Followers

Monday, May 16, 2011

நக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்

தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப் பூட்டி சாவியை எடுத்துகிட்டுப் போயிட்டார்.நமக்கு மட்டுமே கூகிள் சூனியம் வெச்சுட்டாங்கன்னு பார்த்தா மொத்த பதிவு கடைகளையும் இழுத்துப் பூட்டிட்டாங்கன்னு தேர்தல் முடிவுகள் வந்தப்புறம் மெதுவா தெரிந்தது:).

வேற வழியில்லாமல் தொலைக்காட்சிதான் கதின்னு ரிமோட்டை திருப்புனா என்றைக்கும் இல்லாத மாமியாவா கலைஞர் அய்ங்கரனில் எப்படியும் ஜெயிச்சிடப் போகிறோம்ங்கிற நம்பிக்கையில தி.மு.க இருந்ததால் மீசை நக்கீரன் கோபாலையும்,ரமேஷ் பிரபாவையும் வரவழைச்சு பந்தி வச்சிட்டிருக்காங்க.நக்கீரன் கோபால் கொஞ்சம் கிராம வாடை தமிழோட தான் எடுத்த தேர்தல் கணிப்புக்கும் மற்ற ஊடகங்கள் எடுத்த கணிப்புக்குமுள்ள ஆறு வித்தியாசங்களை அளந்து விட்டுகிட்டிருக்கிறார்.ரிமோட் பட்டனை தட்டுனா அடுத்த சானலுக்கும் மக்கள் போவார்கள் என்ற நினைவு இல்லாத ஞானசூன்யம் மாதிரி கோபால் புளுகு மூட்டைகளை எடுத்து விட்டுக் கொண்டிருக்க NDTV க்கு தாவினால் பிரணாப் ராய், இந்தியன் எக்ஸ்பிரஸ் சேகர் குப்தா பெங்கால்,தமிழ்நாடு,கேரளா,அஸ்ஸாம்,புதுச்சேரின்னு ஒரே வரிசையில பூஜ்யத்திலிருந்து எண்ணிக்கைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் திறக்கப்படும் EVM கூட முந்திக்கொண்டது கேரளாவே.

தபால் ஓட்டுக்கள் முன்பு எண்ணப்படுவதால் தமிழகத்தில் தாமதம் என்று பிரணாப் ராய் சொல்லி சிறிது நேரத்துக்குப் பின் முதல் முதல் போணி தி.மு.க விற்கு விழுந்தது.மறுபடியும் கலைஞர் அய்ங்கரனுக்கு வந்தால் ஸ்டாலின் முன்ணணி,துரைமுருகன் முன்ணணி என்பதோடு வீணாப் போன அனைத்து அமைச்சர்களின் பெயர்களையும் ஊமக்குசும்பு சிரிப்போட தேர்தல் வர்ணனையாளர் சொல்லிகிட்டிருக்கிறார். தி.மு.க 29 இடங்களில் முன்ணணி,அ.தி.மு.க 21 இடங்களின் முன்ணணின்னு NDTVக்கு மாறாக ஒரு அழுகுணி ஆட்டம் வேற.சன்,கலைஞர்,ஜெயா தொலைக்காட்சிகள் எப்பொழுது இந்த மாதிரி அல்ப சந்தோசங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

கிட்டத் தட்ட 100 இடங்கள் வரைக்குமான எண்ணிக்கை நேரத்தில் நக்கீரன் கோபாலைக் காண இயலவில்லை.அப்புறமென்ன இருக்கவே இருக்குது மானாட மயிலாட கைவசம் கலைஞர் தொலைக்காட்சிக்கு.கைபேசி, தொலைக்காட்சி நேரலை,இணைய தகவல் பரிமாற்றம் என்று இருக்கும் இந்த கால கட்டத்தில் கூட பூனைக் கண்னை மூடிக்கொண்டால் தமிழகம் இருண்டு விடுமென்ற மனோபாவம் ஏன் என்று புரியவில்லை.கெட்டிக்காரன் புளுகு ரெண்டே நாளில் தெரியும்ங்கிற மாதிரி இருக்கும் போது கருத்துக்கணிப்புக்கள் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களும் அதிலும் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக்கணிப்புக்கு இனிமேல் கடவுள் இருக்கிறார் என்று நம்புவேன்ங்கிற மாதிரி  கருத்துக் கணிப்பு உண்மையானால் ஹெட்லைன்ஸ் டுடேயை இனிமேல் நம்புவேன்னு ஒரு பெண் பேட்டியாளரிடம் கலைஞர் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் நினைக்க இப்ப சிரிப்பாய் வருது.

அமெரிக்கா முதற்கொண்டு தனக்கு சாதகமாக அரசியலில் doctoring செய்வது புதியதல்ல என்றாலும் தி.மு.க ஆட்சியிலும், இந்த தேர்தலிலும் ஒரேயடியாக முழுப்பூசணியை முழுசா மறைக்கும் குணநலன் கொண்ட ஊடகமென்றால் அது நக்கீரன் தான்.பத்திரிகைக்கென சில ஊடக தர்மம் என சொல்லப்படும் ethics of journalism கொஞ்சமுமில்லாமல் அம்மண மாய் திரிந்த பத்திரிகையென்றால் அது நக்கீரன் மாத்திரமே.பிரபாகரன் புகைப்படம் doctored,கஸ்பரை வைத்து புளுகு மூட்டை அவிழ்த்து விட்டது முதல் ஊடக நட்பு என்ற பெயரில் கருணாநிதிக்கு துரோகம் செய்தது வரை அடங்கும்.இந்த லட்சணத்தில் சிறந்த பத்திரிகையாசிரியர் என்ற தம்பட்டம் வேறு பீத்தல்.

நான் அ.தி.மு.க சார்பாளன் அல்ல என்று முன்பே எனது அரசியல் நிலைப்பாடு பதிவில் சொல்லியிருக்கிறேன் என்ற நினைவுபடுத்தலோடு தமிழகம் அரசியலில் பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவாக இருந்தாலும் வாழ்க்கை நடைமுறைக்கேற்ப மக்கள் தங்கள் ஜனநாயக கடமைகளை செய்து வருவார்கள் என்ற நம்பிக்கை இப்பொழுது கொஞ்சம் துளிர் விட்டிருக்கிறது.இந்த தேர்தல் சிறு இளைப்பாறுதல் மட்டுமே.

ஜெயலலிதா பற்றி சிலாகிக்கவோ,விமர்சனம் செய்யவோ இது தகுந்த நேரமல்ல.நிறைய பதிவுகளில் அவரது பழைய ஆட்சி முறை அனுமானங்களின் பேராலேயே அவர் அப்படி செய்து விடுவார்,இப்படி நடந்து கொள்வார் என்று இந்த நேரத்தில் விமர்சிப்பது சரியான மதிப்பீடாக இருக்க முடியாது.அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்றாலே 100 நாட்களில் ஒருவரின் செயற்பாடுகள் என்ன என்பதை கவனிக்கிறார்கள்.ஜெயலலிதா ஒரு முறை நகை நட்டு போட்டுக்கொண்டார்,ஊழல்கள் செய்து விட்டார் என்ற அடிப்படையிலே வரும் காலத்திலும் அப்படியே இருப்பார் என்று கிளி ஜோசியம் பார்ப்பது நல்ல அணுகு முறையாக இருக்காது.நிகழ்வுகளின் அடிப்படையிலேயே விமர்சனங்கள் செய்வது நல்ல மதிப்பீடாகும்.மக்கள் வரிப்பணத்தில் கட்டிய வசதி நிறைந்த புது சட்டசபையில் உட்கார மாட்டேன் என்ற பிடிவாதம்,ஆணவம் ஜெயலலிதாவுக்கு நல்லதல்ல என்றாலும் ஸ்டாலினை முன்னிலைப்படுத்த துணை முதல்வர் பதவியைக் கொண்டு வந்த போது இருந்த அதிர்ச்சி பின் பழக்கமாகிப் போனது போல் ஜார்ஜ் கோட்டையும் ஒருவேளை நமக்குப் பழகிப் போகலாம்.முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலேயே நக்கீரனின் ஜெயலலிதா நிலைப்பாடு எப்படி என்று நமக்குத் தெரியும்.தி.மு.க வின் முரசொலியாகி விட்ட இந்தக் கால கட்டத்தில் சொல்லவும் வேண்டுமா என்ன?ஆனால் நக்கீரன் சொல்வது உண்மையா அல்லது கோயபல்ஸ் திட்டமா என்பதை கணிக்கும் தகுதியில் பதிவுலகம் இருப்பதால் நக்கீரன் பருப்பு வெந்ததா இல்லையா என நம்மால் சொல்லி விட முடியும்.

இதோ முதல் கணையாக ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்க 50 கோடி செலவாகுமென நக்கீரன் கோபால் படம் போட்டிருக்கிறார்.உண்மையா? பொய்யா என மெரினா ரோட்டில் பைக்,கார் ஓட்டுபவர்கள் ஒரு எட்டு உள்ளே போய் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்.காவல்துறை தண்ணீ(ர்) அடிப்பதைப் பார்த்தால் அவ்வளவு செலவு ஆகிற மாதிரி எனக்கு தோணல.ஒரு வேளை பராமரிப்பு செலவு 50 கோடியென்றாலும் நக்கீரன் பனைமரத்துலருந்து பால் குடிக்கிறாரா?கள் குடிக்குறாரா என்கிற சந்தேகத்துக்கு கோபாலின் ஊடக பக்க சார்பே காரணம்.  

20 comments:

bandhu said...

//சன்,கலைஞர்,ஜெயா தொலைக்காட்சிகள் எப்பொழுது இந்த மாதிரி அல்ப சந்தோசங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.//
உண்மையிலேயே இது போன்ற அல்பத்தனங்களை எப்போ தான் நிறுத்துவனுன்களோ!
நக்கீரன் கோபால் போன்ற ஆசாமிகளுக்கு க்ரேடிபிலிட்டி கொஞ்சமும் இல்லை. வெறும் sensational tabloid இந்த நக்கீரன்!

MANO நாஞ்சில் மனோ said...

கோ'வாலு எப்பவுமே இப்பிடித்தான்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைப்பு குடுங்க நடராஜன்...

ராஜ நடராஜன் said...

////சன்,கலைஞர்,ஜெயா தொலைக்காட்சிகள் எப்பொழுது இந்த மாதிரி அல்ப சந்தோசங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.//
உண்மையிலேயே இது போன்ற அல்பத்தனங்களை எப்போ தான் நிறுத்துவனுன்களோ!
நக்கீரன் கோபால் போன்ற ஆசாமிகளுக்கு க்ரேடிபிலிட்டி கொஞ்சமும் இல்லை. வெறும் sensational tabloid இந்த நக்கீரன்!//

வாங்க பந்து!நீங்க sensational tabloid ன்னு சொல்லி லண்டன் Sunday மாதிரி தரத்துக்கு நக்கீரனை உயர்த்தி விட்டுவிடுவீங்க போல இருக்குதே:)

papparazzi கள் கூடத்தான் சூடான போட்டோ நியூஸ்களுக்கு அலையறாங்க.ஆனால் அதில் ஒரு நேர்மையோட செயல்படுறாங்க.நக்கீரன் மாதிரி பெருச்சாளியை பெருமாள் ஆக்குவதில்லை.

பொய்கள் சொல்லி ஊடக வியாபாரம் நக்கீரன் கோபால் செய்வது சமூக கேடுகள் அல்லவா?

ராஜ நடராஜன் said...

//கோ'வாலு எப்பவுமே இப்பிடித்தான்....//

மனோ!பெருச்சாளி கோ வாலு வெட்டாட்டி தமிழக வீட்டை அரிச்சு தின்னுடும் போல இருக்குதே.

தமது உழைப்பில் உருவாகிய ஒரு ஊடகத்தை ஏன் தவறான வழிக்குப் பயன்படுத்தனும்.So Sad Gopal.

ராஜ நடராஜன் said...

//தமிழ்மணம் இணைப்பு குடுங்க நடராஜன்...//

தமிழ் மணம் இணைப்பு கொடுத்திருந்தேனே மனோ!

சிவா said...

நன்றாக எழுதியிருகிறீர்கள் நடராஜன். நக்கீரன் என்ற பெயருக்கான மரியாதையை கெடுத்தவர் இந்த கோபால்.

ராஜ நடராஜன் said...

//நன்றாக எழுதியிருகிறீர்கள் நடராஜன். நக்கீரன் என்ற பெயருக்கான மரியாதையை கெடுத்தவர் இந்த கோபால்.//

எப்படியிருக்கீங்க சிவா!இனிப்புக்கள் கொடுத்து முடிச்சிட்டீங்களா:)

ஜெயலலிதாவின் இன்றைய முதல் மந்திரி பதவியேற்பு தமிழகத்திலும்,ஈழ மக்களின் நம்பிக்கையிலும் ஒரு புதிய களத்தை தோற்றுவித்திருக்கிறது.அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Denzil said...

"வரிப்பணத்தில் கட்டிய வசதி நிறைந்த புது சட்டசபையில் உட்கார மாட்டேன் என்ற பிடிவாதம்,ஆணவம் ஜெயலலிதாவுக்கு நல்லதல்ல என்றாலும்" இது மட்டுமல்ல இன்னும் பல "என்றாலும்"கள் எழுத வேண்டியிருக்கும் உங்கள் அதிமுக சார்பு நிலை மாறும் வரை. அதை ஒத்துக்கொள்ள எதற்கு இத்தனை தயக்கம்?

ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சி குறித்து எழுதுவதற்கு முன் சோனியா டீ பார்ட்டி குறித்து ஒரு draft எழுதி வைத்துக்கொள்ளவும்.

ராஜ நடராஜன் said...

//"வரிப்பணத்தில் கட்டிய வசதி நிறைந்த புது சட்டசபையில் உட்கார மாட்டேன் என்ற பிடிவாதம்,ஆணவம் ஜெயலலிதாவுக்கு நல்லதல்ல என்றாலும்" இது மட்டுமல்ல இன்னும் பல "என்றாலும்"கள் எழுத வேண்டியிருக்கும் உங்கள் அதிமுக சார்பு நிலை மாறும் வரை. அதை ஒத்துக்கொள்ள எதற்கு இத்தனை தயக்கம்?

ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சி குறித்து எழுதுவதற்கு முன் சோனியா டீ பார்ட்டி குறித்து ஒரு draft எழுதி வைத்துக்கொள்ளவும்.//

வாங்க டென்சில்!தி.மு.கவின் ஆட்சிக்காலத்தையும் முக்கியமாக ஈழத்தமிழர்கள் வாழ்வின் நிலைப்பாட்டில் கலைஞரையும் விமர்சித்த காரணத்தால் நான் அ.தி.மு.க சார்பு நிலைக்காரன் என்று சொல்வது சிரிப்பாய் சிரிக்கிறது எனது உள் மனம்:)என்னைத் தொடர்ந்து கொண்டே வந்திருந்தால் உங்களுக்கு இந்தக் குழப்பம் வந்திருக்காது என நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கருணாநிதியால் இயலாததை ஜெயலலிதா செய்வாரா என்றே எதிர்பார்க்கிறார்கள்.செய்வாரா?இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.நான் அறிந்த வரையில் ஆட்சி மாற்றத்தில் கடந்த இரு நாட்களாகவே மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.ஜெயலலிதா தவறுகளில் பாடங்கள் கற்றுக்கொள்வார் என எதிர்பார்ப்போம்.கற்றுக்கொள்ள இயலாத காலத்து என்னை விட துவைத்துப் போடும் பதிவுலக சாம்பியன்கள் இருக்கவே இருக்கிறார்கள்.கூடவே நானும் மத்தளம் தட்டுவேன்.

இறுதியாக ஒன்று எதிரியை விட நம்பிக்கைத் துரோகி மோசமானவன் என்பதே வரலாறுகள் புகட்டும் பாடம்.

சிவா said...

///ஜெயலலிதாவின் இன்றைய முதல் மந்திரி பதவியேற்பு தமிழகத்திலும்,ஈழ மக்களின் நம்பிக்கையிலும் ஒரு புதிய களத்தை தோற்றுவித்திருக்கிறது.அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?///

ஈழம் விவகாரம் தேர்தலில் கடுமையாக எதிரொலித்திருப்பதால், நிச்சயம் இது ஜெயலிதாவின் ஈழ்ப்பார்வையை மாற்றியிருக்கும் என்றுதான் நம்புகிறேன். எனவே நல்லதே நினைப்போம்.

ராஜ நடராஜன் said...

சிவா!தங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கலைஞர் வெறுமனே கடிதங்கள் எழுதி காலத்தை கடத்தியதை விட ஜெயலலிதா டீ பார்ட்டி வைத்தாலும் ஈழ மக்களுக்கு ஏதாவது செய்வாரா என பார்க்கலாம்.பிரச்சினைகளுக்கு தீர்வு முறை என்பது மோதிப்பார்ப்பது மட்டுமல்லாமல் எதிரியோடு பேச்சு வார்த்தை என்பதும் அடங்கும்.

சோ போன்றவர்கள் அரசியல் ஆலோசகர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.இருந்தாலும் ஜெயலலிதா தனது சுயபுத்தியை உபயோகிப்பார் என எதிர்பார்ப்போம்.

தவறு said...

போனவாட்டி மாதிரி அந்தம்மா ஆட்சி இருக்காது என்பது பொதுவான கருத்தாக உள்ளது ராஜநட.....100 நாள் தான நாஜநட..

கோபால் என்ன செய்வாரு பாவம்... துதிபாடிகள் கடைசி வரையும் பாடினாதான் அவர்களுக்குள்ள மரியாதை கிடைத்துகொண்டே இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//போனவாட்டி மாதிரி அந்தம்மா ஆட்சி இருக்காது என்பது பொதுவான கருத்தாக உள்ளது ராஜநட.....100 நாள் தான நாஜநட..

கோபால் என்ன செய்வாரு பாவம்... துதிபாடிகள் கடைசி வரையும் பாடினாதான் அவர்களுக்குள்ள மரியாதை கிடைத்துகொண்டே இருக்கும்.//

எனது மனநிலை அலைவரிசையில் நீங்களும் பயணிப்பதில் மகிழ்ச்சி.ஏனைய துறைகளில் கட்சி சார்பு இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் பத்திரிகை துறையில் துதி பாடுவதும் அதுவும் நெற்றிக்கண் திறந்தாலும் பஞ்ச் டயலாக் வைத்துக்கொண்டு நக்கீரன் செயல்படுவது பத்திரிகை தர்மம் அல்ல.இதே அளவுகோலில் தான் இந்து பத்திரிகை ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் போதும் எதிர் விமர்சனங்களை முன் வைக்கிறேன்.

முன்பு அரசனைப் புகழும் புரவலர்கள் ஏழைகளாக இருந்த்தாக சரித்திரம் சொல்கிறது.இப்பொழுது முடிசூடா மன்னனை புகழ்பவர்கள் அனைவரும் பணக்காரர்களாய் இருப்பது முரண்:)

navani said...

sir dmk vai romba thitathinga. sir awar saidha sila nalla thitangalyum paarunga sir

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டுத்த சானலுக்கும் மக்கள் போவார்கள் என்ற நினைவு இல்லாத ஞானசூன்யம் மாதிரி கோபால் புளுகு மூட்டைகளை எடுத்து விட்டுக் கொண்டிருக்க//
பாவம் நக்கீரன் நிருபர்கள் அவங்கங்க வீட்லியே கருத்து கணிப்பு படிவத்தை நிரப்புனது இவருக்கு எங்க தெரியப்போகுது பாவம்...?

ராஜ நடராஜன் said...

//sir dmk vai romba thitathinga. sir awar saidha sila nalla thitangalyum paarunga sir//

நவனி!நீங்க மொத்த ஊடகங்களையும் பக்க சார்புகள் இல்லாமல் படித்தால் கலைஞர் செய்த நல்லவைகள்,தீயவைகள் என எடை போட இயலும்.

அதை விட திட்டுவதா,குட்டுவதா அல்லது பாராட்டுவதா என மக்கள் நீதிபதிகளாய் தீர்ப்பளித்து விட்டார்கள்.இனி நான் அவருக்கு சிபாரிசுக்குப் போயும் பலனில்லைதானே!

ராஜ நடராஜன் said...

//அடுத்த சானலுக்கும் மக்கள் போவார்கள் என்ற நினைவு இல்லாத ஞானசூன்யம் மாதிரி கோபால் புளுகு மூட்டைகளை எடுத்து விட்டுக் கொண்டிருக்க//
பாவம் நக்கீரன் நிருபர்கள் அவங்கங்க வீட்லியே கருத்து கணிப்பு படிவத்தை நிரப்புனது இவருக்கு எங்க தெரியப்போகுது பாவம்...?//

சதிஷ் அண்ணே!கருத்துக் கணிப்பு படிவத்தை வீட்லியே நக்கீரன் நிருபர்கள் நிரப்புனது என்று தேர்தலுக்கு முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் சூட்டைக் கிளப்பி விட்டிருக்கலாமே:)

ஜோதிஜி திருப்பூர் said...

இந்த பதிவில் வவ்வாலை காணோம்?

ஜோதிஜி திருப்பூர் said...

நானும் அந்த சமயத்தில் நக்கீரன் அக்கிரமத்தை பார்த்து நொந்து போய்க் கொண்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.