இங்கே திருடுபவனே தலைவன்
லஞ்சம் கொடுப்பவனே வள்ளல்
இனப்படுகொலைக்கு துணையே வெளி நாட்டுக்கொள்கை
வருமானத்துக்கு அதிகமாக சம்பாதிப்பவனே ஐ.பி.எஸ்
இலவசத்துக்கு கை ஏந்துபவனே வாக்காளன்
இங்கே சர்தாருக்குப் பெயர் மிஸ்டர் க்ளீன்
சக்கர நாற்காலிக்காரனுக்குப் பெயர் ராஜதந்திரி
பதவிக் கனவே தேசத்தொண்டு
ஊழல் இவர்கள் பதவியின் பிறப்புரிமை.
ஓட்டுக்கு காசு கொடுப்பதே அரசியல் சாசனம்
இங்கே அருந்ததிராயும் பினாயக் சென்னும் தேசத்துரோகிகள்
தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவரா அல்ல!
காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் தேசமாகிப் போன
இந்தியாவே நீ இன்னும் புண்ணிய பூமியா
அல்லது ஜப்பானின் சுனாமித் தேவையா?
(பட உதவி: தெகல்கா இணையதளம்.
காசு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் பாராளுமன்ற ஊழல் 2008.)
