லிபியா பற்றி பழைய குப்பைகளை நோண்டினால் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் வில்லன் உருவகப்படுத்தலில் ஈராக்கின் சதாம்,ஈரானின் அயோத்துல்லா கோமினி, அகமது தினேஜாத்,பாலஸ்தீனிய ஷேக் அகமது யாசின்,யாசர் அராபத்,லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் சையத் ஹசன் நசரல்லா உலகம் அறிந்த சவுதி அரேபியாவின் பின்லாடன் இன்னும் பல அமெரிக்காவின் வில்லன்களுக்கும் வில்லன் முன்னோடியென்றால் அது மும்மர் கடாபிதான்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கென்று ஒரு கலாச்சாரம்,மக்கள் பழகுவதில் இனிமை,இஸ்லாமியத்தின் எளிமை என்பவைகளுக்கும் அப்பால் தனி மனித சர்வாதிகாரம்,மக்கள் உரிமை ஒடுக்குமுறை,சுயலாபங்கள்,வாரிசு அரசியல், சூடான பூமி போன்றவைகள் மக்களை முரடர்களாகவும், உலகளாவிய மனித உரிமைகளில் பின் தங்கியவர்களாகவும் வைத்துள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரீகனின் ஆட்சிக்காலத்தில் ரீகன் முன்பே சினிமா கதாநாயகன் என்பதால் கடாபியை வில்லனாக்கி விட்டார்கள்.அந்தாளோட நடை,உடை,பாவனைகள் வித்தியாசமாக இருந்ததாலும், பயணிகள் விமானம் பறக்கும் போதே குண்டு வைப்பது போன்றவற்றாலும் வேடம் அரசியலுக்கும்,ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் சரியாகவே பொருந்தியது.
கடாபியின் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையால் அமெரிக்கா ஏவுகணைப்பரிசோதனை செய்வதற்கு நமக்கு ஒரு அடிமை சிக்கினான் என கடாபியின் அரண்மனை மீதே ஒரு குண்டு போட கடாபியின் நல்ல காலமும் லிபியாவின் கெட்ட காலமும் கடாபியின் குழந்தை ஒன்றின் சாவோடு வில்லன் தப்பித்து விட்டார்.அதுல வாயை மூடின ஆளுதான் கடாபி தும்முவது கூட அமெரிக்காவிற்கு கேட்காதபடி அடங்கிப்போனார்.சரி அமெரிக்கா கூடத்தான் சண்டை போடுற வா நாமெல்லாம் கூட்டம் போட்டு மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் வான்னு கூப்பிட்டா இருக்குற ஷேக்கையெல்லாம் முதுகெலும்பில்லாத ஆளுகன்னு சண்டை போடுவதால் அவர்களும் ஓரம் கட்டி வைத்து விட்டார்கள்.சதாமுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து விட்டு அமெரிக்காவோடு சமாதானம் செய்து கொண்டு 40 வருடங்களுக்கும் மேலான சர்வாதிகாரியாக இருக்கிறார்.
கடாபி பற்றி செய்திகள் மூலமா தெரிந்ததை விட நேரடி அனுபவமா நம்மூரு அரசியல்வாதிகள் மாதிரி இந்தாளு வில்லாதி வில்லன் என்பது ஒரு சமயம் தெரிய வந்தது.பேட்ரிக் டோவர் என்ற அயர்லாந்துக்காரர் காஞ்சு போன நாடுகளாய் பார்த்து (ஆப்கானிஸ்தான்,வியட்நாம்,லிபியா)கேடரிங்,பெட்ரோல் வாங்கி விற்கிற பிரெஞ்சு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.இவர் லிபியாவில் வாங்கிய Portable 120GB HDD யின் விலை 5 அமெரிக்க டாலர் புதிதாக சந்தைக்கு வந்த காலத்தில்.(இந்திய மதிப்பில் சுமார் ரூ 250 வெச்சுக்கலாம்).பெட்ரோல் மூல வருமானமாக இருந்தாலும் ஏனைய வளைகுடா நாடுகள் போல் வளர்ச்சியடையாத நாடு லிபியா.
கடாபி என்ன செய்தார்ன்னா 40 வருடமானாலும் நீங்கள் செய்யும் கலகம் நீடிக்கும் என்று நேற்று அறிக்கை விட்ட வாரிசு அரசியல் மகன் சய்ஃப் அல் இஸ்லாம் என்பவரை விட்டு பெட்ரோலிய வருமானம் அனைத்து லிபிய மக்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்படுமென்று அறிக்கை கொடுக்க விட்டு சுற்றி இருக்கும் அல்லக்கைகளுடன் அறிக்கை பற்றி நானாவது வருமானம் பங்கீடு செய்வதாவது என்று கடாபி சிரித்தாராம். இதே தில்லுமுல்லு புத்தியோட நான் லிபியாவில்தான் இருக்கிறேன்,வெனிசுலாவும் போகல,எங்கேயும் ஓடிப்போகலைன்னு சின்னதா ஒரு பிலிம் காட்டுகிறார்.கூடவே ராஜபக்சே ஸ்டைலில் லிபியாவின் போராடும் மக்கள் மீது விமானம் மூலம் குண்டு விழவும் செய்கிறது.லிபியாவின் முக்கிய நகரங்கள் லிபியாவின் போராட்ட மக்களின் கைவசப்பட்டுள்ளது.லிபியாவின் தூதர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.
இன்னுமொரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! கோசம் போடும் பழக்கதோசத்தில் கடாபியும் ஒழிக!
6 comments:
ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்முனாட்டி. நானும் கத்துறேன் ஒழிக.
//ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்முனாட்டி. நானும் கத்துறேன் ஒழிக.//
அண்ணோவ்!இது கூட செஞ்சுருக்கானா?இவனுக்கு நாள் நெருங்கிருச்சுன்னு நினைக்கிறேன்.
இப்பத்தான் அல்ஜசிராவில் 1 மணிக்கும் மேலாக தொலைக்காட்சியில் வள்,வள்ளுன்னு Eccentric ஆ கத்திகிட்டிருக்கான் இந்த கிறுக்கு பய.பைத்தியம் பிடிக்காத குறையா வீடு வீடா பூந்து ஆள் வச்சு அடிக்கப் போறேன் பாருன்னு கத்திகிட்டிருக்கான்.
போராட்டம் முடியும் வரை லிபியா மக்களுக்கு எனது அனுதாபங்கள்.
இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற மக்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கய்யா. ட்டி.வியில நானும் பார்த்தேன் அந்த ஒரு மணி நேரத்திற்கு மேலே கத்திக்கிட்டு இருந்ததை... அதில என்ன இருந்திச்சு கேக்க, மிரட்டல் மட்டுமே மிச்சம். கொடும!
எப்படி முடிச்சு வைச்சிக்க போறாங்களே! சரி, இந்த மாதிரி சூழ்நிலையில யூ. என் உள்ளர புகுந்து அள்ளி வெளியில போட்டா என்ன, அதான் மக்களே வேண்டாம் வெளியில போன்னு சொல்லும் போது உலக சமூகத்திற்கென அமைச்ச சபை அதைத்தானே செய்யணும்... சுத்த வேஸ்ட் அந்த மன மகிழ் மன்றம்.
//இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற மக்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கய்யா. ட்டி.வியில நானும் பார்த்தேன் அந்த ஒரு மணி நேரத்திற்கு மேலே கத்திக்கிட்டு இருந்ததை... அதில என்ன இருந்திச்சு கேக்க, மிரட்டல் மட்டுமே மிச்சம். கொடும!
எப்படி முடிச்சு வைச்சிக்க போறாங்களே! சரி, இந்த மாதிரி சூழ்நிலையில யூ. என் உள்ளர புகுந்து அள்ளி வெளியில போட்டா என்ன, அதான் மக்களே வேண்டாம் வெளியில போன்னு சொல்லும் போது உலக சமூகத்திற்கென அமைச்ச சபை அதைத்தானே செய்யணும்... சுத்த வேஸ்ட் அந்த மன மகிழ் மன்றம்.//
கடாபி கிறுக்கன் பேச்சை நீங்களும் பார்த்தீங்களா தெகா!இந்தாளு இவ்வளவு Eccentric ன்னா மக்கள் நிலைமை பரிதாபம்தான்:(
மன மகிழ் மன்றம்!நல்லா பேர் வச்சீங்க:)இதுல இந்தியா வேறு கும்மியடிக்க அமெரிக்கா அனுமதி கொடுத்திடுச்சாமே!நம்பி யார் நாய்(ர்) மாதிரி ஆளுக இருந்தா இன்னும் வெளங்கிடும்.
We condemn ன்னு அறிக்கை விட்டாச்சே.இதுக்கும் மேல் என்ன எதிர் பார்க்க முடியும் ஒப்புக்கு சப்பாணிககிட்ட.
வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை வைத்து சிலாகித்து, ஒரு காமெடிப் பதிவு ரசித்தேன். பல அறியாத விடயங்களையும் அறிந்தேன்.
இலங்கை அரசு லிபியா மீதான போருக்கு கண்டனம் என்று அறிக்கை விட்டிருப்பதை அறியவில்லையா.
இன்னொரு விடயம், கடாபியை காப்பாற்ற வேண்டி வரின் எமது இலங்கை அரசாங்கம் தயங்காது களத்தில் இறங்கும் எனவும் அறிவித்துள்ளது.
//வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை வைத்து சிலாகித்து, ஒரு காமெடிப் பதிவு ரசித்தேன். பல அறியாத விடயங்களையும் அறிந்தேன்.
இலங்கை அரசு லிபியா மீதான போருக்கு கண்டனம் என்று அறிக்கை விட்டிருப்பதை அறியவில்லையா.
இன்னொரு விடயம், கடாபியை காப்பாற்ற வேண்டி வரின் எமது இலங்கை அரசாங்கம் தயங்காது களத்தில் இறங்கும் எனவும் அறிவித்துள்ளது.//
வணக்கம் சகோ நிரூபன்!இந்த இடுகை இடும் நேரத்தில் இலங்கை அரசின் கடாபி நிலைப்பாடும்,இலங்கையில் ஐ.நாவுக்கு எதிரான கடாபி நிலைப்பாடும் வெளிப்படவில்லை.
வெளிப்பட்ட போது பின்னூட்டங்கள் வாயிலாக சில பதிவுகளில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
வெறுமனே பின்னூட்டமென்று இல்லாமல் இடுகைகளை பின்னோக்கி பார்ப்பது மகிழ்வை தருகிறது.
மீண்டும் இணைந்து கொள்வோம்.நன்றி.
Post a Comment