முதலில் புதிதாய் பிறந்த தென் சூடானுக்கு வாழ்த்துக்களை சொல்வோம்.ஈழத்தமிழர்களின் போராட்டத்தை எந்த தேசத்திற்கும் ஒப்பிடும் படியான தன்மை வியப்பான ஒன்று.இஸ்ரேலில் கொஞ்சம் கிள்ளி,பாலஸ்தீனத்தோடு சேர்த்து,கிழக்கு தைமூரில் கலக்கி,தென் சூடானில் நிரப்பி புவியியல் தட்டில் இட்டால் அத்தனை தேவைகளும்,சாத்தியங்களும் கொண்ட கலவையாகவே தமிழீழம் தென்படுகிறது.இலங்கை போலவே உள்நாட்டுப்போர்,இன பாகுபாடு,மதத்தின் கூறுகள் எனபவற்றுடன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே போலவே ஒன்றிணைந்த சூடானின் ஜனாதிபதி ஒமர் அல் பசீரும் உலக நீதிமன்றத்தில் போர்க்குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்.உலக நீதிமன்றத்தில் இலங்கை கையெழுத்திடாத ஒற்றைக்காரணத்தோடு பாதுகாப்புச் சபையில் பிரிட்டன்,பிரான்ஸ்,அமெரிக்க கூட்டு முயற்சியில் போர்க்குற்றத்தை சுமத்தினாலும் உலகின் தேச விடுதலை தூ...துவர்கள் ரஷ்யாவும்,சீனாவும் தமது விடோ தகுதியால் ராஜபக்சேவை காப்பாற்றி விடும் சாத்தியமிருக்கிறது.கூடவே ஒப்புக்கு சப்பாணியாக போர்க்குற்றம் செய்த ராணுவ வீரர்களைக் கண்டிக்கிறேன் என்கிற பெயரில் சில சிங்கள ராணுவ வீரர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டு ராஜபக்சே குழுக்கள் தப்பித்துக்கொள்ளும் சாத்தியமிருக்கிறது.அதற்கு தகுந்தார் போல் 14 பேரை ஏற்கனவே கைதுசெய்துள்ளதாக இலங்கை செய்தியறிக்கை சொல்கிறது.
போர்க்குற்ற அறிக்கையை ஐ.நாவும்,பான் கி மூனும் பான் பராக் போட உபயோகிக்கிறார்களா அல்லது ஐ.நாவின் தார்மீக கடமைக்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் கொடுக்கிறதா என்பதை கவனிப்பதோடு ஐ.நா சார்ந்த கடிதங்கள்,குரல்களை எழுப்புவதோடு மட்டுமல்லாமல் மக்கள் சார்ந்த குரலாக நிலத்திலும்,புலத்திலும் Referendum எனப்படும் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புகிறார்களா அல்லது தமிழீழத்திற்கு ஆதரவை தருகிறார்களா என்ற திசையை நோக்கி கவனத்தை செலுத்துவது நல்லது.
சிங்களவர்களைப்போல வடசூடானும் இஸ்லாமிய ஆப்பிரிக்க அரேபியர்கள் என்ற ஒற்றைக்கோட்டில் உள்ளவர்கள்.தென் சூடானோ இயற்கை வழிபாட்டு பழங்குடியினர்,கிறுஸ்துவர்கள்,இஸ்லாமியத்தை தழுவியவர்கள் என்ற மூன்று வகையினராக வட,கிழக்கு தமிழர்களைப்போலவே சாதி என்ற உள்கட்டமைப்பு மாதிரி 200க்கும் மேலான பிரிவினராக வாழ்பவர்கள்.தென் சூடான் தேவை என்ற வாக்கெடுப்பில் 99 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளார்கள்.இந்தியாவைப்போல் அரேபிய,இஸ்லாமிய சிந்தையில் எந்த வளைகுடா நாடுகளும் சூடான் இரண்டாகப் பிரிவதற்கு முட்டுக்கட்டை போட்டு விடவில்லை.
பிராந்தி...ய நலன் என்பதை விட பெட்ரோல் போன்ற அத்தியாவசியமான தாதுப்பொருட்களின் காரணம் கொண்டு அமெரிக்காவின் ஆதரவு தென் சூடானுக்கு கிடைத்திருக்கிறதென்ற தவறான பார்வைகள் வெளிப்படுகின்றன.நேரடியாகப் பெட்ரோல் ஏற்றுமதி செய்துகொள்ள முடியாதபடி அரசியல் சட்ட சிக்கல்கள் அமெரிக்காவிற்கு இருக்கின்றது.தற்போதைய நிலையில் இந்தியாவும்,மலேசிய பெட்ரோனஸ் நிறுவனமும் நேரடி பலனை அனுபவித்துக்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.அதன் காரணம் கொண்டே பந்திக்கு முந்தி தென் சூடானை அங்கீகரிப்பதிலும் தூதரகம் அமைப்பதிலும் இந்தியா உடனே பச்சைக்கொடி காட்டி விட்டது.கடல்,துறைமுக வசதியில்லாது பெட்ரோலைக் கூட குழாய்களின் வழியாக வட சூடானின் வழியாகவே கடல்வழி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தடங்கல்கள் இருந்தாலும் கூட பெட்ரோலிய வருமானத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வது என்ற உடன்படிக்கையின் அடிப்படையிலும் கூட வட சூடான் தனி நாடு கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.
இலங்கையும்,இந்தியாவும் தமிழீழத்தின் தேவைக்கான காரணம் என்ன என்ற நல்லிணக்க எண்ணத்தில் தூரப்பார்வையில் செயல்பட்டால் இந்தியப் பெருங்கடலையும்,தென் ஆசிய உலகப்பொருளாதாரத்தின் வாசலாக ஆளுமை செய்கிற தகுதியை வருங்காலத்திற்கு அமைத்துக்கொள்ளும்.குறுகிய மனப்பான்மைகளையும்,அடக்குமுறைகளையும் மட்டுமே முன்வைத்து மனித உரிமைக்கும்,கலாச்சார அழிவிற்கும் வழிகளைத் தேடுமானால் இந்தியாவும்,இலங்கையும் இன்னும் சோக வரலாற்றையே எதிர்காலத்திற்கும் எழுதிவைக்கும்.பல நாடுகளின் சுயநலங்களுக்கான ஒற்றை நாட்டுக் கோட்பாடுக்கான தேவைகளை விட தனிநாட்டுக்கான தேவைக்கான மனித உரிமை உணர்வும்,கலாச்சார வேர்களின் காரணம் போல் ஆயிரம் இருக்கின்றன.
தென் சூடான் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்துள்ளது இன்னுமொரு சாதக நிலையை ஈழத்தமிழர்களுக்கு தோற்றுவித்துள்ளது.இதன் காரணம் கொண்டும் தமிழர்கள் தென்சூடானின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளலாம்.எல்லைகள் இல்லாத தேசமே மனித வாழ்வின் உயர்வாக இருக்கமுடியும்.ஆனால் அதற்கான தூரம் இன்னும் வெகு அதிகமென்பதாலும் தேசியக்கோட்பாடே தேசங்களின் குரலாக இருப்பதால் மனித உரிமைக்கான குரல்கள் ஒலிக்கட்டும்.இன்னும் புதிய தேசங்கள் பிறக்கட்டும்.
26 comments:
நீங்கள் சொல்வது நடந்தால்
உங்கள் வாயில் சர்க்கரை போடவேணும் பாஸ்.
இன்னும் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு
இது சந்தோஷ செய்திதான்
வணக்கம் பாஸ்,
மிக நீண்ட நாளைக்குப் பின்னர் உங்கள் பக்கம் வருகின்றேன்.
இடுகையினைப் படிச்சிட்டு வாரேன்,
மனதில் நம்பிக்கை ஏற்படும் விடயத்தினை பூகோள, நடை முறை அரசியலை அடிப்படையாக வைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
பொறுத்திருப்போம், எதிர்பார்ப்போடு காத்திருப்போம். காலம் ஒரு நாள் நமக்காக கனியாமலா போகும்,
என்றோ ஒருநாள் நமக்கும் என்ற நம்பிக்கையுடன் !!
/தென் சூடான் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்துள்ளது/
நல்ல விஷயம்,
தோல்வியில் இருந்து பாடம் கற்று சாதி,மத பேதம் தவிர்த்து ஒற்றுமையாக எழுந்தால் தமிழ் ஈழம் நிச்சயம் மலரும்!!!!!!!.நடக்குமா?
நன்றி
thanks for the post, Nata!
நம்மிடையே ஒற்றுமை என்ற ஒன்று வரும்வரை கஷ்டம் தான்.
தொட்டு விடும் தூரத்தில் தமிழீழம்...காதுக்குள்ள இனிக்குது நடா.அப்போ நான் சாகிறதுக்கிடையில முந்திப்போல ஊர்ல இருந்திட்டுச் சாகலாம் !
நம்பிக்கை வேருக்கு நீர் ஊற்றி இருக்கீங்க சார் , பல தகவல்களை உள்ளடக்கிய பதிவு
//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
நீங்கள் சொல்வது நடந்தால்
உங்கள் வாயில் சர்க்கரை போடவேணும் பாஸ்.//
வாங்க கற்றது தமிழ் துஷ்யந்தன்!
அகம்,புறம்,தமிழகம் ஒன்றாய் சேர்ந்தால் சாத்தியமான ஒன்றே.இவ்வளவு இழப்புக்கும்,போராட்டத்துக்கும்,உலக அரங்கிற்கும் வந்த பின்பும் ஈழத்தமிழர்கள் சோர்ந்து விட்டால் கலாச்சாரம் இழந்தவர்களாய் மொரிஷியஸ்,ஆப்பிரிக்க ஆதி தமிழனைப் போல் தமிழ் அடையாளம் இழந்தவர்களாய் இல்லாமல் போவார்கள்.
எனவே நீங்க சொன்னது போல் தமிழர்கள் இனி சுவைக்க வேண்டியது இனிப்புத்தான்:)
//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
இன்னும் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு
இது சந்தோஷ செய்திதான்//
துஷ்யந்தன்!தமிழீழம் என்பது சொந்தமாக வீடு கட்டி வாழ்வது மாதிரி.ஒன்றுபட்ட இலங்கையென்பது வாடகை வீட்டில் குடியிருப்பது மாதிரி.எவரும் சொந்த வீடு கட்ட ஆசைப்படுவார்களா அல்லது வாடகை வீட்டில் குடியிருக்க ஆசைப்படுவார்களா?அதுவும் வடகிழக்கு தமிழர்களின் சொந்த நிலம்.
சொந்த மண்ணில் சொந்த வீடு கட்டி சந்தோசப்படுவோம்.
இனி நம் நம்பிக்கையைப் பொறுத்தே வாழ்க்கை.நன்றி.
சகோ நிருபன்!இப்ப பாஸ் அடைமொழிக்கு வந்து விட்டோமா:)
புவியியல்,நடைமுறை அரசியல் எந்த நேரத்திலும் மாறலாம்.ராஜபக்சே இன்னும் கொஞ்சம் சீனாப் பக்கம் ஒட்டுறவாடினால் இந்தியா லபோ,திபோன்னு கத்தி மாற்று யோசனையை சிந்திக்கும்.அப்படியில்லாமல் கூடி தழுவிக்கொண்டாலும் கூட மக்களின் குரலும் தமிழர்களின் சுதந்திர சிந்தனை மட்டுமே அரசுகளின் நிலைப்பாட்டை மறுபரிசீலிக்கும் நிலைக்குத் தள்ளும்.
சீனாவின் String of pearl பற்றி ஜோதிஜி விளக்கமாக கட்டுரை எழுதியுள்ளார்.சுருக்கமாக ஹாங்காங் முதற்கொண்டு இந்தியா,இலங்கை வழியாக சூடான் துறைமுகம் வரையிலுமாக தனது கடல் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் திட்டம்.
அமெரிக்கா மாதிரி புதியதாக போர் விமானங்கள் பறக்கிற மாதிரியான கப்பல் தளம் கூட சீனா அமைத்துக்கொண்டிருக்கிறது.ஆயுதப்போராட்டம் முடிந்து விட்ட நிலையில் புதிதாய் பிறக்கும் ஈழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு துணையாக இருக்கும் என்ற சுயநல நோக்கில் கூட இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்க முன் வரலாம்.அதற்கான சூழலை தமிழகம் உருவாக்கும்.
காலம் கனியட்டும்.
//நிகழ்வுகள் said...
என்றோ ஒருநாள் நமக்கும் என்ற நம்பிக்கையுடன் !!//
இப்போதைக்கான சூழல்கள் நம்பிக்கைக்கான பாதையை மெல்ல காட்டுகின்றன.போர்க்குற்ற அறிக்கையை தமிழர்களின் குரல்களையொட்டி ஐ.நா கையாளும் விதம்,தமிழகத்தின் ஈழ ஆதரவுக்குரல்கள்,புலம்பெயர் தமிழர்களின் உழைப்பு,சூடானை அடுத்து இன்னுமொரு தேசம் தமிழீழ ஆதரவுக்குரல் போன்றவை உலக அரங்கில் மாற்றுச்சிந்தனையை தோற்றுவிக்கும்.
//சார்வாகன் said...
/தென் சூடான் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்துள்ளது/
நல்ல விஷயம்,
தோல்வியில் இருந்து பாடம் கற்று சாதி,மத பேதம் தவிர்த்து ஒற்றுமையாக எழுந்தால் தமிழ் ஈழம் நிச்சயம் மலரும்!!!!!!!.நடக்குமா?
நன்றி//
சீனா,ரஷ்ய இந்திய சுயநலங்களை விட மேற்கத்திய நாடுகளின் சுயநலங்கள் தமிழீழ ஆதரவுக்கு உதவும்.இப்பொழுது ஒலிக்கும் குரலை இன்னும் கொஞ்சம் உரக்க உலகுக்கு கேட்க வைக்கும் ஒற்றுமையிருந்தால் போதும்!தமிழீழ கனவை நினைவாக்கி விடலாம்.நன்றி.
//Thekkikattan|தெகா said...
thanks for the post, Nata!//
You ought to be with me always:)
Thanks.
//செங்கோவி said...
நம்மிடையே ஒற்றுமை என்ற ஒன்று வரும்வரை கஷ்டம் தான்.//
பாஸ்!சில சறுக்கல்கள்,மனம் தளர்வுகள் இருந்தாலும் இதுவரையிலும் நாம் உணர்வுகளை உயிர்ப்பித்து வைத்துள்ளோம் என்றே சொல்வேன்.தொலைக்காட்சி ஊடகங்களின் வீச்சும் பேச்சும் கொஞ்சம் இருந்தால் போதும்.மக்களின் மனதில் இன்னும் தமிழீழ தேவையை சரியாக உணரவைக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் கட்சி உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக தமிழீழத்தை நினைக்க முடிந்தாலே போதும்.ஒற்றுமை வந்து விடும்.
//ஹேமா said...
தொட்டு விடும் தூரத்தில் தமிழீழம்...காதுக்குள்ள இனிக்குது நடா.அப்போ நான் சாகிறதுக்கிடையில முந்திப்போல ஊர்ல இருந்திட்டுச் சாகலாம்//
ஹேமா!உணர்வுபூர்வமாய் நீங்கள் சொல்வது எழுத்தில் தெறித்து விழுகிறது.நாடுகள் காணும் ஆசையும்,தேவையும் எப்பொழுதுமே இருந்ததில்லை.நம் நம்பிக்கைகள் நிதர்சனமானால் கிளிநொச்சியும்,முள்ளிவாய்க்காலும் உலக தமிழர்களின் கால் பதிக்கும் பூமியாக மாறும்.
//A.R.ராஜகோபாலன் said...
நம்பிக்கை வேருக்கு நீர் ஊற்றி இருக்கீங்க சார் , பல தகவல்களை உள்ளடக்கிய பதிவு//
ARR!நம்பிக்கை வேருக்கு நீர் ஊற்றினால் ஒரு நாள் ஆலமரமாக வளரத்தானே போகிறது.தகவல் உதவிகள் விக்கிபீடியாவுக்கும் படங்கள் கூகிளிக்கு மட்டுமே சேரும்.இணைய உதவி இல்லாமல் போயிருந்தால் தினகரன் சொல்வதே வேத வாக்காகவும்,சன் தொலைக்காட்சியே மணியொலியாகவும் போயிருக்கும்:)
தெற்கு சூடான் உதித்தது!
தமிழ் ஈழம் மலரட்டும்!
உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும், தங்கள் தாயகத்துக்குத் திரும்பி வந்து வாக்கு அளித்தனர்.
2011 ஜனவரி 9 ஆம் தேதி முதல், 15 ஆம் தேதி வரையிலும், ஆறு நாள்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில், அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும்; அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என, சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக் கொண்டு இருந்தன. ஆனால், வாக்குப்பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர், தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர்.
வாக்கு அளிக்கப் பதிவு செய்து கொண்டோர்: 39,47,676 பேர்
வாக்கு அளித்தவர்கள்: 38, 51,994 பேர் (97.58 விழுக்காடு)
செல்லுபடியான வாக்குகள்: 38,37,406 பேர் (99.62 விழுக்காடு)
தனி நாட்டுக்கு ஆதரவு : 37, 92, 518 பேர் (98.83 விழுக்காடு)
எதிர்ப்பு : 44,888
தெற்கு சூடான், சுதந்திர தேசக் கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம், திசையெங்கும் கேட்கிறது.
http://mdmk.org.in/article/jul11/south-sudan-rised
-- வைகோ
விதை போட்டாச்சு முளைச்சா நல்லது தான் ராஜநட...
அனில்!வாக்கெண்ணிக்கை தகவல்களுக்கு வை.கோ வின் சார்பாக நன்றி:)
நீங்கள் கொடுத்த எதிர்ப்பு வாக்குக்கள் போலவே இலக்கியவாதிகள்,இணையவாதிகள்,தேசிய எதிர்வாதிகள் என நம்மிடையேயும் கரும் காளான்கள் இருக்கின்றன.இந்திய சுதந்திரத்திற்கு எதிர்ப்பாக ஆங்கிலேய ஆட்சிக்கும் ஆதரவு தந்தவர்கள் உண்டு என்பதால் எதிர்ப்பாளர்களைப் பின் தள்ளி தமிழீழ கோரிக்கைக்கு பெரும் ஆதரவு மக்கள் என்ற நிலையில் சுதந்திரத்தை அடைந்து விட முடியும்.
புலம்பெயர் தமிழர்களும் தங்களுக்கென நாடு அமையும் பட்சத்தில் மேற்கத்திய வாழ்வினை துறக்க தயாராக இருப்பதாகவும் கோரிக்கைகள் விடலாம்.
த்மிழகத்தில் இனி வரும் நாட்களில் வை.கோ.நாம் தமிழர் இயக்கம்,மே 17 இயக்கம் போன்றவற்றிற்கு ஆதரவையும் தர வேண்டும்.
/தவறு said...
விதை போட்டாச்சு முளைச்சா நல்லது தான் ராஜநட...//
ரத்த பூமியில் புதைக்கப்படாமல் விதைக்கப்பட்டிருக்கும் விதைகள் இப்பொழுதே மண்ணிலிருந்து முளைவிட்டு எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றன.நீர்விடும் பட்சத்தில் இன்னும் சிறப்பாக செழித்து வளரும்.
வந்திட்டமில்ல!!!
தமிழீழத்துக்கான அரசியல் காரண, காரியத் தொடர்புகள் கனகச்சிதமாய் பொருந்துது.
ஏன் ராஜ நட, அங்கே (தென் சூடானில்) அப்ப சீனா இல்லையோ. எனக்கு இது கொஞ்சம் குழப்பம். அங்கே அவர்களும் மிகப்பெரியளவில் இந்த எண்ணெய் சம்பந்தமாக ஆரம்பத்திலிருந்தே தென் சூடானுக்கு ஆதரவு தெரிவித்ததாக படித்தது போல் ஒரு ஞாபகம். சரியாய் சொல்லமுடியவில்லை. மீண்டும் தேடிப்படிக்க வேண்டும். பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
//வந்திட்டமில்ல!!!
தமிழீழத்துக்கான அரசியல் காரண, காரியத் தொடர்புகள் கனகச்சிதமாய் பொருந்துது.
ஏன் ராஜ நட, அங்கே (தென் சூடானில்) அப்ப சீனா இல்லையோ. எனக்கு இது கொஞ்சம் குழப்பம். அங்கே அவர்களும் மிகப்பெரியளவில் இந்த எண்ணெய் சம்பந்தமாக ஆரம்பத்திலிருந்தே தென் சூடானுக்கு ஆதரவு தெரிவித்ததாக படித்தது போல் ஒரு ஞாபகம். சரியாய் சொல்லமுடியவில்லை. மீண்டும் தேடிப்படிக்க வேண்டும். பதில் தெரிந்தால் சொல்லுங்கள். //
ரதி!தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.நீங்கள் சொல்வது சரிதான்.சீனாவும் தனது கடையை திறந்திருக்கிறது.சீனா,மியான்மர்,பாகிஸ்தான்,இலங்கை அம்பாந்தோட்டை என தொடங்கி வடசூடானில் போய் முடிகிறது சீனா கோர்க்கும் துறைமுக முத்துக்கள் திட்டம்.
பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன்.
தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.
பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை முன்னெடுத்தன.
இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.
பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால் விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.
நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிக்க முடியாது.
கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில் நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.
எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே. அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.
ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை நிர்வகித்து ஆயிரக் கணக்கில் எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்து கொன்று புதைத்தனர்
அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும் நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தினால் உருவாக்கப்பட்டவர்களே
நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?
Nalliah Thayabharan
Post a Comment