கலைஞர் மீது குடும்ப அரசியல், ஈழத்தமிழர்கள் இரு பெரும் அரசியல் தவறுகளின் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்சித்திறனின் நன்மைகள் தமிழர்களுக்கு பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. என்னடா தேர்தல சமயத்துல யூ டர்ன் போடுறானே....அவ்வ்வ்ன்னு நினைப்பவர்களுக்கு சட்டியில் இருப்பதுவே அகப்பையில் வருகிறது.
இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் முத்துக்குளிக்க வாரீகளா என்ற ஆச்சி மனோரமாவின் பாடலை இந்தியில் அப்படியே பிரயோகித்ததோடு மதராசிகள் இந்தி பேசுவதை நையாண்டி செய்வார். தமிழனுக்கு இந்தியே தெரியாது என்ற அடிப்படையே தெரியாமல் நிலம் பெயர்ந்த சேட்டன்களும், ஏமண்டிகாரும், தாராவி தமிழர்களும் பேசிய இந்திக்கு நக்கலுக்கானவர்கள் மதராசிகள்.
இதற்கான காரணம் மெட்ராஸ் மட்டுமே வடக்கத்தியவர்களுக்கு தெரிந்த ஊர்.திருவனந்தபுரம்,கொச்சின்,ஹைதராபாத்,விசாகபட்டினம்,பெங்களூர்,மங்களூர் போன்றவை ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தின் பெயர்கள்.
முன்பு வைஜயந்திமாலா, ஹேமமாலினி,ரேகா, ஸ்ரீதேவி ( ஸ்ரீ எப்படி தட்டச்சுவதுன்னு சொல்லுங்களேன்,தலையை குழப்புது) இப்பொழுது தொலைகாட்சி விரிவாக்கத்தால், அமிதாப்பச்சன், சாருக்கான், கமலஹாசன் போன்றவர்களால் ஓரளவு தென்னிந்தியா பற்றி வட இந்திய சராசரி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.
மெரினா கடற்கரையே தெரியாத தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் போல் முன்பு வட இந்தியர்களுக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா,தமிழகம் எல்லைகள் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து யார் வடக்கே சென்றாலும் அவர்கள் மதராசிகள்தான் பின் பாலசந்தரின் ஏக் துஜே கே லியே கமலஹாசன் வசனம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்தான் மதராசிகளின் புதிய அளவுகோல்.
உத்தர பிரதேஷ்,மத்திய பிரதேஷ்,டெல்லி இந்தியோடு ஒப்பிடும் போது தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு அவர்களை எளிதாக காட்டிக்கொடுத்து விடும். மெஹ்மூத் கிண்டல் இந்தி பேசுபவர்கள் யார் என்ற என் அகழ்வாராய்ச்சியில் சிக்கியவர்கள் ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சார்ந்தவர்கள். ஹைதராபாத்தை விட கடப்பா பம்பாய்க்கு பஞ்சம் பிழைக்க வறுமையான மாவட்டம் என்பதோடு எளிதான ரயில் பயணமும் கூட.
சிவசேனாவுக்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். முன்பு மதராசிகள். இப்பொழுது பீகாரிகள்.
கலைஞர் மெட்ராஸை சென்னை என்று மாற்றிய பெயரோடு மதராசிகள் காணாமல் போய் விட்டார்கள்.
கிரிக்கெட் அரசியலை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகி விட்டது.
சாருக்கான் லுங்கி டான்ஸ் குத்தாட்டம் போட வைக்கிறது.
உடன் பிறப்பே!
எதிரிகள் அணியிலிருந்து கழக பாசறைக்கு
வந்த நீ முகநூலுக்கு முரசு கொட்டு
ட்விட்டரின் கதவை டொக் என்று தட்டு
என கலைஞரின் கவிதைக்கு காத்திருக்கிறேன்!