Followers

Saturday, December 12, 2015

பாரதி நினைவாக

இரண்டாயிரத்து ஒன்பதாம் வருட சம கால வரலாறே மறக்கும் புத்தி கலவையின் மொத்த கூறுகளில் கொஞ்சம் மண்டையை கசக்கினால் பெரியார்,காமராஜர்,தமிழகத்தில் பங்காளி சண்டை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்,கொடியில் மட்டும் உட்கார்ந்து கொண்ட அண்ணா தாண்டி நாம் பயணிப்பதில்லை.

அதையும் தாண்டி ஆகஸ்ட் 15ம் தேதி கொடியேற்றி ஜெய் ஹிந்த் சொல்லி மிட்டாய் சாப்பிடுவதுடன் இந்திய வரலாறும் முடிந்து விடுகிறது.ஆனால் குறை சொல்ல வேண்டுமானல் காந்தியின் கயமை என்போரும்,மறுக்கப்பட்ட உரிமையென அம்பேத்காரும் என பேச படுகிறார்கள்.அனார்கிஸ்டுகளாக பார்க்கப் பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்,கடவுள் மறுப்பாளன் பகத்சிங் போன்றவர்கள் காந்தியின் அகிம்சை,பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமாதானம் போன்ற உடன்படிக்கையின் முன் பின் தள்ளப்பட்டு விட்டார்கள்.இந்தியாவின் சகிப்புத்தன்மையின் பிரதிபலிப்பு மட்டுமே இவை.

ஆனால் மொத்த சகிப்புத்தன்மையை தாங்கிய மண் இந்தியா என்பதை அலெக்ஸாண்டர்,மங்கோலியர்.முகலாயர்,போர்த்துகீசியர்,டச்சு,பிரெஞ்சு,ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினை கவனித்தால் சகிப்புத்தன்மையும்,அடிமைத்தன்மையும் அண்ணன் தம்பிகள் மாதிரி.இந்தியாவின் சகிப்புத்தன்மைதான் இந்திய கூட்டமைப்பை இன்னும் தக்க வைத்த் கொண்டிருக்கிறது என்ற போதிலும் ஆமை வேக வளர்ச்சிக்கும்,ஊழல் நிறைந்த ஜனநாயக ஆட்சி முறைக்கும் இதுவே காரணம்.இதன் காரணம் கொண்டே இங்கொன்றும் அங்கொன்றுமாக புரட்சியென நக்சல் இயக்கமும்,ஜனநாயகத்துக்கு மாற்றான சிந்தனைகளும் உருவாகின்றன. ஆனாலும் இந்திய சூழலில் அவை சாத்தியமற்றவை.

உலகில் பல ஆட்சி முறையை பல நாடுகளும் பரிட்சை செய்து ஜனநாயகத்தில் மையம் கொண்டிருக்கின்றன.அதன் காரணமாகவே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதியும் விமர்சிக்கப்படுகிறார். வ.உ.சியும் பிழைக்கத் தெரியாதவர் என ஆங்கிலேயர் காலத்து வரலாறு திரிபு படுகிறது.சம காலத்து சினிமா பாடல்கள் பக்கம் வந்தால் மட்டுமே பாரதியை பாமரனும் புரிந்து கொள்ள முடியும்.ஏழுக்கட்டை இப்பொழுது நாட்டுக்கட்டையாகி விட்ட போதிலும் ஆதி,தாளம்,பல்லவி மீதி சங்கீத கட்டமைப்புக்களை பாரதியின் பாடல்கள் கட்டுடைக்கின்றது.

கண்ணதாசனின் பாடல் வரிகள் தமிழ் இசையின் நிரந்தரமாகி விட்டது போல் இயற்கை,சுதந்திரம்,தாலாட்டு,பாஞ்சாலி சபதம் என பாரதியும் தமிழின் கொடை. பாடல் கூட ஆட்சி இயந்திரத்துக்கு கோபம் கொண்டு வரும் என்பதற்கு கோவனின் பாடல் சான்று.ஆங்கிலேயருக்கும் பாரதியின் பாடல்கள் கோபத்தை கொண்டு வந்தது. ஜெயலலிதாவுக்கோ அல்லது ஆங்கிலேயருக்கோ பாடல் வரிகள் தெரிவதேயில்லை. தெரியப்படுத்துவதெல்லாம் இப்போதைய ஆட்சி உளவுத்துறையும், கரைவேஷ்டிகளும்தான் மாதிரி அப்பொழுதும் ஆட்சி உளவுத்துறையும்,பட்டா மிட்டா மிராசுகளும்,ஆட்சிக்கு உதவும் தமிழ் அல்லக்கைகளும்தான். 

சுதந்திர குண்டு வைத்த மண்டேலாவுக்கு நோபல் பரிசு. பாடலும்,பத்திரிகையில் புரட்சி கருத்தும் சொன்ன பாரதிக்கு தேச துரோகி பட்டம். ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடலுக்கு அப்புறம் ஏன் சார் பள்ளியில் ஜாதி எழுதுகிறீர்கள் என கேட்க இன்னும் ஒரு பாப்பாவும் கற்பிக்கப் படவில்லை .ஜாதி கேட்டால் குழந்தையை பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்ற கமலஹாசனுக்கு விழும் கும்மாங்குத்து மின்சார தடையில் கூட சத்தமாகவே ஒலிக்கிறது.பள்ளீயில் ஜாதி நீக்கமின்றி  ஜாதி கூக்குரல்கள் வெற்றுக் கூச்சல்.ஸ்டிக்கர் கலாச்சாரம் கால கட்டத்திலும் வீழ்வேனென்று நினைத்தாயோ பலருக்கும் உத்வேகத்தை தருவது மட்டுமே ஆறுதல் பரிசு.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த போதும் பாரதி பேசிய அரசியல் ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு ஒன்றுதான். இடி மடி மீது வந்து வீழ்ந்த போதும் கழகங்கள் என்ற செக்கு மாட்டு கரை தாண்டி புது சிந்தனை எதுவுமின்றியே இணையமும்,தமிழ்மணமும்,முகநூலும்,செய்திதாளும்,தொலைக்காட்சிகளும் தமது கருத்தையும்,சிந்தனையையும் தெளளி இறைக்கின்றன. இதில் பாரதி இப்படியாக்கும், அப்படியாக்கும் என்ற சேட்டையும் வேற சமாளிக்க வேண்டியிருக்குது. வேற.வ.ராமசாமி அனுபவமெல்லாம் ஓசியில்தானே ஒட்ட வைத்திருக்கிறார்கள்.படிச்சுத்தான் பார்க்கறது போலிச் சாமியார்கள் மாதிரி ஆன்மீக உலா வராமல் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் உலா வருவதுதானே!

பாரதியே! ஒரு முறை நினை நினைந்து

சொல்லவும் கூடுவதில்லை அவை
சொல்லும் திறன் தமிழ்மொழி எனக்கில்லை
மெல்ல தமிழினிச் சாகும்
என்றந்த பேதை உரைத்தான்
எட்டுத் திக்கும் சென்றடைந்தோம் கலைச்
சொல்லிங்கு கொண்டு சேர்த்தோம்

இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் ஆருயிர் மக்காள்
கொன்றிடல் போன்றொரு வார்த்தை - இங்கு
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி-என
மேவிய யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ் நாடு

இனி காவிரிக்கு கெஞ்சி
பெண்ணையும் காணோம் பாலாறும் காணோம்
வைகைக்கு குரல் கொடுத்து பொருள் நிதி தேடி
கூவம்,பக்கிங்காம் காலவாய் என கூனி குறுகி போனோம்

மழையே என் செய்தாய் எம்மை!

13 comments:

பழமைபேசி said...

நம்மூர்ப்பக்கம் வேறயா? அதான், நீங்களும் விமலாபாரதி நினைப்புல எதோ எழுதுறீங்ளோன்னு ஓடோடி வந்தன்.

நம்பள்கி said...

வாங்க!
[[[பொய்யர் பாரதி cum போலி சுதந்திரப்போராட்ட தியாகி(?!) நினைவாக!
நம்பள்கி | அரசியல் | இந்து கலசாரம் | ஜால்ரா சூத்திரன்கள்
பாரதி மகா பொய்யர் என்பது நிரூபி க்கப்பட்டது. சரியான ஜாதியில் ...மேலும் வாசிக்க]]]]
பதிவே உங்களுக்குகாகத்தான்.


வாங்க! வந்து சண்டையோ ஆதரவோ கொண்டுங்கன்னா!

ராஜ நடராஜன் said...

பழமை!என்ன பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு!பழைய வேகமெல்லாம் குறைந்து போச்சே!

விமலாபாரதியெல்லாம் எனக்கு அறிமுகமேயில்லை.அமராவதி நதிக்கரை ஓரம் கற்ற தமிழ் அடைகாத்து இப்பொழுது அக்னிகுஞ்சுகளாய் துள்ளி திரிகின்றன.இதில் சூரிய உடன்பிறப்புக்களுக்கும் பங்குண்டு.

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட ...இப்பதான் சாதீய வன்மம் அதிகமாகி வருகிறது. பள்ளி கல்லலூரிகளில் சாதீய நிறத்தில் கையில் கயிறு கட்டியதைவைத்து இனம்பிரித்து கொள்கிறார்கள்.

இத்தலைமுறையாவது கழகங்களிலிருந்து வெளியேறுமா..அதற்கு என்ன செய்யலாம்.

ராஜ நடராஜன் said...

சேட்டு!நான் கொட்டிய பின்னூட்ட நூறனைததையும் இங்கே கொட்டி வைக்கவும்.அப்புறமா முத்தா மாணிக்கமா என்று விவாதிப்போம். நிறைய தேடுகிறீர்கள்.ஆனால் கோர்க்க தெரியாமலே கோவலன் சிலம்பை முத்துமில்லை,மாணிக்கமுமில்லை கொண்டு வந்தவள் கடத்தல்காரி என்கிறீர்கள்.

நாந்தான் முன்பே சொன்னேனே ஆன்மீகமும் காணோம்,சினிமாவும் காணோம்.நாத்திகமும் காணோம்.பேரு மட்டும் பெத்த பேரு உலா.நெஞ்சு பொறுக்குதில்லையே நம்பள்கி சேட்டை நினைந்து விட்டால்.

ராஜ நடராஜன் said...

சேட்டு!தொடர்ந்து வாங்கோ,வாங்கோ சண்டைக்கு வான்க்கோன்னு நீங்க கூவுவது வடிவேலு வலுக்கட்டாயமாக போலிஸ் ஜீப்பில் போய் உட்கார்ந்து கொள்வதைதான் நினைவுபடுத்தியது:)

நான் முன்பே கேட்டேன் உங்கள் பிரச்சினை என்ன? பாரதி என்ற தனிமனிதனா? பாரதியின் பாடலா?
தெளிவா சொல்லுங்க!நேரமிருந்தால் இன்னும் பிராண்டுவேன்.

நம்பள்கி said...

பிரச்னை என்ன என்பதை தெளிவாக எழுதியுள்ளேன். பின்னூடமிட்ட எல்லோருக்கும் புரிகிறது. மேல்கொண்டு சந்தேகம் இருந்தால் மறுபடியும் படியுங்கள்...அல்லது மதிமாறன, அசுரன், கற்பகவிநாயகம் ஆகிவர்களிடம் தேவையான விளக்கம் பெறவும். சான்றுகள், சுட்டிகள் கொடுத்துள்ளேன்.

ராஜ நடராஜன் said...

நம்பள்கி!நீங்க சுட்ட பழைய வடையை மறுபடியும் வடைகறி செய்ததை இப்பொழுதுதான் கவனித்தேன். கூடவே அமுதவன் போட்ட பின்னூட்டத்தையும் இங்கே சுட்டுவது சரியாக இருக்குமென நினைக்கின்றேன்.

//தமிழர்களின் அடையாளங்களாக இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவரையும் சொல்ல விடாதீர்கள். பாரதியாரை ஒழித்துக்கட்டியாகிவிட்டது. பெரியாரை ஆயிரம் குறை சொல்லியாகிவிட்டது. கட்டபொம்மனைத் தெலுங்கன் என்று சொல்லி தூக்கி எறிந்தாகிவிட்டது. கலைஞரை, சிவாஜியைக் கழித்துக்கட்டியாகிவிட்டது. கண்ணதாசனை துடைத்து எறிந்தாகிவிட்டது. இலக்கியம், கலை என்று எந்தத் துறையில் எவன் சிறிது புகழ் பெற்றிருந்தாலும் அதில் ஆயிரம் குறை காண ஒரு பெரிய பட்டாளமே தயாராக நிற்கிறது. இதுதான் இன்றைய நிலைமை.
சரி, எல்லாரையும் தூக்கிக் கடாசிவிடலாம்.
பத்தரை மாற்றுத் தங்கமாக ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு ஆளைக் காட்டுங்கள். அவர்களைப் பின்தொடரலாம்.(எதற்கு இன்னொருவரைப் பின் தொடர்வது? நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோம் - என்பதுபோன்ற பதிலைச் சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)//

ராஜ நடராஜன் said...

கேள்வியும் நானே பதிலும் நானே உங்கள் பின்னூட்ட பாணியில் இன்னுமொரு பதில் போட்டுக்கிறேன்.
அசுரனும்,மதிமாறனும் ஒற்றை சார்பாளர்கள். நான் பக்கநிலை சாரா சமூக நிகழ்வுகளை கவனிக்கும் பக்க சார்பில்லாதவன்.எனவே அசுரனும்,மதிமாறனும் சொன்னதெல்லாம் வேத வாக்காகி விடாது.அவர்கள் கூற்றில் உண்மைகள் இருக்கலாம்.ஆனால் அதனை மொத்த தமிழகமும் கற்றுக்கொள்ளுமா என்பதில் வித்தியாசப்படுகிறேன்.உங்கள் உதாரணங்கள் ராமதாஸையும்,திருமாவளவனின் பக்க சார்புகளை நினைவு படுத்துகின்றன.சாதி பிரதிநிதித்துவம் ஓட்டரசியலாகி விட்டது என்பதை இவர்களின் குரங்காட்டத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.ராமதாஸ்க்கு திருமாவளவனை பிடிக்காது.திருமாவளவனுக்கு கிருஷ்ணசாமியை பிடிக்காது.திருமாவளவனுக்கும்,கிருஷ்ணசாமிக்கும் இன்னொரு நலிந்த இனத்தைப் பிடிக்காது.

பெரியார போனபின் அவரது இயக்கமும் இன்னொரு சங்கர மடமாகி விட்டது.பார்ப்பனீய வாதம் பெரியாரோடு மரணித்து விட்டது என்பேன்.பிராமணர்கள் பாவம்.இப்பொழுது அவர்களும் நலிந்த குழுவே என்ற போதிலும் சுப்ரமணி சுவாமி,சோ போன்ற இந்துத்வா விசமிகளையும் அடையாளம் காண வேண்டியிருக்குது.இவர்களாவது பிள்ளைப் பூச்சிகள்.விசப்பாம்புகளாக நானும் மேல் ஜாதிக்காரன் என்று சுற்றும் இடைச் சாதி சூத்ர களை எடுக்க ஒருவருக்கும் துணிவில்லை.அதனால்தான் சொன்னேன் ஜெயலலிதாவுக்கும் கூட பாப்பாத்தி பட்டம் கட்டினாலும் ராமதாஸ்க்கு பெண்டு எடுக்கும் துணிவு இருந்தது.இதுவே கலைஞர் என்றால் ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டு வேறு முறையை கையாண்டிருப்பார்.

எதை இல்லை என்கிறோமோ அது நன்றாகவே வளர்கிறது.உங்கள் ஆன்மீக உலாவெல்லாம் அதற்கு உரம் போடப்படுபவை மட்டுமே.

பாரதி அக்ரகாரத்து சூழலில் பிறந்தவர்...வளர்ந்தவர்.பாரதியைப் பற்றி நாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டுமானால் நீங்கள் அந்த சூழலுக்கு பழ்க்கப்பட்டிருக்க வேண்டிருக்க வேண்டும்.பயணப்பட்டிருக்க வேண்டும்.வெறும் கட்டுடைத்தல் பெயரால் 50,60 ஆண்டுக்கும் முந்தைய சூழல் கூட மறந்து விட்டு 1910க்கு போக மாட்டேன் என்று பாரதியை வசை பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்போதைய சுதந்திரத்திலும் காவல் நிலையம் எப்படி செயல்படுகிறதென அனுபவித்து விட்டு வாருங்கள்.அப்புறம் பாரதி எழுதிக்கொடுத்த கடிதம் பற்றி விமர்சனம் செய்யலாம்.

சமூக நலன் நோக்கும் ஆர்வலன் மட்டுமே நான்.உங்களை மாதிரி இசங்களில் சிக்குவதில்லை.

ராஜ நடராஜன் said...

காமிரா தவறே! நம்மகிட்டயெல்லாம் ஆலோசனை கேட்குற ஒருவர் நீங்கள் மட்டுமே.கேட்டும் கேட்காமலும் எனக்கு தோன்றுவது கேரளாவும்,தமிழகமும் கேரளா நக்சலியக்கத்தில் நம்பிக்கை வைத்தார்கள்.தமிழகம் திராவிட இயக்கங்கள் மீது நம்பிக்கையை வைத்தார்கள்.கேரளா நக்சலியக்கம் நலன் தராது என்று இனம் கண்டு கம்யூனிசம்,காங்கிரஸ் என மாறி விட்டது.ஆனால் தமிழகம் இரு கழகங்கள் என்ற குண்டு சட்டிக்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டேன்கிறார்கள். ஒரு கழகம் ஜனநாயகத்துக்கு விரோதமான குடும்ப அரசியலை முன் வைக்கிறது.இன்னொரு கழகம் ஜனநாயகமற்ற சர்வாதிகார தனி வழிபாட்டை போற்றுகிறது. குறைகள் இருந்தாலும் மாற்று கூட்டணியை முயற்சி செய்து பார்க்கலாம் என்பது என் நிலைப்பாடு.சராசரி தமிழர்கள் சுய பரிசோதனைக்கு தயாரில்லை. காரணம் இப்போதைய ஜனநாயகத்தின் அடித்தளமாக பொருளாதார வலிமை நிற்கிறது.எப்படி சம்பாதித்தார்கள் என்பது முக்கியமல்ல.தேர்தலுக்கு செலவு செய்யும் வலிவு இருக்கிறதா மட்டுமே முக்கியம். மழைக்கு பயந்து மறுபடியும் எரியுற கொள்ளியில் விழும் சூழலை தமிழகம் எப்படி கையாள்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

தவறு!கொஞ்சம் ரூம் போட்டு யோசித்ததில் இன்னும் கூட ஒன்று தோன்றியது. தற்போதைய மழையில் தன்னார்வமாக உதவும் நல் எண்ணத்தோடு ஒரு புதிய இனம் தமிழகத்தில் தோன்றியுள்ளது.தமிழகத்தின் நலனே மனதில் கொண்டு ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் கரம் கோர்த்தால் கூட தமிழகத்திற்கு மாற்றம்தான்.

வேகநரி said...

//ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடலுக்கு அப்புறம் ஏன் சார் பள்ளியில் ஜாதி எழுதுகிறீர்கள் என கேட்க இன்னும் ஒரு பாப்பாவும் கற்பிக்கப் படவில்லை//
சரியாக சொன்னீர்கள். பள்ளியிலேயே ஜாதி கேட்டு, ஜாதி கற்பிக்க ஆரம்பிக்கும் போது ஜாதி எப்படி ஒழியும்.

http://thavaru.blogspot.com/ said...

மாற்றத்தை விரும்பியே வாழ்க்கை ஓட்டம் ஓடுகிறது. எப்பொழுது..???!!!