தேர்தல் ஆணையம் பற்றிய விழிப்புணர்வு டி.என்.சேஷன் காலம் தொட்டு வளர்கிறதென்றே நினைக்கின்றேன்.அதற்கும் முற்பட்ட காலத்தில் இப்படி ஒரு ஆணையம் இருப்பதே பெரும்பாலோருக்கு தெரியாமல் இருந்தது. அரசியல்வாதிகளுக்கு அடங்காத சண்டிக்குதிரையாக டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்த காலத்திற்குப் பின் இப்பொழுதே தேர்தல் ஆணையம் களை கட்டுகிறதென நினைக்கின்றேன்.
தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்
மக்களாட்சிக்கு வாக்களிப்போம்,
மனசாட்சிப்படி வாக்களிப்போம்,
உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்
மக்களாட்சிக்கு வாக்களிப்போம்,
மனசாட்சிப்படி வாக்களிப்போம்,
உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்
மக்களுக்கு கழக ஆட்சியில் இரண்டில் ஒன்றே பழக்கதோசம் எனும் பொழுது தேர்தல் ஆணையத்தின் விளம்பரமும் பலருக்கும் போய்ச் சேர்வது மாற்றங்களை உருவாக்கவும் மன மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
8 comments:
உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்
....great message!
//உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்
....great message!//
இன்று உங்கள் பெயரை சிதரா சாலமன் என்று எங்கோ ஒரு தளத்தில் ஆங்கிலத்தில் பார்த்தேன்.அப்படியே பெயரைப்போடுங்க பார்க்க நல்லா இருக்குது!
தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை நிகழ்த்துகிறது.இதனை வரவேற்பதும் கட்சி சார்பற்ற தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களின் கடமை.
பார்க்களாம் தோர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகள் எவ்வளவு பலன் தருமென்று..
//பார்க்களாம் தோர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகள் எவ்வளவு பலன் தருமென்று..//
பலன் த்ருவதால்தான் இன்று கருணாநிதி தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறதென்று பயந்து அறிக்கை விடுகிறார்.
மேலும் இதுவரை தேர்தல் ஆணையம் வாகன சோதனை செய்ததில் அதிக பணம் மதுரை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டதென்பது சூடான செய்தி:)
28 ஹியரிங் என்ன சொல்லப் போகுதோ? ஏண்ணே! ரூ20000க்கு மேல பண மாற்று செக் மூலமாதான் இருக்கணும்னு அதே அரசாணைதானே சொல்லுது. கட்டுகட்டா துட்ட கொண்டுகிட்டா யாவாரத்துக்கும், நிலம் வாங்கவும் போறாங்க. இதச்சொல்லி கேஸ் போட்டா புடிச்சி உள்ள போடுங்கடான்னு சொல்றத உட்டுபோட்டு பொதுஜனம் காசு கொண்டு போனாலும் புடிப்பீங்களான்னு கேக்குதாம்ல நீதிமன்றம். உருப்படும்.:(
//28 ஹியரிங் என்ன சொல்லப் போகுதோ? ஏண்ணே! ரூ20000க்கு மேல பண மாற்று செக் மூலமாதான் இருக்கணும்னு அதே அரசாணைதானே சொல்லுது. கட்டுகட்டா துட்ட கொண்டுகிட்டா யாவாரத்துக்கும், நிலம் வாங்கவும் போறாங்க. இதச்சொல்லி கேஸ் போட்டா புடிச்சி உள்ள போடுங்கடான்னு சொல்றத உட்டுபோட்டு பொதுஜனம் காசு கொண்டு போனாலும் புடிப்பீங்களான்னு கேக்குதாம்ல நீதிமன்றம். உருப்படும்.:(//
பாலாண்ணா!பொட்டிக்கடைல ஏதாவது வாங்குவது,டீக்கடைல சாயா குடிப்பது போன்ற சில தவிர கையிலிருந்து காசு செலவு செய்யாதபடி மத்திய வங்கியிலிருந்து,ஏனைய வங்கிகளுக்கு ATM மூலமாக பணம் எடுத்துக்கொள்ளவும்,யாருடைய உதவியுமில்லாமல் பணம் டெபாசிட் செய்துகொள்ளவும்,வாங்குவது,விற்பதற்கு சிறிய கடைகள் முதல் கொண்டு online payment இயந்திரம் இருக்கிறது.இது மாதிரியான நிலை இந்தியாவிற்கும் வரவேண்டும்.
முதல்வரின் அறிக்கையைக் கொண்டும் அவரது அறிக்கை சார்ந்து ஒருவர் நீதிமன்றம் சென்றதும் அதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு பொதுநலனுக்கு எதிரானதும் நீதிமன்றத்தின் சறுக்கலே.
இதன் பின்ணணியை சவுக்கு தளம் வேறு கோணத்தில் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
உங்கள் பதிவும் எனது பதிவும் ஒரே மாதிரிதான் தொடங்குகிறது. ஆனால், அதன் கருப்பொருள்தான் வேறு வேறு...! இந்த முறை தேர்தல் ஆணையம் சற்று அதிகமாகவே தலையிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் போக்கு சற்று அதிகப்பிரசிங்கித்தனமானது. அதை நியாயப் படுத்த முடியாது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
//உங்கள் பதிவும் எனது பதிவும் ஒரே மாதிரிதான் தொடங்குகிறது. ஆனால், அதன் கருப்பொருள்தான் வேறு வேறு...! இந்த முறை தேர்தல் ஆணையம் சற்று அதிகமாகவே தலையிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் போக்கு சற்று அதிகப்பிரசிங்கித்தனமானது. அதை நியாயப் படுத்த முடியாது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.//
தோழர் மபா!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நம்மிடம் இருக்கும் பிரச்சினையே இதுதான்.ஒரு பிரச்சினையை நோக்கும் போது அவரவர் தராசில் ஒப்பிடுவது பொதுநலனில் பிரச்சினையை உருவாக்குகிறது.
முன்பு கொய்னா என்ற இலையில் தயாரிக்கப்பட்ட மருந்தே காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டது.கசப்புன்னா உவ்வே கசப்பு.ஆனால் குடித்தால் காய்ச்சல் நின்று விடும்.
தமிழகத்தில் சீரடைந்த நிலைக்கு தேர்தல் ஆணைய கொய்னாவே மருந்து.கசக்குது குடிக்க மாட்டேன்னா தமிழகத்தின் நோய் தீராது.
Post a Comment