இந்த பதிவுக்கு கமல் அவர்கள் சம்பந்தமில்லையென்ற போதிலும் இதுவரைக்கும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிவின் காரணமாக நானும் பின்னூட்ட நண்பர்களும் காரணம் என்பதால் முந்தைய பதிவை படிச்சிட்டு பின் வைத்தியம் பாருங்கள்.
நந்தவனத்தான்!நம்ம பின்னூட்ட விமர்சனங்கள் இல்லாமலும்,படிக்காமலும் கமல் மறு அறிக்கை விட்டிருக்கிறார்.இப்ப என்ன பண்ணுவீங்க!
காளமேக புலவரின் பேரன் பழமை பேசி என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ அதையும் சேர்த்து படிச்சிருங்க.எனக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு டிஸ்கி வேற போட்டதால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்குது:).
நம்பள்கி விளையாத தரிசு நிலம்! அதை நான் சொல்லலை என்கிறார். பழமை மருத்துவம் சொல்கிறார். தப்பி தவறி பெண்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா குறிப்பெடுத்துக் கொண்டு அறிந்தவர்கள் யாருக்காவது தேவையிருந்தால் உடுமலை கடையை நாடவும்.
முன்பெல்லாம் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தும் எப்பவாவது ஹலோ சொல்ல கொஞ்சம் இருமல் தலைவலி வந்து விடும்.தலைவலிக்கு கொஞ்சம் தூக்கமோ அல்லது ஒரு பெனடால் எனும் தலைவலி மாத்திரை போட்டால் சரியாகி விடும்.இருமலும் அப்படியே. இதுவரையிலும் பெரும் நோயில் படுத்து கிடக்காமல் இயந்திரம் ஓடுகிறது. ஆனால் யோகா உலக தினத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தும் பின் தொடர்ந்தும் முடிந்த வரை தியானப் பயிற்சியும்,மூச்சுப்பயிற்சியும் தொடர்வதால் எப்பவாவது ஹலோ சொல்லும் இருமலும்,தலைவலியும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் போய் விட்டது.
எனது நண்பர் ஒருவர் தொழுகையையும்,யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.எனது அனுபவத்திலிருந்து சொல்வது
1.தினமும் கட்டாய உடற்பயிற்சி
2.மூச்சு பயிற்சி
3.மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானம்
மூன்றாம் நிலை கொஞ்சம் சிக்கலானது என்னைப் பொறுத்தவரை.காரணம் சும்மா இருந்தா அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிகிட்டிருப்பதை கட்டிப்போடப் பார்த்தால்தான் எகிறி குதிக்கிறது.
வாழ்க்கையிலும்,இப்போதைய மழை இழப்பிலும் பெரும் மன அழுத்தங்கள் பலருக்கும் வரும்.ஆண்கள் டாஸ்மாக் தேடிப்போக கூடும்.ஆனாலும் சொன்ன மூன்றையும் கடைபிடிக்க முயலுங்கள். உடல் பருமன் குறைக்க சிறந்த வழி சைவ உணவும்,இந்திய காற்றும்.அசைவ உணவிலிருந்து உடல் விடுபட்டு விட்டால் சைவ உணவையே மனம் விரும்பும். எதுவும் பழக்கம் என்பதை அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி மனைவியின் இரட்டை சமையல் சிரமத்துக்கு பயந்து மீண்டும் அசைவத்திற்கு மாறியதில் இப்பொழுது சைவம் ஒட்டிக்கொள்வதில்லை மீண்டும்.
மழை காரணமாக தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம்.
அலோபதிக்கு மருந்தை விட தேன்,மிளகு கலவையை உட்கொள்வது இருமல் மூச்சு இரைச்சலை குறைக்கும். முடிந்தால் கட்டஞ்சாயாவில் மிளகு,இஞ்சு கசாயம் செய்து சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம். பால் கிடைக்காத சூழலில் இந்த தேநீரே உடலுக்கும் நல்லது.தமிழகத்தில் இயற்கையாக வாழ பல வாய்ப்புக்கள் இருக்குது.கொஞ்சம் முயன்றால் பழகி விடும்.
முடியாமல் படுக்கையில் கிடப்பவர்களுக்கும் முக்கியமாக வயதானவர்களை முதுகு எப்பொழுதும் தரையில் படும்படி படுக்க வைக்காதீர்கள். அது கிடைப்புண்ணை உருவாக்கி விடும். சின்ன விசயமென்றாலும் சிலருக்கு தெரிவதில்லையென்ற அனுபவத்தில் சொல்கிறேன்.