Followers

Sunday, January 27, 2013

விஸ்வரூப தீர்ப்புக்கும் அப்பால்!

.

Saturday, January 26, 2013

மோடி vs ராகுல் தேர்தல் களம்.

நம்மைப் போன்ற கருத்து விமர்சகர்களுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பிஜெபிக்கான ஆதரவும் இல்லாமல் காங்கிரஸ்க்கான ஆதரவு இல்லாத யோக நிலையே என்ற போதிலும் பொதுவான அரசியல் களம் என்ன என்பதை மட்டும் ஆராய்வோம்.

காங்கிரசில் மன்மோகன் சிங்கின் செயல்படா ஊமைத்தனத்தால் தான் ஓய்வு எடுக்க நினைத்தாலும் பதவியை ராகுலுக்கு மாற்றிவிடும் ராஜதந்திரமற்ற நொண்டி வாத்தாகவே வெளியேறுகிறார்.பிஜேபி எந்தவித அரசியல் ஸ்டண்ட் செய்யாமலே பிஜெபியின் வாயிலே வாழைப்பழத்தை ஊட்டி விடப்போகிறது.

இந்திய ஜனநாயகம் வேரூன்றியிருந்தாலும் களநிலையை மாற்ற முயற்சிக்கும் சித்து விளையாட்டுக்களும் கூட நிகழும் வாய்ப்பு உண்டு என்ற போதிலும் பொதுவான இந்திய அரசியல் சூழலை மாற்றி விட முடியாது.மோடியை பிரதமராக முன்னிறுத்தி பிஜெபி ஆட்சிக்கு வருவதால் குஜராத் இஸ்லாமியர்கள் மகிழ்ந்தாலும் இப்பொழுதே வயிற்றில் புளி கரையும் நிலையில் இருப்பவர்கள் தாங்கள்தான் தமிழக இஸ்லாமியர்களைக் காக்க வந்திருப்பதாக நினைக்கும் சில அடாவடி இஸ்லாமிய இயக்கங்களே.
இங்கிருந்து நகர்ந்து தி.மு.க,அ.தி.மு.க என்ற கப்பல்களின் கேப்டன்களை நோக்கினால் .அ.தி.மு.க + பி.ஜெ.பி என்ற நிலையில் வண்டியில் உட்கார்ந்து கொண்டே காங்கிரஸ்க்கு ஒரு கராத்தே கிக் விடும் பலமிருந்த சூழலில் கலைஞர் பம்மி பதுங்கியதிலிருந்தே கூட்டணி கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் காங்கிரசோடு ஒட்டிக்கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் சூழலே தென்படுகிறது.இதனைக் கடந்து கூட்டணி சந்தர்ப்ப வாதம் எப்படி அமைகிறதென இனி வரும் காலத்தில் கணிக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா டுடே பத்திரிகை எடுத்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 152 - 162 தொகுதிகளையும் பிஜேபி 198- 208 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது.இதில் மூன்றாம் அணிக்கான கனவுகளிலும் சிலர் இருக்க கூடும்.ஆனால் சாத்தியங்கள் குறைவு.

பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புக்கும் பெப்பே காட்டிவிட்டி தேர்தல் முடிவுகள் வருவதுமுண்டு.உதாரணம் கடந்த பாராளுமன்றத் தேர்தல்.

Friday, January 25, 2013

பாராளுமன்றத் தேர்தலின் இரு தேவைகள்

அரசியல் விமர்சனம் மற்றும் சில நிகழ்வுகளை அப்போதைய உணர்ச்சிகளில் சொல்லி விட்டு பின் திரும்பிப் பார்க்கும் போது உண்மையாகிப் போவதும் சில நேரங்களில் நினைத்ததுக்கு மாறாக போய் விடுவதுமுண்டு.இதற்கு உதாரணமாக 60 ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது எனும் ஜனாதிபதி நாற்காலியை சூடாக்கிக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்கியை சொல்லலாம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி பாணியில் கையை தட்டி சிரித்து விட்டு இதோ மறுபடியும் அரசியல் பேச வந்திருக்கிறேன்.

விரும்பா விட்டாலும் கூட வாரிசு அரசியலுக்கு ராகுல் வரும் சாத்தியமிருக்கிறது என்று முன்பு சொன்னதற்கான சாத்தியங்கள் காங்கிரஸ் சார்பில் உருவாகுவதும் தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வடிவேல் போனதை வடிவேலண்ணே!வேண்டாமென சொன்னதும் உண்மையாகிப்போனது.

சில அரசியல் விமர்சனங்கள் உண்மையாகிப்போனதின் நம்பிக்கையில்
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் நலனுக்கு எதிரான இரண்டு தீய இயக்கங்களாக பாட்டாளி மக்கள் கட்சி,இஸ்லாமிய தீவிரவாதத்தை விதைக்கும் இரண்டு நோஞ்சான் கட்சிகள் ஆனால் ஆபத்தான கட்சிகளை பாராளுமன்ற வளாகத்துக்குள் செல்லும் சந்தர்ப்பம் இல்லாமல் போக கடவது.முடிந்தால் இரு இயக்கங்களும் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்துப் பார்க்கட்டும்.இந்த கட்சி இயக்கங்களை தமிழக அரசியலிருந்து அப்புறபடுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.கூடவே இவைகளுக்கு மாற்றாக குரல் கொடுக்க ஏதாவது இயக்கங்கள் வந்தால் பின் தங்கிய நிலையிலிருக்கும் மக்களை மேன்மை படுத்தும் திட்டங்களோடு முன்வந்தால் கரம் கொடுப்போம்

இதற்கான காரணமாக

1. சாதியால் மக்களை பிரிக்கும் ராமதாஸ் விசமத்தனத்தின் சுயநலம்.

2 கலாச்சார தீவிரவாதங்களை தமிழகத்தில் திணிக்க முயலும் இஸ்லாமிய இயக்கங்கள்.

ராமதாஸின் ஆதரவாளர்களும்,கலாச்சார தீவிரவாத ஆதரவாளர்களும் தீயாக தனியாகவோ அல்லது இணைந்தோ தங்கள் தேர்தல் பணியை இப்பொழுதிருந்தே ஆரம்பிக்கலாம்.ஒரு தீமை இன்னொரு தீமையை கட்டியணைப்பதில் தவறில்லை:)

பதிவை இன்னும் கொஞ்சம் வலுவாக்க பதிவர் இக்பால் செல்வனின் பதிவில் சொன்ன பின்னூட்டத்தின் சாரத்தையும் காபிக்கு சர்க்கரை மாதிரி கலக்கிக் கொள்கிறேன்.

இதுவரை ரஜனியாவது தனது அரசியல் ஆசையை வருவேன் ஆனால் வரமாட்டேன் பாணியில் சொல்லிகிட்டிருந்தார்.ஆனால் கமலோ தான் அரசியல் வனவாசம் செய்தவன் என்பதை துவக்க காலம் முதல் சொன்னதோடு இதுவரை செயல்படுத்தியும் இருக்கிறார்.ஜெயலலிதாவின் பாராளுமன்ற பகடை உருட்டல் இந்த முறை தற்போதைய சூழலில் புதிய அரசியல் அலையை வீசும் சாத்தியங்கள் உருவாக்கி இருக்கிறது.ஒரு புறம் வாரிசு அரசியல் இன்னொரு பக்கம் சுனாமி அறிக்கை மாதிரியான ஜெயலலிதாவின் அரசியல்,ராமதாஸின் சாதி வெறி,மதவாதிகளின் முகம் காட்டும் ஆசை,வீணாப்போன சீமான்,திருமா,பக்க பலமில்லாத வை.கோ,பின்னூட்டத்தில் விட்டுப் போன விஜயகாந்த் என ஒரு புதிய தேர்தல் அரசியல் விரைவில் அரங்கேறப் போகிறது.யார் எந்தப் பக்க கூட்டணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  

Monday, January 14, 2013

மார்க்கத்தின் மூர்க்கத்தோடு

பதிவுகள் இடுவதற்கும் எதிர் வினையாற்றுவதற்கும் புற்றீசல்கள் மாதிரி ஒன்றைக் கடந்து இன்னொன்று என தீயவைகள் உலகை வலம் வருகின்றன.புத்தாண்டாக,பொங்கலாக நல்லவைகள் கண்ணில் பட்டால் மட்டும் பதிவு செய்வோம் என்ற நினைப்பை ரிசானாவின் ம்ரண தண்டனை காணொளி தோல்வியுறச் செய்து விட்டது.

ரிசானாவின் மரணம் குறித்து பலரும் பதிவுகள், பின்னூட்டங்களிட்டும் அதன் தாக்கம் பெரிதாக மனதை பாதிக்கவில்லை.உளவியல் ரீதியாக ஒருவரது மரணத்தை ரசிக்கும் மனப்பான்மையே பலருக்கும் இருக்கிறது என்பதை அத்தி பூத்தாற் போல நிகழ்ந்த ஒரு மரணதண்டனையை பார்வையிட பலரும் சென்ற போது நானும் சாமி கும்பிடாத லெபனான் பாஸும் போகவில்லை. 

மரணதண்டனை தேவையா இல்லையா என பெரும் விவாதங்கள் நிகழ்கின்றன.பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகள் கூட பொதுமக்கள் முன்பு தண்டனையை நிறைவேற்றுவதில்லை.ஒரு மனித உயிர் வலியில்லாமல் எப்படி மரிக்க இயலும் என்ற பரிசோதனைகளில் உலகளாவிய அளவில் பலநாடுகள் பெரும்பாலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகின்றன.

ஈராக்கின் ரத்தம் படிந்த வரலாறு எப்படியிருந்த போதிலும் உலக நாகரீக தொட்டில்களில் ஈராக்கும் ஒன்று.ஒரு இஸ்லாமிய தேசம் என்பதோடு அரேபிய நாடுகளில் ஓரளவுக்கு செகுலரான நாடாகவும் ஈராக்கை சொல்லலாம். வரலாறுகள் தவறாக மாற்றி எழுதப்படுகின்றன என்பதற்கு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பும் ஒன்று எனலாம்.

அமெரிக்க தலையீட்டிற்கு பின்பு சதாம் உசைனின் மரணதண்டனையைக் கூட தனியாக தூக்கிலிட்டே கொன்றார்கள்.அப்படியிருந்தும் உள்துறையின் கசிவால் சதாமின் மரண தண்டனை உலகின் பார்வைக்கு வந்து விட்டது.அல்லாஹ் அக்பர் என உச்ச கொலைவெறிக் குரலிட்டு காமிரா சகிதம் மேற்கத்திய நாட்டவர்களின் கழுத்தை அறுக்கும் மத தீவிரவாதங்களுக்கும் கூட அரசியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு அஜெண்டா இருக்கிறது எனலாம்.

ரிசானாவின் குற்றச்சாட்டில் பல விவாதக் கேள்விகள் எழுந்தும் கூட ஒரு மரணதண்டனையை நிறைவேற்றும் அதிபயங்கரம் எழுத்தில் சொல்லி விவரிக்க இயலாது.மதம் சார்ந்து கடவுள் மறுப்பாளர்கள், மதநம்பிக்கையாளர்கள் என இரண்டு பக்கங்களையும் பார்க்க நினைக்கும் நடுவண் நிலையைத் தாண்டிய மனித உயிர்க்கொலை ரிசானாவின் மரண நிகழ்ச்சி நிரல்.

குற்றங்களுக்கான தண்டனைகள் தற்காலிக நிவாரணியே.அதிலும் கடும் தண்டனைகளால் குற்றங்கள் மறுபடியும் நிகழ்வதில்லையென்றால் சவுதியில் ரத்த வெள்ளத்திற்கு பதிலாக பாலாறும்,தேனாறும் ஓடவேண்டும்.ஒரு நாட்டில் நிகழும் குற்றங்களை வெளிப்படையாக பொதுப்பார்வைக்கு கொண்டு வருவதால் அந்த நாடு குற்றங்கள் நிறைந்த நாடு என்று சொல்ல முடியாது.அது போல் இரும்புக்கரம் கொண்டு இருட்டில் குற்றங்களை வெளியே சொல்லாமல் இருந்து விடுவதால் மட்டுமே ஒரு நாடு புனிதபூமி என்று பெருமை கொண்டாட முடியாது.வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டு மக்களின் குணாதியங்களை எடை போடும் வலிமை பல நாடுகளிலிருந்தும் பணிநிமித்தமாக வாழும் பல நாட்டு மக்களையே சேரும்.குறிப்பாக பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்கள் மட்டுமே இவர்களின் நல்ல குணங்களையும்,யோக்கியதைகளையும் சொல்லும் தகுதி பெற்றவர்கள். ஆனால் இவை எந்த விதமான துணையுமில்லாமல் ஒருமித்து இல்லாமல் நெல்லிக்காய்கள் போல் சிதறிக்கிடக்கின்றன.குறைகளை பொருளாதாரம் என்ற ஒற்றைச் சொல்லால் கடந்து விடுகிறது.தூதரகங்கள் ஒப்புக்கு சப்பாணிகள் மட்டுமே.

ஆடுகளை பலிகொடுக்கும் பழக்கத்தில் மனித உயிர்களையும் தண்டனை என்ற பெயரில் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மதநம்பிக்கை, மதமறுப்புக்கள் கடந்து கண்டிக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்!

Shame on America's economic ethics,Saudi's unreligious values and bloggers dehumanised blind support in the name of religion.