இங்கே திருடுபவனே தலைவன்
லஞ்சம் கொடுப்பவனே வள்ளல்
இனப்படுகொலைக்கு துணையே வெளி நாட்டுக்கொள்கை
வருமானத்துக்கு அதிகமாக சம்பாதிப்பவனே ஐ.பி.எஸ்
இலவசத்துக்கு கை ஏந்துபவனே வாக்காளன்
இங்கே சர்தாருக்குப் பெயர் மிஸ்டர் க்ளீன்
சக்கர நாற்காலிக்காரனுக்குப் பெயர் ராஜதந்திரி
பதவிக் கனவே தேசத்தொண்டு
ஊழல் இவர்கள் பதவியின் பிறப்புரிமை.
ஓட்டுக்கு காசு கொடுப்பதே அரசியல் சாசனம்
இங்கே அருந்ததிராயும் பினாயக் சென்னும் தேசத்துரோகிகள்
தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவரா அல்ல!
காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் தேசமாகிப் போன
இந்தியாவே நீ இன்னும் புண்ணிய பூமியா
அல்லது ஜப்பானின் சுனாமித் தேவையா?
(பட உதவி: தெகல்கா இணையதளம்.
காசு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் பாராளுமன்ற ஊழல் 2008.)
15 comments:
சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தில அலை அங்கே போயி தொடணுமே ;-)
பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்கு !
இதெல்லாம் அரசியல்ல சகஜம்
தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவரா அல்ல!
...... தவறுகளை கூட ஜனநாயக கொள்கைகள் என எடுத்துக் கொள்ள, மக்களை, அரசியல்வாதிகள் பழக்கி விடுறாங்களோ....
//சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தில அலை அங்கே போயி தொடணுமே ;-)//
வெறுக்க வச்சுடறானுங்க தெகா:(
//பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்கு !//
அய்யே!இதையெல்லாம் கவிதைன்னா....
ஏதோ கவிதாயினி கையில் குட்டுப்படுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்குது.
//தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவரா அல்ல!
...... தவறுகளை கூட ஜனநாயக கொள்கைகள் என எடுத்துக் கொள்ள, மக்களை, அரசியல்வாதிகள் பழக்கி விடுறாங்களோ....//
நாமெல்லாம் ஏதோ வெளிநாட்டு மோகம் புடிச்சு இந்தியாவை கரிச்சுக்கொட்டுறதா சிலபேர் நினைக்கலாம்.அரசியலில் தொட்டதெல்லாம் தவறுகளாகவும் அது குறித்து வருத்தம் கூட காட்டாமல் அதனையே நிலைப்படுத்தும் கொடுமையிருக்குதே சகிக்கவில்லை.
பிரதமரும்,முதல்வருமே கோணல் என்கின்ற போது தனி மனித குறைகளையும்,குற்ற்ங்களையும் எப்படி நிவர்த்தி செய்யப் போகிறோம்?
//இதெல்லாம் அரசியல்ல சகஜம்//
நசரு!எங்கே போயிட்டீங்க?
ஆமா!கவுண்டமணியை துணைக்கு கூப்பிட்டே நமக்கும்,இலவசங்களைக் கண்டு மக்களுக்கும் குறைகளையும் குற்றங்களையும் எளிதாக,இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை வந்து விடுகிறது.
இலவசத்துக்கே இலவசம் ஜெயலலிதா அறிக்கை பார்த்தீங்களா?இப்ப என்ன செய்வீங்க:)
ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தானுங்க. அதுல ஒருத்தனுடைய விசா முடிஞ்சு போச்சு. நாங்க பயந்திட்டோம். அந்த சீனாக்காரன் கூலா சொல்றான், "யோவ், கொஞ்சம் பணத்தை தள்ளுங்கையா, அவனுங்க ஒன்னும் பண்ண மாட்டானுங்க" என்று. நாங்க, "ஐயையோ அதெப்படி இது ரொம்ப விவகாரமாயிடுமே, மாட்டிகிட்டா வம்பாச்சே?"
என்றோம், அதற்க்கு அவன், "என்ன அதெப்படின்னு கேட்கிறீங்க, நாங்க ஏற்கனவே பலதடவை குடுத்திருக்கோம், அவங்களும் வாங்கிகிட்டு விட்டிருக்காங்க" என்றான். இதில கவனிக்க வேண்டியது, ஒரு வெளி நாட்டுக் காரன் மனதில் நம்மைப் பத்தி எவ்வளவு மட்டமான எண்ணம் பதிவாயிருக்குன்னுதான். பணத்துக்காக இவனுங்க மலத்தை தின்னுபவர்கள் என்ற இமேஜ் தான் இருக்கிறது. வெட்கக் கேட்டு.
சரியான சவுக்கடி கேள்வி..
//ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தானுங்க. அதுல ஒருத்தனுடைய விசா முடிஞ்சு போச்சு. நாங்க பயந்திட்டோம். அந்த சீனாக்காரன் கூலா சொல்றான், "யோவ், கொஞ்சம் பணத்தை தள்ளுங்கையா, அவனுங்க ஒன்னும் பண்ண மாட்டானுங்க" என்று. நாங்க, "ஐயையோ அதெப்படி இது ரொம்ப விவகாரமாயிடுமே, மாட்டிகிட்டா வம்பாச்சே?"
என்றோம், அதற்க்கு அவன், "என்ன அதெப்படின்னு கேட்கிறீங்க, நாங்க ஏற்கனவே பலதடவை குடுத்திருக்கோம், அவங்களும் வாங்கிகிட்டு விட்டிருக்காங்க" என்றான்.//
வாங்க ஜெயதேவ்!நம்ம நாட்டின் வண்டவாளம் சீனாக்காரன் வரை தெரிஞ்சுருக்கா?அதுவும் விசா!
வில்லங்கம்ன்னு ஆச்சுன்னா சீனாக்காரன் எளிதாக விக்கெட் எடுக்க்ப் போறான்:(
//சரியான சவுக்கடி கேள்வி..//
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உங்க கடையிலேயிருந்து வந்தேன்.
சீமானை கொஞ்சம் நல்லா விளையாடச்சொல்லுங்க.
நம்ம கிட்ட இருக்குற கடைசி ஆட்டக்காரர்.
||சேகுவரா அல்ல! ||
அவரு யாருங்க? அவருக்கு என்ன ரேட் குடுத்தா ஓட்டுக்கேட்டு கூவுவார்னு கேட்டாலும் கேப்பாங்க!!! (:
//||சேகுவரா அல்ல! ||
அவரு யாருங்க? அவருக்கு என்ன ரேட் குடுத்தா ஓட்டுக்கேட்டு கூவுவார்னு கேட்டாலும் கேப்பாங்க!!! (://
போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் தெரியுதுங்க:(
Post a Comment