Followers

Showing posts with label எகிப்து:மக்கள்:எழுச்சி. Show all posts
Showing posts with label எகிப்து:மக்கள்:எழுச்சி. Show all posts

Friday, February 11, 2011

ஹோஸ்னி முபாரக்! எத்தல பர்ரா(வெளியேறு)

தெகா! ஹோஸ்னி முபாரக் பற்றி சற்று முன் நீங்கள் பதிவு போட்டவுடன் நான் அடக்கி வாசிக்கிறதால என்ன சொன்னேன்? சி.என்.என்.பி.பி.சின்னு உர்ருன்னு நோக்கிட்டு இருக்கிறேன்.நீங்கள் எகிப்தின் மாற்றம் குறித்து மகிழ்ச்சியில் திளைத்தீர்கள்.சி.ஐ.ஏ சொன்ன இன்றைக்கு முபாரக் பதவி விலகிடுவார்ன்னு சொன்னதைக் கேட்டு ஒபாமாவும் நாம் ஒன்று பட்ட நாடுகளில் வாழ்கிறோம்.உலகின் எந்த ஒரு பகுதியில் எது நடந்தாலும் அது நம்மையும் பாதிக்கிறது என்பதோடு அமெரிக்காவுக்கு புதிய சந்தைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதென்று  திருவாய் மொழி அருள்ந்தார்.எகிப்திய ராணுவ அதிகாரிகள் கூட முபாரக் இல்லாமலே கூட்டம் போட்டு மக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுமென்று அறிக்கை விட்டார்கள்.இரவு ,குளிர் என்றும் பாராமல் மாற்றத்துக்கு காத்திருக்கிறார்கள்.


முப்பது வருசமா எகிப்தில் சர்வாதிகாரம் செய்தும், யதார்த்தம் என்ன என்று தெரியாமல் பதவி,பணம் காக்கும் பூதமாக வேண்டி ஒரு நீண்ட அறிக்கை விட்டு தெகா, சி.ஐ.ஏ. ஒபாமா, மனித உரிமை நல விரும்பிகள், இவர்களையெல்லாம் தாண்டி எகிப்திய மக்களின் போராட்டத்தின் மையப்புள்ளி என்ன என்று அறியாமல் நடுஇரவில் ஒரே ஒரு அறிக்கை விட்டு எல்லோருக்கும் பெப்பே காட்டி என்னதான் சொல்ல வருகிறாரென்று யாருக்கும் தெரியாமல் அனைவரையும் குழப்பி நீண்ட பிரச்சாரம் செய்து விட்டு  இந்த மண்ணில்தான் சாவேன்,வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிய மாட்டேன் என்று தொண்டர்களுக்கு உள்குத்து வேலையும் செய்து விட்டு தான் பதவி விலகப்போவதில்லை என்பதை நாசுக்காக சொல்லாமல் சொல்லி மைக்கையும்,தொலைக்காட்சி கேமராவையும் நிறுத்தி விட்டார் முபாரக்.ஒபாமா அவசரமா அறிக்கை விட்டு விட்டு வாஷிங்டன் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்.இயற்கையாய் உதித்த மக்கள் எழுச்சியை ஏனைய மொத்த தூர,அண்டை நாடுகளும் தமது சுயந்ல தேவைக்கேற்ப வரவேற்றும், எதிர்த்தும் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.ஊடகங்கள் செய்தியென்ற கடமையை செய்கின்றன

வளைகுடாப்போரில் சதாமின் சார்பாகவும்,குவைத் நாட்டிற்கு சார்பாகவும் கலந்து கொண்ட ஆட்சியாளர்களுக்கு நாட்டமை மாதிரியான நிலையில்  சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் ஹோஸ்னி முபாரக் நாட்டாமை பார்த்து It's a summer cloud என்று சொல்லி இரு நாடுகளுக்கும் சண்டை மூட்டி விட்டதில் ஒரு பங்கு ஹோஸ்னி முபாரக்குக்கும் உண்டு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

பார்வையாளர்கள் எகிப்து குறித்து தற்போது ஊர்ந்தும்,கூர்ந்தும் கவனித்தாலும் கூட பணி புரியும் எகிப்தியக்காரனை ஐந்து வருடமாக ஹோஸ்னி முபாரக்கை விட்டால் உங்களை ஆட்சி செய்வதற்கு வேறு ஆட்கள் இல்லையா என்று கிண்டல் செய்துகிட்டு இருந்தேன்.இவ்வளவு மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடியும்,ஜனவரி 25ம் தேதியிலிருந்து இன்று வரையிலான போராட்டக்குரல்கள் எழுப்பியும் தில்லாலங்கடி வேலை செய்யும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வைப்பது எவ்வளவு கடினம் என்பது புரிகிறது.

எனினும்,எகிப்தின் மக்கள் எழுச்சி இன்னும் முற்றுப்பெறாத ஒன்று.அமைதியான முறையில் மாற்றங்களை கொண்டு வரும் அத்தனை வழிகளையும் முபாரக் அடைப்பதால் வரும் நாட்கள் எந்த மாதிரி நகரும் என்பதை யாரும் கணிக்க இயலாத நிலை.நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் மக்களின் கோபம் அலை பாயும் என எதிர்பார்க்கலாம்.

ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது எகிப்தியர்களுக்கு இப்போதைய எழுச்சி.எனக்கோ எத்தல பர்ரா என்று குவைத் மொழியில் வெளியே போ என்ற குரல் எனக்குள்ளே நீண்ட நாட்கள் ஒலிக்கும் குரல்.