கிட்டத் தட்ட மூன்று தசம சகாப்த ஆண்டுகளின் ஈழப்போரின் முக்கிய நிகழ்வுகளை ஒரே பதிவில் ஆவண பூர்வமாக கொண்டு வருவது இயலாது என்பதாலும்,இணையம் முழுதும் தீவிர தமிழீழ பற்றாளார்கள்,அதற்கும் குறையாமல் கோப வி(மர்)சனக்காரர்கள்,பொய் பரப்பாளர்கள் என மொத்த கருத்துக்களும்,ஆவணங்களும் மிகுந்து கிடப்பதால் தேடுவோர் கண்டு அடைவார்கள் எனக் கூறி சுருக்கமாக
சென்ற பதிவின் செல்வநாயகம் காலத்து சுதந்திர குரலின் தொடர்ச்சியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் வட கிழக்கு இலங்கையின் மக்களின் ஜனநாயக குரலாக ஒலிக்கிறது.எனவே இப்பொழுது இரண்டாம் கட்ட நகர்வாக விடுதலைப் போராளிகளின் காலத்துக்குள் நுழைந்து விடலாம்.பண்டார நாயக்காவிடமிருந்து ஜெயவர்த்தனேயின் அரசு காலங்களில் தமிழகத்துக்கு இருந்த ஒரே ஒட்டுதல் இன்றைய தொலைக்காட்சி,இணைய தகவல் வசதிகளுக்கு இணையாக இலங்கை வர்த்தக கூட்டு ஸ்தாபனத்தின் இலங்கை ரேடியோவின் சினிமா பாடல்களும்,பின்பு இந்திய வம்சா வழியாக தேயிலைத்தோட்ட தமிழர்கள் குடியுரிமை இழந்து தமிழகம் வந்தார்கள் என்பது தவிர தமிழகம் திராவிட இயக்க கொள்கைகளும்,அண்ணாவைத் தொடர்ந்தும் கருணாநிதி,எம்.ஜி.ஆரின் ஆளுமைக்குட்பட்ட சோசலிச இந்திய நிலையில் பயணித்ததை மட்டும் பதிவாக்கிக் கொண்டு சராசரி மக்களின் பார்வைக்கு வராத அரசியல் களத்திலேயே ஈழப்போராட்டத்தின் துவக்கம் இருந்திருக்க கூடுமென்று தெரிகிறது.
இறுகிய பொருளாதாரத்தில் இந்தியாவே திணறிக்கொண்டிருந்த காலத்தில் இப்போதைக்கு பிம்பம் படுத்துவது போல் பிரபாகரனோ,ராஜிவ் காந்தியோ முகம் தெரியாதவர்களாக,அறியாதவர்களாக இந்திரா காந்தியே இந்திய அரசியலை ஆக்கிரமித்துக்கொண்ட காமராஜர் காங்கிரஸிலிருந்து விலகிய கால கட்டங்கள் தமிழகம் எனலாம்.அறியாத விசயங்களை பத்திரிகைச் செய்திகள் மட்டுமே ஊடகத் தகவல் என்ற நிலையில் மெட்ராஸில் துப்பாக்கி சூடு என்ற தலைப்பும், கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க செல்லவில்லை செய்திகளும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியினால் தாக்கப்பட்டார் என்றும், வை.கோ படகு மூலமாக ரகசியமாக இலங்கை சென்றார் என்றும்,இலங்கை பற்றிய செய்திகளில் இனப் பிரச்சினைகளையும்,ஆயுதப்போராட்டங்களையும்,தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது எனலாம்.
பின் 80களின் இறுதியிலும் 90களில் தமிழர்கள் இலங்கையிலிருந்து இடம் பெயர்தலும்,ராஜிவ் காந்தியின் குண்டுவெடிப்பு சம்பவமும் தமிழகத்தின் விடுதலைப்போராளிகளின் மக்கள் ஆதரவு நிலையை மாற்றி விடுதலைப்போராட்டத்தின் உள்ளீடுகள் தெரியாத விதத்தில் மாற்றிப்போட்டு விட்டதெனலாம்.இந்த கால கட்டத்தில் ஏனைய போராளிக்குழுக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து போக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே வடகிழக்கு தமிழ் மக்களின் அடையாள முகமாய் மாறிப்போனது.திலிபனின் உண்மையான உண்ணாவிரதமும் தீக்ஷித்தின் புறக்கணிப்பெல்லாம் கூட பின்பே அறியப்பட்டவை.சிரமமான இந்த காலகட்டத்தில் தங்கள் உரிமைக்கான உயிர்ப்பைத் தந்தவர்களாக நிலத்தின் மக்களும்,இயக்கமும், இயக்கத்துக்கு துணையாக தங்கள் வாழ்வியல் சிரமங்களுக்கும் மத்தியில் பொருளாதார உதவிகளை தந்து நிலைநிறுத்தியவர்கள் புலம் பெயர் தமிழர்களே எனலாம்.அமெரிக்காவின் அரசியல் களம் சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் நார்வே என்ற குட்டி நாடு நாட்டாமை செய்து பிரச்சினையை தீர்த்து விடும் என்று எதிர்பார்த்த காலங்கள், விடுதலைப்புலிகளின் போர்ப் பரணி சாகசங்கள் என்பவை அண்டன் பாலசிங்கம் மொழி பெயர்க்கும் உலக ஊடகவியளாலர் மாநாடு கிளிநொச்சியில் நிகழ்ந்த போது பிரபாகரன் உலகம் அறிந்த கொரில்லா போரின் மற்றும் தமிழீழ அடையாள தமிழ் முகமாகி விட்டார்.
ஒன்று பட்ட இலங்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சமரசம் செய்து கொண்டால் போதும் என்ற இலங்கை அரசுகளின் பேச்சு வார்த்தை நிலைக்கு எதிராக (பேச்சு வார்த்தைகளின் இலங்கை அரசின் தரப்பில் இதே வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ்) தனி தமிழீழம் என்ற உறுதியான பிரபாகரனின் நிலையில் நின்றது அவரது மாவீரர் தின உரைகளிலிருந்து அறிய முடிகிறது. இலங்கை அரசு buying times என்கின்ற கால அவகாசங்களை உருவாக்கி மீண்டுமொருயுத்தத்திற்கான சூழ்ச்சிகளை உருவாக்கியிருக்கலாம். நிகழ்வுகளை கணிப்பீடு செய்தால் இரண்டுமே உண்மையெனவும் தெரிகிறது.
சில ஆவணங்களாக...சிறிலங்கா ஜனநாய சோசலிஸ குடியரசு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி -23-2002
தமிழில்
http://1paththiram.wordpress.com/category/war-of-tamil-eelam/
ஆங்கிலத்தில்
Memorandum of Understanding – Cease-Fire Agreement 2002
De-escalation Plan proposed by Security Forces Commander, Jaffna Peninsula, Maj. Gen. Sarath Fonseka, to Enable Re-settlement of Civilians in High Security Zones, December 20, 2002
Security Forces Commander, Jaffna peninsula, Major General Sarath Fonseka, outlined a plan to enable the resettlement of civilians (internally displaced persons) in High Security Zones (HSZs) in Jaffna peninsula. He tabled these proposals in a letter sent to the Liberation Tigers of Tamil Eelam (LTTE), on December 20, 2002. Primarily, he had called for disarming the LTTE to enable such re-settlement, and for maintaining a ‘balance of forces’ between the LTTE and government forces.
முழு உடன்படிக்கையின் ஆதாரம்: http://1paththiram.wordpress.com/2006/10/14/de-escalation-plan-sarath-fonseka-re-settlement-high-security-zones-2002/
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கோரப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) on November 1, 2003, submitted its proposals for an Interim Administration in the North East region to the Sri Lankan Government through the Norwegian facilitators. Following is the full text of the proposals:
தமிழில்
http://1paththiram.wordpress.com/2006/09/10/ltte-tamil-eelam-interim-government/
ஆங்கில மூலம்
http://1paththiram.wordpress.com/2006/09/22/ltte-proposals-interim-self-governing-northeast-sri-lanka/
ஆவணச் சான்றுகளாகவும் ஈழப்போராட்டத்தின் இன்னும் பல பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் தேடல் மட்டுமே நேர்,எதிர் சிந்தனைகளில் விழையும் முடிவுகளை எட்ட துணை புரியும்.
ஒரு புறம் de facto government என்று சொல்லப்படும் தன்னாட்சி முழு அதிகாரத்துடன் விடுதலைப்புலிகள் இருந்தாலும் இந்த சமரசங்களும்,உலக ஆதரவில்லாமல் செயல்பட்டது,இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடு,கருணா,பிள்ளையான் பிரிவு போன்றவையும்,அமெரிக்காவின் 9/11க்குப் பின்பான சூழலை நார்வேயின் நாட்டாமைக்கு மத்தியிலும் கிழித்துப்போட்டு விட்டு சீன,ரஷ்ய,பாகிஸ்தான்,இந்திய ஆதரவுடன் ராணுவ உதவிகளுடன் செயல்பட்டது கிளிநொச்சி இடம் நகர்வை தந்ததும் முள்ளிவாய்க்கால் போரும் தொடர் மனித இனப்படுகொலைகளும் இப்போது நினைத்தால் இன்னும் அதிகமாக கண்ணீரை வரவழைக்கின்றது.
அப்போதைய கால கட்டத்தில்,அதாவது 2008ம் ஆண்டு மத்தியில் பதிவுலகம் பரபரப்பான ஈழப்போர் குறித்த பதிவுகளை கொண்டு வந்தன.பொதுவாக கவனித்துக்கொண்டிருந்த நானும் சூடான பதிவர்களின் தொடர் கருத்துக்கு மத்தியில் எனது பதிவை ஈழத்துப்பிரச்சினையும் இந்திய மாற்றங்களும் என போரின் முழு வீச்சும் அறியாமல் உணர்ந்ததை சொல்லியிருக்கிறேன்.மனம் பதை பதைத்த கணங்களை விடுதலைப்புலிகளுக்கு ஓர் வேண்டுகோள் என என 2009ம் வருடம் பெப்ரவரியில் சொல்லியிருக்கிறேன்.எத்தனை விதமான உணர்வுகளை,கோபங்களை பதிவுகளாக,பின்னூட்டங்களாக பதிவர்கள் பகிர்ந்திருக்கிறோம்.அந்தக் கோபத்தையெல்லாம் பாராளூமன்றத் தேர்தலில் காட்டியும் கூட காங்கிரஸின் தேர்தல் வெற்றியும்,தி.மு.கவின் காங்கிரஸ் சார்ந்த நிலைப்பாடும் அதற்கான காரணங்களாய் முகங்கள் கிழிந்து போன தற்போதைய நிலையும் கூட ஈழப்போராட்டத்தின் பின்னடைவே எனலாம்.
விடுதலைப்புலிகள் மீதான கோபங்களுக்கு காரணங்களாக சில வரலாற்றுத் தவறுகளாக ஏனைய போராளிக் குழுக்களை சிதைத்தது,பயணிகள் வாகன துப்பாக்கிச் சூடு,முஸ்லீம் தமிழர்களை இடம் பெயர்த்தல்,ராஜிவின் கொலை குற்றச்சாட்டு,இலங்கையில் பிரேமதசா,லஷ்மண் கதிர்காம போன்றவர்கள் குண்டுவெடிப்பு,துப்பாக்கிச்சூடு என்ற பல உலக நோக்கில் பின்னடைவுகள் இருந்தாலும் ஒரு கொரில்லா இயக்கமாக துவங்கி கட்டுப்பாடான ராணுவ நிலைக்கும்,தனக்கென்று நில,நீர்,வான்படைகள் என்றும்,சுய ஆட்சி முறை என்று வளர்ந்ததும்,உலக நாடுகள் பலவற்றின் தடை எதிர்ப்புக்கு மத்தியிலும் தனித்து நின்ற சாதுரியம் ஈழ,இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
தமிழகத்திலிருந்து வரும் ஆதரவுக்குரல்களை விட ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு நிலையாளர்களும்,சரத்பொன்சேகா ஆதரவு ராணுவத்தினரும்,குடும்ப சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான ஜனநாயக சிங்களவர்களும்,அரசு சார்பிலா நிறுவனங்கள்,செஞ்சிலுவை சங்கம்,போரினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் என ஒரு கலவையாகவே இணைய வெளி சுதந்திரத்தின் வேகத்தால் வெளி உலகிற்கு உண்மைகள் வெளிவந்தன எனலாம்.இன்றைய ஜூன் 14ம் தேதி சேனல் 4 தொலைக்காட்சியில் கெலன் மேக்ரே என்பவரால் உருவாக்கப்பட்ட ஒளிபரப்பப்படும் காணொளிகள் ஏற்கனவே Stage actors எனக்கூறப்படும் ராஜதந்திரிகள்,தூதுவர்கள்,மனித உரிமை குழுவினர், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டு ஒரு இனப்படுகொலை இலங்கை அரசின் கட்டளையோடு இலங்கை ராணுவத்தோடு நிகழ்ந்ததை ஆவணபூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது.
(இந்த ஆவணங்கள் உலகின் கண்களுக்கு வருவதற்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தமிழர்களின் கோபத்தைப் போலவே ராஜபக்சே குழுவினரிடம் கோபம் கொண்ட ராணுவ வீரர்களில் சிலரும்,சரத் பொன்சேகா சார்பாளர்களும் என்பது குறிப்பிடத்தக்கது)
அவசர நிலைப்பிரகடனமும்,சுதந்திரமான ஊடகங்களின் அனுமதியுமில்லாத காலத்தே போர்க்குற்றங்கள் என்ற பெயரில் ஒரு இனப்படுகொலைகளின் தாக்கம் இவ்வளவு இருக்குமென்றால் உண்மை நிலவரங்கள் பொதுவில் வைக்கப்பட்டால் இன்னும் நிறைய உண்மைகள் வெளி வரக்கூடும். தற்போதைய அரசியல் நகர்வுகள்,மேற்கத்திய நாடுகளின் இலங்கை அரசு குறித்தான அணுகுமுறை,அதை விட மனித உரிமைக்கழகங்கள் எழுப்பும் கேள்விகளால் என்றாவது ஒரு நாள் ராஜபக்சே தனது நாற்காலியின் இறுதி நாட்களுக்குள்ளோ அதற்கும் அப்பாலோ போர்க்குற்றம் சாட்டப்படுவதோ, பதவி விலகுதலோ நிகழக் கூடிய ஒன்றாக தமிழர்கள் எதிர்பார்த்தாலும், ராஜபக்சே குழுக்கள் அதிகார பீடத்தில் இல்லாமல் போவதாலேயே ஈழப் பிரச்சினையும்,மக்களின் துயரங்களும் முடிவுக்கு வந்து விடுமா என்றால் இல்லை.
இந்த கால கட்டத்தில் நிகழ்வுகள் அதன் போக்கில் போகட்டுமென்றோ அல்லது கிடைத்த வரை லாபம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று சிலரும், இப்படியொரு தீர்வுக்கு உடன்படுவதாக இருந்தால் விடுதலைப்புலிகள் இவ்வளவு தியாகங்களை செய்திருக்க மாட்டார்கள் என்று இன்னும் சிலரும் எதிர்காலத்தில் பிரிந்து நிற்கும் சூழல் உருவாகும்.
இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் போரின் வடுக்களால் அமுங்கி கிடக்கின்றன.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என வரும் கால கட்டத்தில் ஒன்றிணைந்த இலங்கையில் சில உரிமைகள் என்ற நிலையிலேயே இந்தியாவோ அல்லது ஏனைய நாடுகளோ பிரச்சினைக்கு தீர்வுகளை காண நினைக்கும்.இதனை இங்கே குறிப்பிடும் நேரத்திலேயே இரு தினங்களுக்கு முன்பு இலங்கை சென்ற மேனன்,நிருபமா குழுவிடம் நில அதிகாரமோ,காவல்துறை அதிகாரமோ கொடுக்கமாட்டோம் என ராஜபக்சே சொன்னதாக தகவல்கள் வருகின்றன.)
இப்படியான ஒரு கால கட்டத்தை இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைக்கு சிறுபான்மையான இஸ்ரேலியர்களுக்கு பெரும் நிலமும்.பெரும்பான்மை பாலஸ்தீனியர்களுக்கு குறுகிய நிலப்பகுதியும் என்ற வாக்குவாதத்தாலும், ஏனைய அரேபிய நாடுகளின் தூண்டுதலாலும் நிலம் பங்கை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனையடுத்து ஐ.நா தீர்மானத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டு தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது.இதனைப் புறக்கணித்த பாலஸ்தீனியர்கள் இன்று வரை போராடி இறுதியில் 1967ம் ஆண்டு வரையிலுமான நிலத்தையாவது தரவேண்டும் என்று முந்தைய கால கட்டத்திற்கே இவ்வளவு வருட போராட்டங்களுக்குப் பிறகு தீர்வுக்கு வருகிறார்கள்.
எனவே இலங்கைப் பிரச்சினையிலும் அப்படியொரு சூழல் வருமானால் ஈழத்தமிழர்கள் எந்த தீர்வை தமது எதிர்காலமாக தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் எனபதற்கான முன் அனுமானங்களை இப்பொழுதே வகுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் குரல் கொடுப்பது நல்லது.இதற்கான தீர்வாக நிலத்திலும், புலத்திலும் என தமிழ் மக்கள் வாக்கெடுப்பை நிகழ்த்துவதும் அதன்படி சமரசமோ த்மிழீழத்தை நோக்கி செல்வதும்,தனி ஈழம் கோரிக்கையை முன் வைப்பதும் அவசியம்.இதனை மனித உரிமைக் கழகங்கள்,மேற்கத்திய நாடுகளுடனும், அண்டைய நாடான இந்தியாவுடனும் சேர்ந்தே தீர்வு காண வேண்டியது வரும்.
இந்தியா ஈழ மக்களின் நலம் என்று நினைப்பதை விட தனது எல்லைகள் சார்ந்த நலன்கள் என்ற அடிப்படையிலேயே பிரச்சினையை அணுகும் ஆபத்தும் இருப்பதை உணரவேண்டும்.தற்போதைய மேனன்,நம்பியார், பிரணாப் கூட்டு முயற்சியில் தமிழர்களுக்கு சாதகமான சூழல்கள் இல்லையென்றே கூறவேண்டும்.மத்திய அரசை நெருங்கும் தகுதி பெற்ற எம்.பிக்களில் லாபிகள் என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவுமேயில்லாததும் கூட பலவீனமே.எனவே உடனடித் தீர்வுகளுக்கான சரியான தருணமும் இதுவல்ல.தமிழகமும் பூகோள,மொழி ரீதியாக ஒரு அங்கம் என்பதால் தமிழகம்,புலம் பெயர்ந்தவர்கள் வரும் நாட்களை நகர்த்தி செல்வதில் ஒரு அங்கத்தினராகிறார்கள்.அரசு சார்ந்து யார் இருக்கிறார்களோ அவர்களது குரல் சார்ந்தும் தீர்வுகள் திசை மாறும் சூழல்களை அவதானிக்க வேண்டும்.ஒரு வேளை தீர்வுக்கான வழிகள் உருவாகும் போது தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பவரின் குரலும் ஆதரவும்,ஆதரவின்மையும் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை தாண்டி இலங்கை சுயாதீனமாக செயல்பட்டு விட முடியாது.விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த எல்லைகளுக்குட்பட்டே ஈழம் பயணிக்கும்.எனவே புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென்ற லாபியை உருவாக்குவது அவசியம்.வை.கோ சீமான் போன்றவர்கள் தவிர சமீபத்தில் மே 17 இயக்கம் என்ற புதிய அமைப்பும்,திருமுருகன்,பால் நியுமன் போன்ற இளைய,புதிய முகங்கள் உலக அரசியல் பார்வையோடு இருப்பது திராவிட கழகங்களுக்கும் அப்பால் தமிழகம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறதென்ற நம்பிக்கையை விதைக்கிறது.
தமிழக தேர்தல் இந்திய அரசியல் களத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கும்,ஈழப்பிரச்சினைக்கான தமிழகம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் நல்ல வாய்ப்பு.இதனை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது இன்னும் பொருத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.கருணாநிதியால் இயலாத ஒன்றை ஜெயலலிதாவால் சாதிக்க கூடிய சந்தர்ப்பம் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி.இதனை தனது புத்திசாலித்தனத்தால் சாதித்து வரலாற்றில் இடம்பெற்றுக் கொள்ள முயற்சிப்பதும்,சோ போன்றவர்களின் ஈழ எதிர்ப்பு நிலைகளோடு உடன்பட்டு போவதும் அவரது சுய தீர்மானங்களில் இருக்கிறது.
விடுதலைப் புலிகளின் காலங்களுக்கும் அப்பால் ஈழமக்களின் பிரச்சினையை மனிதாபிமான நோக்கில் அணுகவேண்டிய காலமிது என்பதோடு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் இணைப்புக்கான வழிகாட்டலாக உருவாக தம்மால் இயன்ற ஆதரவினை சோ போன்ற அரசியல் விமர்சகர்கள் உணரவேண்டும்.அதுவே பார்ப்பனிய,திராவிட பிரிவுகளாக தமிழன் பிரிந்து போவதை தடுக்கும் இணைக்கும் பாலமாக அமையும்.அது தவிர்த்து வர்ணாசிரம பார்வையோடு சிந்திப்பது அவரவர் அடையாளங்களையே இந்த மண்ணில் விட்டுச்செல்வதற்கு உதவும்.ராஜகோபலாச்சாரியின் குலக்கல்வி தத்துவத்தையும் தாண்டி தமிழகம் பயணித்திருக்கிறது.அதுபோலவே ஈழ உணர்வும் பயணிக்கும்.ஜாதிகளின் உட்பிரிவுகள்,மதங்கள் கடந்து சிந்திக்கும் தேவையில் ஈழப்பிரச்சினை பயணிக்க வேண்டும்.முழுமையான ஆதரவு என்பதை எங்கும் காண இயலாது என்பதால் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் சில மாதிரி தீய எண்ணங்கள் கொண்டவர்கள் இங்குமங்கும் உலாவருவதை தவிர்க்க இயலாது.எனவே பெரும்பான்மை தமிழர்கள் எப்படி உணர்கிறார்கள்,சிந்திக்கிறார்கள் என்ற அளவீட்டிலேயே ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல இயலும்.
இந்த தலைமுறைக்கான போராட்டமிது. காட்சிப்பொருளாக.உணர்வுபூர்வமாக, களநிலைகள்,மக்கள்,ஆதரவாளர்கள் என்ற பலநிலைகளில் உணர்ந்தவர்கள் நாம்.நம்மால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் இன்னுமொரு தலைமுறைக்கு இதனை மாற்றி விட்டு விடுவதில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கும் எந்த விதமான மாறுதலை,தாக்கத்தை உருவாக்கும் என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.நாம் சுமந்த பாரத்தை நாமே இறக்கி வைக்க முயற்சி செய்வோம்.
2008ம் ஆண்டு துவக்கம் அவதானித்ததில் ஒன்று தொலை தொடர்பு,உணர்வு பூர்வமாக,அறிவு பூர்வமாக சிந்திப்பதில் தமிழர்களில் சிறந்து விளங்குவதோடு எதிர் மறை நிலைகளில் வலம் வருகிறார்கள்.ஒவ்வொன்றும் குட்டி குட்டித் தீவாக இருப்பதை எப்படி இணைப்பது என்ற தலைமைத்துவ பிரச்சினை இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மாற்றத்திற்கு பின் அ.தி.மு.கவின் அரசியல் நகர்வுகள் மிக வேகமாகவும்,அதே சமயத்தில் தி.மு.க செய்யாததை சுட்டிக்காட்டுவதோடு ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்றங்கள் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும்,கச்சத்தீவின் வரலாற்று ஆவணங்கள் தமிழக அரசிடம் இருப்பதை சுட்டிக்காட்டி கச்சத்தீவு பிரச்சினையில் தமிழகத்தையும் ஒரு அங்கமாக சேர்க்கவேண்டுமென்று இரு தீர்மானங்களை பெரும்பாலோனோர் வரவேற்றாலும்,ஜெயலலிதாவின் கடந்த கால விடுதலைப்புலிகள் சார்ந்த ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இன்னும் சிலருக்கு ஐயப்பாட்டையும் உருவாக்குகிறது.
தமிழக சட்டமன்ற இரு தீர்மானங்களே இறுதி தீர்வுக்கு முடிவில்லையென்ற போதிலும் சரியான பாதையில் பயணிப்பதன் துவக்கப் பாதைக்கான அழுத்தமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.மேலும் இலங்கை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று தமிழக அரசின் இரு தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிடும் போது இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்றும் ஒரு மாநிலத்தின் குரலையெல்லாம் மதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை யென்றும்,தமது பேச்சு வார்த்தைகள் இந்தியாவின் மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் மட்டுமே இருக்கும் என்று கூறுவதின் மூலம் இந்திய இலங்கை பூகோள அரசியலை மறைத்தோ அல்லது மறுத்தோ கருத்து தெரிவிப்பதிலிருந்தே இலங்கை அரசின் குள்ள நரித்தனத்தையும்,தமிழர்களை பொருட்படுத்தாத நிலைப்பாட்டையும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கையின் வட,கிழக்கு மக்களுக்கான தீர்வுக்கு இரு வழிகள்.
முதலாவதாக கூண்டுக்கிளி கே.பத்மநாதன் சொல்வது போல் இலங்கையின் அதிகார பகிர்வில்லாமல் வாழ்தலே முக்கியம் என்ற நிலையில் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விடுவது.இரண்டாவதாக இலங்கையின் இறையாண்மையை மதிக்கும் விதத்திலும் அதே நேரத்தில் தமிழர்களின் உரிமைகளை மதிக்கும் விதத்திலும் தமிழீழம்.முந்தையது எளிதானதும் இரண்டாவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இலங்கை அரசு நடந்து கொள்வதைப் பொறுத்தது.தற்போதைய கால கட்டத்தில் அதற்கான சூழல்கள் ஒன்றும் தெரியாததால் காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்லும்.
ஒரு வேளை உலக அரசியல் களமும்,இந்தியாவின் சீனா குறித்த கவலையும் இப்பொழுதே இந்திய மத்திய அரசுக்கு தலையையும்,சீனாவுக்கு வாலையும் காட்டும் இலங்கையின் இரட்டை வேடத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.இலங்கையின் நீண்ட கால நலன் கருதியும் இலங்கையின் இரு தரப்பு மக்கள் விரும்பும் பட்சத்தில் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டிலான சுய உரிமைகள் கொண்ட ஈழத்தமிழ் நாடாகவும்,சிங்கள நாடாகவும் சமக்குடிமக்களாக உருவாக்குவதே நல்லது. இது நிகழ்வதும்,நிகழாமல் போவதும் இந்திய எல்லைப்பாதுகாப்பு குறித்த எதிர்கால நிலைகளைப் பொறுத்தது.அமெரிக்கா போன்ற வலுவான நாடாக இருந்தால் இது மாதிரியே செயல்படும் என்பதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன.தூரத்தில் இருக்கும் அந்தமானே இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது பத்து,இருபது நாட்டிகல் மைல் தூரத்திலிருக்கும் இலங்கையை தீர்வுக்கான வழியென தொலை தூரப்பார்வையிலும் மாறும் உலக வர்த்தக அடிப்படையிலும்,இந்தியா சார்ந்த இரு இன மக்களின் வாழ்வியல் நன்மைக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.பூனைக்கு மணி கட்டுவது யார்?
இலங்கை ராணுவத்தின் கோரப்பசிக்கு இரையான அப்பாவி குழந்தைகள், பெண்கள்,இளம் வயதினர்,முதியோர்,விடுதலைக்காக உயிரையும் துச்சமென மதித்த போராளிகள்,பெண் வீராங்கனைகள்,குழுக்களாகவே இயங்கினாலும் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தோர்,போரில் வாழ்விழந்தோர்,போரால் தாங்கள் செய்யாத தவறுகளுக்காக மாற்று இடம் பெயர்ந்த புலம் பெயர்ந்த மற்றும் இஸ்லாமிய தமிழர்கள்,இரு இனங்களின் போர் பிடிக்குள் இறந்து போன அப்பாவி சிங்களவர்கள்,ராஜபக்சே அரசை எதிர்த்த சிங்கள பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் பிரபாகரன் என்ற ஆளுமைக்கும் எனது 300வது பதிவு சமர்ப்பணம்.
படங்கள் உதவி:கூகிள்.
23 comments:
வணக்கம் அண்ணே பலருக்கு இந்த ஆய்வு பல புரிதல்களை கொடுக்கும் என்று நினைக்கேரன் .
என்னை பொருத்தவரை புலிகள் செய்த பாரிய தவறுகளாக
முதலாவது ராஜீவ் கொலை / இது பிற்காலத்தில் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த அஸ்திரம். ( ராஜீவ் கொலை செய்யப்படா விட்டாலும் இந்தியா புலிகளுக்கு எதிராகவே இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை)
அடுத்து முஸ்லீம்கள் வெளியேற்றம் / இது ஈழ போராட்டத்தில் முலீம்களின் பங்களிப்பை சிதைத்து விட்டது. மொழியால் அவர்களும் தமிழர்கள் என்ற ரீதியில் எம்முடன் அரவணைத்து சென்றிருக்க வேண்டும்.
நல்லப் பதிவு ! விடுதலைப் புலிகளும் பல தவறுகள் செய்துள்ளனர். தந்தை செல்வா போல அறிவுமிக்க வழியில் அவர்கள் நடக்கவில்லை. புலிகளிடம் வீரம் இருந்தது விவேகம் இல்லாமல் போனது. செல்வாவிடம் விவேகம் இருந்தது வீரம் இல்லாமல் போனது. இப்போது இரண்டும் ???
2008ம் ஆண்டு துவக்கம் அவதானித்ததில் ஒன்று தொலை தொடர்பு,உணர்வு பூர்வமாக,அறிவு பூர்வமாக சிந்திப்பதில் தமிழர்களில் சிறந்து விளங்குவதோடு எதிர் மறை நிலைகளில் வலம் வருகிறார்கள்.ஒவ்வொன்றும் குட்டி குட்டித் தீவாக இருப்பதை எப்படி இணைப்பது என்ற தலைமைத்துவ பிரச்சினை இருக்கிறது.
ஒவ்வொரு வரியும் ஐவரி.
ஒரு பிடிஃப் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். பார்த்தீர்களா?
விண்மீனுக்கு வணக்கமும், வாழ்த்தும்!!
இந்த பதிவுக்காக நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் என்ன சொல்வது என்றுதான் தெரியவில்லை.
தமிழர்களுக்கான உரிமையை மறுத்து பிரச்சினையை ஆரம்பித்தது இலங்கைதான். இலங்கை தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பின்னர் எங்கேயோ இடறி அதற்கான விலையாக இந்தியா ஒரு தலைவனை இழந்தது. புலிகளின் போராட்டம் ஒரு நியாயமான உரிமை போராட்டமாக தொடங்கி, பின்னர் தன் வலிமை பற்றிய அதீத நம்பிக்கை காரணமாக யாரை பகைத்துக் கொள்ளக் கூடாதோ அவர்களை பகைத்து கொண்டு அதற்கு விலையாக ஈழத்தின் அஸ்திவாரத்தையே இழந்தார்கள். அனால் இந்த தவறை ஆரம்பித்து வைத்த இலங்கை எந்த நஷ்டமும் இல்லாமல் தப்பியதுதான் வினோதம்.
நல்ல தலைமை அவசியம் ராஜநட...யார் ? ????
ராஜ நட, இப்போதான் தவிர்க்க முடியாத ஓர் நிலையில் சனல் நான்கின், என்னைப்பொறுத்தவரை "இனப்படுகொலைக்கள" காணொளி பார்த்து முடித்தேன். பார்க்கும் போது தான் புரிந்தது நீங்க ஏன் இந்த வார நட்சத்திரப்பதிவரா தேர்ந்தேடுக்கப்பட்டீங்கன்னு. இருந்தாலும் வாழ்த்தும் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. காரணம் உங்களுக்கே புரியும்.
உங்கள் பதிவை பிறிதோர் சந்தர்ப்பத்தில் படித்து முடித்துவிட்டு கருத்தை பதிகிறேன்.
அருமையானதொரு பதிவு சகோ. கடுமையான உழைப்புத் தெரிகின்றது. நேற்று வெளியான சானல் 4 போர்க்குற்றம் காணொளிகள் மிகவும் முக்கியமானதொரு சாட்சியங்கள் ஆகும் !!! அது உட்பட நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்கால முன்னெடுப்புகளையும் இணைத்து எழுதுங்கள் சகோ.
கந்தசாமி அண்ணே!வணக்கம்ங்கண்ணே:)
இரண்டு வருடத்திற்குள் நிகழ்ந்த மனித இனப்படுகொலைகளையே மறந்து ஒன்றிணைந்த இலங்கையில் வாழ வேண்டுமென்று விவாதிப்பவர்கள் அரத பழசான ராஜிவ் காந்தியின் கொலையை மட்டும் மறக்காமல் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.
ராஜிவ் காந்தி கொலை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.இதன் மாற்று பரிணாமங்கள் இன்னும் வெளியே வரவில்லை.
ஒருவேளை விடுதலைப்புலிகளே இதற்கு காரணமென்று பொதுவான க்ருத்து இருந்தாலும் அதற்கான மன்னிப்பையும் கூட ஆண்டன் பாலசிங்கம் வைத்து விட்டார்.
அடுத்த் பதிவையையும் படித்து விட்டு முடிந்தால் Channel 4/srilanka பக்கமும் போய் வாருங்கள்.
கந்தசாமி!முஸ்லீம்கள் வெளியேற்றம்,தனிமைப்படுத்தல் வரலாற்றுத் தவறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.நன்றி.
வாங்க ஆரோணன்!தந்தை செல்வாவின் அறிவு பூர்வமான வயதிக காலமும்,இளமையாய் துவங்கிய விடுதலை இயக்கங்களின் காலத்தின் வேறுபாடும் குறுகிய,நீண்ட காலப் பின்ணணி கொண்டது.தந்தை செல்வாவே அகிம்சையாகப் போராடியிருந்தால் கூட இன்னும் கால அவகாசமே எடுத்திருக்கும்.இந்திய சுதந்திர போராட்டத்தின் சிப்பாய் கலகமாக 1857ம் வருடம் முதல் 1947ம் வருடம் வரை என்பது நீண்ட காலப் போராட்டம்.எந்த விடுதலையும் தியாகங்கள்,கால அவகாசங்கள் இல்லாமல் நிகழாது.தமிழர்கள் இப்போது கொஞ்சம் ஒன்று சேருவது போல் தெரிகிறது.முழு ஒற்றுமையும் இருந்தால் மிகக் குறுகிய காலத்தில் தமிழீழ தீர்வை பெற்று விடலாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் அடுத்த பதிவின் குமரன் பத்மநாதன் நேர்காணலுக்கே புலம்பெயர்ந்தவர்கள் உடன்பட்டால் 1 வாரத்திற்குள்ளேயே மக்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடுமாம்.ஆனால் ஒன்று பட்ட இலங்கையே வேண்டுமென்று இலங்கை அரசு ஊதுகுழல் செய்கிறார்.
ஜோதிஜி!அப்படியே அடுத்த பதிவையும் படித்து விட்டு சேனல் 4 ஆவணப்படத்தையும் முடிந்தால் பாருங்கள்.தமிழ்மணத்தின் ஈழம் பகுதியில் சிறு சிறு பதிவாக வந்தவைகளின் தொகுப்பும் இன்னும் சில போர்க்குற்றங்களும்.
இனியாவது தமிழர்கள்,முக்கியமாக புலம்பெயர் தமிழர்கள் இணைவார்களா?
பாலாண்ணா!அடுத்த பதிவில் உங்கள் Pdf ன் கருத்துக்கள் ஏதாவது இணைக்க இயலுமா என பார்த்தேன்.அது இன்னொரு வால்யூம் என 41% ல் நின்று விட்டது.ரார் பைலை விரிவாக்கம் செய்ய முடியவில்லை.நேரம் கிடைக்கும் போது வேறு மென்பொருளில் திறக்க பார்க்கிறேன்.
இந்த பதிவில் 2009ம் வருட கால கட்டத்தை குறிப்பிடும் போது உங்கள் ”நச்”பதிவுகளின் கோபத்தையும்,தாக்கத்தையும் சொல்லலாமா என பார்த்தேன்.ஆனால் அந்த கால கட்டத்தில் உங்களைப் போன்றே ஏனைய பதிவர்களும் நிறைய கருத்துக்கள் சொன்னதால் ஒருவரை சொல்லி ஒருவரை சொல்லாமல் இருந்து விடுவோமென்று தவிர்த்து விட்டேன்.இது உங்கள் பின்னூட்டமென்பதால் இதனை குறிப்பிடுகிறேன்.
பழமைண்ணா!எங்கே போயிட்டீங்க?ஊருக்குப் போனதுக்கப்புறம் பதிவுகள் குறையுதே.
நசர்ஜி கூடயெல்லாம் சேர்ந்தா இப்படித்தான்:)
சிவானந்தம்!ஆழ்ந்த புரிதலோடு சொல்லியிருக்கிறீர்கள்.எனது உணர்வும் உங்கள் கருத்தை ஒட்டியே இருந்தாலும் போருக்கப்பாலான இலங்கையெனும் எலி புலிகளை குதறியதுமில்லாமல் இந்தியா என்ற யானை மீது ஏறி மிதித்து விளையாடுவதைப் பொறுக்க முடியவில்லை.
அடுத்த பதிவையும் படித்து விடுங்கள்.குறைந்த அளவே ஆவணங்கள் வெளியாகிய நிலையிலேயே இலங்கை இந்த ஆட்டம் போட்டால் இன்னும் வெளி வரவேண்டிய உண்மைகள் வெளி வந்தால்?
விடுதலைப்புலிகளின் அதீத நம்பிக்கையே கிளிநொச்சி இடப்பெயர்ச்சி எனலாம்.தவறுகள் நிகழ்ந்திருந்தாலும் போருக்கப்பாலான மக்களின் நிலை விடுதலைப்புலிகளை இன்னும் உயர்த்துகிறதென்பேன்.
I've not read it. I shall read it soon after my last paper.
Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.
http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html
Thank you.
Anamika
//நல்ல தலைமை அவசியம் ராஜநட...யார் ?//
தவறு!நல்ல கேள்வியை முன் வைத்தீர்கள்.தலைமை என்பது என்னைப் பொறுத்த வ்ரையில் உருவமில்லாத ஒன்று.
பெயர் எல்லோருக்குமே தெரிந்தவர்தான் அவர் பெயர் ஒற்றுமை.இதில் தமிழக தமிழர்களை விட புலம்பெயர் தமிழர்கள் கருத்தளவில் அதிகமாகவே பிரிந்து காணப்படுகிறார்கள்.உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் இலண்டனில் தொலைக்காட்சி ஊடகம் தீபம் சில தினங்களுக்கு முன் வைத்த விடுதலைப்புலிகளின் கொடி பற்றிய பொது உரையாடல்.இந்த கால கட்டத்தில் இப்படியொரு தலைப்பில் உரையாட வேண்டிய பின்ணணிகள் என்ன என்பதையெல்லாம் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
இலங்கையளவில் சிங்களவர்கள் பெரும்பானமையானவர்கள் என்றால் மொத்த மொழி அளவில் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள்.இதனை நாம் உணரும் நேரத்தில் அரூவமான தலைமை உருவமாக எப்படியாவது வெளிப்படும்.
இதோ இப்போதைய கால கட்டத்திலேயே வை.கோ,சீமான் போன்றவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.மே 17 இயக்கத்தின் புதிய முகமாக திருமுருகன் என்பவர் உலக அரசியல் சார்ந்து கருத்துக்களை முன் வைக்கிறார்.தமிழீழ அரசு உருவாக்கியிருக்கிறார்கள்.பிரிவிலும் கூட இலண்டன் வாழ் தமிழர்களும் ஏனைய ஐரோப்பிய வாழ் தமிழர்களும் ஒன்று கூடி ராஜபக்சே இலண்டன் பயணத்தை முறியடித்திருக்கிறார்கள்.அமிதாப் பச்சனை இலங்கைக்கு பட விழாவுக்கு எந்த தலைமைக்கும் அங்கீகாரமில்லாமல் ஆனால் நாம் தமிழர்களுக்கும் ஓரளவுக்காவது பங்கு என தலைமையில்லா வெற்றிகளும் செய்து காட்டியிருக்கிறோம்.
டைம்ஸ் இதழின் ராஜபக்சே வாக்கெடுப்பை யார் யார் முகம் என்று அறியாமலேயே உணர்வின் அடிப்படையில் நமது எதிர்ப்பையும்,கடிதத்தையும் டைம்ஸ் எடிட்டருக்கு அனுப்பி யோசிக்க வைத்திருக்கிறோம்.
தலைமை அதுவாகவே எப்படியாவது உருவாகும்...காலைப்பிடித்து இழுத்து விடும் இலக்கியவாதிகள்,கொள்கையாளர்கள் என முகமூடி போட்டுக்கொண்டு மாற்றுக்கருத்து என்ற பெயரில் திசை திருப்பவர்கள் அமைதியாக இருந்தால்.
//http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html //
Anamika! I have written one more article and posted it prior to the link you posted here.please go through when you find time.
A part of the incidents of channel 4 documents which were already in Thamizmanam (Eeelam page) were not felt and given much importance to the induvidual blogs.
By Editing and making it as a film with comments of Channel 4 gives a visual effect of heart beating of each induvidual who will have heart and tears in their eyes.
ரதி!தமிழ்மண நட்சத்திர வாரம் எந்த விதமான முன்னேற்பாடுமில்லாமல் தானாகவே வந்தது.யார் எதைச் சொல்ல வேண்டுமென்று தமிழ்மண நிர்வாகிகள் தலையீடு செய்வதில்லையென்ற போதிலும் பதிவுலகில் இருந்த காலத்திற்கும் நட்சத்திர அழைப்புக்கும் பொருள்படும்படி எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் ஆவண தேவைகளுக்கு மட்டும் தேடலுடன் நானாகவே எடுத்துக்கொண்ட தலைப்புக்கள்.
உங்கள் பின்னூட்டத்தின் படி அடுத்த பதிவும் நேற்றைய இரவு சேனல் 4 தொலைக்காட்சி பார்த்ததின் பாதிப்பில் வந்து விழுந்த வார்த்தைகளே.
ஜீரணிக்க முடியாத காட்சிகள்தான் என்றாலும் இன்னும் நமது கண்களுக்கும் புலனுக்கும் வராத நிறைய உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த பதிவுக்கான பின்னுட்டததை இங்கேயே சொல்லி விட்டேன்.
சகோ!இக்பால் செல்வன்!உங்கள் பின்னூட்டம் காண்பதற்கும் முன் பதிவையும் இணைத்து விட்டேன்.
உஙக்ள் பதிவில் பின்னூட்டமிட்டு விவாதித்த மக்கள் நலன்கள் குறித்த கருத்துக்கள் மனதுக்குள்ளேயே குறுகுறுத்துக் கொண்டிருக்கிறது.சேனல் 4 ஆவணத் தொகுப்பையெல்லாம் கண்ட பின் நாமே விரும்பினாலும் ஒற்றை இறையாண்மையில் மனம் இணைய விரும்புமா என்ற கேள்வியே எழுகிறது.இருந்தாலும் உணர்ச்சி வசப்படுவதை விட விவேகமாக எப்படி சிந்திப்பது என்பதே நீண்ட பயணத்துக்கு வழி வகுக்கும்.
அடுத்த பதிவுக்கும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
இது ஒரு மேலெழுந்தவாரியாக எழுதப்பட்டிருக்கின்றது பத்தோடு பதினொன்றாக இருக்கின்றது
ஒரு ஆழ்ந்த புரிதலை செய்யவில்லை குறிப்பாக
1.ராஜிவ் கொலை --- இன்று வரை மனைவி ஆட்சியிலிருந்தும் விசாரணையின் முக்கிய சாட்சியான வீடியோ இன்னும் நாராயனிடம் இருக்கின்றது
http://rajivgandhi-assassination.blogspot.com/திருச்சி வேலுச்சாமி குறிப்பிடும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் கடுமையான விசாரணை செய்யப்படவில்லை
புலிகள் மீது தீர்ப்பை எழுதி விட்டு விசாரணை செய்தது அப்பட்டமாகத் தெரிகின்றது இன்று வரை முழுமையான விசாரணை செய்யப்படவில்லை
ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு தொடர் என்றெல்லாம் வருகின்றது
ஆனால் புலிகள் சிக்க வைக்கப்பட்டது எப்படி என்று தான் ஆராயவேண்டும் ????
2. முஸ்லீம் வெளியேற்றம்
90 களில் முஸ்லீம் வெளியேற்றியிருக்காவிட்டால் போராட்டம் இவ்வளவு காலம் இருந்திருக்காது
காரணம்
முஸ்லீம் மக்கள் தமிழர்கள் என்ற இனமாக ஒரு போதும் தம்மைக் காட்டிக்கொண்டதே இல்லை
முஸ்லீம் என்ற மதவாதிகளாவே பெரும்பான்மையானவர்கள் 99 % இருக்கின்றார்கள்
எப்போதும் தமிழ்விரோதிகளாவே இருக்கின்றார்கள் இருந்தும் வருகின்றார்கள்
இது பற்றி புலிகள் விளக்கம் இதோ http://eelavarkural.blogspot.com/2008/09/blog-post_277.html
2009 மே 18 வரை புலிகளை குற்றம் சுமத்தியபடியும் சமாதானப் பேச்சுக்களில் தமக்கும் சமபங்கு வேண்டும் என்று போர் கொடி தூக்கிய முஸ்லீம் தலைவர்களை இப்போது எங்கும் காணவில்லை எந்த அறிக்கையையும் வெளியிடுவதில்லை ஏன் ???
3.புலிகள் அரசியல்,இராணுவ தலைவர்களைக் கொன்றார்கள்
அப்படி என்றால் மன்னித்து விடுவதா?
புலிகள் செய்தால் கொலை அரசுகள் செய்தால் மனிதநேயமா ?
இன்று சதாம், கடாபி என்று அதே அரசியல் இராணுவத் தலைவர்களை கொல்வதாக மக்களையும் சேர்த்தே மேற்குலகம் கொன்று வருகின்றது
இதே மேற்குலகம் காலனித்துவ இன அழிப்பிலிருந்து இன்று வரை இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரையும் மற்றவர்களை பயங்கரவாதி என்றும் சொல்லி வருகின்றது
ஆகவே முதலில் உலகம் வல்லவர்கள் சொல்லுவதே வேதமாக நீங்களும் சொல்லப்போகின்றீர்களா ?
அல்லது எது விடுதலைப் போராட்டம் என்று எது பயங்கரவாதம் என்று பிரித்தறியப்போகின்றீர்களா ?
நீங்களே முடிவு செய்யுங்கள்
இனியும் மேலெழுந்த வாரியாக எழுதாமல் விரிவாக எழுதுங்கள்
நன்றிகள்
எல்லாளன்!உங்கள் பெயரை தொடர்ந்து ஈழம் பகுதியில் காண்கிறேன்.பின்னூட்டத்தில் நீங்கள் முன் வைத்த காரணங்கள அனைத்தும் காலம் தாழ்ந்த ஒன்று என்பதோடு பொதுப்பார்வையில் பெரும்பான்மையோரை ஏற்றுக்கொள்ள இயலாத படி இன்னும் விவாதங்களில் மட்டுமே செல்கின்றது.ஈழம் குறித்த பார்வையுடையோரை வேண்டுமானால் யோசிக்கத் தூண்டும்.
இன்னும் முஸ்லிம்கள் என்ற பிரிவினையெல்லாம் செய்வது இன்னுமொரு எதிர்ம்றை தளத்துக்கே தமிழர்களை இட்டுச்செல்லும்.மொழியின் அடிப்படையில் அவர்களையும் அணைத்துச் செல்வதே நல்லது.
ஒற்றைக்கண் பார்வையில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை எனது பதிவுகளே சொல்லும்.
மூன்று சகாப்த சரித்திரத்தை ஒற்றை பதிவில் எழுதச் சொல்கிறீர்களே!நியாயமா?இன்னும் நிறைய சொல்லியிருக்கிறேன்.நன்றி.
Post a Comment