Followers

Sunday, February 13, 2011

வெட்கமே படாதீங்க எஸ்.எம்.கிருஷ்ணா!

எல்லோரும் கோபாலபுரத்து தாத்தாவை கும்முறதுலேயே குறியா இருங்க! மீனவர்களை சுடுவதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும்,கடல் எல்லை கடந்து மீன் ஓடிப்போகுது,அதனால மீனவர்கள் மீனை துரத்திகிட்டே போயிடுறாங்க,இதுல நாம் என்ன செய்ய இயலுமென்றும் அறிக்கை விடும் நம்மை நிர்வகிப்பவர்களின் லட்சணம் ஐ.நா சபை வரை சிரிப்பா சிரிக்குது.இந்தியாவின் மானம் போகுது:(

யார் எதைப் பேச வேண்டுமென்று மொத்தமான அச்சடித்த பிரதிகளை ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் கொடுக்கும் போது போர்ச்சுகீசிய நாட்டுக்காரர் பேச வேண்டிய அறிக்கையை நம்ம எஸ்.எம்.கிருஷ்ணா கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சிருக்கார்.அட!நம்ம பள்ளிக்குழந்தைகள் கூட பரவாயில்லை போல இருக்குதே!யாராவது புதுசா ஐந்து நட்சத்திர ஓட்டல் செமினாருக்கும் Buffet க்கும் போகும் போது திரு திருன்னு முழிக்கிற மாதிரி Forign minister SM Krishna would have got nervous when he climbed the steps of U.N. I am sure of that!

இனி தாத்தாக்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டிய தருணம்.இளைய தலைமுறைகளுக்குப் பயிற்சி கொடுத்து இந்திய நிர்வாகத்திலும்,வெளியுறவுக்கொள்கையிலும்,ஐ.நா சபைக்குள்ளும் நுழைய வைக்க வேண்டும்.அட!கொறஞ்சது சசி தரூரையாவது ஐ.நா உரையை வாசித்துட்டு வாய்யா ன்னு அனுப்பியிருக்கலாம் இப்போதைக்கு.

இந்தியாவின் மானத்தை ஊழல்.லஞ்சம் என்ற பெயரில் உள்நாட்டுக்குள்ளும், நாலு வரி ஒழுங்கா இந்தியா பற்றி ஆங்கிலம் பேசத்தெரியாம அடுத்தவன் நாட்டு உரையை ஐ.நாவிலும் ஒப்பிச்சுட்டு வரும் எஸ்.எம்.கிருஷ்ணாவை நினைக்கும் போது எனக்குத் தோன்றுவது

A bunch of idiots are governing us!

மேலும் ரத்த நாளங்களை சூடாக்கிக்க ஆசைபடறவங்க இங்கே போய் கட்டிங் போடுங்க!

16 comments:

சிவானந்தம் said...

<<<< ராஜ நடராஜன் said... சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை >>>

நண்பரே! மேலே சொன்ன பதிலை நீங்கள் எழுதியிருந்தால், உங்களுக்கான எனது விளக்கமான பதில் இது.

http://anindianviews.blogspot.com/2011/02/blog-post_13.html

ராஜ நடராஜன் said...

சிவா!காலையில் உங்கள் இடுகையைப் பார்த்தேன்.முழுவதும் சொல்லி இறுதி வரிகளில் தொபுக்கடீர் என்று இடுகை விழுந்து விட்டது என்பதால் மௌனமாக வந்து விட்டேன்.

ஈழம் குறித்து சொல்வதற்கும்,விமர்சிப்பதற்கும் நிறையவே உள்ளது.நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளதால் உங்கள் இடுகை குறித்து யாராவது கருத்தை முன் வைக்கிறார்களா என்று பார்க்கலாம்.

Thekkikattan|தெகா said...

இது வேதனையான சிரிப்பு - ஹாஹாஹா

மூணு நிமிஷம் என்பது எத்தனை நீண்ட நெடிய தூரம் :((

அப்படி சுட்டிக்காட்டி சரியான இந்திய சிங்கம் போட்ட பேப்பரையை எடுத்துக் காமிச்சு இதுதான் நம்பூட்டுன்னு சொல்லும் போதும், எஸ். எம். கே நாக்கை உள்ளர சுழட்டிக் கொண்டே ‘அசடு வழிஞ்சிக்கிட்டு’ ஆர்யூ ஷுயூர் இதானான்னு பின்னாடி திரும்பி கேக்கிறார்... ஐயகோ!

வெட்கம்ம்ம்ம் (சிவாஜி டோன்)!!

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2011/02/blog-post_434.html

தாராவரம், இதை நினைச்சுப் பெருமைப்படுங்கங்றேன்!!

ராஜ நடராஜன் said...

//இது வேதனையான சிரிப்பு - ஹாஹாஹா

மூணு நிமிஷம் என்பது எத்தனை நீண்ட நெடிய தூரம் :((

அப்படி சுட்டிக்காட்டி சரியான இந்திய சிங்கம் போட்ட பேப்பரையை எடுத்துக் காமிச்சு இதுதான் நம்பூட்டுன்னு சொல்லும் போதும், எஸ். எம். கே நாக்கை உள்ளர சுழட்டிக் கொண்டே ‘அசடு வழிஞ்சிக்கிட்டு’ ஆர்யூ ஷுயூர் இதானான்னு பின்னாடி திரும்பி கேக்கிறார்... ஐயகோ!

வெட்கம்ம்ம்ம் (சிவாஜி டோன்)!!//

தெகா!ஒண்ணு மட்டும் இப்ப எனக்கு சரியாப்புரியுது.உங்க ஊர்க்காரங்க பிரணாப் மாதிரி ஆளுக ஆங்கிலம் பேசுவதையும்,கிருஷ்ணா மாதிரி கோமாளிகளையும் பார்த்து ஆஹா!நமக்கு நல்ல அடிமைகள் சிக்கியிருக்காங்கன்னு மட்டும் இந்திய அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை அமைக்கிறார்கள் என்பது புரிகிறது.

நாம் இங்கே இணையக் கத்தலாய் தென் இந்திய கடல் பகுதியின் அபாயங்கள் குறித்து கத்திகிட்டே இருக்கோம்.அதைக்கண்டுக்காம போன தடவை எஸ்.எம்.கிருஷ்ணா சொதப்பிட்டாருன்னு இந்த முறை நிருபமா ராவ் மூலமா நீங்க இன்னும் எத்தனை அடி கொடுத்தாலும் நாங்க பேச்சு வார்த்தைக்கு வருவோமில்ல என பேச்சு வார்த்தைக்கு செல்கிறது இந்தியா.

சிவாஜியின் குரலை நினைவு படுத்தியதற்கு நன்றி தெகா.

சிவா!மறுபடியும் பின்னூட்டம் பக்கம் வந்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி இந்தியக் கொள்கைக்கு பெயர் விவேகம் இல்ல.அதுக்குப் பேர் Double track policy.

ராஜ நடராஜன் said...

//http://maniyinpakkam.blogspot.com/2011/02/blog-post_434.html

தாராவரம், இதை நினைச்சுப் பெருமைப்படுங்கங்றேன்!!//

பழமைண்ணா!நான் அப்புறமா படம் பார்க்கிறேன்.

வெட்டியும் ஒட்டியும் பேசியதில் உங்களோட நாட்டமை தீர்ப்பை விட உங்கள் குரல்வளம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்
//////சிவா!மறுபடியும் பின்னூட்டம் பக்கம் வந்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி இந்தியக் கொள்கைக்கு பெயர் விவேகம் இல்ல.அதுக்குப் பேர் Double track policy./////



நண்பரே! நீங்கள் இந்தியாவை தாக்கு தாக்கு என்று தாக்குவதால் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.

அரசியல் என்றாலே சுயநலம் என்றாகிவிட்டது. இதில் தனிப்பட்ட சுயநலம் தேசம் சார்ந்த சுயநலம் என்று இருவிதம் இருக்கிறது. தேசம் சார்ந்த சுயநலத்தை நாம் அதிகம் விமர்சிக்கமுடியாது.

இங்கே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அலட்சியமாக இருகிறார்கள் என்ற கோவம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு வழக்கில் நீங்கள் தோற்றுவிட்டால் நீதிபதியை குறை சொல்லக்கூடாது. நீங்கள் சரியான முறையில் வாதாடவில்லை என்றும் சொல்லலாம். காலம் கடந்துவிட்டது என்றாலும் `இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்` என்று ஒரு பதிவு போடுங்கள். அதையும் அலசுவோம்.

//////ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு!//////

நான் இங்க கருத்துதான் சொல்லியிருக்கேன்.

ராஜ நடராஜன் said...

//நண்பரே! நீங்கள் இந்தியாவை தாக்கு தாக்கு என்று தாக்குவதால் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.

அரசியல் என்றாலே சுயநலம் என்றாகிவிட்டது. இதில் தனிப்பட்ட சுயநலம் தேசம் சார்ந்த சுயநலம் என்று இருவிதம் இருக்கிறது. தேசம் சார்ந்த சுயநலத்தை நாம் அதிகம் விமர்சிக்கமுடியாது.

இங்கே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அலட்சியமாக இருகிறார்கள் என்ற கோவம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு வழக்கில் நீங்கள் தோற்றுவிட்டால் நீதிபதியை குறை சொல்லக்கூடாது. நீங்கள் சரியான முறையில் வாதாடவில்லை என்றும் சொல்லலாம். காலம் கடந்துவிட்டது என்றாலும் `இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்` என்று ஒரு பதிவு போடுங்கள். அதையும் அலசுவோம்.

//////ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு!//////

நான் இங்க கருத்துதான் சொல்லியிருக்கேன்.//

சிவா!உங்கள் மீள் வருகைக்கு நன்றி.இந்தியாவை தாக்குவதன் காரண காரியங்கள் என்ன என்பதனை எனது பதிவுகளும்,கூடவே பதிவுலகில் நிலவும் பொதுக்கருத்துக்களும் விளக்குமென நினைக்கிறேன்.

தாக்குவதாலேயே எனது இந்திய நேசத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.பொது வாழ்வில் உலவும் சுயநலவாதிகளை விட எனது தேசப்பற்று அதிகம் என்பதனை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.அதன் பொருட்டே எதிர்வினைப் பின்னூட்டங்களும் பதிவுகளும் கூட.

பின்னூட்டம் நீளம் கருதி அடுத்த பின்னூட்டத்தில் தொடருகிறேன்.

ராஜ நடராஜன் said...

அவரவர் மனம் சார்ந்த பல தரப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன.குங்குமம்,தினத்தந்தியென்று படித்த காலத்தில் அதுவே வேத வாக்காக இருந்தது.இப்பொழுது கருத்துக்கள் பல பரிணாமங்களாக விரிவதாலும்,அனுபவங்களும் கோடுகள் போடுவதாலும் தராசின் எடை எந்தப்பக்கம் ஏன் உயர்கிறது,குறைகிறது என்பது புரிகிறது.

கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்தான் ராஜிவின் மரணம் ஒரு துன்பியல் சம்பவம் என்று பிரபாகரன் கூறினார்.பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் பிரபாகரனின் கருத்து பற்றியும் அவரைப்பற்றியும் நான் எனது பதிவில் முன்பு எதிர்வினை செய்தவன்.

ஆனால் அப்போதைய காலகட்டத்தையும்,மே மாதம் 2009ன் கால அவலத்தையும் ஒரே எடையில் நிறுத்த இயலுமா சிவா!

இதோ எகிப்துக்காரனுக்கும் இன்னும் மனித உரிமைகளும்,சுதந்திர குரல்கள் எழுமிடமெல்லாம்தான் நான் குரல் கொடுக்கிறேன்.மொழியென்ற ஒரே காரணத்துக்காக என்னை ஈழச்சார்பாளன் என்ற வட்டத்துக்குள் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை.ஆனாலும் உலகின் முன் மனித அவலங்கள் முறையாகப் போய்ச் சேராத காரணத்தினாலும்,உலகரங்கில் ஒரு பேரவலம் இலைமறை காயாக மறைக்கப்பட்டு விட்ட காரணத்தாலும் இணையம் மூலமாவது உண்மைகள் வெளி வருகிறதே என்பதாலும், ஈழமும் மனித நேயத்துக்கான தேவை என்பதாலும் முன்பே சொன்னது போல் மொழியென்ற காரணத்தால் நீங்கள் என்னை ஈழத்தமிழர் என்று முத்திரை குத்தினாலும் அது எனக்குப் பெருமையே.

ஈழம் குறித்தும்,இந்தியம் குறித்தும் நிறைய படியுங்கள்.இணையத்தில் அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.அதுவே சரியான புரிதலை உங்களுக்கு தரும்.

உங்களின் பதிவுக்கு எதிர்வினை செய்தவர்களே அதிகம் என்பது தெரிகிறது.அதில் நானும் ஒருவனாகவே இணைகிறேன்.

ராஜ நடராஜன் said...

Double track policy க்கு தமிழில் அர்த்தம் என்ன தெரியுமா?

புள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது.

Thekkikattan|தெகா said...

இங்கே வந்து சிவா பேச முன் வந்ததால் இந்த மறுமொழி அவருக்கு.

//இதில் தனிப்பட்ட சுயநலம் தேசம் சார்ந்த சுயநலம் என்று இருவிதம் இருக்கிறது. தேசம் சார்ந்த சுயநலத்தை நாம் அதிகம் விமர்சிக்கமுடியாது.//

அப்படியாக பார்த்தால் உலகத்தின் அணைத்து எம்பயர்களும் அதன் சுய-ஆர்வம், நலம் சார்ந்தே உலகத்தினை தன்னகத்தே அடக்கி கொள்ள முயற்சித்து வந்திருக்கிறது. ஆனால், அதன் விளைவுகள் என்னவாக வரலாற்றில் ஓடித் தேய்ந்திருக்கிறது?

இப்பொழுது அமெரிக்காவும் தன் நலம் சார்ந்துதான் இந்த வெளியுறவுக் கொள்கைகளை அமைத்து கொள்கிறது. ஏன், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் எதிர்ப்பலைகளும், இயற்கை சுரண்டல்களும் அதிகமாக நடந்தேறுகிறது என்ற கம்ப்ளைண்ட் எழுந்து கொண்டே இருக்கிறது?

-----contd...

Thekkikattan|தெகா said...

சரி நம்ம நாடுதானே என்றும், நம்ம நலனுக்காகத்தானே ஊரான் பிள்ளையை கொன்று எண்ணெய் எடுத்து வருகிறது என்று, நாளக்கி நடக்க விருக்கும் அதனையொட்டிய வன்முறை எதிர் விளைவு புரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட முடியுமா? (உண்மையான தேசபற்று உடையவர்களும், மனிதம் போற்றுபவர்களும் - நீதி, நியாயம் என்பது கிடையாதா? - வள்ளுவம் சொன்ன ’இடித்துரைக்கும்’ நியதி எங்கே போனது?)

உங்களுக்கு ஒரு வேண்டுகோல் - இனிமேல் வரலாற்று-அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னால அதற்கு பின்னான முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு எழுதுங்கள். நண்பர் ராஜ நடராஜன், போன்று திறந்த நிலையில் மனதை வைத்துக் கொண்டாலே ஒழிய வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. நன்றி!

Unknown said...

இவ்வளவு கேவலமான நாட்டில் நாம் வாழ வேண்டிய கொடுமை..

அன்புடன் நான் said...

இன்னேரு வெளிநாட்டவரோடு உரையாடும் போது இதைபற்றி சொல்லிகாட்டி நம்மை கடுப்பேத்துராங்க... நாமதான் வெட்கப்படனும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் மகள் ( ஏழாம்வகுப்பு) இதுபற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னாள் , ஒருநாள் ஒபாமா இந்தியா வந்தபோது அவர் வாசித்த உரையை அவர் முன்பே வாசித்துப் பார்த்து பழகி எப்படி அழகாக வாசித்தார் என்றுஆசிரியை புகழ்ந்தாராம். அதொடு நம்ம நாட்டு தலைவர்கள் உரையை எப்போதும் யாரோ தயார் செய்து அவர்கள் அதை அங்கே வந்து வாசிப்பது வழக்கம் என்றும் குறிப்பிட்டாராம். அதானால் இப்படி தவறு நடப்பது சகஜம் தானே என்று அவள் மிக எளிதாகச் சொல்லிவிட்டாள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வகுப்பாசிரியை பாராட்டியதும் நம் தலைவர்களை குறைகூறியதும் இச்செய்தியைப் படித்து அல்ல.. அது கொஞ்ச நாள் முன்னால் வகுப்பில் நடந்த பேச்சு..
இந்த நேரத்தில் அதை மகள் நினைவிலிருத்தி இப்படி பதில் சொல்லி இருக்கிறாள்.. ஹ்ம் :( சின்னப்புள்ளைகூட பல நாள் பயிற்சிக்கு பின்னே தான் வகுப்பில் பேசப்போகிறாள்.