ஒவ்வொருவருக்கும் ஒரு சார்பு மனப்பான்மையோடு உடன் பிறப்புக்களாகவோ,ரத்தத்தின் ரத்தங்களாகவோ இருப்பதில் தவறு இல்லை.ஏனென்றால் இவர்கள் ஒரு இசத்துக்கு மந்திரித்து விடப்பட்டவர்கள்.தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனநிலைகள் என்னவாக இருக்கும் என்பதற்கும்,பதிவுலக கோயபல்சுகளுக்கும் நிறைய இடைவெளி என்பதை முந்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நன்றாக விளக்கியும்,பதிவுலகின் பல்வேறு கோண கருத்துக்கள் வலம் வந்தும் பகுத்தறியும் திறன் இல்லாது நேற்று முதல்வர் கருணாநிதியின் இன்னுமொரு high risk stunt ஐப் பார்த்து ஆஹா!சாணக்கியன் என்றும் இதுமாதிரி தில்லாலங்கடி யாரால் இயலும் என்று புல்லரித்துப்போனவர்கள் நிறைய பேர் என்பதை பதிவுகள் சொல்லுகின்றன.கழக கண்மணிகளின் மனநிலைகளும் கூட இதே மாதிரி இருக்கவும் செய்யலாம்.வீரமணியின் மூலமான அலையோட்டம் பார்க்கும் முன்னோட்ட அறிக்கைக்கும், தி.மு.கவின் முடிவை வரவேற்கிறோம் என்று திருமாவளவன் சொல்வதற்கும் சுயதேவைகளான லாபங்கள் இருக்கின்றன.ஆனால் பதிவர்களுக்கு சுயசிந்தனை என்ற ஒன்றைத்தவிர வேறு ஒரு லாபமுமில்லை.
முதல்வரின் நேற்றைய முடிவால் இதயம் இனிப்பவர்கள் இதோ இன்று பிரணாப்பும்,குலாம் நபி ஆசாத்தும் மறுபடியும் குடு குடுவென ஓடி வருகிறார்களாம்.வந்து இகிகீன்னு முகம் காட்டி கருணாநிதிக்கும் இதயம் இனித்து விட்டால் சார்பு பதிவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வார்கள்?உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்து பார்ப்பதிலும் மீண்டும் ஒரு உற்சாகம் பொங்கி வருமா?ஒரு வேளை ஸ்பெக்ட்ரமில் ஆப்பு வைத்து ராசாவை உள்ளே தள்ளிய கோபம் தணியாமல் அறிக்கை அறிக்கைதான்னு நின்றாலும் அங்கே ஜெயலலிதா ஆதரவுக்கரம் மத்தியில் திரட்டுகிறேன் என்ற வாக்கை காப்பாற்ற நினைத்தால் ரத்தத்தின் ரத்தங்கள்,வை.கோ,கம்யூனிஸ்ட்களின் எதிர்கால நிலைப்பாடு என்னவாக இருக்கும்?ஆதிக்க சக்திகள் என்பவற்றிற்கு பொருள் விளங்காமலும், வலிமையின் அதிகார மையங்களின் இழுப்புக்கு தகுந்த மாதிரி மொத்த தமிழகத்தின் எதிர்கால சரித்திரமும் இன்னும் எழுதியாக வேண்டிய நிர்பந்தத்தில் தமிழகமா?
வலையுலகம் வலம் வரும் பதிவர்களே தஞ்சாவூர் பொம்மைகளாகும் போது கண்கட்டி விடப்பட்ட சாலைக்குதிரையாய் ஓடும் சராசரி தமிழனை குறை சொல்வதில் பயனில்லை.
Cool down babies!
நேற்று பயணத்தின் ஓட்டத்தில் மெல்லியதோர் மின்னலாய் ஒரு எண்ணம். பணி புரிந்து ஓய்வில் இருக்கும் அரசு,பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வுக்கான அவகாசம் நிறைய இருக்குமே.இவர்களில் சமூக அக்கறையுள்ளவர்கள் பதிவிடவோ, பதிவுகளை காணவோ வருகிறார்களா?
4 comments:
//இவர்களில் சமூக அக்கறையுள்ளவர்கள் பதிவிடவோ, பதிவுகளை காணவோ வருகிறார்களா?
//
தாராபுரத்திலிருந்து ஒருத்தர் வந்தாரு... பேரன் பிறக்கவே, அவனோட விளையாடப் போய்ட்டாருங்கோ!!
// பணி புரிந்து ஓய்வில் இருக்கும் அரசு,பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வுக்கான அவகாசம் நிறைய இருக்குமே.//
ஓய்வு என்னங்கய்ய ஓய்வு... அதுக்கு முன்னமே வந்து அடிச்சி ஆடிகிட்டு இருக்கிற எங்கண்ணனை இருட்டடிப்புச் செய்யறது அறமாலும் அநியாயமுங்கோ!!
//தாராபுரத்திலிருந்து ஒருத்தர் வந்தாரு... பேரன் பிறக்கவே, அவனோட விளையாடப் போய்ட்டாருங்கோ!!//
தாராபுரம்,ஆனைமலைன்னு ஒண்ணு,ரெண்டு பேர் கண்ணுல படறாங்க.நான் சொல்றது இன்னும் கொஞ்சம் கூட்டத்தை.இதை ஏன் சொல்றேன்னா நான் கத்துக்குட்டிங்கிறதால அரசு சார் பிரச்சினைகளின் அடிவேர்கள் தெரியல.இவர்களெல்லாம் அனுபவ ரீதியானவர்கள் என்பதால் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமேங்கிற எண்ணம்தான்.
//ஓய்வு என்னங்கய்ய ஓய்வு... அதுக்கு முன்னமே வந்து அடிச்சி ஆடிகிட்டு இருக்கிற எங்கண்ணனை இருட்டடிப்புச் செய்யறது அறமாலும் அநியாயமுங்கோ!!//
யாரு?பாலாண்ணாவ சொல்றீங்களாக்கும்!அவரெல்லாம் இன்னும் யூத் லிஸ்டலதான்ங்கிற ரகசியம் தெரியுமா உங்களுக்கு:)
Post a Comment