ஒரு பயலும் உதவிக்கு வராமல் இருப்பவனும் காட்டிக்கொடுக்கும் தமிழனுக்கே உள்ள சாபக்கேட்டில் இருக்கும் வீரம் உதவிக்கு வராது.பழங்கதை அபிமன்யு மாதிரி எல்லாப் பயலும் வியூகம் அமைத்து வலை விரிக்கிறார்கள்.வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது.(யாரைய்யா சொன்னது?தெரிந்தவர்கள் ஞாபகப் படுத்துங்களேன்)
உங்களது வீரத்தை இன்னும் எவனுக்கும் பறைசாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை.தமிழன் இருக்கும் வரை உங்களது வீரம் நீங்கள் வீழ்ந்தாலும் தமிழ்மண் சொல்லும் .களத்து நிலைமைகள் உங்களையன்றி யாரும் அறியார்.உங்களால் இலங்கை ராணுவத்தை வெல்லும் சாத்தியம் இருந்தால் களத்தில் நில்லுங்கள்.இல்லையென்றால் தமிழகமும்,உலகத்தமிழர்களும் தரும் தார்மீக ஆதரவோடு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்.
மழைக்காக காத்திருக்கிறோம்,திரும்பி போகமாட்டான் போன்ற அறிக்கைகள் எல்லாம் பொய்ப்பித்துப் போகும்படியாக இலங்கை ராணுவம் பலத்துடன் இருப்பது தென்படுகிறது.கிளிநொச்சியை விட்டதால் நோகாமல் நொங்கு தின்கிறான் இலங்கை ராணுவம்.அதிசயம் என்று ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய வெற்றித் திமிரில் மிதக்கும் இலங்கை அரசை தற்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாத காலச்சூழல்கள்.அமெரிக்கா காரங்கிட்ட முன்னமேயே திரிகோணமலை பூச்சாண்டி காட்டியிருந்தால் கூட தப்பில்லைன்னு மனசு தப்புத் தாளம் போட வச்சுட்டானுக படுபாவிக.நிகழாததை இப்படியாகியிருந்தால் நல்லாயிருக்குமே என நினைப்பதில் அர்த்தம் இல்லை.நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று.இத்தனை அவலங்கள்,இழப்புக்களுக்கும் அப்பாலும் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராயுங்கள்
முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.
21 comments:
/*
முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.
*/
இதற்காகவாவது பேச்சு வார்த்தை நடைபெறவேண்டும்
//இதற்காகவாவது பேச்சு வார்த்தை நடைபெறவேண்டும்//
வாங்க நசரேயன்!உங்களுக்கோ ஆஸ்கார் கோபம்.எனக்கோ துக்கம்.
ரொம்ப நல்ல தேவையான ஒரு வேண்டுகோள்!
புரிந்துகொள்வார்களா வேண்டப் படுபவர்கள்?
முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.
//
ஆமாங்க சில நாட்களாக சரியான தூக்கம் இல்லை.உலகமே யாராவது இவர்களை காப்பாற்றுங்கள்.
குகு
//ரொம்ப நல்ல தேவையான ஒரு வேண்டுகோள்!
புரிந்துகொள்வார்களா வேண்டப் படுபவர்கள்?//
வருண்!இழப்பதற்கு இன்னும் ஒன்றுமில்லை.இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும்.
//ஆமாங்க சில நாட்களாக சரியான தூக்கம் இல்லை.உலகமே யாராவது இவர்களை காப்பாற்றுங்கள்.
குகு//
நல்ல இதயங்களுக்கு இந்த மாதிரிதானுங்க உணர்வுகள்.இன்னும் சிலதுகள் உலவுதே:(
//குகு//
துக்க வீட்லயும் சிரிக்க வைக்கிறீங்க.வருங்கால முதல்வராவது தப்பேயில்லை.(திண்ணை காலியாகும் போலதான் தெரியுது.)அதுக்குன்னு அதென்ன முக மாதிரி குகு?
**** நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று ****
நிச்சயமாக ஒத்துப்போகிறேன். அந்த வைத்தியசாலைய பார்க்கும் பொழுது நிச்சமாக அழுகை தான் வருகிறது.
**** நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று ****
நிச்சயமாக ஒத்துப்போகிறேன். அந்த வைத்தியசாலைய பார்க்கும் பொழுது நிச்சமாக அழுகை தான் வருகிறது.
//நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று ****
நிச்சயமாக ஒத்துப்போகிறேன். அந்த வைத்தியசாலைய பார்க்கும் பொழுது நிச்சமாக அழுகை தான் வருகிறது.//
வாங்க மணிகண்டன்.எனது பதிவுக்கு புதுவருகை தந்தமைக்கு நன்றி.இந்தப் பிரச்சினை தீர்க்க இயலும் அத்தனை பேரும் கல்லுளி மங்கன்களா இருக்கானுக.நாம் அழுதுதான் ஆற்றாமையைக் கொட்டிக் கொள்ள வேண்டியிருக்குது.
இல்லை. கருணாநிதி வாய்க்கு வந்தபடி திட்டுங்க. பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்
Very good post!!!
-Kabheesh
//இல்லை. கருணாநிதி வாய்க்கு வந்தபடி திட்டுங்க. பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்//
அனானி!கலைஞரை ஏன் அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.MP பதவி விலகல் பூச்சாண்டியிலிருந்து அவரது அரசியல் மெல்லப் புரிகிறது.உண்மையான மனசுத்தியுடன் அவர் காய் நகர்த்தியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே இதனை திசை திருப்பியிருக்க முடியும்.இனி அவரை திட்டினாலும் திட்டாவிட்டாலும் பிரச்சினை முடிவுக்கு வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.எரிக்சோகல் களம் இறங்கியிருக்கிறார்.ஏதாவது நல்லது நடக்குமா எனப் பார்க்கலாம்.
காப்பாற்றுங்கள்!!!
//காப்பாற்றுங்கள்!!!//
பழமை!இதை எரிக்சோகல் கிட்ட சொல்லுங்கள்.காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் கொஞ்சமாவது உண்டு.
Please don't DEGRADE ltte by asking them to go for negotiation..all the time they went for negotiation they got shaft at "not so mentionable" places....
//Please don't DEGRADE ltte by asking them to go for negotiation..all the time they went for negotiation they got shaft at "not so mentionable" places....//
The present is not all the time scene.Hope I make a convincing point.
//யாரைய்யா சொன்னது?//
கலைஞர் சொன்னது என்று சொல்லக்கூட யாருக்கும் மனமில்லையா?.
பாதிக்கப்படும் அப்பாவிகளை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது.
ஒண்ணும் சொல்வதற்க்கில்லை
////யாரைய்யா சொன்னது?//
கலைஞர் சொன்னது என்று சொல்லக்கூட யாருக்கும் மனமில்லையா?.//
வாங்க சாலிசம்பர்!உண்மையில் யார் சொன்னதென்று எனக்கு நினைவில்லைங்க.வாசகம் மட்டுமே நினைவிருக்கிறது.கலைஞரின் வசனம் என்று நினைவு படுத்தியதற்கு நன்றி.
//பாதிக்கப்படும் அப்பாவிகளை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது.
ஒண்ணும் சொல்வதற்க்கில்லை//
வாங்க கிரி.ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம இப்ப கடற்கரைப் பக்கமெல்லாம் சுற்றிவிட்டு வருகிறேன்.
பெருமூச்சுதான் வருகிறது.
Post a Comment