Followers

Tuesday, May 10, 2011

பிளாக்குவதின் மகத்துவம்

நாம் ஒவ்வொருவரும் பலவேறு பட்ட காரணங்களுக்காக பதிவிடுகிறோம்.மூளை குறு குறுப்பதை பதிவு செய்வதை தவிர வேறு ஆதாயமில்லாமல் நான் கிறுக்குவதைப் போலவே பெரும்பாலும் சக பதிவர்களும் என்னோடு கூட சக பயணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

கனடாவில் கான்சரில் இறந்தவரின் இறுதி பதிவு என்ற தலைப்பை படித்து விட்டு உள்ளே சென்றால் டெரிக் மில்லர் என்பவரின் இறுதி பதிவு மில்லியன் கணக்கில் ஹிட் வாங்கியதென செய்தி.

41 வயதுடைய டெரிக் மில்லர் என்பவர் 16 வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவிக்கு சொன்னது ”நாம் ஒருவருக்கொருவர் என்ற உறவு இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படியிருந்திக்குமென தெரியவில்லை.ஆனால் அது மிக மோசமான ஒன்றாக இருந்திருக்கும்.உன்னை நான் ஆழமாக நேசித்தேன்...நேசித்தேன்...நேசித்தேன்.”

சென்ற புதன்கிழமை டெரிக் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறப்பதற்கும் முந்தைய ஒரு தினத்தில்  www.penmachine.com என்ற அவரது தளத்தில் பதிவு செய்யப் பட்ட பதிவு.

நம்ம ஊர் பழபெரும் பதிவர்கள் மாதிரி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10 வருடத்திற்கும் மேலாக புகழ் பெற்ற பதிவர். கான்சரில் நான்காம் நிலையெனப்படும் மெட்டாஸ்டேடிக் கலரெக்டல் கேன்சர் இருக்கும் அறிகுறிகள் 2007ல் தெரிந்தது.டெரிக் இறந்த பின் மே நான்காம் தேதி 143 பின்னூட்டங்கள் நண்பர்களும்,முகமறியாதவர்களும் போட்டதில் அதிக தள நெரிசலில் மூச்சுத் திணற நண்பர் ஒருவரின் உதவியால் வேறு ஒரு சர்வருக்கு டெரிக்கின் தளம் மாற்றப்பட்டது.

”இதோ இங்கே நான்!நான் இறக்கப் போகிறேன்.இதுவே எனது தளத்தின் கடைசி பதிவு.அதற்கு முன் எனது கான்சரின் தண்டனையால் எனது உடலவயங்கள் மூடிக்கொள்ளும் போது என் குடும்பத்தாலும்,நண்பர்களாலும் இதனை வெளியிட வேண்டுகிறேன்.இயங்கும் தளமாக இருந்த ஒன்று இனி வரலாறாகப் போகிறது.”

நமது வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதை யாரும் கற்பனை செய்து விடமுடியாது.நாம் என்ன செய்கிறோமோ அது பற்றி மகிழ்ச்சியடையலாம்.நாம் திட்டமிடலாம்,ஆனால் அது செயல்படுமா என்பதனை சொல்ல இயலாது.எனது நோயிலும்,இறப்பிலும் இதனையே எனது மகள்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்...நம்புகிறேன்.எனது அன்பான வியப்புக்குரிய மனைவி ஆர்ட்ரியும் இதனையே காண இயலும்.இவர்களும் ஒரு நாள் இறப்பார்கள் என்றாலும்,தாம் செய்பவைகள் குறித்து மகிழ வேண்டும்.மூளையின் திசுக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.முடிந்த வரை சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் தாங்கள் நினைத்தபடி நிகழாமல் போவதால்,அப்படி நிகழும் பட்சத்தில் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.

டெரிக் மில்லரின் தளம் மூன்று மில்லியன் ஹிட்களுக்கும் மேல் சென்றதாக அவரது மனைவி ஆர்ட்ரிக் மில்லர் கூறுகிறார்.டெரிக் மில்லரின் நண்பர்,ஆலிஸ்டர் கால்டர் வேறு பெரும் இணையத்திற்கு மாற்றிய பின் சொன்னது”மில்லரின் தளம் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் ஹிட்களாவது அடைந்திருக்கும்.ஆனால் அவரது தளம் க்ராஷ் ஆனதால் கணக்கை கணிப்பது கடினமாகிவிட்டதென்கிறார்.

ஆர்ட்ரிமில்லரும் வலைப்பதிவரே.அவரது கணவரின் கேன்சர் அனுபவங்களை www.talkingtoair.com என்ற தளத்தில் குறிப்பிடும் போது அவரது கணவர் கடந்த இரு மாதங்களாக பேச இயலாமல் போன போது மில்லரின் வலைத்தளமே உதவியாக இருந்தது.மில்லரால் பேச இயலாவிட்டாலும் மூளை நன்றாகவே செயல்பட்டுக்கொண்டிருந்தது.

"மில்லர் பேச இயலாத போதே அவரது தளத்தை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன்...அப்பொழுதுதான் மில்லரின் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.மில்லரின் பிளாக் எனக்கு நினைவுப் பரிசாக அமைந்தது” என்கிறார் ஆர்ட்ரிக் மில்லர்.

இன்னும் கொஞ்சம் ஆங்கில தகவல்களுக்கு NDTV யின் இந்த செய்திக்கும்  மற்றும் டெரிக்,ஆர்ட்ரி மில்லரின் தளங்களுக்கு செல்லுங்கள்.

33 comments:

பொன் மாலை பொழுது said...

நாம் எழுதிய ப்ளாக்குகள் நமக்கு பின்னரும் வாழும் அல்லா.அது ஒரு ஒப்பற்ற நினைவுதானே.

ஜோதிஜி said...

தமிழ்வலைபதிவுகளை தவிர வேறெந்த மொழியிலும் பொழுது போக்கு சமாச்சாரங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் உண்டா?

MANO நாஞ்சில் மனோ said...

இன்றைய பதிவு நாளைய வரலாறு....

Unknown said...

ஆச்சர்யமான தகவல்..

Chitra said...

"மில்லர் பேச இயலாத போதே அவரது தளத்தை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன்...அப்பொழுதுதான் மில்லரின் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.மில்லரின் பிளாக் எனக்கு நினைவுப் பரிசாக அமைந்தது” என்கிறார் ஆர்ட்ரிக் மில்லர்.


...... very touching!

Chitra said...

ஆத்மார்த்தமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மறைவுக்குப் பின்னும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களும் உணர்வுகளும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்று காட்டி இருக்கிறது. And the power of blogging..... mmmmmm.....

ஆ.ஞானசேகரன் said...

நம் எண்ணங்களை விட்டு செல்லும் தளம்.....

techsatish said...

நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

ஹேமா said...

நடா....எம் எண்ணங்களை எதிர்காலம் அறிந்துகொள்ள இந்த இணைய எழுத்துக்கள் ஆவணப்பதிவுகள்போலத்தானே !

பாலா said...

நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி..

நிரூபன் said...

காத்திரமான வலைப் பதிவுகள் இறப்பிற்குப் பின்னரும் வாழும் என்பதை உங்களின் இப் பதிவு உதாரணத்தோடு சொல்லுகிறது,

http://rajavani.blogspot.com/ said...

நம்முடைய எண்ணங்களை திரும்பிபார்க்கும் ஒரு ஆவணம் ராஜநட...

Anonymous said...

கேன்சரில் இறந்துபோன பதிவரின் கடைசி பதிவு மனதை கனக்க செய்து விட்டது

ராஜ நடராஜன் said...

//நாம் எழுதிய ப்ளாக்குகள் நமக்கு பின்னரும் வாழும் அல்லா.அது ஒரு ஒப்பற்ற நினைவுதானே.//

வாங்க முதல் போணி மாணிக்கம்:)இந்தப் பதிவு எழுதும் வரை அப்படியொரு நினைப்பே மனதில் இருந்ததில்லை.இதுவும் ஒரு பொக்கிசம்தான்னு நினைக்கிறப்போ மலைப்பாத்தான் இருக்குது.

ராஜ நடராஜன் said...

//தமிழ்வலைபதிவுகளை தவிர வேறெந்த மொழியிலும் பொழுது போக்கு சமாச்சாரங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் உண்டா?/

தமிழ் திரட்டிகள் தவிர இத்தனை வசதிகளும் உண்டான்னும் கேட்க தோணுது.

ஜோதிஜி!எழுதிப் பழகுகிறோம்.தமிழ்வலைபதிவுகள் ஒரு புதிய முயற்சிக்கான தளம்.இன்னும் நகருவோம் என்று நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//இன்றைய பதிவு நாளைய வரலாறு....//

ஆமாம் மனோ!இல்லைன்னா அரபிக்காரன் கதையெல்லாம் யார் சொல்லித் தரப்போறா:)

ராஜ நடராஜன் said...

//ஆச்சர்யமான தகவல்..//

செந்திலண்ணே!பல ஊர் சுத்தும் உங்களுக்கு ஆச்சரிய தகவலா:)டெரிக் மில்லர் ஒரு விதத்தில் ஆச்சரியம்தான்.

ராஜ நடராஜன் said...

//...... very touching!//

It is chitra madam.

ராஜ நடராஜன் said...

//ஆத்மார்த்தமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மறைவுக்குப் பின்னும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களும் உணர்வுகளும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்று காட்டி இருக்கிறது. And the power of blogging..... mmmmmm......//

இதுவரைக்கும் இந்த கோணத்தில் சிந்திக்கவேயில்லை.நாம் கூட ஆங்கில எழுத்து நடை அளவுக்கு செல்ல இயலும்.ஆனால் நீங்க முன்னாடி சொன்ன தாயம்மா கதை மாதிரி நிலைகள் இருப்பதாலும் சுய கதைகள் சொன்னால் சில சமயம் பூமராங் மாதிரி திரும்ப வந்து நம்மையே முட்டும்ங்கிறதால முன்னெட்டு வைப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கவே செய்கிறது:(

ராஜ நடராஜன் said...

//நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!//

நானே யாராவது திருடமாட்டாங்களான்னு ஆளு தேடிகிட்டிருக்கேன் நீங்க வேற விட்ஜெட் போடச் சொல்றீங்க இந்தியன்:)

ராஜ நடராஜன் said...

//நடா....எம் எண்ணங்களை எதிர்காலம் அறிந்துகொள்ள இந்த இணைய எழுத்துக்கள் ஆவணப்பதிவுகள்போலத்தானே !//

நிச்சயம் ஹேமாவின் பிகாசோ கவிதைகள் ஆவணமே:)

ராஜ நடராஜன் said...

//நம் எண்ணங்களை விட்டு செல்லும் தளம்.....//

அதெல்லாம் சரிதான் ஞானசேகரன்!நாளைக்கு கூகிளண்ணன் பட்டா போட்ட இடத்துக்கு காசு கொடுன்னா என்ன செய்யறது:)

ராஜ நடராஜன் said...

//நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி..//

பாலா!இன்றைக்கு வேறு ஒரு கடைல bala ன்னு பெயரோட ஒரு பின்னூட்டம் சிரிக்க வைத்தது.அது நீங்களா?

ராஜ நடராஜன் said...

//காத்திரமான வலைப் பதிவுகள் இறப்பிற்குப் பின்னரும் வாழும் என்பதை உங்களின் இப் பதிவு உதாரணத்தோடு சொல்லுகிறது,//

சமூக உணர்வோடும்,எழுத்தின் மீது காதலும் கொண்டு எழுதும் எழுத்துக்கள் வலைப்பதிவர்களில் சிலரை நிச்சயம் எதிர்காலம் அடையாளம் காட்டும்.

ராஜ நடராஜன் said...

//நம்முடைய எண்ணங்களை திரும்பிபார்க்கும் ஒரு ஆவணம் ராஜநட...//

வாங்க தவறு!சில சமயம் பின்னாடி நோக்கிப் பார்த்தா நமக்கே ஆச்சரியமாத்தான் இருக்குது.உதாரணத்துக்கு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி கல்மாடிப் பேச்சுக்கெல்லாம் கை தட்டுறீங்களே மன்மோகன்னு கேட்டா அப்புறம் மெல்ல மெதுவா கல்மாடி களி திங்கப் போவது ஏனோ காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை மாதிரியா இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்குது.இன்னுமொரு உதாரணம் அமிதாப் பச்சனை இலங்கை போக வேண்டாம்ன்னு சொன்னது:)

ராஜ நடராஜன் said...

//கேன்சரில் இறந்துபோன பதிவரின் கடைசி பதிவு மனதை கனக்க செய்து விட்டது//

சதிஷ் அண்ணே!இருக்குற தேர்தல் வேலைகளையெல்லாம் விட்டுட்டு துக்கம் விசாரிக்க வந்ததற்கு நன்றி.

அமர பாரதி said...

இதே போல தமிழிலும் பெண்மனி ஒருவர் அவருடைய கேன்ஸர் அவஸ்தைகளை பதிவு செய்திருந்தார். பெயர் மறந்து விட்டது. மணம் கணக்கச் செய்யும் இடுகைகள் அவை.

செங்கோவி said...

அப்படியும் ப்ளால் எழுதுறாங்க..நாம....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மார்பகப்புற்றின் போது பதிவர் அனுராதா தனது அனுபவங்களை அவ்வாறே இறப்பது வரை பதிவு செய்து வந்தார்( கணவரின் உதவியோடு )

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://anuratha.blogspot.com/
அனுபவக்குறிப்புகள் அடங்கிய ’கேன்சருடன் ஒரு யுத்தம்’ என்பது அவருடைய தளம்.

ராஜ நடராஜன் said...

//இதே போல தமிழிலும் பெண்மனி ஒருவர் அவருடைய கேன்ஸர் அவஸ்தைகளை பதிவு செய்திருந்தார். பெயர் மறந்து விட்டது. மணம் கணக்கச் செய்யும் இடுகைகள் அவை.//

பதிவர் முத்துலஷ்மி குறிப்பிடுவது மாதிரி பதிவர் அனுராதாவும் அவரது வாழ்க்கை குறிப்பு மாதிரி எழுதினார்.குறிப்பிட மறந்து விட்டேன்:(

ராஜ நடராஜன் said...

//அப்படியும் ப்ளால் எழுதுறாங்க..நாம....//

செங்கோவி!தோப்புக்கரணம் போட்டா நோய் குண்மாகுதுன்னு மேல்நாட்டில் வகுப்பு எடுக்கிற மாதிரி உள்ளூர் அருமைகள் நமக்கு தெரிவதில்லை.

முத்துலஷ்மி மேடம் குறிப்பிடுவது மாதிரி பதிவர் அனுராதா அவரது கேன்சர் அனுபவங்களை தமிழில் பதிவு செய்திருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

//http://anuratha.blogspot.com/
அனுபவக்குறிப்புகள் அடங்கிய ’கேன்சருடன் ஒரு யுத்தம்’ என்பது அவருடைய தளம்.//

முத்துலஷ்மி மேடம்!குறிப்பிட மறந்து விட்டேன்.நீங்கள் இதனை இங்கே நீங்கள் பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.