சென்ற பதிவோடு தேர்தல் குறித்த பார்வையை நிறுத்திக்கொண்டு தேர்தல் முடிவுகள் வரை மௌன பார்வையாளனாக இருக்கலாமென்று நினைத்தேன்.
இலவசமாக:) இன்னுமொரு பதிவு சீமான் சார்பாக இடலாம் என நினைக்கின்றேன்.தேர்தல் பதிவுகள் எழுதுவதின் காரணமாக தமிழக மக்கள் நலனோடு, ஈழம் குறித்த கோபமும் அதனை அரசியல் சார்ந்தே தமிழகத்தில் நோக்க வேண்டியதாக இருந்ததாலும் ஏனைய பதிவர்களுடன் நானும் சிறு கற்களை இதுவரையில் எறிந்து வந்தேன்.அதற்கான தேவைகளை குறைக்கும் வண்ணமாக இப்பொழுது காங்கிரஸ் கட்சி அவர்களுக்குள்ளேயே உட்பூசல்களை வளர்த்துக்கொண்டு எனக்கும் ஏனைய பதிவர்களுக்கும் சுமையை குறைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இது வரை சொல்லியவற்றில் எந்த ஒரு தனிமனிதர்கள் மற்றும் கட்சிகளின் வெறுப்பில் அல்லாது எதுவெல்லாம் நிகழந்தால் தமிழகத்துக்கு நல்லதல்ல என்ற எனது எண்ணத்தை மட்டுமெ எதிர்வினையாக பதிவிலும் பதிவர்களின் பின்னூட்டத்திலும் பிரதிபலித்து வந்தேன்.
சீமானுக்கும் அதிக தேர்தல் கர்ஜனைகளுக்கு அவசியமில்லாமல் தமிழக காங்கிரஸ் அவர்களுக்குள்ளேயே சீட்டுக்கு தகராறு செய்து கொள்வதும், ஒருவருக்கு எதிராக இன்னொரு குழுத் தொண்டர்கள் குரல் எழுப்பி சண்டையிட்டுக்கொள்வதும் கட்சியின் எப்போதுமான நிலையை பிரதிபலிக்கிறதா அல்லது காங்கிரஸின் ஈழ நிலைப்பாடு காரணமாக தமிழ் உணர்வாளர்களின் கோபம் அவர்களை சுடுகிறதா என்பது அவரவர் பார்வையை பொறுத்த விசயம்.
இதுவரையிலும் ஈழம் என்ற காரணம் கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று ரயில் தண்டவாளம் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருப்பதும்,எந்த விதமான கலவர நிலையையும் ஈழம் குறித்த உணர்வு காரணமாக வெளிப்படாமையும்,லத்திகா சரணின் அறிக்கைகளும், தமிழ் உணர்வாளர்களுக்கும்,வை.கோ,சீமான் போன்றவர்களுக்கும் வெற்றியே என்பேன்.
தற்போதைய தேர்தல் சூட்டில் காங்கிரஸ் கட்சியின் உட்பூசல்கள் காரணமாகவும்,தி.மு.கவின் ஒப்புக்கு சப்பாணி கூட்டணி நிலையாலும்,பாதுகாப்பு என்ற போர்வையில் ராகுல் காந்தியும்,சோனியா காந்தியும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரவில்லையென்று செய்திகள் அடிபடுகின்றன.மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே உண்மையாக ஜனநாயகத்தில் கட்சியை வளர்க்கும் என்பதாலும்,நிகழ்வுகளின் தவறுகளில் காங்கிரஸ் வருங்காலங்களிலாவது பாடம் கற்றுக்கொண்டு சிங்கள மக்களுக்கு இணையான சமவாழ்க்கை உரிமையை ஈழத்தமிழர்களுக்கும் பெற்றுத்தருமா என்பதில்தான் தமிழகத்தில் காங்கிரஸின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
தற்போதைக்கு சீமானின் எளிய விக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்!
13 comments:
காங்கிரஸ் சென்னைக்குப் பிரச்சாரத்திற்காக சென்னைக்கு வரவில்லை என்று நீங்கள் கூறுவதை, சீமானின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக் கூறலாமா?
காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினூடாக அம்மா வெற்றி பெற்று, தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் உருவாக வேண்டும் என்கின்ற சீமானின் எண்ணம் பாராட்டப்பட வேண்டியதே,
ஆனால் இந்த நல்ல நேரத்தில் கூட்டணிக் கொப்புகளை உலுப்பி விட்டு, தனிமரமாய் நிற்கும் அம்மாவிற்கா, ஐயாவிற்கா மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்பதை தேர்த்ல் வரும் வரை பொறுத்திருந்தே அறிய வேண்டியுள்ளது..
அட நம்ம சீமான், அனல் பறக்கப் பேசி, சாதித்து விட்டார் எனும் வகையில் பதிவிருக்கிறது.
//காங்கிரஸ் சென்னைக்குப் பிரச்சாரத்திற்காக சென்னைக்கு வரவில்லை என்று நீங்கள் கூறுவதை, சீமானின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக் கூறலாமா?
காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினூடாக அம்மா வெற்றி பெற்று, தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் உருவாக வேண்டும் என்கின்ற சீமானின் எண்ணம் பாராட்டப்பட வேண்டியதே,
ஆனால் இந்த நல்ல நேரத்தில் கூட்டணிக் கொப்புகளை உலுப்பி விட்டு, தனிமரமாய் நிற்கும் அம்மாவிற்கா, ஐயாவிற்கா மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்பதை தேர்த்ல் வரும் வரை பொறுத்திருந்தே அறிய வேண்டியுள்ளது..
அட நம்ம சீமான், அனல் பறக்கப் பேசி, சாதித்து விட்டார் எனும் வகையில் பதிவிருக்கிறது.//
நிரூபன்!நீங்கள் மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.தமிழகத்தின் பதிவர்களின் கண்ணோட்டத்தை விட உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும்,பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
காங்கிரஸ் வேட்ப்[ளர் விஜயதரணியை ஆதரித்துப் பேச ராகுல்காந்தி கன்னியாகுமரி வருவதாக செய்தியொன்று படித்தேன்.
நீருபன்!சீமானுக்கு அதிகம் சிரமம் வைக்காமல் தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் உட்பூசல் செய்து கொண்டு வெற்றி வாய்ப்புக்களை இழப்பது மாதிரியான தோற்றம் சீமானின் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எளிதாக்குமென்பதே பதிவின் சாரம்:)
சீமான அனல் பறக்கப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.அவர் சாதிக்க வேண்டியதை காங்கிரஸ் சீமானுக்கு எளிதாக்குகிறது.
பின்னூட்டங்களிலும்,உங்கள் இடுகையிலும் மீண்டும் சந்திக்கிறேன்.நன்றி.
அந்தக் கட்சிக்காரய்ங்க, தமிழகத்தில நடத்திறதெல்லாம் ஒரு பொழப்பாள்ல :))
அவிங்கள கண்டுகிட்டு ஒரு தனிப் பதிவு போடுறதெல்லாம் பெரிசு ;-)
பகிர்வுக்கு நன்றி நண்பரே.............மக்களை புரிந்து கொள்வது கஷ்டம்தான்!
//அந்தக் கட்சிக்காரய்ங்க, தமிழகத்தில நடத்திறதெல்லாம் ஒரு பொழப்பாள்ல :))
அவிங்கள கண்டுகிட்டு ஒரு தனிப் பதிவு போடுறதெல்லாம் பெரிசு ;-)//
தெகா!பதிவு சீமானுக்கு வேலைய எளிதாக்கிட்டாங்க என்பதால்:)என்னமா சண்டை போடுறாங்க தெரியுமா?
கலையரசன் லிபியா குறித்த பதிவில் உங்கள் கருத்து எனது பார்வையோடு இருந்த பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.உங்களுக்கு அங்கே சொல்ல வேண்டிய நன்றியை இங்கே உரித்தாக்குகிறேன்.
//பகிர்வுக்கு நன்றி நண்பரே.............மக்களை புரிந்து கொள்வது கஷ்டம்தான்!//
வணக்கம் விக்கி உலகம்!
மக்கள் தடாலடியா அதிரடி கொடுத்துடுவாங்களோன்னு நினைக்கிறீங்களா?
தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையை படம் பிடித்துக்காட்டும்.பார்க்கலாம்.
சீமானின் கருத்துக்கள் இளைஞ்சர்களை ஈர்ப்பதாக கேள்வி பட்டேன்.(இளைஞ்சர்களின் மன்நிலையை அவர் பிரதிபலிக்கிறார்? பொது ஊடகங்கள் தான் பிரதிபலிப்பதில்லை) நல்ல செய்தி. அவரின் வளர்ச்சி மற்றும் அவர் சார்ந்த கருத்துள்ளவர்களின் வளர்ச்சி தேவையானதே.
ஆனால் அவர் தமிழ் தேசிய பார்வையிலிருந்து சாதிய பாதையில் விழுந்துவிடாமல் இருக்கவேண்டும்!. அவ்வாறு அவர் மாறிவிட்டால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். பிற்காலத்தில் அவர் சார்ந்த கருத்துள்ளவர்களின் நம்பகதன்மையை முழுமையாக இழக்க நேரிடலாம்.
ஈழ தமிழர் நிலைபாடு மட்டும் இல்லாமல் இன்னும் பல விஷயங்களில் காங்கிரஸ்(மற்றும் பிற தேசிய கட்சிகள்) தமிழகத்தில் மட்டு பட வேண்டியது நல்லதே.அது தமிழ் நட்டுக்கும் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நல்லது.
//சீமானின் கருத்துக்கள் இளைஞ்சர்களை ஈர்ப்பதாக கேள்வி பட்டேன்.(இளைஞ்சர்களின் மன்நிலையை அவர் பிரதிபலிக்கிறார்? பொது ஊடகங்கள் தான் பிரதிபலிப்பதில்லை) நல்ல செய்தி. அவரின் வளர்ச்சி மற்றும் அவர் சார்ந்த கருத்துள்ளவர்களின் வளர்ச்சி தேவையானதே.
ஆனால் அவர் தமிழ் தேசிய பார்வையிலிருந்து சாதிய பாதையில் விழுந்துவிடாமல் இருக்கவேண்டும்!. அவ்வாறு அவர் மாறிவிட்டால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். பிற்காலத்தில் அவர் சார்ந்த கருத்துள்ளவர்களின் நம்பகதன்மையை முழுமையாக இழக்க நேரிடலாம்.
ஈழ தமிழர் நிலைபாடு மட்டும் இல்லாமல் இன்னும் பல விஷயங்களில் காங்கிரஸ்(மற்றும் பிற தேசிய கட்சிகள்) தமிழகத்தில் மட்டு பட வேண்டியது நல்லதே.அது தமிழ் நட்டுக்கும் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நல்லது.//
உங்களின் விரிவான கருத்துக்கு நன்றி.சீமானின் பின்னால் இளைஞர் கூட்டம் திரளுவது தமது எதிர்கால அரசியலுக்கு நல்லதில்லையென்றே தி.மு.க அவரது பேச்சுக்கு தடை விதிக்கின்றது.சீமானும் நீங்கள் சொன்னதுபோல் சாதிய அரசியலுக்குள் நுழையாமல் தற்காத்துக்கொள்வது அவருக்கும்,அவரது இயக்கத்திற்கும் முக்கியமான ஒன்று.
தற்போதைய நிலையில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நிலை கொள்ள சந்தர்ப்பங்கள் இல்லை.
அட நீங்க வேறு? இன்னும் இது போன்ற நினைப்புல இருக்கீயளா? என்னமோ சோனியா தமிழ்நாட்டுக்கு வந்து அந்த விமான ஓடு பாதை தளத்தில் இருந்து அந்த சேலை தலைப்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் கையை ஆட்டிக் கொண்டு மக்களை பார்த்து கை அசைத்தால் கைக்கு ஓட்டுப் போட்டு விடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருப்பீங்க போலிருக்கே?
மொத்தத்தில் தங்கபாலுக்கு நன்றின்னு நாலு பதிவு எழுதனும்.
நடராஜன். தமிழ்நாட்டில் 9 10 11 12 இந்த நான்கு நாட்கள் தான் உண்மைகளை தீர்மானிக்கும். இப்ப நடந்து கொண்டிருப்பது எல்லாமே சும்மா நியூஸ் ரீல்,
இந்த முறை கிடைத்த வாய்ப்பை காங்கிரஸை அழிக்க சீமான் பயன்படுத்துகிறாரோ இல்லையோ அவரின் உண்மையான சமூக ஆர்வத்தை சரியான வழியில் குறிப்பாக தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு புரியும் வகையில் கொண்டு செலுத்த வேண்டும். இதில் தோற்றால் சீமான் மற்றொரு வைகோ.
//அட நீங்க வேறு? இன்னும் இது போன்ற நினைப்புல இருக்கீயளா? என்னமோ சோனியா தமிழ்நாட்டுக்கு வந்து அந்த விமான ஓடு பாதை தளத்தில் இருந்து அந்த சேலை தலைப்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் கையை ஆட்டிக் கொண்டு மக்களை பார்த்து கை அசைத்தால் கைக்கு ஓட்டுப் போட்டு விடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருப்பீங்க போலிருக்கே?
மொத்தத்தில் தங்கபாலுக்கு நன்றின்னு நாலு பதிவு எழுதனும்.//
பின்னூட்டம் மாங்கு மாங்குன்னு இருப்பதால் பிரிச்சுப்போட்டுடலாம்!
சோனியா வந்தாலும் ஓட்டுப்போட மாட்டாங்களா?இது நல்லாயிருக்கே!முதலில் வருவாங்களான்னு பார்க்கலாம்.
தங்கபாலுவுக்கு 4ன்னா இளங்கோவனுக்கு?
//நடராஜன். தமிழ்நாட்டில் 9 10 11 12 இந்த நான்கு நாட்கள் தான் உண்மைகளை தீர்மானிக்கும். இப்ப நடந்து கொண்டிருப்பது எல்லாமே சும்மா நியூஸ் ரீல்,
இந்த முறை கிடைத்த வாய்ப்பை காங்கிரஸை அழிக்க சீமான் பயன்படுத்துகிறாரோ இல்லையோ அவரின் உண்மையான சமூக ஆர்வத்தை சரியான வழியில் குறிப்பாக தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு புரியும் வகையில் கொண்டு செலுத்த வேண்டும். இதில் தோற்றால் சீமான் மற்றொரு வைகோ.//
31ந்தேதியே தீர்மானிக்கும்ன்னு ஜோஸ்யம் நினைச்சுகிட்டிருந்தேன்.கிளி பறந்துடுச்சு மாதிரி தெரியுது.வேற தடாலடி ஓட்டு தமிழகத்துக்கும் தி.மு.கவுக்கும் புதுசா என்ன?
சீமான் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த தேர்தலில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக சிலரை களத்தில் இறங்கி நீரோட்டம் பார்த்திருக்கலாம்.அதனை தவற விட்டது இன்னும் 5 ஆண்டுகள் கழித்தும் இதே சோதனையை செய்ய வேண்டிய சூழ்நிலை.
இதில் தோற்றால் இன்னொரு வை.கோ.....நல்ல வரிகள்.
சீமான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா?
present
//present//
வாங்க அரசியல் அதிரடி ஆட்டக்காரரே!அடுத்த பதிவு போட ஓடுறீங்களாக்கும்:)
Post a Comment