Followers

Saturday, August 1, 2015

அப்துல் கலாமின் இந்திய கனவு

அப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய கனவை தொடரலாம்.

அப்துல் கலாமின் நினைவு கூறலை பின்னோக்கி செலுத்தினால் கல்லூரி காலம் கடந்து பொக்ரான் அணு ஆயூத பரிசோதனை துவங்கி, 2020ல் இந்திய வளர்ந்த நாடாக கனவு,இந்திய ஜனாதிபதி பின் பள்ளி,கல்லூரி,விரிவுரைகள் என இறுதி வரை தொடர் ஓட்டம் என மொத்த இந்தியாவின் பயணம் என வரிசை படுத்தலாம். 

 இந்தியாவின் அணு ஆயுத விஞ்ஞான தொழில் நுட்பம் சிரிக்கும் புத்தன் (Smiling Buddha) என இந்திரா துவங்கி,ராஜிவ் காந்தியால் உரமிடப்பட்டு பின் நரசிம்ம ராவ் அறுவடை செய்யப்பட வேண்டியதின் இயலாமல் போனதன் ரகசியம் தனது கல்லறை வரைக்கும் யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்று விட்டார். காங்கிரஸின் தோல்வியை தொடர்ந்து பி.ஜே.பி வாஜ்பாய் அரசால் பொக்ரான் அணு ஆயுத பரிசோதனை ஆபரேஷன் சக்தி என்ற பெயரால் துணிந்து செயல்படுத்தபட்டது.

இந்திய அணு ஆயுத ஐந்து பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமாக ஒரு பரிசோதனை ஆறு செய்து இந்தியாவிற்கு போட்டியாக அறிவித்துக்கொண்டது.இந்திய,பாகிஸ்தானின் பகைமையை கிரிக்கெட்டில் மட்டுமே காட்டிக்கொண்ட மக்கள் இரண்டு பக்கமே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டனர்.தனக்கு பிடிக்காத ஒன்றை ஒரு நாடு செய்தால் அமெரிக்காவின் முதல் அறிவிப்பு சேங்ஸன் என்பதாகும். இது நம்ம ஊர் லோன் சேங்ஸனாயிடுச்சு மாதிரியல்லாமல் உலக வணிகம் சார்ந்த தடை என பொருள். உதாரணமாக கார் வாங்கி வைத்துக்கொண்டு பெட்ரோல் போட முடியாமல் போவது மாதிரி.

பொருளாதார தடைகளையெல்லாம் மீறி இந்தியா பயணித்தது. சி.என்.என் போன்ற தொலைக்காட்சி விவாதங்களில் இந்திய பாதுகாப்பு அனலிஸ்ட் கே.சுப்ரமணியனின் இந்திய சார்பு பதில்கள்,பிந்தைய கால கட்டத்தில் அமெரிக்காவின் இந்தியா சார்ந்த வெளியுறவு கொள்கை என மாற்றங்கள் ஏற்பட்டன.

யோகாவில் சூரிய நமஸ்காரம் என்பதனை சூரியனுக்கு வணக்கம் என பொருள்படுத்திக்கொள்வது போல் அப்துல் கலாமின் இந்தியாவின் வல்லரசு கனவும் அமெரிக்காவை பார்,ஆஸ்திரேயாவை பார் என மாறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கலாமின் வலுவான இந்திய கனவு இப்படி போகிறது.

I and rajan (Abdul Kalam's 2020 vision co author) have often discussed something I observed during my stint at the defence research& development laboratory(DRDL), hyderabad. I came across three persons there who became in my mind points of reference that called me back unceasingly to certain
issues. 

Venkat had two sons and a daughter. All were graduates and employed. Living in the same area was kuppu who had tree sons. He succeeded in educating only one. He lived in a rented dwelling. Karuppan had two daughters and one son. He was semi employed.Could not educate any of them because of poverty, and had no regular dwelling place. Was it not possible for him to merely give a normal life to his offspring and not an unrealistic or extraordinary one? A reasonable lifespan, an occupation that would provide them basic comforts and good health care.

This is our dream of a developed India.
 உலக அரங்கு அரசியலும்,இந்தியாவின் வாழ்க்கை முறைகளும் 1947 தொட்டு 1990 வரையிலும் தனி மனிதன் வாழ்க்கை போராட்டமாகவே இருந்து வந்துள்ளது.இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை கூட இதன் சாரமாக கொள்ளலாம்.நரசிம்ம ராவின் காலம் தொட்ட இந்திய பொருளாதார கொள்கை மாற்றங்கள்,அந்நிய முதலீடு போன்றவைகள் பொக்ரான் விளைவால் தடை பட்டாலும் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு உள்ளூர் சந்தை பொருள் உற்பத்தியென்பதால் அமெரிக்க சித்தாந்தம் எடுபட வில்லை.

2000 தொடர்ந்த உலக அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு ஆதரவான காலம் எனலாம். இந்தியா முன்னேறிய நாடாகுமா என்ற கேள்வியை 60 களில் கேட்டால் பெரும்பாலோரின் ஒலி உச் கொட்டுவதாகவே இருக்கும். அதன் ஓசை இன்னும் கூட கேட்பதன் காரணம் தமது திறன் மீதான முழு நம்பிக்கையின்மை.

நம்புங்கள் உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெட்ரோலிய பொருட்களை கூவி விற்றாலும் இறக்குமதி செய்வதை விட விவசாயம்,பொருள் உற்பத்தியென ஏற்றுமதியில்தான் இந்திய வணிகம் செயல்படுகிறது.கெரோசினிலிருந்து மேம்படுத்தப்படும் வொய்ட் ஸ்பிரிட் ( white spirit solvent) பெயிண்ட்,இயந்திரங்கள் சுத்தம் செய்தல்,லாண்டரி என பலவற்றிற்கும் தேவையான பொருள்.உள்நாட்டிலேயே இதன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்பதோடு இதன் இறக்குமதி மும்பாய் நவா ஷிவா மற்றும் சென்னை துறைமுகங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஸ்பிரிட் பற்றி பேசும் போது தமிழகம் மது விலக்கு பற்றிய விவாதங்கள் இணையத்தில் பேசப்படுவதை காண்கிறேன். எத்தனால் என்ற முழு ஆல்ஹகாலை மனிதன் குடிக்க கூடாது என அதில் மெதினல் என்ற நச்சுப் பொருள் கலக்கப்படுகிறது. மதுவிலக்கு தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்ற போதிலும் தமிழகத்திற்கு மது வந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று முன்பு வார்னிஷ் குடித்து இறந்தார் என்ற தலைப்பு செய்திகளின் காரணமாக. மது,மதுவிலக்கு என இரண்டு கால கட்டத்திலும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களே.அன்று கல்வியின்மை கல்வி வளர்ச்சி இரண்டு காலகட்டத்திலும் பொருளாதார பின் தங்கல் எதிர் சூழல்களில் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.

வயோதிகம் முந்தைய தலைமுறையை செயல்படாமல் செய்து விடுகின்ற காரணத்தால் கலாம் இளைய தலைமுறையை நோக்கி நாடு முழுதும் பயணிக்கிறார்.அதிலும் பள்ளி,கல்லூரி உரைகளை தொடர்ந்த காரணம் கல்வியறிவும் புதிய தலைமுறை புதிதாக சிந்திக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்பதால்.உதாரணமாக பெரியவர்கள் மவுஸ் எலியை பிடித்து கணினியை இயக்குவதை சிரமப்படும் போது இப்போதைய தலைமுறை கணினி பொருட்களை இயக்கும் விதம் ஆச்சரிமடைய வைக்கிறது

இந்தியா எப்படி தன்னிறைவு கொண்ட வளர்ந்த நாடாக முன்னேறலாம் என்பதற்கு அவர் சொல்லும் விடை ஊர் சேர்ந்து தேர் இழுப்பது எப்படி என்பதை சுருக்கமாக

இந்தியா முன்னேறிய நாடாக முடியுமா என்ற தன்னம்பிக்கை
ஏனைய நாடுகள் எப்படி தமது நலன் குறித்து செயல்படுகிறார்கள் 
2020ஐ நோக்கிய தொழில் நுட்ப பரிணாம வளர்ச்சி 
உணவு,விவசாயம்,உற்பத்தி திறன்
மூலப்பொருட்களும் எதிர்கால இருப்பும்
ரசாயன தொழிற்சாலைகள், மண் வளம்
மக்கள் திறன்
இந்திய நலன் சார்ந்த தொழிற்சாலைகள்
அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு
கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சீர்படுத்தல்
கனவை நனவாக்குதல்

இதனை சாத்தியப்படுத்தல் என்பதில் தடையாக விளங்குவது பீரோகிரஸி,அரசியல் இயங்கும் முறையும்,உள் சிக்கல்களாக நேர்மையின்மை,ஊழல்,இயங்கும் வேகம் போன்றவைகளின் காரணமாக மக்களின் தன்னம்பிக்கை சிதறி விடுகிறது.ஆனாலும் இப்பொழுதும் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துபவை மக்கள் வளம்,சிறு தொழில்கள்,தொழிற்சாலைகள் போன்றவை.

அப்துல் கலாமின் மதசார்பின்மை பைபிளின் பொன்மொழிகள் 19: 7 ல் துவங்கி ஒருவர் சொன்னார் என்பதால் மட்டுமே நம்பாமல் ஆராய்வாக என புத்தன் சொல்லை எடுத்துக்காட்டுகிறார். தேசபக்தி என குருஜடாவை சொல்லி சுந்தர தெலுங்கு பாடுகிறது.https://www.youtube.com/watch?v=4Lck08A4xOM

கூடவே வீணை ரசனை 

திருக்குறள் பொழிப்புரை இப்படி போகிறது

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை

(எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என பாரதியாரை சொல்லி மூலப்பொருட்கள் பற்றிய அலசல்

ரவீந்தர் நாத் தாகூரை முன் மொழிந்து பிஸிக்ஸ் நோபல் பரிசு முர்ரே கில் மேன் https://www.ted.com/talks/murray_gell_mann_on_beauty_and_truth_in_physics?language=en#t-40012

முர்ரேயை தேடப்போய் மொழிகளின் மூதாதையர் யார் என்பது குறித்து சின்ன காணொளியும் பெயர் தேடலில் கிடைத்தது http://www.ted.com/talks/murray_gell_mann_on_the_ancestor_of_language?language=en

நோய்க்கு இடம் கொடேல் என ஒளவையார் பேசும் சுகாதாரம்

கலாம் காந்தியவாதி என்பதெல்லாம் அவரது சொல்லிலும் செயலிலும் தெரிந்தன என்பதால் சொல்லித் தெரிவதில்லை.

பலருக்கும் தெரியாத வெர்னர் வன் பிரான் (Wernher Von Braun) பற்றி சொல்லி முடிக்கலாம். இவர் இரண்டாம் உலகப்போரில் ராக்கெட் விடுவது சூத்திரத்தை ஜெர்மனிக்கு அளிக்க அவரை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து குடிமகனாக்கி கொண்டது அமெரிக்கா.இதனை விட கருத்தரங்கில் சந்தித்த இந்தியர் ஒருவரிடம் உலகின் முதல் ராக்கெட்டிற்கு வித்தே இந்தியாவில் திப்பு சுல்தான் காலத்தில் ஸ்ரீரங்கபட்டினத்தில் நிகழ்ந்த இரண்டு போர்களில் உபயோகப்படுத்தப்பட்டது என Sir Bernard
Lovell, book entitled . The origins and International Economics of Space Exploration என நிரூபணம் செய்கிறார்.

விஜய் மல்லையா கிங்பிஷர் விமான தொழிலை பாழ்படுத்தி விட்டாலும் அவரது வாழ்வில் செய்த ஒரு நல்ல காரியம் ஸ்ரீரங்கபட்டினம் போரில் பிரிட்டிஷாரால் கைப்பற்ற பட்ட திப்பு சுல்தானின் வாளை லண்டன் ஏலத்தில் எடுத்து இந்தியா கொண்டு வந்து விட்டார். 

(Article sources Inspired by: India 2020 A Vision for the New Millennium)

கலாமின் தேசபற்று,இலக்கியம்,மொழி பற்றுதலுக்கெல்லாம் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்.

STRENGTH RESPECTS STRENGTH - அப்துல் கலாம்.







No comments: