பத்திரிகை செய்தி.
கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்ட விரோதமாக பறிமுதல் செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவிலும் சரி, இறக்குமதியாகவிருந்த கனடாவிலும் சரி இந்த ஆவணம் தடை செய்யப்பட்ட ஆவணம் அல்ல.
மேலும் இவ்விரு நாடுகளிலும் இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கடந்த சனவரி 9 அன்று இந்தியாவில் சென்னையிலும், கடந்த மார்ச் 13 அன்று கனடாவில் டொரோண்டோ நகரிலும், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்நிகழ்வுகள் நடைபெற்றன.இவ்விரு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்நூல் சென்றடைந்துள்ளது. பிரான்சு தலைநகர் பாரீசில் பெப்.4 ஆம் தேதியில் இந்நூல் ஆர்வலர்களால் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஐ. நா. நிபுணர் குழு, டப்ளின் தீர்ப்பாயக்க்குழு உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பல நாடுகளின் நாடாளுமன்ற பிரதி நிதிகள் அனைவருக்கும் இந்நூல் உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்களால் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.60 ஆண்டு கால ஈழ இனப்படுகொலைப் புகைப்படங்களை, 350 க்கும் மேல் உள்ளடக்கியுள்ள இந்த ஆவணம், பார்ப்பவர்களின் மனதில் மனித நேயத்தைதூண்டும் மனித நேய நூலாக இருப்பதால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்நூல் தடுக்கப்படவில்லை.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமணி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே , சண்டே இந்தியன், உயிர்மை, புதிய பார்வை உள்ளிட்ட தமிழகத்தின் 30 க்கும் மேற்பட்ட இதழ்கள் நூலை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்துள்ளன.தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த் திரைத் துறையினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், காந்தியவாதிகள், அனைத்து மத குருமார்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நூலை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
எனவே இந்தியாவிலும் கனடாவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்நூலை இந்திய சுங்கத்துறை அனுமதியுடன் கனடாவிற்கு செல்லும் வழியில் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத் துறையினருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது இந்திய, கனடா மக்களின் கருத்து சுதந்திர உரிமையை இலங்கை அரசு பறிக்கும் செயலாகும் என தெரிவித்து இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும் என சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து இந்திய ஊடகங்களும், தமிழகத்தின் அனைத்து அரசியல் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் இச்செயலை கண்டிப்பதோடு, சட்ட விரோதமாக பறிமுதல் செய்த நூலை இலங்கை அரசு விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஜெ.பிரபாகரன்,
நூலாசிரியர்,
என்ன செய்யலாம் இதற்காக?
அ.சரவணகுமார்,
பென்னி குயிக் பதிப்பகம்.
மதுரை.
20 .05 .11
மதுரை.
13 comments:
மிகவும் அதிக தரவுகளையும்,தகவல்களையும் உள்ளடக்கிய அருமையான ஆவணம் அது .அனைவருக்கும் சென்று சேர்க்கவேண்டும் .ராசபக்சேவை உலகம் தண்டிக்கும் வரை முயற்சிகள் தொடரவேண்டும் .இனப்படுகொலையை ஒவ்வொரு தமிழனும் உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் .
மனித உயிர்கள்,உரிமைகள் காக்கப்படவேண்டும் .
ராஜபக்ஷே அரசு எல்லை மீறித் தான் சென்று கொண்டுள்ளது. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கின்றதா? இருந்தால் அதன் லின்க்கையும் கொடுக்கலாமே?
//மிகவும் அதிக தரவுகளையும்,தகவல்களையும் உள்ளடக்கிய அருமையான ஆவணம் அது .அனைவருக்கும் சென்று சேர்க்கவேண்டும் .ராசபக்சேவை உலகம் தண்டிக்கும் வரை முயற்சிகள் தொடரவேண்டும் .இனப்படுகொலையை ஒவ்வொரு தமிழனும் உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் .
மனித உயிர்கள்,உரிமைகள் காக்கப்படவேண்டும் .//
வாங்க நண்டு!பிரபாகரனின் என்ன செய்யலாம் இதற்காக புத்தகம் ராஜபக்சே குழுவினரின் போர்க்குற்றங்களை முழுவதுமாக உலகுக்கு காட்டும் படம்.இனப்படுகொலை என்பதற்கும் போரின் அத்துமீறல்களுக்கும் சாட்சியாக இந்த புத்தகம் இருக்கிறது.
//ராஜபக்ஷே அரசு எல்லை மீறித் தான் சென்று கொண்டுள்ளது. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கின்றதா? இருந்தால் அதன் லின்க்கையும் கொடுக்கலாமே?//
செங்கோவி!இந்த புத்தகத்தின் சில பகுதிகளை ஏற்கனவே கே.ஆர்.பி செந்தில் இந்த தொடுப்பில் நிஜ ஆதாரம் என்ற லின்ங்கில் கொடுத்துள்ளார்.
இளகிய மனதுடையவர்கள் யாராவது பின்னூட்டம் படித்தால் இணைப்புக்குச் செல்ல வேண்டாம்.மனிதாபிமானமில்லாத போரின் அவலங்கள் அத்தனையும்.
http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_10.html
நெஞ்சம் பொருக்கவில்லையே என்ன செய்வேன், இந்த ஈவிரக்கம் இல்லாத ஜென்மங்களை...
சுருங்கக் கூறின், உண்மைகள் வெளியே வருவதைத் தடுக்கும் ஒரு முயற்சி.
இந் நூலினைத் தடை செய்வதால் தங்களைப் பாதுக்காக்க முடியும் எனும் ஒரு ஆசை..அவர்களுக்கு.
நிச்சயம் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாகவே படுகின்றது. அவ்வாறு மோசமான சங்கதிகள் அதில் இருக்குமாயின், அதனை தடை செய்ய வேண்டியது கனடா அரசு தானே.. அப்புறம் என்ன மண்ணுக்கு இலங்கை மூக்கை நீட்டுகின்றது..... !!! தகவல்களுக்கு மிக்க நன்றிகள் சகோ.
//நெஞ்சம் பொருக்கவில்லையே என்ன செய்வேன், இந்த ஈவிரக்கம் இல்லாத ஜென்மங்களை...//
மனோ!முன்பே மறுமொழி சொன்னேன்.பின்னூட்டம் இணையவில்லையென தெரிகிறது.
//சுருங்கக் கூறின், உண்மைகள் வெளியே வருவதைத் தடுக்கும் ஒரு முயற்சி.
இந் நூலினைத் தடை செய்வதால் தங்களைப் பாதுக்காக்க முடியும் எனும் ஒரு ஆசை..அவர்களுக்கு.//
நிரூபன்!இலங்கை அரசு திணறுவதை உணர முடிகிறது.புத்தக தடையை விட பின்னடைவுகளைச் சந்தித்து விட்டோம்.இருந்தாலும் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளுக்கும்,மக்களுக்கும் இந்த கருத்து உரிமை மீறல் போய்ச் சேரவேண்டும்.
சென்ற பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு கூட இந்த புத்தகம் டி.வி.டி வடிவில் இருக்கும் போது ராஜபக்சே அரசின் நிலைப்பாட்டையே எடுத்தது என்பதையும் பொதுவில் வைப்போம்.
//நிச்சயம் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாகவே படுகின்றது. அவ்வாறு மோசமான சங்கதிகள் அதில் இருக்குமாயின், அதனை தடை செய்ய வேண்டியது கனடா அரசு தானே.. அப்புறம் என்ன மண்ணுக்கு இலங்கை மூக்கை நீட்டுகின்றது..... !!! தகவல்களுக்கு மிக்க நன்றிகள் சகோ.//
சகோ இக்பால் செல்வன்!இந்த புத்தகம் இலங்கை அரசின் குரல்வளையை நெரிக்கும் ஆவணமாக இருந்தது என்பதால் புத்தகம் பறிமுதல் செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.ஆனால் தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக கப்பலில் கனடா பயணம் செய்யும் கண்டெய்னர் குறித்த தகவல்கள இலங்கை அரசுக்கு எப்படி தெரிந்தது என்பதுவே கேள்வி.
//தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக கப்பலில் கனடா பயணம் செய்யும் கண்டெய்னர் குறித்த தகவல்கள இலங்கை அரசுக்கு எப்படி தெரிந்தது என்பதுவே கேள்வி.//
எதிரியை விட துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள்.
////தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக கப்பலில் கனடா பயணம் செய்யும் கண்டெய்னர் குறித்த தகவல்கள இலங்கை அரசுக்கு எப்படி தெரிந்தது என்பதுவே கேள்வி.//
எதிரியை விட துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள்.//
ஈழபாரதி!இது குறித்த தகவல்களை அதிர்வுகள் தளத்தின் மூலம் காண முடிந்தது.தமிழர்களில் சிலர் எதிர்மறை நிலையை எடுப்பதன் அடிப்படைக்காரணங்கள் என்னவென்று தகவல்களை சேகரிப்பது மிகவும் அவசியம்.
இணையத்தில் அத்தனையும் பட்டவர்த்தனமாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் கூட சில மனிதர்களின் மனநிலை புரியாத புதிராகவே இருக்கிறது.
Post a Comment