தகவல்கள அனைவரையும் போய் சேர இயலாத தமிழகத்தின் மழை இடரிலும் கமலின் வெட்கபடுகிறேன் கருத்து பொது தள விவாதமாகி இருக்கிறது.முன்பெல்லாம் கமல் அரசியல் சாயம் ஒட்டாமல் அறிவு ஜீவி கருத்துக்களை பட வசனங்களில் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.தானுண்டு தன் வேலையுண்டு இருந்தபோது இவர் ரொம்பத்தான் தலை கர்வமாக்கும் என்று கிட்டியது பிம்பம்.
நிற்பதுவோ!நடப்பதுவோ! வெறும் காட்சி பொருள்தானோ? யாமறியோம் கமல் சார்!
முந்தைய சூழலை புரட்டிப் போட்டது விஸ்வரூபம் பட வெளியீடு சிக்கலும் அதன் மன அழுத்தத்தில் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்ற மனவெளிப்பாடும் விமர்சனத்துக்கும்,எதிர்வினைக்கும் வசதியாகிப் போனது அவரது விஸ்வரூப காலத்து மனநிலை. பிரச்சினைகளிலிருந்து வெளிவந்த பின் தனக்கு ஆதரவும் அன்பு வெளிப்பாடுகளும் இருப்பதை உணர்ந்த பின் தான் சார்ந்த சமூகம் குறித்து கருத்துக்களை இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்துகிறார்.வாய் மூடி மவுனிப்பதை விட எதிர்வினைகள் நல்லதுதான்.மௌனம் சிக்கலில்லாதது. எதிர்வினைகள் வரலாற்றை சொல்லி வைக்கும்.
தூங்கா வனம் சந்தானம் மூலம் வசனம் வைத்தது போல் ரெண்டு டூயட் பாடிக்க,சண்டை சீன் வச்சுக்க உனக்கு ஏன் கருத்து வசனம் போல மேடம் ஜெயலலிதாவும் அமைச்சர் மூலம் அரசு அறிக்கை விடுகிறாரோ! தமிழகத்தின் பெரும் மழையில் தனது இயலாமை குறித்து வெட்கப்படுகிறேன் என்ற கருத்துக்கு மழையின் துயரத்தில் இருக்கும் பல கோபக்குரல்கள் பொது கருத்தாக ஒலித்தது ஜனநாயக கோப வடிவம் பெறுகிறது.
ஜெயலலிதா என்ற ஆளுமையை மதிக்கத் தெரியாத வாய் மூடி,சிரம் தாழ்,சீர் மண் தாழ்,பெண் கால் தாழ் என மூச்சு ஒன்றை தவிர அம்மா புராணம் பாடும் அமைச்சர்களில் மூத்த அமைச்சர் அம்மாவின் குரலாக கருத்து கந்தசாமி என கமலுக்கு மறு அறிக்கை விடுகிறாரோ அப்பொழுதிலிருந்து கமலின் கேள்வியின் வடிவம் உரு மாறுகிறது.
கமலின் கேள்வியில் என்ன தவறு? நான் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறேன் என்ற கருத்தில் சொல்லின் ஆழம் நிறைய நிறைந்து கிடக்கிறது. காதுள்ளவர்கள் கேட்க கடவர்.கண்ணுள்ளவர்கள் பார்க்க கடவர்.பொது நலனுக்கு உதவுவதோடு தனி மனித திருப்தியடைந்து விடுகிறது மனம்.சிறு துளி பெரு வெள்ளம் எங்கே கரை சேர்கிற்து என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதோ இப்பொழுது காணாமல் போன சென்னை வடிந்த மழை மாதிரி.
சுனாமியிலேயே நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லையென்ற போதிலும் நம்மிடம் இன்னும் குறைகள் நிறைய இருக்கிறது என்ற போதிலும் மனிதாபிமானம் நிறைந்து இருக்கிறது அவசர நேரத்து பெரும்பாலான உதவிகளை சுனாமி காலத்தும் இப்பொழுதும் காண முடிந்தது.அதே போல் அவசர பொருளாதார உதவிகளும் சுனாமி காலத்தும் இப்பொழுதும் வந்தடைகின்றது. சுனாமி காலத்து பொருளாதார கணக்குகளை யாராவது ஒருவர் வெளியிட முடியுமா? அரசு இயந்திரத்திடம் வெளிப்படத் தன்மையில்லையென்பதால் உதவுவதோடு நாம் மனதால் திருப்தி பட்டுக்கொண்டு வாழ்வில் மேலும் நகர்ந்து கொண்டுள்ளோம்.
கமலின் வெட்கத்தை பிடிக்காதவர்கள் பலர் சமூக தளங்களில், தொலைக்காட்சிகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படித்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருவதில் மெல்லப் புகைவதை ஊதிப் பெரிதாக்கி விடுவதாகவே முடியும். இது தனிமனிதனின் கருத்து என்று எண்ணாமல் கமல் என்ற மனிதனின் கருத்துக்கு வலு சேர்ந்து விடுமென்றும் எதிரணிக்கு சாதகமாக முடியுமென்று அறிக்கை விடுவது தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கு பாதகத்தையே உருவாக்கும்.
தேர்தல்களை,குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகளை மக்களின் தேர்தல் காலத்து மனநிலையே முடிவு செய்கின்றன. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற படிக்காத மேதை காமராஜர் கூட தோற்றுப் போயிருக்கிறார்.
அம்மா அரசாமிகளை விட கருத்து கந்தசாமிகள் ஜனநாயகத்தின் பிரதிபலிப்புகள்.
25 comments:
சரிதான், ஆனால் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை உதவி, கருத்துக்கள் அல்ல. அதை யார் செய்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை.இன்னும் சொல்லப்போன சென்னை ஒரு ஏரியாவில் லோகத்திற்கு பதிலளித்த அமைச்சர் அனுப்பிய நிவாரணலாரியை திருப்பி அனுப்பி விட்டு மற்றவர்கள் கொடுத்த பொருட்களை மக்கள் பெற்றுக் கொண்டனராம்.
லோகம் சொன்னது நல்ல கருத்துதான் என்றாலும் தன்னாலன உதவிகளை செய்துவிட்டு, "என்னால் முடிஞ்சது இவ்வளவுதான் அரசு என்ன பண்ணுது"ன்னு கேட்டிருந்தா அதுக்கு மரியாதை இருந்திருக்கும். அதைவிடுத்து கருத்து சொல்லிவிட்டு கம்மென்று இருப்பதால் இருதரப்பும் கழுவிக்கழுவி ஊத்துகிறார்கள்... இதுக்கு அந்தாளு கம்முன்னு மட்டும் இருந்திருக்கலாமோ?
என்னத்தைச் சொல்ல அரசநிலைபற்றி கேள்விகேட்க வேண்டிய பொறுப்புமிக்க தருனம் இப்போது.
நல்ல பதிவு.
கமல்ஹாசனை தாக்குகி ஜெயலலிதா அடிமை அமைச்சர் அறிக்கை விடுகிறாராம் :)
[[லோகம் சொன்னது நல்ல கருத்துதான் என்றாலும் தன்னாலன உதவிகளைசெய்துவிட்டு,"என்னால் முடிஞ்சது இவ்வளவுதான் அரசு என்ன பண்ணுது"ன்னு கேட்டிருந்தா அதுக்கு மரியாதை இருந்திருக்கும்.]]
ஐயா! நந்தவனம்!
எதற்கு லோகம் உதவி செய்யணும்?
இல்லல எது பேசணும் என்றாலும் உதவி செய்துவிட்டுத் தான் பேசணுமா? இது என்ன புதுக்கதையா இருக்கு!
ஜனநாயகம் இல்லாத நாட்டில் இப்படிதான் செய்யணும் போல!
நந்தவனத்தான்!சேட்டு நம்பள்கிக்கு நீங்கள் அனுப்பிய இஸ்லாமிய சகோக்களின் கோயில் பிரகார சமையல் கூடம் பார்க்க இதமாக இருந்தது.அவரவர் நம்பிக்கை அவரவரவர்க்கு என்ற பரஸ்பர நட்பு இருந்தால் போதும்.
நீங்கள் சொன்ன மாதிரி கமல் நற்பணி மன்றத்தை களத்தில் இறக்கி விட்டு கூடவே ஒரு நாள் சேவை செய்திருந்தால் அவரது கருத்துக்கு வலு சேர்ந்திருக்கும். அதை செய்யாமல் கருத்து சொன்னதற்கு பல தரப்பிலிருந்தும் கோபக் குரல்கள் கேட்கின்றன. எதற்குமே பதில் சொல்லாமல் அம்மாவை கேட்டு சொல்கிறேன் என்ற அமைச்சர் குழு அறிக்கை விட கூடாது,
அமெரிக்க அரசியல் செயல்பாட்டில் சி.என்.என் தொலைக்காட்சியில் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால் தினமும் அரசு நிலை அறிக்கைகளை சொல்வதெற்கென்று ஒருவரை நியமிப்பது.அன்றாட நிகழ்வுகள் எதுவானாலும் கேள்வி பதிலாக தினமும் வந்து விடும்.காங்கிரஸ்,பி.ஜே.பி கூட செய்தி தொடர்பாளர் ஒருவரை நியமித்து கருத்து வெளியிடுகிறார்கள்.தமிழகத்தில் ஏன் அப்படியில்லை.
இங்கே இலவச செய்தி வாசிப்பதற்கு அடுத்த தேர்தலில் யார் ஜெயித்தாலும் அவர்களது அறிக்கை வாசிப்பாளனாகி விடலாமா என்று நினைக்கிறேன். அதுவும் எப்படி அரபியர்களுக்கு அரை குறையா புடியும் படி கொஞ்சம் அரபி,தமிழ் தெரியாத இந்திக்காரர்களுக்கு அமாரா தேஷ்மே தமிழ ஏக் புராண பாஷா ஹையும் உங்க ஊரு மூக்காங்கிலம் பேச இயலாவிட்டாலும் மிஸ்டர் சீப் மினிஸ்டர் ஈஸ் பிளானிங் டு மீட் ஹில்லரி கிளிண்டன் நெக்ஸ்ட் மன்த என அறிக்கை விட்டுடலாம். என்ன சொல்றீங்க:)
தனிமரம்.வணக்கம். ரங்கராஜ் பாண்டே முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுடன் நேர்காணல் காணும் போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மக்களே மன்னர்கள்,அரசு ஊழியர்கள் சேவகர்கள் தான் உட்பட என்றார்.கேள்வி கேட்டா அரசு இயந்திரம் எதிர்க்கேள்வி போடுகிறது.
வேகநரி! நம்ம கடைக்கு மட்டும் நரி ரொம்ப வேகமாக ஓடி வருவதன் மர்மம் என்ன?பங்காளி கோவிச்சுக்கப் போறார்:)
அமைச்சர் அறிக்கை விடுவதில் தவறில்லை. சரியோ தவறோ கலைஞர் மாதிரி தொடர்ந்து அறிக்கை வெளியிடும் தெம்பு வேண்டுமென்பதுதான் எனது நிலை.
@நம்பிள்கி
//எதற்கு லோகம் உதவி செய்யணும்?
இல்லல எது பேசணும் என்றாலும் உதவி செய்துவிட்டுத் தான் பேசணுமா? இது என்ன புதுக்கதையா இருக்கு!
ஜனநாயகம் இல்லாத நாட்டில் இப்படிதான் செய்யணும் போல!//
லோகம் உதவி செய்ய வேணும் என்று நான் எங்கே சொன்னேன்? ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வெட்கபட்டுகிட்டே இருக்கலாம், அது அவரது விருப்பம். மற்றபடி உதவி செய்திருந்தால் அவரின் வார்த்தைக்கு மரியாதை இருந்திருக்கும் என்றுதான் சொன்னேன் - பின்னூட்டத்தை புரிந்து படிக்கவும்!
அவருக்கு பேச்சுரிமை உண்டுதான். ஆனால் அதே நேரம், "எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது" என்றெல்லாம் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டால் அடுத்தவர்களின் பேச்சரிமையை மதித்து வேண்டிய வரும்.
சேட்டு நம்பள்கி! வணக்கம். பல நேரங்களில் உங்களுக்கு பின்னூட்டம் போட நினைத்தாலும் கீங்க ஒரே கவுச்சி:) மேலும் பாரதி பற்றிய உங்கள் கருத்துக்கு கொஞ்சம் உங்களை பிராண்டலாமான்னு நினைத்து பதிவு போட காலம் சரிப்பட்டு வரவில்லை.
கமல் நற்பணி மன்றம் வைத்திருப்பதால் நான் நந்தவனத்தான் கருத்தோடு உடன்படுகிறேன். தானோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களை களத்தில் இறக்கி விட்டு கந்தசாமியாகியிருந்தால் எந்த சாமியும் வாய் திறந்திருக்காது.
நந்தவனத்துக்கு போட்ட பின்னூட்டத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டது கூட உங்கள் பின்னூட்டம் பார்க்காமல் உங்கள் தள பின்னூட்டத்தில் கண்டதுதான். வகாபி,இந்துத்துவா படிநிலைகளை நாம் கடந்து விட்டாலும் மத நம்பிக்கையாளர்கள் இடர்களில் தமது நம்பிக்கைகளோடு எதிர் நம்பிக்கைகளையும் அரவணைப்பது வரவேற்க தக்கதே.
@நந்தவனத்தான் & நம்பள்கி
இப்ப அங்க தூங்குற நேரமா இல்லை தூங்கி எந்திருச்சு கலப்பையை தட்டிகிட்டிருக்கீங்களா:)சீக்கிரம் சீக்கிரமா பின்னூட்டம் விழுகுதே!
@நந்தவனத்தான்! கலைஞர் காலத்து விழாக்களை நினைத்து கமல் கருத்து சொல்லிவிட்டாரோ என்னவோ! அல்லது உங்களுக்கெல்லாம் தெரியாமல் சுற்றறிக்கை சென்றதோ! ஏன் நிதி திரட்ட ரஜனியையும்,கமலையும் நாடுகள் முழுசா அழைக்கத்தானே செய்கிறார்கள்.உதாரணம் மலேசியா.
ராசநட, நீர் அறிக்கை வாசிப்பளர் ஆகி அடுத்த அமைச்சராக்க்கூட ஆகலாம். முன்பு டிவியில் தோன்றி பிஜபிக்கு பேசிக்கொண்டிருந்த நிர்மலா சீதாராமன்,ரவி சங்கர் பிரசாத் எல்லாம் இப்ப மினிஸ்டர்கள். தற்போது காங்கிரசுக்கு பேசும் குஷ்பூ, நக்மா எல்லாம் வருங்கால மந்திரிகள்தானே? யாரு கண்டா, எதிர்காலத்தில் 'காந்தக்கண்ணழகி உனக்கு மினிஸ்டிரில எடம் பாக்குறேன்' என்று நீர் யாரிடமாவது சொல்லிகிட்டிருக்கலாம்!
-----------
சங்கரகரா குடும்பம் 1983 கொழும்பு கலவரத்தின் போது பல தமிழர்களை வைத்து காப்பாற்றியதாம். அதையெல்லாம் பற்றி யோசிக்காமல் அவரை சென்னையில் விளையாட விடாமல் விரட்டியது தமிழ் தேசிய கும்பல். ஆனால் மனுசன் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் 65 லட்சம் கொடுத்திருக்கிறாராமே? முரளியும் கொடுத்திருக்கறாராம் ஒரு கோடி - ஆனால் அவர் சென்னை மாப்பிள்ளை. அன்று சங்கரகராவை எதிர்த்து கொதித்த தமிழ்தேசிய தலைவர்கள் சீமான் இன்ன பிறர் ஒருத்தரையும் காணோம்! தமிழ்நாட்டு நடிகர்கள் கொடுத்த தொகையை இவற்றுடன் ஒப்பிட்டால்...
@ராசநட காலை மணி 3க்கு மேலே ஆவுது. இனிமேதான் தூங்கனும்!:) மீண்டும் சந்திப்போம்!
நந்தவனத்தான்! பெயர் பட்டியலை பார்க்குற போதே மனம் ஜொல்லுதே:) இங்கே பிலிப்பினோ செக்ரட்டரி ஜொல்லே தாங்கல.இன்னைக்கு வேற ராஜினாமா செய்துட்டேன்னு சொல்லிட்டுப் போனா.வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பிட்டு நானும் இந்தியா போய்டலாமுன்னு நினைச்சுகிட்டிருக்கேன். எதற்கும் புத்தாண்டு கூட்டணி பார்த்துட்டு முடிவு செய்கிறேன்.
கொஞ்சம் உழைப்பு,வாய்ச்சவடால்,சரியான கட்சி தேர்வு இருந்தால் மூலதனமில்லாமல் அரசியலுக்கு முன்னுக்கு வந்து விடலாம்தான்.ஆனால் நம்க்கு புரட்டு வேலையும் வர மாட்டேங்குது. கூனவும் தெரிய மாட்டேங்குது.எங்க அரபி சேர்மனைக் கூட ஹலோ சார்!ஹவ் ஆர் யூ தான் கேட்க வருது.நெடுஞ்சாண் கிடை கொஞ்சம் பழகிட்டு அப்புறமா யோசிக்கிறேன்.
சங்ககாரா தகவலுக்கு நன்றி.ஒற்றை எண்ணிக்கைகளை விட இலங்கை அரசின் கூட்டுக்கொலை நினைவுகள் மனதை விட்டு நீங்கவே மாட்டேங்குது.
சீமானுக்கெல்லாம் டெபாசிட் போய் காலம் ரொம்ப ஆகுது.அநேகமாக வீணாப் போன சீமான் என்ற எனது பதிவு காலத்தே. 2016 ல ஆட்சிய பிடிச்சிருவோமென்ற உருமல் எங்கேன்னு தெரியலை.
கூட்டணி எண்ணிக்கை மட்டுமே வரும் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்க போகிறது.பார்க்கலாம் யார் எங்கே தாண்டுகிறார்களென்று.என்னைப் பொறுத்த வரை இரு கழகங்களும் தமது ஆளுமையை நிருபித்து விட்டார்கள். மாற்று முயற்சியை தமிழக மக்கள் பரிசோதனை செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் இப்பொழுது குறைவாகவே தென்படுகின்றன.
ராஜ நட ..கமலின் இவ்வளவு அவசரமான கருத்தும் அதற்கு அமைச்சர் வாயிலாக பதிலும் தேவையில்லாதது.
கமல் உதவி செய்து முன்னோடியாக இருந்துவிட்டு அப்புறம் கருத்துகளை பகிர்ந்து இருக்கலாம்.
65 லட்சம் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு கொடுத்த இலங்கை சிங்கள கிரிக்கெட் வீரர் சங்கக்காரவுக்கு மிகவும் நன்றி. இவர் அருமையானவர். இவருக்கு கொழும்பில் நிறைய தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதா சீமான் கோமாளிகள் தமது அரசியல் குறுகிய ஆதாயங்களுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களை தமிழகத்திலே அனுமதிப்பதில்லை என்பதிற்காக வெட்கபட வேண்டும்.
வணக்கம்! படமெல்லாம் நல்லா போட்டுட்டு பேரை தவறுன்னு வைக்கிறீங்களே:)
இந்த சின்ன கந்தசாமி உங்களுக்கு என்னமோ சமீபத்தில் கருத்து சொன்னேனே! பதிவுகளும்,பின்னூட்டங்களும் அப்போதைய மனநிலையில் வெளிப்படுவதால் சொன்ன பின்னூட்டத்தை கொஞ்சம் காக்கா கடி கடிச்சிக்கிறேனே:)
// ஒரு புறம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் இன்னொரு புறம் ஏரிகளையெல்லாம் ஆக்கிரமிப்பு என்ற நிலையில் வடிகால் அமைபுக்க்ள் மழை காலத்திற்கும்,குப்பை,மனிதக் கழிவுகளை அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது.இதில் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினை என்னவென்றால் மனிதக் கழிவுகள் அகற்ற என ஒரு ஜாதி முத்திரையை
குத்தி வைத்திருக்கிறோம்.//
ஜாதிகளிலிருந்து மழை மனிதர்களை மனித நேயர்களாக மாற்றியிருக்கிறது.
இப்ப உங்களுக்கு ரன்னிங் கமெண்டரி...
கமல் வாய் மூடி மௌனமாக இருந்திருந்தாலும் அவருக்கு பிரச்சினைதான்.இவ்வளவு துயர சம்பவத்திற்கு பின்னும் ஒரு வார்த்தை சொன்னாரா பாருங்கள் என அவரை குறை கூறவும் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கு இந்த ஆட்டமே பரவாயில்லை என நினைக்கிறேன்.
இப்போதைய சூழலில் அமைச்சர் நேரடி அறிக்கை தராமல் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் வாயைக் கிளரி விட்டு மழையில் எதிர்க்கணைகள் வந்தால் அது அவரது சொந்தக்கருத்து,இதற்கும் அரசின் நிலைபாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டிருக்கலாம். இந்த தந்திர சாணக்கியத்தனம் சும்மா வந்து விடுமா என்ன? அதுக்குத்தான் எதிரணியில் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டுமென்பது:)
கமல்ஹாசனை தாக்கி அறிக்கை விட்ட அமைச்சர், ஜெயலலிதா பதவி பறிபோனதும் தாடி வளர்த்து சோகமாக முகத்தை வைத்து கொண்டு திரிந்தாரே! அந்த காட்சியை இப்போ நினைச்சாலும் என் கண்கள் குளமாகிவிடும்.
வேகநரி!ந்நங்கெல்லாம் செய்நன்றி பரம்பரையாக்க்கும்! தாடி வளர்க்காட்டி எப்படி? எப்படியும் அவசர காலத்தில் முட்டுக்கொடுத்து அ.தி.மு.க வை காப்பாற்றியதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத்தை பாராட்டியே ஆகவேண்டும்.என்ன தொழில் மேம்பாட்டு பன்னாட்டு நிகழ்வை இழுத்தடித்து விட்டார்.தனி மனித வழிபாட்டு தலைமையை மீறியும் அ.தி.மு.க ஆட்சி இயல்பாக நிகழ்ந்ததற்கு பன்னீர்செல்வத்தை பாராட்டலாம்.என்ன கொஞ்சம் குனியாமல் நிமிர்ந்து நடந்திருக்கலாம்.உட்காரும் நாற்காலி கூட பரதன் செருப்பு மாதிரியாகி விட்டது.
இப்பவும் கண்கள் குளமாகி விட்டால் நான் பொறுப்பு கிடையாது:)
[[சேட்டு நம்பள்கி! வணக்கம். பல நேரங்களில் உங்களுக்கு பின்னூட்டம் போட நினைத்தாலும் கீங்க ஒரே கவுச்சி:)]
எய்தவனிருக்க அம்பை நோவதேன். நம்ம மதமே அப்ப்டி௧ அப்புறம் என்ன? உள்ளதைச் சொன்னால் உங்களுக்கு கவுச்சி. நம்ம மதமே கவுச்சி...இது நான் சொல்லலே...பெரியவர்...எல்லோருக்கும் பெரியவர் சொல்றார்!
கேட்டுக்ங்க....
தளிப்பு: இந்து மதம் எங்கே போகிறது.....
படிக்க இங்கே....
உங்களுக்காக ராக்கெட் லிங்கம்!
thathachariyar.blogspot
உங்களுக்காக ராக்கெட் லிங்கம் லிங்க்: ஐந்தே லிங்கும் வேளை செய்யும்!
http://thathachariyar.blogspot.com/
___________________________________
எய்தவனிருக்க அம்பை நோவதேன். நம்ம மதமே அப்ப்டி௧ அப்புறம் என்ன? உள்ளதைச் சொன்னால் உங்களுக்கு கவுச்சி. நம்ம மதமே கவுச்சி...இது நான் சொல்லலே...பெரியவர்...எல்லோருக்கும் பெரியவர் சொல்றார்!
கேட்டுக்ங்க....
தளிப்பு: இந்து மதம் எங்கே போகிறது.....
படிக்க இங்கே....
உங்களுக்காக ராக்கெட் லிங்கம் லிங்க்:
thathachariyar.blogspot
Honeysuckle is a plant that is sometimes called “woodbine.” The flower, seed, and leaves are used for medicine. அழகு தமிழில் சொல்ல வேண்டுமாயின், புல்லுருவி.
Honeysuckle is used for digestive disorders including pain and swelling (inflammation) of the small intestine (enteritis) and dysentery; upper respiratory tract infections including colds, influenza, swine flu, and pneumonia; other viral and bacterial infections; swelling of the brain (encephalitis); fever; boils; and sores. Honeysuckle is also used for urinary disorders, headache, diabetes, rheumatoid arthritis, and cancer. Some people use it to promote sweating, as a laxative, to counteract poisoning, and for birth control.
அரசமரத்துப் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளைப் பேறில்லா பெண்கள் எலுமிச்சைப்பழம் அளவு சூரியோதயத்துக்கு முன் உண்டுவர சூல் அமையும்.
உடுமலைப் பேட்டை நாட்டுக்கோட்டை செட்டியார் கடையில் புல்லுருவி சிட்டிகைப் பொடி கிடைக்கும். நீதி: புல்லுருவி மனிதனுக்கு நல்லது!!
குறிப்பு
கமல், முன்னாள் முதல்வர் அறிக்கை முதலானவற்றுக்கும் இதற்கும் யாதொரு தொடுப்புமில!!
சேட்டு!எய்தவன் எங்கோ தூங்கிகிட்டுருக்க எங்களுக்கு பிலிம் காட்டுறது நீங்க்தானே! நேற்று காஞ்சி மடம் இணைப்பை படிக்க நினைத்து கொஞ்சம் சீரியசாக இருக்கவே வார இறுதிக்கு உங்களை மீண்டும் தரிசனம் காணலமென கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்.
சிவலிங்கத்துக்கே நேரமில்ல!இதுல ஐந்து லிங்கமா...அப்புறமா பார்த்துட்டு சொல்றேன்.
பாத்தீகளா! உங்க கூட கும்மியடிச்சா பின்னூட்டமும் எப்படி வருதுன்னு!அவ்வ்வ்வ்:)
பழமை நலமா? நேரமிருந்தால் உங்க பின்னூட்டத்தை பதிவாக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் களத்தில் இறங்கியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற அங்கலாய்தத எனக்கும் சேர்த்து நன்றி நக்கீரா!
//’’நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல.
மின்அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என்கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைபற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என்வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச்செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்.
என்வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டுவிட்டு வரும் தொலைப்பேசித்தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப்பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன்.
எனது சில நண்பர்களைப்போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும். என் உண்மை நிலைபுரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்.
என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசிதொடர்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்குஉதவும் அன்புகட்டளைகள் பிறப் பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம்.
இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல.
களத்தில் இறங்கிவேலை செய்து கொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல் களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும் பகுத்தறிவாளரும் பலமதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்தநேரம் கட்சிகளுக்கு அப்பாற்படவேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக்கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம்.
களமிறங்கி வேலை செய்யும் யார்மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்டவார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாத பிரதி வாதங்களை புறந்தள்ளி ஆக்கவேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதை யெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோப தாபங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக்கூடும் எனஅஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவனம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்துவருகிறது.
நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே, நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்காகவும் செளகரியத் துக்காகவும்தான்.
- அன்புடன்,
கமல்ஹாசன்.’’//
தகவலுக்கு நன்றிங்க. இவரால் சொல்லபட்ட கருத்து களமிறங்கி வேலை செய்யும் நல்லவர்கள் மனதை புண்படுத்தியிருக்காது. தமிழக ஆட்சியாளரருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. அம்மா தன்னை வதைத்து எடுத்தாலும் என்று அச்சம் இப்போ வந்திடுச்சு. பன்னீர்செல்வத்தின் அறிக்கை வேலை செய்திருக்கிறது.
பாதிக்கபட் மக்களுக்காக குரல் கொடுக்கிறார் என்று முதலில் நினைத்து விட்டேன்.
Post a Comment