இந்த பதிவின் தலைப்பை 2009ம் வாக்கில் எழுதியிருக்க வேண்டும்.எழுதும் நேரமும்,வாசிப்பின் காலமும் இன்னும் சொல்லபோனால் ஒரு நேரப் பசியையாவது காசாக எழுத்தால் பார்க்கும் தமிழ் இலக்கியவாதிகள் என்று அக்மார்க் ஒட்டிக்கொண்ட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முள்ளி வாய்க்கால் கால கட்டத்தில் மூடிக்கொண்டே இருந்தார்கள்.
சரி அதுதான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு விவகாரம்...வழியில் எவனோ படுத்துக் கிடந்தாலோ,இருவர் சண்டையிட்டுக்கொண்டாலோ வேடிக்கை பார்க்கும் சென்னை கலாச்சாரத்தில் ஊறிய பழக்க தோசம் என்றாலும் தன் வீட்டுக்கும்,தான் நடக்கும்,பிரயாணம் செய்யும் ரோட்டில் அடை மழை அடித்து துவைத்து விட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு எழுத்தாளர் ருமாலி ரொட்டி எப்படி செய்வது என்று பாடம் எடுக்கிறார்.
ருமாலி ரொட்டி என்பது தட்டையான ருமாலியை இரு கைகளிலும் பரப்பி தலைக்கு மேல் விசிறி ருமாலி கவிழ்த்துப் போட்ட வடச்சட்டி மேல் வந்து உட்காரும்ங்கிற தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது?
எதிர் கோஷ்டியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் புர எழுத்தாளரோ தமிழ் ஹிந்துவில் கண்ட பயணிகள் ஊர்தியின் படம் போட்டு புலம்பிக்கொண்டுள்ளார்.தன்னைச் சுற்றிய நிகழ்வுகள் கூட பாதிக்காமல் என்ன எழுத்தோ கட்டுரையோ! தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கே சென்னை வெள்ளம் மனம் பகீர் என்கிறது.
ஒரு புறம் சகிப்புத்தன்மை விவாதம் பாரளுமன்றத்தில் நிகழ்ந்தாலும் சிரமங்களுக்கு இடையிலும் வாழும் சென்னை வாழ் மக்கள் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் அடையாளம்.
பெயர் சொல்லிக்கொள்ளூம் படியான டாட்டா,அம்பானி,மிட்டல்களின் இந்திய பொருளாதார மேம்பாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிக்காப்பவர்கள் கையேந்தி பவன் துவங்கி,உணவு விடுதிகள்,சிறு தொழில்கள்,மிதமான பணக்காரர்கள்,பணத்தோடு கொஞ்சம் மனித நேயத்தையும் அன்பளிப்பவர்கள் என்பவர்களின் சராசரியில் இந்திய பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.
பிளாஸ்டிக் போடுற, அதனால்தான் மழை வந்து உன்னை அடிச்சுப்போட்டுச்சுன்னு எதிர் லாஜிக் கருத்துக்கள் தென்படுகின்றன. பிளாஸ்டிக் போட்ட, அடைச்சு வீடு கட்டிகிட்ட இதெல்லாம் பிளாஸ்டிக் போட்டவன்,வீடு கட்டிகிட்டவன் குத்தமா? காசுன்னா எதுவுமே தப்பில்லைங்கிற இந்திரா காந்தி காலம் தொட்டு இப்ப ஜெயலலிதா ஆட்சி வரைன்னு தொடரும் சுய மரியாதையின்மை அது.ஆக்டோபஸ்களாக விஸ்வரூபமாய் எங்கும் பரவியிருக்கிறது.
எனது அப்பாவித்தனத்தால் இந்தியன் படம் வரும் போது அரசாங்க பணியாளர்கள் ஒரு சிலராவது திருந்தி விடுவார்கள் என நினைத்தேன். நற்குணங்கள் ஜீனில் உருவாகுவதோடு வாழ்க்கையின் அனுபவங்களோடு, சூழல்களோடு சார்ந்தது என மெல்ல இப்பொழுது புரிகிறது.
ஒரு உணவு நிறுவனத்தில் முன்பு பணியாற்றும் போது 150கிலோ எறா மீன் தேவைப்படும்ங்கிற கணக்கில் நீ 350 கிலோவுக்கு கணக்கு போடுன்னு அரபிக்காரனும்,எகிப்தியனும் சொன்ன கூட்டுக்களவானித்தனத்துக்கு நான் உடன்படாததால் என் வேலை போனது.பொழக்கத் தெரியாதவன் என்ற கிண்டல் அவர்களிடமிருந்து அப்பொழுது வந்தாலும் இப்பொழுது நினைப்பதற்கு மனம் நிறைவாகவே இருக்கிறது.
பொருளாதாரம்,உற்பத்தி,தொழில் என உலக மொத்த சூட்டுக்கு முக்கிய காரணிகளாக இப்பொழுது அமெரிக்கா முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும்,மூன்றால் நிலையில் இந்தியாவும் என திங்கட்கிழமை பஞ்சாயத்து பேசின உலக தலைவர்கள் ஒபாமா உட்பட புலம்பியிருக்கிறார்கள்.
இந்திய வாழ்க்கை முறை சுகாதார முன்னுரிமைமையற்றது என்ற போதிலும்,மலை,மேகங்கள்,மரங்கள்,செடி கொடிகள்,ஏரி,குளம்,ஆறு,கடல் என இயற்கையின் நன்கொடையோடு வாழும் நமக்கு வானிலை அறிக்கை ரமணன் சொல்லாமல் போனாலும் நமக்கு பூகோள புவிச்சூட்டில் அடை மழை வரும்.50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கொண்டு வரும்.
அங்குமிங்கும் மனித நேயங்கள் சில அவ்வபோது வெளிப்படத்தான் செய்கின்றது. ஹேப்பி கிறுஸ்மஸ் சொல்லும் நடுராத்திரி 12 மணிக்கு நான் எனது சகோதரியின் மகனோடு ஆட்டோவில் சென்னையில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெரிய லாரி பாரம் சுமந்து கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. லாரிக்கும், ஆட்டோவுக்கு மிடையில் மோட்டர் பைக்கில் பயணித்த ஒருவர் திடீரென லாரிக்குள் சறுக்கி விட்டார்.
தங்கை பையனோடு பேசிக்கொண்டிருந்த நான் கவனிக்கவில்லை.ஆனால் தங்கை பையன் ஆட்டோக்காரரை திடிரென பிரேக் போட வைத்து மோட்டார் பைக் காரரை நோக்கி ஓடி சக்கரத்துக்கு வெளியே இழுத்து விட்டான்.பார்த்தால் மோட்டார் பைக்காரர் மப்பு. உதவும் இந்த பழக்க தோசத்தில் இன்னொரு முறை விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை காப்பாற்றினான்.இப்பொழுதும் அவர்கள் நட்பு தொடர்கிறது.
பிரதி உபகாரம் நோக்காமல் சென்னை மழையில் யாராவது யாருக்காவது உதவும் முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இருக்கலாம்.உங்கள் நல்ல மனித நேய உள்ளங்களுக்கும் உதவும் கரங்களுக்கும் ,சென்னை மழையின் அவதிக்கு அக்கறையோடு கருத்து வெளிப்படுத்தும் பதிவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
12 comments:
முள்ளிவாய்க்கால் படுகொலையை இலக்கியவாதிகள் கண்டுகொள்ளவில்லை என இப்போது குத்தவைச்சுகிட்டு விசனப்படுகிறீர். அப்புறம் அப்படியே முன்னோக்கி தற்காலத்து வந்து சென்னை வெள்ளம் பற்றி புலம்புறீர். ஆனா தூத்துக்குடி, கடலூரிலும் வெள்ளம் ஓடுகிறதாம்... ஆனா ஒருத்தனும் கண்டுக்கறதில்லை, நீரும் கண்டுக்கல. . அப்புறம் எல்லா உதவியும் சென்னைக்குதான் போகுது. சென்னை மட்டும் என்ன பெரிய வெண்ணையா? இலக்கியவாதிகள் மட்டுமல்ல எல்லோரும் வாழ்வை ஒருவகையில் பிரதிபலிக்கிறோம்... ஆனால் நம்மை பாதிக்கும் வாழ்வினை மட்டும்!
//தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது? //
அது கட்டுரையில்லை கதை! அதான் கொட்டை எழுத்துல தலைப்புக்கு பக்கத்தாலேயே அது சிறுகதைன்னு எழுதியிருக்கே படிக்கலையா? அதை விட்டுபுட்டு ருமாலி ரொட்டி தட்டுவது எப்படின்னு தேடிப்போய் படிச்சிருக்கீர்! நம்ம எலக்கியவாதிகள் விவரமானவா, "அந்த கேரக்டருக்கு ருமாலி ரொட்டி தட்டுவது பத்தி தெரியால, ஆனா ருமாலி ரொட்டிக்கு அலையுது"ன்னு போயிண்டேயிருப்பா!
நந்தவனத்தான் கருத்தோட வம்பு வளர்த்தலாம்:)எனக்கு அரசல் புரசலாக செய்திகள் கிட்டினாலும் முக்கியமாக இணைய தள நண்பர்கள்தான் செய்தி வாசிப்பாளர்கள்.எல்லோரும் சென்னையில்தான் மழை என்று படத்தோட பிலிம் காட்டுவதால் சென்னை வட்டாரத்தில் மட்டும்தான் மழையென்று நினைத்தேன்.நீங்க சொல்லித்தான் தூத்துக்குடியெல்லாம் மழையென்ற தகவலே எனக்கு தெரியும்.
நம் வாழ்வை மட்டும் பாதிப்பதை பிரதிபலிக்கிறோம் என்பது எனது பார்வையில் தவறாக நினைக்கின்றேன். இப்ப உலகம் ரொம்ப சிறுசாகி விட்டது.எங்கே எது நடந்தாலும் மகிழ்வையும் துயரத்தையும் சேர்ந்தே கொண்டு வருகிறது.ஆனால் தமிழ் மொழி சார்ந்து நம்மை சுற்றி நடப்பவை கொஞ்சம் அதிகம் பாதிக்கலாம்.அவ்வளவே.
உங்கள் பார்வையில் நோக்கினாலும் இந்தியாவின் மொத்த மாநிலங்களில் காஷ்மீருக்கு அதிக சலுகைங்கிற மாதிரி தமிழகத்தின் மொத்த வளங்களில் அனைத்து மாவட்டங்களில் பங்கை சென்னை அபகரித்துக் கொள்கிறது.நானே கோவையில் வேலை கிடைக்காமல் மெட்ராஸ்ல வேலை தேடிப்போய் மேலும் படிக்க வாய்ப்பு கிடைத்து பின் ஊர் சுற்றியாகி விட்டேன்.இதோ இப்பொழுது வாழும் வாழ்க்கை கூட மெட்ராஸ் போட்ட அனுபவ புத்தி பிச்சைதான்:)
ருமாலி ரொட்டியை எங்கே போய் வாங்கினீர்கள்? நான் சாரு ருமாலியை சொல்கிறேன். ஐந்து நட்சத்திர ஹொட்டலில் பப்புக்கு மட்டும் போனா பத்தாது. ரெண்டு ரவுண்டு போட்டாலும் மப்பை ருசிக்க வைப்பது உணவுதான். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நீச்சல் குள புபே,பார்ப க்யூ,இந்த ருமாலி ரொட்டியை ஆகாயத்தில் வீசி உங்க ஊருக்கார ஆட்களையெல்லாம் ஆ ன்னு அசத்துவது பெரிய கலை. இதில் அனேகமாக உ.பி காரர்கள் ரொம்ப பிரசித்தம் என நினைக்கிறேன்.
ருமாலி ரொட்டி மாதிரி கல்கத்தாவில் உங்க ஊரு பண்ணு ரொட்டி KFC மாதிரி ஒரு சப்பாத்தியில் தந்தூரி கோழியை வைத்து சுருட்டிய சாண்ட்விச் மற்றும் இனிப்பு தயிர் ரொம்ப பிரபலம்.இப்ப எப்படின்னு தெரியல.
சரி! தமிழகம் தண்ணீரில் மூழ்கியதுக்கு வருகிறேன். இப்பத்தான் போன் செய்து விசாரித்தேன். கோவை பகுதி தவிர எங்கும் பரவலாக மழையென்றும்,அதிக பாதிப்பு சென்னைக்குத்தான் என்றும் அறிந்தேன்.வீடுகளுக்குள்ளேயே 5 அடி வரை தண்ணீர் நிற்பதால் மாடி வீடு கட்டியவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் அழைத்துக்கொண்டு பழைய கூட்டுக்குடும்பம் நடத்துவதாக அறிந்தேன்.
நந்தவனத்தான்! பல்லு இருந்தும் பக்கோடா சாப்பிட முடியாதபடி குவைத் வாகன நெருசலில் 10 -15 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு மணி நேரம் ஆமை வேகத்தில் நகரும் அவஸ்தையில் வீட்டில் எல்லாம் இருந்தும் காலை உணவு பெரும்பாலும் வீட்டில் அம்பேல். உங்களுக்கு பின்னூட்டம் போட்டு விட்டு ஒரு மசாலா தோசை சாப்பிடலாம்ன்னு ஓட்டலுக்கு போனா இரண்டு தமிழ் குரல்கள் செனையில் நல்ல மழையாமே என்றுதான் தகவல் பரிமாறிக் கொள்கிறார்கள்.எனவே சென்னைக்கு மட்டும் அக்கறை என்று என் மீது பழி போட வேண்டாம்.இது கலிபோர்னியா,நியுயார்க்கை தாண்டி வாஷிங்டன் முந்திக் கொள்வது போல் தமிழக தலைநகரம் என்பதால் சென்னை பெயர் முந்திக்கொள்கிறது.
சலிப்பு வந்துவிட்டது போல இலக்கியவாதிகளுக்கு யாதார்த்தம் பற்றி எழுத!
உலகம் சிறுசாகிவிட்டதுதான், ஆனால் எல்லா செய்தியையும் படிக்கிறோமா? படிப்பதில் எல்லாமும் நம்மை பாதிக்கிறதா என்ன? நம்மை பாதிக்காத செய்திக்கு வெறும் என்டர்டெயின்மென்ட் வேல்யூதானே? என்னவோ போங்கள்.
நானும் சாரு ரொட்டியைப் பற்றிதான் எழுதினேன். அவருதான் அதை சிறுகதை என தலைப்பிலேயே எழுதியுள்ளார்.அதுவும் நீங்கள் எழுதிய பின்புதான் போய் படித்தேன்.
சென்னையில் மீடியாவும் அதிக இன்டர்நெட் உபயோகிப்பாளர்களும் இருப்பதினால்தான் சென்னை (வழக்கம்போல்) அதிக ஃபோக்கஸாகிறது. மேலும் சென்னையில் மக்கள் செறிவு அதிகம் என்பதினால் அங்கு பாதிப்பு அதிகமாயிருக்கும்தான். சில இடங்களில் மேல்மாடிக்கே தண்ணீர் வந்துவிட்டதாம். அடையாறு ஓடும் வழியை அடைத்து ஏர்ப்போர்டின் 2-ம் ஓடுபாதை இருக்கிறாம். இதனாலேயே ஏர்போர்ட் வெள்ளகாடானதாம். நானும் சென்னையில் சில வருடம் குப்பை கொட்டியிருக்கிறேன் என்ற விதத்தில் சென்னையுடன் உறவு எனக்கும் உண்டுதான். அங்கு நான் பார்க்காத மனிதநேயம் இப்போது வெளியாவதில் மகிழ்ச்சி. நாய்களைக்கூட விடாமல் காப்பாற்றுகிறார்கள். மசூதி, கோவில், சர்ச், பல ஆபீஸ்கள், கல்விக்கூடம் என எல்லாமும் திறந்துவிடப்பட்டுள்ளதாம். ஆனால் தமிழச்சி, நம்பிள்கி போன்றவர்கள் இதைவைத்து பொய்தகவல் போட்டு பிரச்சார அரசியல் செய்வது கேவலமானது. இதை சுட்டிக்காட்டி பின்னூட்டம் போட்டால் நம்பிள்கி நான் அரசியல் செய்கிறேன் என்கிறார். மேற்குலகில் உள்ள இவர்களது வீட்டுப்பக்கத்திலெல்லாம் ஒரு வகாபி மசூதி வர வாழ்த்துக்கள்.
மற்ற ஊர்களில் நிவாரணப்பணிகளில் கடும் சுணக்கம் என்பதுதான் வருத்தம். இதே ஒருவர் பேஸ்புக்கில் தென்மாவட்ட சென்னைக்காரர்களை பற்றி புலம்புவதை படியும்...https://www.facebook.com/K.Thirumani/posts/1211048045578823
சகோ நந்தவனத்தான் நியாயத்தின் குரலாக எங்கும் ஒலித்து கொண்டுயிருங்கீங்க. வாழ்த்துக்கள்.
மேற்குலகில் வகாபி மசூதி வராதபடி அந்த நாட்டு அரசுகள் கவனமா பார்த்துக் கொள்ளும். திராவிடர்கள் அச்சம் இல்லாம மேற்குலகில் வாழலாம்.
தனிமரம்!நலமாய் இருக்கிறீர்களா?
ருமாலி ரொட்டிக்கு மாவு பிசைவதில் கூட வந்து ஒட்டிக்கொள்ளும் கலவியல் உளவியல் தொடர்ந்து மூளை நாளங்களில் ஒட்டிக்கொண்டு ரசனையாக வரும்போது அடுத்தவன் துயரத்தில் ஒரு வார்த்தை சொல்வோமே என்பது வருவதேயில்லை.இதில் சலிப்பு எங்கேயிருந்து வரும்?
எஸ்.ரா பிதாமகனுக்கு வசனம் எழுதும் போது ராஜபக்சே பற்றி குறிப்பிடும்போது இரண்டாம் காந்தி என்று நக்கலடித்த ஒரு வரி கூட இவர்கள் உதடுகளில்,எழுத்துக்களில் வருவதுமில்லை.
நந்தவனத்தான்@பதிவுகள் போடுவதில்லை தவிர ந்ம்ம ஊர் தகவல்களுக்காக விகடன்,நக்கீரன்,புதிய தலைமுறை,தந்தியும் உலக செய்திகளுக்கு பி.பி.சி,சி.என்.என் பிரேக் செய்திகளையும் மாற்றுக் கருத்துக்காக ஈரான் நிகழ்த்தும் பிரஸ் தொலைக்காட்சி,சிரிய செய்திகளுக்காக லைவ்லீக்,அழகா உதடு வைத்துக் கொண்டு சிரியன் கேள் ஐ.எஸ் அமெரிக்க தொடர்பு மாற்றுக்கருத்துக்களை கொஞ்சம் மேய்ந்து கொண்டிருந்தேன். வேலைப்பளுவில் இப்பொழுது இயலவில்லை.
நான் ருமாலி ரொட்டி கருத்துதான் பார்த்தேன்.எந்த வகை,தொகையென்று கூட கவனித்துள்ளீர்களே!.சிறுகதை என சாரு தப்பித்துக்கொள்ளலாம்:)
சென்னையில் அதிக மீடியாக்கள் இருப்பது உண்மையென்பதால்தான் புதிய தலைமுறை இந்திய ராணுவ விமானத்தில் பயணம் செய்து களநிலவரங்களை சொல்லியது. சைலேந்திர பாபு தனது குழுவுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதை விகடன் பதிவு செய்தது.
நாய்கள்,பசுமாடு,கன்று என முடிந்தளவுக்கு மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் பரந்து காணப்படும் சென்னையின் உட்பகுதிகளுக்கெல்லாம் எந்த உதவியும் போய் சேரவில்லை என குரல்கள் எழுகின்றன. மாடி வீடு கட்டி மேல் தளம் வசதியுள்ளவர்களுக்கு உணவு வீசுவதை புதிய தலைமுறை காணொளியில் கண்டேன்.வீட்டை விட்டு வெளியேறுவதற்கான சூழலும் இல்லை.அதனால் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்,உணவு,நீர் உதவி செய்ய வேண்டியே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பு என தந்தி சொல்கிறது.
நீங்க எந்த தமிழச்சியை சொல்கிறீர்கள்? தமிழச்சியெல்லாம் [பதிவாட்டத்தை காலி செய்து வருடங்கள் ஆகிறதே! சேட்டு நம்பள்கி எதை எப்பொழுது சொல்வது என்ற விவஸ்தையில்லாமல் கூட பதிவரசியல் செய்கிறார்.ஜாடை மாடை பதிவுகள் யாரைப்பற்றி சொல்கிறார் என்பது கூட தெரியாமல் குழப்புகிறார்.
எனக்கு வகாபி ஆட்டம் புரியவேயில்லை.சவுதிக்கும்,குவைத்திற்கும் சதாம் ஆக்கிரமிப்பு காரணமாக ஈராக்கை ஒரு வழி பண்ணீயாகி விட்டது.இப்பொழுது ஷியா சார்பு ஈராக்கை ஈரான் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கவும் ஈரான் சிரியாவுக்கு உதவி செய்வதால் சுன்னி பிரிவை சாராத அசாதை ஆட்டியிலிருந்து நீக்க வேண்டுமென்று அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து கொண்டு சவுதி,குவைத்,கத்தார் போன்ற நாட்டுப் பணம்,முன்பே சொன்ன அமெரிக்க ஆயுதங்கள்,வாகனங்கள் என்ற கூட்டுக்கலவையில் சி.ஐ.ஏ உதவியோடு ஈராக்,சிரியா பகுதிகளில் உருவாக்கப்பட்ட ஐ.எஸ் என்ற ஈராக்,சிரியா,பிரிட்டன்,அமெரிக்க,பாகிஸ்தான் இன்னும் பல கூட்டுக்கலவையில் உருவான சுத்த ஷரியா இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் யாருக்கு என்ன அஜண்டாவென கண்டு பிடிக்க முடியாத படி அமெரிக்க்,பிரிட்டன் தலைகளை கொய்வதில் துவங்குகிறது அமெரிக்காவின் ஐ.எஸ் எதிர்ப்பு வாதம்.தீவிரவாதிகளில் மாடரேட் தீவிரவாதிகள் என்று சில சிரிய குழுக்களுக்கு அமெரிக்கா கொம்பு சீவி ஆயுத உதவிகள் கொடுக்க அந்த ஆயுதெமெல்லாம் மறுபடியும் ஐ.எஸ் வலிமையென்ற பெயரில் அவர்களிடமே போய் சேர்வதோடு மாடரேட் தீவிரவாதிகள் என்று அமெரிக்காவால் அரவணைக்கப் பட்ட குழுக்களும் ஐ.எஸ் கைப்பாவைகள் என்கிற மாதிரி தோறறம் வருகிறது.
இதில் ரஷ்யா அசாதுக்கு உதவ ,துருக்கி ஐ.எஸ்க்கு உதவ ஒரே குழப்பம்தான். பிரான்ஸை ஐ.எஸ் தாக்க,பிரான்ஸ் களத்தில் குதிக்க,ரஷ்ய விமானத்தை எகிப்து தீவிரவாதிகள் அல்லது ஐ.எஸ் வீழ்த்த,ரஷ்யா சிரியா மீது குண்டு போட,துருக்கி ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்த இப்பொழுது நேட்டே,ஐரோப்பிய யூனியலிருந்த்து துருக்கியை நீக்க என குரல் எழ இதுவரை சொன்ன கதை வசனத்தில் உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?
நம்பள்கி வீட்டுப் பக்கத்தில் வகாபி மசூதி அமைப்பதில் ஆட்சேபனையில்லை:)ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தோட கலந்து விட்ட அங்கேயே வாழும் இஸ்லாமியர்களை அவர்களது மதம் என்ற பெயரில் தனி டாட்டாபேஸ் என தனிமைப்படுத்தும் முயற்சிகள் சி.ஐ.ஏ மூலமாக உருவாகுவதாக செய்தி.அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
வேகநரி!நம்ம பங்காளி மதம் பற்றி சொன்ன உடனேயே ஆஜராகிருங்கன்னு ஏற்கனவே உங்கள் மீது கடுப்பாக இருக்கீறார்/எனவே நந்தவனத்தானுக்கு போட்ட பின்னுட்ட மறுமொழியை உங்கள் பின்னூட்டத்திற்கும் சேர்த்து சில சமயம் நோபல் பரிசைக் கூட இரண்டு பேருக்கு பங்கு போடற மாதிரி இந்த பின்னூட்டத்தை பங்கு போட்டு விடலாம்:)
@நந்தவனத்தான்.vவேகநரி உங்க கூட வவ்வாலும் பறந்து வந்தால் சிறப்பாக இருக்கும். பாவம் எந்தக் கூட்டுக்குள்ளே போய் மாட்டிகிட்டு கண்ணு தெரியாம சுத்துதோ.
எல்லா மதத்தினரும், மதநம்பிக்கையற்றவங்களும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் போது பாரீஸ்தமிழச்சி,பாரீஸ் யோகன் என்று இருவர் மசூதிக்காக ஏன் பிரசாரம் செய்கிறார்கள்? பிரான்ஸ் அரசு பாதுகாப்புகாரணங்களுக்காக மசூதிகள் பலவற்றை மூட போவதாக அறிவத்தது காரணமாக இருக்கலாம்.
Post a Comment