2010 உலக கால்பந்தாட்ட போட்டிக்கு கடந்த காலங்களை விட வழக்கத்து மாறாக புதிய நாடுகள்,குட்டி நாடுகள் கூடவே பின்தங்கியிருந்த ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் களத்தில் நின்று துள்ளியும் தள்ளியும் விளையாடுகின்றன.இந்திய தேசம் என்ற கோசமில்லாமல் நன்றாக ஆடும் அணிகளையும்,சிறந்த ஆட்டக்காரர்களை மட்டுமே கண்டு கழிக்க முடிகிறது.வாய் மட்டும் ஏழு முழத்துக்கு நாங்கள் வல்லாரசாக்கும் பீத்தலுக்கு மட்டும் குறைச்சலேயில்லை என்ற கோபம் எழுவதற்கும் கோடானு கோடி இந்திய ஜனத்தொகையில் 23 பேர் மற்றும் கால்பந்து விளையாட்டுக்குழுவை உலக அளவில் அனுப்ப முடியாததின் காரணம் என்ன?
உலகமயமாக்கல் சந்தைக்கும்,இப்போதைய புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முன்பும் பனிப்போர் என்னும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளை சார்ந்த நிலைகளிலும் அணி சாரா நாடுகள் என்றும் கொள்கையளவில் மட்டும் கடந்து வந்த இந்தியாவின் கடந்த காலங்களை யோசித்தால் டென்னிஸ் ,கால்பந்து,ஹாக்கி ,கிரிக்கெட் என கலந்து கட்டி விளையாடிய காலங்கள் என தெரிகிறது.
இதில் இந்தியாவில் கால் பந்தாட்டம் எந்த கால கட்டத்தில் தடம் மாறிப் போனதென பார்க்கலாம்.முன்பெல்லாம் ஹாக்கியின் ஆக்கிரமிப்புடன்,கால் பந்தாட்டம்,கபடி போன்றவையே முன்னிலை வகித்தது.இந்திய அளவில் ஈஸ்ட் பெங்கால்,மோகன்பேகன் அணிகள் கல்கத்தாவில் கால்பந்தாட்டத்தின் உயிர் நாடியாக இருந்தது.கோவாவில் சர்ச்சில் அணி,சல்கோங்கர் அணி போன்றவையும் இன்னும் கேரளா.பஞ்சாப் போன்ற அணிகளும் இருந்தும்கூட இப்போது உலக தரவரிசையில் 138லிருந்து 147 வரை முன்னேறிய! நாடாக இணைய தேடலில் கிடைத்தது.
கல்கத்தா,பஞ்சாப்,கோவா,கேரள மாநிலத்தில் கால்பந்தாட்டம் நன்றாக வேரூன்றியதும் குறிப்பாக ரயில்வே துறை,அதற்கும் மேலாக ஹாக்கி விளையாடுவதற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது.மாநில ரீதியான போட்டிக்கான இரண்டாம் வகுப்பு,மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களில் இவர்கள் காணாமல் போனார்களா அல்லது திடிரென வந்த அலையான கிரிக்கெட்டின் ரசிகர் கூட்டத்தில் காணாமல் போனார்களா?
உலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும். கிரிக்கெட் போலவே இதுவும் அடிப்படையில் மூளையை உபயோகிக்கும் விளையாட்டே.டெஸ்ட் பந்தையங்களின் தூக்கத்திலிருந்து 50 ஓவர், இப்பொழுது 20 ஓவர் என கிரிக்கெட் தனது முகத்தை மாற்றிக் கொண்டாலும் கால்பந்தாட்டம் இதுவரையிலும் தனக்கென்று அமைத்துக் கொண்ட விதிகளை ஒட்டியே இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது.
வளைகுடா நாடுகளில் கிரிக்கெட் என்று சொன்னால் வடையா (சுனாதா?) என்று கேட்குமளவுக்கு கிரிக்கெட்டின் நிலைமை.ஆனால் உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமான விளையாட்டு கால்பந்தாட்டம்.விளையாட்டுக்குப் பின்னால் ஒவ்வொரு நாட்டின் அரசியலும் இருக்கிறது என்பது ஜெர்மனி V போலந்து , பிரான்ஸ் V இங்கிலாந்து, அமெரிக்கா V இங்கிலாந்து மற்றும் இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நிச்சயம் பொருந்தும்.
கிரிக்கெட் போதைக்கு ஊறுகாயா சில சொந்த அனுபவங்களை சொல்கிறேன்.பேச்சிலர் கேம்பில் ஒரு அறையில் 10-20பேர் தொலைக்காட்சியில் இந்தியா V பாகிஸ்தான் நேரலை கிரிக்கெட் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.எல்லா பயல்களும் இந்தியாவுக்கு குரல் எழுப்பினால் இந்த ஓவரில் சச்சின் அவுட்டாகிறான் பாருன்னு எல்லோருக்கும் சூடேற்றுவதில் எனக்கு கொள்ளைப்பிரியம்:)என்னை ரூமுக்குள் விடக்கூடாது என்றும் கூட எழும் குரலைப் பார்த்து எனக்கும் உபசரிக்கும் நண்பனுக்கும் சிரிப்பாய் வரும்:)அதே மாதிரி சச்சின் அவுட் ஆனவுடன் ஆட்டமே நிறைய நேரங்களில் ஊத்திக்கும்.இவன் வருவதால்தான் இந்தியா தோற்குது என்ற செண்டிமெண்ட் கோபங்கள் கூட சில பேரிடமிருந்து கிளம்பும்.ஒரு முறை ஒரே ஒரு முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டி குவைத்தில் நடந்தது.மைதான ஆட்டத்தை விட ஸ்டேடியத்தில் மினரல் வாட்டர்,பெப்சி, 7 அப்புல ஆட்டம் களைகட்டி போதுமடா சாமி உங்க கிரிக்கெட் என்று உள்துறை சொல்லி ஒரு விளையாட்டும் இதுவரை நிகழவில்லை.
இந்தியா,பாகிஸ்தான் இரண்டு பேரும் தாங்களும் போட்டியா அடித்துக்கொண்டதுமில்லாமல் வேடிக்கை பார்க்க வந்த இலங்கைகாரனையும் ,பங்களாதேஷியையும் களமிறக்கி இப்ப ஆப்கானிஸ்தான்காரன் வேற கோதாவில்.நின்னுகிட்டே போடற கிரிக்கெட் சண்டைய ஓடிப்பிடிச்சு கால்பந்திலும் காட்டறது?
இந்தியா,பாகிஸ்தான் இரண்டு பேரும் தாங்களும் போட்டியா அடித்துக்கொண்டதுமில்லாமல் வேடிக்கை பார்க்க வந்த இலங்கைகாரனையும் ,பங்களாதேஷியையும் களமிறக்கி இப்ப ஆப்கானிஸ்தான்காரன் வேற கோதாவில்.நின்னுகிட்டே போடற கிரிக்கெட் சண்டைய ஓடிப்பிடிச்சு கால்பந்திலும் காட்டறது?
எப்படியோ இந்திய அளவில் கால்பந்தாட்டம் களை இழந்தே போனதன் கால கட்டம் கபில்தேவ் அணியினர் கிரிக்கெட் உலககோப்பையையும், ரவிசாஸ்திரி ஆடி ஜெர்மன் காரை பரிசாகப் பெற்ற கால கட்டத்தில் போதை கொண்டிருக்குமோ?ஏறிய போதை கிரிக்கெட் சூதாட்டங்களில் கபில்தேவ்ப்,ஜடேஜா இப்ப மோடி,சரத்பவார் வரைக்கும் வந்தும் தெளிந்து இருக்கணுமே!அதுவும் இந்த பதிவு எழுதும் தினம் வரை நிகழ காணோம்
அனைத்து விளையாட்டுகளையும் பின் தள்ளி விட்டு முக்கியமாக கிரிக்கெட் மட்டும் எப்படி வளர்ந்தது என்பது இன்னும் ஆய்வுக்குரியது.அதில் முக்கியமாக இந்திய,பாகிஸ்தான் இடையேயான பகை உணர்வு எல்லையில் துப்பாக்கி பிடிக்க முடியாத இரு நாட்டு சீருடையில்லா காமன்மேன் போர்வீரர்களுக்கு மனதளவிலான சண்டையே கிரிக்கெட் எனும் வில்லன் இவ்வளவு விசுவரூபமெடுத்ததற்கு காரணம் எனலாம்.மேலும் இந்தியாவின் கால் பந்தாட்ட திறன் குறைந்ததற்கு ரசிகர்கள் இல்லாமல் சோணங்கியாகிப் போனதும் ,ஊக்குவிப்பு இல்லாததும் கிரிக்கெட் வில்லன் மோகமும் ,சூதாட்டமும் இன்னும் அல்லக்கை காரணங்கள்.
அனைத்து விளையாட்டுகளையும் பின் தள்ளி விட்டு முக்கியமாக கிரிக்கெட் மட்டும் எப்படி வளர்ந்தது என்பது இன்னும் ஆய்வுக்குரியது.அதில் முக்கியமாக இந்திய,பாகிஸ்தான் இடையேயான பகை உணர்வு எல்லையில் துப்பாக்கி பிடிக்க முடியாத இரு நாட்டு சீருடையில்லா காமன்மேன் போர்வீரர்களுக்கு மனதளவிலான சண்டையே கிரிக்கெட் எனும் வில்லன் இவ்வளவு விசுவரூபமெடுத்ததற்கு காரணம் எனலாம்.மேலும் இந்தியாவின் கால் பந்தாட்ட திறன் குறைந்ததற்கு ரசிகர்கள் இல்லாமல் சோணங்கியாகிப் போனதும் ,ஊக்குவிப்பு இல்லாததும் கிரிக்கெட் வில்லன் மோகமும் ,சூதாட்டமும் இன்னும் அல்லக்கை காரணங்கள்.
டிஸ்கி: இவ்வளவு வளவளக்கிறீயே!மைதானத்துல வந்து நின்னு பாருன்னு சென்னையிலருந்து யாரோ கூவுற மாதிரி கேட்குது.கிரிக்கெட் மட்டைக்கு முன்னாடியே கத்துகிட்டதே கால்பந்தும்,கபடியும்,கோலி,கில்லிங்ண்ணா:)
அட நம்மள வுடுங்க!ஏதோ பஞ்சம் பொளக்க பரதேசம் போயிட்டோம்.திருப்பூர்ல சின்னசாமின்னு தமிழக மாநில அளவிளான ஒரு வாலிபால் பிளேயரே மாநில அளவில் விளையாடி அடையாளமில்லாமல் வியாபாரம் செய்ய போயிட்டாருங்ண்ணா.