Followers

Wednesday, March 23, 2011

யோகாவும் மாட்டிறைச்சியும்.

இன்றைய செய்தியாக பெரியார் திராவிட கழகம் யோகா கற்றுக்கொடுக்க வந்த பாபா ராம்தேவ் போதனையில் நுழைந்து மாட்டிறைச்சியை தியானம் செய்து கொண்டிருப்பவர்கள் முன் காட்டினார்களாம்.பெரியார் சேர்த்து வைத்த சொத்து ,  அறிவுக்களஞ்சியம் அனைத்தையும் அடைகாக்கும் வீரமணியை விட சமூக உணர்வாளர்களாக பெ.தி.க செயல்படுகிறதென்றே நினைக்கிறேன்.ஆனால் இது என்ன அத்துமீறல் அடுத்தவன் சுய உரிமையில் தலையிடுவது.?

நெருப்பில் நடப்பதும் விஞ்ஞான ரீதியில் சாத்தியமானதே என்கின்ற பரிசோதனையாகப் பிரச்சாரம் வைக்கும் போது மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் யோகா செய்வது இயலும் என்கின்ற பிரச்சாரமே சரியாக இருக்கும்.அது தவிர்த்து சைவ உணவுகள் சாப்பிடுபவனின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு.

பெரியாருக்குப் பின் பகுத்தறிவு படும் பாடு பரிதாபமாக இருக்கிறது.

ஒரு கருத்தை முன்வைக்கும் போது மாற்றுக்கருத்தை முன்வைப்பதுவே சரியான முறையாக இருக்கும்.அது தவிர்த்து ஒருவர் விமர்சிக்கிறார் என்றவுடன் பழ.கருப்பையா வீட்டில் நுழைந்து அடியாட்களை வைத்து தகராறு செய்வது போன்றது பெ.தி.க வின் செயல்.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அடிமாடுகள் போவதன் காரணம் என்ன தெரியுமா?கேரளாக்காரன் செய்யும் மாட்டிறைச்சி வறுவல் செய்முறை.மசாலா இட்டு வெங்காயம், பூண்டு,சீரகம் இன்னபிற கலவையில் நன்றாக வறுத்த தேங்காய்,கருவேப்பலை, கொத்துமல்லி மணத்தில் அதே மாதிரியான ருசியை மாட்டிறைச்சியில் கொண்டு வருவதே மாட்டிறைச்சி சாப்பிடு என்பதன் உண்மையான நோக்கமாக அமையும்.இதற்கு ஆதரவாக பெயரளவில் திராவிடம் பேசும் கழக ஆட்சியின் டாஸ்மாக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்:)


இனி யோகா பக்கம் தலைகாட்டினால் சைவ உணவு மட்டுமே யோகாவுக்கு சிறந்தது என்ற கோட்பாடு உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும்,அசையா வேலை செய்பவர்களுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கும்.அதற்கு மேலும் யோகாவே வாழ்க்கை என்று அதில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக்கொள்பவர்களுக்கும் வேண்டுமானால் இது துணை புரியும்.ஆனால் உடல் உழைப்பாளிகளுக்கும்,சாதாரண வாழ்வியல் முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் முழு சைவம் என்பது இயலாத ஒன்றே.மேலும் முன்பை விட தமிழகத்தில் அசைவ உணவு உட்கொள்ளும் பழக்கமும்,மது அருந்துவதும் வாழ்க்கை முறை என்று மாறியிருக்கிறது.இதற்கெல்லாம் மாற்று என்ன என்றால் உடல்பயிற்சி,யோகா,தியான பரிட்சை முறைகளே என்பேன்.

சூழ்நிலைக்கைதியாய் தமிழகம் இருப்பதால் விரும்பினால்
அசைவம் உண்!
மது அருந்து!
ஆனால் தினமும் உடல்பயிற்சி,யோகா,தியானம் செய்!

அன்றாடப் பழக்கத்தில் சைவமா!அசைவமா என்பதை உடல் சொல்லும்.அதற்கேற்ப மாறுவதே நல்லது.முழு தயிர்ச் சாதமும் நல்லதில்லை.கறி தின்றால்தான் பெரியாரியல் என்பதும் தவறு என்பது எனது கோட்பாடு.

முன்பு சுப்பரமணி சாமியின் தோழர்கள் மொரார்ஜி தேசாயும்,ராஜ் நாராயணனும் மூத்திரம் அருந்தினால் உடலுக்கு நல்லது,நீண்ட நாட்கள் வாழலாம் என்ற ஒரு தியரியைக் கொண்டு வந்தார்கள் என்று செய்தியில் படித்தேன்.ராஜ் நாராயணன் தியரியைப் பிரச்சாரம் செய்த நாட்களிலேயே மரணமடைந்தார்.மொரார்ஜி தேசாய் பிரதமர் கனவை நிறைவேற்றி கடலில் குளித்து மகிழ்ந்து மரணமடைந்தார்.உடல் சொல்லும் பாடமே மனதிற்கு மருந்தாக அமையும்.

மது கிடைக்காத ஊரில் இருப்பதால் நான் மது அருந்துவதில்லை.உணவில் எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்வதில்லை.உடற்பயிற்சிகளை இயன்றவரை தினமும் கடைப்பிடிக்கிறேன். இதுவரை எப்பொழுதாவது வரும் சளி, இருமல் தவிர மருந்துகள் எதுவும் சாப்பிட்டதில்லை.உடலும் மனமுமே வாழ்க்கை.   மனமும்,உடலும் ஆரோக்கியமாகவே உள்ளது.

தேர்தல் நேரம்ங்கிறதால நம்மகிட்டருந்து ஆட்டையப்போடுற ஆட்களைக்கண்டவுடன் அடிச்சு புடிச்சு பதிவை படிக்க ஓடுறீங்க.நம்மோடு அன்றாடம் ஒட்டிக்கொள்ளும் வாழ்க்கை முறையை எனது பார்வையில் பரிட்சித்துப் பார்த்த முறையில் சொல்லியிருக்கிறேன்.ஓட்டுப் போடுவதை விட கருத்து சொல்வது புரிதலுக்கு உதவியாக இருக்கும்.

8 comments:

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு...

ராஜ நடராஜன் said...

//மிகவும் பயனுள்ள பதிவு...//

க்ருன்!பதிவை விட தினமும் உடற்பயிற்சி செஞ்சீங்கன்னா இன்னும் மகிழ்ச்சி:)

ஹேமா said...

யோகா,உடற்பயிற்சி எல்லாம் செய்ய விரும்பம்தான் நடா...என்ன செய்யன்னு யோசிக்கிறேன் !

bandhu said...

தினமும் நடை பயிற்சி.. குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை யோகா.. தொப்பை குறையமாட்டேன் என்கிறது.. நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

guna said...

ஆனால் இது என்ன அத்துமீறல் அடுத்தவன் சுய உரிமையில் தலையிடுவது.? good true true true

ராஜ நடராஜன் said...

//யோகா,உடற்பயிற்சி எல்லாம் செய்ய விரும்பம்தான் நடா...என்ன செய்யன்னு யோசிக்கிறேன் !//

ஹேமா!காலையில் பல்துலக்குவதற்குப் பின் உடற்பயிற்சியோ,யோகாவோ செய்வது அன்றாட தினத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்பது எனது அனுபவம்.

குறைந்தது 15 நிமிடம் தினமும் இதற்கென நேரம் சேமிக்கும் பழக்கம் வந்து விட்டால் அப்புறம் இயல்பாகி விடும்.

யோகா செய்வதை விட கண் மூடி தியானம் செய்வதில் எண்னங்களை அடக்குவது கடினமானது என நினைக்கிறேன்.இந்தக் கலை எனக்கு இன்னும் கைவரவில்லை.

ராஜ நடராஜன் said...

//தினமும் நடை பயிற்சி.. குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை யோகா.. தொப்பை குறையமாட்டேன் என்கிறது.. நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.//

வாங்க பந்து!நீண்ட மறுமொழியாக சொல்லிகிட்டிருந்தேன்.இடையில் போன் ரிங்கியதில் என்னமோ குழறுபடி.மறுபடியும் தொடர்கிறேன்.

தினமும் நடைபயிற்சி சரி!அதென்ன வாரம் ஒரு முறை யோகா?இரண்டும் அன்றாடம் ஒன்றாக இணையவேண்டுமென நினைக்கிறேன்.முக்கியமாக நடை பயிற்சிக்குப் பின் யோகாசனங்கள் செய்வது வயிற்று தசைகளுக்கு மிகவும் பலன் தரும்.

உடற்பயிற்சிக்கு அடுத்து 30 நிமிட இடைவெளிக்குப் பின் நீர் அருந்திய பின் உணவு நல்லது.

மேலும் இளமையில் வளைந்து கொடுக்கும் தசைகள் நாட்பட முரண்டு பிடிக்குமென்பதால் தொப்பை பற்றி நினைவில்லாமல் நடையிலும்,யோகா நிலையிலும் உடலுக்கும்,மூளைக்கும் தோன்றும் ஒரு வித உணர்வு (சரியாக சொல்லத்தெரியவில்லை எனக்கு) அனுபவம் வேண்டியாவது பயிற்சிகளை தொடர்வது நல்லது.

ராஜ நடராஜன் said...

//ஆனால் இது என்ன அத்துமீறல் அடுத்தவன் சுய உரிமையில் தலையிடுவது.? good true true true//

நீங்கள் கமல் குணாவா:)

ஒருவருக்கு சரியெனப்படுவது அடுத்தவருக்கு சரியாக இருப்பதில்லை.வாழ்க்கையில் பொதுவான எதுவும் அதே மாதிரிதான்.

சிலவற்றிற்கு கடிவாளம் போடலாம்.தனி மனித நலனாக யோகா செய்கிறவனைப் புண்படுத்துவது என்ன நியாயம்?