Followers

Showing posts with label இந்தி திரைப்பட விழா. Show all posts
Showing posts with label இந்தி திரைப்பட விழா. Show all posts

Sunday, April 25, 2010

ராவண் IIFA

பல மனித வளங்களின் உழைப்பு,பொருளாதார முதலீடு,சமூகம் சார்ந்த பார்வை,திரைப்பட நுணுக்கங்கள்,இசையின் மகுடி,திரைப்படம் வெளியிடூ,மக்களின் வருகை,விமர்சனம்,முதலீட்டின் லாபம் என்ற இத்தனை விசயங்களையும் தாண்டி ஒரு திரைப்படம் வெளி வராததற்கு முன்பே அதனைப்பற்றிய சுயமதிப்பீடுகள் செய்வது என்பது சரியல்லதான்.ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு அதற்கான நீதி கிடைக்கும் முன்பே கலாச்சார பரிமாற்றங்கள் என்ற பெயரில் சுயநலங்களை விளம்பரப் படுத்தும் போது விமர்சனங்களை முன் வைப்பது அவசியமாகிறது.

இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அனைவராலும் மதிக்கப்படும் அமிதாப்பச்சன் அவர்கள் இந்திய திரைப்படங்களின் துதுவர் என்ற மகுடத்தை ஏந்தும் காரணம் கொண்டும் பதிவுலகில் மெல்லியதாய் எழும் குரல்கள் பல காரணங்களால் அமுங்கிப்போகவும் கூடும். அப்படியான மெல்லிய குரலாக இருந்தும் எனது கண்டனத்தை பதிவு செய்வது அவசியமாகிறது

It would be prompt to declare International Indian Film Academy as International Indi Film Academy (IIFA)

தமிழக எதிர்ப்புக்களையும் தாண்டி International Indi Film Academy (IIFA) இலங்கையில் நடக்கும் எனபதை உறுதி செய்வதற்கான காரணிகள் சில:

இரு தேசங்களின் புரோட்டக்கல் எனும் முன்வரைவுகள் தீர்மானிக்கப்பட்டு விட்டது

அதனை உறுதி செய்யும் அமிதாப்பச்சனும்,ராஜபக்சேவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

தமிழகத்திலிருந்து இந்தி திரைப்படங்களுக்கான சந்தை குறுகியது.

அபிஷேக்,ஐஸ்வர்யாவின் இணைந்து நடித்த திரைப்படம் என்பதால் இங்கேயும் ஒரு குடும்ப நலன்.

இந்திய அளவில் ஈழ இனப்படுகொலை குறித்த ஊடகங்களின் கவலையின்மையை இப்போதைய ஐ.பி.எல் சர்ச்சைகளை இன்னும் ஒரு மாதத்தில் IIFA ஊடகங்களை நிறைத்துக்கொள்ளூம்.இப்படி தொடர் சர்ச்சைகள் நடப்பதே மக்களை திசைதிருப்பி ஆட்சியை வெற்றிகரமாகவும் நடத்த எளிதாக அமையும்.

இரு நாடுகளின் கலாச்சாரம் மேம்படுத்தல் எனும் போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் வியாபார நலன்கள்.

காமிரா தொழில்நுட்பங்கள்,வெளிநாட்டில் பாடல்காட்சிகள்,பெண்களின் அரைகுறை ஆடைகள்(இதெல்லாம் சமூக காவலர்களுக்கு பொருட்டேயல்ல)முத்தக்காட்சிகள்,இன்னும் இந்திப்படத்துக்கே உரித்தான மசாலாக்களுடன் இந்தி திரைப்படம் இந்திய திரைப்படமாக வலம் வருகிறது.தமிழ் திரையுலகம் எப்படி தமிழ் இலக்கியங்களையெல்லாம் விட்டு விட்டு வேறு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதோ அதே மாதிரி இந்தி திரைப்படங்களும் துவக்கம் முதல் உண்மையான இந்திய கலாச்சாரங்களை விட்டு மிக தூரமாகவே பயணிக்கிறது.இந்திய திரைப்படங்களை மாநில அளவில் ஒப்பீடு செய்யும் போது இந்தி படம் மசலாக்கள் என்பதுடன் இந்தி திரைப்படங்களின் பலமே அதன் இசையில்தான்.ஏனைய மாநில அளவிலான ரசிகர்கள் குறைவாக இருந்தாலும் வங்காள,மலையாள,தமிழ் படங்களுடன் ஒப்பீடு செய்கையில் இந்தி திரைப்படம் பாப்கார்ன் மட்டுமே.

மாநிலங்கள் என்ற பெடரல் அமைப்பே இந்தியா எனும் முகம் என்பதை மறந்து விட்டு இந்திப்படத்தை மட்டும் முன்னிறுத்துவதற்கு IIFA என்பதனை குறிப்பிட்டு சொல்லும்படியாக கேரள,வங்க,தமிழ்,ஏனைய திரைப்படத்துறையினர் குரல் எழுப்பாதது ஏன் என்பதை அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் மணிரத்னம் அவருடைய கட்டுக்கும் மீறி மீண்டும் ஒரு சர்ச்சையில் நுழைவது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை தருகிறது. ராஜபக்சேவுக்கு பஞ்ச் டயலாக் ஏதாவது வைத்திருக்கீறீர்களா மணிரத்னம் சார்? குறைந்த பட்சம் ரத்தம் படிந்த அந்த சிவப்பு துண்டு?

தமிழனின் குரல்கள் அவ்வப்போதான மழைக்காலத்து தனித்தனிக் குளத்தில் தவளைகளாய் கீச்சிட மட்டுமே செய்கிறது.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று பாடிக்கொண்டேயும் சில குரல்கள் வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்கின்றன.

ஒற்றுமையின்மை,பொது நலனிலும் கூட சுயநலம் முன்நிற்பதும்,நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் மக்களின் மனோபாவம்,சுய வாழ்க்கையின் ஓட்டத்துக்கே ஒரு நாள் ஓடிப்போவது,இவை அனைத்துக்கும் மேலாக ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சமீபத்து நிகழ்வுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழனுக்கு உணர்த்துகின்றன.அந்த வகையில் இலங்கையின் IIFA வும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

IIFA வுக்கான மேலும் சில எதிர்ப்புக் குரல்களாய் சிரவணன் அவர்களின் இடுகை தொடுப்பாக இங்கே மேலும் சில தகவல்களை காணலாம்.

பல தமிழ் திரைப்பட நடிகர்கள் திரைப்பட விழாவுக்கான அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திக்காகஅனைவருக்கும் நன்றி.முப்பது ஆண்டுகளை தமிழ் திரைப்படம் இலங்கை அரசின் உதவியில்லாமல் பயணித்திருக்கிறது.இன்னும் கொஞ்ச தூரம் இதே பாதையில் தமிழ் திரைப்பட உலகம் பயணிப்பதில் தவறில்லை.