Followers

Tuesday, March 8, 2011

திமுக - காங்கிரசார் சாலை மறியலும் கல்லூரி பேருந்து விழாவும்

மாணவ,கல்லூரிப் பருவங்களை தாண்டி அம்மணிக கிட்ட அடிவாங்கும் வயதில் உள்ளவர்களோ அல்லது வாங்கி கட்டிக்க தயாரான நிலையில் இருப்பவர்களோ மாணவப் பருவ லூட்டிகளையெல்லாம் மறந்து விட்டு இன்று உத்தம புத்திரன்களாக பச்சையப்பன் கல்லூரி,சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பொறுக்கிப் பட்டம் கட்டி தங்களை கல்லெறியும் தகுதி படைத்தவர்களாக மாறிப்போகிறார்கள்.விதைப்பதுதான் முளைக்கும் என்ற அரிச்சுவடி புரிய வேண்டும்.இங்கே மேய்ப்பனே சரியில்லையெனும் போது ஆடுகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?

மனிதனே மண்ணுக்குப் போகும் போது காலணி அபிஷேகம் பெறும் தலைவர்களின் படங்கள் செவ்வாய் கிரகித்திலா போய் பூஜை மடம் கட்டப்போகின்றன?மாமியா ஒடைச்சா மண்குடம் மருமக ஒடைச்சா பொண் குடமாங்கிற மாதிரி கல்லூரி மாணவன் கலாட்டாக்கள் நடந்தால் அப்படியே வந்து கோபம் அப்பிக்கொள்ளும்.சமூக ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டியவன் சாலை மறியல் செய்தாலோ அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா கவுண்டமணிய பின்னூட்டப்பக்கத்துல உட்கார வச்சிக்க வேண்டியது.எத்தனை கரணம் போட்டாலும்,தில்லாலங்கடி செய்தாலும் இந்த முறை சங்குதான் என்பது தீர்ப்பாகி விட்ட ஒன்று.அதிலும் அவரவர் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இப்படியே தொல்லை கொடுத்தால் ஊ..ஊ.ஊஊன்னு சங்கு சத்தம் கடல் கடந்தும் கேட்கின்றது.

முதல்வன் படத்தில் ரகுவரன் நேர்காணலை ஹனிபா நிறுத்துன்னு வந்து மக்களுக்கு பிலிம் காட்டுவதுதான் நினைவுக்கு வருகிறது.இனி கவுண்டமணிகிட்ட போய் உட்கார்ந்து கொள்வதோ,பல்லைக்கடிச்சுகிட்டு எட்டிமட்டும் பார்த்து விட்டுப் போவதோ வந்ததுக்கு முய் வச்சிட்டுப்போறதும் அவரவர் விருப்பம்.பதிவுக்கான செய்தி இனி.....

திமுக - காங்கிரசார் சாலை மறியல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உள்ள முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து பெரம்பலூர் திமுக எம்எல்ஏ ராஜ்குமார், பெரம்பலூர் காங்கிரஸ் நகர மன்ற சேர்மேன் இளையராஜா ஆகியோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து டி.ஆர்.ஓ. பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே திமுக மேலிடமும், காங்கிரஸ் மேலிடமும் தங்கள் கட்சியினரை தொடர்புகொண்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

டிஸ்கி: பிளாக்குபவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.

2 comments:

vasu balaji said...

சாலை மறியல் இல்லாம அரசியல் நடத்தணுமா? அதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம்:))

ராஜ நடராஜன் said...

//சாலை மறியல் இல்லாம அரசியல் நடத்தணுமா? அதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம்:))//

அதென்னமோ உண்மைதான்:)

சென்னை வரும்போது அவரவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிகிட்டி போகும்போதெ நெரிசல் மூச்சு வாங்குது.இதுல இந்த பயலுக வேற வழி மறிச்சிகிட்டா சொல்லவே வேணாம்.பேனருக்கெல்லாமா ரோட்டை மறிப்பாங்க மடையனுங்க:(

அடுத்த கூட்டம் வரப்போகுது.அதுக என்னவெல்லாம் சித்துவேலைகள கையில வச்சிருக்கோ!