இதுவரையிலான அரசியல் பார்வையில் தமிழக மக்களுக்கான தூர நோக்கு நலன் சார்ந்த வாய்ப்புக்கள் இல்லாததால் தி.மு.க vs அ.தி.மு.க இரண்டில் யார் வெல்வார்கள் என்பதை விட தமிழக சட்டமன்ற 2011 ஏப்ரல் 13 தேர்தலைப் பொறுத்தவரை வெல்லப்போவது ஸ்பெக்ட்ரமா?இலவசமா என்பதே கேள்வி!
தி.மு.க தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் அடிப்படையில் தி.மு.கவின் பலம் மற்றும் பலவீனங்களை அலசியதில் வந்த அரசியல் ஆக்டோபஸ் இது.
தி.மு.க கூட்டணி தோற்றால் பதிவர் உண்மைத்தமிழனுக்கு பதிவுலகம் சார்பாக பழனி முருகனிடம் மொட்டை.அ.தி.மு.க கூட்டணி வென்றால் தமிழக மக்கள் பழைய வில்லியின் புதிய சதுராட்டங்கள் என்னவென்பதைக் காணலாம்.
இனி தி.மு.க கூட்டணியின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் அரசியல் ஆக்டோபஸ்.
எத்தனை அடித்தாலும் தாங்கும் இதயம் கருணாநிதி
கண் மூடிய பக்தி பொங்கும் கண்மணிகள்
தி.மு.கவுக்கே ஓட்டுப் போட்டுப் பழகிடுச்சு மனநிலையாளர்கள்
இலவசங்களை வரவேற்கும் தினசரி,மாத பட்ஜெட் வாழ்க்கையாளர்கள்
இலவச தொலைக்காட்சி,ஒரு படி அரிசி
புதிய இலவச கதாநாயகியின் தாக்கம் முக்கியமாக
புதிதாய் மனைவியாக கிரைண்டர் துணைவியாக மிக்ஸி:)
ஓட்டும் ஒரு வாங்கும் பொருளே சித்தாந்தம்
நிர்வாகம் பழகிய மந்திரிகள்
ஊழலுக்கிடையிலும் திருப்தி கொள்ளும் நிர்வாகம்
ஸ்டாலினின் மெல்லிய அணுகுமுறை
அழகிரியின் அதிரடி மற்றும் அடாவடி அரசியல்
சன்,கலைஞர் தொலைக்காட்சியின் தேர்தல் பரப்புரை
காங்கிரஸ்,விடுதலைச்சிறுத்தைகள்,பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டணி வாக்குகள்
கருணாநிதிக்குப் பதிலாக அறிக்கை விடும் வீரமணி
அரசுத்துறை சார்ந்த தி.மு.க வெற்றிக்கு பாடுபடுபவர்கள்
ஜெயலலிதாவின் இறுதி நேர பைத்தியக்காரத்தனம்
வை.கோவின் அரசியல் துறவறம்
பலவீனங்களின் கூட்டு எண்ணிக்கை
மூன்று மணி நேர உண்ணாவிரதம்
மழை ஓய்ந்தது.தூறல் மட்டுமே
தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு
ராஜினாமா கடித ஏமாற்று
இனப்படுகொலைக்கு தமிழகத்தின் பங்கு
கூட்டுக்களவானியாக காங்கிரஸ் கூட்டணி
வெறும் கடிதங்கள் மற்றும் மத்திய அரசு சார்பு நிலை
ஸ்பெக்ட்ரம் உழலில் தி.மு.க வின் பங்கு
ஆ.ராசா கைதும்,சாதிக் பாட்ஷாவின் மரணமும்
கலைஞர் தொலைக்காட்சியில் சி.பி.ஐ விசாரணை
கனிமொழி,தயாளு அம்மாள் விசாரணை
இனியும் வரும் சி.பி.ஐ,நீதிமன்ற அதிரடிகள்
குடும்பம் மற்றும் வாரிசு அரசியல்
தன் குடும்ப பதவிக்காக மட்டும் விமானப்பயணம்
கட்சி சீட்டுக்காகவும் விமானபயணம்
நியாயமா கேள்வியும் மூக்கறுபட்ட 63ம்
இலவசங்களுக்கு எதிரான விமர்சனங்கள்
இலவசம் கருவூலத்திற்கு கடன்
நிர்வாகம்,சட்ட,ஒழுங்கு சீர்கேடல்
வழக்கறிஞர்கள்,காவல்துறையினர் கலவரம்
நீண்ட கால திட்டமிடல் குறைபாடு
மீனவர் பிரச்சினையில் திருப்தியின்மை
காங்கிரஸின் கூட்டணிக் குழப்பம்
திரைப்படத்துறையின் மொத்த ஆதிக்கம்
விஜய் ரசிகர்களின் தாக்கம்
ஜெயலலிதாவிற்கான பெண்கள் ஓட்டு
இரட்டை இலைக்கான நிரந்தர ஓட்டு
கம்யூனிஸ்ட்,தேமுக இன்ன பிற கட்சிகளின் கூட்டணி
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மாற்றாக தோன்றினாலும் வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.மேலும் தும்முவதற்கும் கூட டெல்லியின் அனுமதிக்கு காத்திருக்கும் தமிழக காங்கிரசின் நிலை தமிழகத்தில் தேறுவதாக தெரியவில்லை. ஒருவேளை,காங்கிரஸ் வென்றால் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் சார்பாக நான் தலையில் துண்டு போட்டுக்குறேன்.
5 comments:
நான் முதல்ல வந்துட்டேன்..
நல்ல கூடடிக் கழித்து பார்த்து நலாலத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..
வெல்லப் போது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போ்ம்..
//நல்ல கூடடிக் கழித்து பார்த்து நலாலத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..
வெல்லப் போது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போ்ம்..//
வாங்க கவிதை வீதி சௌந்தர்!நம்ம கடையில ஆறிப்போன வடைதான் கிடைக்கும்.ஆனாலும் மெதுவடைதான்:)
ஜெயலலிதாவின் இறுதிநேர முட்டாள்தனம் மட்டுமில்லாமலிருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தக் கணமே வந்துருக்கும்.
ஜெயலலிதாவின் இறுதிநேர முட்டாள்தனம் மட்டுமில்லாமலிருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தக் கணமே வந்துருக்கும்.
இதை மட்டுமே எழுதியிருக்கலாம்.
//ஜெயலலிதாவின் இறுதிநேர முட்டாள்தனம் மட்டுமில்லாமலிருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தக் கணமே வந்துருக்கும்.
இதை மட்டுமே எழுதியிருக்கலாம்.//
பங்காளி!ஒற்றைக்கண்ணுல எப்படி பார்க்கிறதாம்:)
Post a Comment