Followers

Sunday, January 15, 2012

திரைப்பட ரசனை-டாக்டர் ஷிவாகோ(Doctor Zhivago)

திரையரங்கிலும்,தொலைக்காட்சியிலும் பார்க்க நினைத்து இயலாமல் நேற்று விலாங்குமீனாக வந்து மாட்டிக்கொண்ட ஆங்கில திரைப்படம் டாக்டர் ஷிவாகோ.ஜார் மன்னரின் ஆட்சி முடிவையும்,கம்யூனிசப் புரட்சியின் துவக்கத்தையும் மெல்லிதாக தொட்டு கம்யூனிச புரட்சியால் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை எப்படி பாதிக்கிறதென்பதை சொல்லும் படம்.சம காலத்து ஒப்பீடாக ஈழத்தமிழர்கள்,ஈராக்கியர்கள்,லிபியர்கள்,சூடானியர்கள் என புலம் பெயர்ந்தும்,அகதிகளாகவும் இடம் மாறுவதால் தனது வாழ்வின் இயல்புகள் தொலைத்து புதிதாகவே வாழக்கற்றுக்கொள்கிறார்கள்.

தமிழ்ப் படங்கள் போல் மரத்தை சுற்றிய முந்தைய காதல்(1965 வருட காலத்து ஒப்பீட்டுக்காக), பாடல்கள், நகைச்சுவையென்று மொத்த கூட்டாக இல்லாமல் கதையை நோக்கிய நகர்வாக இருப்பதால் பெரும்பாலும் 90 நிமிடங்களில் ஒரு ஆங்கிலப்படக் கதையின் நிகழ்வை சொல்லி விடமுடிகிறது.தமிழ்ப்படங்களின் இலக்கணமும் இல்லாமல்,ஆங்கிலப்படத்தின் 90 நிமிட வரையறைகளையும் மீறி 3மணி 20 நிமிடங்கள் நீண்ட கதைவெளிக்கு கொண்டு செல்கிறது படம்.ரஷ்யாவின் குளிருக்கு உடுத்தும் கம்பளி உடைகளின் நேர்த்தியாகட்டும்,ஐஸ் கட்டியும்,அதன் நடுவில் வீடும்,புகை விட்டுக்கொண்டு செல்லும் ஜிக்கு புக்கு ரயிலும்,இசையும்,காமிராவும் மனதை வேறு ஒரு தளத்திற்கு நிச்சயம் கொண்டு செல்கிறது.
 ரசனைப் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 1965ம் ஆண்டின் ஐந்து ஆஸ்கரை அள்ளிக்கொண்ட படம்.மெக்னாஸ் கோல்ட் புகழ் ஒமர் செரிஃப் (Omar Sharif) ஷிவாகோவாக இளமை ததும்ப நடித்த(இப்ப பெருசு)  ஜூலி கிறிஸ்டி லாரா, ஜெரால்டின் சாப்லின் டான்யா  பெயர் வாங்கித் தந்து லாரன்ஸ் ஆஃப் அரேபியா போன்ற வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்கிய டேவிட் லீன்(David Lean|) இயக்கிய படம்.
காம்ரேட் தோழர்களுக்கு லியோ டால்ஸ்டாயும்,தாஸ்தாவஸ்கியும் கம்யூனிச இலக்கிய வரிசையில் முக்கியமானவர்கள்.மாறாக போரிஸ் பேஸ்டர்னக் (Boris Pasternak) என்ற கவிஞர்,எழுத்தாளர்  கம்யூனிசம் மொத்த சமூகத்துக்கு செய்த நலன்களை விட தனிமனித வாழ்வை எப்படி தொலைத்ததென்று நாவல் எழுதி ஸ்டாலினையும்,கம்யூனிசத்தையும் இலைமறை காயாக விமர்சித்ததால் நோவி மிர் என்ற இலக்கிய வட்டத்திலிருந்து(literary journal Novy Mir) நிராகரிக்கப்பட்டவர்.

இதை அறிந்து 1957ல் இத்தாலிய புத்தக வெளியீட்டாளரும்,பில்லியனருமான ஜியாஜியகோமா பெத்ரனெல்லி(Giangiacomo Feltrinelli) என்பவர் டாக்டர் ஷிவாகோ நாவலை ரஷ்யாவிலிருந்து இத்தாலிக்கு கடத்தி வந்தார்.ரஷ்ய பிரஸ்டெரிக்கா கம்யூனிச அரசு புத்தகத்தை வெளியிட பல தடைகள்  செய்தும் பலனில்லாமல் ஒரே நேரத்தில் ரஷ்ய,இத்தாலியப் பதிப்பாக டாக்டர் ஷிவாகோ நாவல் வெளிவந்தது..இதனால் ஜெயலலிதா சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய மாதிரி பெத்ரென்னல்லியும் இத்தாலி கம்யூனிச அங்கத்துவம் இழந்தார்.                (First Italian Version)                  
பனிப்போர் காலத்து ரஷ்யாவுக்கு எதிரான பொன்னான வாய்ப்பை அமெரிக்கா தவற விடுமா என்ன?அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பிரிட்டனும் கூட சேர்ந்து (M16 & CIA))புத்தகத்தை சரியான நேரத்தில் நோபல் கமிட்டிக்கு அனுப்பி விட்டார்கள். 1958 அக்டோபர் 23ம் தேதி போரிஸ் பேஸ்டர்னக் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(First Russian Version)அவரை நோபல் பரிசைப் பெற விடாமல் கம்யூனிச பிலிட்பரோவின் நேரடிக் கட்டளையால் கேஜிபியால் போரிஸின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு நோபல் பரிசு வாங்கப் போனால் ரஷ்யாவுக்கு திரும்பி வரமாட்டாய் என்ற அச்சுறுத்தலிலும் நாட்டை விட்டுப் போக மனமில்லாமலும் தன்னால் நோபல் பரிசைப் பெற இயலாது என்று நோபல் கமிட்டிக்கு கடிதம் எழுதி விட்டார் போரிஸ்.கம்யூனிச எழுத்தாளர்கள் போரிஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற வற்புறுத்தலில் அப்போதைய பிரிமியராக இருந்த நிகிட்டா செர்ஜியேவிச் குருசேவ்(Nikita Sergeyevich Khrushchev 1958-1964)க்கு நேரடியாக கடிதம் எழுத ஜவர்ஹலால் நேருவின் தலையீட்டால் போரிஸ் பேஸ்டர்னக்  நாடு கடத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்.1960,மே மாதம் 30 கான்சரால் இறந்த பின் 1988ம் வருடம் அவரது மகன் ஸ்டாக்ஹோம் செல்ல அனுமதிக்கப்பட்டு நோபல் பரிசு பெறப்படுகிறது.
 
(I won the Nobel Prize for literature. What was your crime?)போரிஸ் பேஸ்டர்னக்கை நையாண்டி செய்த புலிட்சர் பரிசை தட்டிச்சென்ற கார்ட்டூன்.
பதிவுலகில் ஆப்பு,ஆப்புங்கிறாங்களேன்னு முழிக்கும் புதுமுகங்களுக்கு படவிளக்கத்தோட இதுதானுனுங்க ஆப்பு:)

இனி கடுகு சைஸில் 3.20 மணி நேர கதையின் சுருக்கம்.
ஷிவாகோவின் ஒன்று விட்ட தமையன் சோவியத் ரஷ்யாவின் ரகசிய போலிசாக லாரா என்ற பெண் மூலமாகப் பிறந்த குழந்தை வளர்ந்த பின் அவரது பின்புலம் பற்றி விசாரிப்பதிலிருந்து கதை துவங்கி,ஷிவாகோ மருத்துவராக பணிபுரிவது,லாரா என்ற பெண்ணின் அறிமுகம்,டான்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வது,ரஷ்யப் புரட்சியின் துவக்கத்தால் ஜார் மன்னனின் வீழ்ச்சி,கம்யூனிசத்தால் மேல் தட்டு வர்க்கத்தின் வாழ்க்கை மாறிப் போவது,இடப்பெயர்ச்சி,,லாராவுடன் காதல்,கவிதை,ஷிவாகோவின் இறப்பு,பின் கதை துவங்கிய இடத்திலேயே முடிவு என ஒரு நீண்ட கதையை சொல்லி முடிக்கிறது.

இதே பெயரில் மறுவடிவாக 2010ல் திரைப்படமும்,தொலைக்காட்சி சீரியல்களும் காணக்கிடைக்கின்றன.புதிய பதிப்பையும் ஒரு முறை ஒப்பீட்டுக்காக பார்க்கவேண்டும்.இப்போதைக்கு பல தொழில்நுட்பங்கள் வந்து விட்டாலும் பழைய படங்களின் நேர்த்தி,காமிரா,டெக்னிக் கலர்(1916ம் வருடத்து இரு கலரிலிருந்து 3 கலர் பரிமாற்ற தொழில் நுட்பம்)ஈஸ்ட்மென் கலரில் கண்டு களியுங்கள் என்ற படப்போஸ்டர் கலர்(Eastman Kodak)இப்ப இருப்பது CMYK color model- நான்கு கலர் நுட்பம்) என்ற முந்தைய காமிராவின் அழகு வர்ணிக்க கண்ணதாசன்,வைரமுத்து,நம்ம பதிவுலக ஹேமா மாதிரி இருந்தால் மட்டுமே சாத்தியம்.காமிராவின் கலர் கதை சொல்லும் நேர்த்தியை பென்ஹர்,ஆல்பரட் ஹிட்சாக்கின் To catch a thief,ஷிவாகோ போன்ற பழைய படங்களில் காணலாம். நம்ம ஊர்ல பாலுமகேந்திரா நல்ல லென்சுகளை வைத்திருந்ததாக கேள்வி அறிவு.இந்த வருட ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் சென்ற ஆதாமிண்ட மகன் அபு கேரள அரசின் விருது படத்தின்  மது அம்பட்டின் காமிரா பார்க்க வேண்டிய ஒன்று.

இன்னும் சில பழைய கிளாசிக்கல் படங்களை அடுத்து சொல்ல இயலுமா என்று பார்க்கிறேன.நான் படம் பார்த்து அதிக தகவல் உதவிகள் செய்தவர்கள் கூகிள் மற்றும் விக்கிபீடியா.கூகிள் என்றதும் சீனாவுக்கு நான் பக்கத்து வீட்டுக்காரன் என்று இந்தியா இணைய கருத்(து)தடை செய்வதாகவும் கோர்ட்ல வாதாடுவதற்கு தகுதி பெற்ற ஒரே காரணத்தால் மட்டுமே இணைய அறிவுப் பிதாவாக வலம் வரும் கபில் சிபல் சமூக கருத்து பகிர்வு தளங்களை தடை செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுவதாகவும் தற்போதைய செய்திகள்.இதை இன்னும் கொஞ்சம் முன்பே செய்திருந்தால் 2G மக்களிடம் போகாமலாவது செய்திருக்கலாம்:)

19 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிக அருமையான பகிர்தல் சகோ.
தாங்களுக்கு எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

வவ்வால் said...

ராஜ்,

நீர் எதாவது ரகளையா பதிவு போடுவீர் அதை வச்சு நான் அடிச்சு ஆடலாம்னு பார்த்தா இப்படி ரசனையா பதிவுப்போட்டா எப்பூடி?

என்ன திடீர்னு கிளாசிக் மோகம் தலைவிரிக்காமலே ஆடுது. இதுவே ஒரு கிளாசிக் + கில்மா வோட படத்துக்கு விவரணை கொடுத்திருந்தா இன்னேரம் சூடாகி டாப்புல போய் குந்தி இருக்கும் பதிவு.இத்தனைக்காலம் ஆகியும் பிராபல்யம் ஆவது எப்படினு சூட்சுமம் தெரியாமலே இருக்கீரே :-))

நாம எல்லாம் கோலிவுட் கோவிந்து இந்த அளவுக்கு பார்வை வளரவில்லை.ஆனால் உங்களப்போல ஹாலிவுட் கார்மேங்கள் அடிக்கடி இந்த படம் பேரு சொல்வாங்க,சரினு நானும் விக்கில..,ஐம்டிபி னு படிச்சதோட சரி.ஆனால் நீர் படமே தேடிப்பார்த்திட்டீர்.

ஆமாம் இந்த படம் தான் தமிழ்ல டாக்டர் ஷிவானு நடிகர் திலகம் நடிப்புல வந்துச்சா? அதுல கூட மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய்னு பாட்டுக்கூட ஏசுதாஸ் குரலில் நல்லா இருக்கும்.
(நாம ஹாலிவுட் ரேஞ்சில பதிவ போட்டா இவன் எத கேட்கிறான் பாருனு புலம்புறது கேட்குது)

கபில் சிபல் ரொம்ப தான் உங்களை கடுப்பேத்துறார் போல தெரியுது :-))

அவர் இல்லை அவங்க நைனாவால கூட எதுவும் செய்ய முடியாது. அவர் அப்படி பேசக்காரணமே இணையத்தில அன்னா அன்ட் கோ பாப்புலாரிட்டி தான். சும்மா இவர் இப்படி எதுனா கொளுத்தி போட்டா மக்கள் கவனம் திசை திரும்பும்னு தான். எல்லாம் இரு கோடுகள் சித்தாந்தம் தான்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

சகோ!ராஜசேகரன்!

பணம் தேடும் வாழ்க்கையில் பொங்கல் பண்டிகைகள் போன்றவை பெரும் இழப்பே.

இந்த மாதிரி தருணங்களில் தமிழகம் உயர்ந்து நிற்கிறது.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வ்வ்!நீங்க போடறது பதிவா?பின்னூட்டமா:)நமக்கு இப்படி பின்னூட்டங்களே லட்டும்,பொங்கலும்.

முன்னாடியெல்லாம் கேசட்,டிவிடின்னு தேடிகிட்டிருக்கனும்.இப்ப மூணுமாசம்! ஆன்லைன்ல தேவையானதா தேடிக்கொண்டு வர முடிகிறது.

பிரபலம் ஆகாமல் இருப்பது சுதந்திரமான பீலிங்:)நேற்று லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதனமும்(War and Peace) பாதி பார்த்துட்டு Pauseல போட்டுட்டேன்.நெப்போலியன் போனபார்ட் காலத்துக் கதையாம்.இன்னும் கதை பிடிபடல.விக்கி அண்ணன் உதவிக்கு வருவாரான்னு பார்க்கலாம்.

யாரு!நீங்க கோலிவுட் கோவிந்து?நானே எத்தனை தேடல் தேடுறீங்களேன்னு புகைஞ்சுகிட்டிருக்கேன்:)பதிவுல ஹாலிவுட் படங்கள் விபரிச்ச ஆளு ஹாலிவுட் பாலா மட்டுமே.மனுசன் பதிவுலகிலிருந்து எஸ்கேப்.

நானுங்கூட சிவாஜியின் டாக்டர் சிவா பற்றி ஒரு குறிப்பு போட்டுடலாமுன்னு நினைச்சேன்.சிவாஜியின் சிவா வேறு கதைக்களம்.ஷிவாகோவை காபி மட்டுமல்ல டீயே ஆத்த முடியாது.சென்னைல பர்மா பஜார்ல படம் மாட்டினாலும் மாட்டும்.மிஸ் பண்ணிடாதீங்க.

கூகிள்,பேஸ்புக் மீதான நீதிமன்ற கண்டனம் வெளியான அடுத்த நிமிடம் கபில்சிபல் அறிக்கை உட்ட கடுப்பு எனக்கு.அந்தாளுக்கு சமூக கருத்து தளங்கள் மட்டுமே முக்கிய டார்கெட்.ஏன்னா சோனியா காந்தி பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் கருத்து சொல்றாங்களாம்.

நீங்க சொல்ற மாதிரி அன்னா ஹசாரே குழுவின் மீதான கோபமே இப்படி வெளிப்படுகிறது.தொலைநோக்கில் இணைய தணிக்கை இந்தியாவுக்கு இழப்பே.

பொங்கல் சாப்பிட்டீங்களா?வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

ராஜ்,

//வ்வ்!நீங்க போடறது பதிவா?பின்னூட்டமா:)நமக்கு இப்படி பின்னூட்டங்களே லட்டும்,பொங்கலும்.//

உங்களுக்கே எத்தனை போட்டு இருப்பேன் , பின்னூட்டம் ,இப்போ புதுசா கேட்கிறிங்க.

எப்போவும் யாருக்கும் சொல்ல வேண்டியதை அவங்க பதிவில போய் எவ்வளோ பெருசா இருந்தாலும் சொல்லிடுவேன். ஆனால் மற்றவர்கள் எல்லாம் எதிர் பதிவு , எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவுனு போட்டு அவங்க சொந்த கணக்கை கூட்டிப்பாங்க, இதான் தமிழ்ப்பதிவுலகம்.

ஹி ..ஹி நான் ஏன் இன்னும் விளங்காம இருக்கேன்னா அதுக்கு இதுவும் ஒரு காரணம். இன்று வரைக்கும் நான்ப்போட்டுள்ள பதிவுகள் 150க்குள் தான் 2006 இல் பதிவுப்போட ஆரம்பிச்சேன். செம வேகம் இல்லை.

எனக்கு அடுத்தவங்களுக்கு பின்னூட்டம் போட பிடிக்கும் அளவுக்கு பதிவு போட்டு அனத்தப்பிடிப்பதில்லை.ஏன் எனில் எழுதுபவர் சிந்திக்க தூண்டுகிறார். நானே எழுத நானே சிந்தித்து ... எப்போ நான் சிந்தனைய தூண்டிக்கிறது :-))

எதுக்கு இதெல்லாம் சொல்கிறேன்னு பார்க்கிறிங்களா ,,என்னமோ இன்னிக்கு தான் என் பின்னூட்டம் பார்க்கிறார் போல இது பதிவா/ பின்னூட்டமா கேட்கிறிங்க. ம்ம்.

//பிரபலம் ஆகாமல் இருப்பது சுதந்திரமான பீலிங்:)//

இப்படிலாம் சொன்னா உங்கள அய்யோ பாவம் ரொம்ப நல்லவர்னு பாராட்டுவாங்கலாமா?

ஒழுங்கா எழுதி ஹிட்ஸ் வாங்கி பிரபலம் ஆக தெரியலை பேச்சை பாரு சொல்வாங்க :-))

பிராபல்யம் ஆகாமல் இருக்க தனியா பயிற்சி எடுக்கிறிங்களா? என்னைக்கூட வினவு அண்ட் கோ பிராபல்யம் ஆக கையப்புடிச்சு இழுத்துச்சி , \நான் பதிலே சொல்லாம விட்டுட்டேன்.பதில் சொல்லப்போனால் காற்றில் கத்தி சண்டை தான் :-))

மற்றவை தொடரும்...

பின் குறிப்பு:

பொங்கல் செரிக்க பானகம் சாப்பிடுகிறேன் :-))

journey said...

//The scenes of Yuri and Lara living their last days together in the ‘ice palace’ at Varykino were in fact manufactured using hot wax and marble dust as the snows refused to fall, and many winter scenes were actually shot in summer at 40 degrees, fur coats and all.//
I haven't seen a director talented than
David Lean. No one would guess that the house was a movie set. His last movie was Passage to India.
Around the world in eighty days is another classic.
India figures in the story. There is an interesting
clip on you tube on how a princess is saved from the
funeral pyre. Lastly Lawrence of Arabia is
another great work by him. They sould
Sub title his works in Tamil!

ஹேமா said...

யூ ட்யூப்ல இருக்கு.எடுத்திட்டேன்.நன்றி நடா.அன்பான இனிய உழவர் திருநாள் வாழ்த்து.பொங்கல் சாப்பிட்டீங்களா.
எனக்கு ஓசிப்பொங்கல் வந்திச்சு !

journey said...

I am sorry. Around the world in eighty days is by someone else. I was wrong!

ராஜ நடராஜன் said...

//எனக்கு அடுத்தவங்களுக்கு பின்னூட்டம் போட பிடிக்கும் அளவுக்கு பதிவு போட்டு அனத்தப்பிடிப்பதில்லை.//

வவ்!பதிவுலகில் என்னுடன் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்.அதனால்தானோ என்னவோ நீங்க பிரேக் போட்டு நிற்பதற்கு முன்பே உங்கள் பதிவுகள் என்னைக் கவர்ந்தன.Writting should be thought provoking.Commenting is fulfilling that aspect.

நானும் இதுவரைக்கும் எத்தனை பதிவுகள் போட்டேன் என்று எண்ணிப் பார்க்கவேயில்லை.போட்ட பதிவுகளை விட போட்ட பின்னூட்டங்கள் அதிகம்.அதுவும் உங்கள் பாணியில் நீண்ட பின்னூட்டங்களே அதிகம்.

எழுத்தே முழுமூச்சாக,தமிழகத்தில் இருந்திருந்தால் ஒருவேளை பிரபலமாகனும் என்ற ஆசை வந்திருக்கலாம்.ஆனால் இங்கே வாழ்க்கை சூழல்களுடன்,குடும்பம்,பணிக்கு மேற்பட்ட கால அவகாசத்தில் மட்டுமே எண்ணங்களை முன்வைக்க இயலுவதால் பிரபல கனவுகள் இல்லை.பிரபலமா இருக்குறது எவ்வளவு கஷ்டமான விசயம்ன்னு ரஜனிகிட்ட கேட்டுப்பார்த்தால் தான் தெரியும்.சாதாரணமாக மவுண்ட் ரோட்ல(அண்ணா சாலை:))நடந்து போறதுக்கும்,ஹிக்கின்பாதம்ஸ்ல புத்தகத்துல மட்டும் நம் கவனம் இருப்பதற்கும்,பிரைவசி இல்லாமல் நம்மையே சிலர் உற்றுப் பார்ப்பதற்கும்,விமர்சனம் செய்வதற்கும் கூட வித்தியாசங்கள் இருக்குதானே?
மெரினாவின் நெரிசலான கூட்டத்தில் நானும் ஒருவன்.

வினவா!சமூக அக்கறை கொண்ட வில்லங்கப் பின்னூட்டவாதிகளாச்சே:)முன்பு லீனா மணிமேகலை என்ற பெண் யாரென்றே தெரியாமல் உள் அரசியலும் புரியாமல் ஒரு பெண்ணுக்கான கவிதை சொல்லும் உரிமைக்காக வேண்டி பதிவில் கருத்தை வைத்த பின்பே வினவுத் தோழர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன்.மாற்று சிந்தனையாளர்களாக வரவேண்டியவர்கள்.மெய் நிகர் உலகம் சொல்லுக்கு சொந்தக்காரர்களாகி விட்டார்கள்:)

வினவு எப்படி பிராபல்யம் ஆக்குவார்கள் என்பது அறிந்த ஒன்றுதானே:)

திரைப்படம்ன்னு சொல்லிட்டு அமிஞ்சிக்கரையிலிருந்து அண்டார்டிகா வரை நாம் கதை பேசுகிறோமோ:)

ராஜ நடராஜன் said...

Peace!Good to know about your observation of the movie.I am much impressed of your info line of...

//The scenes of Yuri and Lara living their last days together in the ‘ice palace’ at Varykino were in fact manufactured using hot wax and marble dust as the snows refused to fall, and many winter scenes were actually shot in summer at 40 degrees, fur coats and all.//

My goodness!No one can believe the ice scenes are done using hot wax and marble dust!!It is so real.But the inner scene sequence might have been what you have pointed out but not the outdoor Cinematography I believe as there is a hell a lot of ice spread around the house:)

ராஜ நடராஜன் said...

//பின் குறிப்பு:

பொங்கல் செரிக்க பானகம் சாப்பிடுகிறேன் :-))//

வவ்!பின் குறிப்பை தவற விட்டுட்டேன்.அதனால் இன்னுமொரு மறுமொழி...

பானகம் என்ற சொல்லே போதை ஏத்துது:)

ராஜ நடராஜன் said...

ஹேமா!நீங்க சொல்லும் இனிய உழவர் திருநாள் என்ற சொல்லை ஒரே வார்த்தையில் நாங்க பொங்கல்ன்னு பொங்க வச்சிடறோம்:)

மேற்கத்திய கலாச்சாரங்களோடு இணைந்தும் தமிழ் கலாச்சாரத்தை புலம்பெயர் தமிழர்கள் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தேவையான ஒற்றுமையில் கோட்டை விட்டு விடுகிறார்களே!

ரதிகிட்ட நான் எப்பொழுதோ புலம்பினதை நேற்று சாத்திரி நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னெடுப்புக்கள் திருப்தியில்லையென்று பதிவு போட்டு விட்டார்.மாவீரர் தினம்,மே 19ன் வலிகளை மட்டும் நினைவுபடுத்தி விட்டு காலம் இன்னும் முன் நகர்கிறது.

இப்ப லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதானமும்(War and Peace) கொஞ்சம் கொஞ்சமா பார்த்துகிட்டிருக்கேன்.நெப்போலியன் காலத்து கதை.சமவாழ்வோடு ஏதாவது கதை சொல்கிறதா என்று பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ambuli 3D said...

arumai nanbare

http://ambuli3d.blogspot.com///

அம்புலி நீங்க மொபைலில் பின்னூட்டமிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் கொடுத்த தொடுப்புக்கு சென்றேன்.வித்தியாசமான தளம் போல தெரிகிறதே!அம்புலி மாமா கதையெல்லாம் சொல்வீங்களா?கால அவகாசத்தில் மீண்டும் வருகிறேன்.நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

//.Writting should be thought provoking.Commenting is fulfilling that aspect.//

டொக்டர் ஷிவாகோ தவிற எல்லாம் பேசுறோம் :-)) அமிஞ்சிக்கரை - அண்டார்டிக்கா சிண்ரோம் உங்களுக்கும் இருக்குனு அறிவதில் ஒரு அல்ப சந்தோஷம்(நான் மட்டும் தனியா இருந்தா போர் அடிக்கும்ல)

நான் தமிழில் சொன்னது இதை தான் , அலை வரிசை/அதிர்வெண் ஒத்திசைவுக்கு போய்டுச்சு போல :-))

//பானகம் என்ற சொல்லே போதை ஏத்துது:)/

உண்மையான பானகம் ,வெல்லம் ,,எலுமிச்சம் பழம் சாறு கலந்து செய்வாங்க,, சின்ன வயசில மாரியம்மன் கோவில் செடல் அப்போ காவடி, கரகம், தீமிதிப்பு செய்றவங்க ஊர்வலமாக போறப்போ குடிக்க அண்டா, வாளினு கலக்கி வச்சு இருப்பாங்க. நான் ஓசுல போய் குடிப்பேன் :-)) பக்தர்கள் அல்லாதவர்கள் குடிச்சாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. இன்னும் வேண்டுமா கேட்டு கொடுப்பாங்க. அப்போ எங்களைப்போல பொடிசுகளுக்கு இதான் வேலை. மைக் செட் கட்டினதும் ரெடி ஆகிடுவோம்.

இப்போ புட்டி பானகம் தான் :-))

ராஜ நடராஜன் said...

//நான் தமிழில் சொன்னது இதை தான் , அலை வரிசை/அதிர்வெண் ஒத்திசைவுக்கு போய்டுச்சு போல :-))//

வவ்!உண்மையா சொல்லப்போனா பதிவுலகமே எனக்குப் புது வார்த்தைகளை அறிமுகப்படுத்துகின்றன.அலை வரிசை சரி!அதிர்வெண்,ஒத்திசைவு போன்ற வார்த்தைகளை நீங்களே ஆங்கில பொருள் மாற்றம் கொள்கிறீர்களா?அல்லது தமிழ் டிக்ஸனரி மாதிரி ஏதாவது வைத்துக்கொண்டு பிலிம் காட்டறீங்களா:)

விவசாயம் படும் பாடு பதிவில் உபயோகித்த தமிழ் சொற்கள் அக்மார்க் தமிழ்ப் பொருளாதார சொற்கள் அல்லவா?

டொக்டர் ஷிவாகோவிலிருந்து பின்னூட்டம் திரும்புவதற்கு ஒரு காரணம் நீங்கள் படம் பார்க்க வில்லை.நானும் பின்னூட்டங்கள் சொல்வதற்கு ஏற்ப இசைப்பாட்டு பாடுவதால் சங்கீதம் தியேட்டருக்கு வெளியே கேட்குது.

திருவிழாவுக்கு எங்க ஊர்ப்பக்கமெல்லாம் மோர்ல நல்லா பச்சைமொளகா வெட்டிப் போட்டு கொத்துமல்லி Backstroke ஸ்டைலா நீந்திகிட்டிருக்கிற பானகம் தான்!

இப்ப அந்த கர்மத்தையெல்லாம் யார் குடிப்பான்னு கேட்கிற சகாக்கள்தான் நிறைய இருப்பாங்க:)

journey said...

http://www.youtube.com/watch?v=t3m53dLLqjw&feature=youtube_gdata_player

Moscow in Madrid. Promotional clip from
those days. You may like this! Thanks for
the post. Brought back memories of
enjoying great films.

வவ்வால் said...

ராஜ்,

//அதிர்வெண்,ஒத்திசைவு போன்ற வார்த்தைகளை நீங்களே ஆங்கில பொருள் மாற்றம் கொள்கிறீர்களா?அல்லது தமிழ் டிக்ஸனரி மாதிரி ஏதாவது வைத்துக்கொண்டு பிலிம் காட்டறீங்களா:)//

பெரும்பாலும் என் சொந்த மொழிப்பெயர்ப்பு தான். யாராவது நீ சொன்னது சரியானு கேட்டால் தான் தேடிப்பார்ப்பேன்.பெரும்பாலும் எப்போதோ இப்படி படித்து இருக்கோம்னு நினைவில் இருக்கும். சரியானு நானே கேட்டுக்கொண்டு போடுவது தான். பிரிக்குவெண்சி =அதிர்வெண் , எல்லாருக்கும் தெரியுமே.சிங்க்ரனைஸ் என்பதை ஒத்திசைவு என்றுப்போட்டேன்.நீங்க சொல்ற எசப்பாட்டும் அதே தான் :-))

இதுக்கு முன்னர் எல்லாம் இப்படி சொந்த சரக்க போட்டு , மாட்டி இருக்கேன் , ஆதாரம் கேட்பாங்க -)) அப்படி அதிகம் ஆதாரம் கேட்டது குமரன்.

பெரும்பாலும் நான் செய்த மொழி மாற்றம் சரியா இருந்திடும் :-)) கிட்ட தட்ட சரினு மயிர் இழை தப்பித்தல் நிறைய.

//டொக்டர் ஷிவாகோவிலிருந்து பின்னூட்டம் திரும்புவதற்கு ஒரு காரணம் நீங்கள் படம் பார்க்க வில்லை.நானும் பின்னூட்டங்கள் சொல்வதற்கு ஏற்ப இசைப்பாட்டு பாடுவதால் சங்கீதம் தியேட்டருக்கு வெளியே கேட்குது.//

ஹி..ஹி அதே... நான் மட்டும் படம் பார்த்திருந்தால் உங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான் :-))

//திருவிழாவுக்கு எங்க ஊர்ப்பக்கமெல்லாம் மோர்ல நல்லா பச்சைமொளகா வெட்டிப் போட்டு கொத்துமல்லி Backstroke ஸ்டைலா நீந்திகிட்டிருக்கிற பானகம் தான்!//

அதுவும் உண்டு நீர் மோர் னு இருக்கும், அது பெரும்பாலும் பக்தர்களுக்கு ஆனால் பானகம் தான் பெசல் , அதில ஒரு அறிவியல் காரணமும் இருக்குனு எங்கோ படிச்சேன். கால்சியம், அயர்ன் எல்லாம் வெல்லம்/ நாட்டு சக்கரைல இருக்காம் அது குளுக்கோஸ் போல உடனடி சக்தி கொடுக்குமாம்.எலுமிச்சை தலை சுத்தலை தடுக்கும். கெரகம், காவடி, தீ மிதி செய்பவர்கள் விரதம் இருப்பவர்கள் என்பதை கவனிக்கவும்.

//இப்ப அந்த கர்மத்தையெல்லாம் யார் குடிப்பான்னு கேட்கிற சகாக்கள்தான் நிறைய இருப்பாங்க:)//

ஓசுல கிடைக்குதுனு நீர் மோர், பானகம்னு நிறைய கர்மத்த குடிச்சு இருக்கேன் போல :-))

ராஜ நடராஜன் said...

//Moscow in Madrid. Promotional clip from
those days. You may like this! Thanks for
the post. Brought back memories of
enjoying great films.//

Peace!Thanks for your comment and provided link.

I have seen most of the hollywood movies(Lawrance of Arabia,Jamesbond movies etc.) are shot in madrid.Why madrid?Is it cheaper,shooting comfort or any other factors involves in shooting a film in madrid!

With a query and puzzle in my mind the following link lead me to find an answer.What a beauty of internet!

http://myweb.cwpost.liu.edu/nrosendo/articles_PDF/USMovieProductionFrancoSpain_SubmissionDraft_7_13.pdf

Thanks once again for a thought provoking comment.

ராஜ நடராஜன் said...

வவ்!சொந்த சரக்கப் போட்டு யாராவது மாட்டுவாங்களா:) யாரிந்த குமரன்! உங்க பதிவு பின்னூட்டத்துல கண்டு புடிச்சிட்டா போகுது.

//அதுவும் உண்டு நீர் மோர் னு இருக்கும், அது பெரும்பாலும் பக்தர்களுக்கு ஆனால் பானகம் தான் பெசல் , அதில ஒரு அறிவியல் காரணமும் இருக்குனு எங்கோ படிச்சேன். கால்சியம், அயர்ன் எல்லாம் வெல்லம்/ நாட்டு சக்கரைல இருக்காம் அது குளுக்கோஸ் போல உடனடி சக்தி கொடுக்குமாம்.எலுமிச்சை தலை சுத்தலை தடுக்கும். கெரகம், காவடி, தீ மிதி செய்பவர்கள் விரதம் இருப்பவர்கள் என்பதை கவனிக்கவும்.//

ஒரு நூல் விட்டா காத்தாடி போய்கிட்டே இருக்கும் போல தெரியுதே!

வெல்லம்,நாட்டு சர்க்கரை,எலுமிச்சை =கால்சியம்,அயர்ன்,குளுக்கோஸ்...செம விஞ்ஞான இணைவு போங்க!