எப்ப பார்த்தாலும் எங்க ஊரு தாத்தாவையே குறை சொல்றதே இந்த பதிவர்களுக்கு வேலையாப்போச்சு.எத்தனை தாத்தாக்கள் நாடு முழுதும் இருக்கிறாங்க.யாராவது ஒரு ஆள்...ஒரு ஆள் வாய் திறக்கிறீங்களா?பிரணாப் முகர்ஜி நானெல்லாம் யூத்தாக்கும்ன்னு சொல்லிட்டு 10 தாத்தாக்களை மட்டும் சூப்பர் சிட்டிசன் அட்டவணையில் அறிமுகப்படுத்தியிருக்கார்.
ஏ.ஆர்.அந்துலே 81
முந்தைய மகாராஷ்ட்ரிய முதல்வர்,
இப்பொழுது லோக் சபா அங்கத்தினர்
சாதனை: மத்திய அமைச்சர்-சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
சையத அலி ஷா ஜிலானி 81
இப்பொழுது: ஹரியத் கான்பரன்ஸ் சேர்மன்
சாதனை: எல்லா பார்ட்டியும் சேர்ந்த ஹரியத் கான்பரன்ஸ்
எல்.கே.அத்வானி 82
இப்பொழுது:பி.ஜே.பி பார்லிமெண்டரி பார்ட்டி சேர்மன்
சாதனை:துணை பிரதமர்
பிரகாஷ் சிங் பதால் 83
இப்பொழுது: முதல் மந்திரி,பஞ்சாப்
சாதனை:மத்திய விவாசயத்துறை மந்திரி
ஏ.பி.பர்தன் 85
இப்பொழுது: பொதுச்செயலாளர்,CPI
சாதனை: பொதுச்செயலாளர்
என்.டி.திவாரி 85
இப்பொழுது:ஹி...ஹி...Faded Congressman avoiding paternity case
(தமிழ் தெரியலீங்ண்ணா)
சாதனை: மறுபடியும் ஒரு ஹி...ஹி...இருந்தாலும் ஆந்திர கவர்னர்,உ.பி முதல்வர்
பால் தாக்கரே 85
இப்பொழுது:அவ்வப்போது ஐடியலிஸ்ட்,முழு நேர குடும்பத்தில் மூத்தவர்
சாதனை:கதி கலக்கும் சிவ சேனா
மு.கருணாநிதி 86
இப்பொழுது:முதல்வர்,தமிழகம்
சாதனை:முதல்வர்,முதல்வர்,முதல்வர்
ராம் ஜெத்மலானி 87
இப்பொழுது:ராஜ்ய சபா உறுப்பினர்
சாதனை:சட்டம்,நீதி மத்திய அமைச்சர்.
வி.எஸ்.அச்சுதானந்தன் 87
இப்பொழுது;முதல்வர்,கேரளா
சாதனை:முதல்வர்,கேரளா
இந்திய ஜனநாயகத்தில் ஓட்டைகள் நிறையத்தான்.படத்தில் உள்ள சாதனை மனிதர்களிடமும் கூட தில்லுமுல்லுகளும், தில்லாலங்கடிகளும் கூடவே அவர்களது தேச பங்கீடும்.இப்போதைய தேர்தல் களத்தை உற்று நோக்கினால் வெறும் நிறங்களை அடையாளம் காட்டி ஓட்டுப்போட்ட மக்கள் காலம்,பின் கட்சிகளின் அடையாளச்சின்னங்களில் முத்திரைக்காலம், இப்பொழுது கணினி மயமாக்கப்பட்ட தேர்தல்,தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம்,நீதித்துறையின் சுய அதிகாரம் என்று மொத்த நோக்கில் இந்தியாவும் இந்திய ஜனநாயகமும் முன்சென்று கொண்டிருக்கிறதென்ற நம்பிக்கையையும் கண்கள் பனித்தோ இதயம் கனக்காமலோ நம்புவோம்.படத்தின் உயர் குடிமகன்கள் அவர்களால் இயன்ற அர்ப்பணிப்பையும், அவரவர் சுயநலங்களையும் நம்மிடையே விதைத்திருக்கிறார்கள். இவைகளையும் கடந்து இந்திய ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தோடு வீறுநடை போடும் என்ற நம்பிக்கையோடு இந்திய ஜனநாயகம் வாழ்க.
4 comments:
//இவைகளையும் கடந்து இந்திய ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தோடு வீறுநடை போடும் என்ற நம்பிக்கையோடு இந்திய ஜனநாயகம் வாழ்க.// (சர்வாதிகார ஆட்சி இதைவிட கொடுமையாக இருக்கும் என்பதால்) இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்க!
வாழ்க வாழ்க:))
//இவைகளையும் கடந்து இந்திய ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தோடு வீறுநடை போடும் என்ற நம்பிக்கையோடு இந்திய ஜனநாயகம் வாழ்க.// (சர்வாதிகார ஆட்சி இதைவிட கொடுமையாக இருக்கும் என்பதால்) இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்க!//
ராபின்!திடீர்ன்னு பதிவுப்பக்கம் வர்றீங்க,திடீர்ன்னு காணாமப் போயிடறீங்களே?கமுக்கமா மேற்பார்வை பார்க்கிறீங்களோ:)
நம்ம ஜனநாயகத்தில் ஆயிரம் நொள்ளைங்க.முடிச்சவிக்க முடியாதபடி நிறைய.இருந்தாலும் மக்கள் ஆட்சி என்ற கோட்பாடை விட வேறு ஒரு புதிய கோட்பாடு இதுவரை பிறக்கவில்லை எனலாம்.
//வாழ்க வாழ்க:))//
இன்னா சிரிக்கிறீங்க?சூப்பரப்புகக்குள்ள உள்குத்து ஒண்ணு இருக்கிறத கண்டு மசமசப்பா இல்ல இத்தனையும் கண்டுகிட்டும் அப்பாவிப்புள்ள இப்படி பதிவு போடுதேன்னு கேலியா:)
Post a Comment