சுனாமி எதனால் ஏற்படுகிறதென்றெல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பீங்க!புழுதி மழையும் காற்றும் எதனால் ஏற்படுகிறதென்று தெரிந்தவர்கள் யாராவது பதிவுகள் போடுங்க.கிராமப்புறத்தில் தாய்க்குலங்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்குத்தான் மண்ணை வாரி தூவுவாங்க.இயற்கைக்கு வந்த கோபத்தில் ஆடிக்காத்துல அம்மியே பறக்குமுன்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு விசுவரூபம் எடுத்துகிட்டு வந்துடுச்சு புழுதி காற்று.வந்ததோடு பாலைவனத்துல இருந்த புழுதியெல்லாம் வாரிக்கொண்டு வந்து நகரத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.மணி வரை விடாம வந்து கொட்டிடுச்சு.
குவைத்.... வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுகிட்டேன்....
அடுத்த நாள் பார்த்தா சூரியன் மட்டும் பல்லைக்காட்டி சிரிக்குது.முதல் நாள் வந்த மண்புழுதியின் சுவடு கொஞ்சம் கூடமில்லாத வானம்.மொத்த ஊரின் தரை மட்டும்தான் மண்புழுதியில்.ஆனாலும் பறக்கிற காரின் வேகத்தில் வாகன சாலைகள் என்னவோ எப்பவும் போலவே காட்சியளித்தது.தெரிந்தவர்,குவைத்தி ஒருவர் படகை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கப் போய் இன்னும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.கூட இருந்த 2 பேரின் உடல் மட்டும் இதுவரை கிடைத்துள்ளது.தெரிந்தவர் கடல் காவலுக்கு SOS அனுப்பி விட்டு சுழலில் மாட்டிக்கொண்டேன்...வீடு திரும்புவேனா என்பது சந்தேகம் என வீட்டுக்கும் போன் செய்துள்ளார்.
வாரான்....வாரான் சவுதி அரேபியாவுக்கு வர்ரான்....பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..லிபியாக்காரன் சண்டை,இயற்கையின் சீற்றம்,இன்னும் எதிர்பாராத மிதக்கும் பெட்ரோலிய பொருளாதாரம் உலகின் அனைத்து தர மக்களையும் பாதிக்கும்.
எனக்கென்னமோ இந்தப் பசங்கதான் புழுதியைக் கிளப்பி விடுறாங்களான்னு ரொம்ப நாளா சந்தேகம்.....
ஈராக்கின் தெற்கு பக்கமான பஸ்ராவில் துவங்கி குவைத்,சவுதி அரேபியா போய் விட்டு கடைசியா துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டதா கேள்வி.
படங்கள் உதவி:தனி மெயில்,தி டெலிகிராஃப் மற்றும் அனானி பதிவர்.


