Followers

Sunday, May 15, 2011

கலைஞரே!நாங்கள் அல்ல உங்கள் எதிரிகள்!

பதிவுலகில் வலம் வரும் எழுத்துக்கள் எல்லாம் தமிழகத்தின் நாடி பார்க்கும் இயந்திரமாக இல்லாவிட்டாலும் அப்பாவி மக்களுக்கும்,பொது ஊடகங்களுக்கும்,பிரபலமான அறிவு ஜீவிகளுக்கும் இடையிlலான நெல்லிக்காய் கூட்டம் இவர்கள்.புன்முறுவலையும், வாழ்வியலையும் உணர்வையும், தர்க்கத்தையும், கோபத்தையும்,  பார்வைக்கு முன்வைப்பது மட்டுமே இவர்களின் பொழுதுபோக்கான சமூக அக்கறை.சிலர் இளம் கன்று பயமறியாது என்பதாலும்,இன்னும் சிலர் என் முகம் யாருக்குத் தெரியப் போகிறதெனும் தெம்பிலும்,இன்னும் சிலர் ஈழப்போரின் உக்கிரமான கட்டமான 2008ம் ஆண்டு துவங்கி 2009 வரை செய்திகளையும்,உள்ளொன்றும் புறமொன்றும் வரும் அறிக்கைகளையும், செயல்களையும் கூர்ந்து கவனித்து விமர்சித்தவர்களும் எனவும் கூடவே உங்கள் தவறுகளையும் சரியென்ற கழக கண்மணிகள் என்ற உங்கள் ஜால்ராக்கள் என ஒரு கூட்டம்.அவரவர் கருத்துக்களை,புலம்பல்களை, வடிகாலாக இணையத்தில் கொட்டித்தீர்க்கிறது  என்பது மட்டுமே தற்போதைக்கு இவர்களின் நிலைப்பாடு.உங்கள் ஆட்சியில் பூங்கோதை அவர்கள் இந்த வாய்களுக்குப் பூட்டுப் போடவேண்டுமென்ற திட்டங்களுக்கெல்லாம் நேரமில்லாத படி நீங்கள் அனைவரும் உங்கள் பிரச்சினைகளில் மூழ்கி கிடந்தீர்கள்.

மேம்போக்காக நோக்கினால் தேள் கொட்டும் வார்த்தைகளில் இவர்களே உங்கள் கழகத்துக்கும்,உங்கள் ஆளுமைக்கும் எதிரானவர்கள் என நுனிப்புல் மேய்பவர்களுக்கும் ஒருவேளை இணையம் வலம் வரும் உங்களுக்கு ஜால்ரா செய்பவர்களுக்கும் தோன்றும்.உங்களின் மெய்யான எதிரிகளோ உங்கள் சுயநலங்களின் ரகசியங்கள் கண்டு சத்தமில்லாமல் வலை விரித்தவர்களாகவும்,கட்டி அணைத்துக்கொண்டவர்களாகவும்,பட்டு சால்வை போர்த்தியவர்களாகவும்,முகஸ்துதி பாடி வலம் வந்ததை நீங்கள் அறிந்தீர்களோ அல்லது அறிந்தும் விழா மயக்கத்தில் உச்சிகுளிர்ந்தீர்களோ  உங்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்.
 
நிர்வாகம் என்பதில் சிறந்தவரென்றும் ,மக்கள் நலன்களை ஓரளவுக்கு இலவசமென்ற பெயரால் செய்தும் உங்களால் இயலாத தூரத்துக்குப் பிரச்சினைகள் வேரூன்றிப் போய்விட்டது என்பதையே தேர்தல் முடிவுகளின் தோல்விகள் சுட்டிக்காட்டுகின்றன.

சூழலின் பின்னலில் வெகுதூரம் போய்விட்ட நீங்கள் ஒரு இனத்தின் வலிகளுக்கு மருத்துவம் பார்க்கும் தகுதியில்லாமல் உங்கள் மனம் மரத்துப் போனதையே கடந்த ஈராண்டு கால ஈழ வரலாறும்,அதற்கு குரல் கொடுத்தவர்களுக்கான அரசு அடக்குமுறையும் பேசுகிறது.

வாழ்வியலில் தவறுகளையும் சரியென்று நிரூபித்த வித்தைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.தகுதியும்,வலிமையும் இருந்த முதல்வர் பதவி காலத்திலேயே உங்களால் தவிர்க்க இயலாத ஒன்று ஈழப் படுகொலைகள்.தமிழீழம் என்ற சரியானதை தமிழகத்தைப் பொறுத்தவரையில் தவறாக மாற்றிய தவறுக்கு எங்கே எப்படி பிராயச்சித்தம் செய்யப்போகிறீர்கள்?


43 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் கருத்து

சி.பி.செந்தில்குமார் said...

>>
மேம்போக்காக நோக்கினால் தேள் கொட்டும் வார்த்தைகளில் இவர்களே உங்கள் கழகத்துக்கும்,உங்கள் ஆளுமைக்கும் எதிரானவர்கள் என நுனிப்புல் மேய்பவர்களுக்கும் ஒருவேளை இணையம் வலம் வரும் உங்களுக்கு ஜால்ரா செய்பவர்களுக்கும் தோன்றும்.

நீட்

MANO நாஞ்சில் மனோ said...

சாட்டை சாட்டை சாட்டை சாட்டையடி[[கள்]]

Ram said...

ராஜ நட.. உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. சிறப்பு..

Unknown said...

யாருங்க சார் நீங்க.. என் உணர்வுகளை அப்படியே எழுத்தாக்கியிருக்கீங்க..

rajamelaiyur said...

Wow . . What a truthful articale . . Keep it up sir

ராஜ நடராஜன் said...

//முதல் கருத்து//

வாங்க சி.பி!முதல் போணி செஞ்சதோட கருத்தும் சொன்னதற்கு நன்றி.

பதிவுலகில் மோதிய தி.மு.க எதிர்ப்பு அலையே இவர்களுக்கு நாடி பார்த்து கணிக்க வசதியாக இருந்திருக்கும்.துவக்கம் முதலே தப்பாட்டம் மட்டுமே போட்டார்கள்.அதுவும் எப்படி?கிராமத்துல இருக்குறவனெல்லாம் இளிச்சவாயன்/வாயிகளென்று கிராமப் புற ஓட்டுக்களை நம்பியிருந்தார்கள்.

ராஜ நடராஜன் said...

//சாட்டை சாட்டை சாட்டை சாட்டையடி[[கள்]]//

போங்க மனோ!சொல்ல வேண்டிய காலத்திலே சொல்லியும் கேட்காம போயிட்டாங்க!இனி புலம்பி என்ன பயன்?

ராஜ நடராஜன் said...

//ராஜ நட.. உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. சிறப்பு..//

கூர்மதியன்!எழுத்து நடை அப்பப்ப மூடுக்கு தகுந்த மாதிரி மாறிக்கிடும்:)

நீங்க,ஆனந்தி,ஜோதிஜின்னு அழகிரிய போட்டு கும்முனத விட மதுரை மக்கள் செம கோபத்துல இருந்திருக்காங்க போல:)

ராஜ நடராஜன் said...

//யாருங்க சார் நீங்க.. என் உணர்வுகளை அப்படியே எழுத்தாக்கியிருக்கீங்க..//

பாரத்...பாரதி!நீங்க கண்ணுல படற போதெல்லாம் தொடர்ந்து உங்களுக்கு பின்னூட்டம் போட்டுகிட்டு வாரேன்!யாருன்னா கேட்கிறீங்க:)

ராஜ நடராஜன் said...

//Wow . . What a truthful articale . . Keep it up sir//

Thanks Raja!It is just a timely emotion of showing our regret,anger etc... to Mr.Karunanithy who have done a more constructive benovelence to Tamil nadu as well as to the dream of Eelam.

தறுதலை said...

திராவிடத்துவா போய் இந்துத்வா வந்திருக்கிறது. இரண்டுமே தமிழர்களுக்கு ஆப்புதான்.

காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் பாடை கட்டி, பால் தெளித்து கறிவிருந்தோடு கொண்டாடலாம் என்றால், அ.தி.மு.கவும், தே.மு.தி.க.வும் கல்யாணம் செய்துகொண்டு கலவரப்படுத்துகிறார்கள். இரண்டு நிகழ்வுகளுமே ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்பது உண்மைதான் என்றாலும் எதிர்கொள்ள சங்கடமாக இருக்கிறது.

இந்த நிலையை விருப்பு வெறுப்பின்றி ஒரு ஞானியைப் போல் தூரத்திலிருந்தபடி மெளனமாக வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

நாக. இளங்கோவன் அவர்களின் நாம் தமிழர் இடுகை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. அந்த முயற்சியை ஒத்த சிந்தனை கொணடவர்கள் முன்னெடுத்துச் செல்லலாம்.

500கோடி செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்திவிட்டு ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்றும், ஈழப் படுகொலைகளில் பங்கெடுத்த போலித்தனங்கள் செய்த டாக்டர் கயவ்ரின் மேல் இருக்கும் அறுவெறுப்பு இன்னும் அகலவில்லை.
அதே நேரத்தில், எந்த முயற்சியும் செய்யாத இன்னொரு புரட்டுக் கும்பலுக்கு ஆட்சி போயிருப்பது வேதனையாகவும் இருக்கின்றது.

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மே '2011)

http://rajavani.blogspot.com/ said...

மயக்கத்துல இருந்துதனாலயே ஏதோ நடக்குதுன்னுட்டு இருந்துட்டோம் ராஜநட...இப்பதான் மயக்கம் தெளிஞ்சிருக்கு...

ராஜ நடராஜன் said...

தறுதலை தெனாவெட்டுக் குறிப்புக்கள்ன்னு மார்ச் மாதம் 16ம் தேதி வை.கோ வின் அரசியல் நிலைப்பாடுன்னு உங்கள் பின்னூட்டத்துக்கு பதிவு போட்டா நீங்க தூங்கி எந்திருச்சு இப்ப வந்து பின்னூட்டம் போடறீங்களே:)

http://parvaiyil.blogspot.com/2011/03/blog-post_16.html

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு மறுபடியும் நினைவு படுத்தலாமென்று பார்த்தால் உங்கள் தெனாவெட்டுக் குறிப்புக்கள் புரபைல் ஒளிந்து கிடக்கிறது.

Jayalalitha's performance depends on how she is going to deliver in near future.Still she is not going to bring a magic wand in short tenure....

இறுகி மூச்சடைத்துக் கிடப்பதை விட ஏதாவது ஒரு வழியில் மாற்றமென்பது தேவையானது என நினைக்கிறேன்.மேலும் தொடர் வாரிசு அரசியலுக்கு முட்டுக்கட்டைப் போட்டதால் இந்த தேர்தல் மக்களாட்சியைப் பொருத்தவரை வெற்றியே.

வெறுமனே நாற்காலியில் சுற்றுபவரிடம் இயலாத ஒன்றை தேர்தல் தேவை கருதியாவது ஈழம் என்ற சொல்லை ஜெயலலிதா பாராளுமன்ற,சட்டசபை தேர்தல்களில் உச்சரித்திருப்பதால் பார்க்கலாம் இவரது செயல்பாடுகளை.

ராஜ நடராஜன் said...

//மயக்கத்துல இருந்துதனாலயே ஏதோ நடக்குதுன்னுட்டு இருந்துட்டோம் ராஜநட...இப்பதான் மயக்கம் தெளிஞ்சிருக்கு...//

தவறு!நாமதான் மக்கள் மயக்கத்துல இருக்காங்கன்னு நினைச்சுகிட்டிருந்தோம்.ஊடக செய்திகள் மழுங்கடித்த பின்னும் மக்கள் மௌனப்புரட்சி செய்திருக்காங்கன்னா மயக்கமான மாதிரி நடிச்சிருக்காங்கன்னுதான் தோணுது.

பொன் மாலை பொழுது said...

அவருக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன சந்தேகம்? தெரிந்ததால் தான் முக்கிய தலைகள் எல்லாம் வழக்கமாக சென்னை நகரில் போட்டி இடுவார்கள் ஏன் திருவாரூர் , ஆலந்தூர் என்று மாறினார்கள்? வேண்டிய அளவுக்கு மேல் எதிர்பார்த்த அளவுக்கு மேலே பணமும், செல்வமும், மற்ற நிலம் போன்ற சொத்துக்களும் இவர்கள் அனைவரிடமும் குவிந்து விட்டன. எனவே தோற்றாலும் கவலை இல்லை என்ற மிதப்பில் இருந்தார்கள். ஆனால் CBI இப்படி பூதமாக வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை.
நல்ல கருத்துக்கள்தான் (நமக்கு )

தறுதலை said...

தமிழர்களே டாஸ்மாக் மயக்கத்திலிருந்து எழுந்திரிச்சிருக்கும்போது, இதுக்கு அப்புறமும் தூங்குற மாதிரி நடிக்க முடியல :-)

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மே'2011)

ராஜ நடராஜன் said...

//அவருக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன சந்தேகம்? தெரிந்ததால் தான் முக்கிய தலைகள் எல்லாம் வழக்கமாக சென்னை நகரில் போட்டி இடுவார்கள் ஏன் திருவாரூர் , ஆலந்தூர் என்று மாறினார்கள்? வேண்டிய அளவுக்கு மேல் எதிர்பார்த்த அளவுக்கு மேலே பணமும், செல்வமும், மற்ற நிலம் போன்ற சொத்துக்களும் இவர்கள் அனைவரிடமும் குவிந்து விட்டன. எனவே தோற்றாலும் கவலை இல்லை என்ற மிதப்பில் இருந்தார்கள். ஆனால் CBI இப்படி பூதமாக வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை.
நல்ல கருத்துக்கள்தான் (நமக்கு )//

இலவு காத்த கிளி மாதிரி பணம் மட்டும் சேர்த்து வைத்து எனனங்க பலன் கக்கு.மாணிக்கம்?

தோற்றாலும் கவலையில்லையென்ற மப்புல இருந்திருப்பார்கள் என்றாலும் இப்படியா எதிர்க்கட்சி தகுதி கூட இல்லாமல் தோற்பது?

நக்கீரன் கோவாலுக்கு ஒரு தனி பதிவே போடவேண்டும்.காலையில் 5 மணிக்கு கலைஞர்-அய்ங்கரன் தொலைக்காட்சிய திருப்புனா இந்தாளு என்னமா தான் எடுத்த கணிப்பு பற்றி அளந்துகிட்டுருக்கிறார்?இந்த மாதிரி கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளையெல்லாம் கலைஞர் ஊடகமா வச்சிகிட்டு நம்மளையெல்லாம் கோவிச்சிகிட்டா நாம என்ன செய்ய முடியும்?

ராஜ நடராஜன் said...

//தமிழர்களே டாஸ்மாக் மயக்கத்திலிருந்து எழுந்திரிச்சிருக்கும்போது, இதுக்கு அப்புறமும் தூங்குற மாதிரி நடிக்க முடியல :-)//

இப்பவாவது தூங்குற மாதிரி நடிக்க முடியலைன்னு திரும்ப வந்தீங்களே:)

மக்களா மப்புல இருந்தாங்க?
அதெப்படி கோடி கோடியா பணம் போட்டு தேர்தல் கணிப்பு நடத்துறேன் பேர்வழிகள் கூட தோற்றுப் போனார்கள்!!!

நாக இளங்கோவன் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.இதே மாதிரி சிந்தனைகள் நிறையவே உலகம் முழுதும் சிதறிக் கிடக்கின்றன.ஒட்டு சேர்க்கும் முயற்சிக்குத் தான் ஆளில்லை.இங்கே சிவா சின்னப்பொடி என்ற பெயரில் ஊடகவியளாளர் GTV யிலிருந்து சமீப காலமாக பதிவுகள் இட்டு வருகிறார்.இவரைப் போன்றவர்கள் இன்னும் வாசகர் தளங்களுக்கு அறிமுகப் படுவதும் தமிழகத்தினோடு உறவுப்பாலம் அமைப்பதற்கும் செயல்பட வேண்டும்.

நிரூபன் said...

முதலாவது பந்தியில்,
பதிவுலகத்தின் மூத்த பதிவர், அனுபவசாலி என்பதற்கான உண்மை தெரிகிறது சகோ.

நிரூபன் said...

பல் வேறு பட்ட மனித முகங்களையும் அலசி, உச்சிப் பொட்டியில் சாட்டையால் அடித்துள்ளீர்கள்.
பல சூட்சுமங்களையும், பல மனிதர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் பக்குவம் அடியேனுக்கு கிடைக்கவில்லை சகோ. ஆதலால் எஸ் ஆகிடுறேன்.

வேலவன் said...

//உங்களின் மெய்யான எதிரிகளோ உங்கள் சுயநலங்களின் ரகசியங்கள் கண்டு -----///

மிகச்சரியான கருத்து ராஜ நடராஜன்

உண்மைத்தமிழன் said...

சூப்பருங்கண்ணா..! எழுத்து நடை சொக்க வைக்கிறது..! சல்யூட்..!

raja said...

பிரமாதமாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

//முதலாவது பந்தியில்,
பதிவுலகத்தின் மூத்த பதிவர், அனுபவசாலி என்பதற்கான உண்மை தெரிகிறது சகோ.//

நிரூபன்!நான் பதிவுலகம் வந்த துவக்கத்தில் தமிழில் புகைப்படக்கலை என்ற தளத்தால் கவரப்பட்டு வந்து மொக்கை போட்டுக்கொண்டிருந்தவன்.அப்புறம் ஈழப்போரின் கால கட்டம் என்னை திசை மாற்றி விட்டது.

ராஜ நடராஜன் said...

//பல் வேறு பட்ட மனித முகங்களையும் அலசி, உச்சிப் பொட்டியில் சாட்டையால் அடித்துள்ளீர்கள்.
பல சூட்சுமங்களையும், பல மனிதர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் பக்குவம் அடியேனுக்கு கிடைக்கவில்லை சகோ. ஆதலால் எஸ் ஆகிடுறேன்.//

இப்பத்தானே வந்துள்ளீர்கள்.போகப்போக சரியா போயிடும்:)

ராஜ நடராஜன் said...

////உங்களின் மெய்யான எதிரிகளோ உங்கள் சுயநலங்களின் ரகசியங்கள் கண்டு -----///

மிகச்சரியான கருத்து ராஜ நடராஜன்//

வாங்க வேலவன்!கருத்துக்கு நன்றி.

உங்கள் புரபைல் படம் பார்க்கும் ரசனை என்னோட மன அலையுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி:)

ராஜ நடராஜன் said...

//சூப்பருங்கண்ணா..! எழுத்து நடை சொக்க வைக்கிறது..! சல்யூட்..!//

வாங்க உண்மை தமிழன் அண்ணே!என்னமோ சொல்வாங்களே.... வசிஷ்டர் கைல குட்டு வாங்குன மாதிரி இருக்குது:)

ராஜ நடராஜன் said...

//பிரமாதமாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.//

Raja! உங்களுக்கு முன்னாடி க்யூல உண்மை தமிழன் நின்னுகிட்டு முறைக்கற மாதிரி இருக்குதே:)

ஹேமா said...

நடா..என்றாலும் பாவம்தான் அவர் !

ஜோதிஜி said...

படித்துக் கொண்டே இருக்கின்றேன் ஒவ்வொன்றாக. பக்கம் பக்கமாக நெஞ்சுக்கு நீதி எழுத வேண்டும். பார்க்கலாம். முயற்சிக்கின்றேன்.

செங்கோவி said...

நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்று, நச் என்ரு ஒரு பதிவு..கலக்கல் ராஜா! (ஆமா, நீங்க யாருன்னு நான் கேட்க மாட்டேன் பாஸ்!)

ராஜ நடராஜன் said...

//நடா..என்றாலும் பாவம்தான் அவர் !//

நமக்கு கருணையுள்ளம் ஹேமா!அதனால்தான் பதவியென்ற நாற்காலியிலிருந்து இறங்கியவுடன் இவரை மனிதனாகப் பார்க்க விழைகிறோம்.அதே நாற்காலியின் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய போது இவரது கருணையை நினைத்தால் இன்னும் தாங்கல:(

ராஜ நடராஜன் said...

//படித்துக் கொண்டே இருக்கின்றேன் ஒவ்வொன்றாக. பக்கம் பக்கமாக நெஞ்சுக்கு நீதி எழுத வேண்டும். பார்க்கலாம். முயற்சிக்கின்றேன்.//

ஜோதிஜி!கலைஞரின் இந்தக் காலங்களையும்,கடந்த காலங்களையும் உண்மைத் தமிழன் விகடன் உதவியால் ஆவணப்படுத்தியுள்ளார்.

நீங்களும் முயற்சிக்கலாம்.கலைஞரைப் பற்றிய கருத்தியல் பதிவுலகம் மட்டுமே சரியாக ஆவணப்படுத்தும்.

ராஜ நடராஜன் said...

//நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்று, நச் என்ரு ஒரு பதிவு..கலக்கல் ராஜா! (ஆமா, நீங்க யாருன்னு நான் கேட்க மாட்டேன் பாஸ்!)//

செங்கோவி!நான் யார் என்கிற புரபைல் முன்னாடி திறந்த புத்தகமாகவே கிடந்தது.மூஞ்சி,பேர் போட்டு எழுதும் நான் புரபைல மட்டும் மறைச்சு என்ன செய்யப்போறேன்?

புரபைல ஒரு ஆங்கில தளத்திற்கு தொடுப்புக் கொடுக்கப் போய் அங்கே ஒரே தமிழ் எழுத்தாய் தெரிய புரபைலை மறைக்க வேண்டியதாப் போயிடுச்சு பாஸ்:)

வருண் said...

எதுக்கு இன்னும் சப்பைகட்டு??நீங்க கலைஞர் எதிரி இல்லைனா தமிழின துரோகினு ஆகுது! தமிழின துரோகி நடராஜன்!

You better be ENEMY of MK!

Unknown said...

சாகும்போதுக்கூட முதல்வர் பதவியில் இருக்க வேண்டும், தன் பேரன் வீட்டு நாய்குட்டி கூட அதிகார பலத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்தவர் அவர்..

இனியும் கூட திருந்தமட்டார்..

Anonymous said...

கருணாநிதிக்கு கொடுத்த மரண அடி போதாது..ஆதி முதல் அந்தம் வரை முடக்கப்பட வேண்டும்

Anonymous said...

கருணாநிதி மக்களிடம் கொள்ளையடிததை பிடுங்க வேண்டும்!

ராஜ நடராஜன் said...

//எதுக்கு இன்னும் சப்பைகட்டு??நீங்க கலைஞர் எதிரி இல்லைனா தமிழின துரோகினு ஆகுது! தமிழின துரோகி நடராஜன்!

You better be ENEMY of MK!//

திருஷ்டி பொட்டு மாதிரி இப்படி ஒரு பின்னூட்டம் பார்க்க நல்லாவே இருக்குதுங்க வருண்:)

நன்றி.

ராஜ நடராஜன் said...

//சாகும்போதுக்கூட முதல்வர் பதவியில் இருக்க வேண்டும், தன் பேரன் வீட்டு நாய்குட்டி கூட அதிகார பலத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்தவர் அவர்..

இனியும் கூட திருந்தமட்டார்..//

செந்திலண்ணே!63 சீட்டுக்கு மல்லுக்கட்டி அடுத்த நாள் கூட்டணி அறிக்கை விட்ட கணத்துல இருந்து பதவிக்காக இவர் எதுவும் செய்வார் என்ற அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்சம் மதிப்பும் கரையேறிப் போய்விட்டது.

கருணாநிதி,ஜெயலலிதா என்ற நிரந்தர முதல்வர் கனவு நொறுங்கிப் போய் விட்டது.பார்க்கலாம் தி.மு.கவின் குரல் எந்த திசையிலிருந்து எழுகிறதென்று.

ராஜ நடராஜன் said...

//கருணாநிதி மக்களிடம் கொள்ளையடிததை பிடுங்க வேண்டும்!//

சதிஷ்!போபர்ஸ்ல போன காசையே திரும்ப வாங்க முடியல.ஏப்பம் விட்ட காசு அசையாப் பொருளாகவும்,வியாபாரத்திலும்,கருப்பு பணமாகக் கூட சுத்திகிட்டிருக்கும்.

பிடுங்கறது மாங்காய் பறிக்கிற மாதிரி எளிதா என்ன?ஜேப்படி திருடர்கள் மாதிரி பல கைகள் மாறியிருக்குது.

நீங்க இவுகளையே கண்கொட்டாம பார்த்துகிட்டு ஜெ வை கோட்டை விட்டுறாதீங்க சொல்லிப்புட்டேன்:)