Followers

Sunday, March 25, 2012

கூடங்குளம் போராட்டங்கள்

மின்சாரம் என்பதன் உணர்வே இல்லாமல் அதன் முழு பயனையும் அனுபவிக்கும் எனக்கு கூடங்குளம் பற்றி கருத்து சொல்ல அருகதை இல்லையென்பதோடு அணுவியல் மின்சாரம் குறித்த அரிச்சுவடி கூட தெரியாமல் மேதாவித்தனம் காட்டுவதும் சரியில்லை.மாறாக மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மேதாவித்தனம் தேவையில்லையென கருதுகிறேன்.

தமிழகத்திற்கு மின்சார தேவை ஒரு பக்கம், ஜப்பானின் சுனாமிக்குப் பின் அணு மின் நிலையம் பற்றி புதிதாக முளைத்துள்ள ஆபத்து ஒரு புறம் என மிகவும் சிக்கலான சூழலில் தமிழகம் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கியுள்ளது வருத்தமளிக்கிறது.நேற்று வரை உங்களில் ஒருத்தி நான் என்று சொல்லி வந்த ஜெயலலிதா திடீரென நிலை மாறும் சூர்ப்பநகை சூனியத்தனம் கண்டிக்கத் தக்கது.மாநில முதல்வராக தனது நிலைப்பாட்டை உரக்க சொல்ல அவருக்கு உரிமை உண்டு.மாறாக இரட்டை அரசியல் வேடம் போடுவது அவர் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் என்பதோடு அந்நியள் மாதிரி Split personality decision தமிழக மக்களின் வாழ்வையும் பாதிக்கும்.

இப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் இருப்பதை காவல்துறை வன்முறையால் தடுத்து நிறுத்துவதை விட தீர்வுகளுக்கான வழிகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தேடுவதே சிறந்தது.ஒரு வாரமாகியும் மத்திய,மாநில அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தைக்குப் போகாத உதாசீனமும்,போராட்டக்காரர்களை குற்றவியலில் சிக்க வைக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. 

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்து இல்லாதது என்பதற்கான உத்தரவாதத்தையும் மக்களின் பயத்தையும் போக்குவது ஒரு ஜனநாயக அரசின் கடமை.தொழில் வல்லுனர்களின் கருத்துக்கள் இரு வேறு விதமாக மாறுபட்டு இருப்பதால் எது சரியென்ற முடிவுக்கும் மக்களுக்கு குழப்பம்.மின்சக்தி நமது வாழ்க்கையின் முக்கிய ஒன்றாகிப் போன காலத்தில் மின்சாரமில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமேயில்லை.மேலும் கூடங்குளம் மட்டுமல்ல,தொழிற்சாலைகள் அமையும் நகர்ப்புறங்களில் சுகாதார பக்க விளைவுகள் உண்டாகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆனாலும் வேலை வாய்ப்புக்கள்,நாட்டின் பொருளாதாரம் கருதி சுகாதார குறைபாடுகளோடு நாம் வாழக்கற்றுக் கொண்டிருக்கிறோம்.

1999ம் வருடம் பி..ஜே.பி அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814 விமானத்தை தலிபான்கள் (Harkat-ul-Mujahideen) 176 பயணிகளையும் ஹைஜாக் செய்த போது மக்களின் உயிரே முக்கியம் என்று ஜஸ்வந்த் சிங் தலிபான் பணயக் கைதிகளை கந்தகாரில் கொண்டு போய் ஒப்படைத்து பயணிகளை 7 நாட்கள் துன்பங்களுக்குப் பின் அழைத்து வந்தார். மக்களுக்காகவே அரசின் கொள்கைகள்.அரசின் கொள்கைகளுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்ந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அடையாளமாகும்.

12 comments:

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு,இயற்கை ஆர்வலர்களின் அணு உலை எதிர்ப்பு ஒருபுறம்,மேலை நாடுகளின் பொருளாதர நலன் சார்ந்த அணு உலை வியாபார்ம் ஒருபுறமும் இப்பிரச்சினையின் இரு பக்கங்களாகும்.

இயற்கை ஆர்வலர்கள் செர்னோபில் விபத்து,இபோது ஜப்பான் படும் பாடு என்பதை காட்டி இது போல் நிகழ்ந்தால் என்ன செய்வது ,போபால் வாயு விபத்திற்கு நஷ்ட ஈடோ அல்லது,கரணமான்வர்கள் மீது எந்த நடவடிக்கையோ எடுக்கப் படவில்லையே என்பதையும் சுட்டுகிறார்கள்.

அணு உலை ஆதரவாளர்கள் இது இந்தியா வல்ல்ரசு ஆகும் முதல் படி?.இதை எதிர்ப்பவர்கள் வெளிநாடுகளின் துண்டுதல் காரண்மாக் செய்கிறர்கள் என்று மத சாயம் பூசும் வேலை உள்ளிட்ட கான்ஸ்பைரேசி என்றே கூறுகின்றனர்.பாதுகாப்பு குறித்தும் சில விள்க்கங்கள் அளிக்கின்றார் எனினும் மக்கள் அத்னை ஏற்பதாக இல்லை.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் இழந்த குடும்பங்கள்,வீட்டுக்கு ஒருவருகு வாரிசு ரீதியாக் வேலை என்ற பிரசாரம் எடுபட்டே நிலம் பெற்ற அரசு பலரை கண்டு கொள்ளவில்லை.

மின்சாரம் தயாரிக்க அணு உலை மட்டும்தான் ஒரே வாய்ப்பா!!!!!.என் பிற விடயங்களை யோசிக்க மாட்டேன் என்கிறார்கள் என தெரியவில்லை.

போர் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போர் நடப்பது இலாபம் போல்,அணு உலை தயாரிப்பு நாடுகளுக்கு அணு உலை வியாபாரம் இலாபமே,

அதுவும் தொடர்ந்து யுரேனியம் வாங்குவதும் அவர்களுக்கு இலாபமே!.

தோரியம் உலகின் 30_50 % இந்தியாவில் இருக்கிறது.ஏன் மின்சாரத்திற்காக் மட்டுமே அணு உலை என்போர் இங்கிருப்பதை விட்டு யுரெனியம்& சார் அணு உலை வாங்க வேண்டும்?

ஏன் இந்தியா தோரிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிற நாடுகளுக்கும் எற்றுமத்யே செய்ய இயலுமே!.

இதை அனுமதிக்க மாட்டார்கள்.தோரியம் தேவைப்படும் போது பிரச்சினை உருவாக்கி எடுத்துக் கொள்வார்கள் பெரிய அண்ணன்கள்!.

இன்னும் நிறைய சொல்லலாம்!.விவாதிப்போம்!

MANO நாஞ்சில் மனோ said...

முதலில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வையும், பயத்தையும் போக்குவதே ஒரு நல்ல அரசுக்கு அடையாளம்....

வவ்வால் said...

ராஜ்,

இப்போ தான் உலைய வைக்குறிங்க ,இனிமே எப்போ சோறு பொங்க :-))

எனக்கும் அணு ஆற்றல் மீது நம்பிக்கை கிடையாது, தேவையற்ற தீங்கான தொழில்நுட்பம் அது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அப்படி இருக்கும் போது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்,புரிய வைக்க வேண்டும் என்று சொல்வதன் பொருள் தான் எனக்கு புரியவில்லை.

மேலும் யதார்த்தம் என்ன எனவும் பார்க்க வேண்டும்,

திட்டம் ஆரம்பித்து முடியப்போகும் நிலையில் விழித்துக்கொண்டு வேண்டாம் என்று சொன்னால் எந்த அரசும் கேட்காது என்பதை உணர வேண்டும்.

மேலும் இப்படி போராடுகிறார்கள் என்று நிறுத்தினால் நாளை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் ஆகி, அனைத்துக்கும் போராடுவார்கள் என்று அரசு நினைக்கிறது எனவே விட்டுக்கொடுக்காது என்பதே நடைமுறை உண்மை.

மேலும் போராட்டக்காரர்களின் அணுகு முறையும் ,யுத்தியும் சரியானது அல்ல. திட்டம் கேரளாவுக்கு என அறிவிக்கப்பட்டப்போதே ,கேரளாவில் எதிர்த்து வெளியேற்றினார்கள்,அதை அறிந்த பின்பும் தமிழகத்தில் அதே போல் ஏன் தீவிரமாக எதிர்க்கவில்லை.ஆரம்பத்திலேயே எதிர்த்து இருக்க வேண்டும்.

போரட்டக்காரர்கள் அப்போது எதிர்த்தோம் என்று ஆதாரம் காட்டுவார்கள் ,அது எல்லாம் கலைஞர் ஈழப்பிரச்சினைக்கு கடிதம் எழுதியது போன்றதே , எவ்வித தீவிரமும் இல்லாத அடையாள எதிர்ப்புகள். இப்போது புக்‌ஷிமா சம்பவத்துக்கு பிறகு தான் விழிப்புணர்வு வந்தது என்று சொன்னால், அப்படியான திடீர் ஞானதோயங்களுக்கு எல்லாம் அதிகார மையம் அசையாது என்ற உண்மையை உணரவில்லை என்றே சொல்வேன்.

மேலும் இப்போது கூட அணு உலை பிரச்சினையை ஒரு ஊரின் பிரச்சினைப்போல சித்தரித்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் ஏன் அப்படி.அம்மாவட்ட அளவில் கூட மக்கள் பெரும்பாண்மையாக போரடவில்லை. இது ஒரு பலவீனம் தானே.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனில் நாடு தழுவிய பந்த்,மாநில அரசுக்கு எதிராக எனில் மாநில அளவிலும் பந்த் நடத்துவார்கள் அப்போது தான் தாக்கம் தெரியும் ,அப்படிப்பட்ட பரந்த எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு மக்களுக்கு பரப்பாமல் இடிந்த கரைக்கு மட்டுமான போராட்டமாக ஒரு சிலர் கொண்டு சென்றதால் தமிழகத்தின் பிறப்பகுதி மக்கள் மின்சாரம் வேண்டும் அணு உலையை திற என்று குரல் கொடுப்பதையும் அரசாங்கம் திறக்கும்னு சொன்னால் ஆதரிப்பதையும் காணலாம்.

இதற்கெல்லாம் காரணம் இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்கள் பெயர் தங்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என நினைப்பதால் இருக்கலாம் என தோன்றுகிறது.அல்லது ஏதேனும் மறைமுக கோரிக்கை இருக்கலாம்.எனவே பெருமளவில் பரவலாக்காமல் போராட்டத்தினை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க பார்க்கிறார்கள்.

சக்தி வாய்ந்த மத்திய ,மாநில அரசுகளை வழிக்கு கொண்டுவர இந்த அணுகுமுறை உதவாது என்பதை உணராமல் அவர்கள் தங்களது பலத்தை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

கடந்த ஆண்டு நான் எழுதியப்பதிவிலேயே சொல்லி இருப்பேன் விரைவில் அம்மையார் தன் நிலையைமாற்றிக்கொள்வார் என்று. ஏன் எனில் ஆட்சியாளர்கள் சிந்தனை எப்போதும் ஒரே போல அவர்கள் தேவைக்கு தான் கொள்கையே ஒழிய மக்களுக்கு அல்ல என்பதே. இப்போது ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதில் என்ன பயன். எதிர்ப்பார்த்த ஒன்று தானே. ஏமாந்தோம் என்று சொல்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பேன்.

மாற்று மின்சக்திகள் விலை அதிகம், எப்போதும் பயன்ப்படாது என்பதெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்களே. மாற்று திட்டங்களை செயல்ப்படுத்தினால் அதிக அளவு கமிஷன் அடிக்க முடியாது என்ற காரணத்தினாலே புறக்கணிக்கிறார்கள் என்பேன்.

திருவள்ளூரில், வள்ளூர் என்ற இடத்தில் 1500 மெ.வா அனல் மின் நிலைய திட்டம் கொண்டுவர செலவான தொகை 8000 கோடி , அப்படி எனில் ஒரு மெகா வாட்டுக்கு 5.33 கோடி செலவு. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ஒரு மெ.வா க்கு செலவு அதிக பட்சம் 5 கோடி அப்படி எனில் 1500 மெ.வா க்கு 7500 கோடி போதுமே. இத்தொகை நிலம் உட்பட அனைத்து செலவுகளுக்குமே. அப்போ எம் மின் உற்பத்தி மலிவானது?

மின்னாற்றல் குறித்தான எனது சில பதிவுகளுக்கான சுட்டிகள்:

கூடன் குளம்
கூடன்குளம் ஒரு மாற்றுப்பார்வை

அணு உலைப்பாதுகாப்பு
அப்துல் கலாம் சொல்வது போல் அணு உலை பாதுகாப்பானதா?

சூர்ய மின்சக்தி
சூரிய மின்சக்தி உற்பத்தி

கடலலை மின்சாரம்
கடலலை மின்சாரம்

வவ்வால் said...

ராஜ்,

இப்போ தான் உலைய வைக்குறிங்க ,இனிமே எப்போ சோறு பொங்க :-))

எனக்கும் அணு ஆற்றல் மீது நம்பிக்கை கிடையாது, தேவையற்ற தீங்கான தொழில்நுட்பம் அது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அப்படி இருக்கும் போது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்,புரிய வைக்க வேண்டும் என்று சொல்வதன் பொருள் தான் எனக்கு புரியவில்லை.

மேலும் யதார்த்தம் என்ன எனவும் பார்க்க வேண்டும்,

திட்டம் ஆரம்பித்து முடியப்போகும் நிலையில் விழித்துக்கொண்டு வேண்டாம் என்று சொன்னால் எந்த அரசும் கேட்காது என்பதை உணர வேண்டும்.

மேலும் இப்படி போராடுகிறார்கள் என்று நிறுத்தினால் நாளை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் ஆகி, அனைத்துக்கும் போராடுவார்கள் என்று அரசு நினைக்கிறது எனவே விட்டுக்கொடுக்காது என்பதே நடைமுறை உண்மை.

மேலும் போராட்டக்காரர்களின் அணுகு முறையும் ,யுத்தியும் சரியானது அல்ல. முதலில் இத்திட்டம் கேரளாவுக்கு என அறிவிக்கப்பட்டப்போதே ,கேரளாவில் எதிர்த்து வெளியேற்றினார்கள்,அதை அறிந்த பின்பும் தமிழகத்தில் அதே போல் ஏன் தீவிரமாக எதிர்க்கவில்லை.ஆரம்பத்திலேய தீவிரமாக எதிர்த்து இருக்க வேண்டும்.

போரட்டக்காரர்கள் அப்போது எதிர்த்தோம் என்று ஆதாரம் காட்டுவார்கள் ,அது எல்லாம் கலைஞர் ஈழப்பிரச்சினைக்கு கடிதம் எழுதியது போன்றதே , எவ்வித தீவிரமும் இல்லாத அடையாள எதிர்ப்புகள். இப்போது புக்‌ஷிமா சம்பவத்துக்கு பிறகு தான் விழிப்புணர்வு வந்தது என்று சொன்னால், அப்படியான திடீர் ஞானதோயங்களுக்கு எல்லாம் அதிகார மையம் அசையாது என்ற உண்மையை உணரவில்லை என்றே சொல்வேன்.

மேலும் இப்போது கூட அணு உலை பிரச்சினையை ஒரு ஊரின் பிரச்சினைப்போல சித்தரித்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் ஏன் அப்படி.அம்மாவட்ட அளவில் கூட மக்கள் பெரும்பாண்மையாக போரடவில்லை. இது ஒரு பலவீனம் தானே.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனில் நாடு தழுவிய பந்த்,மாநில அரசுக்கு எதிராக எனில் மாநில அளவிலும் பந்த் நடத்துவார்கள் அப்போது தான் தாக்கம் தெரியும் ,அப்படிப்பட்ட பரந்த எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு மக்களுக்கு பரப்பாமல் இடிந்த கரைக்கு மட்டுமான போராட்டமாக ஒரு சிலர் கொண்டு சென்றதால் தமிழகத்தின் பிறப்பகுதி மக்கள் மின்சாரம் வேண்டும் அணு உலையை திற என்று குரல் கொடுப்பதையும் அரசாங்கம் திறக்கும்னு சொன்னால் ஆதரிப்பதையும் காணலாம்.

இதற்கெல்லாம் காரணம் இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்கள் பெயர் தங்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என நினைப்பதால் இருக்கலாம் என தோன்றுகிறது.அல்லது ஏதேனும் மறைமுக கோரிக்கை இருக்கலாம்.எனவே பெருமளவில் பரவலாக்காமல் போராட்டத்தினை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க பார்க்கிறார்கள்.

சக்தி வாய்ந்த மத்திய ,மாநில அரசுகளை வழிக்கு கொண்டுவர இந்த அணுகுமுறை உதவாது என்பதை உணராமல் அவர்கள் தங்களது பலத்தை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

கடந்த ஆண்டு நான் எழுதியப்பதிவிலேயே சொல்லி இருப்பேன் விரைவில் அம்மையார் தன் நிலையைமாற்றிக்கொள்வார் என்று. ஏன் எனில் ஆட்சியாளர்கள் சிந்தனை எப்போதும் ஒரே போல அவர்கள் தேவைக்கு தான் கொள்கையே ஒழிய மக்களுக்கு அல்ல என்பதே. இப்போது ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதில் என்ன பயன். எதிர்ப்பார்த்த ஒன்று தானே. ஏமாந்தோம் என்று சொல்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பேன்.

மாற்று மின்சக்திகள் விலை அதிகம், எப்போதும் பயன்ப்படாது என்பதெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்களே. மாற்று திட்டங்களை செயல்ப்படுத்தினால் அதிக அளவு கமிஷன் அடிக்க முடியாது என்ற காரணத்தினாலே புறக்கணிக்கிறார்கள் என்பேன்.

திருவள்ளூரில், வள்ளூர் என்ற இடத்தில் 1500 மெ.வா அனல் மின் நிலைய திட்டம் கொண்டுவர செலவான தொகை 8000 கோடி , அப்படி எனில் ஒரு மெகா வாட்டுக்கு 5.33 கோடி செலவு. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ஒரு மெ.வா க்கு செலவு அதிக பட்சம் 5 கோடி அப்படி எனில் 1500 மெ.வா க்கு 7500 கோடி போதுமே. இத்தொகை நிலம் உட்பட அனைத்து செலவுகளுக்குமே. அப்போ எம் மின் உற்பத்தி மலிவானது?

மின்னாற்றல் குறித்தான எனது சில பதிவுகளுக்கான சுட்டிகள்:

கூடன் குளம்
கூடன்குளம் ஒரு மாற்றுப்பார்வை
அணு உலைப்பாதுகாப்பு
அப்துல் கலாம் சொல்வது போல் அணு உலை பாதுகாப்பானதா?

சூர்ய மின்சக்தி
சூரிய மின்சக்தி உற்பத்தி
கடலலை மின்சாரம்
கடலலை மின்சாரம்

Bibiliobibuli said...

ஆரம்பத்திலிருந்து கவனித்தவரையில் அரசியலா, மக்கள் சக்தியா என்கிற குழப்பம் தான் மிஞ்சிக்கிடந்தது போல் தெரிந்தது.

இடையே அப்துல் கலாம் வரை பிரச்சாரப்பாணியில் உள்நுழைக்கப்பட்டதும், இன்று அரசியல், ஜெயலலிதாவின் சுயமுகம் வெளிப்படுவதும் ஒன்றும் ஆச்சரியமாய் தோன்றவில்லை. இந்திய அரசியலும், ஜனநாயகமும் செவ்வனே வழமை போல் தன் கடமையை கூடங்குளம் விடயத்திலும் தார்மீக அறம் மீறி செயற்படுத்துகிறது.

மக்கள் போராட்டம் வெல்லவேண்டும் என்று தோன்றினாலும், இறுதியில் அரசே வெல்லும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.

ஹேமா said...

நடா...சந்தோஷமாயிருக்கு.ஏதாவது உங்கட பாணியில உப்புமடச் சந்திக்கு ஒரு பதிவு தாங்களேன் !

ராஜ நடராஜன் said...

சகோ!சார்வாகன் மிக மிக தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.பதிவு போடும் காலத்தை விட பின்னூட்டங்களுக்கான நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதாலும் வருகைக்கு நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு போய் விட மனம் ஒவ்வாததாலும் பின்னூட்டம் நாளை நாளையென்று நாட்களை அபகரித்துகொண்டன.

நீங்கள் சொன்னதில் நெய்வேலி மட்டுமல்ல,இந்தியாவின் அனைத்து அரசு திட்டங்களுமே மண்ணின் மைந்தர்களுக்கு மறுவாழ்வு என்றில்லாமல் ஈட்டுத்தொகை என்று மட்டுமே முடித்துக்கொண்டுள்ளது.

இதுவரையிலும் எரிபொருள் சக்தியில் பல பரிட்சைகள் நிகழ்ந்த போதும் உத்தரவாதமான இரண்டு பெட்ரோல்,அணுசக்தி மட்டுமே.ஆனால் இரண்டுக்குமே காற்று மாசுபாடு,அணு ஆபத்து போன்ற பக்க விளைவுகள் இருக்கவே செய்கின்றன.நீர்,மண்,சூரிய ஒளியை விட காற்று மட்டுமே நிரந்தரமான ஒன்றாக பரவலாக அனைத்து இடத்திலும் காணப்படுகின்றது.எனவே அணுசக்திக்கு மாற்றாக காற்றை வேண்டுமானால் எரிபொருள் சோதனை செய்ய முயற்சிக்கலாம் என்று பார்த்தால் காற்றையும் 2G வந்து அபகரித்துக்கொண்டது:)

செர்னோபில்,ஜப்பான் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறைவே எனலாம்.

அணுஉலைக்கு ஏன் போகவேண்டும்?திருப்பூர் ஆடைத்துறையில் அமெரிக்க ஒப்பந்தங்கள் போட்டால் ஆடையின் விலையோடு நிறுவன பாதுகாப்பு,தொழிலாளர் நலன்,கழிவிட வசதிகள் முதற்கொண்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டாலும் அனைத்தும் செயல்படுத்தப் படுவதில்லை என்கிறார் பதிவர் ஜோதிஜி.

பாதுகாப்பு குறித்த நீங்கள் குறிப்பிடும் போபால் முன்னுதாரணமாக இருக்கிறது.

தோரியம் கச்சாப்பொருள் மட்டுமே.ஆனால உபயோகிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லையென்றே நினைக்கின்றேன்.தோரியம் மட்டுமல்ல இரும்பு தாது முதற்கொண்டு கோவா,ஆந்திர மாநிலங்களிலிருந்து ஜப்பான்,சீனாவுக்கு கச்சாப்பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டு பின் நமக்கே வாட்ச்,ரேடியோ,டெலிவிசன் மற்றும் ஏனைய மின்கணினிப் பொருட்களாக திரும்ப வருகிறது.இது கிட்டத்தட்ட விவசாயிகளின் உற்பத்தியை இடைத்தரகர்கள் லாபமீட்டுவதைப் போல.

இந்திய தோரிய உற்பத்திக்கு பதிலாக ஏவுகணை விறபனை செய்வதில் இந்தியா முன்னேறும்:)

பனாமா கால்வாய் வெட்டப்பட்ட காணொளி ஒன்று கண்டேன்.பனாமாவின் கிராமப்புற வாழ்க்கை,காடுகள்,மண் வளம் என்றா அனைத்தையும் சுரண்டப்பட்ட திட்டமாகவே உருவானது.நீண்ட காலப்போக்கில் இவையெல்லாம் பின் தள்ளப்பட்டு இன்றைய அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக பனாமா கால்வாய் விளங்குகிறது.

கூடங்குளம்?

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நலமாக இருக்கிறீங்களா?

உலை வச்சது எப்ப,சோறு பொங்கறது எப்பன்னு இப்ப தெரிஞ்சிருக்குமே!தாமதத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பின்னூட்டங்களையெல்லாம் வெறுமனே கடந்து போக விருப்பம் இல்லாமலும்,கால அவகாசம் தேவையென்பதாலும் தாமத கச்சேரி:)

திட்டம் ஆரம்பித்த கால கட்டத்துக்கும் இப்போதைய இலங்கை,சீனா உள்ளடக்கிய கடல் பொருளாதார சூழ்நிலைக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.எனவே இப்போதைய குரலின் முக்கியத்துவத்தில் உலக அரசியலும் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவது இயல்பே.கூடவே ஜப்பான் விபத்து எதிர்ப்புக்குரலுக்கான ஒரு முக்கிய காரணம் கூட.இப்பொழுது எதிர்ப்புக்குரல்கள் அரசு அடக்கு முறையில் அடக்கப்பட்டாலும் கூட அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

அக்னி 5 வானத்தில் ஏற்றுவதற்கு நம்ம ஊர் மாட்டு வண்டி மாதிரி நகரும் வண்டி (launching pad) இருந்தால் போதும்.அந்த மாதிரி ஒரு நகரும் அணு உலை இருந்தால் சுனாமி இந்தோனேசியாவில் துவங்குதுன்னு தெரிந்த கணமே மாட்டு வண்டியை டெல்லிப் பக்கம் நகர்த்தி விடலாம்:)பேசுறதே சீரியசான விசயம் இதுல சிரிப்பானா?

உங்களுடைய வாதம் போராட்டக்காரர்களின் விமர்சனமாக இருந்தாலும் ஒரு அரசு இயங்கும் முறையில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியான ஒன்றானதுதான்.ஆனால் ஜெயலலிதாவின் திருகுதாளம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.கலைஞர் பாணியில் மத்தி அரசின் முடிவே மாநில அரசின் நிலைப்பாடும் என்று சொல்லி அதன்படி செயல்பட்டிருக்கலாம்.முன்பு போராட்டத்திற்கு ஆதரவான தோற்றம்,பின் திடிரென மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தாண்டுவது ஏற்புடையதல்ல.ஒரு அரசின் செயல்பாடுகள் அதன் மீதான நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டுவதே சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

நீங்கள் சொன்ன சூரிய மின் சக்திக்கான கருத்தாக சகோ.சார்வாகனுக்கு பின்னூட்டத்திற்கு பதில் சொல்லியுள்ளேன்.மாற்றுக்கள் நிறைய இருக்கின்றன.ஆனால் உத்தரவாதம் இல்லையென்பதே அனைத்து மாற்று சக்திகளின் குறைகள்.

இந்தியாவில் வாகன எரிபொருள் காற்று மாசுபாடு என்பதோடு பெட்ரோலிய கச்சாப்பொருளின் விலையைக் கூட்டிக்கொண்டே போகின்றன.குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

அக்னி இருக்குது!ஆனா அக்னி இல்ல.

ராஜ நடராஜன் said...

மனோ!கூடங்குளம் விசயத்தில் நிச்சயமாக மக்களின் பயம் நியாயமானதே.ஆனால் அது தேவையில்லாத அச்சம் என்பதை அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

ஆமா!மத்திய கிழக்கு முழுவதும் Arab spring ன்னு சொல்லிகிட்டு பஹ்ரைனுக்கு மட்டும் ஏன் மறுப்பு?

ராஜ நடராஜன் said...

ரதி!நலமாக உள்ளீர்களா?பதிவுகள் ஒன்றையும் காணோமே?

கூடங்குளம் என்னோட கால தாமதமான பின்னூட்டம் போலவே ஆறி அடங்கி விட்டது போல் தெரிகிறது.

நீங்கள் சொன்னது போல் மக்கள் போராட்டம் வெல்லவேண்டும் என்று தோன்றினாலும், இறுதியில் அரசே வெல்லும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது என்பதே முடிவாகிப் போனது.

ராஜ நடராஜன் said...

ஹேமா!நல்ல வேளை ஒரு கவிதை பாடுங்களேன் என்று கேட்காத வரைக்கும் மகிழ்ச்சியே!

உப்புமடச் சந்திக்கு ஏதாவது சொல்வேன்.ஆனால் எப்பொழுது என்பது எனக்கே தெரியாது:)