Followers

Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Thursday, February 18, 2010

இங்கேயும் ஒரு நோஸ்டர்டாமஸ்

ஒரே ஒரு பூமி சுழற்சி

ராமர் பாலம் நீருக்கு வெளியே

கேது இல்லா சேது

அகண்ட பாரதக் கனவு

முதுகெலும்புள்ள எதிர்கால பிரதமர்

மூப்பர்களில்லா அரியணை

நூற்றாண்டின் மாற்றத்தில் புதிதாய் பாலம்

சீனா வருகை

அகம் புலம் ஒற்றுமை

ஏதாவது ஒன்று
நீ இந்தியாவின் ஒரு பகுதி

Saturday, July 26, 2008

உண்மையிலே மெய்சிலிர்ப்பு

நேற்றைய காலை சோகத்துக்கும் மாலை அனுபவத்துக்கும் பின்னாடி இரவு நம்பிக்கை தரும்போல் இருந்தது தொலைகாட்சி நிகழ்வு.

பொதுவாக ஒரு விழாவில் கலந்துகொள்ளும் வி.ஐ.பி க்கள் பாதுகாப்பு கருதியும், தங்களது தரத்தினை மனதில் கொண்டும் மேடைக்கு அருகிலுள்ள பக்கக் கதவுகளிலிருந்து வெளிப்படுவார்கள்.

ஆனால் கண்ணுக்கு மாற்றமாக அரங்கின் கடைசிக்கோட்டிலிருந்து வெளிப்பட்டு மெல்ல மெல்லப் பள்ளி மாணவர்களின் முகங்களையே நோக்கிக்கொண்டு இரண்டு வரிசைக்கு இடைவெளியாக ஒரு மாணவ,மாணவிக்கு கரம் கொடுத்து குசலம் விசாரித்துக்கொண்டே வந்தார்.

இறுதியாக அவரதுப் பேச்சின் சில வார்த்தைத் தொகுப்புகளுடன் தொலைக்காட்சியின் காமிரா வேறு கோணத்திற்கு மாறுகிறது.ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அவருக்கே உரித்தான முடி அலங்காரத்தின் முடிக்கற்று நெற்றியில் விழ அவர் இந்தியாவைக் காப்போம்,தன்னம்பிக்கை கொள்வோம் போன்ற சில வார்த்தை மந்திரங்களை உச்சரிக்க தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் எழுப்பிய கோஷம் இருக்கிறதே மெய்சிலிர்ப்பு என்ன என்பதை அந்தக்கணத்தில் உணர்ந்தேன்.

இன்னும் சில வருடங்களுக்கு ஜனாதிபதி சிம்மாசனத்தில் டாக்டர் அப்துல்கலாமை உட்கார வைத்துக் கவுரவப்படுத்தியிருக்கலாம்.கலைஞர் தொலைக்காட்சியில் படம் " அரண் " முடிந்து நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மறக்கமுடியுமா? துவங்கி விட்டது.வருகிறேன்.