Followers

Wednesday, March 21, 2012

சேனல் 4,மனித உரிமை தீர்மானம்,இந்தியா,இலங்கை - பகுதி 1

சென்ற முறை சேனல் 4ன் காணொளி கண்டு பதறிய மனம் இந்த முறை எந்த சலனத்தையும் என்னில் ஏற்படுத்தவில்லை. மனம் மரத்துப் போன நிலையென்றாலும் இணைய தேடல்களில் முதன்மையாக ஈழ மக்கள் குறித்த அக்கறையும்,இலங்கை அரசு தனக்கு எதிரான  சவால்களை  எதிர்கொள்ளும் தன்மைகளையே மனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.சேனல் 4 காணொளி வெளி வராத தினங்களுக்கு முன்பே 2009ல் மௌனமாக இருந்த இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை விவாதக்களத்தையும்,இலங்கை குறித்தான தலைப்புக்களை முன் வைத்தது ஆச்சரியத்தையும் அதன் தேவையையும் உணர முடிந்தது.

அரசியல் நாடக நடிகர்கள் அதிகம் வந்து போகும் ஊடகம் என்பதால் இந்திய ஊடகங்களில் NDTV எனது முன்னுரிமை.கூடவே ஆங்கில நடைக்கும் இலங்கை அரசின் ஊதுகுழலாய் என்.ராமின் காலத்தில் களநிலைகளையும்,இலங்கை அரசு என்ன ஊதுகிறது என்று அறிந்து கொள்ளவும் இந்து பத்திரிகை.இப்பொழுது என்.ராம் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இட்லி வடை சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இப்பொழுது இந்து பத்திரிகை இலங்கை சார்ந்த அமெரிக்க தீர்மானத்தையெல்லாம் வெளியிடுவதோடு மத்திய அரசின் இலங்கை நிலைப்பாடு குறித்தெல்லாம் செய்திகள் வெளியிட ஆரம்பித்திருப்பது வரவேற்க தகுந்த மாற்றம் எனலாம்.

சேனல் 4 காணொளிக்கு முன்பே அமெரிக்க தீர்மானம் குறித்து NDTV யில் சுப்ரமணியன் சாமி,முன்னாள் தூதரகப் பணியாளர் ஜி.பார்த்தசாரதி,கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா,காங்கிரஸ் கட்சியின் நாரயணசாமி,மீனா கந்தசாமி போன்றோருடன் பர்காதத் கலந்துரையாடல் நிகழ்ச்சி காண நேரிட்டது.சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் இந்தியாவின் காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றி எதிர்காலத்தில் பேச்சு வரும் என்றார்.சுப்ரமணியன் சாமியின் வாதம்  திசை திருப்பல் என்பதோடு எதனையாவது இட்டுக் கட்டியாவது விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்துவது மட்டுமே என்ற நீண்டகால நோக்கு கொண்டவர்.

காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல்கள்  என்றால் ஐ.நா தீர்மானம் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டும் என்றார் மீனா கந்தசாமி. மேலும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை இலங்கை ராஜபக்சே குழுவினரின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு விடமுடியாது.மத்திய அமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை ஆதரிப்போம் என்றுமில்லாமல் இலங்கை அரசுடன் சார்ந்து செயல்படுவோம் என்றுமில்லாமல் மதில் மேல் பூனையாக ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கவும் மாட்டோம்,அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்கின்ற ரீதியில் தனது கருத்தை முன் வைத்தார்.ஒரு புறம் டி.ராஜாவின் கருத்துக்கும்,மறுபுறம் அமைச்சர் நாராயணசாமியின் வாதத்திற்கும் ஏளன சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தார் சுப்ரமணியன் சாமி.

நான்கு பேர் கலந்து கொள்ளூம் விவாதத்தில் அவரவர் நிலைப்பட்ட வாதங்களை வைக்கும் போது பேச்சின் இடையே குறுக்கிடும் வழக்கத்தை இந்தியர்கள் பெரும்பாலோர் கடைப்பிடிக்கிறார்கள்.சுப்ரமணியன் சாமியின் ஸ்டைல் என்னவென்றால் தானே அறிந்தவன் என்ற மமதையோடு மற்றவர்களை நக்கல் செய்யும் ஏளன சிரிப்பு மற்றும் உனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற மாதிரி முகத்திற்கு நேரே சொல்லி விடுவது.இதனை முன்பு ஜெயந்தி நடராஜன் மற்றும் ரேணுகா சவுத்ரி போன்ற மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பெண்களிடம் ஏளனம் செய்ததை காண முடிந்தது.படித்தும்,பொது வாழ்வில் ஈடுபட்டும் பக்குவப்படாத மனிதன் என இவரை துணிந்து சொல்லலாம்.உருப்படியாக செய்த ஒரே வேலை 2G என்பதையும் மறுப்பதற்கில்லை.

சுப்ரமணியன் சாமியின் நிலைப்பாடு முன்பு சீனா,மற்றும் அமெரிக்கா சார்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலையென்பது தெரிந்த ஒன்றே.ஆனால் சென்ற வருடம் அமெரிக்க பல்கலைக்கழகம் சுப்ரமணியன் சாமியின் பேச்சுக்கும், அவர் கற்றுக் கொடுக்கும் பாடத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ கௌரவ ஆசிரியர் பதவியை பறித்துக்கொண்டது.அதனால் இப்பொழுது அமெரிக்க தீர்மானம் குறித்தும் அமெரிக்காவை எதிர் விமர்சனம் செய்வதை உணர முடிந்ததது.

ஜி.பார்த்தசாரதி இலங்கை,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்திய தூதராகப் பணீ புரிந்திரிக்கிறார்.நிச்சயம் பூகோள அரசியலை  நன்கு தெரிந்து வைத்திருப்பார்.ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மேசைக்கு வரும் முன்பே தீர்மானம் தோற்றுவிடும் என்று ஜோஸ்யம் சொல்லி விட்டார். இவர் ஜோஸ்யம் பலிக்கிறதா என இன்னும் சில தினங்களில் பார்த்து விடலாம்:) ஆசிய மனித உரிமைகள் சார்ந்து ஒரு பெண்ணும்,சர்தார்ஜி ஒருவரும் கருத்துக்கள் முன்வைத்தார்கள்.பெயர்கள் நினைவில் இல்லை. கலந்துரையாடல் செய்த அனைவரின் விவாதங்களையும், மொத்த நிகழ்ச்சியின் போக்கையும்  இறுதியில் வந்த சேனல் 4 காணொளியின் இயக்குநர் கேலம் மெக்ரா (Callum Macrea) தனது நியாயமான கருத்தின் மூலமாக தட்டிக்கொண்டு போய்விட்டார்.

NDTVயின் காணொளி கிடங்கில் இருந்தால் இணைப்பு கொடுக்கலாமென்று தேடியதில் கால விரயம் மட்டுமே மிச்சம்.மன்னிக்கவும்.

என்.ராம், சுப்ரமணியன் சாமி,சோ,ஜி.பார்த்தசாரதி,பி.ராமன் என்று ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் எவரும் விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைக் கோட்டைத் தாண்டி விமர்சனம் செய்வதில்லை. இதில் என்ன பிரச்சினையென்றால் எதிர் விவாதம் செய்ய இயலாத ஊடக கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பூச்சாண்டி காட்டுவதே. இவர்களின் இன்னும் புரியாத புதிர் ஒன்று என்னவென்றால் இந்து கலாச்சாரமாக பரதம், கோயில், பட்டு, வேட்டி, சம்பிராதயங்கள் என ஈழத்தமிழர்கள் இந்து மத பாரம்பரியங்களை   கட்டிக் காத்தாலும் கூட இந்துத்வா எனும் மையத்தில் சேரும் இவர்கள் ஈழப்போரின் அவலங்களுக்கு முந்தைய காலத்தின் அடிப்படையிலேயே கருத்துக்கள் வைப்பதும்,மக்களின் துயரங்கள்,இழப்புக்கள் என்று அனைத்தையும் பின் தள்ளி விட்டே கருத்து வெளியிடுவது மனித நேயத்துக்கு உகந்ததாக இல்லை.இவர்களை விட சில இலங்கை பத்திரிகையாளர்களும்,இலங்கை அரசின் அடக்குமுறையில் வெளிநாடு சென்ற சிங்களவர்கள் மேல்.

பார்வைகளும்,விமர்சனங்களும் வித்தியாசப்பட்டால் தனி மனித கருத்துக்கள் என்று புறம் தள்ளி விடலாம்.ஆனால் இவர்கள் ஏதோ ஒரு வட்டத்தில் மையம் கொள்கிறார்கள்.மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீதான தங்கள் சுயநலம் அடங்கிய அழுத்தங்கள் தொடுத்தாலும் கிழக்கத்திய நாடுகளோடு ஒப்பிடும் போது மனித உரிமைகளையும் மதிக்கிறார்கள் என்பது நிச்சயம். இவர்களுக்கு இருக்கும் ethics கூட இல்லாமல் இந்திய நலன் என்ற முகப்பூச்சு பூசிக்கொண்டு மட்டுமே  இவர்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சோவின் துக்ளக்,சுப்ரமணியன் சாமியின் NDTV &IBN,பி.ராமனின் பழைய indiff & இப்போதைய outlook India,ஜி.பார்த்தசாரதியின் கிடைத்த இடம் என இவையெல்லாவற்றையும் விட இலங்கை அரசின் வைரமாலை பத்திரிகையாளன் இந்து என்.ராம் என அனைவரும் ஒரு கோட்டுக்குள் சங்கமமாகும் மர்மம் என்ன?ஒருவேளை தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள்,கோபங்கள்,நியாயங்கள் அனைத்தும் தவறு என்றால் அவை எப்படி தவறு என விளக்குவதுமில்லை, சுட்டிக்காட்டுவதுமில்லை.இன்னும் கூட இவர்களின் ஒரே மையம் விடுதலைப்புலிகள் மட்டுமே.இவர்களின் எதிர்ப்புக்கள் ஒரு புறம் ஊடகப் பிரச்சாரமாக பவனி வர,இன்னுமொரு புறம் ஈழத்தமிழர்கள் சார்ந்த அனுதாபம் தமிழகத்தில் வளர்வது மட்டுமே நிதர்சன உண்மை.

இனி தொடர்ந்து சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அடுத்து பார்ப்போம்.

14 comments:

யூர்கன் க்ருகியர் said...

பகிர்வுக்கு நன்றி !!

MANO நாஞ்சில் மனோ said...

பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் தொடருங்கள்...!

ராஜ நடராஜன் said...

யூர்கன் க்ருகியர் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

மனோ நலமா!மீண்டும் பணியில் அமர்ந்து விட்டீர்களா இல்லை சி.பியோடு இன்னும் ஈரோடு ரயில் நிலையம் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களா:)

இந்த பதிவு இன்னும் 2 பாகம் நீளும் என நினைக்கிறேன்.தலைப்பையும்,இப்பொழுது நிகழும் நகர்வுகள் தவிர எதுவும் முன்கூட்டியே திட்டமிடவில்லை.பார்க்கலாம் எப்படி நகர்கிறதென்று.

Amudhavan said...

மீதி இரு பாகங்களையும் உங்கள் பாணியில் எழுதுங்கள். ஆங்கில ஊடகங்களின் இடைவிடாத அழைப்புகளால் தாங்கள் ஏதோ தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத சக்தி என்பதாக நினைத்துக்கொண்டு கருத்துரைகள் வழங்குவதுதான் சுப்பிரமணியன்சாமி அண்ட் கோவின் வழக்கம். என்.ராம் மிகப்பெரிய சிந்தனையாளராகவும் பத்திரிகையாளராகவும் தமிழகத்தின் முன் நிற்க வேண்டியவர். ராஜபட்சேவின் தூதராகவும் தமிழினத்திற்கு துரோகம் புரிய தயாராக இருப்பதாகவுமான தோற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.
நாமெல்லாம் தொடர்ந்து நம்முடைய ஆதங்கங்களைச் சொல்லிக்கொண்டிருப்பதுடன் சரி; ஒரு விடிவுகாலமோ தீர்வோ எப்படி என்றைக்கு வருமென்றுதான் தெரியவில்லை.

சார்வாகன் said...

வண்க்கம் சகோ
அருமையான் அலசல்,இந்த என்.டி.டி.வி ஒரு ஊடக கருத்து திணிப்பு வியாபாரி என்பதால் நம்பிக்கை அற்றவர்கள்,போர் உச்ச கட்டம் நடந்த போது அதற்கு எதிரான் கருத்தாக்கம் வளப்பதில் மிகுந்த ஆர்வம் காடினார்கள்,ஒரு விவாதம் இரஜபக்சேவின் பேட்டி என இந்தியாவின் பிற மக்களிடன் நன்றாகவே கருத்து திணிப்பு செய்தார்கள்.

அரசியல் கோமாளி சு.சாமி யை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.எனினும் இத்தீர்மானம் வெற்றி பெறுமா என்பதை பார்த்தே எதுவும் சொல்ல முடியும்?.இத்தீர்மான்ம் தமிழர்களுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை ஏற்க முடியாது,ஏதோ ஒரு அரசியல் இராஜதந்திர நடவடிக்கையில் பக்க விளைவாக தமிழ்ர்களின் எதிர்காலம் குறித்த நடவ்டிக்கை என வேண்டுமானால் கூறலாம்.ஆகவே எப்படி பேரம் படிகிறதோ அது பொறுத்தே தீர்மானம் மாறும் அல்லது __________.


த்மிழகத்திலும்,இந்திய நடுவண் அரசிலும் த்மிழர் நலம் நாடும் சக்திகள் இல்லாதவரை ஒன்றும் செய்ய இயலாது என்வே கருத்லாம்.தமிழ்ர்களுக்கு சாதி,மதம் தாண்டிய சிந்தனைகள் வந்தால் மட்டுமே இது சாத்தியம்!

நன்றி

வவ்வால் said...

ராஜ் ,

நல்ல பகிர்வு! சில விடயங்களை சரியாக சுட்டியுள்ளீர்கள்.

அப்பாவிகளும், சிறார்களும் கொள்ளப்பட்டது எவ்விதத்திலும் நியாயமில்லை, கடும் கண்டனத்துக்கு உரியது.போர் மரபுகள் எதுவும் இல்லாத கொடுங்கோலனின் போர் யுக்திகளே அவை.
சில விடயங்கள் கசப்பாக இருக்கும் ,சிலருக்கு ஏற்றுக்கொள்ள இயலாது, மேலும் கம்பி மேல் நடப்பது போன்ற கவனம் தேவைப்படும் என்று சொல்லப்படுவதெல்லாம் இலங்கை பிரச்சினைக்கு சரியாக பொருந்தும் எனவே இதில் பொதுவானவர்கள் மனம் திறந்து கருத்துக்கூற தயங்குவது வழக்கம்.

அடியேனும் அப்படியாகிவிட்டேன் இப்போது :-((

நீங்கள் பட்டியலிட்டவர்கள் எல்லாம் பிராம்மணிசம் என்ற ஒரு கோட்டில் இணைகிறர்கள் ஏன் அவர்களுக்கு அப்பாவிகள் பாதிக்கப்படுவது கூட தர்க்க ரீதியாகவே பார்க்கிறார்கள் , எதனால் மனிதாபிமானத்தில் பார்ப்பதில்லை என்று புரியவில்லை.

என் டி டிவி இந்து ராமின் கொள்கையோடு தான் பார்க்கும் இந்துவும் அவர்களும் தொழில் உறவாளிகள் என்.டிடிவி மெட்ரோ என்ற சேனலை இந்து தான் நிர்வாகிக்கிறது. முதலிடும் உண்டு.

-----
சார்வாகன்ன்,

//.இத்தீர்மான்ம் தமிழர்களுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை ஏற்க முடியாது,ஏதோ ஒரு அரசியல் இராஜதந்திர நடவடிக்கையில் பக்க விளைவாக தமிழ்ர்களின் எதிர்காலம் குறித்த நடவ்டிக்கை என வேண்டுமானால் கூறலாம்.ஆகவே எப்படி பேரம் படிகிறதோ அது பொறுத்தே தீர்மானம் மாறும் அல்லது __________.//

இந்திய சமுத்திரத்தில் டீகோ கார்சியா தீவில் அமெரிக்க தளம் அமைத்துள்ளது, ஆனால் இலங்கை சீனத்துடன் டூயட் பாடுகிறது. இது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை எனவே ஒரு கடிவாளம் போட இராஜபக்சேவிற்கு விடுக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையே இத்தீர்மானம் , பேச்சுவார்த்தைகளைப்பொறுத்து முடிவு அமையும் எனவே இத்தீர்மானம் குறித்து மகிழ எதுவும் இல்லை, ஆனால் அயல்நாடுகளில் ஊடகங்களில் அதிகம் அடிப்படுவதால் இது வரை என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த அயல் நாட்டு மக்களுக்கு இலங்கையில் என்ன நடந்தது என்ற ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் அதுவே நேரடியாக கிடைக்கும் பலன் எனலாம்,

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நலமாக இருக்கிறீர்களா?நீண்ட நாட்களாக பகிர்வு ஒன்றையும் காணோமே!

நீங்கள் சொல்வது போல் இந்திய ஆங்கில ஊடகங்கள் சுப்ரமணியன் சுவாமி,சோ போன்ற சிலரை தவிர யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை.அவர்களாகவே சில முடிவுகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு கருத்து திணிப்பு மட்டுமே செய்கிறார்கள்.நீங்கள் குறிப்பிட்ட படி என்.ராம் சிறந்த பத்திரிகையாளர் என்பதில் சந்தேகமில்லை.போபர்ஸ் ஊழல்,இடதுசாரி சிந்தனை,நோவம் சாம்ஸ்கி என நீளும் இவரது எல்லைகள் எப்படி இலங்கை அரசின் அடியாள் என்ற பிம்பத்தை கொண்டு வந்தது என தெரியவில்லை.விடுதலைப்புலிகள் தவறுகளை விமர்சிக்க வேண்டிய அதே தருணத்தில் அவர்களது சுதந்திர உரிமைக்கான குரலையும் மதிக்க தவறி விட்டதும் இந்து பத்திரிகை நடுநிலை இழந்து போனதும்,இலங்கை அரசின் சார்பான நிலைப்பாடும்,முக்கியமாக போர்க்குற்றங்களைக் கூடாத விமர்சனம் செய்யாத நிலைப்பாடு என்.ராம் மீது வருத்தங்களையே உருவாக்குகிறது.

ஆங்கில மொழி நடையும்,உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிடுவது என்ற இந்து பத்திரிகையின் பாரம்பரியம் மட்டுமே பாராட்டப்பட வேண்டியவை.

ராஜ நடராஜன் said...

வணக்கம் சகோ!சார்வாகன்!நலமாக இருக்கிறீர்களா?புதிய பரிணாம எதிர் கருத்து சகோக்கள் ஒருவரும் புதுப்பரிமாணங்கள் எதையும் அதிகம் முன் வைப்பதில்லை மாதிரி தெரிகிறது.சோர்ந்து விட்டார்களா:)

என் டி டிவி,ஐ.பி.என்,டைம்ஸ் நவ் என்று அரசியல் அலசும் ஆங்கில ஊடகங்களில் என் டி டிவியே முன்னிலையென்பேன்.கூடவே ஆளும் கட்சியும் நீரோட்டம் பார்க்க அணுகுவது என் டி டிவியே.இல்லையென்றால் நீரா ராடியா,பர்கா தத்,கனிமொழியென உரையாடல்கள் சாத்தியமா என்ன:)

அமெரிக்காவின் இலங்கை தீர்மானம் இனி எது மாதிரியான மாற்றங்கள் அல்லது விளைவுகளை இந்தியா,இலங்கை,தமிழகம்,புலம்பெயர் தமிழர்கள்,வட கிழக்கில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் குறித்து நகரும் என உற்று நோக்க வேண்டியது அவசியம்.இந்த தீர்மானத்தில் தமிழர்களின் நலன் என்பதை விட LLRC யை எப்படி இலங்கை நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற கேள்வியை முன்வைத்து பின்புலத்தில் என்ன ராஜதந்திரங்களை அமெரிக்கா முன்னெடுக்கப் போகிறதென்று தெரியவில்லை.கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசு தனது காய்நகர்த்தல்களை திறம்பட செயல்படுத்தியிருக்கிறதென்றே தோன்றுகிறது.இல்லையென்றால் சேனல் 4ன் முதல் காணொளியையும்,அதனை விட ஐ.நாவின் மூவர் குழு அறிக்கையையும் பின் தள்ளிவிட்டு LLRC மீதான தீர்மானம் பற்றி விவாதிக்கும் அளவுக்கு உலக அரசியல் களம் மாறி இருக்காது.

எப்படியிருந்த போதிலும் அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழர்கள் ஆதரிக்க வேண்டிய நிலையில் மட்டுமே இருக்கிறோம்.காரணம் கடந்த மூன்று வருடங்களில் தமிழக கட்சிகள் தனித்தனியாக குரல் கொடுத்தார்கள்.நாம் தமிழர்,மே 17 போன்ற புதிய இயக்கங்கள் தோன்றின.புலம் பெயர் தமிழர்கள் ராஜபக்சேவை லண்டனிலிருந்து வெளியேற்றினார்கள்.அமிதாப்பச்சனை IIFA போக விடாமல் செய்தோம்.நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு உருவானது.சேனல் 4 முதல் காணொளி வெளி கொண்டு வரப்பட்டது.ஐ.நா மூவர் குழு அறிக்கை வெளியானது.தமிழக சட்டசபை தீர்மானம் வெளியானது.இவை அனைத்தையும் புறக்கணித்து ராஜபக்சே காமன்வெல்த் விளையாட்டு,அமெரிக்காவின் இலங்கை தீர்மானத்தில் இந்தியாவின் சில கடந்த தினங்களுக்கு முன்பான இலங்கையை காப்பாற்றும் நிலைப்பாடு(India will not support country specific resolution) என்பனவற்றோடு இலங்கை அரசின் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் ஏனைய நாடுகளின் நட்புறவை தேடல்,ஐ.நா மனித உரிமைக் கழகத்தில் 100 பேரை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு ஜி.எல் பெருசையும் அலைய விடும் வலுவான நிலையில் தமிழர்கள் குரல் வெளியே கேட்கப்படாத நிலையில் அமெரிக்காவின் தலையீடு கொண்டும்,சேனல் 4 காணொளி காரணமாக உலகம் மாற்றுப் பார்வையை நோக்குகிறது.

சுருக்கமாக அமெரிக்காவின் தேவை இலங்கையுடனான நட்புறவும்,ராஜபக்சே குழுவினரை புறக்கணிக்கும் ஆட்சி மாற்றம் என்பது மட்டுமே இருக்கலாம்.பார்க்கலாம் நகர்வுகளை.

ஹேமா said...

நடா....உங்கள் பாணியில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.பார்க்கலாம் !

ராஜ நடராஜன் said...

வவ்!ஏனைய நண்பர்கள் மீண்டும் கலந்துரையாடலுக்கு வருகிறார்களா என தெரியவில்லை.உங்களுக்கு நேரமிருந்தால் நாம் இருவரும் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளலாம்:)

ஈழப்போரின் இன்னும் புரியாத புதிர்கள் நிறைய இருக்கின்றன என்ற போதிலும் இணைய ஊடகம் வாயிலாக நிறைய செய்தி கசிவுகள் நிகழ்கின்றன என்றே நினைக்கின்றேன்.நாம் தமிழர்கள்,சிங்களவர்கள் என்ற நிலையில் விவாதிக்க இயலாதபடி முன்பு விடுதலைப்புலிகள்,இலங்கை அரசு என்ற நிலையிலும் இப்பொழுது தமிழர்கள்,இலங்கை அரசு என்ற நிலையில் மட்டுமே நகர்கிறோம் என்று நினைக்கின்றேன்.பொதுவான கருத்தாளர்கள் என்பவர்கள் விடுதலைப்புலிகளின் தவறுகள்,அவர்கள் போராட்டத்தின் தேவைகள்,இலங்கை அரசின் விடுதலைப்புலிகளின் காலத்து பேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டுப் போகும் நிலை,போரில் விடுதலைப்புலிகளின் தோல்வி,தோல்வியைச் சார்ந்து ராஜபக்சே அரசின் நிலைப்பாடுகள்,தவறுகள்,கூடவே இப்பொழுது எதிர்ப்பு சக்தியில்லாத காரணத்தால் உயிர்ப்பலிகள் இல்லாத நிலை,ராணுவ ஆக்கிரமிப்பு,போரில் தப்பித்த அப்பாவி மக்களின் மறுவாழ்வு உறுதி செய்யப்படாமை,சம உரிமைக்கு மறுக்கும் நிலைப்பாட்டுக்கு உதாரணமாக கிருஷ்ணா 13ம் வரைவை இலங்கையிடம் இந்தியா வலுயுறுத்தியுள்ளது என்பதை தான் கிருஷ்ணாவிடம் எந்த உறுதிமொழியையும் தரவில்லையென்ற அறிக்கை,இப்பொழுது அமெரிக்க தீர்மானம் கூட இலங்கை கொண்டு வந்த LLRC யை உறுதிப்படுத்துவது மட்டுமே.அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கே பல நாடுகளின் உதவி கோரல்,வியன்னாவில் இலங்கை சார்ந்த ராஜதந்திர முடுக்கி விடல் என் இவ்வளவு விசயங்களில் சிலவற்றையாவது பொதுக்கருத்தாளார்கள் என நீங்கள் குறிப்பிடும் யாராவது இருக்கிறார்களா என தெரியவில்லை.நட்பு ரீதியாக நாம் மட்டுமே கருத்து பகிர்வு செய்து கொள்ள முடியும்.ஏனையவர்கள் ஒன்று இலங்கை சார்ந்த பொதுக்கருத்தாளர்கள் அல்லது இந்தியா சார்ந்த மறு கருத்தாளர்கள் இல்லையென்றால் விடுதலைப்புலிகளின் தவறுகளையெல்லாம் பின் தள்ளி விட்டு மட்டுமே தமிழ் தேசியம் பேசும் பொதுக்கருத்தாளர்கள் என்ற வரையறைக்குள் மட்டுமே இருப்பார்கள்.இந்த மாதிரி பொதுக்கருத்தாளர்கள் கூட பரவாயில்லை.இன்னும் சில பொதுக்கருத்தாளர்கள் இருக்கிறார்கள்.புலி எதிர்ப்பு மட்டுமே என்ற பொதுக்கருத்தாளர்கள்.

அடுத்து தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தவறுகள்,அவர்களின் மன உறுதி என்பதை தொட்டு விட்டு எதிர்கால இலங்கைக்கு எது சரியான தீர்வாக இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறேன்.பார்க்கலாம்.

நீங்கள் பிராமணிஸம் என்று குறிப்பிடுவதை புலம் பெயர் தமிழர்களே அதிகம் பின்பற்றுகிறார்கள்.இதனையும் தாண்டிய ”ரா”வின் தொடர்புகள்,விடுதலைப்புலிகள் இந்திய கொள்கைகளுக்கு உள் வராமல் தனித்து நின்றது,ராஜிவ்,சீனா,பாகிஸ்தான் சார்ந்த இலஙகை நிலைப்பாடு என பல காரணங்கள் முதன்மையானவை என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வவ்!நீங்கள் கூறும் டீகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் குடியிருப்பு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. திரிகோணமலையை அமெரிக்கா கைப்பற்ற முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள்.ஒன்று இந்திரா காந்தி.இன்னொன்று விடுதலைப்புலிகள்.இதன் காரணமாக ரகசியமாக டீகோ கார்சியாவில் இடம் பிடித்துக்கொண்டது.ஏற்கனவே ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானில் தலையீடு,இந்திய,இலஙகை நட்பு போன்றவற்றோடு டீகோ கார்சியாவும் அமெரிக்கவின் கைவசம் இருப்பதாலேயே ஆசிய நாடுகளின் மொத்த பரப்பும் அமெரிக்காவின் ஆளுமைக்குள் இருக்கிறதென்ற கருத்தை அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் தீர்மானம் இலஙகை குறித்த புதிய பரிமாணம் எனலாம்.தமிழர்களுக்கு நலன்களை பாதுகாக்க உருவாகாத போதும் உலக அரசியலில் இலங்கை தீர்மானமும்,சேனல் 4 காணொளியும் இலங்கையினை உலக அரசியலில் உள் அடக்கியுள்ளது எனலாம்.அமெரிக்க தீர்மானத்தையும் அழுத்தங்களையும் இலங்கை அரசு புறம் தள்ளுகிறதா அல்லது வடகிழக்கு மக்களுக்கு மறுவாழ்வை கொண்டு வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!என்னோட பாணியா!நீண்ட பின்னூட்ட வள வளத்தான் மட்டுமே எனது பாணி என நினைக்கிறேன்.

ஒரு லண்டன்காரர் தமிழர்கள் இன்னும் வலிமையற்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்றார்.அது உண்மையாக கூட இருக்கலாம்.காரணம் இது வரையிலான போராட்ட குரல்களை நாம் ஒலித்தாலும் இலங்கையின் போர்க்குற்றங்களை உலக அரங்கில் கொண்டு வந்தது பல்வேறு காரணங்களுக்காக காணொளிகளை கடத்தியவர்களும்,சேனல் 4 தொலைக்காட்சியும்,ஐ.நா மூவர் குழு அறிக்கையும் இப்பொழுது அமெரிக்க தீர்மானம் மட்டுமே என்பேன்.ஜனநாயக ரீதியாக போராடிய வெற்றி என்றால் இந்த முறை இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.கவும்,அ,தி,மு,கவும்,திருமாவளவனும்,கம்யூனிஸ்ட் க்ட்சியினரும் இணைந்து ஒலித்த குரல் மட்டுமே.

தமிழர்களின் ஒற்றுமை என்ற வலு இருந்திருந்தால் அமெரிக்க தீர்மானம் உடப்ட அனைத்தும் பின் தள்ளப்பட்டிருக்கும் நிலை உருவாகியிருந்துக்கும்.

தனிமரம் said...

வழமையாக அரசியல் நையாண்டி ராஜ நடராஜன் அண்னா!