அம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தியின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து தோல்விகளை கௌரவமாக ஏற்றுக்கொண்ட ராதாரவி,சரத்குமார் தன்னிலை திரும்பியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி\றேன். ஓய்வாக இருக்கும் போது என்னவெல்லாம் பேசினோம் என்று யூடியுப் பக்கம் சென்று சுய பரிசோதனை செய்து கொள்ளூங்கள். யூ டூ சரத் சார்? So Sad.
தோல்விக்குப் பின் வந்த பண்புகளை தேர்வுக்கு முன்பே காட்டியிருந்தால் சரத்குமார் அணிக்கு எந்த தில்லு முல்லும் செய்யாமலே வெற்றி வாய்ப்புக்கள் வந்தடைந்திருக்கும். தபால் ஓட்டு சரத்குமார் அணிக்கு அதிகமாக வந்த போதே அவரின் குழு வெற்றியை நோக்கி நகர்வது மாதிரியே தெரிந்தது. நேரடி ஓட்டுக்கள் உண்மையான கள நிலையை கடைசி நேரத்தில் வெளிப்படுத்தியது. திரைக்கு முன்னால் மைக்கில் காட்டிய கோபம், குதர்க்கம், தனி மனித தாக்குதல்கள் திரைக்கு பின்னால் எழாமல் தமிழ் tதென்னிந்திய திரையுலகம் மேலும் வளர வேண்டும்.
எனது அன்பிற்குறிய பாரதிராஜா,சேரன் போன்றவர்கள் திரைப்படங்களை உருவாக்கும் திறனுக்கும்,தனி மனித செயல் படும் விதத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பதை நிரூபணம் செய்தார்கள். தமிழ் திரைப்பட உலகம் பல மாநிலங்களின் திறன் தேடுதல் கொண்ட அமைப்பு. முக்கியமாக பாரதிராஜாவின் தேடல் ஓட்டம் இருக்கிறதே! ஒரு தமிழ் நடிகையை கூட அறிமுகப் படுத்தாமல் தமிழனுக்கு வக்காலத்து வாங்குகிறார் பாரதிராஜா.சீமானின் பிற்போக்கு மன பாவத்தோடு இணைகிறார் சேரன் .சரத்குமாருக்கு நன்றி கடமை பட்டவர் என்கிறார். உலகம் மொழிகளை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.இதில் தமிழ் திரைப்படமும் இணைந்தாலும் தமிழன் டா என்ற கொக்கரிப்புக்கு மட்டும் குறைவில்லை.பேசும் மொழியும்,உணர்வும் தமிழுக்கு வேறுபட்டவை.இவை திரைப்பட சண்டையில் சேர்த்தியில்லை. அப்படியிருந்திருந்தால் இன்னும் தமிழ் திரையுலகம் பாகவதம் பாடிக்கொண்டே இருந்திருக்கும்.
ரஜனி சார்! இவ்ளோ நாட்கள் வாய் மூடி மௌனம் சாதித்தீர்களே! இன்னும் சில மணி நேரம் ஓட்டுப் போடும் வரை மௌனம் கலைக்காமல் இருந்திருக்கலாமே?சென்ற பதிவில் உங்களுக்கும் சேர்த்துதானே உங்கள் மௌனத்துக்கு வக்காலத்து வாங்கினேன்:) மற்ற மாநில நடிகர் சங்கங்களை விட திராவிடம் என்ற சொல்லுக்கு இணையாக தென்னிந்தியா என்ற சொல் நன்றாகத்தானே இருக்கிறது! கமல் இந்திய நடிகர் சங்கம் என்கிறார்.உங்களை விட கமல் ஒரு படி மேல் என்பதில் ஐயமில்லை. நடிப்பு,சிந்தனை உட்பட.
உலகப் பார்வை பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் திரையுலகம் எல்லைகள் கடந்ததாகவே படுகிறது. கலை விழாவுக்கு சிங்கப்பூர்,மலேசியா வாழ் மக்கள் கரம் நீட்டுகிறார்கள். டூயட் பாடலுக்கு அனைவரும் ஐரோப்பா ஓடுகின்றோம் ( பாடலுடன் கூடவே நானுமல்லவா பயணிக்கின்றேன்:))
திரைப்பட வசூலை லண்டன் போன்ற நாடுகள் தாங்கிப் பிடிக்கின்றன. வேண்டுமென்றால் அமிதாப்பையும், சாருக்கானையும், ஜாக்கி சானையும், அர்னால்ட் ஸ்வாஸ்னகரைக் கூட கொண்டு வந்து விடுகிறோம். பன்முகம் கொண்ட நம்மவர்களின் பரந்த மனப்பான்மையே இந்திய திரைப்பட துறையில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக் செயல்படுகிறது எனலாம்
தமிழ் திரையுலகம் மொழி,கலாச்சாரத்தோடு,பொழுது போக்கு,மகிழ்ச்சி என்ற நகைச்சுவை, கலையோடு,ஒலி,ஒளிப்பதிவு காதலுடன்,பாடல்,இசையென்ற கலவையோடு வியாபார யுக்திகளை திரைப்படத்தின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கிறது. இவற்றின் பின் தனி மனித வாழ்க்கையின் வெற்றி தோல்விகள் அமுங்கி கிடக்கின்றன.
பெற்றோர் வைத்த பெயரே பலருடன் ஒட்டிக்கொண்டு வாழ்க்கை முழுவதும் உச்சரிப்பு சொல்கிறது. மரபு காக்க குரல் கொடுப்போர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கம் பெயருக்கே வாக்களிக்கலாம்.தற்போதைய சூழலில் ரஜனியின் குரலாக தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம்,இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் விவாதத்தையும்,புது அரசியலையும் உருவாக்கும்.தமிழும் சேர வேண்டுமென்று ரஜனியோடு விரும்புபவர்கள் தலைப்பில் உள்ள படி தமிழ் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என வைத்துக்கொள்ளலாம்.தமிழும் இருக்கிறது,இந்தியாவும் இருக்கிறது:)
பெயரில் என்ன இருக்கிறது. பாண்டவர் அணி தமிழ் திரைப்பட நடிகர்களுக்கும்,முக்கியமாக நலிந்த நாடக நடிகர்களுக்கும்,துணை நடிகர்களின் வாழ்வுக்கும் எப்படி செயல்பட போகிறது என்பதும் இவர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை எப்படி முன்னோக்கி செயல்படுகிறது என்பதே முக்கியம்.
3 comments:
வணக்கம் சகோ,
நல்ல பதிவு!!!
நான் அறிந்ந்தவரை தமிழன், தமிழ் தேசியம் என்று கதை விடுபவர்கள் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள். தலித் தமிழனை ஒடுக்குவதில் முதலிடம் வகிப்பது பிற்பட்ட சாதி தமிழன் என்பதைப் பத்தி மட்டும் மூச்சு விட மாட்டார்கள்.
இதில் அரிதாரம் பூசும், பூச வைக்கும் முகங்களின் வேடம் வெளுக்கிறது.
எனினும் பாண்டவர் அணி வெற்றி இதனை பொய்யாக்கியது.
கலை உலகில் சாதி, மொழி வாதம் என்பது தேவை அற்றது.இப்போது பெரும்பான்மை தமிழ், தெலுங்கு மொழி மாற்றம் செய்யும் வகையில்தான் படம் எடுக்க்கிறார்கள். தமிழ் மட்டும் என்ன்னும் திரை துறையினர் இதனை தவிர்க்க முடியுமா?
நன்றி!!
நான் எழுத வந்ததை சார்வாகன் எழுதி விட்டார்.
நல்லதே நடக்க வேண்டுகின்றேன்!நான் சாமானிய சினிமா ரசிகன் எனக்கு சரத்தும் பிடிக்கும் நாசர் நடிப்பும் பிடிக்கும்!
Post a Comment