்க்க கடவர் என்ற பைபிள் வாசகமே நினைவுக்கு வருகிறது.

ராஜ நடராஜன் said...

வவ்!சினிமாக் கதை எங்கே சொல்ல வுடுறாங்க.அதுக்குள்ளேயே ஆட்டத்தைக் கலைச்சு விட்டுட்டாங்க.

தரவிறக்கமெல்லாம் கிடையாது.Streaming!வேணும்ன்னா பார்க்க வேண்டியது.தூக்கம் வந்தா நாளைக்கு வாரேன்னு சொல்லி மறுநாள் ரெஸ்யூம் செய்யும் புது தொழிட்நுட்பம்.தரவிறக்கம் நேரம் பிடிக்கிறதால நான் டோரன்ட் பக்கம் கூட தலை வைத்துப் பார்ப்பதில்லை.நிறைய டிவிடி வேற வாங்கினேன்.போர்,பைபிள்,திரில்லர்,ரொமான்ஸ்,கார்ட்டூன்னு நிறைய ஜெனர்ல.நிறையப் படங்களை பகிர தவறிவிட்டேன்.

உள்குத்து எதுவும் கிடையாது.அவரவர் ரசனை,டாக்குமென்ட் வசதிக்கு தகுந்த மாதிரி படம் பார்ப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்தானே.ஆனால் படத்தோட நான் ஐம்டிபி,விக்கியெல்லாம் ஒரு லுக் விடவே செய்கிறேன்.

மிஷன் இம்பாசிபில்-கோஸ்ட் புரடாக்கல் புது வெர்சன் இல்ல!தகவலுக்கு நன்றி.இந்தி சேனல்களில் அனில் கபூரையும்,டாம் குருஸையும் சேர்த்து காண்பிக்கும் போது யார் வில்லன்,யார் ஹீரோ சந்தேகம் வரவே செய்கிறது:)

வெள்ளையா இருக்குறதுதான் பிளாக் அவுட்:) பத்திரிகையின் முதல் பக்கத்துல செய்திகள் ஒன்றும் போடாமல் விட்டு விடுவது!

படம் பார்க்காமலே இவ்வளவு நீளத்துக்கு நூல் விடுறீங்க!படம் பார்த்திருந்தால் என் பாடு திட்டாட்டம்தான்:)

உணர்ச்சிக்கு ஒன்று!உணர்வுக்கு ஒன்று சிரிப்புல உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே:)

ஆரியமாலா துவங்கி கட்டபொம்மன் வரை நீங்க சொன்னது வரலாற்று ஆவணம்.நான் சொல்வது தமிழகத்தில் அரசுத்துறை போலிஸ் ஆவணமாகப் பதிவான குற்றம் எது?வாஞ்சி நாதனா!அல்லது அதற்கும் முந்திய நிகழ்வு எதாவது!நினைவுபடுத்துங்கள்.

ஸ்வேதா மேனன் கிளுகிளு யூடியூப்ல வேறு கிடைக்குதா!சொல்லவேயில்ல:)

நான் கேரள படங்களை தேர்ந்தெடுப்பது அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கியதா,லால் ஏட்டன்,மம்முட்டி படம் ஓஹோன்னு பேசப்படுதா,கேரள அரசு விருது பெற்றதா என்ற அளவீடுகளில் மட்டுமே.

தொடர்ச்சிக்கு அப்புறமா வாரேன்.யோசிச்சு பதில் சொல்றேன்.

ஹேமா said...

ஆதாமிண்டே மகன் அபு...தான் பார்த்தேன் நடா.கேரள ஆடைகள் மட்டுமில்லை உணவு முறைகள்,சில வழக்குப் பேச்சு யாழ்ப்பாணப்பேச்சு வழக்கு இருக்கு.உதாரணமா பறையிறது,மோனை.

இதைவிட நான் கவனித்தது சிங்களப் பெண்களின் ஆடையும்,கதகளி சிங்களவர்களின் பாரம்பரிய நடனத்தை ஒட்டி இருக்கும்.
கவனிச்சுப் பாருங்கோ இனி !