Followers

Saturday, December 19, 2015

அர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள

சென்னை,டெல்லி,கல்கத்தா,மும்பாய் நான்கு நகரங்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் சென்னை திரை உலகம் சார்ந்து வருபவர்களையும் அல்லது சேட்டுகள் போன்ற வியாபாரிகளையும் உயரத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.
புது டெல்லி அரசாங்க வேலைகள்,பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்ந்து செய்தி வெளியிட சிறந்த இடம்.கல்கத்தா ட்ராம் வண்டி போலவே மெதுவாக நகரும் நகரம்.அரசியல் போராட்டங்கள்,காளி கோயில் பிரார்த்தனை,ஹுப்ளி பாலம்,அதனை கீழே பாயும் நதியும், கரையும் தத்துவ மனநிலைக்கும், ஜோதிபாசுவின் தொடர் ஆட்சி கம்யூனிஸ சிந்தனைக்கு சிறந்த இடம்.

இதில் மும்பாய் எப்படி வித்தியாசப்படுகிறதென்றால் திறமை,உழைப்பு இருந்தால் பாலிவுட்டிலும் சேரலாம். சாதாரண மனிதனின் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற  நம்பிக்கையை ஊட்டும் நகரம். இது தவிர இந்தியாவின் வர்த்தக மையம் அப்பொழுதும் இப்பொழுதும். மும்பாயின் குண்டு வெடிப்பு துயரங்களையெல்லாம் தூசி தட்டி விட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் நகரமும் மக்களும்.

சர்ச்கேட்,ஸ்டாக் எக்சேஞ் பக்கம் விற்கும் பழைய புத்தகங்கள் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா,மிட் டே,ஸ்கிரின் தவிர,மராட்டி பத்திரிகைகள் போக சொல்லிக் கொள்ளும் படியான பத்திரிகைகள் இருந்ததில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் மெதுவாக ஆக்கிரமித்த போது விளம்பர நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்தன.

தமிழகத்தின் சன் தொலைக்காட்சிக்கு நிகராக ஜி தொலைக்காட்சி இருந்தது எனலாம்.அமெரிக்கா எங்கே சண்டை மூட்டி விடுகிறது எனப் பார்ப்பதற்கு சி.என்.என் வுல்ஃப் பிளிட்ஸர். தசாவதாரம் பிளிட்ஸர் வைரல் தேடுவது மாதிரியே வுல்ஃப் சதாம் ஹுசேன் வைரல்களை தேடி தகவல் சொல்பவர். பி.பி.சியின் ஹார்ட் டாக் டிம் செபாஸ்டின் தான் பிரணாப் ராய்,கரன் தபார்,பர்கா தத் போன்ற டெல்லி சார் ஊடகங்கள்,மற்றும் தமிழகத்தில் இப்பொழுது களமாடும் ஞான சேகரன்,ரங்கராஜ் பாண்டே போன்றவர்களுக்கு முன்னோடி.

இதில் முக்கியமான ஒருவர் விடுபட்டு போனார்.அவர்தான் அதிரடி மன்னன் அர்னாப் கோஸ்வாமி. பொதுவாக சத்தம் போடுகிறார்,மற்றவர்களை பேச விடுவதில்லை,டைம்ஸ் நவ் தாதா என்ற பலரின் விமர்சனங்களுக்கு அவருடைய நிகழ்ச்சியும் அதனை நிகழ்த்தும் விதமும் காரணம்.

 டெல்லி ஊடகங்கள் செயல்படும் விதம் போரடித்த காரணத்தினால் மும்பாய் வந்ததாகவும் டீ பார்டி,கண்காட்சிகள்,கட்சி சார்ந்து கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தம் போன்றவை டெல்லி ஊடகத்துறையாளர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.பர்கா தத்,ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்களின் 2G பக்க சார்பை உதாரணமாக கூறலாம். 

ஒரு நாள் மும்பாயின் மெரின் டிரைவில் நடக்கும் போது எதிர்ப்பட்டவர்களின் முகங்கள் தனக்கு டெல்லியின் அவநம்பிக்கையை போக்கியதாக கூறுகிறார் அர்னாப்.உலக ஊடகங்களான சி.என். என்,பி.பி.சி போன்றவை மும்பாயிலிருந்து இயங்குவதற்கான வாய்ப்புக்களாக மும்பாய்,பெங்களூர் போன்ற நகரங்களின் தொழில் நுட்பம் பயன் படுமென்றார். சி.என்.என் டைம்ஸ் நவ் செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருக்கிறது.

மும்பையின் லோயர் பரேலில்  டெல்லி மாதிரி தனக்கு சனிக்கிழமை விருந்து அழைப்புக்கள் இல்லாத சூழலில் எந்த கட்சி சார்ந்தும் கருத்து சொல்லாத சூழல் மும்பாயில் இருப்பதாக சொல்கிறார். காமன் வெல்த் ஊழலை பிரிட்டிஷ் மகாராணியின் ஒரு சின்ன கடிதம் மூலம் மோப்பம் பிடித்து லண்டன் வரை சென்று செய்தியாக கசிய விட கல்மாடி ஓவராக சீன் போட்டதில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வெளிக்கொண்டு வந்ததாக கூறுகிறார். தன்னுடன் பணியாற்றுபவர்கள் துடிப்புள்ள 30 வயதுக்கும் கீழான இளைஞர்கள் என்கிறார். அருகிலேயே ஜெர்மன் போன்ற ஏனைய நாடுகள் தங்கள் நெட்வொர்க்குடன் செயல்படுவதால் மும்பாய் உலக மீடியா செயல்படுவதற்கான சிறந்த இடம் என்கிறார்.

அர்னாப் கோஸ்வாமியை அவரது நிகழ்ச்சிகளுக்கும் அப்பால் சரியாக புரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய யூட்யூப் காணொளிகள்.



அன்னா ஹசாரே, அர்விந்த கெஜ்ரிவால் கூட்டணி கொஞ்சம் நம்பிக்கை தந்து திசை மாறி விட்டது.

முன்பு நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும்,ராகுலும் பந்தா காண்பித்து விட்டு இன்று பெயிலுக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கு அர்னாப் கோஸ்வாமி காட்டில் கொய்யாப்பழம்தான்.காங்கிரஸை கடிச்சு தின்னப் போறார்.





 

4 comments:

http://rajavani.blogspot.com/ said...

ராஜ நட..அர்னாப் பற்றி அவ்வளவாக தெரியாது. நீங்கள் எழுதியவுடன் தேடினேன் ராஜ் தாக்ரே பேட்டியின் போது அவர் பம்மி பேசியதை எழுதியிருந்தார்கள்.

ஜோதிஜி said...

டெல்லி அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் போன்றவற்றை அதிக அளவில் நெருக்கமாக கவனிக்க முடியாத சூழ்நிலையில் பணிபுரியும் சூழல், வாழ்க்கை நிலை போன்றவற்றால் பல சமயம் வருந்தியதுண்டு. வாய்ப்பு கிடைக்கும் போது ஆங்கில சேனல் பக்கம் திருப்பினால் அங்கு நடக்கும் கூத்துக்களைப் பார்த்து எரிச்சலின் உச்சத்திற்கே போனதுண்டு.

ராஜ நடராஜன் said...

வாங்க கலாரசிகரே! வர வர நான் உங்க பதிவு ரசிகன் ஆகிடுவேன் போல இருக்குதே.சுட்ட வடைகள்ன்னாலும் ருசியாகவே இருக்குது:)

நானும் பார்த்தேன்.அர்னால்டாவது பம்மியிருக்கலாம். ராஜ் தாக்கரே முழி,மூஞ்சி எல்லாமே தாதான்னா தாதாவுக்கு தாதா பால் தாக்கரே கரன் தாபரை மிரட்டிய மிரட்டலையும் பாருங்கள்.சிவசேனா மும்பாய் தீவிரவாதின்னா ஒவேசி ன்னு அண்ணன் தம்பி ஹைதராபாத் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். மூவருக்கும் ஏக பொருத்தம். இதில் ஒரு ஒவேசி பாராளுமன்ற மெம்பர் வேற.நல்ல வேளை தமிழனுக்கு இந்தியும் தெரியவில்லை.மராட்டியும் தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நலமா? இணைய தொடர்பில் இங்கே வருடத்திற்கு ஒரு முறை சந்தா கட்டி விட்டால் ஒரு மணி நேரம் உபயோகத்திற்கும்,ஒரு நாள் உபயோகத்திற்கும் ஒரே சல்லி. இது போக ஒவ்வொரு கட்டிட கூரையிலும் சாட்டிலைட் குடையை உட்கார வைத்து ரிசிவருடனும்,தொலைக்காட்சியுடனும் இணைத்து விட்டால் அனைத்து சானல்களும் வந்து விடுகின்றன. தமிழகத்தின் சன் , கலைஞர் போன்றவை கட்டண சேவையாக இருந்து இப்ப வாங்குறதுக்கு ஆட்கள் இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது. இது போக வேகம் அதிகமாக இருப்பதால் புதிய தலைமுறை,தந்தி போன்றவற்றையும் பார்த்து விட முடிகிற்து. இது போக உலக செய்திகளுக்கு சி.என்.என்,பி.பி.சி இவை இரண்டுக்கும் எதிராக ஈரானிலிருந்து வரும் பிரஸ் நியுஸ் போன்றவை பார்க்க நேரமிருந்தால் மொத்த உலக நிகழ்வுகளும் தெரிந்து விடுகிறது.ஆங்கில சேனல்களான என்.டி.டி.வி,டைம்ஸ் நவ் தவிர தமிழக தொலைக்காட்சி விவாதங்களும் கூட தங்கள் கருத்தை நிலை நாட்டி விடவேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரே காட்டு கத்தல்தான். சி.என்.என் காரன் ஒரே நேரத்தில் 4 பேரையும் விவாதம் செய்ய விட்டு தனித்தனி குர்லாக கொண்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை இந்திய மீடியாக்களும் கடை பிடிக்க வேண்டும்.