Followers

Friday, December 14, 2007

மலர்கள் டிசம்பர் மாத போட்டிக்கு

வேலைப் பளுவின் காரணமாக இந்த முறை கடைசி பெஞ்சில் வந்து ஒட்டிக் கொள்ள வேண்டிய சூழல்.இடையில் குறுகிய இடைவெளியில் இதுவரை வந்த போட்டி படங்களுக்கு பின்னூட்டம் போட மட்டும் கால அவகாசம்.
இந்த சூழலில் நாட்டாமைகள் தரும் பட நுட்பங்கள் மற்றும் உதவிகள் இந்தக் கலையில் மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது.காஷியன் பிளர் என்னன்னு பார்க்கும் முன் மேக்ரோவின் பதிவு.அட நமக்கு கொஞ்சம் தெரிந்த பாடம்தானேன்னு எலிக்குட்டிய அந்தப் பாடத்துக்கு ஓட்டும் போதே ஹெச்.டி.ஆர் ன்னு நமக்கு தெரியாத பாடங்கள்.பாடங்கள் சுவாராசிய்மாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தப் பாடங்களை படித்து வாருங்கள் சொல்லி வீட்டுவேலை தரும் போது அதனைப் பரிட்சித்து பார்க்க அவகாசம் கிடைப்பதில்லை.இருந்தாலும் இனிமேலும் நாட்டாமைகளுக்கு நல்ல பிள்ளையாக எல்லா வகுப்புக்கும் விடாமல் வருகிறேன்.இப்போதைக்கு இந்தப் பரிட்சை முடிந்ததும் ஹெச்.டி.ஆர் பாடம்தான்.

இனி மெல்லிய முகச்சாயங்களுடன் படங்கள் பார்வைக்கு.படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.மற்றவை பார்வைக்கு மட்டும்.

பட வரிசை தலைகீழாக 5லிருந்து துவக்கம்.இது தரவிறக்கம் செய்யும் போது எண் வரிசை தலைகீழாகப் போனது.எனவே நாட்டாமைகள் அதுக்கு மட்டும் கொஞ்சம் மார்க் குறைச்சுகிட்டு பாஸ் மார்க் போட்டு புதுவருச புது வகுப்புக்கு அனுப்பவும்.

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
5படம் ஐந்து பார்வைக்கு


4


படம் நான்கு பார்வைக்கு

3

படம் மூன்று- பார்வைக்கு.


2

1படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.ஆசிரியர் குழு,பின்னூட்ட வீரர்கள் மற்றும் சுவையாக பதிவுகளிடும் அனைவருக்கும் எனது நன்றி. கூடவே இந்தப் பதிவினை தமிழ்மணத்துக்கு அனுப்பும் போது அங்கே ஒட்டிக் கொள்ளாமல் வம்பு செய்கிறது.யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்.

Saturday, November 10, 2007

நவம்பர் மாத புகைப்பட போட்டிக்கு

நவம்பர் மாத அறிவிப்பு சாலைகள் என்று வந்தவுடன் அட!தெரு முழுவதும்தான் பாதைகளா கிடக்குதே....சும்மா அசத்திரலாம் என்று அன்றாடப் பணிகளை பார்த்துக் கொண்டும் வரும் போட்டி படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கும் போதுதான் போட்டி படங்களின் நம்ம ஊர் பசுமைகளின் வனப்பிலும்,வாத்து நடையிலும்,ஒட்டகத்தின் உயரத்திலும்,தொழில் நுணக்கங்களிலும் வந்த பயத்தில் சரி நாம இரவு நேரத்து இருக்கும் வெளிச்சத்தில் ஏதாவது முயற்சி செய்யலாம் என்று கிளிக்கியதில் ஏதோ இரண்டு படம் சுமாராக இருந்த மாதிரி தோன்றியது.நாட்கள் இருக்கின்றதே என்று கால தாமதப் படுத்தியதன் பயன் CVR அவர்கள் அழகாக பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க என்று கூப்பிட்ட பதிவு மூலம் மேலும் சில நுணக்கங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.விளைவு எடு பெட்டியை என்று இருட்டில் இருந்து வெளிச்தத்துக்கு வந்த இரண்டு படங்கள் பின் தயாரிப்பின் கற்றலோடு போட்டிக்கு.

கொசுரு:வெளிச்சத்தில் எடுத்த படங்கள் Pentax K10D காமிராவுடன் 18mm - 55mm லென்ஸ்.

இரவில் எடுத்தது அதே காமிரா ம்ற்றும் Tamron 70 - 300mm.

இருக்கும் பட்டன்களை பரிட்சிக்காமல் பச்சைக் கோட்டில் வைத்து ஒரே அமுக்கு. 3 மற்றும் 4 போட்டிக்கான படங்களும் நாட்டாமைகளின் பார்வைக்கும் காலை வெளிச்சத்தில் எடுத்தவை.இரவு நேரத்து கார்களின் வெளிச்சத்தில் எடுத்தவைகள் 1 மற்றும் 2 சும்மா போனஸ் பார்வைக்கு.
வணக்கம் அனைவருக்கும்.மீண்டும் காண்போம்.

Monday, November 5, 2007

சுப.தமிழ்செல்வனுக்கு இரங்கல்

சக தமிழன் என்ற உணர்வில் எனது துக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.இலங்கைப் பிரச்னையில் விடியலுக்காக செல்லும் பாதை இன்னும் கரடு முரடாகவே உள்ளது.முடிச்சுக்கள் மேலும் மேலும்.இதன் சிக்கல்கள் தீரும் நாள் என்றோ?

Saturday, October 27, 2007

போட்டோ கலவை
எல்லோரும் சிஎஸ்3 என்கிறார்களே அது என்ன என்று பார்த்ததின் துவக்கம் இது.போக வேண்டிய தூரம் அதிகமாகவே இருந்தாலும் புதிய முயற்சி மனதுக்கு மகிழ்ச்சியே தருகிறது.இது இரண்டு படங்களின் கலவை.படம் அமுக்கி வெட்டலும் ஒட்டலுமானவை.நண்பர் சதா (வலைப்பக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்)விற்கு எடுத்தவைகளின் பிரதிகள் இவை.அவர் பணி செய்யுமிடத்தில் இருந்த முந்தைய வியாபாரப் படங்கள் வெறும் சிவப்பு பின்புலத்தில்(உபயம் கோகோகோலா) உண்வுப் படங்களைக் கொண்டது.சரி நாம் புதிய பின்புலம் அமைப்போமே என்று நினைத்ததின் விளைவு இந்த படங்கள்.

Tuesday, October 23, 2007

வெட்கப்படும் சூரியன்


மீண்டும் ஒரு காமிரா கண்.நம்மவர்களுக்கு இந்த மாதிரிப் படங்களெல்லாம் பால பாடம்தான்.காரணம் எண்ணிக்கையில்லா திரைப்பட ஒளி வல்லுனர்கள் நமக்கு கணக்கிலடங்கா செல்லுலாய்ட் கவிதைகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.அதையெல்லாம் கண்ணிலே ஒற்றியெடுத்த நகல் மட்டுமே இது.

Sunday, October 7, 2007

அன்னாசியும் ஆகாரமும் போட்டியிலபோட்டி எப்படி போகுதுன்னு பார்த்திட்டு மெல்ல களத்தில இறங்கலாமுன்னு பார்த்தேன்.சரி நம்மெல்லாம் இவங்க பேட்டைக்கு புதுசுதானே.நமக்கு போட்டில கலந்துக்குறதே பரிசு வாங்குனது போலதான்னு மனசுல நினைச்சுகிட்டு நம்ம அன்ன தேவதைகள் வர்ராங்க!வர்ராங்க.எல்லோரும் ஜோரா ஒரு முறை பின்னுட்டமிடுங்கள் பார்க்கலாம்.

Saturday, September 29, 2007

போட்டா போட்டிஇயற்கையின் சக்திக்கும் மனித சக்திக்கும் நடக்கும் போட்டா போட்டி.மாலை சூரியன் விளக்கணைக்கும் நேரம்.மனித திறனின் புகை கக்கலால் வானமும் காற்றும் மாசுப் படத்தான் செய்கிறது.ஆனால் இந்த புகை மூட்டமில்லாமல் ஒரு தேசத்திற்கு தற்காலிக வெளிச்சமில்லை அடுத்த நாள் சூரிய உதயம் வரை.இங்கு ஒளியும் வேண்டும்.காற்றும் மாசு படக்கூடாது.இதன் விடை தெரியும் வரை இந்த போட்டா போட்டி தொடரும்.

Sunday, September 2, 2007

எழுத்து என்ற ஆயுதம்

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே ! அட! நமக்கும் கூட தமிழ்ப் பட பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறதே.எல்லோரும் அசத்திக் கொண்டும் கூடவே அடித்துக் கொண்டும் வலை பதியும் போது எத்தனை அருமையான தகவல் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதனை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது.நான் நடுவிலே பதிவுலக்கு வந்தவன் என்பதால் மூல காரிய தேடுதல் தெரியவில்லை.தற்போது இது மட்டுமே.அன்றாட அலுவல்கள் அழைக்கின்றது.

Friday, August 24, 2007

இந்திய அணு ஆயுத உடன்படிக்கை

இந்திய அணு ஆயுத உடன்படிக்கை பற்றி நானும் என் நண்பர் சதாவும் பேசிக் கொண்டிருந்தோம்.நட்பு என்பது ஒருமித்த கருத்துக்களையும் எதிர் திசை நோக்கல்களும் கொண்டவை என்பதை புரிந்து கொண்ட சம மன அலைகளைக் கொண்டவர்கள் நாங்கள்.பேசும் தலைப்புகளைப் பொருத்தே பேச்சின் விமர்சனங்கள் அமையும்.இந்திய அமெரிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் விவாதிக்கவும் எதிர்க்கவும் போதிய அவகாசங்கள் இருந்தும் அப்போது இல்லாத எதிர்க்குரல்கள் இப்பொழுது தோன்ற ஆரம்பித்துள்ளது.கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளத் தோழர்களின் உரிமைக் குரல்களின் வேர்கள் என்பதிலும் அதில் அவர்கள் வித்துனர்கள் என்பதனையும் சமுதாயத்தில் நிருபித்துள்ளார்கள்.ஆனால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்களை தேர்ந்த வல்லுனர்களா என்பது சந்தேகமே.எதிர்க் கருத்துக்களும் நாட்டின் முக்கிய எதிர்கால விசயங்களில் துணை புரியுமென்ற போதிலும் இட்லி வடையாரின் பக்கங்களில் காணப்பட்ட திரு.சோ அவர்களின் கண்ணோட்டம் குறிப்பிடத் தக்கதாகும்.

‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்-புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்--றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திரா -காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்-காலத்தில் நாம் நடத்திய சோதனை-களே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டி-யுள்ளன.அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து!அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’

நன்றி: இட்லி வடை.

Sunday, July 8, 2007

தமிழ் வலையுலக முன்னோடிகளுக்கு

தமிழ் வலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் குறிப்பாக திரு.காசி அவர்களுக்கும் என்னை தமிழ்மணம் பக்கம் இழுத்துவந்த பாலாஜி அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.தமிழ் எழுத்துக்களின் சுகத்தோடும் கூடவே ஒரு சில பின்னூட்ட கசப்பு கலாசாரங்கள் மாறும் என்ற நம்பிக்கையிலும் நானும் வலை பின்ன வந்துள்ளேன்.புதிய ஏழு உலக அதிசயத்தில் தாஜ்மகாலின் வாக்களிப்பில் எனது ஒரு ஓட்டு விழுக்காடும் சேர்ந்துள்ளது.தமிழ்மணத்திற்கும் என்னுடைய ஓட்டு.மீண்டும் காண்போம்.

Thursday, July 5, 2007

சொல்லத்தான் நினைக்கிறேன்

எழுதுவது கூட ஒரு வித மன ஒருமுகப் படுத்தல் தானோ.ஒரு வாசிப்பாளருக்கு இருக்கும் படிக்கும் ஆர்வத்தின் திறனுடன் இந்த மன ஒரு நிலைப் படுத்தலும் கூட ஒருமித்து சுருதி லயம் சேரும் பட்சத்தில் மாத்திரமே ஒரு வாசகரை தன்னோடு கட்டிப் போட முடியும் என்பது இந்த வரிகளை எழுதும் இந்த நிமிடத்தில் உணர முடிகிறது.

சிந்திக்கிறது என்பது ஏதோ மூச்சு விடற மாதிரி அநிச்சை செயலாக இருக்க எழுத்து வண்ணம் கூட்டுவது என்பது சித்திரம் வரைவது மாதிரி என்பது இத்தனை கணம் வரை தெரியவில்லை.பழம் தின்று ருசி கண்டவர்களுடன் போட்டி போட இயலாவிடினும் தமிழ் தட்டும் இசை மனதுக்கு இதமாகவே இருக்கிறது.

இங்கே கற்றுக்கொள்ள எண்ணிக்கையில் அடங்கா வினாக் கேள்விகள் இருக்க கற்றுக்கொள்ளவும் கற்றதை இயலா நிலை கொண்டுள்ள பிந்தைய சந்ததிக்கும் விட்டுச் செல்லலாமே.கனியிருக்க அதுவும் தரம் தெரிவு செய்ய எண்ணற்றவை உள்ளபோது காய்தேடி நடைபோடல் முறையோ.இந்தப் பக்கம் வருவதே தகுதிச் சான்றிதல் தந்தமாதிரி.இதில் என்ன கண்ணைச் சுட்டும் தலைப்புக்கள்.எழுதுவதை அடையாள அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் எம் மீது கல்லெரியப்படுவதை யாரும் விரும்பவில்லை.எனவே எழுத்துக்களின் தரங்களையும் காக்க வேண்டியப் பொருப்பு எமக்குண்டு.

மேற் சொன்னவை அனைத்தும் எனக்கு நானே எழுத்துக்களம் புகுமுன் சொல்லிக்கொள்ளும் வரிப் படலங்கள்.