Followers

Sunday, June 19, 2011

எழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த ஒரு பார்வை.

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவை இல்லை.மக்கள் புரட்சிக்கு குரல் கொடுப்பவராகவும்,அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளை விமர்சிப்பவர்களில் அருந்ததி ராயும்,நோம் சாம்ஸ்கியும் குறிப்பிடத்தக்கவர்கள் எனினும் தேசத்துரோக குற்றம் சாட்டப்படுமளவுக்கு நாகலாந்து,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் போராடும் மாவோயிஸ்ட்டுகளையும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதனால் புரட்சி சிந்தனையாளர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் மதிக்கும் பெண்மணியாக அருந்ததி ராய் விளங்கினாலும் அரசு இயந்திரங்களே உலகை உருட்டிச் செல்கின்ற காரணத்தால் இடதுசாரி புதிய சிந்தனைவாதியான அருந்ததி ராய் விமர்சனத்துக்குரியவராகிறார் என்பதோடு இந்திய மத்திய அரசில் காங்கிரஸை விமர்சிக்கும் நிலையில் அருந்ததி ராயின் கருத்தான இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்ற கருத்தை மனித உரிமை கழகங்களும்,தமிழர்களும் வரவேற்றாலும் நிச்சயம் இலங்கை ரஷ்யா,சீனர்களின் ஆதரவுக்குரலைக் கோரி மதில் மேல் பூனையான இந்தியாவையும் துணைக்கு அழைத்துக் கொள்ள நினைக்கும்.அருந்ததி ராயின் குரல் மட்டுமல்ல,இந்திய,உலக ஊடகங்களின் ஈழ ஆதரவு கருத்துக்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்ல உதவும்.

இலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் ஊடகவியளாலர்கள் சார்பாக சவுத்ஹாலில்  பேசும் போது இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இதற்கு உலகநாடுகள் அனுமதித்தன என்றும் குற்றம் சாட்டுகிறார்.மொத்த உலகமும் நியதிகளைப் பேசுவதற்கும் செயல்படுவதற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன.நான் இலங்கைக்கு செல்லும் போது போரினால் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை பார்த்தேன்.பொருளாதார முன்னேற்றங்களூக்கான விழாக்கள் நிகழ்ந்த போதும் அங்கே நிகழ்ந்தது பற்றிய ஒரு நீண்ட மௌனமே தெரிந்தது.மேற்கத்திய நாடுகள்  எப்படி குறிப்பிட்ட நாடுகளை நீதியின் காரணங்களால் தாக்குவதும் சில நாடுகளின் போர்க்குற்றங்களை அனுமதிப்பதும் சிலவற்றை மறுப்பதும் ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.(தமது எரிபொருள் தேவைக்காக வேண்டி லிபியாவில் ஆயுத புரட்சியாளர்களை ராணுவ உதவிகளுடன் ஆதரிப்பதும் அதுவே பஹ்ரைனில் மக்கள் குரலாக ஒலித்த போரட்டங்களை பஹ்ரைன் அரசு சவுதி அரேபிய ராணுவத்துணை கொண்டு அடக்கிய போது அமெரிக்காவும்,ஏனைய மேற்கத்திய நாடுகளும் வாய்மூடிகளாய் இருந்ததையும் கூறலாம்)

((A selective democracy is dancing to the tune of western vested interests).இதற்கு மாற்றாக வேறு நாடுகள் மட்டுமல்ல...ஐ.நா என்ற மொத்த பலத்தையும் சேர்த்தாலும் கூட மேற்கத்திய நாடுகளே இலுப்பை பூ சர்க்கரை மாதிரி தெரிவதால் வேறு மாற்று வழிகளும் கிடையாது))

இலங்கை இனப்படுகொலையை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு ஏனைய நாடுகளும் கூட இலங்கையினாலேயே இதனை நிகழ்த்த முடியுமென்றால் நம்மால் ஏன் இயலாது என்று அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் கூட அவ்வாறு சிந்திக்கிறார்கள்.மேலும் அவர் கூறும் போது மக்கள் ஆயுதங்களை தூக்கும் உரிமையிருக்கும் போது அவர்கள் ஆயுதம் தாங்க வேண்டிய காரணம் என்ன என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.இலங்கை ராணுவம் மருத்துவமனைகளில் குண்டுகளால் தாக்கினார்கள் என்றும் பாதுகாப்பு நிலப்பகுதியென்று கூறி மக்களை குண்டு போட்டு கொன்றொழித்தார்கள் என்றும் கோபப்பட்டார்.உலகம் இதனை அனுமதித்தது,இனி மேலும் இதனை அனுமதிக்கும் என்றார்.

ஆயுதம் தாங்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள் தவறுகள் எங்கே நிகழ்ந்தது என்று ஆராய்வதும் அவசியம்.அதிகார குவிப்பை ஒரு சிலரின் கையில் கொடுத்ததனாலா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

வருத்தம் தெரிவிப்பதோ அல்லது இரக்கப்படுவதிலோ அர்த்தமில்லை. ஏனென்றால் இது வெறும் வாய்ப் பேச்சே.உயிர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை.ஒரு ஆயுதப் போரின் வடிவமே அழிக்கப்பட்டுள்ளது.

ஈழம் என்ற பெயர் சொல்லி தங்கள் பதவிகளை உயர்த்திக் கொண்டவர்களை விமர்சித்தார்.தமிழக அரசியல்வாதிகளின் கவலைகள் கேலிக்குரியன வென்றும் தங்கள் பொருளாதார வளத்தையே முன்னிலைப்படுத்தினார்கள் என்றும் தமிழக அகதி முகாமில் மனிதர்கள் மிருகங்கள் மாதிரி நடத்தப்படுகிறார்கள் என்றும் இதனை தங்கள் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள் என்றும் கூறினார்.நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.

ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதோடு காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மக்களின் போராட்டங்களின் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அருந்ததி ராயின் ஈழம் குறித்த பார்வைக்கான ஆதரவினால் மட்டுமே அருந்ததி ராயின் முழுக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லையென்றே கூறலாம்.மாவோயிஸ்டுகளுடனான ஆதிவாசிகளின் போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தருவதை வரவேற்க முடிந்தாலும் காஷ்மீர் பிரச்சினை முந்தைய பதிவில் பிரமிள் புத்தகத்தில் சீக்கியர்களின் தனிநாடுக்கோரிக்கை எப்படி வலுவிழப்பதற்கு காரணமாக இருக்கிறதோ அதே மாதிரி காஷ்மீர் பிரச்சினையும் வலுவிழக்க காரணங்கள் இருக்கின்றன.காஷ்மீருக்கு ஒரு நிலை ஈழத்திற்கு இன்னொரு தராசா என்று சிலர் விவாதிக்கும் முன் இந்திய மாநிலங்களில் பஞ்சாப்பிற்கு எப்படி இந்தியாவின் அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதோ அதனை விட அதிக சலுகைகள் மற்ற எந்த மாநிலத்துக்கும் இல்லாத தனி உரிமைகள் காஷ்மீருக்கு உண்டு.எனவே இந்தியாவுக்கும் காஷ்மீர் சுதந்திரத்துக்குமிடையேயான போராட்டமல்ல.மாறாக இந்திய ராணுவத்துக்கும் மத அடிப்படைவாதிகளோடு, பாகிஸ்தானின் சுயலாபங்களுடன் சேர்ந்து நிகழும் கயிறு இழுக்கும் போட்டி.காஷ்மீர் பிரச்சினை.

ராணுவத் தலையீடு காரணமாக மக்களின் பொது வாழ்க்கை பாழடைந்ததோடு ராணுவ அத்துமீறல்களும் கூட காஷ்மீர் மக்களை இந்தியாவிலிருந்து தனியே பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துள்ளது என்பதையும் இதனை நிவர்த்தி செய்ய இந்தியா முன்வருவது நல்லது.இதனை விட காஷ்மீர் பிரச்சினை வலுத்ததன் காரணம் பாகிஸ்தான் ஆதரவோடு ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறையை கையாண்ட காலம் தொட்டு தூபம் போடப்பட்டு 9/11 பின்பான வெளியுறவுக்கொள்கை மாற்றங்களில் காஷ்மீர் பிரச்சினை பின் தள்ளப்பட்டுள்ளது.அதே போல் இந்திய முஸ்லீம்களுக்கு உள்ள சம உரிமைகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களுக்கு உள்ளது.இதே அளவுகோலில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கும் சம உரிமைகள் உள்ளதா எனபதையும் மத ரீதியில் பிரச்சினைகளை அணுகுபவர்கள் சிந்திக்க வேண்டும்.எனவே காஷ்மீர் பிரச்சினையையும்,ஈழப்போராட்டத்தையும் வேறு வேறு அளவுகோலில் காண வேண்டியது அவசியம்.ஒரு வேளை இந்தியாவால் ஈழப்பிரச்சினையை தீர்க்க முடியாது போனால் மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக பிரிட்டனின் உதவியோடு இதற்கான தீர்வையும் நோக்க வேண்டியது அவசியம்.பூகோள அமைப்பில் இந்தியாவின் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை தரலாம்.அதுவே தமிழகம் சார்ந்த தீர்வுக்கு வழி வகுக்கும்.

பின்னூட்டங்களைப் படிக்கும் போது மீண்டும் புதிய சிந்தனைகள் நிறைய உருவாகின்றன.பிரமிள் குறிப்பிட்ட அகிம்சை பற்றியும்,தீபன் உண்ணாவிரதம் பற்றியெல்லாம் சொல்ல இயலாமல் போய் விட்டது.எப்பவோ நிகழ்ந்த வரலாறாக எல்லாளன்,துட்ட கைமுனு பற்றியெல்லாம் இப்பொழுதும் நாம் பேசுவதற்கும்,சிந்திப்பதற்கும் வரலாறு அதன் போக்கிலேயே வாய் மொழியாக, எழுத்தாணி ஓலைச்சுவடியாக காலம் கடந்து வந்திருக்கிறது. மகாபாரதத்திற்கும்,இராமயாணத்திற்கும் இணையான தமிழ்க் காவிய கால கட்டங்களாக ஈழப்போராட்டம் தமிழர்கள்,சிங்களவர்கள் என்ற இரு இனம் மொழியின் அடிப்படையில் பல திசைகளிலும் பயணித்திருக்கிறது. சம உரிமை மறுப்பு,சுதந்திர தாகம்,மக்கள்வாழ்க்கை,போராட்டம், போர்ப்பரணி, பெண்போராளிகளின் வீரம், அகதிகள், பின்னடைவுகள், அவநம்பிக்கை, குழு மனப்பான்மை, துரோகம் இவைகளையும் தாண்டி பாதுகாப்பு, நிர்வாகம், ஒழுங்கு, நீதி, அரசியல் என்ற ஆட்சி அமைப்பை நிர்வகித்த திறன்,தமிழின் வளர்ச்சிக்கு ஈழத்தமிழர்களின் பங்காக கதை, கட்டுரை, கவிதை, உரையாடல் என இலக்கிய பங்கீடு புலம் பெயர்வு,சென்ற இடத்தில் தமது கலாச்சார அடையாளங்களைக் காண்பித்தமை,விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி அமைத்துக் கொண்ட விதம் என வரலாற்றை எழுதி வைக்க ஆயிரமாயிரமுண்டு. தமிழகம்,புலம்பெயர்ந்த நாடுகள்,ஈழத்து மக்கள் என்ற மூன்றும் இணைந்த நிலையிலேயே  மக்களின் வாழ்விற்கான தீர்வுகளையும், சுதந்திரத்தையும் கொண்டு வர முடியும்.இணையமும்,21ம் நூற்றாண்டும் இனி வ்ரும் புதிய தலைமுறைக்கு சொந்தமாகட்டும்,மனிதநேயம் மேலோங்கட்டும் என நாளை நன்றி கூறி முடிக்கிறேன்.

16 comments:

rajamelaiyur said...

Very super artical

rajamelaiyur said...

I like this post

ராஜ நடராஜன் said...

//Very super artical//

Thanks for your continuous support Teacher!

A.R.ராஜகோபாலன் said...

நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.

உண்மை இங்குள்ளவர்களின் ஈழ உணர்வு அரசியலைச் சார்ந்தோ அல்லது செல்வத்தைச் சார்ந்தோ நடை பெறுகிறது அல்லது முன்னெடுக்கப்படுகிறது

A.R.ராஜகோபாலன் said...

காஷ்மீருக்கு ஒரு நிலை ஈழத்திற்கு இன்னொரு தராசா என்று சிலர் விவாதிக்கும் முன் இந்திய மாநிலங்களில் பஞ்சாப்பிற்கு எப்படி இந்தியாவின் அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதோ அதனை விட அதிக சலுகைகள் மற்ற எந்த மாநிலத்துக்கும் இல்லாத தனி உரிமைகள் காஷ்மீருக்கு உண்டு.எனவே இந்தியாவுக்கும் காஷ்மீர் சுதந்திரத்துக்குமிடையேயான போராட்டமல்ல.மாறாக இந்திய ராணுவத்துக்கும் மத அடிப்படைவாதிகளோடு, பாகிஸ்தானின் சுயலாபங்களுடன் சேர்ந்து நிகழும் கயிறு இழுக்கும் போட்


நெஞ்சை நிமரச்செய்யும் நிதர்சனமான கருத்துக்கள் நண்பரே
இதுவரை உங்களை படிக்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்

ஜோதிஜி said...

இன்னும் சில மாதங்களுக்கு இதன் தாக்கம் உங்கள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பாருங்களேன்.

தனிமரம் said...

PALA VIYANGAL SOLI NARGIREEGAL RAI PATRIYA PALA PINPNGAL UNDU UNMAIYIL ELLAM ENPATHU VERUM KANAVU ILLAI TILIPAN SINTHIYA TULIYAI NERIL PARTHAVAN. ENGAL VEETHANAI VEERUM KAVALAI ILLAI MUDIVAI TEEDIYA PAYANAM.AGATHI VALVU ENNUM THODARGIRATH ATHU POULAM PAYARTHUM KUDA. TAMIL ELUTHA EN KANANI PIRACHANIAI INRU MANNIKKAVUM

ராஜ நடராஜன் said...

//நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.

உண்மை இங்குள்ளவர்களின் ஈழ உணர்வு அரசியலைச் சார்ந்தோ அல்லது செல்வத்தைச் சார்ந்தோ நடை பெறுகிறது அல்லது முன்னெடுக்கப்படுகிறது//

வாங்க A.R.R!அருந்ததி ராய் பிரபலமாக இருந்ததால் எளிதாகப் போய் விட்டு வந்துட்டாங்க போல இருக்குது.நானும் கூட எனது சென்னை பயணத்தில் மனிதாபிமான முறையில் உதவி செய்து விட்டு வரலாமென்று நினைத்தால் அகதி முகாம் செல்வது அப்படியொன்றும் எளிதான விசயமல்ல.அரசியல் கட்சிகள் அனுக்கிரகம்,மனு,வந்ததுக்கான காரணம் என்று ஏகப்பட்ட கடுபிடிகள்.இதோட ஊருக்கு ஒதுக்குப் புறமா வேறு உட்கார வைச்சுட்டாங்களா.மக்களின் பிரச்சினைகளில் இவர்களை ஒதுக்கியே விட்டார்கள்.பார்க்கலாம் ஆட்சி மாற்ற்த்தில் மாற்ற்ங்கள் ஏற்படுகிறதா என்று.

ராஜ நடராஜன் said...

A.R/R!காஷ்மீர் பிரச்சினை ஈழம் மாதிரி உரிமைப் போராட்டமல்ல.மாறாக அமெரிக்கா,ரஷ்யா பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்து இருந்த காரணத்தால் அமெரிக்கா பாகிஸ்தானை கொம்பு சீவி விட்டதோடு மட்டுமல்லாமல் பொருளாதார,ஆயுத உதவிகளோடு இந்தியாவுக்கு செக் வைக்க உருவாக்கப்பட்ட திட்டம்.இலங்கையும்,காஷ்மீரும் இரு வேறு பரிமாணங்கள் கொண்டது.

கருத்து பரிமாறல்கள் மட்டுமே புரிதலைத் தரும்.

இந்த மறுமொழி நேரத்தில் ஆட்டோ சார்ஜ் அநியாயங்கள் பற்றி உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது.சமூக அக்கறையான பதிவு.

ராஜ நடராஜன் said...

//இன்னும் சில மாதங்களுக்கு இதன் தாக்கம் உங்கள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பாருங்களேன்.//

ஜோதிஜி!அதெல்லாம் 2008ல வந்து தொத்திகிச்சு.

ராஜ நடராஜன் said...

நேசன்!பதிவுலகம் வந்த புதிதில் தங்கிலீஷ் பின்னூட்டங்களை புறம் தள்ளியிருந்தேன்.சிலருக்கு தமிழில் அச்சடிக்கும் வசதிகள் இல்லாமல் பின்னூட்டம் சொல்லனுமின்னு உந்துதலில் கைபேசி முதற்கொண்டு கருத்து சொல்வார்கள் என்கிற புரிதல் இப்பொழுது வந்திருக்கிறது.உங்கள் உணர்வுகள் புரிகிறது.நன்றி.

மதுரை சரவணன் said...

good post... vaalththukkal

http://rajavani.blogspot.com/ said...

காலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...

ராஜ நடராஜன் said...

//மதுரை சரவணன் said...

good post... vaalththukkal//

வாழ்த்துக்கு நன்றிங்க சரவணன்.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

காலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...//

இப்பொழுதுள்ள சூழல்களை நமக்கு சாதகமாக்கிக் கொள்ளாவிட்டால் இன்னும் பின்னடைவுகளையே நாம் சந்திப்போம்.பான் கி மூன் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.ஐ.நா,ஐரோப்பா,அமெரிக்கா என்ன நிலையை எடுக்கிறதென்று பார்க்கலாம்.

உங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

காலம் நிச்சயமாக பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈழத்தின் யோசிப்புகளில் ராஜநட...//

இப்பொழுதுள்ள சூழல்களை நமக்கு சாதகமாக்கிக் கொள்ளாவிட்டால் இன்னும் பின்னடைவுகளையே நாம் சந்திப்போம்.பான் கி மூன் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.ஐ.நா,ஐரோப்பா,அமெரிக்கா என்ன நிலையை எடுக்கிறதென்று பார்க்கலாம்.

உங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி.