கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் சொல்கிறார்.காங்கிரசோ அரசியலுக்குள் கிரிக்கெட்டை நுழைப்பதன் மூலமே நல்லுணர்வுக்கு தீர்வு காண இயலும் என்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறதென்பது பாகிஸ்தானிய ஜிலானியின் வருகையும்,இலங்கையின் ராஜபக்சேவுக்கான உலக கிரிக்கெட் இறுதி ஆட்ட அழைப்பும் தெரிவிக்கும் செய்தியாகும்.
எனவே இந்தியா இலங்கை,பாகிஸ்தான் நாடுகளின் நல்லுறவை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டையே வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்கிறது.இதில் தமிழக தேர்தலும்,காங்கிரஸின் அரசியல் களமும் உள்நாடு சார்ந்த ஒன்றாகவே இந்தியா கருதுகிறதென்பதும் தெளிவு.பொருளாதார உதவிகளை இலங்கைக்கு தருவதன் மூலமாகவே இலங்கையை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும் என இந்தியா கருதுகிறது.இலங்கையோ இந்தியாவும் நண்பன்,ரஷ்யாவும் நண்பன்,சீனாவும் நண்பன், பாகிஸ்தானும் நண்பன்,லிபியாவின் கடாபியும் நண்பன் என்ற வளையத்தைப் போட்டுக்கொண்டு தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியால் ஈழப் படுகொலைகளும்,மனித உரிமை மீறல்களும் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும் என்கின்ற நிலையிலேயே இது வரையிலான அனைத்து தரப்பு காய் நகர்த்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அடிபட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்கின்ற நிலைப்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மார்ச் 28ம் தேதி குளோபல் தமிழ் அமைப்பின் (Global Tamil Forum) மூலமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் தெற்காசிய நாடுகளுக்குப் பொறுப்பான ராபர்ட் பிளேக் அலுவலகத்தில் பேராயர் இமானுவேல் (Rev. Father S.J.Emmanuel) தலைமையில் நிகழ்ந்த சந்திப்பு இலங்கை குறித்த விசயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் லிபியா குறித்த நிலைப்பாட்டில் எழுந்து வரும் விமர்சனங்களும்,ஈழ மக்களின் உரிமைகள் பின் தள்ளப்பட்ட நிலை குறித்து மனித உரிமை கழகங்கள் முன் வைக்கும் கேள்விகளும் கூட அமெரிக்காவின் தற்போதய புதிய சந்திப்புக்கு காரணமா அல்லது ஈழத்தமிழர்கள் மூலமாக இலங்கை அரசு மீதான காய் நகர்த்தலாக அமெரிக்கா இதனை நோக்குகிறதா எனத் தெரியவில்லை.அதிகார பூர்வமாக எடுக்கப்பட்ட புகைப்படம் புதிய செய்தியொன்றையே நமக்குத் தருகின்றதென்று தற்போதைக்கு நம்புவோம்.
Rev. Father S.J.Emmanuel (Germany) included President the USTPAC, Dr. Elias Jeyarajah, Mrs. Grace Williams (USA) and Mr.Suren Surendiran (UK) along with Mr.Robert Blakes, US Assistant Secretary
1.போரில் துயரப்பட்ட மக்களுக்கான உதவியும், வட,கிழக்கு இலங்கையில் வசிக்கும் மக்களின் குரலும் அதனோடு இணைந்த தமிழ் தேசிய அமைப்பின் வலுவான அரசியலும்
2.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒட்டு மொத்த ஒருமித்த குரலும்3.உலகம் தழுவிய தமிழர்களின் நாடுகளுக்கு உட்பட்ட ஆதரவும்
4.மனித உரிமை அமைப்புக்கள்,மற்றும் மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள் சார்ந்த பார்வையும்
5.இவற்றையெல்லாம் ஒன்று படுத்தவும் முன் நகர்த்தவும் தேவையான பொருளாதார வசதியும்
மேலும் இலங்கை அரசின் போருக்கு அப்பாலான மனித உரிமை பாதுகாப்பு உலகத்தரம் வாய்ந்ததாக இல்லையென்று ராபர்ட் பிளேக் கூறியதாகவும் இது குறித்து அடுத்த வாரம் ராஜபக்சேவை சந்திக்கும் போது வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.
வெளிநாட்டுக் கொள்கைகளில்,அரசியல் களத்தில் சில நிகழ்வுகள் காலம் கருதி செய்யப்படும் passing cloud என்று சொல்லப்படும் முகப்பூச்சாக அமைந்து விடுவதும் உண்டு.அதே போல் ஒரு நிகழ்வின் தொடராக அடுத்த நிகழ்வு என வரிசையாக இணைந்து கொண்டு பெரும் மாற்றங்களை கொண்டு வந்து விடுவதும் உண்டு.இதில் ராபர்ட் பிளேக்கின் உடனான தமிழர்கள் சந்திப்பு எந்த வகையில் சேரும் என்பதை வரும் காலம் மட்டுமே நிரூபிக்கும்.
Source: http://tamilweek.com/news-features/archives/2488
28 comments:
இலங்கையோ இந்தியாவும் நண்பன்,ரஷ்யாவும் நண்பன்,சீனாவும் நண்பன், பாகிஸ்தானும் நண்பன்,லிபியாவின் கடாபியும் நண்பன் என்ற வளையத்தைப் போட்டுக்கொண்டு தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடி வருகிறது/
வணக்கம் சகோதரம், நம்மளைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கெல்லாம் இலங்கையின் குள்ள நரித்தனம் இலகுவாக விளங்குகிறது. ஆனால் வல்லரசு நாட்டு மந்திரிகளுக்கு இது புரியவில்லையே என்பது தான் வருத்தமாக இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியால் ஈழப் படுகொலைகளும்,மனித உரிமை மீறல்களும் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும் என்கின்ற நிலையிலேயே இது வரையிலான அனைத்து தரப்பு காய் நகர்த்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.//
சகோ, பிச்சுப் புடுவேன், பிச்சு, இலங்கையில் எங்கே பொருளாதார வளர்ச்சி இடம்பெறுகிறது.
குடும்ப அரசியல் காரணமாக பொருளாதார முடக்கல்கள் தான் இடம் பெறுகிறது.
http://tamilnattu.blogspot.com/2011/02/blog-post.html
அரசியல் ஆய்வில் பூகோள மைய நாடுகளினைச் சார்ந்த இலங்கையின் நிலைப்பாட்டினையும் விளக்கியுள்ளீர்கள். அண்டை நாடுகளினைத் தன் கையில் வைத்து காரியங்களை, காய்களை நகர்த்துவது ஒரு புறம், அண்டை நாடுகளுக்கே தெரியாமல் அவர்களின் முதுகில் குத்துவது மறுபுறம் இது தான் இலங்கையின் இன்றைய நிலை.
கடாபிக்கு தாங்கள் எந்த நேரமும் அடைக்கலம் வழங்கத் தயார் என அறிவித்தவர்கள் தான் இலங்கை ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்கள்.
இலங்கைக்கு சீனாவும் வேண்டும், அமெரிக்கா, லிபியா, இந்தியாவும் வேண்டும், பாகிஸ்தானும் வேண்டும்.
பதிவில் இக்கால அரசியல் விவகாரங்களை அலசியுள்ளீர்கள். இது பற்றி நிறையக் கருத்துகக்ளைக் கூறலாம். நான் அதிகம் கூறினால் யாழ்ப்பாணத்திற்கு வெள்ளை வானை அனுப்பி விடுவார்கள். ஐயாம் எஸ் கேப்ப்.
இதில் ராபர்ட் பிளேக்கின் உடனான தமிழர்கள் சந்திப்பு எந்த வகையில் சேரும் என்பதை வரும் காலம் மட்டுமே நிரூபிக்கும்.//
நடை முறை விடயங்களை மட்டும் ஆராய்ந்து விட்டு, எதிர்காலம் பற்றிய குறிப்புக்களை எங்களின் சிந்தனைக்கு விட்டிருக்கிறீர்கள். எதிர்காலம் பற்றியும் ஊகித்துச் சொன்னால் அருமையாக இருந்திருக்கும்.
//வணக்கம் சகோதரம், நம்மளைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கெல்லாம் இலங்கையின் குள்ள நரித்தனம் இலகுவாக விளங்குகிறது. ஆனால் வல்லரசு நாட்டு மந்திரிகளுக்கு இது புரியவில்லையே என்பது தான் வருத்தமாக இருக்கிறது.//
வணக்கம் சகோதரம்!நீங்க எப்பொழுது முதல் பதிவு போட்டீர்கள் என கவனிக்கத் தவறி விட்டேன்.இதே கேள்வியை நான் முன்பே பதிவிலோ அல்லது ஹேமாவின் கேள்விக்கோ பதில் சொன்னதாக நினைவு.
நம்மை விட இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.நாம் சுயநலங்கள் இல்லாமல் மனித நேயம் என்ற நிலையில் சிந்திக்கிறோம்.இவர்கள் அரசியல் அடியாட்கள் என்ற நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள்.இதுவே வித்தியாசம்.
ஈராக் முதற்கொண்டு இது வரையிலான எனது கருத்துக்களை சரியாகவே பிரதிபலித்திருக்கிறேன் என நம்புகிறேன்.காலம் கடந்தே ஈராக்கின் தவறுகளை வெள்ளை மாளிகையும் கூட உணர்ந்திருக்கிறது.
இந்த இடுகையின் கருவையும் ஒரு நாள் உணரும் என்று நம்புகிறேன்.
//சகோ, பிச்சுப் புடுவேன், பிச்சு, இலங்கையில் எங்கே பொருளாதார வளர்ச்சி இடம்பெறுகிறது.
குடும்ப அரசியல் காரணமாக பொருளாதார முடக்கல்கள் தான் இடம் பெறுகிறது. //
இதனை அன்புடன் வரவேற்கிறேன்.நாங்கள் தூரத்திலிருந்து செய்யும் விமர்சனங்களை விட ஈழ மண்ணில் இருந்து வெளி வரும் உண்மைகளே சரியான தீர்ப்பை தரும்.
இந்தியா பொருளாதார வளர்ச்சியென்றுதான் காசை இலங்கையிடம் கொட்டுகிறது.அங்கேயும் குடும்ப ஆட்சிக்கே அது போய் சேர்கின்றதென்ற உண்மைகள் இணையம் மூலமாவது வரவேண்டும்.
//அரசியல் ஆய்வில் பூகோள மைய நாடுகளினைச் சார்ந்த இலங்கையின் நிலைப்பாட்டினையும் விளக்கியுள்ளீர்கள். அண்டை நாடுகளினைத் தன் கையில் வைத்து காரியங்களை, காய்களை நகர்த்துவது ஒரு புறம், அண்டை நாடுகளுக்கே தெரியாமல் அவர்களின் முதுகில் குத்துவது மறுபுறம் இது தான் இலங்கையின் இன்றைய நிலை.//
இலங்கை அரசின் நிலைப்பாடு ஒருபோதும் இந்தியா சார்ந்ததல்ல என்பதும் பூகோள ரீதியாக மட்டுமே இந்தியாவுடன் நட்புறவு கொள்கிறதென்பேன்.
அரசியல் விடுத்துப் பார்த்தாலும் கூட இங்கே சிங்களப் பெண்கள் பாகிஸ்தானியர்களையே கொஞ்சுகிறார்கள்:)
//கடாபிக்கு தாங்கள் எந்த நேரமும் அடைக்கலம் வழங்கத் தயார் என அறிவித்தவர்கள் தான் இலங்கை ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்கள்.//
கடாபியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றே முன்பு லிபியாவின் மக்கள் புரட்சிக்கும் ஆதரவு தருவேன் என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
நேற்று அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட நிலையில்லாமல் முஷ்ரபுக்கு மாதிரி எங்காவது அடைக்கலம் தந்து விடலாமென்றுதான் சொல்கிறார்கள்.
கடாபி இலங்கைக்கு அடைக்கலம் சென்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.அரபு நாடுகள் ஒன்று கூட கடாபியை ஏற்றுக்கொள்ளாது.
//பதிவில் இக்கால அரசியல் விவகாரங்களை அலசியுள்ளீர்கள். இது பற்றி நிறையக் கருத்துகக்ளைக் கூறலாம். நான் அதிகம் கூறினால் யாழ்ப்பாணத்திற்கு வெள்ளை வானை அனுப்பி விடுவார்கள். ஐயாம் எஸ் கேப்ப்.//
வெள்ளை வான் கலாச்சாரத்தைப் பற்றி நிறைய செய்திகள் வருகின்றது.பூனைக்கு மணி கட்டுவது யார் என்றுதான் தெரியவில்லை.இவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்தும் கூட இலங்கை முன்பை விட பரவாயில்லை பொய்த் தோற்றத்தில் மயங்குபவர்களும் இருப்பது வருத்தமளிக்கிறது.
//நடை முறை விடயங்களை மட்டும் ஆராய்ந்து விட்டு, எதிர்காலம் பற்றிய குறிப்புக்களை எங்களின் சிந்தனைக்கு விட்டிருக்கிறீர்கள். எதிர்காலம் பற்றியும் ஊகித்துச் சொன்னால் அருமையாக இருந்திருக்கும்.//
என்னைப்பொறுத்த வரையில் ரஷ்யா,சீனா,இந்தியாக்காரர்களுடன் வியாபாரம் செய்வதை விட அமெரிக்காவுடன் வியாபாரம் செய்யவே விரும்புவேன்:)
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இரட்டை நிலையிருந்தாலும் களத்தில் இறங்கி விட்டால் மாற்றங்களுக்கான சந்தர்ப்பங்களை அமெரிக்காவே விரைவாக வழங்கும்.
ராஜ நடராஜன் said...
//வணக்கம் சகோதரம்!நீங்க எப்பொழுது முதல் பதிவு போட்டீர்கள் என கவனிக்கத் தவறி விட்டேன்.இதே கேள்வியை நான் முன்பே பதிவிலோ அல்லது ஹேமாவின் கேள்விக்கோ பதில் சொன்னதாக நினைவு.//
நான் இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தான் பதிவுலகில் வலம் வருகிறேன். எதேச்சையாக என் கருத்தும் உங்களது கருத்தினைப் போல ஒத்துப் போயிருக்கும்./ வந்திருக்கும்.
//நான் இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தான் பதிவுலகில் வலம் வருகிறேன். எதேச்சையாக என் கருத்தும் உங்களது கருத்தினைப் போல ஒத்துப் போயிருக்கும்./ வந்திருக்கும்.//
நாம் கருத்துக்களால் இணைந்து கொண்டதால் நதிமூலம்!!ரிஷி மூலம்!! பார்க்கவில்லை:)
ஈழம் குறித்த எனது குறைந்த பட்சமான எதிர்பார்ப்பே மக்களுக்கு சம உரிமையான வாழ்க்கையும்,போரின் துயரங்களிலிருந்து மக்கள் மீண்டெழ வேண்டும் என்பதுதான்.அதற்கான சூழல்கள்,சாத்தியங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் யார் தந்தாலும் வரவேற்போம்.
அமெரிக்காவின் நகர்வுகள் அனைத்துமே பொருளாதாரம் சார்ந்தே இருப்பது வழமையானது!சந்திப்பு அவரே ஏற்பாடு செய்ததா,அல்லது இவர்கள் கேட்டு சந்தித்தாரா தெரியாது!இதனை விடவும் ஆச்சரியமான ஒரு செய்தி உலா வருகிறது.இன அழிப்பின் பின்னர் மகிந்தரின் அடி வருடிகள் அமெரிக்கா சென்ற போது தெளிவான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது!அதாவது வி.புலிகளை அழிப்பதில் அமெரிக்க மெளனம் "இலங்கை அரசின் நன்மைக்காக" அல்ல என்பதே அது!அத்துடன்,இப்போது லிபியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை கூட "லிபிய மக்கள்"மேல் கொண்ட காதலினால் அல்ல!அமெரிக்க மற்றும் மேற்குலக அரசியல் புரிந்தவர்களுக்கு இந்தக் குள்ளநரித்தனங்கள் புரியும்!
அமெரிக்காவின் நகர்வுகள் அனைத்துமே பொருளாதாரம் சார்ந்தே இருப்பது வழமையானது!சந்திப்பு அவரே ஏற்பாடு செய்ததா,அல்லது இவர்கள் கேட்டு சந்தித்தாரா தெரியாது!இதனை விடவும் ஆச்சரியமான ஒரு செய்தி உலா வருகிறது.இன அழிப்பின் பின்னர் மகிந்தரின் அடி வருடிகள் அமெரிக்கா சென்ற போது தெளிவான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது!அதாவது வி.புலிகளை அழிப்பதில் அமெரிக்க மெளனம் "இலங்கை அரசின் நன்மைக்காக" அல்ல என்பதே அது!அத்துடன்,இப்போது லிபியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை கூட "லிபிய மக்கள்"மேல் கொண்ட காதலினால் அல்ல!அமெரிக்க மற்றும் மேற்குலக அரசியல் புரிந்தவர்களுக்கு இந்தக் குள்ளநரித்தனங்கள் புரியும்!
//டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!//
வாங்க பூபதி!ஒரு நாட்டின் பிரதிநிதியென்று கிலானியே இந்தியா வரும்போது எழாத எதிர்ப்புக்குரலால் ராஜபக்சேவுக்கான மத்திய அரசின் அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது.மத்திய அரசின் நிலைப்பாடு அரசியல் ரிதியாக சரியென்றால் மக்களின் குரல் என்ற விதத்தில் வன்முறைகள் இல்லாத போராட்டக்குரலை மக்கள் சார்பாக அடையாளம் கருதி வேண்டியாவது பதிவு செய்வதும் அவசியமான ஒன்றே.
நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் மும்பாயில் முன்பே போராட்டங்களை நிகழ்த்தியவர்கள்.போராட்டக்குரல் எழுப்புவார்கள் என்று நினைக்கின்றேன்.
//அமெரிக்காவின் நகர்வுகள் அனைத்துமே பொருளாதாரம் சார்ந்தே இருப்பது வழமையானது!சந்திப்பு அவரே ஏற்பாடு செய்ததா,அல்லது இவர்கள் கேட்டு சந்தித்தாரா தெரியாது!இதனை விடவும் ஆச்சரியமான ஒரு செய்தி உலா வருகிறது.இன அழிப்பின் பின்னர் மகிந்தரின் அடி வருடிகள் அமெரிக்கா சென்ற போது தெளிவான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது!அதாவது வி.புலிகளை அழிப்பதில் அமெரிக்க மெளனம் "இலங்கை அரசின் நன்மைக்காக" அல்ல என்பதே அது!அத்துடன்,இப்போது லிபியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை கூட "லிபிய மக்கள்"மேல் கொண்ட காதலினால் அல்ல!அமெரிக்க மற்றும் மேற்குலக அரசியல் புரிந்தவர்களுக்கு இந்தக் குள்ளநரித்தனங்கள் புரியும்!//
வாங்க யோகா!தற்போதைய நிலையில் அனைத்து நாடுகளுமே பொருளாதார அடிப்படையிலும் தமது நலன்கள் என்ற நிலையிலேயே வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கின்றன.அமெரிக்காவைப் பொறுத்த வரையில் தமது நலன்கள் என்ற கண்ணோட்டத்தோடு மனித உரிமைக்கும் குரல் கொடுக்கும் நாடுகளில் ஏனைய நாடுகளை விட சிறந்தது என்பதில் சந்தேகமில்லை.
லிபிய மக்களின் போராட்டம் பற்றி அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்....
லிபியாவில் அமெரிக்காவின் எண்ணை வள நலன்கள் இருந்தாலும் லிபியா தனது மக்களுக்கு கருணை காட்டமாட்டேன் என்று குடை பிடித்துக்கொண்டு கடாபி சொல்லும் வரை அமெரிக்கா லிபியாவில் தலையிட்டதா?
மக்கள் குரல் எழுவதை முதலில் அமெரிக்கா வரவேற்கிறதென்பதும் அதனைத் தொடர்ந்த வாய்மொழி ஆதரவோ ஆயுத உதவியோ தருவதே அமெரிக்காவின் எந்த நாட்டின் மீதான நிலைப்பாடு.
கூடவே அமெரிக்காவின் தன்நலம் சார்ந்த இரட்டை நிலைப்பாடும் உலகம் அறிந்த ஒன்றே.மக்கள் குரல் ஒலிக்கும் பட்சத்தில் இலங்கையில் அமெரிக்கா நிச்சயம் தலையிடும்.காரணம்,சீனா,இந்தியாவுடன் போட்டி போடும் பூகோள அரசியலுக்கு சிறந்த இடம் இலங்கை என்பதோடு மனித உரிமைகளை ஓரளவுக்காவது மதிக்கும்.
எனக்குச் சொல்ல ஏதுமில்ல நடா.பதிவும் அதன் அலசல்களும் எப்பவும்போல பழைய மேகம்தான்
புது வடிவத்தில்.பார்ப்போம்.நாளையும் ஒருநாள் விடியக் காத்திருக்கிறது !
லிபியாவில் அமெரிக்கத் தலையீடு இன்றைய நிலைப்பாடு அல்ல!என்றோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது!ஆனால் அவதானமாக பின் லாடனை "அல் குவைதா"வுக்கு தலைவராக நியமித்து "செருப்படி"வாங்கியது போல் அல்லாமல்,லிபிய ஆயுதக் குழுவுக்கு தலைமையே இல்லாது வளர்த்தார்கள்!கடாபியுடன் உறவை புதுப்பித்தார்கள்!சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள்!துனிசியாவில் இளைஞர் ஒருவர் தீக்குளித்ததால் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்!(ஈழ இன அழிப்பை தடுக்க முத்துக்குமார் போன்றோரும் தீக்குளித்தாகள்,இந்தியாவில்!அது அரசியலானது வேறு கதை!)அரபுலகே ஆட்சி மாற்றம் கேட்கிறது!சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது,அமெரிக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நடராஜன்,
இலங்கை விஷயத்தில் நீங்கள் இன்னும் நிறைய பேருடன் பேச வேண்டும். நிறைய படிக்க வேண்டும். குறை சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். உங்கள் பதிவு உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை. நிருபன் என்பவர் பொருளாதார வள்ர்ச்சி பற்றி கூறியுள்ளது தவறு. S&P என்ன கருதுகிறார்கள் என இந்த சுட்டியைப் பாருங்கள்.
http://www.news360.lk/economy/sp-upgrade-sri-lanka%E2%80%99s-credit-ratings
And also the outlook of HSBC here.
http://www.ft.lk/tag/sp%E2%80%99s-rating-on-sri-lanka-sovereign/
//எனக்குச் சொல்ல ஏதுமில்ல நடா.பதிவும் அதன் அலசல்களும் எப்பவும்போல பழைய மேகம்தான்
புது வடிவத்தில்.பார்ப்போம்.நாளையும் ஒருநாள் விடியக் காத்திருக்கிறது !//
ஹேமா!பழைய மேகம் புது வடிவத்திலா?அமெரிக்காவின் செயல்பாடுகள் சில அதுவும் அதிகார பூர்வமாக வெளியிடப்படும் புகைப்படங்கள்,அறிக்கைகள் போன்றவை அமெரிக்காவின் நிலைப்பாட்டையே பொதுப் பார்வைக்கு வைக்கும்.இதற்கும் அப்பால் பின் புலமாக வேறு நிலைப்பாடுகளை எடுப்பதும் சில சமயம் இருக்கும்.
பார்க்கலாம் ராபர்ட் பிளேக்கின் புகைப்படம் எதனை வருங்காலத்தில் வெளிப்படுகிறதென்று.
//லிபியாவில் அமெரிக்கத் தலையீடு இன்றைய நிலைப்பாடு அல்ல!என்றோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது!ஆனால் அவதானமாக பின் லாடனை "அல் குவைதா"வுக்கு தலைவராக நியமித்து "செருப்படி"வாங்கியது போல் அல்லாமல்,லிபிய ஆயுதக் குழுவுக்கு தலைமையே இல்லாது வளர்த்தார்கள்!கடாபியுடன் உறவை புதுப்பித்தார்கள்!சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள்!துனிசியாவில் இளைஞர் ஒருவர் தீக்குளித்ததால் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்!(ஈழ இன அழிப்பை தடுக்க முத்துக்குமார் போன்றோரும் தீக்குளித்தாகள்,இந்தியாவில்!அது அரசியலானது வேறு கதை!)அரபுலகே ஆட்சி மாற்றம் கேட்கிறது!சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது,அமெரிக்கா//
யோகா!அமெரிக்காவின் லிபியா மீதான தலையீடு ரீகன் காலம் முதல் என்பதனை லிபியாவின் எழுச்சிக்கும் குரல் கொடுப்பேன் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
பின் லேடனின் அல்கைதா உருவாக்கம் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பின் அமெரிக்கா பொருளாதார உதவியைக் கை விட்டதாலும்,பின் லேடனின் மதவெறியாலும்,அரேபிய நாடுகளின் நன்கொடைகளாலும் வளர்ந்த ஒன்று.
அரபுலகில் தன் நலன் சார்ந்த தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தையே அமெரிக்கா ஆதரிக்கிறது என்பது துனிசியா,எகிப்தின் ஆதரவும்,பஹ்ரைனில் சவுதி அரேபியாவின் தலையீட்டை ஊக்குவித்து மக்கள் எழுச்சியை அடக்கியதிலும் தெரிகிறது.
லிபியாவின் தற்போதைய நிலைக்கு காரணம் கடாபியின் முட்டாள் தனமான அறிக்கையும் கடைசி வரை போராடுவேன்,மக்களுக்கு கருணை காட்ட மாட்டேன் என்ற நிலையால் உருவானது.
முத்துக்குமார் பற்றி நீங்கள் குறிப்பிட்டதில் மௌனம் மட்டுமே:(
//நடராஜன்,
இலங்கை விஷயத்தில் நீங்கள் இன்னும் நிறைய பேருடன் பேச வேண்டும். நிறைய படிக்க வேண்டும். குறை சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். உங்கள் பதிவு உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை. நிருபன் என்பவர் பொருளாதார வள்ர்ச்சி பற்றி கூறியுள்ளது தவறு. S&P என்ன கருதுகிறார்கள் என இந்த சுட்டியைப் பாருங்கள்.
http://www.news360.lk/economy/sp-upgrade-sri-lanka%E2%80%99s-credit-ratings
And also the outlook of HSBC here.
http://www.ft.lk/tag/sp%E2%80%99s-rating-on-sri-lanka-sovereign//
தருமான்னு பேர் வச்சிகிட்டு இப்படி தமிழக இலவச திட்டங்கள் மாதிரி நிரந்தரமில்லாத கரை சேராத சுட்டிகளை நீங்கள் தரலாமா?
நான் எழுத்தோட வர்ணங்களை கவனிப்பதை விட மக்களின் வாழ்க்கை நிலை எப்படி என்பதையே அவதானிக்கிறேன்.
இதற்காக இலங்கையிலிருந்து நிறையபேரின் கருத்து பரிமாற்றங்கள் மட்டுமே உண்மை நிலைகளை விளக்கும்.
நீங்கள் தரும் சுட்டிகள் மாதிரிதானே லங்கன் இணைய தளமும் செய்திகளை வெளியிடுகிறது.அதன் செய்தியாளரை கைது பண்ண வேண்டிய அவசியமென்ன?
மாற்றுக்கருத்துக் கொண்டவர்களுக்கு உலக பிரசித்தி பெற்ற வெள்ளை வேன் அனுப்ப வேண்டிய சூழல்கள் எதற்காக இலங்கையில்?
இலங்கையில் இரு இன மக்களும் சமமாக வாழ வேண்டுமென்பதும்,தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென்பதே எனது நிலை.அதற்கான சூழல்கள் இலங்கைக்குள்ளேயே உருவாக காரணத்தால் தான் ராபர்ட் பிளேக் போன்றவர்களை துணைக்கு அழைக்க வேண்டிய அவசியமேற்படுகிறது.
"தருமான்னு பேர் வச்சிகிட்டு இப்படி தமிழக இலவச திட்டங்கள் மாதிரி நிரந்தரமில்லாத கரை சேராத சுட்டிகளை நீங்கள் தரலாமா?"
ஒரு நொடி எரிச்சலை ஏற்படுத்தி விட்டது இந்த கருத்து. புரிஞ்சுதான் பேசறீங்களா?
நான் கொடுத்த சுட்டிகள் manufactured news அல்ல.
திரும்பவும் சொல்கிறேன். உங்களுக்கு உண்மை நிலை புரிதல் இல்லை. இப்போது வெள்ளை வேன் வருவதில்லை. ராபர்ட் ப்ளேக் மாதிரி ஆட்களிடம் போவதால் சம உரிமை பெற முடியாது. அது சிங்களவனிடம் நேரடியாக பேசுவதன் மூலமே கிடைக்கும்.
I suggest you read dbsjeyaraj blog to get an idea on how the TNA is trying to talk.
//"தருமான்னு பேர் வச்சிகிட்டு இப்படி தமிழக இலவச திட்டங்கள் மாதிரி நிரந்தரமில்லாத கரை சேராத சுட்டிகளை நீங்கள் தரலாமா?"
ஒரு நொடி எரிச்சலை ஏற்படுத்தி விட்டது இந்த கருத்து. புரிஞ்சுதான் பேசறீங்களா?
நான் கொடுத்த சுட்டிகள் manufactured news அல்ல.
திரும்பவும் சொல்கிறேன். உங்களுக்கு உண்மை நிலை புரிதல் இல்லை. இப்போது வெள்ளை வேன் வருவதில்லை. ராபர்ட் ப்ளேக் மாதிரி ஆட்களிடம் போவதால் சம உரிமை பெற முடியாது. அது சிங்களவனிடம் நேரடியாக பேசுவதன் மூலமே கிடைக்கும்.
I suggest you read dbsjeyaraj blog to get an idea on how the TNA is trying to talk.//
தருமா!நீண்டதாக பின்னூட்டம் போட்டதால் கூகிளில் இணையவில்லை.அதே வார்தைகளை மீண்டும் கோர்க்க இயலுமா எனத் தெரியவில்லை.உங்கள் மனதைப் புண்படுத்தும் எண்ணத்தோடு உங்களை விளிக்கவில்லை.மன்னிக்கவும்.(That's a timely emotion.Take it easy.)
சொன்னவைகளை மீண்டும் கோர்க்க இயலுகிறேன்.
தருமி!ராபர்ட் பிளேக்கின் தலையீடு தேவையில்லையென்ற நிலையில் இந்தியா சார்ந்த நிலையில் தீர்வுகளுக்கான சாத்தியங்கள் இருக்கிறதா?
கிரிக்கெட் விளையாடிட்டின் மூலமே ராஜதந்திர தீர்வு என இந்தியா கிலானியை வரவேற்றதும் அதனைத் தொடர்ந்த ராஜதந்திர ரீதியான நகர்வுகள் மாதிரி ஏன் இந்தியா-இலங்கைக்கும் கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதி ஆட்ட நேரத்தில் முன் வைக்கப் படவில்லை?
பாகிஸ்தான் வலுவான எதிரி என்பதால் இந்தியாவின் நிலையா அல்லது இலங்கை சொன்னதற்கெல்லாம் ஆடும் என்ற நிலைப்பாடா அல்லது போரின் கூட்டாளிகள் என்ற நிலையில் தீர்வுகளுக்கான அவசியமில்லையென்ற கொள்கையா?
பின்னூட்டம் நீளுவதால் அடுத்து தொடர்கிறேன்.
அமெரிக்காவின் தலையீடும் வேண்டாம்,இந்தியாவின் தலையீடும் வேண்டாம்... இலங்கை அரசு தீர்வுக்கான முன்னெடுப்புக்களை முன் வைக்கிறதா என்பதைக் கூறுங்கள்.
அல்லது மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஜனநாயக ரீதியாகப் போராடி தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் சூழல்கள் இலங்கையில் உள்ளதா?
ஜெயராஜின் நிலைப்பாடு என்னவென்பதை டெய்லி மிரரில் அவர் கூறும் கருத்துக்கள் மூலம் அறிவேன்.
சுட்டிகள் தருவதை விட உங்களின் பார்வையில் பிரச்சினைகளை எப்படி நோக்குகிறீர்கள் எனப்தை பகிருங்கள்.
இந்த இடுகையின் மையப்புள்ளியே பேராயர் இமானுவேல் கூறிய 5 விடயங்களின் மூலம் வலுவான தீர்வுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.
//ராபர்ட் ப்ளேக் மாதிரி ஆட்களிடம் போவதால் சம உரிமை பெற முடியாது. அது சிங்களவனிடம் நேரடியாக பேசுவதன் மூலமே கிடைக்கும். //
ஒரு மண்ணில் இரு இனங்களும் சமம் என்ற உயர்ந்த பார்வை சிங்களவர்களிடம் வந்து நேரடி தீர்வு வந்தால் இத்தனைப்பிரச்சினைகளும் ஏனைய நாடுகளின் தலையீடும் எதற்கு?
அதற்கான சூழல்கள் இல்லாமல் நாட்கள் நகர்வதும் மக்கள் துன்பத்தின் பிடியிலேயே இருக்கிறார்கள் என்பதுமே யதார்த்தமான சூழல்கள்.
Post a Comment