எந்த ஊரில் என்ன பொருள் விற்கனும்ன்னு தெரியாமல் சில தாய்வான் நிறுவனங்கள் ஷெராட்டன் ஓட்டலில் டேரா போட்டு பல பொருட்களை விற்றதில் ஒரு பொருள் இந்தியாவை நினைவு படுத்தியது.முதலாவது வளைகுடா சூட்டுக்கு மனிதனே மதிய வெயிலுக்கு தாங்க முடியாது.அப்புறம் கொசு எங்கே தாங்க போகுது. இங்கே வந்து ஒரு நிறுவனம் கொசுவத்தி வேணுமான்னு விற்குது. இந்தியா டார்ட்டாய்ஸ் மாதிரியெல்லாம் புகை விடாது. டார்ட்டாய்ஸ் விலை என்ன என்பதை கொசு விரட்டியர்கள் யாராவது சொன்னா இந்தியாவில் விற்க முடியுமான்னு யோசிக்கலாம்.
கொசுவத்தியின் விசேசம் என்னன்னா கையில் வாட்ச் மாதிரி கட்டிக்கிறது ஒன்று இன்னொன்று சுவற்றிலோ டேபிளிலோ உட்கார வைக்கிற மாதிரி...
நிறுவனம் 10000 + 10000 மொத்தம் 20000 வாங்கினாத்தான் ஆகும் என்கிறது. விலை விபரமெல்லாம் துண்டு போட்டுத்தான் சொல்வேன்:)
வாங்கி விற்க யாராவது இருக்கிறீர்களா? இல்லைன்னா கூகிளிட்டு நீங்களே தேடிக்கண்டு பிடிக்க வச்சுடுவேன்:)
தொலைக்காட்சியில் பார்க்கிற மாதிரியே இன்னும் நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
இந்தியாவிலிருந்து யாராவது ஏற்றுமதி பொருட்கள் அனுப்ப விரும்பினால் அணுகவும்.
என்ன இது! மறுபடியும் அனுமார் வால் மாதிரி மறுபடியும் பதிவுகள் நீளும் போல தெரியுதே!ஒரு வேளை இதே ட்ரெண்டை புடிக்கனுமோ:)

