முள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொல்வதற்கு தலைக்குள் நிறைய சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட பதிவுகள் எதையும் கிடப்பில் போட்டு ஊறவச்சு சொல்லும் வழக்கமில்லாததால் அவ்வப்பொது ஏற்படும் உணர்வுகளை அப்படியே கொட்டுவதுதான் வழக்கம்.இதுவும் அப்படியே!
இன்றைக்கு சீமான் பொதுக்கூட்டம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதும் கூடவே ஜார்ஜ் புஷ் ஈராக் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் சென்றது மாதிரி காஷ்மீர் தனிநாடு கோரிக்கையாளர் யாசின் மாலிக்கை யாருக்கும் தெரியாமல் தமிழகம் கூட்டி வந்து பேச வைத்த வரலாற்று தவறை அறிந்து திடுக்கிட்டேன்.சீமான் உச்சக்குரலில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்ற சீமானின் பிம்பத்தைக் கடந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை அலசும் திறனற்ற மனிதராக இருக்கிறாரே என்றே மனம் பதைபதைக்கிறது.
இந்த பதிவை எழுதும் முன் இதற்கும் முன் அருந்ததிராயின் இலங்கை காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.காஷ்மீர் பிரச்சினை இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இந்திரா காந்தியின் பாகிஸ்தான் இரண்டாக உடைந்த பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின் பாகிஸ்தான் வன்மத்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கப்பட்டு காஷ்மீர் பண்டிட்கள் துரத்தியடிக்கப்பட்டு தலிபான் உருவாக்கத்தில் அல்ஹைதாவின் உச்சம் தொட்டு ஆப்கானிஸ்தான் அரசியலோடு அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் உலக அரசியல் மாற்றத்திற்குப் பின் ஜார்ஜ் புஷ்சும்,ஒபாமாவும் அமெரிக்கா நாட்டாமை செய்யாது இந்தியாவும்,பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஒதுங்கிக் கொண்ட தற்போதைய நிலையின் முக்கிய நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்,காஷ்மீரிகளின் உயிர் இழப்பு துயரங்கள் இணைந்த வரலாற்றில் இந்திய பகுதியின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்துடன் தனது முதலமைச்சரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வல்லமையோடு தனி மாநிலமாக திகழ்கிறது.
இலங்கை இனம்,மொழி அடிப்படையில் ஆராய வேண்டிய ஒன்று.காஷ்மீர் இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் அடிப்படையில் உருவான ஒன்று.இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?இலங்கையில் வாழ்வோர்,புலம் பெயர்ந்தவர்கள்,தமிழக தொப்புள்க் கொடி உறவைத் தாண்டியும்,மனித உரிமைக் குழு அமைப்புகள்,மேற்கத்திய நாடுகளின் ஆதரவு,ஐ.நா வரையிலும் போய் உட்கார்ந்து கொண்ட தமிழர்களின் உரிமைகளை யாசின் மாலிக் ஆதரவு பெற்று தந்து விடுமா? மாறாக யாசின் மாலிக்கின் ஆதரவு எப்படிப்பட்ட பின்னடைவை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறதென்ற புரிதலாவது இருக்கிறதா சீமான்?
தடாலடி அரசியலுக்கு வேண்டுமென்றால் யாசின் மாலிக் உதவக்கூடும்.நாளை பாகிஸ்தானில் ஒருவர் யாசின் மாலிக் கருத்தை ஆதரிக்கிறேன் பேர்வழியென உள்குத்து அரசியலோடு தமிழகத்திற்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பீர்களா சீமான்? தமிழகத்தைப் பொறுத்த வரையில் மரணத்தின் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்ற நம்பிக்கையை தகர்த்து ஆக்சிஜன் கொடுத்து முதல் உதவி செய்திருக்கிறீர்களே சீமான்!உங்களுக்கு வேண்டுமென்றால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் மேடைப் பேச்சும்,அப்ப இனித்தது இப்ப கசக்குதா போன்ற வசனங்கள் இனிக்கலாம் கசக்கலாம்.ஜெயலலிதா ப.ம.கவுக்கு வைத்த ஆப்பை போல் உங்களுக்கும் ஆப்பு வைத்தாலும் தப்பேயில்லை.
திரைக்களம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதில் மட்டும் உங்கள் நிபுணத்துவம் காட்டுங்கள். துயர ஈழத் தமிழர்களை இனியும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்.
இலங்கை காஷ்மீர் குறித்த அருந்ததி ராயின் பார்வை இங்கே தொடுப்பாக!
http://parvaiyil.blogspot.com/2011/06/blog-post_19.html
98 comments:
ராச நட,
ஒட்டகம் கிளம்பிடுச்சுடோய் எல்லாம் ஓடுங்க அது உங்கள நோக்கி தான் வருது ஓடுங்க ...:-))
முன்னரே சீமானின் சந்தர்ப்பவாத ஈழாரசியல்ப்பற்றி சில முறை பேசியிருக்கிறேன், நினைவிருக்கிறதா?
சீமானுக்கு ஈழாரசியலின் அடிநாதம் மட்டுமில்லை தமிழக அரசியலின் அடிநாதம், அதன் நீரோட்டம் குறித்தும் கூட அறிவில்லை, என்பது பெரியாரை ஏகத்துக்கும் விமர்சித்து கட்சிக்கொள்கை அறிக்கை தயாரித்த போதே வெளிப்பட்டுவிட்டது.
சில புலம்ப்பெயர் தமிழர்கள் தங்களுக்கு என "சொல்ப்பேச்சுக்கேட்கும்" தமிழக அரசியல் தலைவர் வேண்டும் என உருவாக்கி விட்டவர் தான் சீமான் :-))
//திரைக்களம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதில் மட்டும் உங்கள் நிபுணத்துவம் காட்டுங்கள். //
வேலியில போற ஓணானை வேட்டியில் விட எந்த தயாரிப்பாளரும் தயாரில்லை :-))
சொந்தமா காசுப்போட்டு படம் எடுத்தால் தான் உண்டு.
இவரெல்லாம் தமிழ்சினிமாவின் கூலிப்படை குருப்பு எனவே யாரும் கிட்டே சேர்க்க மாட்டாங்க :-))
வவ்வால் எங்கே போனீங்க? நான் உங்க கடையில் தனியா மொக்கை போட்டுகிட்டிருக்கேன்.
ஒட்டகம் அதுபாட்டுக்கு மத்தவங்களுக்கு பின்னூட்ட பாதையில் ஓடிகிட்டுத்தான் இருக்குது.பதிவு மெயின் ரோடுக்கு வரும் போதுதான் 350 ஹிட் வருது.ஆனாலும் பின்னூட்டவாதிகள் குறைஞ்சோ குறைஞ்சு போயிட்டாங்க.யாருக்கு என்ன அவசரமோ அல்லது வம்பே வேண்டாம்ன்னு ஒதுங்கிகிறாங்களோன்னு தெரியலையே.
உரத்த குரல் மாற்று அரசியலுக்கு தேவையென விட்டாலும் கூட போடும் வாசகங்கள்,சொல்லும் கருத்துக்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்து கடைசியில் காஷ்மீர்,பாகிஸ்தான் ஆதரவோடு தமிழீழம் பெற்று விடலாமென்ற அரசியல் சாணியக்கத்தனத்தை எந்த சுவரில் போய் ஒட்டுவதென்றே தெரியவில்லை.
யாசின் மாலிக் காஷ்மீரிகளுக்காக போராடட்டும்.தவறில்லை.ஆனால் காஷ்மீர தமிழீழ கூட்டு களவாணித்தனம் இன்னும் பின்னடைவே ஈழத்தமிழர்களுக்குகொண்டு வந்து சேரும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறாரே சீமான்!
எப்படியோ மெல்ல வாயில்லாமல் இருந்த தமிழக காங்கிரசுக்கு ஒட்டுப்பல்லை கொடுத்துள்ளார் சீமான்.சீமானின் தொண்டரடிப் பொடிகள் யாராவது இங்கே சுற்றிக்கொண்டிருந்தால் தயவு செய்து மேடைக்கு வரவும்:)
சீமான் தமிழ்நாட்டையும் காஷ்மீரைப்போல வன்முறைகளமாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் இவரது பாட்சா பலிக்கப்போவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.
ராபின்!வருகைக்கு நன்றி.
காஷ்மீரிகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களை விடவும் சிறப்பு சலுகை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.ஈழத்தமிழர்களோ அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள்.இரண்டும் வேறு வேறு பின்புலங்களை கொண்டவை.அரசு அடக்குமுறை என்ற ஒற்றைக்கோட்டில் இரண்டையும் ஒன்றாக இணைத்து விட முடியுமா?இந்தியா நாட்டின் பாதுகாப்பு (self defence) என்ற நிலையில் பிரச்சினையை கையாண்டதில் காஷ்மீரிகள் மீதான Collateral damage ஏற்பட்டதும்,இலங்கை அரசு தன் மக்கள் மீதே குண்டு போட்டு கொன்ற genocide intention இரண்டும் ஒன்றா?
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரிவினை என்ற கோட்பாட்டுக்கு வித்திடுவதாகவே சீமான்,யாசின் மாலிக் உறவு இருக்கிறது.
கடந்த மாதம் இந்தியா வந்தேன்.இந்தியாவின் மேல் மட்ட ஊழல்,இப்ப ஐ.பி.எல் மேட்ச் பிக்சிங்,மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள்,தண்ணீர்,மின்சார பிரச்சினைகள் என பல இருந்தாலும் முந்தைய இந்தியாவின் வறுமையும் பிச்சைக்காரர்கள் குறைந்திருப்பதையும் காண முடிந்தது.
ராஜபக்சே காலம் கடத்தி விட்டால் பிரச்சினைகளை கடந்து விடலாமென்ற எண்ணமும்,போருக்கு அப்பாலான சர்வாதிகார தன்மையாலும்,எதிர் குரலுக்கு வாய்ப்பில்லாத நிலையும்,முந்தைய குண்டு வெடிப்புக்கள் முற்றிலுமாக இல்லாமல் போனது இலங்கை அரசுக்கு பலமாக அமைந்துள்ளது.கூடவே காமன்வெல்த் கூட்டம் அங்கீகாரம் வேற.
செய்த குற்றங்களுக்கு நீதி என்ன என கேட்கும் நிலையிலிருந்து தமிழக காஷ்மீர் பிரிவினை வாதம் என போரட்டக்குரலின் மையப்புள்ளி திசை திருப்பி விடப்படுவதற்கு சீமான் துணை செய்துள்ளார்.
அசின் தலைவருக்கு ஒருத்தர பிடிக்கலைன்னா கடைசி வரைக்கும் பிடிக்காது. உங்களுக்குமா?
இந்தியா காஷ்மீருக்கு சில சலுகைகள் கொடுப்பது என்பது அருகில் பாக். இருப்பதினால்தான். இலங்கைக்கு அப்படி ஒரு பிரச்சினை இல்லை. எனவே அடித்து துவம்சம் செய்துவிட்டது.
ராச நட,
நான் மட்டும் எங்கே போயிட்டேன் , இங்கனத்தான் சுத்திக்கிட்டு இருக்கேன், சொந்த கடையை விட்டுப்போட்டு ஊரார் கடையில் கருத்துக்கொள்முதல் செய்துக்கிட்டு இருக்கேன் ,அதான் அம்போனு கிடக்குது :-))
நானாவது முட்டு சந்தில் கடைப்போட்டிருக்கேன், நீர் மெயின் ரோட்டில் போட்டும் ஏன் ஜிலோனு வெறிச்சோடிக்கிடக்கு ,எல்லாம் நான் வந்து தான் யாவாரத்தை தூக்கி விட வேண்டியதா இருக்கு :-))
//பின்னூட்டவாதிகள் குறைஞ்சோ குறைஞ்சு போயிட்டாங்க.யாருக்கு என்ன அவசரமோ அல்லது வம்பே வேண்டாம்ன்னு ஒதுங்கிகிறாங்களோன்னு தெரியலையே.//
இப்போலாம் பின்னூட்டவியாதிகளா ஆகிட்டாங்க, நீங்க போய் அறியாத தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி ,த.ம.9னு பின்னூட்டம் போட்டாத்தான் உங்க கடைக்கு வருவாங்க, அதை விட்டுப்புட்டு நீதி,நியாயம்,தர்மம்னு பேசினா கூட்டணி வச்சு "ரெட் கார்டு' போட்டுருவாங்க :-))
நான் சொன்னாப்போல ஒரு மண்டலத்துக்கு எல்லாருக்கும் பின்னூட்டம் போடுங்க, உங்களை தான் ரொம்ப நல்லவன்னு சொல்லி குத்து குத்துனு குத்துவாங்க ,தமிழ்மண ஓட்டு குத்துவாங்கனு சொல்ல வந்தேன் :-))
//காஷ்மீர தமிழீழ கூட்டு களவாணித்தனம் இன்னும் பின்னடைவே ஈழத்தமிழர்களுக்குகொண்டு வந்து சேரும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறாரே சீமான்!//
அதெல்லாம் புரிஞ்சா சீமான் முதல்வராகிடுவாருல்ல அதான் புரியாம இருக்கார் :-))
//எப்படியோ மெல்ல வாயில்லாமல் இருந்த தமிழக காங்கிரசுக்கு ஒட்டுப்பல்லை கொடுத்துள்ளார் சீமான்.சீமானின் தொண்டரடிப் பொடிகள் யாராவது இங்கே சுற்றிக்கொண்டிருந்தால் தயவு செய்து மேடைக்கு வரவும்:)//
காங்கிரசுக்கு கோஷ்டி மோதலில் வேஷ்டி உருவவே நேரம் இல்லை, சீமானையா சீண்டப்போறாங்க :-))
தொண்டரடிப்பொடியை தேடுனீங்க, சீமானின் தளபதி "பின்னலாடை அதிபரே" வந்திருக்கார் ,வளைச்சுப்போடுங்க, குத்த வச்சு குமுறலாம், பின்னூட்டம் பிச்சுக்கும்,100 அடிச்சிப்பிடலாம், ஆட்டத்தை ஆரம்பிப்போமா?
--------------
ஜோதிஜி,
இப்போ யாரு எனக்கு புடிக்காம போயிட்டாங்க, வேணும்னா ராச பக்சே வாழ்கனு கோஷம் போடவா?
ராச பக்சே ரொம்ப நல்லவர் ,இலங்கையை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார், உலக சமாதான தூதர் ,நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம்னு பதிவெல்லாம் போட சொல்லுவாங்களோ அவ்வ்!
---------------------
ராச பக்சே ரொம்ப நல்லவர் ,இலங்கையை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார், உலக சமாதான தூதர் ,நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம்னு பதிவெல்லாம் போட சொல்லுவாங்களோ அவ்வ்!
இவன் அவன் என்று தொடங்கி சீமான் வரைக்கும் மாநில அரசு செயல்படுவதாக எனக்குத் தெரியல.
கணக்கு கச்சிதமா வெள்ளைச்சட்டக்காரங்க மேலேயிருந்து குத்துற குத்துல தான் இங்கே குதியாட்டம் நடக்குதுன்னு நான் நினைக்கின்றேன்.
தமிழ்நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் சரியான பாதையில் போய்க்கிட்டு இருப்பாங்க.
திடீர்ன்னு பைத்தியம் பிடிச்சு
அடுத்த முதல்வர் நாந்தான்
அடுத்த பிரதமரர் நாந்தான்
அடுத்த கிங்மேக்கர் நாந்தான்
உசுப்பேத்தி உசுப்பேத்தி கட்டக்கடேசியா கவ்வோதியாக ஆக்கிட்டு அடுத்தாளு பக்கம் போய்
மறுபடியும் ஒன்னுலேயிருந்து தொடங்குவாங்க.
சீமான் விசயத்தில் நான் இப்படித்தான் தொடக்கம் முதல் கவனித்துக் கொண்டிருப்பது.
அரசியலில் புதுமுகங்களை இயக்குவது அவர்களின் ஆலோசகர்கள் தான் அங்கு தான் ஏதோ கோளாறு நடக்கிறது. உண்மையில் சீமானின் திடீர் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். பெரியாரிஸ்டுகள் ஒருபக்கம், திராவிடம் பேசினால் தான் தமிழ்நாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்பதை உணர்ந்த தமிழரல்லாத திராவிட வீரர்கள் ஒருபக்கம், தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர்களாக ஒன்றுபடுவதை விரும்பாத இந்திய தேசியவாதிகள் ஒருபக்கம் சீமானைப் பழிவாங்க தருணம் பார்த்திருந்தார்கள். இந்த யாசின் மாலிக் சம்பவம், சும்மா வெறுவாயை மென்று கொண்டிருந்த சீமானின் எதிரிகள் எல்லோருக்கும் அவல் கிடைத்த மாதிரிப் போய்விட்டது. :)
//சில புலம்ப்பெயர் தமிழர்கள் தங்களுக்கு என "சொல்ப்பேச்சுக்கேட்கும்" தமிழக அரசியல் தலைவர் வேண்டும் என உருவாக்கி விட்டவர் தான் சீமான் :))//
இதை விடக் குதர்க்கமான பதில் இருக்கவே முடியாது. திருமாவளவன் காங்கிரசுடன் சேர்ந்து, "அன்னை" சோனியாவின் காலில் விழும் வரை, புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சீமானுக்கு இருக்கும் அன்பையும் மரியாதையையும் விட அதிகமாக திருமாவளவனுக்கு இருந்ததுண்டு. ஆனால் திருமாவளவன் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பார், தமிழ்நாட்டின் பெரீய தலைவராக வந்து எங்களின் "சொல்பேச்சைக் கேட்பார்" என்பதற்காக அல்ல, ஆனால் அவர் ஒரு தமிழுணர்வுள்ள உண்மையான தமிழன் என்பதற்காக மட்டும் தான். அதே காரணத்துக்காகத் தான் ஈழத்தமிழர்கள் சீமானை ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல் எங்களுக்கு ஒருவரின் சாதி, மதம் எல்லாம் முக்கியமானவை அல்ல.
தலைவரே,
//ஏனென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல் எங்களுக்கு ஒருவரின் சாதி, மதம் எல்லாம் முக்கியமானவை அல்ல.////// ///// //
தமிழக அரசியல்வாதிகள் தான் பச்சையாக புழுகுவாங்கனு நினைச்சேன்,அவங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டீரே :-))
நீங்க சொன்னதை ஈழத்தமிழர்கள் கேட்டால் கூட மனசுக்குள் சிரிச்சுக்கிட்டே ஒப்புக்கு சரினு தான் சொல்லுவாங்க :-))
ஜாதியமும்,மதமும் தான் ஈழ போராட்டத்தினை நமுத்துப்போக வைத்ததே.
நீங்க சீமானை ஆதாரிங்க ,இல்லை சாமானை ஆதரிங்க அதற்காக எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கோமாளியை ஆதரித்துக்கொண்டு இருக்க முடியாது.
முதலில் இயக்கத்துக்கு சொந்தமா யோசிச்சு பேரு வைக்க சொல்லுங்க, சி.பா.சிவந்தி ஆதித்தனார் நடத்தி ஊத்தி மூடிய "நாம் தமிழர்" கட்சிப்பேரை லவட்டிக்கிட்டு வந்து கோஷம் போடக்கிளம்பிட்டாங்க :-))
//ஜாதியமும்,மதமும் தான் ஈழ போராட்டத்தினை நமுத்துப்போக வைத்ததே.//
ஐயா பஞ்சாயத்து,
நினைத்துப்பார்க்கவே முடியாத பல போர்க்கள வெற்றிகளைக் கண்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் கடைசியில் நந்திக்கடலில் தமிழர்களின் உயிர்ப்பலியில் முடிந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் தேடும் பலரும், பற்பல காரணங்களைக் கூறுகின்றனர். தமது இயல்புக்கேற்றவாறு, தமக்குப் புரிந்த வகையில் வெவ்வேறு காரணங்களைக் கூறி தமது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கின்றனர். சில தமிழர்கள் இலங்கைத் தமிழர்களின் காவல் தெய்வமாகிய கண்ணகியம்மனின் கோபம் தான் ஈழப்போராட்டம் தோல்வியடைந்தது என்று கூடச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். அது போன்றது தான் உங்களின் கருத்தும். எல்லோரும் ஒரு விடயத்தைத் தமது அறிவுக்கேற்றளவில், தாம் புரிந்து கொண்ட வகையில் நியாயம் கற்பித்து ஆறுதல் தேடிக் கொள்வார்கள், அதனால் உங்களைக் சொல்லிக் குற்றமில்லை. அது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். :-)
ஜோதிஜி!வந்தேன் என்ற ஒற்றை சொல்லுக்கே ஒரு ஸ்கொயர் நோட் தீரும் வரை பின்னூட்டம் போடுற பேர்வழிகள் நானும்,அசின் ப்ரியரும்.இப்படி தொடர் பின்னூட்டம் போட்டா விட்டுடலாமா? பிரிஞ்சு மேய்ஞ்சிடலாம். அசின் ப்ரியருக்கு உலகநாயகன் மேலதான் காண்டு.மற்ற பதிவுக்கெல்லாம் கருத்துக்கு தகுந்த மாதிரி ப்ரதநாட்டியம் ஆடுவார்.அதிலும் தீர்த்தம் தெளிச்சு ஆட்டுக்கெடா வெட்டி நோம்பு கும்புடற்துன்னா அவருக்கு கொள்ளைப் பிரியம்:)
நமக்கு அப்படியில்லை.பாசிட்டிவா இல்லைன்னா இந்த மாதிரி எதிர்வினை தோன்றும்.
பிரகாஷ்!நலமாக இருக்கிறீர்களா?பாகிஸ்தான் அருகில் இருக்கும் கருத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள்.கூடவே இந்திரா காந்தியின் காலத்து ரஷ்ய அமெரிக்க பனிப்போரில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் பயந்தே போனது இந்தியா.இல்லையென்றால் பங்களாதேசை பிடித்த கையோடும் போரிட வலுவில்லாத சரணடைந்த கைதிகளின் அனுகூலத்தோடு லைன் ஆஃப் கண்ட்ரோலை கடந்திருக்கலாம்.கரியப்பா சொன்ன திட்டத்தை இந்திரா காந்தி ஏற்கவில்லை என்ற செய்திகள் முன்பு கசிந்தது.உண்மை இந்திய அரசு பைல்களுக்கு மட்டுமே தெரியும்.
இலங்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் ராஜிவ் காந்தி கொலை என்ற கறுப்பு பக்கத்து வஞ்சினத்துடனும் காங்கிரஸ் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது என்றாலும் கூட இப்போதைய புதிய உலக அரசியல் களநிலையை உணர்ந்தாக வேண்டும்.அதாவது இலங்கை சீனாவுக்கு நட்பாக இருந்தாலும் பரவாயில்லை சீனாவை பகைத்துக்கொள்ளக் கூடாதென்ற புதிய வெளியுறவுக்கொள்கை.இது எப்படி நிரூபணமாகிறதென்றால் முந்தைய சீன ஆக்கிரமிப்பு போல் தற்போது சீனா எல்லை மீறி பல கிலோ மீட்டர் வந்து டேரா போட்டும் கூட பேசித்தீர்ப்போம் வா என சொல்லி விட்டு பல பின்புல வேலைகளை செய்திருக்கிறது இந்தியா.அதில் முக்கியமான ஒன்று சீனாவுக்கு பிடிக்காத ஜப்பான் பயணத்தை இரண்டு நாட்களாக உயர்த்தியது.
சீனாவுக்கு பாகிஸ்தான் இருக்கும் வரையில் இந்தியாவுடன் நேரடியாக போரிட வேண்டிய அவசியமேயில்லை.நீங்கள் காஷ்மீருக்கு சலுகைகள் கொடுப்பதின் காரணம் பாக் பக்கத்திலிருக்கிறதென்பது சீன இந்திய வெளியுறவுக்கொள்கைக்கும் பொருந்தும்.
வவ்வால்!மேலேயிருந்து தொடரலாமென்றால் உங்களுக்கும் வியாசனுக்குமான உங்க கடை விட்ட குறை தொட்ட குறை விவாதம் இங்கே துவங்கும் போல இருக்குதே!
வியாசன்!என்ன பண்றது ப.ம.க குடும்ப அரசியல் மற்றும் இங்குமங்கும் புரையோடிக்கிடக்கும் சாதியம் காரணமாக உங்ககிட்ட வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதென்றாலும் மதம் ஒரு பக்கம் அதற்கு நிகரான பெரியாரின் திராவிட சிந்தனைகளும் தமிழகத்தில் குறைந்த பாடில்லை.வாக் த டாக் என்.டி.டி.வி குப்தா ஒரு முறை காஞ்சிபுரம் பற்றி சொல்லும் போது காஞ்சி மடம் ஒரு புறமும் இன்னொரு பக்கம் அண்ணா,பெரியார் சிலைகள் இருப்பதை குறிப்பிட்டார்.தமிழகத்தில் பழனிக்கு மொட்டை போட்டு காவடி தூக்கினால் ஈழ சகோதரர்கள் முதுகில் கொக்கியை மாட்டிகிட்டு தேர் இழுக்கிறார்கள்:)
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கலாச்சார விழுதுகளை கோயில்களாக வளர்க்கிறார்கள் என்ற பார்வை ஒரு புறமிருந்தாலும் கோயில் உண்டியலை ஈழப்போராட்டத்துக்கும் முக்கியமாக நிலம் வாழ் சகோதரர்களுக்கும் தாரை வார்ப்பது இன்னும் பலனுடையதாக இருக்கும்.
வெற்றி மட்டுமே வரலாற்றை தீர்மானிக்கிறது.எனவே பிரபாகரன் குறித்தோ முள்ளிவாய்க்கால் துயரங்கள் குறித்தோ எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம்.
வவ்வால் சீமான் குறித்து சீறுவது எனக்கு உடன்பாடே.Seeman has lost his credibility by inviting yasin malik to Tamilnadu.
வியாசன்!திருமாவளவன் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.அதற்கு முன் வவ்வாலை பஞ்சாயத்து என்று மட்டும் குறிப்பிட்டதற்கு நன்றி:)
முள்ளிவாய்க்காலுக்கும் முன்பு கிளிநொச்சி இடம் நகர்தல் தொட்டு யார் பேசினாலும் பித்தம் தெளியுமா என்ற நம்பிக்கைதான் முக்கியமாக தெரிந்தது.தி.மு.க விற்கும்,அ.தி.மு.க விற்கும் மாற்று அரசியலை தருவாரா என்ற நம்பிக்கையை கலைஞருடன் உடன்பாடு செய்து கொண்டதோடு பொய்த்துப் போய் விட்டதுமல்லாமல் இப்பொழுது நீங்கள் குறிப்பிடும் தமிழக சாதி சண்டை கயிறுழுப்பு போட்டியின் இன்னொரு முனையை திருமாவளவன் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதும் வருத்தப்பட வேண்டிய விசயம்.
அதுபோலவே சீமானின் உணர்ச்சி குரலும் தமிழகத்திற்கு மாற்று அரசியலை தராதா என்ற நம்பிக்கையை அவரது தொடர் கருத்துக்களும்,நேர்காணலும்,பெரியார் குறித்தும்,திராவிடம் பற்றியுமான விமர்சனங்கள் வடிவேலு பேஸ்மெண்ட் வீக் ஜோக் மாதிரி சீமான் குரல் மட்டுமே ஸ்ட்ராங்க் மூளை ரொம்ப வீக்குன்னு சொல்ல வைக்குது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால் தமிழகம் சார்ந்து எழும் ஈழ ஆதரவு குரல் மெல்ல மங்கிப் போய் விடக்கூடிய அபாயத்தை உணர்கிறேன்.காங்கிரஸும்,ராவும் போடும் திட்டத்தை சீமான் தாம்பூல தட்டில் ஏந்திக் கொண்டு நிற்கிறார்.
ஜோதிஜி!இப்ப உங்க பக்கம் வந்துடலாம்.நீங்க பட்டும் படாமல் சொன்னதுக்கு சீமானின் தளபதி பட்டம் வேற கொடுத்திட்டாரே!ஓடிப் போங்க இல்லைன்னா நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்பு செயலாளரே பின்னலாடை அதிபர்தான்னு ஜெயலலிதாகிட்ட போட்டுக் கொடுத்துடப் போறார்:)
வாய்ச்சண்டைக்கு ஆள் கிடைக்காம அசின் நாயகன் வரப்பு மேலே நின்னுகிட்டு பேசுறார்.கண்டுக்காதீங்க:)உங்கள் தொடர் ஈழக் கருத்துக்கள் உங்களை எப்பொழுதும் முன்னிறுத்தும்.
ஜோதிஜி!முன்பு டைம்ஸ் பத்திரிகையில் தலை சிறந்த மனிதர் ராஜபக்சேதான் என்ற முதலிடத்தில் நின்ற சூதாட்டத்தை உங்க சகலபாடி தெகா போன்றவர்கள் உடைத்தெறிந்தார்கள்.காலம் கடத்தி விட்டால் தமிழனின் ஞாபக மறதி வியாதியை வைத்துக்கொண்டு சரித்திரத்தில் இடம் பெறவும் நோபல் பரிசு வாங்க கூட முயற்சி செய்வார் ராஜபக்சே.அதற்கான முன்னோட்டம்தான் நவம்பரில் வரும் காமன்வெல்த மாநாட்டு அங்கீகாரம்.
இந்த இடத்தில் பின்னூட்டத்தில் ஒரு ட்விஸ்ட் வச்சுட்டு நேரா பாகிஸ்தான் போயிடலாம்.முன்பு விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரி நவாஸ் செரிப் முஷ்ரபை முடிச்சுடலாம்ன்னு கணக்குப் போட முஷ்ரபோ நவாப் செரிப்புக்கே அகதி விசா வாங்கி சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வச்சுட்டார்.ராணுவ ஆட்சி,கார்கில் போர்,பின்பு சமாதானம் பேசுறேன் பேர்வழின்னு வாஜ்பாய்க்கு கைகொடுக்க தொலைக்காட்சி கேமிராக்கள் பளபளக்க கொடுத்த போஸ் போதெல்லாம் முஷ்ரப் மீதான எனது கடுப்புக்கு அளவே இல்லை.இந்தாளு புட்டுக்குவான்னு பார்த்தால் பெனாசிர் புட்டோ கதையை முடிச்சிட்டாரு.இது பிளாஷ் பேக்.இப்ப தற்போதைய பாகிஸ்தான் அரசியலுக்கு வருவோம்.நம்மூர்ல ஒரு ஆளு தேர்தல்ல கொட்டு வாங்கினாலே அனுதாப ஓட்டு விழுது.ஆனால் இம்ரான் கான் மேடையிலிருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் படுத்தும் அந்தாளுக்கு ஓட்டு போடாம நவாஸ் செரிப்பை ஜெயிக்க வச்சிட்டாங்க.நம்மூர் அரசில் பண பட்டுவாடா மாதிரி நவாஸ் செரிப்பும் பைசா புள்ளியென்பதால் பணமும் விளையாடும் சாத்தியமிருக்கலாம்.
கார்கில் காலத்து முஷ்ரபின் கடுப்புக்கான தண்டனை இப்பொழுதுதான் வரலாறு மீண்டும் திரும்புகிறதென நவாஸ் செரிப்பிடம் வங்குல மாட்டுன எலி மாதிரி முஷ்ரப் மாட்டிக்கொண்டார்.
எனவே பின்னூட்ட நீதியென்னவென்றால் ராஜபக்சே இப்பொழுது சிம்மாசன சுகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் வங்குல மாட்டுன எலி மாதிரி மாட்டிக்கொள்வதை விரும்புகிறேன்.அது எப்ப நடக்கும்ன்னுதான் தெரியல.
ஒருவேளை எஸ்.ராவின் கதை வசனம் மாதிரி ராஜபக்சே இரண்டாம் காந்தியென பெயர் வாங்கிடுவாரோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.
வவ்வால்!ஏற்கனவே பின்னூட்டத்தில் ஏழுமலை தாண்டுகிறேன் என்று காய்ச்சியிருந்தீர்கள்.இப்படி கதை வளாவினால் இன்னுமொரு முறை மாட்டும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்குமென நம்புகிறேன்.
வியாசன் சரி!அதென்ன ஜென் குரு பின்னலாடை நிபுணரையும் வம்புக்கு இழுக்குறீங்க!ராஜபக்சேவுக்கு ஜே போடவான்னு எதிர்க்கேள்வி போடுறார்.சாது மிரண்டால் வவ்வால் தாங்காது.சொல்லிப்புட்டேன்.
சகோதர சண்டையில்தான் பட்டாசு நமுத்துடுச்சுன்னு கலைஞர் சொல்றார்.நீங்களோ ஜாதியும்,மதமும்தான் காரணம் என்கிறீர்கள்.ஜாதியும்,மதமும் தோல்வியின் ஒரு கூறுதான் என்றாலும் அதுவே முழு முதல் காரணமாகி விட முடியாது.யாரையும் நண்பனாக சேர்த்துக்கொள்ளாதது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.அதனால்தான் நண்பர்களை சேர்க்கிறேன் என யாசின் மாலிக்கை கூட்டி வந்தாரோ:)
இதுல இன்னொரு ஜோக் என்னன்னா நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பூபண்ணாவோ கோபண்ணாவோ என்ற காங்கிரஸ் பிரச்சார பீரங்கி யாசின் மாலிக்குக்கு பதிலா பருக் அப்துல்லாவையோ ஒமர் அப்துல்லாவையோ ஏன் கூட்டி வரவில்லையென்றாரே பார்க்கலாம்:)
காஷ்மீர் பிரச்சினையின் இன்னுமொரு மையம் பருக் அப்துல்லா என்பது தெரியாமல் இருக்கலாம்.பருக் அப்துல்லாவின் அப்பா ஷேக் அப்துல்லாவை இந்திரா காந்தி ஊட்டியில் வீட்டு சிறை வைத்த வரலாறு தெரியாத அசட்டு காங்கிரஸ்காரராக இருக்கிறாரே:)
//வவ்வால் சீமான் குறித்து சீறுவது எனக்கு உடன்பாடே.//
சீமான் ஒரு அரசியல்வாதி அவரது செயல்களை விமர்சனம் செய்வதில் எனக்கும் உடன்பாடே.ஆனால் இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து சும்மா தர்மஅடி கொடுக்கிறார்கள் வவ்வால் போன்றவர்கள். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. :-)
வியாசன்,
சீமானுக்கு தமிழ்நாட்டில் பெரிய ஆதரவு ஒன்றும் கிடையாது. தனித்து தேர்தலில் நின்றால் ஒரு சீட் தேறுவதே கடினம்தான்.
சீமான் ஜெயலலிதா ஆதரவுநிலை அரசியல் நடத்த ஆரம்பித்தபிறகு முன்பைப்போல் பரபரப்பு அரசியல் நடத்துவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.எனவே யாசின்மாலிக்கைக் கூட்டிவந்து ஒரு பரபரப்பு கிளப்பப் பார்க்கிறார் என்றுதான் தோன்றுகிறது. இதைத்தாண்டி பெரிதாக அவர் இப்போதைக்கு எதுவும் செய்வார் என்று தோன்றவில்லை. நீங்கள் குறிப்பிட்டபடி இதனால் மத்திய அரசின் பொக்கை வாய்க்கு ஒரு பல் கிடைத்த கதை உண்மைதான்.
வவ்வால் பொதுவாக தவறுகள் எதுவும் செய்யமாட்டாரே.....\\முதலில் இயக்கத்துக்கு சொந்தமா யோசிச்சு பேரு வைக்கச்சொல்லுங்க.சி.பா.சிவந்தி ஆதித்தனார் நடத்தி ஊத்திமூடிய நாம்தமிழர் கட்சிப்பேரை லவட்டிக்கிட்டுவந்து\\ என்கிறார். எனக்குத் தெரிந்தவரை நாம்தமிழர் கட்சியைத் துவங்கியவர் சி.பா.ஆதித்தனார். சிவந்தி ஆதித்தனுடைய தந்தையார். தினத்தந்தியைத் துவங்கியவர்.இவர்தான் நாம்தமிழர் கட்சியைத் துவக்கி சரிப்பட்டு வரவில்லை என்றதும் கடையைக் கட்டிவிட்டார். அவரது மகன்தான் சமீபத்தில் மறைந்த சிவந்தி ஆதித்தன். வவ்வால் எதற்காகவோ இரண்டையும் போட்டுக் குழம்பிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.இரண்டிலும் சிவந்தி வருவதால் குழப்பமோ?
அமுதவன் சார்,
மன்னிக்கவும், பிழையாகத்தான் சொல்லி இருக்கிறேன், நீங்க சொன்னது தான் சரி, மூத்த ஆதித்தனார் பேரை தான் சொல்ல வந்தேன் , ஒரே மாதிரி பெயர் என்பதால் குழப்பிட்டேன்.
சி.பா.ஆதித்தனார் தனது நாம் தமிழர் கட்சியை திமுகவுடன் இணைத்துக்கொண்டார் , அப்படியானால் இப்பவும் அந்த கட்சியின் பெயர் உரிமை தினத்தந்தி அதிபரிடம் இருக்குமா? அவங்க அந்த கட்சி பேரை பயன்ப்படுத்தக்கூடாதுனு சொன்னால் ,சீமானால் என்ன செய்ய முடியும்னு ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு டவுட் உண்டு, யாருக்கிட்டே கேட்கிறதுனு தெரியாம இருந்துச்சு ,உங்கக்கிட்டேவே கேட்டுடுறேன் :-))
--------------
ராச நட,
//ஜென் குரு பின்னலாடை நிபுணரையும் வம்புக்கு இழுக்குறீங்க!ராஜபக்சேவுக்கு ஜே போடவான்னு எதிர்க்கேள்வி போடுறார்.சாது மிரண்டால் வவ்வால் தாங்காது.சொல்லிப்புட்டேன்.
//
ஜென் குருவாக மாருதி ஜென் காரு வச்சிருக்கனுமா :-))
வவ்வால் மிரண்டால் வானகமும் வையகமுமே தாங்காது சொல்லிப்புட்டேன்!
# //ஜாதியும்,மதமும்தான் காரணம் என்கிறீர்கள்.ஜாதியும்,மதமும் தோல்வியின் ஒரு கூறுதான் என்றாலும் அதுவே முழு முதல் காரணமாகி விட முடியாது.//
எந்த ஒரு செயலின் வெற்றித்தோல்விக்கும் ஒரே ஒரு காரணி தான் முழு முதல்காரணம் என சொல்லிவிட முடியாது, ஏதேனும் ஒரு காரணி "அரச அச்சாணியாக" இருக்கும், அதன் விளைவே அதிக பட்சம் தாக்கம் கொடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
ஜாதி,மதம் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு அச்சாணியான ஒரு காரணி.
இலங்கையில் நிலவிய சில ஜாதிய,.மத பிரிவினைகளை சொல்கிறேன் அவை குறித்து தேடிப்படிக்கவும்,பின்னர் புரியும்.
# பஞ்சமர் நில உரிமை மறுப்பு
# வாக்குரிமை மறுப்பு.
#நல்லூர் முருகன் கோவில் வழிப்பாட்டு சண்டை, இன்ன பிற சண்டை.
# தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க தடை,கல்வி நிலையங்களில் இருக்கையில் அமர்ந்து கற்க தடை.
# கொழும்பு பாய்ஸ் எழுச்சி
# ஜாதிய அடிப்படையில் மலையகத்தமிழர்கள் புறக்கணிப்பு
# 1915 சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் போது தமிழர்களின் சிங்கள ஆதரவு.பின்னர் புலிகளின் காலத்திலும் இஸ்லாமிய எதிர்ப்பு.
இவை எல்லாம் சில உதாரணங்களே, கடைசி வரையில் இவற்றை எல்லாம் சரி செய்யாமால் உரிமைப்போர் நடத்தியதால் தான் முடிவு எட்டப்படவில்லை.
---------
//பருக் அப்துல்லாவின் அப்பா ஷேக் அப்துல்லாவை இந்திரா காந்தி ஊட்டியில் வீட்டு சிறை வைத்த வரலாறு தெரியாத அசட்டு காங்கிரஸ்காரராக இருக்கிறாரே:)//
இப்போ அவர்கள் காங்கிரசுக்கு இணக்கமான கூட்டணி என்பதால் இதில் அசட்டுத்தனத்திற்கு என்ன இடமிருக்கு?
அப்படிப்பார்த்தால் மிசாவில் ஸ்டாலினை உள்ள வச்சு நொங்கெடுத்தது தெரியாமல் மஞ்சத்துண்டு அசட்டுத்தனமாக கூட்டணி வச்சிருந்தாரா :-))
//இலங்கையில் நிலவிய சில ஜாதிய,.மத பிரிவினைகளை சொல்கிறேன் அவை குறித்து தேடிப்படிக்கவும்,பின்னர் புரியும்.
# பஞ்சமர் நில உரிமை மறுப்பு
# வாக்குரிமை மறுப்பு.
#நல்லூர் முருகன் கோவில் வழிப்பாட்டு சண்டை, இன்ன பிற சண்டை.
# தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க தடை,கல்வி நிலையங்களில் இருக்கையில் அமர்ந்து கற்க தடை.
# கொழும்பு பாய்ஸ் எழுச்சி
# ஜாதிய அடிப்படையில் மலையகத்தமிழர்கள் புறக்கணிப்பு
# 1915 சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் போது தமிழர்களின் சிங்கள ஆதரவு.பின்னர் புலிகளின் காலத்திலும் இஸ்லாமிய எதிர்ப்பு.//
இதெல்லாம் 50 தொடக்கம் 70 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் வவ்வால். பெரும்பான்மை வெள்ளாளர்களாகிய இலங்கைத் தமிழர்கள் ஒரு வெள்ளாளரல்லாத பிரபாகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டதே, சாதி ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டதென்பதற்கு அறிகுறி. இதைப்பற்றி வேண்டுமானால் நாங்கள் விவாதிக்கலாம். இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மலம் தீற்றப்படும், இரட்டைக்குவளை வைத்திருக்கும் தமிழ்நாட்டுத் தமிழனாகிய வவ்வாலுக்கு, ஈழத்தமிழர்களில் அழிந்து போன/ போய்க்கொண்டிருக்கும் சாதிப்பாகுபாட்டைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை கூடக் கிடையாது.
//கடைசி வரையில் இவற்றை எல்லாம் சரி செய்யாமால் உரிமைப்போர் நடத்தியதால் தான் முடிவு எட்டப்படவில்லை.//
இது தான் பெரியார் விட்ட தவறு மட்டுமல்ல, பெரியாரிஸ்டுகள் தொடர்ந்து செய்கிற தவறுமாகும். ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடுகளை மேலும் பெரிது படுத்தி, தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்காமல், தமிழ், தமிழர் என்ற உணர்வையூட்டி தமிழ்நாட்டை, ஜின்னா செய்தது போல் பிரித்திருந்தால், இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கை தரத்தை அடைந்திருக்கும். அல்லது இந்தியாவின் மாநிலமாக இருந்து கொண்டே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியல் பலத்தையும் உண்மையான தமிழர்களின் கைகளுக்குச் சென்றடையச் செய்திருக்க வேண்டும். அரசியல், பொருளாதார ஆளுமை முழுமையாகத் தமிழர்களின் கரங்களில் இருந்தால், அதன் பின்னர் தமிழர்களுக்கிடையேயுள்ள சாதி, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்காக முழுசக்தியையும் பயன்படுத்தலாம். இலங்கையில் சிங்களவர்கள் இதற்கு நல்ல உதாரணமாகும். அவர்கள் மத்தியிலும் முன்னர் சாதிப்பாகுபாடுகள் இருந்தன. ஆனால் பெரியார் சாதிப்பாகுபாடுகளைப் போக்க புறப்பட்டு, சாதியுணர்வுகளைத் தூண்டி தமிழர்களை மேலும் பிளவு படுத்தி விட்டார்.
தலைவரே.
//இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மலம் தீற்றப்படும், இரட்டைக்குவளை வைத்திருக்கும் தமிழ்நாட்டுத் தமிழனாகிய வவ்வாலுக்கு, ஈழத்தமிழர்களில் அழிந்து போன/ போய்க்கொண்டிருக்கும் சாதிப்பாகுபாட்டைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை கூடக் கிடையாது.//
நிதானத்துல தான் இருக்கீரா?
தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது,ஆனால் வாழ்வாதாரம் போய் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடும் சூழல் இல்லை, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிமை உள்ள நாடாக தான் இருக்கு.
நீதி மன்றம் என வந்துவிட்டால் ,மொழி,ஜாதி,மதம் ,பணம் என இல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். இலங்கையில் அந்த உரிமை கூட இல்லை, கோர்ட் ,விசாரணை எல்லாம் இல்லாமல் தண்டனை என சூழல் ஆனால் ஜாதி,மதம் பேசி திரிந்தார்கள்.
ஆனால் இலங்கையில் நில உரிமை /வாழுரிமை பரிக்கப்படும் சூழலில் ஜாதிப்பெருமையும், மதப்பெருமையும் பேசி சிங்களனிடம் அடி வாங்கி ஓடிப்போகும் சூழல் ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு தமிழகத்தமிழனின் அருகதையை பேசுவது காமெடியா இருக்கு.
//தமிழ், தமிழர் என்ற உணர்வையூட்டி தமிழ்நாட்டை, ஜின்னா செய்தது போல் பிரித்திருந்தால், இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கை தரத்தை அடைந்திருக்கும். //
இதை விட சிறப்பான காமெடி வேறெதுவும் இல்லை :-))
இந்தியா என்ற பெரும் தேசத்தில் தமிழினம் என்பது சிறிய இனக்குழுவே, எனவே தனி நாடு கேட்டால் எடுபடாது.
ஆனால் இலங்கை சுதந்திரம் அடையும் போது , ஈழத்தமிழர் + இலங்கை மலையக தமிழர் + இஸ்லாமியர் + பர்கீஸ் எனப்படும் ஆங்கிலோ/டச் கிருத்துவர்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 40 சதவீதம், சிங்களர்கள் சுமார் 60 சதவீதம்.
எனவே 40 சதவீத சிங்களர்கள் அல்லாதவர்கள் ஒன்றாக கூடி தனி நாடு கேட்டிருந்தால் வெள்ளைக்காரன் கொடுத்திருப்பான், ஆனால் அப்படி செய்தால் மலையகத்தமிழர்களுக்கும் குடியுரிமை வந்துவிடும் என கருதி சிங்களனை தொப்புள் கொடி உறவென கொண்டாடி அவனோடு சேர்ந்துக்கொண்டு தனி நாடு கேட்காமல் விட்டவர்கள் தான் ஈழத்தமிழர்கள் :-))
மேலும் ஈழத்தமிழர்களில் வெள்ளாளர்கள் ஒன்றும் பெரும்பான்மை அல்ல,வெள்ளாளர்கள் மற்றும் அல்லாதவர்கள் மலையகத்தவரையும் சேர்த்து என சதவீதம் பார்த்தால் தமிழ் பேசுவோரில் வெள்ளாளர்கள் சிறுபான்மையாக தான் இருப்பார்கள். சும்மா மேட்டுக்குடி பழம்பெருமை பேச வேண்டாம்.
வெள்ளைக்காரனிடம் தனி நாடு கேட்காமல் விட்டதன் பலன் தான் இன்று நாடு அற்று அலைய வைக்குது. அதைப்புரிந்துக்கொள்ளாமல் தமிழ்நாட்டு தமிழன் தனி நாடு ஏன் கேட்கவில்லைனு ஆலோசனை சொல்ல வந்துவிட்டார் :-))
தலைவரே,
தமிழ்நாட்டுல இரட்டைக்குவளை, மலம் தீற்றம் என ஜாதியக்கொடுமை எல்லாம் இருக்கும் போது நான் இலங்கையின் ஜாதியம் பற்றி பேச அருகதை இல்லைனு சொன்னாப்போல , இது போல தமிழ்நாடு நாறிக்கிட்டு இருக்கும் போதை அதை சரி செய்யாம ஈழம் வாங்கி தருவேன்னு ஏன்யா கூவிட்டு இருக்க, முதலில் தமிழ்நாட்டை சரி செய்யுனு சீமானுக்கும் நாலு வார்த்தை நல்லதா சொல்லுங்களேன் :-))
உள்ளூர் பிரச்சினைக்கே வழி காட்ட முடியாத சீமான் எப்படி அயல்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு சொல்லுவார், அதுக்கு மட்டும் அவருக்கு அருகதை வந்துடுச்சா , இல்லை அவரு தமிழ்நாட்டு தமிழன் இல்லையா , என்னமோ போங்கப்பா ஒரே கொயப்பமா கீது :-))
நீங்க சீமானை ஆதாரிங்க ,இல்லை சாமானை ஆதரிங்க அதற்காக எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கோமாளியை ஆதரித்துக்கொண்டு இருக்க முடியாது.
இங்கே பத்து நிமிடமா சிரிச்சுக்கிட்டேயிருக்கேன்.
அமுதவன் சார்! தி.மு.கவின் ஆட்சிக்காலத்தின் போங்குக்கு கலைஞரை வீழ்த்த வேண்டுமென்று எதிரிக்கு எதிரி நண்பன் அரசியலுக்கு ஜெயலலிதாவுக்கு ஆதரவுக் குரல் தந்ததில் அப்போதைய சூழலில் தவறில்லையென நினைக்கின்றேன்.மேலும் மொத்த தமிழக மக்களின் உணர்வும் அப்படித்தான் இருந்தது என்பதை தி.மு.க மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது நிரூபிக்கிற்து.வவ்வால் சொன்னது போல் சீமானின் சிறு சிந்தனை பெரியார் மீதான விமர்சனமாகவும் மேலும் திராவிடம் என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் கலந்த பூமியாகவே தமிழகம் இருக்கிறது.ஆனால் இந்த கூட்டு கலவையை கலைத்து ஆடும் ஆட்டத்தில் சீமானின் 2016 நாற்காலி கனவு தோற்றுப் போய் விடுகிற்து.
நீங்க வவ்வால் தப்பே செய்ய மாட்டர்ன்னு சொல்றீங்க.தசாவதரம் படத்தின் கமல் அசினை கட்டிப்பிடிச்சிட்டுருக்கிற மாதிரி ஒரு க்ளிப் கண்ணுல காட்டுங்க.அப்புறம் பாருங்க:)
***viyasan said...
//கடைசி வரையில் இவற்றை எல்லாம் சரி செய்யாமால் உரிமைப்போர் நடத்தியதால் தான் முடிவு எட்டப்படவில்லை.//
இது தான் பெரியார் விட்ட தவறு மட்டுமல்ல, பெரியாரிஸ்டுகள் தொடர்ந்து செய்கிற தவறுமாகும். ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடுகளை மேலும் பெரிது படுத்தி, தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்காமல், தமிழ், தமிழர் என்ற உணர்வையூட்டி தமிழ்நாட்டை, ஜின்னா செய்தது போல் பிரித்திருந்தால், இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கை தரத்தை அடைந்திருக்கும். அல்லது இந்தியாவின் மாநிலமாக இருந்து கொண்டே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியல் பலத்தையும் உண்மையான தமிழர்களின் கைகளுக்குச் சென்றடையச் செய்திருக்க வேண்டும். அரசியல், பொருளாதார ஆளுமை முழுமையாகத் தமிழர்களின் கரங்களில் இருந்தால், அதன் பின்னர் தமிழர்களுக்கிடையேயுள்ள சாதி, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்காக முழுசக்தியையும் பயன்படுத்தலாம். இலங்கையில் சிங்களவர்கள் இதற்கு நல்ல உதாரணமாகும். அவர்கள் மத்தியிலும் முன்னர் சாதிப்பாகுபாடுகள் இருந்தன. ஆனால் பெரியார் சாதிப்பாகுபாடுகளைப் போக்க புறப்பட்டு, சாதியுணர்வுகளைத் தூண்டி தமிழர்களை மேலும் பிளவு படுத்தி விட்டார்.****
அட அட அட!
ஈழத்தமிழகளிடம் சாதி இல்லைனா, எப்படி பிராபாகரன் வெள்ளாளர் இல்லைனு கண்டுபிடிச்சீங்கனு தெரியலை. சாதியிருக்கு ஆனா இல்லை போலயிருக்கு!
உங்களை விட்டா தமிழர்களை ஒட்ட வச்சு, எல்லாரையும் ஒரே புதைகுழியில் தள்ளியிருப்பீங்க! நல்லவேளை இடையில் இந்தியப் பெருங்கடல் ஒண்ணு இருக்கு!
பேசாமல் சீமானை ஈழத்துக்கு அழச்சுண்டு போயிடலாமே? உக்ன்களுக்கும் இலாபம்! எங்களுக்கும் பாதமில்லை!
***இதெல்லாம் 50 தொடக்கம் 70 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் வவ்வால். பெரும்பான்மை வெள்ளாளர்களாகிய இலங்கைத் தமிழர்கள் ஒரு வெள்ளாளரல்லாத பிரபாகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டதே***
அது சரி, அப்போ என்னத்துக்கு பெரியார் பொணத்தை தோண்டி எடுத்து வந்து வியாக்யாணம் பேசிக்கிட்டு??
***Erode Venkata Ramasamy (17 September 1879 – 24 December 1973)***
வவ்வால் & வியாசன்! சரியான போட்டி!
பிரபாகரன் காலத்துக்கு முன்பு ஜாதியின் தாக்கங்கள் அதிகம் இருந்திருக்கலாம்.ஆனால் விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த கால கட்டத்தில் ஜாதிகள் பின் தள்ளி முஸ்லீம்கள் தவிர்த்து,சக போராளிக் குழுக்களையும் சிதைத்து வலுவான போது ஜாதியம் பின் தள்ளப்பட்டு விட்டதென்றே சொல்லலாம்.
@வியாசன்!தமிழக சாதியம் குறித்த பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும் இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பு சாதியத்தை பின் தள்ளுகின்றதென்றே கூறலாம்.பெரியாரின் காலத்து தலைமுறையோடு ஒப்பிடும் போது இப்போதைய நிலை பரவாயில்லையென்றே சொல்லலாம்.இன்னும் சில தலைமுறைகள் கடக்கும் போது சாதியம் இன்னும் பின் தள்ளப்படும் நிச்சயம்.மேலும் இப்போதைய சாதிய தலைதூக்கலுக்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலும் சாதிவாரி சங்க அமைப்புக்களை ஊக்குவித்ததுமே.
@வவ்வால்!வெள்ளைக்காரன் ஆட்சி காலத்து தவறுகளும்,போராட்ட காலத்து தவறுகளும் இப்பொழுது வரலாறுகளாகிப் போய் விட்டன.இனி அவற்றை விமர்சனம் மட்டுமே செய்யமுடியும்.சீமான் காலத்து தவறுகள் அப்படியல்ல.தவறுகளை திருத்திக் கொள்ள இது போன்ற கருத்து பரிமாறல்கள் உதவும் என நம்புகிறேன்.
ஜோதிஜி!குத்துப்பாட்டுக்கு வரி எழுதப் போயிருக்க வேண்டியவர் வவ்வால்:)
யாராவது மொக்கையா கானா பாட்டு பாடிப்பார்க்கட்டும்.அப்புறம் பாருங்க அந்தாக்சரி வரிகள் எப்படி வவ்வாலுக்கு வந்து விழுதுன்னு:)
வருண்!மன்னிக்கவும்.கூட்ட நெரிசலில் கவனிக்க தவறி விட்டேன்.
பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் இருந்திருந்தால் சாதியம் இன்னும் வலுவாக இருந்திருக்கும் தமிழகத்தில்.மேலும் பெரியாரின் தடாலடி தாக்குதல்களையும் தாண்டி தமிழகத்தில் பக்தி மயம்,உதாரணமாக கேரளாவுக்கு சபரிமலை போவதெல்லாம் அதிகரித்திருக்கின்றன.
மேலும் ஈழ சகோதரர்களுக்கு பிரபாகரன் மீதான புரிதல் பெரியார் மீது இல்லையென்பதையே வியாசன் போன்ற ஆழ் பின்னூட்டங்களும் காண்பிக்கின்றன என்பதோடு தமிழக மதக் காதலுக்கு (ராமதாஸ் கோபித்துக்கொள்ளப் போகிறார்:))நிகராக புலம்பெயர் தமிழர்களும் சோடை போகவில்லை.
வியாசன்போல ஈழத்தமிழர்கள் பாவம். இப்படித்தான் பெரியாரையும், சீமானையும் அவர்கள் தரம் உணர்ந்து புரிந்துகொள்ளாமல் எதையாவது பேசி, எல்லாரிடமும் இப்படி கெட்ட பேர் வாங்கிக்கிறாங்க.
இவங்க சாதியை ஒழித்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் பெரியாரை எல்லாம் இப்படி எதுக்கு விமர்சிக்கணும்னு தெரியலை?
பெரியாரைப்பற்றி விமர்சிக்கும் வியாசன் பக்திமானோ, பண்டாரமோ இல்லை ஈழப்பார்ப்பனரோ னுதான் நெனைக்கத் தோணுது..
//அது சரி, அப்போ என்னத்துக்கு பெரியார் பொணத்தை தோண்டி எடுத்து வந்து வியாக்யாணம் பேசிக்கிட்டு??//
இதை என்னிடம் கேட்பதை விட, எதுக்கெடுத்தாலும் பெரியாரை துணைக்கழைக்கும் மற்றவர்களுக் சொல்லலாமே. தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் தான் முதலில் சொன்னாராம், ஆனால் வவ்வால் என்னடாவென்றால் சீமானை பால்தாக்கரேவுடன் ஒப்பிடுகிறார். அப்படியானால் பெரியாரைத் தானே பால்தாக்கரேவுடன் ஒப்பிட வேண்டும்.
//பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் இருந்திருந்தால் சாதியம் இன்னும் வலுவாக இருந்திருக்கும் தமிழகத்தில்.மேலும் பெரியாரின் தடாலடி தாக்குதல்களையும் தாண்டி தமிழகத்தில் பக்தி மயம்,உதாரணமாக கேரளாவுக்கு சபரிமலை போவதெல்லாம் அதிகரித்திருக்கின்றன.//
பெரியாரில் எனக்கு விருப்பும் இல்லை வெறுப்புமில்லை. அவரது கொள்கைகள் எதுவும் ஈழத்தமிழர்களிடையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பெரியார் எல்லா மதங்களையும் வெறுக்கவில்லை. அவர் இந்துமதத்தை மட்டும் தான் வெறுத்தார். அதற்குக் காரணம் அவரது பார்ப்பன வெறுப்பு. ஆனால் இலங்கையிலே பார்ப்பன ஆதிக்கம் இருந்ததில்லை, அதனால் எங்களைப் பொறுத்தவரையில், சைவமும் (மாலியம் உட்பட) தமிழும் பிரிக்க முடியாதவை.பெரியாரின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவையானதாக இருந்திருக்கலாம், பலரது வாழ்க்கையில் அவரது கொள்கைகள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தமிழ்நாட்டிலுள்ள பல தாழ்த்தப்பட்ட(தலித் என்ற சொல்ல தமிழ்ச்சொல் அல்ல) நண்பர்கள், குறிப்பாக திருமாவளவனின் தம்பிகள் பலர் எனக்கும் விளக்கியுள்ளனர், அது எனக்கும் தெரியும். ஆனால் உண்மையில் பெரியாரின் நோக்கம் தமிழ்நாட்டில் இந்துமத மறுப்பாக இருந்திருந்தால், அந்த விடயத்தில் பெரியார் மோசமான முறையில் தோற்றுப் போய் விட்டார் எனறு தான் கூற வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பல தலித் கிராமங்களுக்கும், சேரிகளுக்கும் நான் போயிருக்கிறேன். அங்கெல்லாம் கூட கல்லினாலான ஒரு கட்டிடம் இருந்தால் அது ஒரு இந்துக் கோயிலாகத் தானிருக்கும். கோயில்களில்லாத சேரிகளே கிடையாது என்று கூறலாம்.
//தமிழக மதக் காதலுக்கு (ராமதாஸ் கோபித்துக்கொள்ளப் போகிறார்:))நிகராக புலம்பெயர் தமிழர்களும் சோடை போகவில்லை//
முற்றிலும் உண்மை. எங்களைப் பொறுத்தவரையில் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை. பார்ப்பனீயம் எதிர்க்கப்பட வேண்டும் ஆனால் எங்கள் முன்னோர்கள் கட்டிக்காத்த சைவமும் தமிழும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
//ஈழத்தமிழகளிடம் சாதி இல்லைனா, எப்படி பிராபாகரன் வெள்ளாளர் இல்லைனு கண்டுபிடிச்சீங்கனு தெரியலை. சாதியிருக்கு ஆனா இல்லை போலயிருக்கு!//
ஈழத்தில் சாதி இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ளது போல் சாதி வெறி கிடையாது. சாதி சம்பந்தமான கலவரங்கள் அல்லது கொடுமைகள் நடந்து 50 தொடக்கம் 70 வருடங்கள் இருக்கும். இலங்கையில் சாதி முற்றாக இல்லாது போகாது விட்டாலும், அங்கு சாதி என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாததாலும், சாதியடிப்படையில் எந்த சலுகைகள் வழங்கப்படாததாலும், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சாதிக்கு குருட்டுத்தன்மை (Caste Blind) என்ற நிலை ஏற்பட்டுள்ளது.. எங்களுக்கு சாதி முக்கியமான விடயம் அல்ல. அதை விட புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது தலைமுறையில் அகமுறை மணங்கள் முற்றாக இல்லாது போய்க் கொண்டிருகின்றன.
///நீங்க சீமானை ஆதாரிங்க ,இல்லை சாமானை ஆதரிங்க அதற்காக எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கோமாளியை ஆதரித்துக்கொண்டு இருக்க முடியாது.///
//இங்கே பத்து நிமிடமா சிரிச்சுக்கிட்டேயிருக்கேன்.//
யார் உண்மையில் கோமாளி என்பதற்கு விடையை அடுத்த தேர்தலுக்குப் பின்பு தான் அறியலாம் , அல்லவா? :))
சீமான் யாசினை (அசினை அல்ல) கூட்டிட்டிக்கிடு வந்ததை விட்டுட்டு மற்றதை பேசாதீர்கள் :)
ராசநட,
//ஜோதிஜி!குத்துப்பாட்டுக்கு வரி எழுதப் போயிருக்க வேண்டியவர் வவ்வால்:)//
பாட்டுக்கு பாட்டெடுத்து பாடுவதை கேட்டீரோ
தூங்கி வழியும் ஒட்டகமே துள்ளியெழ மாட்டீரோ ...
ஓஹோ ஹோ ஹோய் !
ஜென் குரு 10 நிமிடமா சிரிச்சிட்டு இருக்காராம்,எதுக்கு அவரு ஆனந்தத்துல மண்ணள்ளி போடப்பாக்குறிங்க.
உம்ம பதிவே பேச்சு மூச்சில்லாம கிடக்கு நான் வந்து தான் முதல் உதவி செய்து உசுப்பிடணும் போல!
------------
//வலுவான போது ஜாதியம் பின் தள்ளப்பட்டு விட்டதென்றே சொல்லலாம்.//
கருணா எல்லாம்ம் வாய்க்கா வரப்பு தகராறில் பிரிந்து போனாராக்கும் :-))
# நான் நிதர்சனத்தினை பேசுகிறேன் ,வியாசர், கற்பனாவாதம்ம் பேசுகிறார் ,இதுல எங்கேயிருந்து போட்டி வரப்போகுது அவ்வ்!
கடந்த வரலாறு என அப்படியே விட்டால்ல் எக்காலத்திலும் தனஈழம் மட்டுமில்லை,இலங்கையில் தமிழினமே தலையெடுக்க முடியாது,எஞ்சி இருக்கும் தமிழர்கள் அவரவர் சாமர்த்தியத்துக்கு பிழைத்துக்கொண்டால் போதும் என கிடைத்த நாடுகளில் செட்டில் ஆகிவிடத்தான் பார்ப்பார்கள்.
---------------
# // வவ்வால் தப்பே செய்ய மாட்டர்ன்னு சொல்றீங்க.தசாவதரம் படத்தின் கமல் அசினை கட்டிப்பிடிச்சிட்டுருக்கிற மாதிரி ஒரு க்ளிப் கண்ணுல காட்டுங்க.அப்புறம் பாருங்க:)//
மஞ்சத்துண்டின் கூடாரத்தை சேர்ந்தவர்னு காட்டுறீரே, மஞ்சத்துண்டு தான் பதில் சொல்லமுடியாத முட்டுச்சந்தில் மாட்டிக்கிட்டால் ,இப்படி எதுனா குயுக்தியா பேசி திசை திருப்புவார்.
அமுதவன் சார் ,மஞ்சத்துண்டு தமிழர்கள் உணர்வை தூண்டி குளிர்காய்ந்து அரசியல் வியாபாரம் செய்கிறார் போல எதுனா சொல்லிப்பாருங்களேன்ன்,ராச நட குதிக்கிற குதியை :-))
---------------
ஜோதிஜி,
சீறாமல் சிரிச்சதுக்கு நன்றி!
சீமானின்ட தளபதியே சிரிச்சிட்டார் பட்சே ஒட்டக ஓனர் சிரிக்காமல் கோட்டித்தனம் செய்றார் என்டே குருவாயுரப்பா ஈ ஆளை ரக்ஷிக்கனும்!
-------------
தலைவர் வியாசர்ரே,
பெரியார் திராவிட நாடு ,திராவிடத்தமிழர்கள் என்று தான் சொல்லிக்கிட்டு இருந்தார்,ஆனாலும் தேசிய வாதமே வென்றது சரித்திரம்,இப்போ சீமான் காலம் போன காலத்தில் சொல்வதை எப்படி சரினு சொல்லிக்கிட்டு நிக்கிறீர்.
இப்போ வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து குடியுரிமை கேட்கிறீர்கள் அங்குள்ளவர் எங்க நாடு எங்களுக்குனு சொன்னால் ஏற்பீர்களா? இல்லை குடியுரிமை வாங்கிய பின் அங்கே அரசுபதவி கொடுக்க கூடாது என்றாலோ, கனடா போன்ற நாடுகளில் எம்பியாக்க நிற்கக்கூடாது ,கனடா கனடியர்களுக்கேனு வெள்ளைக்காரன் சொன்னாலோ சும்மா விடுவீர்களா?
ஊர்,தாலுக்கா, மாவட்டம், மாநிலம்னு ஒவ்வொருத்தரும் குறுகிய மனப்பான்மையாக பேசினால் தேசம் என்ற ஒன்றே வேண்டாமே?
------------
குறும்பன்,
எல்லாம் நேரம்யா நேரம் ஆளாளுக்கு அங்கவே கண்ணாயிருக்காங்களே அவ்வ்!
//இப்போ வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து குடியுரிமை கேட்கிறீர்கள் அங்குள்ளவர் எங்க நாடு எங்களுக்குனு சொன்னால் ஏற்பீர்களா? இல்லை குடியுரிமை வாங்கிய பின் அங்கே அரசுபதவி கொடுக்க கூடாது என்றாலோ, கனடா போன்ற நாடுகளில் எம்பியாக்க நிற்கக்கூடாது ,கனடா கனடியர்களுக்கேனு வெள்ளைக்காரன் சொன்னாலோ சும்மா விடுவீர்களா?//
ஐயா பஞ்சாயத்து,
ஒட்டகத்தையும் ஓநாயையும் ஒப்பிடுவது போல் தான் இதுவும், கனடாவில் எல்லோருமே குடியேற்றக்காரர்கள் தான். செவ்விந்தியர்களால் Native People மட்டும் தான் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்,அப்படிக் கேட்கக்கூடியளவுக்கு அவர்களிடம் சனத்தொகை எண்ணிக்கை குறைவு. ஒரு காலத்தில் அவர்கள் பல்கிப் பெருகி, இந்த நாடு எங்களுடையது எல்லோரும் வெளியேறுங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. கனடா பெரிய நாடாக இருந்தும், கனடாவுக்கு வேறு நாடுகளிலிருந்து குடியேற்றம் தேவையாக இருந்தும் கூட, கனடாவின் பூர்வீக குடிகள், வெள்ளையர்களையும், மற்றவர்களையும், இது எங்களின் நாடு என்று சலுகைகளுக்காக கனடாவின் அரசாங்கத்தை பயமுறுத்திப் பெற்றுக் கொள்கிறார்கள். பெரிய நகரங்களில் எல்லாம் Land Claim வழக்கு போட்டு நட்ட ஈடு பெறுகிறார்கள். வரி விலக்கு போன்ற மற்றவர்களுக்கில்லாத சலுகைகளையும் பெறுகிறார்கள். அவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்களின் சனத்தொகையை விட அவர்களில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் உங்களின் ஒப்பீடு தமிழ்நாட்டுக்குப் பொருந்தவே பொருந்தாது. தமிழ்நாடு சனத்தொகையால் நிரம்பி வழிகிறது. அது ஒரு குடியேற்ற நாடு அல்ல. தமிழர்கள் மற்ற மாநில மக்களைப் பார்த்து உங்களுக்கென்று தனிமாநிலங்கள் உண்டு, அங்கெல்லாம் உங்களின் மொழிக்கு ஆளுமையுண்டு, அங்கு உங்களின் மொழி பள்ளிகளில் கட்டாயபாடமாக உண்டு. உங்களின் மாநிலத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வருவதை நினைத்துப் பார்க்கவே முடியாது, பின்பு எதற்காக தமிழ்நாட்டில் வந்து எனது உரிமைகளில் பங்கு கேட்கிறீர்கள் என்ற நியாயமான கேள்வியைக் கேட்டு, தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லும் பூரண உரிமை சீமான் போன்ற தமிழனுக்குண்டு. :-)
தலைவரய்யா,
நீர் உண்மையில் ஒன்னியுமே தெரியாத அப்பாவியா இல்லாங்காட்டி அப்பாவி போல ஆக்ட்டிங்கா, கொயப்பமா கீது :-))
கனடா என சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே ,ஆனால் உடனே கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் குடியேறிகள் ,செவ்விந்தியர்களுக்கே அவ்வுரிமை உண்டுனு கதை சொல்லிக்கிட்டு.
வெள்ளைக்காரனெல்லாம் பிற்பாடு வந்திருந்தாலும் காடாக இருந்த நாட்டை திருத்தி நவீனப்படுத்தி முன்னேற்றி இருக்கான்,அங்கே இப்போ போய் குடியேறிட்டு எனக்கும் எல்லாம் கொடுன்னு கேட்பவர்களை முடியாதுனு சொல்லவும் உரிமையுண்டு என சொன்னால் என்ன செய்வீர்கள்?
ஒரு உதாரணத்துக்கு ஒரு நாட்டை சொன்னால் ,அந்த ஒரு நாட்டில் மட்டும் தான் குடியேற்றம் செய்தாப்போல பேச வேண்டியது,அவ்வ், சரி கனடா விடுங்க ஜெர்மனி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து என பழமையான நாடுகளில் சென்றவர்களுக்கு குடியுரிமை, சம உரிமை புதுசா வந்தவங்களுக்கு கிடையாதுனு சொன்னா என்ன சொல்வீங்க?
ஜெர்மனி,ஸ்கான்டிநேவியன் நாடுகள் எல்லாம் பழமையான நாடுகள் அங்கே குடியேறாமலா இருக்காங்க? அங்கே போய் குடியுரிமை வாங்கியதும் எல்லா உரிமையும் வேண்டும்னு கேட்பீங்களா இல்லை நாமே வந்தேறிகள் என அடக்கமா கிடைக்கிறத வச்சிக்கிட்டு இருப்பீங்களா?
அப்புறம் மேற்சொன்னவை எல்லாமே நாடுகள் ,தமிழ்நாடு ஒரு நாடு அல்ல,பெரிய நாட்டில் ஒரு பகுதி,ஒரு மாநிலம், இங்கே ஒரே நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வாழக்கூடாதுனு சொல்லவே முடியாது, அரசியலில் ஈடுப்படக்கூடாதுனும் சொல்ல முடியாது அப்படி சொல்வது இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது.
கர்நாடகா தண்ணீர் விடவில்லைனா எப்படி இந்தியாவில் இருக்கும் இன்னொரு மாநிலத்திற்கு தண்னீர் விடாமல் இருக்கலாம்னு கேட்கிறோம், அவன் சொல்லிக்கிறப்படி அவன் மாநில நதி நீர் அவனுக்கு தான் சொந்தம்னா விடுகிறோம்.
ஒரே நாடு என்கிற கொள்கையின் படி ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகிற நதி நீர் அண்டை மாநிலத்துக்கும் பாத்தியதை ஆகிறதோ அப்படியே மக்களுக்கும் நாடு முழுக்க உரிமை இருக்கு.
நீங்க சொல்றாப்போல ஒவ்வொரு மாநிலத்தவரும் என் மாநிலம் எனக்கேனு சொன்னால் பிரிவினை தான் வளரும், அது தேவையற்றது.
தமிழர்களுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கணும் என கருத்து பிரச்சாரம் செய்யலாம்,ஆனால் அதையே கொள்கையாக வைத்து அரசியல் இயக்கம் நடத்துவது தவறு. தமிழர்கள் என ஒன்றுப்படலாம் ஆனால் மற்றவர்களை அடக்கிவிட்டு அல்ல, அப்படி அடக்குமுறை செய்வது தான் இலங்கையில் நடக்கிறது. அது தான் தமிழ்நாட்டிலும் வேண்டுமா?
நானே தமிழ்நாட்டின் பூர்வீக தமிழர்கள் தான் முதல்நிலை தமிழர்கள், குடியேறி தமிழர்களாக மாறியவர்கள் அடுத்த நிலை தமிழர்கள் என்று தான் சொல்வேன்,ஆனால் அவர்களுக்கு தமிழக அரசியல்,வேலைவாய்ப்பில் உரிமையில்லை என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன்.
நம்ம நாட்டில எலெக்ஷன் கமிஷன் இன்னும் ஸ்ட்ரிக்ட் ஆக செயல்படவில்லை, ஜாதி,மொழி,இனம்,மதம் சொல்லி தேர்தல் பிரச்சாரம்ம் செய்யவே தடை இருக்கு, அதனை எலக்ஷன் கமிஷன் தீவிரமா கடைப்பிடித்தாலே ,சீமான்,மரம்வெட்டிப்போன்றவர்கள் அரசியலே செய்ய முடியாமல் போயிடும்.
# முன்னரே கேட்டேன் பதிலே சொல்லவில்லை, இப்பவும் கேட்கிறேன் ஒரு பதிலை சொல்லும்,
இரட்டை குவளை,மலம் தீற்றல் என தமிழ்நாட்டில் ஜாதிய கொடுமை இருக்குனு எங்கவோ உட்கார்ந்துக்கிட்டு இருக்க உங்களுக்கு தெரியுது ,அது ஏன் சீமானுக்கு தெரியலை, தமிழ்நாடு தமிழருக்கே என சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைக்கு ஒன்னும் செய்யாமல் ஈழத்தில் என்ன செய்துவிடப்ப்போகிறார்?
என்னப்பார்த்து அருகதை இருக்கானு கேட்ட உங்களால்,சீமானை பார்த்து தமிழகத்தில் இருக்க கொடுமைகளை சரி செய்யாமல் ஈழம்னு பேச என்ன அருகதை இருக்குனு கேட்க முடியுமா உங்களால்?
மேடையைப்போட்டு பேசுறவன் எல்லாம் தமிழ்நாட்டை ஆண்டுவிட முடியாது, 2016 ல் யார் கோமாளினு தெரியும்னு சொல்லுறிங்க ,அப்பவும் சீமான் தான் கோமாளியா இருப்பார்,அவரை நம்பி மண்டையை ஆட்டும் உங்களைப்போன்றவர்கள் கோமாளி ரசிகர்களாக இருப்பார்கள் :-))
//என்னப்பார்த்து அருகதை இருக்கானு கேட்ட உங்களால்,சீமானை பார்த்து தமிழகத்தில் இருக்க கொடுமைகளை சரி செய்யாமல் ஈழம்னு பேச என்ன அருகதை இருக்குனு கேட்க முடியுமா உங்களால்?//
ஐயா பஞ்சாயத்து,
மன்னிக்கவும், உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்றெ தெரியவில்லை. நீங்கள் கூடச் சீமானை விடச்சிறந்த பேச்சாளராகவும், அறிவாளியாகவும் இருப்பீர்கள் போலத் தான் தெரிகிறது. எனக்குத் தெரிந்த எத்தனையோ தமிழ்நாட்டு 'தலித்துக்கள்' (I hate this word) , சீமானை விட தமிழுணர்வுள்ளவர்கள், பேச்சுத் திறனும் வாதிக்கும் திறனுமுள்ளவர்கள். அதை விட ஈழத்தமிழர்களின் மீது தமது சொந்த சகோதரர்கள் போல் அன்பு காட்டுபவர்கள். ஆனால் அவர்கள் யாரும் சீமானைப் போல் பிரபலமடையவில்லை. அரசியலில் அடையாளம் பெறுவதற்கு எல்லோராலும் பேசப்படும், ஆதரவுள்ள உணர்ச்சிகரமான விடயத்தை கையில் எடுக்க வேண்டும். அதற்கு கருணாநிதிக்கு தமிழ் உதவியது, ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆரின் புகழ் உதவியது. திருமாவளவனுக்கு அவரது சாதிமக்களுக்கு மற்றவர்கள் இழைக்கும் கொடுமை உதவியது, சீமானுக்கு ஈழப்பிரச்சனை உதவியது.
சீமான் சாதிப்பிரச்சனையைக் கையிலெடுத்து ஆரம்பத்திலேயே சாதியொழிப்பு அரசியல்வாதியாக தன்னை அறிமுகப்படுத்தியிருந்தாரென்றால், யாரும் அறியாமலே, எப்பொழுதோ காணாமல் போயிருப்பார். இப்பொழுது கூட சீமானின் பிரபலம் வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமே என்பது அவருக்கும் தெரியும். இந்த லட்சணத்தில், அவர் சாதிப்பிரச்சனை பற்றிப் பேசி, ஒரு பிரிவினருக்கு மட்டும் அவர் சார்பானவர் என்ற கருத்து ஏற்பட்டால், எல்லாச்சாதியினரின் மத்தியிலும் அவருக்கு இருக்கும் ஒரளவு ஆதரவாளர்கள் கூடக் காணாமல் போய்விடுவார்கள். இந்தக் காரணத்துக்காகத் தான் ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் கூடச் சாதிக்கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாகக் கண்டிப்பதில்லை. அரசியலில் இது சகஜமப்பா.
நான் முன்பே கூறியது போன்று, தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார ஆதிக்கம் முற்று முழுதாக சீமான் போன்ற உண்மையான தமிழர்களின் கைகளில் வரும் வரை தமிழர்கள் மத்தியில் காணப்படும் சாதி போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்க முடியாது.
//ஒரே நாடு என்கிற கொள்கையின் படி ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகிற நதி நீர் அண்டை மாநிலத்துக்கும் பாத்தியதை ஆகிறதோ அப்படியே மக்களுக்கும் நாடு முழுக்க உரிமை இருக்கு.//
பெயரளவில் தான் பாத்தியதை ஆகிறது. தமிழ்நாட்டுக்கும் சொந்தமான நதிநீருக்கு தமிழ்நாடு கெஞ்ச வேண்டியது மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கு கூடப் போய் வென்றாலும் தமிழ்நாட்டுக்கு தரப்பட வேண்டிய நீரை மற்ற மாநிலத்தவர்கள் தருவார்களா என்பது சந்தேகமே.
இந்தியாவில் பிரிவினையை ஒழிக்க, பல தேசிய இனங்கள் வாழும் இந்தியாவின் ஒற்றுமையைக் காக்க அந்தந்த தேசிய இனங்களை அவர்களின் பூர்வீக மண்ணில் தமது மொழியையும், கலாச்சாரத்தையும், இன அடையாளத்தையும் இழக்காமல் பேணிப்பாதுகாத்துக் கொள்ள வழிவகுத்தால் தான் அவர்கள் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுவார்கள் என்பதை இந்திய தலைவர்கள் உணர்ந்ததால் தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இலங்கை போல் இந்தியாவிலும் ஒற்றையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், இந்தியா எப்பொழுதோ சிதறிப் போயிருக்கும்.
இந்தியமக்கள் அனைவருக்கும் இந்தியா முழுவதும் (காஸ்மீரைத் தவிர) குடியேற உரிமை இருக்கிறது, ஆனால் குடியேறும் ஏனைய மாநிலத்தவர் அல்லது மொழிவழிக் குழுவினர் குடியேறும் மாநிலத்தின் ஆட்சி, பொருளாதாரம், நிர்வாகம், கல்வி என்பவற்றில் ஆளுமை மிக்கவர்களாக, அந்த மாநில மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக, அந்த மாநிலத்தின் முதலமைச்சர்களாக ஆகுவதற்கு கற்பனை செய்து பார்க்குமளவுக்கு மட்டுமல்ல, அவர்கள் விரும்பினால் மாநிலத்தின் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இருந்தால், அந்த மாநில மக்களைப் போல் இளிச்சவாயர்கள் யாரும் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அங்கு தோல்வியடைந்து விட்டது என்பது தான் கருத்தாகும்.
நான் ஒரு தமிழன் என்ற வகையில் எனது கருத்துக்கள் எல்லாம் தமிழ்நாட்டுச் சகோதரர்களின் நலன்களை மட்டும் தான் பிரதிபலிக்கும் அதனால் என்னுடன் இந்திய தேசியம் பேசுவதால் எந்த பயனுமில்லை.
தலைவரே,
நீர் பெரிய அரசியல் ஞானியா இருப்பீர் போல அதான் கோமாளிய எல்லாம் அரசியல் சக்தினு நினைக்கீர் :-))
//அவர்கள் யாரும் சீமானைப் போல் பிரபலமடையவில்லை//
சீமானை விட அரசியல் தெரிந்த, தமிழுணர்வுள்ள நிறையப்பேரு டீக்கடை வாசலில் அரசியல் பேசிட்டு போயிடுறாங்க, அவங்க எல்லாம் ஏன் பிரபலமாகலைனா சினிமாவில இல்லை :-))
தமிழ்நாட்டில சினிமாவில் இருந்துஅரசியல் தலைவரை தேடுறாங்களேனு கவ்வலைப்படுவேன், இப்போ பார்த்தால் தான் தெரியுது இலங்கையிலும் சினிமாவில் இருந்து தான் அரசியல் "ஒளிஐ' தேடுகிறார்கள்னு :-))
ஒரு காலத்தில் சினிமா கொட்டாயில முதலமைச்சரை தேடுறான் தமிழன் நாடு உருப்படுமானு கேட்டாரு சீமான் ,இன்னிக்கு அவர பார்த்து அந்த கேள்விக்கேட்க யாருமே இல்லையா :-))
# //சீமான் சாதிப்பிரச்சனையைக் கையிலெடுத்து ஆரம்பத்திலேயே சாதியொழிப்பு அரசியல்வாதியாக தன்னை அறிமுகப்படுத்தியிருந்தாரென்றால், யாரும் அறியாமலே, எப்பொழுதோ காணாமல் போயிருப்பார். இப்பொழுது கூட சீமானின் பிரபலம் வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமே என்பது அவருக்கும் தெரியும். இந்த லட்சணத்தில், அவர் சாதிப்பிரச்சனை பற்றிப் பேசி, ஒரு பிரிவினருக்கு மட்டும் அவர் சார்பானவர் என்ற கருத்து ஏற்பட்டால், எல்லாச்சாதியினரின் மத்தியிலும் அவருக்கு இருக்கும் ஒரளவு ஆதரவாளர்கள் கூடக் காணாமல் போய்விடுவார்கள். இந்தக் காரணத்துக்காகத் தான் ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் கூடச் சாதிக்கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாகக் கண்டிப்பதில்லை. அரசியலில் இது சகஜமப்பா.//
ஒரு அரசியல் இயக்கம் நடத்துறவர் சமூக அவலம் பற்றி கவலைப்படத்தேவையில்லை, கவலைப்பட்டால்ல் அரசியல் செய்ய முடியாது என்கிறீர்கள், ஆனால் ஒரு பதிவுல கமெண்ட் போடும் அப்பிராணியப்பார்த்து சமூக அவலம் நீங்க என்ன செய்தாய் , அருகதை இருக்கானு கேட்பீங்க நல்ல அரசியல் ஞானம் :-))
//தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார ஆதிக்கம் முற்று முழுதாக சீமான் போன்ற உண்மையான தமிழர்களின் கைகளில் வரும் வரை தமிழர்கள் மத்தியில் காணப்படும் சாதி போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்க முடியாது.//
அப்புறம் ஏனுங்க்ணா இப்படி சொல்லுறிங்க, ஆட்சிக்கு வந்தா மட்டும் எப்படி ஒரே இரவில் நீக்குவாராம், அப்போ என்ன செய்வார்னா ,நீங்களே சொன்னாப்போல ஒரு சமூகத்துக்கு ஆதரவுனு காட்டிக்கிட்டா அடுத்த தேர்தலில் ஓட்டுக்கிடைக்காது,பாராளுமன்ற தேர்தல் வேற வருதுனு கணக்கு பண்ணி ஒன்னும் செய்யாம சும்மாத்தான் இருப்பாரு :-))
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பானு அப்போவும் நீர் சொல்வீர் :-))
எனக்கு ஒட்டு போட்டா தமிழ்நாடு அமெரிக்கானு சொல்லுறாப்போலத்தான் சீமான் ஆட்சிக்கு வந்தா செய்வார்னு சொல்வதெல்லாம், இப்பவே பேசப்பயப்படும் கோழையால் எப்படி அப்போ மட்டும் பேச முடியும் ,ஓட்டு வங்கிக்கணக்குப்போட்டு அதற்கு ஏற்ப தான் செயல்ப்படுவார்.
//பெயரளவில் தான் பாத்தியதை ஆகிறது. தமிழ்நாட்டுக்கும் சொந்தமான நதிநீருக்கு தமிழ்நாடு கெஞ்ச வேண்டியது மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கு கூடப் போய் வென்றாலும் தமிழ்நாட்டுக்கு தரப்பட வேண்டிய நீரை மற்ற மாநிலத்தவர்கள் தருவார்களா என்பது சந்தேகமே. //
ஒரே நாடு என்ற கொள்கை இருப்பதால் தான் போராடவாவது முடிகிறது.நதி நீர் பிரச்சினை தீர்க்க முடியாததே அல்ல, வாக்கு வங்கி அரசியலால் தான் மாநிலங்களுக்கிடையே பிரித்து வைத்து அரசியல் செய்கிறார்கள் அரசியல்வாதிகள்.
தொடரும்...
தொடர்ச்சி..
//இந்திய தலைவர்கள் உணர்ந்ததால் தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இலங்கை போல் இந்தியாவிலும் ஒற்றையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், இந்தியா எப்பொழுதோ சிதறிப் போயிருக்கும். //
இந்தியா சுதந்திரமடைந்து எப்படி ஆட்சி பொறுப்பு பகிரப்பட்டது என்பதை எல்லாம் பார்த்த பின்னரே இலங்கை சுதந்திரமடைந்தது, அப்போதே வெள்ளைக்காரனிடம் இந்திய பாணியில் யூனியன் அரசு அல்லது ஃபெடரல் அரசு அல்லது இந்தியா-பாகிஸ்தான் போல இரு தனி நாடு என கேட்க வகையில்லாத இலங்கை தமிழர்கள் தான் ,இந்திய மாநிலங்கள் எப்படி உருவாச்சுனு எனக்கு பாடம் எடுக்கிறார்கள் :-))
இதுல வேற இலங்கை போல உருவாகி இருந்தா இந்தியா சிதறி இருக்கும்னு கணிப்பு வேற.இதையெல்லாம் இலங்கை சுதந்திரமடைந்த போது இருந்தவங்க ஏன் செய்யலை? அதன் பின்னால் இருந்த உள்நோக்கம் என்னனு எனக்கு தெரியும் , சொன்னா உமக்கு வலிக்கும்!
//மாநில மக்களைப் போல் இளிச்சவாயர்கள் யாரும் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அங்கு தோல்வியடைந்து விட்டது என்பது தான் கருத்தாகும். //
சிங்களனை தொப்புள் கொடி உறவென சொல்லி அவனுக்கு தோதாக சுதந்திர உடன்ப்படிக்கைக்கு வெள்ளைக்காரனிடம் ஒப்புக்கொண்ட அக்கால இலங்கை தமிழ் அரசியல்வாதிகளால் இளிச்சவாயர்கள் ஆக்கப்பட்டவர்கள் இதெல்லாம் சொல்லுவது மிகப்பெரும் காமெடி!
மொழி வழி மாநிலம் உருவாக்கப்பட்டதே பிரிவினையை வளர்க்க தான்,அதனால் பலனேதும் இல்லை, அது தோல்வியடைவதால் நஷ்டமில்லை. உண்மையில் தமிழ்நாட்டில் மொழிவழி மாநிலத்துக்கு எதிர்ப்பு தான் அக்காலத்தில் இருந்தது என்ற வரலாறு அறியாதவருடன் பேசி என்ன பயன்?
அக்கால தெலுங்கு பேசும் மெட்ராஸ் பிரசிடென்சி பகுதியில் பொட்டி ஶ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்து மொழிவாரி மாநிலம் பிரிக்க வச்சார் அப்போ தமிழக மக்களும்,அரசியல் தலைவர்களும் அப்படி பிரிப்பதை விரும்பவில்லை என்பதே வரலாறு.
//நான் ஒரு தமிழன் என்ற வகையில் எனது கருத்துக்கள் எல்லாம் தமிழ்நாட்டுச் சகோதரர்களின் நலன்களை மட்டும் தான் பிரதிபலிக்கும் அதனால் என்னுடன் இந்திய தேசியம் பேசுவதால் எந்த பயனுமில்லை.//
இந்தியா தமிழர்கள் பெரும்பாலோருக்கு இந்தியா வேறு தமிழகம் வேறல்ல.
இலங்கைத்தமிழர்கள் தமிழர்நாட்டு நலன் குறித்து கவலைப்படும் அளவுக்கு இங்கு ஒன்றும் மோசமாகிடவில்லை. ஜனநாயக முறையில் உரிமைக்காக போராட அனைத்து வாசல்களும் இங்கு திறந்தே இருக்கிறது. எனவே இருக்கும் நிலையை மோசமாக்கிடாமல் இருந்தால் போதும்.
இந்திய தமிழர்களுக்கு பலன் அளிக்கும் நிலையில் இலங்கையர்கள் இல்லை,இங்கிருந்து தான் பலன் கிடைக்க வேண்டும். நான் ஒரு தமிழன் என்ற வகையில் இலங்கை தமிழருக்காக பேசவே விரும்புவேன்,ஆனால் அதை வைத்து பிரிவினை வாதம் பரப்ப விரும்புவதை ஆதரிப்பதில்லை, எனவே பிரிவினை வாதம் பேசுவோர் சற்றே அடங்கி கிடக்கலாம்,பேசுவதில் பலன் இல்லை.
//சிங்களனை தொப்புள் கொடி உறவென சொல்லி அவனுக்கு தோதாக சுதந்திர உடன்ப்படிக்கைக்கு வெள்ளைக்காரனிடம் ஒப்புக்கொண்ட அக்கால இலங்கை தமிழ் அரசியல்வாதிகளால் இளிச்சவாயர்கள் ஆக்கப்பட்டவர்கள் இதெல்லாம் சொல்லுவது மிகப்பெரும் காமெடி!//
ஐயா வவ்வால் அவர்கள் மிகவும் புராதனமானவர் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பழங்கதைகளை இழுத்து வந்து இன்றைய ஈழத்தமிழர்களைத் தொடர்பு படுத்துகிறார். நானோ அல்லது எங்களில் எவராவது ஈழத்தமிழர்களின் அக்காலத்தலைவர்கள் எடுத்த முடிவுகள் எல்லாம் சரியானவை என வாதாடியிருக்கிறோமா. வீரம் மிகுந்த ஆனால் விவேகம் குறைந்த பிரபாகரன் எடுத்த தவறான முடிவுகள் சிலவற்றால் தான், பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணத்தையும் இழக்கும் நிலையில் நாங்கள் ஈழத்தமிழர்கள் உள்ளோம் என்பதைக் கூட கூறுவதற்கு நான் தயங்கியதில்லை. சேர்.ராமநாதன் போன்ற தலைவர்கள் தாம் எவ்வாறு சிங்களத்தலைவர்களிடம் ஏமாந்து போனோம் என்பதை அவர்கள் சாகுமுன்பே ஒப்புக்கொண்டு விட்டுத்தான் செத்தார்கள். அதனால் இலங்கையில் கூட்டாட்சி முறையை ஈழத்தமிழர்கள் ஏற்படுத்த தவறியமை,ஏற்படுத்தப்பட்ட இந்தியக் கூட்டமைப்பில் இரண்டாந்தரப் பிரசைகளாக, இளிச்சவாயர்களா தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருப்பதை நியாயப்படுத்துவதாக ஒரு முட்டாள் கூட வாதாடமாட்டான்.
//நான் ஒரு தமிழன் என்ற வகையில் இலங்கை தமிழருக்காக பேசவே விரும்புவேன்,ஆனால் அதை வைத்து பிரிவினை வாதம் பரப்ப விரும்புவதை ஆதரிப்பதில்லை, எனவே பிரிவினை வாதம் பேசுவோர் சற்றே அடங்கி கிடக்கலாம்,பேசுவதில் பலன் இல்லை.//
ஐயா வவ்வால் அவர்களை இளங்கோவன் வியாதி பிடித்தாட்டுகிறது. அவரும் அப்படித்தான் விவாதத்தில் ஆத்தாமல் போனால் ஒன்றில் அவரை எதிர்த்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை புலிகள் என்று புலிப்பூச்சாண்டி காட்டுவார் அல்லது அவர்களைப் பிரிவினைவாதிகளாக்கி வாயை அடக்கப்பார்ப்பார். அந்த கண்ராவியை ஒரு தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன், வவ்வாலும் இளங்கோவனின் தீவிர ஆதரவாளரோ, பங்காளியோ அல்லது ஒரே சாதிக்காரர்களோ என்னமோ, யார் கண்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்.
நான் எங்கே ஐயா பிரிவினைவாதம் பேசினேன், நான் கூறியதெல்லாம், செய்யிற வேலையை ஒழுங்காக, கொள்கைப்பிடிப்போடு செய்திருந்தால், அதாவது திராவிடவீரர்கள் தனிநாட்டுப் பிரிவினையைக் கோரியபோது, உணர்ச்சியோடு, உண்மையோடு அதற்காகப் போராடி தமிழ்நாடு பிரிந்திருந்தால் இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கைத் தரத்துடன் இருந்திருக்கும் என்பது தான். நான் பேசியதெல்லாம் இறந்தகாலத்திலேயல்லாமல் நிகழ்காலத்தில் அல்ல. தமிழ்நாடு பிரிய வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்களேயல்லாமல் நாங்கள் அல்ல. என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டு மக்கள் சாதி, பணம், ஆடம்பர வாழ்க்கை, ஆங்கிலம் பேசவேண்டும், மேலைநாட்டு மோகம் என்பவற்றைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை.
அட டா அட டா ...50 அடிடா ...
அய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்லே பேரின்மபே ...:-))
ஒட்டகத்தை காணோமே !!!
தலைவரே,
//ஐயா வவ்வால் அவர்கள் மிகவும் புராதனமானவர் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பழங்கதைகளை இழுத்து வந்து இன்றைய ஈழத்தமிழர்களைத் தொடர்பு படுத்துகிறார்.//
உமக்கு சிறு வயசில் மண்டையில் ஏதும் அடிப்படலையே :-))
பெரியார் பேசிய திராவிட நாடு,திராவிட தமிழர்கள் கதையெல்லாம் சமிபத்திய கதையா என்னா? அவை எல்லாமே பழங்கதை அல்லோ? அதை வச்சு பேசும் உமக்கு இலங்கை விடுதலையின் போது ஏன் தனிநாடு/மாநிலம் கேட்கலைனு தானே கேட்பாங்க?
நீர் நிகழ்காலத்திற்கு வாரும் ,அப்பாலிக்கா என்னைய சொல்லலாம்!
//இந்தியக் கூட்டமைப்பில் இரண்டாந்தரப் பிரசைகளாக, இளிச்சவாயர்களா தமிழ்நாட்டுத் தமிழர்கள் //
இது உம்முடைய அவதானிப்பு. இதனை இந்திய தமிழர்கள் யாரும் கேட்டால் மூக்கால் சிரிப்பார்கள்.
இரண்டாம் தர பிஜையை விட மோசமாக அல்லல் படும் உம்மை போன்றவர்கள் மற்ற எல்லாரும் அப்படித்தான்னு சொல்லி சிற்றின்பம் அடைகிறீர்கள், இனியாவது திருந்தும்.
இரண்டாம் தர இந்திய தமிழ் பிரஜைகளை நம்பி தான் தனி ஈழக்கனவு காண்கிறீர்கள் என்ற உண்மையை நினைத்தால் உம்மை பார்த்து சிரிப்பாய் வருகிறது :-))
# //ஐயா வவ்வால் அவர்களை இளங்கோவன் வியாதி பிடித்தாட்டுகிறது. அவரும் அப்படித்தான் விவாதத்தில் ஆத்தாமல் போனால் ஒன்றில் அவரை எதிர்த்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை புலிகள் என்று புலிப்பூச்சாண்டி காட்டுவார் அல்லது அவர்களைப் பிரிவினைவாதிகளாக்கி வாயை அடக்கப்பார்ப்பார். //
இந்துத்வ வியாதி பிடித்து ஆட்டும் உமக்கு இப்படிலாம் தோன்றவில்லை என்றால் தான் ஆச்சர்யப்படனும் :-))
# //அதாவது திராவிடவீரர்கள் தனிநாட்டுப் பிரிவினையைக் கோரியபோது, உணர்ச்சியோடு, உண்மையோடு அதற்காகப் போராடி தமிழ்நாடு பிரிந்திருந்தால் இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கைத் தரத்துடன் இருந்திருக்கும் என்பது தான். நான் பேசியதெல்லாம் இறந்தகாலத்திலேயல்லாமல் நிகழ்காலத்தில் அல்ல. //
கொஞ்சம் முன்ன நான் பழைய கதை பேசுறேன்னு சொன்னீர் :-))
நீர் ஏன் 1947 கதையை இப்போ பேசுறீர்னு தான் நானும் உங்கட பழைய கதைய சொன்னேன், என்னை ஏன் பழங்கதை பேசுறீர்னு கேட்டதும் நீர்,ஆனால் பேசியதே நீர் தான்னு இப்போ ஒப்புக்கிறீர்,என்ன ஓய் ஒரே மனப்பிரந்தியா :-))
தமிழ்நாடு மலேசியா தரத்துக்கு போகிறது இருக்கட்டும் அன்று நீங்கள் எல்லாம் தனிநாடு/மாநிலம் கேட்டிருந்தால் நாட்டே விட்டு ஓடாமல் இருந்திருக்கலாம் என்ற அடிப்படை கூட புரியாத தமாசு பார்ட்டியா இருக்கீரே ,என்னானு சொல்ல அதை ?
//அனுபவத்தில் தமிழ்நாட்டு மக்கள் சாதி, பணம், ஆடம்பர வாழ்க்கை, ஆங்கிலம் பேசவேண்டும், மேலைநாட்டு மோகம் என்பவற்றைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை.//
இது அத்தனையும் உங்களுக்கு தான்யா பொருந்தும், ஒரு இலங்கையர் கடவு சீட்டு எடுத்துப்பாரும் பேரு இப்படித்தான் இருக்கும் முருகன் பிள்ளை, ஆனந்தம் முதலியார்னு :-))
ரேடியோ,ரீவி, றீச்சர்னு பேசிட்டு தமிழ்னு சொல்லிக்க வேண்டியது :-))
மேலைநாட்டு மோகம் யாருக்கில்லை, இப்பவும் அகதியா ஓடினாலும் ஆஸ்திரேலியாவுக்கு தான் போவேன்னு ஓடும் நோக்கம் என்ன? பக்கத்தில தமிழ்நாடு இருக்கிறதே தெரியாத கூமுட்டைகளா அவர்கள்,எல்லாம் மேலை நாட்டு மோகம்,நிறைய காசு கிடைக்கும்னு ஆசை தான்.
சொந்த நாட்டுப்பற்றும் இல்லை, பூர்வீக நாட்டுப்பற்றும் இல்லை, எங்கே அதிகம் பணம் கிடைக்கும்,எங்கே சொகுசா வாழலாம்னு திட்டம் போட்டு ஓடும் உங்களைப்போன்றோர் தமிழகத்தினரை குறை சொல்ல யோக்யதை அற்றவர்கள்.
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் இருக்கிறது,மேலைநாட்டு மோகம் இருக்கிறது ஆனால் அவர்கள் எல்லாம் படித்து ,உழைத்து தங்கள் நிலையை தேர்ந்தெடுக்கிறார்கள்,அதனை குறை சொல்ல ,தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
வீணாக வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம், நான் எப்பொழுதும் உண்மையை சொல்ல தயங்கியதில்லை, எனவே உண்மையை சொல்வதால் சங்கடம் வருமே என மறைத்து எல்லாம் பேசமாட்டேன்.
//இரண்டாம் தர இந்திய தமிழ் பிரஜைகளை நம்பி தான் தனி ஈழக்கனவு காண்கிறீர்கள் என்ற உண்மையை நினைத்தால் உம்மை பார்த்து சிரிப்பாய் வருகிறது //
ஐயா வெளவால் அவர்களே!
ஈழத்தமிழர்களைப் பற்றிய உங்களின் அறிவு இவ்வளவு தான் என்பதை நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது. தமிழ்நாடு பிரியாமல் போனதே தமிழ்நாட்டுக்காரர்களால் தான். இலங்கைத்தமிழர்கள் தமிழ் பேசாமல், மலையாளிகளாகவோ அல்லது கன்னடர்களாகவோ இருந்திருந்தால் தமிழீழம் எப்போதே பிறந்திருக்கும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் திராவிட கோசம், பெரியாரிசம் அவர்களின் உளுத்துப்போன பிரிவினைவாதம் எல்லாம் சேர்ந்து தான் ஈழத்தமிழர்களின் தமிழ்நாட்டுக்கோரிக்கையுயும், தமிழ்நாட்டின் இந்து எதிர்ப்பு, திராவிடவாதத்தின் அங்கமாக தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள இந்தியர்களைக் கருத வைத்ததால் தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை முற்றாக எதிர்த்தது/எதிர்க்கிறது என்பது கூட உமக்குத் தெரியவில்லை.
இந்தியாவின் மத்திய அரசில் சிறியதொரு மாநிலமான கேரளாவுக்கு உள்ள செல்வாக்குக் கூட தமிழ்நாட்டுக்குக் கிடையாது. தமிழ்நாட்டிலுள்ள கட்டுக்காசைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் தான் தமிழீழப் போராட்டத்தை நம்பி இன்னும் பிழைப்பு நடத்துகிறார்கள் ஆனால் நாங்கள் எங்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் தங்கியிருக்கவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக, மத்திய அரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாடு என்ன செய்தது, உருப்படியாக ஒன்றைச் சொல்லுமையா. சும்மா இடைக்கிடையே கடையடைப்பும், உண்ணாவிரதமும் நடத்தியது தான் மிச்சம். அவற்றையெல்லாம் உங்களின் மத்திய அரசு எப்பொழுதாவது கணக்கெடுத்ததுண்டா. நீங்கள் காலையுணவுக்கும் மதிய உணவுக்குமிடையில் உண்ணாவிரதமிருந்தீர்கள் அவ்வளவு தான். ஆனால் இந்தியா தான் போரை நடத்தியது என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்தது. இந்தியா தமிழ்நாட்டின் உணர்வுகளை இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அத்தியாவசியமான பிரச்சனைகளில் கூட ஒருபோதும் மதித்ததில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக கூச்சலிட்டார்கள், இந்தியா அதையெல்லாம் கவனிக்கவேயில்லை. இந்தியா இலங்கை அரசுக்கு இராணுவ உதவியளித்தது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே பல ஆண்டுகளாக சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சியுமளித்தது.
அண்மையில் நடந்த மாணவர்களின் உண்மையான போராட்டத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை, அதைக் கூட, அந்த இளைய தமிழ்ச்சமுதாயத்தின் போராட்டத்தைக் கூட சட்டை செய்யாத இந்தியா ஐக்கியநாடுகள் மனிதவுரிமைச்சபையின் தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக, சில சரத்துக்களை இலகுவாக்கியும், இல்லாமலாக்கியும் நீர்த்துப் போகச்செய்தது. இப்படி தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமக்கள் தான் என்பதற்கு பல ஆதாரங்களை என்னால் தரமுடியும், என்னுடைய பொன்னான நேரத்தையும் வீணாக்கி உங்களின் பொன்னான மனத்தையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. அதனால் தான் தமிழ்நாட்டு மீனவர்களைப் பற்றி நான் பேசவேயில்லை, நான் அதைப்பற்றிப் பேசப்போய், நீங்கள் நாக்கைப்பிடுங்கிக் கொண்டு செத்து விடுவீர்களோ என்று பயமாகவிருக்கிறது. ஆனால் குஜராத் மீனவர்களுக்காகவும் இரண்டேயிரண்டு கேரள மீனவர்களின் விடயத்திலும் இந்தியா எப்படி நடந்து கொண்டது என்பதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
..தொடர்ச்சி..
தமிழ்நாட்டிலேயே தமது அரசியலையும், பொருளாதாரத்தையும் மற்றவர்களிடம் இழந்து விட்டு அவர்களின் கைகட்டி சேவகம் புரியும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என, ஆனா, ஆவன்னா தெரியாத ஈழத்தமிழன் கூட ஒருபோதும் , அது உங்களின் வெறும் கனவு தான். சொந்தநாட்டிலேயே தனக்குச் சொந்தமான தண்ணீருக்குக் கெஞ்சி நிற்கும் நீங்கள் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தருவீர்களெனக் கனவு காண நாங்கள் என்ன முட்டாள்களா? கூரையேறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போவானாம் என்றது போன்றது தான் உங்களின் கதை.
தமிழர்கள் என்ற வகையில் உங்களிடம் நாங்கள் Moral Support ஐயும் உங்களின் மத்திய அரசை எங்களுக்கு ஆதரவாக மாற்றுவீர்கள் எனவும் எதிர்பார்த்தோம், உங்களால் அது முடியவில்லை. விடுதலைப் புலிகள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்கள் செலவழித்து உலக நாடுகள் எல்லாம் ஆயுத உதவி செய்த இலங்கையுடன் 30 வருடங்கள் போரிட்டார்கள். அது உங்களின் பணமல்ல, ஈழத்தமிழர்களின் பணம். நீங்கள் நிச்சயமாக எம்ஜிஆர் ஆரம்பத்தில் உதவினார் என்ற கதையை ஆரம்பிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அதற்கெல்லாம் காரணம் இந்தியாவின் சுயநலம் நிறைந்த வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்களே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காக அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அவர்களின் மத்திய அரசில் உள்ள செல்வாக்கின் காரணமாக, ஈழத்தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டு இந்தியா எதுவும் செய்யவில்லை. உண்மைகள் எப்பொழுதுமே கசக்கும். :-)
//வீணாக வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம், நான் எப்பொழுதும் உண்மையை சொல்ல தயங்கியதில்லை, //
நாங்கள், ஈழத்தமிழர்கள் "அகதிகள், நாடற்றவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு ஓடுபவர்கள்" போன்ற உங்களின் வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் உங்களை விடப்பல மடங்கு நறுக்காக என்னாலும் பதில் சொல்ல முடியும். பக்கத்தில் தமிழ்நாட்டுக்கு ஓடிப் போய் அகதிமுகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்,(இந்தியாவில் கோடிக்கணக்காவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கூட கிடையாது) வாழ்நாள் முழுவதும் கைதிகளாக இருப்பதை விட, மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டுக்குப் போவதற்கு உயிரைக் கூடப் பணயம் வைக்கலாம் என்பதால் தான் இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் போகிறார்கள்.
நீங்களும் நானும் விரும்பாது விட்டாலும் கூட மொழியாலும், இனத்தாலும், நாங்கள் இருவரும் பங்காளிகள் (அதுவும் வெறும் ஊகம் தான்) அவசரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு, பிறகு கவலைப்பட விரும்பாததால் ஒரு சில வார்த்தைகளில் பதிலளித்து, இந்த கருத்துப்பரிமாற்றத்தை நிறைவு செய்கிறேன்.
நாங்கள் எங்களுடைய நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றதற்குக் காரணம் அரசியலும், யுத்தமும் தானே தவிர பசியோ , பஞ்சமோ அல்ல. இலங்கையின் 2500 ஆண்டு வரலாற்றில் எந்தவொரு இலங்கையரும், சிங்களவனோ, தமிழனோ உண்ண, உணவில்லாமல் பஞ்சம் பிழைக்க எங்களின் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இன்று இந்தியாவின் அகதிமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் கூட தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக இலங்கைக்குத் திரும்பிப் போவார்கள். இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை. விரும்பினால் என்னுடைய வலைப்பதிவில் சந்திப்போம். :-)
திருத்தம்:
*தமிழ்நாடு பிரியாமல் போனதே தமிழ்நாட்டுக்காரர்களால் தான்.
- தமிழ்நாடு அல்ல தமிழீழம் -
தலைவரே,
// தமிழ்நாடு பிரியாமல் போனதே தமிழ்நாட்டுக்காரர்களால் தான். இலங்கைத்தமிழர்கள் தமிழ் பேசாமல், மலையாளிகளாகவோ அல்லது கன்னடர்களாகவோ இருந்திருந்தால் தமிழீழம் எப்போதே பிறந்திருக்கும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் திராவிட கோசம், பெரியாரிசம் அவர்களின் உளுத்துப்போன பிரிவினைவாதம் எல்லாம் சேர்ந்து தான் ஈழத்தமிழர்களின் தமிழ்நாட்டுக்கோரிக்கையுயும், தமிழ்நாட்டின் இந்து எதிர்ப்பு, திராவிடவாதத்தின் அங்கமாக தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள இந்தியர்களைக் கருத வைத்ததால் தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை முற்றாக எதிர்த்தது/எதிர்க்கிறது என்பது கூட உமக்குத் தெரியவில்லை. //
//திருத்தம்:
*தமிழ்நாடு பிரியாமல் போனதே தமிழ்நாட்டுக்காரர்களால் தான்.
- தமிழ்நாடு அல்ல தமிழீழம் -//
நீர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது :-))
1947 இல் ஏன் தனி நாடு தமிழர்கள் வாங்கவில்லைனு கேட்டதும் நீர் தான் ,அப்புறம் அப்படி கேட்டதால் தான் ,இந்தியா ஈழத்துக்கு எதிராக போச்சுனு இப்போ சொல்வதும் நீர் தான் ,எதாவது ஒன்றை சொல்லும்.
அப்புறம் 1948 இல் இலங்கை டொமினியனாக இங்கிலாந்திடம் இருந்து பிரியும் போது தனிநாடு கேட்கக்கூடாதுனு எவன் சொன்னான்,இந்தியா ,பெரியார் எல்லாம் தடுத்தாங்களா, அப்போ சிங்களனுக்கு உருவிகிட்டு இருந்தீங்க ,அதை எல்லாம் விட்டுப்புட்டு , தமிழ்நாடு, இந்தியானு கதய சொல்லிக்கிட்டு வெட்கமாக இல்லையா இப்படிலாம் புரட்டு வாதம் பேச.
1971 வரைக்கும் சலிஸ்பரி கான்ஸ்டியுஷன் படி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது அப்போ கூட இங்கிலாந்து அரசிடம் தனிநாடு, மாநிலம்னு கேட்கலை, கம்முனு அமுக்கிட்டி இருந்தீங்க, அப்போ மலையகத்தமிழர்கள் வெளியேற்ற போட்ட ஒப்பந்தம் முழுசா நிறைவேறவில்லை, நமக்கு நாடு இல்லைனாலும் பரவாயில்லை ,மலையகத்தமிழர்கள் இங்கே தங்கிட கூடாதுனு 1971லும் நினைச்சவங்க தானே நீங்கலாம்.
இந்தியா மீது பற்றில்லைனு சொன்ன வாயால எப்படி இந்தியா வந்து ஈழம் வாங்கி தரலைனு குறைப்பட முடியும்?
//இன்று இந்தியாவின் அகதிமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் கூட தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக இலங்கைக்குத் திரும்பிப் போவார்கள். //
இந்தியாவில் இருப்பவர் திரும்பி போவாங்கனு ஏன் சொல்லுறீர் ,நீர் திரும்பி போவேன்னு சொல்றது தானே?
வெளிநாட்டு மோகம்,ஆடம்பர வாழ்க்கை இதனால் உமக்கு போக மனசு வராது :-))
இதுல தமிழனக்கு வெளிநாட்டு மோகம்,ஆடம்பர மோகம்னு கூசாம சொல்ல வேண்டியது.
போய் பொழைக்கிற வழியப்பாரும். சும்மா தமிழ்நாட்டையும்,இந்தியாவையும் குறை சொல்லிக்கிட்டு அலைவதால் பயனில்லை.
//நீங்களும் நானும் விரும்பாது விட்டாலும் கூட மொழியாலும், இனத்தாலும், நாங்கள் இருவரும் பங்காளிகள் (அதுவும் வெறும் ஊகம் தான்) அவசரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு, பிறகு கவலைப்பட விரும்பாததால் //
கொட்ட வேண்டியதை கொட்டிவிட்டு அப்புறம் என்ன பம்மாத்து :-))
நீர் உயிர் பிழைக்க ஓடும் போதும் எங்கே நல்ல வாழ்க்கை இருக்குனு பார்த்து தான் ஓடுவீராம், ஆனால் படிச்சு ,உழைச்சு வெளிநாட்டுக்கு போகும் தமிழகத்தமிழனை அயல் நாட்டு மோகம்னு சொல்வீர் :-))
அப்படியே சொல்வதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழும் நாங்க தான் சொல்லணும் நீரெல்லாம் அதை சொல்லலாமா?
ஈழத்தமிழர்கள் சிலர் ( சிலர் மட்டுமே அனைவரும் அல்ல)எப்படி நன்றி கெட்டவர்கள்னு விளக்க நீர் பேசியதே சரியான உதாரணம்.
இனியாவது இணையத்தில் இருக்கும் மக்கள் ஈழம் எனப்பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுவோரை புரிந்துக்கொள்ளட்டும் என்றே உம்மிடம் விடாமல் பேசினேன்.
உமது ஒத்துழைப்பிற்கு நன்றி!
//இனியாவது இணையத்தில் இருக்கும் மக்கள் ஈழம் எனப்பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுவோரை புரிந்துக்கொள்ளட்டும் என்றே உம்மிடம் விடாமல் பேசினேன்.//
இணையத்தளங்களுக்கெல்லாம் அண்ணன் வவ்வால் தான் சூப்பர்வைசர் அதனால் என்னை டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கிறார். நான் அதில் தோற்றுப்போய் விட்டேன் போலிருக்கிறது. இனிமேல் நான் என்ன செய்து பொழைக்கப் போகிறோனோ தெரியவில்லை, ஒரே பயமாக இருக்கிறது. :-)
நான் இங்கு ஈழம் பேசவில்லை, என்னுடைய எந்தப்பதிவிலும் ஈழத்தமிழர்களுக்கு இப்பொழுது தமிழீழ பிரிவினைப்போராட்டம் தான் தேவையென்று எழுதியதில்லை. பல காரணங்களாலும், துரோகங்களாலும் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டது, இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு சந்தர்ப்பமே கிடையாது, என்பது ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். நான் ஈழப்போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்று எனது கருத்துக்களில் கூறியிருக்கலாமே தவிர, தனி ஈழம் பற்றிப் பேசுவதில்லை ஏனென்றால், என்னைப் பொறுத்தவரையில், ஈழத்தமிழர்களின் இப்போதைய கட்டாய தேவை, எப்படியாவது வடக்கு கிழக்கில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ்மண்ணில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினராக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவது தான். அதற்கு உலகநாடுகளின் உதவியுடன் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபைகளையாவது ஈழத்தமிழர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமே, தவிர இந்தக் காலகட்டத்திலும் ஈழம் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் உள்ளத்தையும், ஈழத்தமிழர்கள் இழந்து விடுவார்கள்.
அதனால் ஈழம் பேசுவதில்லை, நான் ஈழம் பேசுவதாக வவ்வாலின் தலைக்குள் ஏதாவது குரல்கள் சொல்கின்றனவோ என்னமோ எனக்குத் தெரியாது. :-)))
//திருத்தம்:
*தமிழ்நாடு பிரியாமல் போனதே தமிழ்நாட்டுக்காரர்களால் தான்.
- தமிழ்நாடு அல்ல தமிழீழம் -//
நீர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது :))//
மன்னிக்கவும், வவ்வாலு அவர்களின் இந்த காமேடிக்கு நான் பதிலளிக்காது விட்டால் அவர் கோச்சுக்குவார். :-)
நான் விட்ட எழுத்துப்பிழைக்கு நானே திருத்தம் செய்த பின்பும் எனக்கு சித்தசுவாதீனம் இல்லையென்றால், 1480ம் ஆண்டில் தான் இராமேஸ்வரம் தீவு மட்டுமல்ல இன்னும் 10 தீவுகள் புசுக்கென்று கடலுக்குள்ளிருந்து கிழம்பியதாக அண்ணன் வவ்வாலு கதை விட்டார். அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டிய பின்பும் திருத்த மறுத்து அடம்பிடித்த அண்ணன் வவ்வாலுவின் சித்தம் எந்தளவுக்கு சுவாதீனமானது என்பதை நினைத்துப் பார்க்கவே சிரிப்பு வருகிறது. :-)
நான் இப்படியெல்லாம் எதிர்த்துப் பேசினால் சூப்பர்வைசரு இணையத்தில் எனக்கு இன்னொரு பரீட்சை வைத்து விடுவார் என்பதை நினைக்க எனக்கு ஒரே BAயம்மாய் இருக்குது. :-)
தலைவரே ,
பல்ட்டி கேள்விப்பட்டிருக்கிறேன் ஒலகமகா பல்ட்டிய இப்போத்தான் பார்க்கிறேன், இம்பூட்டு நேரம் என்ன சோமாலியா பத்தியா பேசிட்டு இருந்தீர் :-))
வியாசர்வாள் நீர் ஈழம் ,தனி ஈழம், தனித்தமிழர் நாடுனு பேசியது எல்லாம் மேல பல பின்னூட்டங்களிலும் இருக்கு ,ஆனாலும் இப்படி டகால்ட்டி அடிக்கிறீரே :-))
# உலகநாடுகளில் வசிக்கும் மக்கள் எந்த தர குடிமக்கள் என தர நிர்ணயம்ம் செய்யும் "ஆப்பிசர்" தான் வியாசர்வாள் ,தமிழக தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள்னு சொல்லிட்டார் இனிமே நான் எப்போ முதல் தரம்னு பேரு வாங்குறது அவ்வ் :-))
# இந்த தளத்தில் இப்படி செய்தி இருக்குனு தரவு கொடுத்து சொல்லும் விடயத்தினை நானே சொன்னதாக மனப்பிராந்தியில் பேசுவோரிடம்ம் என்ன சொல்லி புரிய வைப்பது , ரொம்ப விளக்கினால் நீ மூன்றாம் தர்ர பிரஜைனு தரம் இறக்கினாலும் இறக்கிடுவார் "ஆப்பிசர்" வியாசர்வாள் ,நான் என்னப்பண்னுவேன் ஒரே திகிலா கீதே :-))
இரண்டாம் தர பிரஜைகள் இருக்கும் இடத்தில் இருந்து தான் சீமான் அரசியல் செய்கிறார்,அவருக்கு கொடிப்பிடிக்கிறார் வியாசர்வாள், அப்போ சீமானுக்கு மட்டும் முதல் தரப்பிரஜைனு தனியா செர்டிபிகேட் கொடுத்திட்டாரா ஆப்பிசர் வியசர்வாள் :-))
என்னமோ போங்கப்பா இரண்டாம் தர பிரஜைகள் இருக்கும் இடத்தில் ஏன் சீமான் கூட்டம் போடனும் பேசாம கொழும்புக்கோ ,யாழ்ப்பாணத்துக்கோ போய் கூட்டம் போட்டு ஈழப்பிரச்சினையை தீர்க்கலாம், அங்கே தான் வியாசர்வாள் போல முதல் தரப்பிரஜைகள் இருக்காங்கோ :-))
தலைவரே ,
//நான் விட்ட எழுத்துப்பிழைக்கு நானே திருத்தம் செய்த பின்பும் //
உமக்கு தமிழ் மெய்யாலுமே படிக்க தெரியுமா?
நீர் போட்ட திருத்தத்திற்கும் சேர்த்து தான் நான் அதனை சொல்லி இருக்கிறேன்,அதனால் தான் விளக்கமாக சாலிஸ்பரி காண்ஸ்டிடியுஷன் எல்லாம் சொன்னேன், தமிழ் ஈழம் உருவாகாமல் போனதற்கு தமிழ்நாடுக்காரணம்னு சொல்லும் உம்மை வேறு என்ன சொல்ல முடியும்.
வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும் போது இலங்கையில் இருந்த தமிழர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள், தமிழ்நாட்டு தமிழனா வந்து வாயை மூடி வச்சான்?
பாகிஸ்தான் ,இந்தியானு பிரிஞ்சதை எல்லாம் கண்ணால பார்த்த பின்னர் தானே இலங்கை சுதந்திரம் ஆச்சு ,அப்பவே தனிநாடு கேட்டுத்தொலையாம ,தமிழ்நாட்டு தமிழர்கள் தான் காரணம்னு கூசாம பொய் சொல்லிக்கிட்டு ,அப்புறம் இங்கே என்ன தொப்புள்கொடி உறவென சொல்லி மாய்மாலம் செய்யனும்?
//வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும் போது இலங்கையில் இருந்த தமிழர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள், தமிழ்நாட்டு தமிழனா வந்து வாயை மூடி வச்சான்?பாகிஸ்தான் ,இந்தியானு பிரிஞ்சதை எல்லாம் கண்ணால பார்த்த பின்னர் தானே இலங்கை சுதந்திரம் ஆச்சு ,அப்பவே தனிநாடு கேட்டுத்தொலையாம ,தமிழ்நாட்டு தமிழர்கள் தான் காரணம்னு கூசாம பொய் சொல்லிக்கிட்டு ///
வவ்வால் அவர்களே,
உங்களின் காமெடிகளை ஒருபக்கம் வைத்துவிட்டு, சீரியசாகப் பேசலாம் என நினைக்கிறேன். உங்களின் பதில்களிலிருந்து எனக்குப் புரிவதென்னவென்றால் உண்மையில் உங்களுக்கு இலங்கையின் வரலாற்றைப் பற்றி அவ்வளவு தெரியாது, சும்மா எங்கேயோ நுனிப்புல் மேய்ந்து விட்டு எல்லாம் தெரிந்தவர் மாதிரி, ஒவ்வொருவரின் வலைப்பதிவிலும், உங்களின் அடாவடித்தனமான பதில்களின் மூலம் காட்டிக் கொள்ள முனைகிறீர்கள் போலத் தெரிகிறது. உண்மையில் எனக்கும் இலங்கையின் வரலாறு முழுவதும், அதாவது வெள்ளைக்காரன் காலத்தில் நடந்ததும், வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகும் போது நடந்த முழு விவரமும் தெரியாது. ஆனால் மற்றவர்களிடம் கேட்டு அல்லது வரலாற்றுக் கட்டுரைகளை வாசித்து அறிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆர்வமுண்டு.
ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் உங்களின் கருத்துக்கள் தவறானவை என்றே படுகின்றன. ஈழத்தமிழர்களின் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு எத்தனை வயது, அல்லது எப்பொழுது ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தயவு செய்து தெரியத் தரவும். உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தால் "வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும் போது இலங்கையில் இருந்த தமிழர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள்" என்று நிச்சயமாக உளறமாட்டீர்கள்.
அதன் பின்னர் ஒன்றில் நீங்கள் இந்த விடயத்தை உங்களின் வலைப்பதிவில் எழுதுங்கள் அல்லது நான் எனது வலைப்பதிவில் எழுதுகிறேன். அதைப்பற்றி அங்கு விவாதிப்போம்.
//இரண்டாம் தர பிரஜைகள் இருக்கும் இடத்தில் இருந்து தான் சீமான் அரசியல் செய்கிறார்,அவருக்கு கொடிப்பிடிக்கிறார்//
சீமானும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ஆனால் சீமானுக்கு நான் ஒரு கலப்பில்லாத தமிழன் என்று மேடைபோட்டுச் சொல்கிற துணிச்சல் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரமும், பொருளாதார ஆளுமையும் உண்மையான, தமிழுணர்வுள்ள தமிழர்களின் கைகளில் இருந்தால் தான் தமிழ்நாட்டின் நலன்களை அடகு வைக்க மாட்டார்கள். உதாரணமாக முல்லைப் பெரியாறு விடயத்தில் எம்ஜிஆர் கேரளத்துக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்தாராம். இந்திய தேசிய மாயையில் மூழ்கியிருந்த பச்சைத்தமிழன் காமராஜர் என்னடாவென்றால் பீர்மேடும், தேவிகுளமும் இந்தியாவுக்குள் தானிருக்கின்றன வாயை மூடிக் கொண்டிருங்கள் என்றாராம். மொழிவாரிமாநிலங்கள் பிரிக்கப்படும் போது, மற்ற மாநிலத் தலைவர்கள் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளைக் கபளீகரம் பண்ணிய போது, வாய்மூடி மெளனம் சாதித்தவர் காமராஜர், இன்று தமிழ்நாட்டின் தண்ணீர்ப்பிரச்சனைக்கு அவரும் ஒரு காரணம் என்று படித்தேன். இது போல் பல உதாரணங்கள் உண்டு.
சீமானைப் போல் உண்மையான தமிழர்களின் கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சி கைமாறினால் அவர்கள் முதலில் தமிழர்களின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், என்னைப் போன்ற உலகத்தமிழர்கள் சீமானுக்கு எமது மானசீக ஆதரவைக் காட்டுகிறோம். அவர் தவறு புரியும் போது அதையும் உரிமையுடன் கண்டிக்கிறோம். ஆனால் அதை உங்களைப் போன்றவர்கள் ஏதோ நாங்கள் கொடிப்பிடிப்பதாக கொச்சைப்படுத்தி, குய்யோ, முறையோ என்று கூச்சலிடுகிறீர்கள். தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படும் இழிநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் சீமான் அரசியலில் இறங்கியிருக்கிறார், அதை உண்மையான தமிழர்கள் நிச்சயமாக வரவேற்பார்கள்.
தலைவரே,
//உண்மையில் எனக்கும் இலங்கையின் வரலாறு முழுவதும், அதாவது வெள்ளைக்காரன் காலத்தில் நடந்ததும், வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகும் போது நடந்த முழு விவரமும் தெரியாது. //
நீர் நிறைய அடிப்புல்லு மேஞ்சிருப்பீர் போல இருக்கு,அதான் செரிமானம் ஆகாம அலையிறீர் :-))
அதான் ஒன்னும் தெரியாதுனு சொல்லிட்டீர் இல்ல ,கிளம்பும் காத்து வரட்டும் :-))
ஈழம் கிடைக்காமல் போனதற்கு தமிழ்நாடு தான் காரணம்னு பினாத்தினால் ,இலங்கை விடுதலைப்பெற்ற போது என்ன செய்தீர்கள் என்று தான் கேட்போம்.
//சீமானைப் போல் உண்மையான தமிழர்களின் கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சி கைமாறினால் அவர்கள் முதலில் தமிழர்களின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், என்னைப் போன்ற உலகத்தமிழர்கள் சீமானுக்கு எமது மானசீக ஆதரவைக் காட்டுகிறோம்.//
தமிழ்நாட்டில் இப்போ பிரச்சினியே இல்லாமலா இருக்கு அதுக்கு எதுவும் குரல் கொடுக்க காணொம், அப்புறம் எப்படி நேரா ஆட்சிக்கு வருவாராம்.
கூடங்க்குளம் பிரச்சினை, மின் வெட்டு , ஆங்கில வழிக்கல்வி, விலைவாசி உயர்வு, தருமபுரி,மரக்காணம் கலவரம்னு எதுக்கும் போராடாமல் எப்படி தமிழ்நாட்டை ஆள ஆசப்படுறாரோ :-))
மானசீக ஆதரவு தராங்களாம், இங்கே வந்து ஓட்டு போடுறது யாரு? தமிழ்நாட்டை யாரு ஆளனும் என இங்கே இருக்கவங்களுக்கு தெரியாதா என்ன?
இலங்கைக்கு கூப்பிட்டு போய் அவரை வைத்து அரசியல் செய்துக்கொள்ளுங்கள் ,ஒரு இம்சை ஒழிஞ்சதுனு தமிழக மக்கள் நன்றி சொல்வார்கள் :-))
# இரண்டாம் தர பிரஜை யாருனு உலகிற்கே தெரியும், அடக்கி வாசிக்கவும்.
//அதான் ஒன்னும் தெரியாதுனு சொல்லிட்டீர் இல்ல ,கிளம்பும் காத்து வரட்டும் :-))//
கொஞ்சம் மரியாதை கொடுத்தால் உங்களின் புத்தியைக் காட்டி விடுவீர்களே. :-)
உம்முடைய காமெடியை ஒருபுறம் வைத்து விட்டு கேட்ட கேள்விக்கு நழுவாமல் பதில் சொல்லுமையா.
எனக்குத் தெரிந்த வரையில் உங்களின் கருத்துக்கள் தவறானவை என்றே படுகின்றன. ஈழத்தமிழர்களின் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு எத்தனை வயது, அல்லது எப்பொழுது ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தயவு செய்து கூறவும்.
//# இரண்டாம் தர பிரஜை யாருனு உலகிற்கே தெரியும், அடக்கி வாசிக்கவும்.//
நாங்கள் ஈழத்தமிழர்கள் எங்களின் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். உங்களைப் போல் நாங்கள் உண்மையை மறுக்கவில்லை. அதனால் தான் 30 வருடங்கள் ஆயுதமேந்தியும், அகிம்சை வழியிலும் போராடினோம். எங்களுக்கு சூடு சுரணை, மட்டுமல்ல உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து விதணடாவாதம் பண்ணாமல், வரட்டுத்தனமாக அடம்பிடிக்காமல் ஒப்புக்கொள்ளும் தன்மையும் இருப்பதால், சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜையாக இருப்பதை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கத்தினால் நடத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றோம்.
தலைவரே,
நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீர் சொன்னால் எப்பூடி?
பாதிக்கப்பட்ட மக்கள் என மரியாதை கொடுத்தால் ,இழிநிலையில் இருக்கும் இரண்டாம்தர பிரஜைகள்னு தமிழக தமிழர்களை சொல்லி உம்ம புத்தியைக்காட்டினீர் ,இந்தளவுக்கு நான் மரியாதை கொடுப்பதே அதிகம்.
ஈழம் வேண்டும் எனக்கேட்ட வரலாறு எப்போ என எனக்கு தெரியும். அதை நீர் மறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்.
முதலில் இந்த கேளிவிக்கு பதிலை சொல்லும்,
இஸ்லாமியர்கள்,இந்துக்கள் அதிகம் இருக்கும் நாட்டில் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள் ,எனவே சம உரிமை கிடைக்காது என ஜின்னா தனி இஸ்லாமிய நாடு கேட்டு வாங்கி,பிரிட்டீஷாரிடம் இருந்து விடுதலைப்பெற்ற போது இந்தியா -பாகிஸ்தான் உருவானதை கண்ணால் கண்டப்பின்னும் 1948 இல் இலங்கை டொமினியனாக விடுதலைப்பெற்ற போது அத்தகைய கொள்கையை ஏன் இலங்கையில் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை. சிங்களர்கள் மெஜாரிட்டியாக உள்ள இடத்தில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என எப்படி நம்பினார்கள்?
சரி அதை விடுங்கள் 1971 வரையில் சலீஸ்பரி கான்ஸ்டிடியுஷன் கீழ் இங்கிலாந்தின் டொமினியனாக தான் இலங்கை இருந்தது, அப்பொழுதே சிங்கள பேரினவாதம் தூக்கியிருந்தது, ஏன் அதனைக்குறிப்பிட்டு இங்கிலாந்திடம் முறையிட்டு தனிநாடு கேட்கவில்லை? கேட்டிருந்தால் இங்கிலாந்தே தனி நாடு பிரித்துக்கொடுத்திருக்கும், அது தான் முறையும் கூட.
அதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்நாட்டு தமிழர்கள் தான் ஈழம் கிடைக்காமல் செய்தார்கள்னு கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு திரிவதேன்?
நீர் சொல்வதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கிறதா என நன்றாக குப்புற அடித்து சிந்தித்துப்பார்க்கவும் :-))
-----------------
//, சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜையாக இருப்பதை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கத்தினால் நடத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றோம்.//
அப்படினு நீரே சொல்லிக்கொண்டால் உண்மையாகிடுமா?
நீர் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறீரா? எதிர்த்து போராடும் அளவுக்கு இங்கே நிலைமை மோசமில்லை. மத்திய அரசை டீ பார்ட்டி கொடுத்தே கலைக்கும் அளவுக்கு மாநில தலைவர்கள் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.
இரண்டாம் தர பிரஜைகள் என தமிழர்களை சொல்லிவிட்டு ,அவர்கள் தான் ஈழம் வாங்கிக்கொடுக்க மத்திய அரசை நிர்பந்திக்கனும் என்றும் பேசும் உம்ம வெட்கம் கெட்ட சூடு சொரணையை என்னவென்பது :-))
சீமான் என்ன இலங்கையிலா இயக்கம் நடத்துறார், இங்கே ஏன் நடத்தனும் ,ஈழம் என பேசணும் அதான் எல்லாம் இரண்டாம் தர சொரணையற்ற பிரஜைகள் ஆச்சே :-))
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடி ,ஆனால் இலங்கை தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டாது, அதில் இலங்கையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் இருக்கலாம் மிஞ்சி போனால் 30 லட்சம்ம் தேறும்.சென்னை மக்கள் தொகையை விட கம்மியாக இருந்துக்கொண்டு , தமிழக தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுக்க ஆசைப்படும் உம்மை எல்லாம் என்ன செய்ய?
தமிழக தமிழர்கள் தங்கள் உரிமை எதுவென்றும் ,கடமை எதுவென்றும் உணர்ந்தவர்கள், தேர்தலின் போது மவுனப்புரட்சியாக தங்கள் எதிர்ப்பை காட்டக்கூடிய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.
புலிகள் முதல் கொண்டு இலங்கையில் போராட்டம் நடத்தியவர்கள் எவருக்கும் அரசியல் ,ஜனநாயக அறிவில்லை என்பதையே தோல்வி காட்டுகிறது என்பதை புரிந்துக்கொள்ளவும்.
ஐயா பஞ்சாயத்து இவை எல்லாம் உங்களின் பொன்மொழிகள்.
///வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும் போது இலங்கையில் இருந்த தமிழர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள், தமிழ்நாட்டு தமிழனா வந்து வாயை மூடி வச்சான்?//
//பாகிஸ்தான் ,இந்தியானு பிரிஞ்சதை எல்லாம் கண்ணால பார்த்த பின்னர் தானே இலங்கை சுதந்திரம் ஆச்சு ,அப்பவே தனிநாடு கேட்டுத்தொலையாம//
அதனால் தான் உங்களுக்கு ஈழத்மிழர்களின் தமிழீழப் போராட்டத்தின் தொடக்கம் பற்றியோ அல்லது எப்பொழுது ஈழத்தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பித்தார்கள் என்பது போன்ற எதுவுமே உங்களுக்குத் தெரியாது என நான் நினைக்கின்றேன்.
அதனால் தான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டேன்.
“ஈழத்தமிழர்களின் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு எத்தனை வயது, அல்லது எப்பொழுது ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தயவு செய்து கூறவும்.”
அதற்கு நேரடியாகப் பதில் கூறுவதை விட்டு, எதற்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? தயவு செய்து கேட்ட கேள்விக்குப் பதில் கூறவும். அல்லது உங்களுக்கு தெரியாத விடயங்களைப் பற்றி மற்றவர்களின் வலைப்பதிவுகளில் அடாவடித்தனம் பண்ணி எல்லாம் தெரிந்தவர் மாதிரி காட்டிக் கொள்ளும் பேர்வழி என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அப்படி உங்களை பற்றி மற்றவர்கள் எண்ணுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்று நான் இன்னும் நம்புகிறேன். :-)
///ஜின்னா தனி இஸ்லாமிய நாடு கேட்டு வாங்கி,பிரிட்டீஷாரிடம் இருந்து விடுதலைப்பெற்ற போது இந்தியா -பாகிஸ்தான் உருவானதை கண்ணால் கண்டப்பின்னும் 1948 இல் இலங்கை டொமினியனாக விடுதலைப்பெற்ற போது அத்தகைய கொள்கையை ஏன் இலங்கையில் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை///
இவ்வளவு தான் உங்களின் இலங்கையை பற்றிய அறிவு, ஜின்னாவுக்கு முன்பே ஈழத்தமிழ்த் தலைவர்கள் பிரிவினையால் மட்டும் தான் ஈழத்தமிழர்கள் தமது மொழியைக் கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என உண்ர்ந்து கொண்டார்கள், அது மட்டுமல்ல, 1920 களிலேயே தமிழீழம் என்ற பெயரைக் கூட இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மண்ணாகிய வட- கிழக்கை குறிப்பிடப் பாவித்தனர். அவர்களின் கோரிக்கையை பிரிட்டிசார் உதாசீனம் செய்தமைக்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணத் தமிழர்கள் தேவையில்லாமல் மகாத்மா காந்தியை ஆதரித்து பிரிட்டிசாரின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டதும் தான்.
தமிழீழப் போராட்டம் தந்தை செல்வாவில் தொடங்கப்பட்டு, பிரபாகரனால் முன்னேடுக்கப்பட்டதல்ல, அதற்கு முன்பே ஈழத்தமிழர்களின் தலைவர்களின் சிந்தனையில் உருவானது தான். நான் அதைப்பற்றிய விவரங்கள் எனது வலைப்பதிவில் விரைவில் பதிவு செய்கிறேன். :)
தலைவர் வியாசர்வாள்,
//“ஈழத்தமிழர்களின் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கைக்கு எத்தனை வயது, அல்லது எப்பொழுது ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தயவு செய்து கூறவும்.”
அதற்கு நேரடியாகப் பதில் கூறுவதை விட்டு, எதற்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? தயவு செய்து கேட்ட கேள்விக்குப் பதில் கூறவும். அல்லது உங்களுக்கு தெரியாத விடயங்களைப் பற்றி மற்றவர்களின் வலைப்பதிவுகளில் அடாவடித்தனம் பண்ணி எல்லாம் தெரிந்தவர் மாதிரி காட்டிக் கொள்ளும் பேர்வழி என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அப்படி உங்களை பற்றி மற்றவர்கள் எண்ணுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்று நான் இன்னும் நம்புகிறேன். :-)//
இப்படியே சொல்லிட்டு இருந்தால் உம்மை அரை லூசுனு மக்கள் நினைச்சுடுவாங்கோ,எனக்கு மனசு கஷ்டமாயிடும்.
நான் கேட்ட கேள்வியில் அந்த பதில் இருக்குனு சின்னப்புள்ளைக்கும் தெரியும்,நீர் ஏன் அதுக்கு பதிலே சொல்லவில்லைனு எனக்கும்,மக்களுக்கும் தெரியும் :-))
//இவ்வளவு தான் உங்களின் இலங்கையை பற்றிய அறிவு, ஜின்னாவுக்கு முன்பே ஈழத்தமிழ்த் தலைவர்கள் பிரிவினையால் மட்டும் தான் ஈழத்தமிழர்கள் தமது மொழியைக் கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என உண்ர்ந்து கொண்டார்கள், அது மட்டுமல்ல, 1920 களிலேயே தமிழீழம் என்ற பெயரைக் கூட இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மண்ணாகிய வட- கிழக்கை குறிப்பிடப் பாவித்தனர். அவர்களின் கோரிக்கையை பிரிட்டிசார் உதாசீனம் செய்தமைக்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணத் தமிழர்கள் தேவையில்லாமல் மகாத்மா காந்தியை ஆதரித்து பிரிட்டிசாரின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டதும் தான்.//
நீர் சரியான அரைவேக்காடு என்பது உறுதியாகிறது,இதில் என்னுடைய அரசியல்,வரலாற்று அறிவு பற்றி வேறு சந்தேகம் :-))
ஜின்னாவுக்கு முன்னரே நீங்க தான் எல்லாம்னு பேசினால் போதுமா ,ஜின்னா சொன்னாப்போல தனிநாடு கேட்டு வாங்கிட்டார், அதுவும் காந்தியின் விருப்பத்துக்கு எதிராக,ஆனால் நீர் என்னமோ காந்தியை ஆதரித்ததால் வெள்ளைக்காரன் எரிச்சல் ஆனான் அதான் தனி ஈழம் கொடுக்கலைனு கதைய விட்டுக்கிட்டு. அவனா வந்து தூக்கி கொடுப்பான் வாங்கிக்கலாம்னு இருந்தீர்களோ, இந்தியாவில் நடந்ததுபோல பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டமே ஏன் இலங்கையில் நடக்கவில்லை, அப்போ இலங்கையினர் எல்லாம் பிரீட்டீஷ் கால நக்கிட்டு தானே இருந்தீங்க, இதுல என்ன காந்திய இழுக்க இருக்கு.
ஜின்னா தனியா பாகிஸ்தான் கேட்டது போல் ஏன் தனி ஈழம்னு இலங்கையில் அப்போ 1948 இல் ஒருத்தனும் கேட்கலை,போராடவில்லை, பதில் இருக்கா?
பிரிட்டீஷ் காரன் எரிச்சல் ஆயிட்டான் அவன் கொடுக்கலைனு சொல்லிடு இல்லாம அப்போ போராடி இருக்க வேண்டியது தானே, இந்தியாவில் பிரிட்டீஷுக்கு எதிராக போராடி சிறை சென்று,உயிர் விட்டவர்கள் அனேகம், இலங்கையில் பிரிட்டீஷுக்கு எதிராக போராடி ,சிறை சென்று,உயிர் விட்ட தமிழர்கள் எத்தனை பேர்?
அப்போ நீங்க எல்லாம் பிரீட்டீஷின் கைக்கூலி கும்பல் ,அவனா பார்த்த்து கொடுத்தா போதும்னு நின்னவர்கள், 1948 இல் கூட டொமினியன் தான் கிடைச்சுது, 1971 இல் முழு சுதந்திரம் அடையும் வரையில் பிரிட்டீஷ் கீழ் தான், தனி ஈழம் வேண்டும் என்றால் பிரிட்டீஷ் அரசிடம் கேட்டே பெற்றிருக்கலாம், ஆனால் அப்போ எல்லாம் என்னமோ புடுங்க போயிட்டார்கள் :-))
எனவே ஈழாப்பிரச்சினைக்கு அடிப்படை காரணம் ஜாதிய இந்துத்துவ ஈழத்தமிழர்களே, அதை எல்லாம் மறைச்சுப்புட்டு இங்கே வந்து நாடகம் போட்டால் நம்ப நான் என்ன சீமான் போன்ற கைக்கூலியா :-))
ஈழத்தமிழர்கள் என்றால் இலங்கையில் தற்போது வசிப்பவர்களும், தமிழக முகாம்களில் இருப்பவர்களுமே,அவர்களுக்காக மட்டுமே என் இதயம் வருந்தும்!
பஞ்சாயத்து கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப்படுபவர் போல் தெரிகிறது. அவரின் உளறல்களிளிருந்தும், திருப்பித் திருப்பி ஒன்றையே ஒப்பிப்பதையும் பார்க்கும் பொழுது அவருக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் இலங்கையில் மிகவும் சிறுபான்மையினர் என்பதோ அல்லது பிரிட்டிஸ் ஆட்சியில் அவர்களின் நிலை பிரிவினை கேட்டுப் போராடும் மோசமான நிலையில் இருக்கவில்லை என்பதையோ அல்லது எல்லோருக்கும் வாக்குரிமை என்ற திட்டம், அதாவது சனநாயக கட்டமைப்பின் கீழ் ஈழத்தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களால் இப்படியான இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதையுணர்ந்த இலங்கைத் தமிழ்த்தலைவர்கள் டொனமூர் அரசியலமைப்பின் பேச்சு வார்த்தையின் போதே தமிழீழம் என்ற பேச்சை முன்னெடுத்ததோ ஆனால் Lord Donoughmoore இலங்கையில் மொழி அல்லது இன அடிப்படையில் அரசியலமைப்பை இயற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எதுவுமே அவருக்குத் தெரியாது.
சும்மா யாரோ இந்தியர்கள் எழுதிய சில கட்டுரைகளை வாசித்து விட்டு வந்து, ஈழத்தமிழர்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் (அதிலும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் இவருக்கு என்ன அநியாயம் செய்தார்களோ எனக்குத் தெரியாது), மீதுள்ள காழ்ப்புணர்வை இங்கு காட்டுகிறார்.
ஈழத்தமிழர்களிடம் இந்துத்துவம், பெரியாரிசம் இரண்டுமே கிடையாது, நாங்கள் தமிழர்கள் மட்டும் தான், சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று நம்பும் பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் கூட, சைவமா, தமிழா என்று வரும்போது, சைவத்தை ஒருபுறம் வைத்து விட்டு, தமிழர்களாக தயங்க மாட்டார்களே தவிர அதற்காக அடித்துக் கொண்டு சாகமாட்டார்கள், அது தான் ஐயா ஈழத்தமிழர்களின் சிறப்பு. :-)
தலைவர் வியாசார்வாள்,
நான் கேட்டதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் , எனக்க்கு வரலாறு தெரியவில்லை என நிறுவுவதில் தான் அதிக ஆர்வமாக இருக்கிறார், பாவம் அப்படிலாம் நிறுவ அவர் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் நடவாது என அறியவில்லை :-))
எனது வரலாற்று அறிவை விடும்,உம்ம கதையை பார்ப்போம்,
நீர் சொல்வதெல்லாம் எப்படி இருக்குனு பாரும்,
//அவர்களின் கோரிக்கையை பிரிட்டிசார் உதாசீனம் செய்தமைக்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணத் தமிழர்கள் தேவையில்லாமல் மகாத்மா காந்தியை ஆதரித்து பிரிட்டிசாரின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டதும் //
// இலங்கைத் தமிழ்த்தலைவர்கள் டொனமூர் அரசியலமைப்பின் பேச்சு வார்த்தையின் போதே தமிழீழம் என்ற பேச்சை முன்னெடுத்ததோ ஆனால் Lord Donoughmoore இலங்கையில் மொழி அல்லது இன அடிப்படையில் அரசியலமைப்பை இயற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது //
வெள்ளைக்காரன் எரிச்சல் ஆனதால் ஈழம் கொடுக்கலை, கோரிக்கையை ஏற்கவில்லை என்றே இருக்கு ,
ஹி...ஹி வெள்ளைக்காரனுக்கு ஒரு அடிமை தேசம் தேவை சுதந்திரம்னு கேட்டாலே ஒத்துக்க மாட்டான்,அப்படி இருக்கும் போது தனி ஈழம்னு கேட்டால் மட்டும் ஒத்துப்பானா, போராடனும் அய்யா போராடனும், சுக்கா மிளகா கிளியே சுதந்திரம் அக்கா அக்கா என்று கேட்டால் கொடுக்கனு பாரதிதாசன் சொன்னதுலாம் அறியாதவரிடம் என்னப்பேசுவது.
நீர் சொல்வதை பார்த்தால் வெள்ளைக்காரன் மனம் குளிர பேசினால் அவனாக பார்த்து கொடுப்பான் என்றே இலங்கை தமிழர்கள் செயல்பட்டது தெளிவாகிறது. காலில் விழுந்து கிடந்தே சுதந்திரம் எனக்கேட்டதால் தான் டொமினியன் மட்டுமே கொடுத்தான், அதற்கே பெருமை பட்டுக்கொண்டவர்கள் தான் இலங்கையர்கள்.
வெள்ளைக்காரனின் மனம் நோகாமல் பேசி ,அவனாக பார்த்து எதாவது கொடுத்தால் அதை வைத்துக்கொள்வோம் என செயல்பட்டதை எப்படிலாம் சமாளிக்கிறீர் :-))
இந்தியாவில் காந்தி டொமினியன் அளவில் சுதந்திரம் போதும் என சொன்னதற்கே பலத்த எதிர்ப்பு வந்தது, திலகர், நேதாஜி எல்லாம் பூர்ண சுதந்திரத்துக்கு கீழ் வேறு ஒன்று வேண்டாம் என போராடியதால் ,காந்தியும் பூரண சுதந்திரம் என்ற கொள்கைக்கு போனார், பின்னர் ஜின்னா தனி இஸ்லாமிய நாடு கொள்கை வைத்து சாதித்துக்கொண்டார். இதெல்லாம் வெள்ளைக்கரனிடம் வெறும் பேசியா வாங்கினார்கள், இல்லை வெள்ளைக்காரன் எரிச்சல் ஆகிடுவான்னு சும்மா இருந்தார்களா?
பக்கத்து நாட்டில் இவ்வளவு நடப்பதை பார்த்த பின்னும் டொமினியன் அந்தஸ்தில் சுதந்திரம், தனி ஈழம் கேட்காமல் அடக்கி வாசித்தது எல்லாம் ஏன்? அதன் பின்னால் உள்ள காரணம் என்ன? உமக்கு அதெல்லாம் தெரியாது,தெரிந்தாலும் கூற மாட்டீர் :-))
எவ்வித சுதந்திரப்போராட்டத்திலும் ஈடுபடாமல் ,வெள்ளைக்காரனிடம் ரொம்ப விசுவாசமாக நடந்துக்கொண்டு நல்லப்பெயர் வாங்குவதில் தான் அப்போதைய இலங்கை அரசியல் தலைவர்கள் ஆர்வம் காட்டினர், ஒழுங்காக போராடி இருந்தால் இன்றைய இக்கட்டான நிலையே வந்திருக்காது.
இதியாவில் தாகூர் போன்றவர்கள் சுதந்திரம் வேண்டும் ,வெள்ளையனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கனும் என "சர்" பட்டத்திஐ கூட துறந்தார்கள்,ஆனால் இலங்கை பொன்னம்பல வகையறாக்களோ சர் என சொல்லிக்கொள்வதில் தான் பெருமிதம் அடைந்தார்கள் :-))
அப்புறம் எப்படி தனி ஈழத்தினை வெள்ளைக்காரன் தானா கொடுப்பான்?
நான் விலாவாரியாக பதிவாக போட்டால் உம்மை போன்றோரின் முகமூடி கிழிந்துவிடும், சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுத்த கதை தான் :-))
# //பிரிட்டிஸ் ஆட்சியில் அவர்களின் நிலை பிரிவினை கேட்டுப் போராடும் மோசமான நிலையில் இருக்கவில்லை //
என்ன ஒரு அபத்தமான வாதம்?
பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமை சேவகம் செய்து சுகமாத்தான் இருந்தீர்கள்,ஆனால் பிரிடீஷ் நாட்டை விட்டு சென்ற பின் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் சிறுபான்மையினர் நிலை என்ன ஆகும் என உத்தேசித்து ,பிரிட்டீஷ் இருக்கும் போதே ஒரு தனி நாடு கேட்டிருக்கணும் என சொல்வதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அசடாக உள்ளீரே :-))
ஒரு வேளை கடைசிவரையில் பிரிட்டிஷே ஆண்டுக்கொண்டிருக்கட்டும்,அடிமையாக இருப்பதே சுகம்னு நினைத்தார்களா?
பிரிட்டிஷ் போன பின் சிங்களர்களிடம் போராடும் நிலை வரும் என்பதை ஏன் கணிக்க தவறினார்கள் அப்போதைய இலங்கை தனிழர்கள், அதன் பின்னால் உள்ள அரசியல் என்னவென அறிவீரா?
காந்தியின் விருப்பத்திற்கும் மாறாக உறுதியாக நின்று ஜின்னா தனிநாடு வாங்கிய கதையெல்லாம் அறியாத நிலையிலா அப்போதைய இலங்கைத்தமிழின தலைவர்கள் இருந்தார்கள்?
//நான் விலாவாரியாக பதிவாக போட்டால் உம்மை போன்றோரின் முகமூடி கிழிந்துவிடும், சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுத்த கதை தான் :-))//
போடுங்க சார். இலங்கைத் தமிழர்களைப் பற்றிய உங்களின் விளக்கம் எந்தளவுக்கு இருக்கிறதென்பதை பார்ப்போம். கிழிவதற்கு என்னிடம் முகமூடி எதுவும் கிடையாது. என்னுடைய கருத்தை பயப்படாமல் சொல்வதில் நான் யாருக்கும் சளைத்தவனல்ல.
//காந்தியின் விருப்பத்திற்கும் மாறாக உறுதியாக நின்று ஜின்னா தனிநாடு வாங்கிய கதையெல்லாம் அறியாத நிலையிலா அப்போதைய இலங்கைத்தமிழின தலைவர்கள் இருந்தார்கள்?//
அது சரி தமிழ்நாட்டை விட்டு எத்தனையோ மைல்கள் கடந்து போய் ஜின்னாவை உதாரணம் காட்டி இலங்கைத் தமிழ்த்தலைவர்களை வாங்கு வாங்கென்று வாங்குகிறீர்களே, உங்களின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தமிழர்களுக்கு சுத்துமாத்து விடாமால், ஜின்னாவைப் போல் உண்மையுடனும் விசுவாசத்துடனும் தனித்தமிழ்நாடு கேட்டுப் பிரிந்திருக்கலாம் அல்லவா. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனுக்கு தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்களா அல்லது சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்களா. அல்லது அந்தக்காலத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து ஒரு தமிழன் கூட தலைவனாக முடியவில்லையா?
அது தான் போகட்டும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு நேரு பிரிவினைத் தடுப்புச்சட்டத்தை இயற்றியதும் தங்களின் வாலைச் சுருட்டிக் கொண்டு ஹிந்தியன்களுக்கு கட்டுப்பட்ட பெட்டிப் பாம்பாக இருக்காமல், அகிம்சை வழியிலாவது சிறைகளை நிரப்பி, தமிழ் நாட்டுப் பிரிவினைக்காகப் போராடியிருக்கலாமல்லவா? குறைந்த பட்சம் இலங்கைத் தமிழ்த்தலைவரக்ளுக்கு வெள்ளைக்காரன் சேர் பட்டமாவது கொடுத்தான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அப்படி எதுவும் கொடுத்ததாகவும் தெரியவில்லை.
தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஜின்னா போன்று தனிநாடு கேட்டிருந்தால், உண்மையில் தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கையையும், தமிழ்நாட்டின் வரலாற்றையும் பார்த்து, பாகிஸ்தானைப் போன்றே தமிழ்நாட்டைத் தனிநாடாக வெள்ளைக்காரன் கொடுத்திருப்பான். நீங்கள் மட்டும் ஞே என்று எருமை மாடு மாதிரி இருந்து விட்டு, இப்பொழுது ஈழத் தமிழர்கள் ஏன் தனிநாட்டை வெள்ளைக்காரனிடம் கேட்டுப் பெறவில்லை என்று “வேலையில்லாத அம்பட்டன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம்” என்ற இலங்கைப் பழமொழி போல் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் தலைவர்கள் மட்டும் ஏன் தனிநாடு கேட்கவில்லை என்று எங்களைப் பார்த்து நச்சரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ஐயா? :-)
தலைவர் வியாசர்வாள்,
//என்னுடைய கருத்தை பயப்படாமல் சொல்வதில் நான் யாருக்கும் சளைத்தவனல்ல.//
ஹி...ஹி முட்டாள் தனமாக பேசினால் சளைக்காமல் பேசிட்டே இருக்கலாமாம் :-))
ஆனாலும் உம்மை விடுதாயில்லை, காசாப்புக்கு கடைக்கு தானாக வந்த ஆட்டை விட்டால் நல்லாவா இருக்கும் :-))
//ஜின்னாவைப் போல் உண்மையுடனும் விசுவாசத்துடனும் தனித்தமிழ்நாடு கேட்டுப் பிரிந்திருக்கலாம் அல்லவா. //
உமக்கு ஆத்திரம் கண்ணைக்கட்டுகிறது போலும் :-))
ஜின்னா மதத்தின் அடிப்படையில் தனிநாடு பிரித்தார், தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அவ்வாறு கேட்க வாய்ப்பில்லை, தமிழ்நாட்டில் பெரும்பாலும் இந்துக்களே, அப்புறம் எப்பூடி ஜின்னா வழியில் தனி நாடு கேட்க முடியும்,மொழி அடிப்படையில் கேட்டால் என்ன என்றால் இந்தியா முழுக்க பல நூறு மொழிகள் இருக்கு, அவ்வாறு அனைவரும் கேட்டிருந்தால் இந்தியாவே இல்லை, அதோடு அல்லாமல் சுதந்திரத்துக்கு பின்னர் கூட்டாச்சி அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது,மாநிலங்களுக்கு என தனி உரிமைகள் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்றில்லை, தனி மாநிலம் கூட கேட்டுப்பெறப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் பவுத்த சிங்களர், இந்து தமிழர்கள் என மத ரீதியாகவும்,மொழி ரீதியாகவும் வேறு பாடு உள்ள சூழலில் , தனிநாடு கேட்க அனைத்து சாத்தியமும் இருந்தது. ஆனால் அப்படி கேட்காமல் வெள்ளையனுக்கும்,சிங்களனுக்கும் அடிமையாக இருந்தார்கள் அப்போதைய இலங்கை தமிழின தலைவர்கள் என்பதே கசப்பான உண்மை!
//இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு நேரு பிரிவினைத் தடுப்புச்சட்டத்தை இயற்றியதும் தங்களின் வாலைச் சுருட்டிக் கொண்டு ஹிந்தியன்களுக்கு கட்டுப்பட்ட பெட்டிப் பாம்பாக இருக்காமல், //
ஆர்வக்கோளாரே, அந்த சட்டம் போட்டது இந்திராகாந்தி :-))
பிரிவினைவாத தடுப்பு சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் உண்டு ,அப்போ அமெரிக்க மகாணங்களில் இருப்பவர்கள் எல்லாம் வாலை சுருட்டிக்கொண்டிருக்கிறார்களா என்ன?
பல கலாச்சாரங்கள் கொண்ட பெரிய தேசம் அமைக்க சில சட்டங்கள் தேவை,எனவே அவை உருவாக்கப்பட்டன.
//குறைந்த பட்சம் இலங்கைத் தமிழ்த்தலைவரக்ளுக்கு வெள்ளைக்காரன் சேர் பட்டமாவது கொடுத்தான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அப்படி எதுவும் கொடுத்ததாகவும் தெரியவில்லை. //
அய்யா வியாசர்வாள் வெள்ளைக்காரனுக்கு விசுவாசமாக இருந்தால் கொடுப்பது "சர்" பட்டம் அதில் என்ன பெருமை கண்டீர்? தமிழ் நாட்டில் யாரும் சர் பட்டமே வாங்கவில்லை என நினைக்கும் உமது அறியாமையை என்னவென்பது?
அப்புறம் தமிழ்நாட்டில் யாருக்கும் கொடுக்காமல் இல்லை கொடுத்தார்கள் ஆனால் அதை எல்லாம் பெருசாக மக்கள் நினைக்கவில்லை.
"சர்" அண்ணாமலை செட்டியார்,"சர்" முத்தையா செட்டியார், "சர்" அழகப்ப செட்டியார்,சர்.சிவி,ராமன், "சர் "பிட்டி.தியாகராஜ செட்டியார்,"சர்"பிடி..ராஜன், ,சில்வர் டங்க்.சீனிவாச.சாஸ்திரி "சர்" பட்டம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இப்படி பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
//இப்பொழுது ஈழத் தமிழர்கள் ஏன் தனிநாட்டை வெள்ளைக்காரனிடம் கேட்டுப் பெறவில்லை என்று “வேலையில்லாத அம்பட்டன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம்” என்ற இலங்கைப் பழமொழி போல் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் தலைவர்கள் மட்டும் ஏன் தனிநாடு கேட்கவில்லை என்று எங்களைப் பார்த்து நச்சரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ஐயா? :-)//
நியாயம் இருக்கிறது, தமிழ்நாட்டு தமிழர்கள் யாரும் அகதிகளாக உலகநாடுகளுக்கு ஓடவில்லை, ஏன் எனில் தமிழ்நாட்டில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என புலம்பும் சூழல் இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் இருக்கு.
எங்களைக்காப்பாற்றுங்கள் என இலங்கை தமிழர்களை கேட்கும் நிலையில் தமிழகத்தமிழர்கள் இல்லை,அப்படி கேட்கும் நிலையில் நின்றால் ,ஏன் தனிநாடு கேட்டு வாங்கவில்லை என நீர் தாரளமாக கேட்கலாம். இங்கே சுமூகமான சூழல் உள்ளது,மாநில அரசியல் தமிழர்கள் கையில் உள்ளது, ஏன் தனி நாடு கேட்கவில்லை என்ற கேள்விக்கு இடமில்லை.
ஆனால் சிங்களர்கள் கொல்கிறார்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை என புலம்பும் நீங்கள் ஏன் அன்றே தனி நாடு கேட்கவில்லை என கேட்கத்தான் செய்வார்கள். இன்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சீமான் ஈழம் பெற்றுத்தருவார் என கற்பனையில் அலையும் உம்மை பார்த்து தாரளமாக "பூனைக்கு முடி சிரைத்தார்ப்போல" கேட்கலாம் :-))
ஆங்கிலேயர் ஆட்சியில் ஈழத்தமிழ் தலைவர்கள் இலங்கையர் என்ற தேசிய உணவு கொண்டிருந்ததால் அவர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டார்கள். அதே வேளையில் தமது தவறை ஜின்னாவுக்கும், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே உணர்ந்து கொண்டு தமது தவறான முடிவுகளை திருத்திக் கொள்ள முயன்றார்கள். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்ட அவர்களால் தமது தவறைத் திருத்த முடியவில்லை. அதனால் தான் மனமுடைந்த சேர் இராமநாதன் “Donoughmore - Tamils no more” என்ற புகழ்பெற்ற தனது பேச்சை நடத்தி முடித்த குறுகிய காலத்தில் மறைந்தார்.
அதேவேளையில் இலங்கைத் தமிழர்களின் இந்திய சார்பும், ஆங்கிலேயருக்கு எரிச்சலையூட்டும் வகையில் மகாத்மா காந்திக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் அளித்த வரவேற்பும் தான் ஒற்றையாட்சியின் கீழ் சிங்களவர்களிடம் முழு இலங்கையையும் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேயர் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும்.
உண்மையில் இந்தியர்களுக்கு (அதாவது இலங்கைத் தமிழில் வடக்கத்தையான்களுக்கு) ஆதரவாக நடந்ததால் ஈழத்தமிழர்களுக்கு எப்பொழுதும் அழிவு தான் ஏற்பட்டிருக்கிறது. அதே வேளையில் இந்தியர்களும் இலங்கை தமிழர்களின் உண்மையான இந்திய சார்பையும், அவர்களை நம்பித் தான் ஈழத்தமிழர்கள் கெட்டார்கள் என்பதையும் இன்னும் உணர்வதாகத் தெரியவில்லை.
"Gandhi’s visit and the arrival of the Donoughmore commissioners in November 1927 DETERMINED THE COURSE OF THE HISTORY OF SRI LANKA AND THAT OF THE SRI LANKAN TAMILS. Gandhi who reached Colombo on November 12 and the Donoughmore Commissioners the next day affected the political history of the Sinhalese and the Tamils in different ways.
Gandhi, though he avoided speaking about the Indian freedom struggle which he was heading at the meetings he addressed in Sri Lanka, generated greater amount of interest among the Tamils, especially the youth, than among the Sinhalese. Tamils were moved by the emerging Indian talk of ‘Poorna Swaraj’ (Total Freedom) while the moderate Sinhalese leadership decided to reap the benefits that flowed from Donoughmore Commission recommendations.
Tamil youths were affected by the emotional climate generated by the boycott of the Simon Commission which was appointed by the British Conservative government in the middle of 1927 to investigate and report about India’s demands for constitutional reforms. The Indian National Congress and other radical organizations decided to boycott the 7-member commission headed by Sir John Simon. Several organizations that supported the freedom struggle decided to boycott the Simon Commission because it did not include any Indian national. That decision gave the Jaffna Youth Congress the idea about boycotts.
THE DONOUGHMORE COMMISSIONERS WITNESSED THE ENTHUSIASM WITH WHICH SRI LANKANS RECEIVED GANDHI AND THE HUGE CROWDS THAT ATTENDED HIS MEETINGS. THEY ALSO SAW THAT TAMILS WERE MORE ENTHUSIASTIC THAN THE SINHALESE. THE COMMISSIONERS NOTED THAT THE TAMILS HAD BECOME MORE RADICAL THAN THE SINGHALESE.
The British colonial administrators and the Donoughmore Commissioners REALIZED THAT THEY COULD NO LONGER DEPEND ON THE SUPPORT OF THE MINORITY COMMUNITIES TO PROLONG THEIR RULE IN SRI LANKA AND SWITCHED THEIR POLICY FROM BACKING THE MINORITY COMMUNITIES TO GOING ALONG WITH THE SINHALESE who were prepared to accept self-government.
The Jaffna Youth Congress concentrated on social reform, temperance movement and economic development as a follow up of the Gandhi’s visit and the resolutions it passed at its third annual convention held in early December 1927 in Jaffna concentrated on those areas. It started the Youth Service League which opened branches in several villages and conducted its campaign in Tamil using the local idiom which the people easily understood.
The Jaffna Youth Congress propagandists, dressed in verti and national banian, spoke about the equality of man, the need to open the temples for the untouchables, the need to admit children of low castes to schools, preached about the evils of alcohol consumption, promoted the cooperative system, advocated the adoption of the national dress, and stressed the need for national unity. They became popular with the masses and before the end of 1927 the Jaffna Youth Congress had built for itself a mass base among the Jaffna people.
Contnd…
The Jaffna Youth Congress sent a small delegation to the annual sessions of the Indian National Congress held at Madras during the closing days of December 1927. The Madras sessions which marked the turning point in Indian freedom struggle influenced the thinking and actions of the Jaffna Youth Congress for the next six years (1928- 1934). In retrospect, the Coomaraswamy family’s Colombo-centered approach which promoted Sri Lankan nationalism and the JAFFNA YOUTH CONGRESS’S BLIND FOLLOWING OF THE MADRAS RESOLUTIONS OF THE INDIAN NATIONAL CONGRESS PREVENTED THE TAMIL LEADERSHIP FROM WORKING OUT A CONSTITUTIONAL SOLUTION SUITABLE FOR THE SRI LANKAN TAMILS."
தலைவரே வியாசர்வாள்,
//, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே உணர்ந்து கொண்டு தமது தவறான முடிவுகளை திருத்திக் கொள்ள முயன்றார்கள். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்ட அவர்களால் தமது தவறைத் திருத்த முடியவில்லை. அதனால் தான் மனமுடைந்த சேர் இராமநாதன் “Donoughmore - Tamils no more” என்ற புகழ்பெற்ற தனது பேச்சை நடத்தி முடித்த குறுகிய காலத்தில் மறைந்தார்.//
நல்லா கதை சொல்றேள் :-))
Donoughmore கமிஷன் வந்தது 1927 இல் அப்போ தவறவிட்டதை 1948 வரைக்கும் திருத்தவே முடியாமால் ஏன் போனது?
உமக்கு வரலாறு தெரியவில்லை என்றால் அடியேன் சொல்லித்தருகிறேன், அதே காலக்கட்டத்தில் வந்த சைமன் கமிஷனை புறக்கணித்துவிட்டார்கள்,அப்போதெல்லாம் பூரண சுதந்திரம் என்ற கொள்கையே காந்திக்கு இல்லை 1928 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கூட காந்தி டொமினியன் பற்றி பேசினார், தீர்மானம் கொண்டுவந்தார், நேதாஜி மற்றும் ஜவஹர்லால் நேரு எதிர்த்தனர். பின்னர் ஜனவரி 26,1930 இல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் வைத்து ஜவஹர்லால் நேரு இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்,பூரண சுதந்திர பிரகடணம் செய்தார், எனவே தான் இன்றும் குடியரசு தினம் ஜனவரி 26 இல் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது(அதாவது சுதந்திரம் அடைந்த பின்னர் ஜனவரி 26 இல் குடியரசு அறிவித்து செயல்படுத்தினார்கள்)
1930க்கு பின்னரே முஸ்லீக் தனி இஸ்லாமிய நாடு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தது.
அதாவது 1927 இல் இருந்து 30க்குள் இதெல்லாம் இந்தியாவில் நடக்கும் போதும் ஏன் 1948 வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் எதுவும் செய்யாமல் இருந்தார்கள்? என்னமோ செய்த தவறை சரி செய்ய முடியலைனு ,காலமே இல்லாமல் 1927இலேயே இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தாபோல பேசிக்கிட்டு சுளையாக்க 21 ஆண்டுகள் இருந்தது இடையில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் செய்திருக்கலாம்.
//அதேவேளையில் இலங்கைத் தமிழர்களின் இந்திய சார்பும், ஆங்கிலேயருக்கு "எரிச்சலையூட்டும்" வகையில் மகாத்மா காந்திக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் அளித்த வரவேற்பும் தான் ஒற்றையாட்சியின் கீழ் சிங்களவர்களிடம் முழு இலங்கையையும் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேயர் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும்//
அது என்னவோய் எப்பப்பார்த்தாலும் வெள்ளைக்காரன் எரிச்சல் ஆகிட்டான் அதான் தனி ஈழம் கொடுக்கலைனு சொல்லிக்கிட்டு, நீர் சொல்வதை பார்த்தால் வெள்ளைக்காரன் மனம் குளிர பேசிக்கொண்டு ,தடவி விட்டுக்கொண்டே இலங்கைக்கு சுதந்திரம் வாங்க முயன்றார்கள், வெள்ளைக்காரன் எரிச்சல் ஆகியதால் கிடைக்கலைனு சொல்லுறாப்போல இருக்கு :-))
சுதந்திரம்,தனி ஈழம் என்றால் போராடனும், இப்படிலாம் எரிச்சல் ஆகிட்டான்னு சொல்லிட்டு இருக்கப்படாது, இந்தியாவில் போராடியவர்கள் மீது வெள்ளைக்காரன் எரிச்சல் ஆகாமலா இருந்திருப்பான்,எத்தனை தடியடி, சிறைவாசம்,அந்தமான் தனிமைச்சிறை, உயிர் இழப்பு என போராடி பெற்றது தான் இந்திய சுதந்திரம்.
அப்படியான சுதந்திரப்போராட்ட சரித்திரம் வெள்ளையர்கள் காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு இருக்கா?
தொடர்ச்சி...
தொடரும்...
//உண்மையில் இந்தியர்களுக்கு (அதாவது இலங்கைத் தமிழில் வடக்கத்தையான்களுக்கு) ஆதரவாக நடந்ததால் ஈழத்தமிழர்களுக்கு எப்பொழுதும் அழிவு தான் ஏற்பட்டிருக்கிறது. அதே வேளையில் இந்தியர்களும் இலங்கை தமிழர்களின் உண்மையான இந்திய சார்பையும், அவர்களை நம்பித் தான் ஈழத்தமிழர்கள் கெட்டார்கள் என்பதையும் இன்னும் உணர்வதாகத் தெரியவில்லை. //
உமது சுய ரூபம் வெளிப்படுகிறது, கதை விட்டாலும் நம்புற மாதிரி விட முயற்சிக்கவும்.
இந்திய தமிழர்களுக்கு என்ன ஆதரவாக செயல்ப்பட்டு நஷ்டமடைந்தார்கள், இல்லை கெட்டுப்போனார்கள் இலங்கை தமிழர்கள். 1948 இல் சுதந்திரம் அடைந்ததும் முதல் வேலையாக இந்திய தமிழர்களின் வாக்குரிமை,குடியுரிமையை தான் சிங்களனுடன் சேர்ந்து பறித்தீர்கள்,அது தான் நீங்கள் செய்த உபகாரமா?
Donoughmore கமிஷனுக்கு இலங்கை தமிழின தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமே , அனைவருக்கும் வாக்குரிமை திட்டத்தின் கீழ் மலையகத்தமிழர்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடும் என்பதே,அன்றைய நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்திய மலையகத்தமிழர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்தால் அரசியல் முக்கியத்துவம் 'யாழ்" தலைவர்களிடம் இருந்து மலையகத்தமிழர்கள் தலைவர்கள் கைகளுக்கு போய்விடும் என்பதே. அதே போல நடக்கவும் செய்தது, எனவே 1948 இல் சிங்களர்களுடன் கூட்டு வைத்து வாக்குரிமையை பறித்துவிட்டார்கள் இலங்கை தமிழ் தலைவர்கள் ,இது தான் உண்மை.
ஆங்கிலத்தில் வெட்டி ஒட்டினால் ஆச்சா,அதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்னு புரிய வேண்டாமா? உமக்கே அது சொந்த செலவில் சூனியமாகிடுச்சு :-))
//The Jaffna Youth Congress propagandists, dressed in verti and national banian, spoke about the equality of man, the need to open the temples for the untouchables, the need to admit children of low castes to schools, preached about the evils of alcohol consumption, promoted the cooperative system, advocated the adoption of the national dress, and stressed the need for national unity. They became popular with the masses and before the end of 1927 the Jaffna Youth Congress had built for itself a mass base among the Jaffna people.//
இதனால் தான் மூத்த யாழ் தலைவர்கள் அவர்களை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள், சிங்கள தலைவர்களுடன் நெருக்கம் காட்டி, டொமினியன் அளவில் சுதந்திரம் கிடைத்தால் போதும்னு அடக்கி வாசித்தார்கள் :-))
சுத்தி வளைத்து பேசினாலும் தனி ஈழம் என்று கேட்டு இலங்கையில் அப்போது யாருமே போரடவில்லை என்பதை மாற்றிவிட முடியாது. போராடாமல் எதுவும் கிடைக்காது.
//AFFNA YOUTH CONGRESS’S BLIND FOLLOWING OF THE MADRAS RESOLUTIONS OF THE INDIAN NATIONAL CONGRESS PREVENTED THE TAMIL LEADERSHIP FROM WORKING OUT A CONSTITUTIONAL SOLUTION SUITABLE FOR THE SRI LANKAN TAMILS."//
அப்படி என்ன பிரிவெண்ட் செய்தது? அதுவும் 1927 இல் தடுத்தா 1948 வரைக்கும் என்ன செய்தார்கள்? ஒன்னும் செய்யாமல் சும்மா இருந்துட்டு இப்ப்படிலாம் சாக்கு போக்கு கண்டுப்பிடிக்க வேண்டியது :-))
மன்னிக்கவும், ஒட்டகம் என்றெல்லாம் சிலர் பேசினார்கள். ஆனால் இது ஒட்டகம் மாதிரியெல்லாம் தெரியவில்லை, கொப்பு விட்டுக் கொப்பிழக்கப் பாயும் அந்தக மந்தி போல் ஒரு விடயத்திலிருந்து இன்னொரு தொடர்பில்லாத விடயத்துக்குப் பாய்கிறார் அண்ணன் வவ்வால், இவரோடு பேசுவதில் என்னுடைய நாள் முழுவதையும் செலவழித்தால் என்பாடு அரோகரா தான். :-)
//////நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்,காஷ்மீரிகளின் உயிர் இழப்பு துயரங்கள் இணைந்த வரலாற்றில் இந்திய பகுதியின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்துடன் தனது முதலமைச்சரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வல்லமையோடு தனி மாநிலமாக திகழ்கிறது.///////
உலாரலுக்கு அளவு இல்லை போல உங்களுக்கு..... காஷ்மீர் பிரச்சனயை இந்திய சரியாக தீர்த்து உள்ளத என்ன??? இந்தியாவின் ஒப்ந்ததின் படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் காஷ்மீர் ரில் நடத்தியதா என்ன???? அடுத்த நிலத்தின் சுகந்திரத்தை பறிக்க நீங்கள் (இந்திய ) யார்????.....
//////காஷ்மீர் தனிநாடு கோரிக்கையாளர் யாசின் மாலிக்கை யாருக்கும் தெரியாமல் தமிழகம் கூட்டி வந்து பேச வைத்த வரலாற்று தவறை அறிந்து திடுக்கிட்டேன்.சீமான் உச்சக்குரலில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்ற சீமானின் பிம்பத்தைக் கடந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை அலசும் திறனற்ற மனிதராக இருக்கிறாரே என்றே மனம் பதைபதைக்கிறது. ///// "யாசின் மாலிக்" தான் நிலத்துக்காக போராடும் ஒரு போராளி....யாசின் மாலிக் யை இந்திய பிரதமர் சந்தித்து பேசலாம் தமிழ் நாட்டின் ஒரு தமிழன் பேச வைக்க கூடாது ஏன்??? தமிழன் என்பதலா?????? காஷ்மீர் ய்ருடிய நிலம் முதலில் சொல்லுங்கள்??? இந்தியாவின் நிலமா என்ன சொல்லுங்கள்???? அப்படி இந்தியாவுடன் சேர்ந்த நிலம் என்று அதரன் இருக்கிறதா என்ன முதலில் சொல்லவும்..... முதலில் ""அரசியல் அமைப்பு சட்டத்தின்" படி இந்திய ஒரு நாட சொல்லுங்கள்..... யாசின் மாலிக் ஒரு தீவிரவாதி இல்லை, avar அமைப்பு இந்தியாவால் தடை செய்ய பட்ட அமைப்பும் இல்லை.... பின் ஏன் உங்கள் மனசு பட படகிறது சீமானை எப்படியாவது தகுதல் பண்ண வேண்டும் அதுதான் உங்கள் எண்ணமாக இருக்கிறது என்பது சரியாக தெரிகிறது....
////இலங்கை இனம்,மொழி அடிப்படையில் ஆராய வேண்டிய ஒன்று.காஷ்மீர் இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் அடிப்படையில் உருவான ஒன்று.///// இரண்டும் ஒரே நோக்கம் தான் விடுதலை.... இரண்டு நிலத்திலும் அடகு முறையாலும், அதிகரதினாலும் மக்கள் படுகொலை செய்ய பட்டு இருக்கிறார்கள்.... இரண்டு நோகங்களும் ஓன்று தான் மறந்து விடாதிர்கள்.........
தலைவர் வியாசர்வாள்,
உம்ம சோலி ஓவர் :-))
நீர் எம்புட்டு நிதானமானவர்னு உம்ம பின்னூட்டங்களே சொல்லுது பாரும், அப்புறம் உமக்கு எதனையும் புரிந்துக்கொள்ளும் திறனே இல்லை என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது, ஒட்டகம் என்பது நம்ம ராச நடையாகும்,ஆனால் ஒட்டகம் என்றார்கள் என என்னை சொல்கிறீர்ள்-))
//கொப்பு விட்டுக் கொப்பிழக்கப் பாயும் அந்தக மந்தி போல் ஒரு விடயத்திலிருந்து இன்னொரு தொடர்பில்லாத விடயத்துக்குப் பாய்கிறார் அண்ணன் வவ்வால், //
இப்போ இப்பிடி சொன்ன வியாசர்வாள், ஒரு சில பின்னூட்டங்கள் முந்தி என்ன சொன்னார்னா....
//திருப்பித் திருப்பி ஒன்றையே ஒப்பிப்பதையும் பார்க்கும் பொழுது அவருக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களைப் பற்றியோ //
இன்னும் சொல்லப்போனால் இப்போ வரைக்கும் நான் ஒரே கேள்வியினைத்தான் கேட்டு வருகிறேன்,ஆனால் வியாசர்வாளுக்கு அவ்வப்போது அது பல கேள்விகளாக மாறிவிடுகிறது :-))
என் கேள்வி இதுவே, 1948 இல் ஏன் இந்தியா- பாகிஸ்தான் மாடலில் தனிநாடு கேட்டிருக்கவில்லை இலங்கையில், அதுவும் டொமினியன் ஸ்டேட்டஸ் தான், பின்னர் 1971 இல் முழு விடுதலை அடைந்த போதும் ஏன் தனி ஈழம் கேட்கவில்லை என்பதே.
சரியான பதில் சொல்லமுடியாமல் ஏதேதோ உளரிட்டு இப்போ ஊளையிடுகிறார் :-))
சட்டைக்கிழிஞ்சிருந்தா தைச்சிடலாம் ,
நெஞ்சு கிழிஞ்சிடுத்தே யாரு தைப்பா :-))
மீண்டும் வாரும் கிழி..கிழினு கிழிப்போம்ல!
//மீண்டும் வாரும் கிழி..கிழினு கிழிப்போம்ல!//
தன்னைத் தானே பாராட்டிக் கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். விவரம் தெரிந்தவர்களுடன் உருப்படியான விவாதங்களை விட்டுக் கொடுக்கும் பழக்கம் எனக்கும் கிடையாது. ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததாக காட்டிக் கொண்டு தன் முதுகில் தானே தட்டிக் கொடுப்பவர்கள் ஒருவகையினர், விதண்டாவாதம் பண்ணாமல், எடுத்துக் கொண்ட கருத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றமாக விவாதத்தைக் கொண்டு செல்பவர்கள் மற்றொரு வகையினர். நீர் எந்த வகை என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் தான் உம்முடன் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் பற்றிப் பேசுவது நேரத்தை எனது வீணாக்கும் செயல் என நான் நினைக்கிறன்.
உம்முடைய உளறல்கள் எல்லாவற்றுக்கும் விரிவான பதிலை என் வலைப்பதிவில் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்கிறேன், முடிந்தால் அங்கு வந்து கிழித்துப் பாரும். அக்காலப் பகுதியில் தென்னிலங்கையின் பொருளாதாரமும் தமிழர்களின் கைகளில் தான் இருந்தது. சிறுபான்மையினர்களாகிய தமிழர்கள் தான் பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மையாக இருந்தனர். அதனால் தான் சுதந்திரத்துக்கு முன்னாள் ஈழத் தமிழர்களின் தலைவரகள் தனிநாடு கேட்கவில்லை. உடையாததை ஒட்டவைக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்களிடம் அரசியல் தீர்க்க தரிசனம் இருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்த தான் வேண்டும். ஆனால் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை கிடைக்கக் கூடாது என்பதற்காக சேர். இராமநாதன் தனிநாடு கேட்கவில்லை என்பதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல வெறும் உளறல். அவருடைய ஒரே மகள் சிவகாமசுந்தரி அக்காலத்திலேயே மணந்தது ஒரு இந்தியதமிழனைத் தான்.
இந்தப் பிரச்னை எல்லாம் தொடங்கியதே சிங்களம் மட்டும் சட்டத்தின் பின்னால் தான். அப்படியிருந்தும் தமிழீழம் என்பதை கொள்கையளவில் 1920 களிலேயே ஈழத் தமிழ்த்தலைவர்கள் பேசினார்கள் ஆனால் போராட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கவில்லை.
இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல பிரபாகரன் கூட இலங்கையை வெறுக்கவில்லை. சிங்களவர்களின் இனவெறியைத் தான் எதிர்க்கிறார்கள். ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது மொழியையும் கலாச்சாரத்தையும், பூர்வீக மண்ணையும் காக்க முடிந்தால் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் அந்த தீர்வை ஏற்றுக் கொள்வார்கள். ஜின்னாவை போல் அல்லாது அக்காலத்து ஈழத் தமிழ் தலைவர்களும் நாட்டுப்பற்றுள்ளவர்கள், அதனால் தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை விரும்பினார்கள்.
Correction:
சுதந்திரத்துக்கு முன்னாள்* அல்ல முன்னால்
//இன்னும் சொல்லப்போனால் இப்போ வரைக்கும் நான் ஒரே கேள்வியினைத்தான் கேட்டு வருகிறேன்,//
கொப்பு விட்டுக் கொப்பிழக்கப் பாயும் அந்தக மந்தி போல் என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள் ஏன் தனிநாடு கேட்கவில்லை என்ற கேள்வியில் தொடங்கி மலையகத் தமிழர்களின் வாக்குரிமை என்ற சம்பந்தமில்லாத விடயத்துக்கு தாவியதால் தான். இப்பொழுது கூட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கும், தமிழீழப் போராட்டத்துக்கும் தொடர்பு கிடையாது. அப்படித் தொடர்பு படுத்துகிறவர்கள் ஏதோ புகைக்கக் கூடாதவற்றைப் புகைத்து விட்டு உளறுகிறார்கள்; என்பது தான் கருத்தாகும். :-)
தலைவர் வியாசர்வாள்,
//தன்னைத் தானே பாராட்டிக் கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். //
உமக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைவென்றால் அடியேன் என்ன செய்வேன் அவ்வ்!
//அதனால் தான் சுதந்திரத்துக்கு முன்னாள் ஈழத் தமிழர்களின் தலைவரகள் தனிநாடு கேட்கவில்லை. //
அதே பழைய பல்லவி :-))
//அவர்களிடம் அரசியல் தீர்க்க தரிசனம் இருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்த தான் வேண்டும்//
இதைத்தானே நானும் சொல்லி இருக்கிறேன் ,இந்தியா- பாகிஸ்தான் கதையை எல்லாம் பார்த்த பின்னும் புரிந்துக்கொள்ளாமல் இருந்தார்கள்,அதன் பின்னால் ஒரு காரணம்ம் இருந்தது என்பதையே நான் சொன்னேன்.
//இந்தப் பிரச்னை எல்லாம் தொடங்கியதே சிங்களம் மட்டும் சட்டத்தின் பின்னால் தான்.//
அந்த சட்டம் வந்த போதும் இங்கிலாந்தின் சலீஸ்பரி அரசியல் சட்ட நிர்ணயம் தான் இருந்தது, இங்கிலாந்தின் முடியாட்சியின் கீழ் தான் இலங்கை இருந்தது, எனவே இங்கிலாந்திடமே முறையிட்டு 1971 இல் தனி ஈழம் கேட்டிருக்கலாம் ,ஆனால் கேட்கவில்லை ஏன்?
ஏன் எனில் 1971 லும் சிரிமாவோ -சாஸ்திரி ஒப்பந்தப்படி முழுமையாக இந்தியர்கள் திருப்பி அனுப்பி இருக்கவில்லை, தமிழர்கள் என்ற அடிப்படையில் தனி ஈழம் கேட்டால் ,மலையகத்தமிழர்களும் திரும்ப செல்ல மாட்டோம் என சொல்லக்கூடும் என்பதால் முழுதாக ஒப்பந்தப்படி இந்திய தமிழர்கள் வெளியேறும் வரையில் மவுனம் காத்தார்கள்,ஆனால் அதற்குள் இலங்கை முழுக்க சிங்கள அரசாக மாறிவிட்டது. எனவே பின்னர் எழுப்பப்பட்ட தனி ஈழம் கோரிக்கை குப்பைக்கு போய் ஆயுத போரட்டமாக மாறியது.
//அக்காலத்து ஈழத் தமிழ் தலைவர்களும் நாட்டுப்பற்றுள்ளவர்கள், அதனால் தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை விரும்பினார்கள்.//
இலங்கைக்கு இப்படி நாட்டுப்பற்று என சொல்லிக்கொள்ளும் நீர் பின்னர் எப்படி தமிழ்நாட்டுத்தமிழர்கள் தனி நாடு ஏன் கேட்கவில்லை என கேட்டீர்? இங்குள்ள தமிழர்கள் ஒன்றுப்பட்ட இந்தியாவாக இருந்தே தமது உரிமைகளை பெற விரும்பினர், தனி மாநிலம், ஜனநாயகம் எல்லாம்ம் இப்பவும் இருக்கு,ஆனால் இதனை இரண்டாம் தர பிரஜைகள் என இழிவாக பேசியதும் நீர் தான்!
//ஈழத்தமிழர்கள் ஏன் தனிநாடு கேட்கவில்லை என்ற கேள்வியில் தொடங்கி மலையகத் தமிழர்களின் வாக்குரிமை என்ற சம்பந்தமில்லாத விடயத்துக்கு தாவியதால் தான்//
நீர் தீராத மனக்குழப்பத்தில் இருக்கீர்னு நினைக்கிறேன்,எனது முதல் பின்னூட்டத்திலேயே இதை எல்லாம் பட்டியலிட்டு தான் சொல்லி இருக்கிறேன், திடீர் என சொல்லவில்லை.
எந்த ஒரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும், தனி ஈழம் கேட்காததன் காரணம்ம் என சொன்னால் அது சம்பந்தமில்லாத விடயமாகிவிடும் என உம்மை போல சிந்திக்க யாராலும் முடியாது :-))
//இப்பொழுது கூட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கும், தமிழீழப் போராட்டத்துக்கும் தொடர்பு கிடையாது. //
உமது சுயரூபம் அடிக்கடி வெளியாகிறது!
பிரிட்டீஷ்காலத்தில் இப்படி பிரிச்சு பேசியதால் தான் தனி ஈழமே உருவாகவில்லை அதே மனநிலையில் இன்றும் நீர் இருக்கீர் ,ஆனால் தனி ஈழ தோல்விக்கு இது போன்ற பிரிவினை தான் காரணம் என சொன்னால் இல்லை என்பீர் ,என்ன மாதிரி மனிதரய்யா நீர் :-))
இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் "தமிழர்கள்" என்ற ஒரே பெயரில் இணைந்து குரல் கொடுக்காத வரையில் ஈழப்பிரச்சினைக்கு முடிவேயில்லை.
சரி மலையக இந்திய தமிழர்களை துச்சமாக பிரித்துப்பேசிவிட்டு ,இந்திய தமிழக தமிழர்களை தொப்புள் கொடி உறவு , சீமான் என்ற இந்திய தமிழனின் தலைமையை ஏற்று ஈழத்திற்காக பாடுபட வேண்டும் என கேட்கும் கேவலமான அரசியலின் பின்னணி என்னனு நீராவது விளக்கம் கொடும் :-))
உமக்கு பிடித்திருக்கும் போதை மத போதை அது இறங்கினால் தான் புத்தி தெளிவாகும் :-))
# //என் வலைப்பதிவில் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்கிறேன், முடிந்தால் அங்கு வந்து கிழித்துப் பாரும். //
கண்டிப்பாக கிழிக்க வருகிறேன், கமெண்ட் மாடரேஷனை எடுத்துவிடும்!
------------------
//இலங்கைக்கு இப்படி நாட்டுப்பற்று என சொல்லிக்கொள்ளும் நீர் பின்னர் எப்படி தமிழ்நாட்டுத்தமிழர்கள் தனி நாடு ஏன் கேட்கவில்லை என கேட்டீர்?//
எந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்பதை முதலில் படித்துப் பாரும். ஈழத்தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்துப் போராடவில்லை என்பது உங்களின் வாதம். அவர்கள் போராடவில்லை ஏனென்றால் அவர்கள் முழு இலங்கையையும் நேசித்தார்கள். தம்மை முதலில் இலங்கையராகக் கருதினார்கள். அதனால் போராட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை. ஆனால் உங்களில் தலைவர்கள் பிரிவினைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தனிநாடு என்று கூச்சல் போட்டார்கள், உம்மைப் போல் எழுதியும் கிழித்தார்கள். அப்பொழுது எங்கே போனதையா அவர்களின் நாட்டுப்பற்று. முன்வைத்த காலை அவரகள் பின்வைத்த காரணம், சிறைக்குச் செல்லப் பயம் அல்லது தமது அரசியல் நலன்கள் பதவி என்பவற்றை அவர்கள் இழக்க விரும்பவில்லை. அதை நாட்டுப்பற்றினால் தனிநாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்காமலிருந்த ஈழத்தமிழ்த் தலைவர்களின் நாட்டுப் பற்றுடன் ஒப்பிட முடியாது.
பஞ்சாயத்து,
நீர் சரியான சாவு கிராக்கி. இதற்குப் பெயர் தான் சிண்டு முடித்து விடுவதென்பது. நான் சொன்ன கருத்து உமக்கு விளங்கவில்லை அல்லது விளங்கியும் உங்களின் நரிப்புத்தி உங்களை விடவில்லை.
ஈழத்தமிழ்ப் போராட்டத்துக்கும் மலையகத் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பது யதார்த்தமான உண்மை. அதற்காக நான் மலையகத் தமிழர்களை வெறுக்கிறேன் என்றோ அல்லது தமிழர்கள் ஒன்று படுவதை விரும்பவில்லை என்பதாகவோ படம் காட்டும் உம்மைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
தமிழீழப் போராட்டத்துக்கும், தமிழீழத்துக்கு வெளியே, சிங்களவர்கள் மத்தியில் வாழும் மலையகத் தமிழர்களுக்கும் தொடர்பில்லை. வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்களின் தலைவர்களுடன் இணைந்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த மலையகத் தமிழர் தலைவர் தொண்டமான், சிங்கள அரசுடன் இணைந்த போது கூட ஈழத்தமிழர்கள் அவரை வசை பாடவில்லை ஏனென்றால் மலையாக மக்களின் நலன்களைக் காப்பாற்ற அவர் அப்படிச் செய்ததை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சிங்கள-தமிழ் இனக்கலவரங்களுக்குப் பின்னர் வடக்கு கிழக்குக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் தமிழீழப் போராட்டத்தில் பாரிய பங்களித்துள்ளனர். நான் கூட மலையகத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் உழலாமல், அனைவருமே வடக்கு கிழக்கிற்கு குடிபெயர வேண்டுமென்பதை இணையத்தளங்களில் மட்டுமல்ல, அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டுமேன்பதை ஈழத்தமிழ்ர்களின் மத்தியிலும் வலியுறுத்தி வருகிறேன்.
ஈழத் தமிழர் – மலையகத் தமிழர்கள் இணைப்பு இப்போழுதுள்ளதை விட நெருக்கமாக வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். தமிழர்கள் தமது மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப்படுவதை நிறுத்தவும். மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு இடம் பெயர வேண்டும். அப்படி பலர் இடம்பெயர்கிறார்கள். பல மலையகத் தமிழ் இளைஞர்களுக்கும், யாழ்ப்பாண தமிழ்ப்பெண்களுக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன, இவற்றை எல்லாம் பார்த்து நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன். மலையகத் தமிழர் தலைவர் மனோகணேசனின் கண்ணியமான அரசியல், அவர் மலையகத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப்பது என்பவற்றால் அவரில் எனக்கு மதிப்பும் ஈடுபாடும் உண்டு. ஆனால் இலங்கையில் தமிழீழப் போராட்டத்துக்கு ஒரு மலையகத் தமிழர் தலைமை தாங்க முடியாது அதை சிங்களவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது உதாரணமாக திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக யாழ்ப்பாண வெள்ளாளர் ஒருவர் வருவது போன்றது. இனிமேலாவது நான் சொல்ல வந்தது புரிந்திருக்குமென நம்புகிறேன்.
அதனால் நான் சொல்வதெல்லாம், தமிழீழப் போராட்டம் வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களின் முன்னோர்களின் 2500 வருடங்களாக தமது உயிரையக் கொடுத்துக் காத்த மண்ணைக்காக்கும் போராட்டம். சிங்களவர்களின் வரலாற்றின் அடிப்படையே தமிழர்களிடமிருந்து வடக்கைக் கைப்பற்றுவது தான். அதற்கும் மலையகத் தமிழர்களுக்கும் வரலாற்று தொடர்பு கிடையாது. அதற்காக மலையகத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவருமே தமிழர்கள் என்ற முறையில் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது, தமிழீழம் பிரிந்தால் மலையகத் தமிழர்கள் அங்கு வரமுடியாது அல்லது அவர்களுக்கு பங்கு கிடையாது என்று நான் சொல்வதாக பூச்சாண்டி காட்டுவதை இனிமேலும் தொடரமால் விளங்காது விட்டால் கேளும் விளக்குகிறேன்.
தமிழீழம் பிரிந்தால் மலையகத் தமிழர்கள் மட்டுமல்ல, யூதர்களுக்கு இஸ்ரேல் போல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் வழிவந்த, தென்னாபிரிக்க, பிஜி, கரிபியன் தீவுகள் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசாத தமிழர்களுக்குக் கூட அவர்கள் விரும்பினால் தமிழீழக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டின் நிலமற்ற ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு நிலமளித்து, சன நெருக்கமற்ற யாழ்ப்பாணத்தின் தீவுகளில் எல்லாம் குடியேற்ற வேண்டுமென்று கூட நான் கருத்து தெரிவித்திருக்கிறேன். அந்தக் கனவையெல்லாம் தமிழ்நாட்டுக் கையாலாகாத சோற்றுத் தமிழர்கள் ஞே என்று பார்த்துக் கொண்டிருக்க ஹிந்தியன்கள் சிங்களவர்களுக்கு படை, புலனாய்வுத்துறை, படைப்பயிற்சி என்பன அளித்து நிறைவேறாமல் செய்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது நான் எனது நேரத்தை வீணாக்கி உமக்கெல்லாம் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே என்மீது கோபம் வருகிறது.
****viyasan said...
//இலங்கைக்கு இப்படி நாட்டுப்பற்று என சொல்லிக்கொள்ளும் நீர் பின்னர் எப்படி தமிழ்நாட்டுத்தமிழர்கள் தனி நாடு ஏன் கேட்கவில்லை என கேட்டீர்?//
எந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்பதை முதலில் படித்துப் பாரும். ஈழத்தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்துப் போராடவில்லை என்பது உங்களின் வாதம். அவர்கள் போராடவில்லை ஏனென்றால் அவர்கள் முழு இலங்கையையும் நேசித்தார்கள். தம்மை முதலில் இலங்கையராகக் கருதினார்கள். அதனால் போராட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை. ஆனால் உங்களில் தலைவர்கள் பிரிவினைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தனிநாடு என்று கூச்சல் போட்டார்கள், உம்மைப் போல் எழுதியும் கிழித்தார்கள். அப்பொழுது எங்கே போனதையா அவர்களின் நாட்டுப்பற்று. முன்வைத்த காலை அவரகள் பின்வைத்த காரணம், சிறைக்குச் செல்லப் பயம் அல்லது தமது அரசியல் நலன்கள் பதவி என்பவற்றை அவர்கள் இழக்க விரும்பவில்லை. அதை நாட்டுப்பற்றினால் தனிநாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்காமலிருந்த ஈழத்தமிழ்த் தலைவர்களின் நாட்டுப் பற்றுடன் ஒப்பிட முடியாது.****
வியாசன்: உங்களோட இந்த வாதம் உண்மையிலேயே ரொம்ப நல்லாயிருக்கு! :)
வெளங்காவெட்டி தலைவர் வியாசர்வாள்,
உமக்கு பின்னால் (ஆப்பு வைத்தே)இருந்தே பதிலை ஆரம்பிக்கிறேன்,
//இப்பொழுது கூட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கும், தமிழீழப் போராட்டத்துக்கும் தொடர்பு கிடையாது. அப்படித் தொடர்பு படுத்துகிறவர்கள் ஏதோ புகைக்கக் கூடாதவற்றைப் புகைத்து விட்டு உளறுகிறார்கள்; என்பது தான் கருத்தாகும். :-)//
மொத்தமாக நீரே சொன்னதே இவ்வளவு தான் , நான் மடக்கி கேட்டதும் நாப்பது வரி விளக்கம் சொல்லி அதெல்லாம் இதுக்குள்ள இருந்துச்சு எனக்கு புரியலை என இப்போ சொல்லுறீர்.
நீர் சொன்ன விளக்கம் எல்லாம் மேற்கண்ட நாலு வரிக்குள் எங்கே எப்படி வருதுனு கொஞ்சம் சொல்லுங்கோ :-))
அதுக்கே அப்படி தொடர்பிருக்குனு சொன்னா கஞ்சா அடிச்சவன்னு வேற சொன்னீர் ,இப்போ நீர் தான் அந்த "கஞ்சா பார்ட்டினு" தெளிவா தெரியுது, நிதானமா வாரும் நல்லா "வெளுத்து வாங்குறேன்" :-))
#//ஆனால் உங்களில் தலைவர்கள் பிரிவினைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தனிநாடு என்று கூச்சல் போட்டார்கள், உம்மைப் போல் எழுதியும் கிழித்தார்கள். அப்பொழுது எங்கே போனதையா அவர்களின் நாட்டுப்பற்று. //
நல்லா கதை சொல்லுறேள், தனித்தமிழ்நாடு கேட்டு நடந்த போராட்டங்கள் பற்றி ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா?
இங்கு அப்படி ஒரு போராட்டமே நடக்கவில்லை, கருத்தளவில் பேசினார்கள், பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை,எனவே அப்படியே அமுங்கிவிட்டது.
சரி நீர் சொன்ன இக்கருத்தை பார்ப்போமே,
//தமிழீழம் என்பதை கொள்கையளவில் 1920 களிலேயே ஈழத் தமிழ்த்தலைவர்கள் பேசினார்கள் ஆனால் போராட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கவில்லை. //
தொடர்ச்சி...
தொடர்கிறது...
மேலும் அதற்கு முன்னர் ரொம்ப பெருமையாக தனி ஈழம்னு ஜின்னாவுக்கு எல்லாம் ரொம்ப முன்னாடியே பேசி இருக்கோம்னு பெருமையா பீத்திக்கொண்டீர்,
// ஜின்னாவுக்கு முன்பே ஈழத்தமிழ்த் தலைவர்கள் பிரிவினையால் மட்டும் தான் ஈழத்தமிழர்கள் தமது மொழியைக் கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என உண்ர்ந்து கொண்டார்கள், அது மட்டுமல்ல, 1920 களிலேயே தமிழீழம் என்ற பெயரைக் கூட இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மண்ணாகிய வட- கிழக்கை குறிப்பிடப் பாவித்தனர். அவர்களின் கோரிக்கையை பிரிட்டிசார் உதாசீனம் செய்தமைக்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணத் தமிழர்கள் தேவையில்லாமல் மகாத்மா காந்தியை ஆதரித்து பிரிட்டிசாரின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டதும் தான்.
தமிழீழப் போராட்டம் தந்தை செல்வாவில் தொடங்கப்பட்டு, பிரபாகரனால் முன்னேடுக்கப்பட்டதல்ல, அதற்கு முன்பே ஈழத்தமிழர்களின் தலைவர்களின் சிந்தனையில் உருவானது தான். நான் அதைப்பற்றிய விவரங்கள் எனது வலைப்பதிவில் விரைவில் பதிவு செய்கிறேன். :)//
அப்போ 1920 இல் கொள்கையளவில் தனிநாடு பற்றிப்பேசும் போது ,இலங்கை என்ற நாட்டுப்பற்று காணாமல் போயிருந்தது ,பின்னால் இலங்கை நாட்டுப்பற்று ஓடி வந்து ஒட்டிக்கொண்டதா?
உமக்கு மட்டும் பேசினால் கொள்கை அளவில் என்பீர்கள், அதுவே தமிழ்நாட்டில் தனிநாடுப்பற்றிப்பேசிய பழையத்தலைவர்கள் கூற்றை வைத்து எங்கே போச்சு நாட்டுப்பற்று என்பீரா?
1920 இல் பேசிய தனி ஈழம் பற்றி பின்னர் பேசாமல் இருக்க காரணம் , வெள்ளைக்காரன் கொடுக்கும் சர் பட்டங்களும், பதவி சுகமும் தான் என நான் சொல்லட்டுமா?
சரி தமிழ்நாட்டில் தனிநாடு கேட்க பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என நான் சொன்னப்போது நீர் என்ன சொன்னீர் எனப்பார்ப்போமா?
//அதாவது திராவிடவீரர்கள் தனிநாட்டுப் பிரிவினையைக் கோரியபோது, உணர்ச்சியோடு, உண்மையோடு அதற்காகப் போராடி தமிழ்நாடு பிரிந்திருந்தால் இன்று தமிழ்நாடு மலேசியாவின் வாழ்க்கைத் தரத்துடன் இருந்திருக்கும் என்பது தான்.//
அதாவது ஏன் தமிழர்கள் தனிநாடு வாங்கவில்லைனு நீர் ரொம்ப கவலைப்பட்டீர், ஆனால் நானோ தமிழகத்தில் தனிநாட்டுக்கு ஆதரவில்லை ஒட்டுமொத்தமாக இந்தியாவாக இருக்கத்தான் ஆசை என்பதை விளக்கினேன்.
நான் நீங்கள் ஏன் தனி ஈழம் வாங்கவில்லை எனக்கேட்டதற்கு ஆரம்பவரலாறு எல்லாம் சொல்லிவிட்டு ,இப்பொழுது திடீர் என ஞானம் வந்து எங்க தலைவர்கள் இலங்கையை நேசித்தார்கள் எனவே தனி ஈழம் எனப்போராடவில்லை என இலங்கை தேசபக்தியை கொண்டு வருகிறீர்கள். உங்கள் இலங்கை தேசபக்தி முத்தி போய் "ராசபக்சேவை" கூட தானைத்தலைவன் என சொன்னாலும் சொல்வீர்கள், ஆனால் எம்மிடம் உம்ம இலங்கை தேசப்பற்றை காட்ட வேண்டாம், எங்களைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது மட்டுமே பற்று , இலங்கை என்ற தேசத்தின் மீதல்ல.
இப்படி முன்னுக்கு பின் முரணாக உளறிக்கொட்டும் நீர் எல்லாம் எனக்கு வரலாறு பற்றி சொல்ல வருகிறீர், உம்மோடு பேசுவது நேர விரயம் என்று தெரிந்தும் ஏன் பேசினேன் என்றால் ஈழத்தமிழர்களின் அறியாமை மற்றும் சுயநலத்தினை அனைவரும் புரிந்துக்கொள்ளட்டும் என்றே. அதே போல உமது சாயம் வெளுத்து பரிதாபமாக புலம்பிக்கொண்டுள்ளீர்!
இப்பொழுது அனைவருமே புரிந்துக்கொண்டிருப்பார்கள் ,உம்மை போன்றோரின் நிலையற்ற மன நிலை, மற்றும் தமிழக வெறுப்புணர்வை.
ஒத்துழைப்பிற்கு நன்றி!
வியாசர்வாள்,
//நாட்டுப்பற்றினால் தனிநாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்காமலிருந்த ஈழத்தமிழ்த் தலைவர்களின் நாட்டுப் பற்றுடன் ஒப்பிட முடியாது.//
அப்போ தனி ஈழம்னு பேசினால் "இலங்கை" நாட்டுப்பற்று இல்லாத தேசத்துரோகி என சொல்கிறீர் ,சரியா புரிஞ்சுக்கிட்டேனா?
ஹி...ஹி இப்பவும் உங்கள் அபிமான சிமான் "தனி ஈழம்" ஒன்றே தீர்வு என மேடைப்போட்டு பேசுறா, போதாக்குறைக்கு மறைந்த பிரபாகரன் கூட தனி ஈழத்துக்கு குறைவா எதுவும் வேண்டாம்னு நார்வே சமாதான பேச்சுவார்த்தையை கூட உடைச்சார், அப்போ அவாள் எல்லாம் 'இலங்கை" தேசப்பற்று இல்லாத தேசத்துரோகிகள் தானே :-))
என்னமோ போங்கப்பா ,ஏன் தனி ஈழம் கேட்கலைனா ,ஜின்னாவுக்கு முன்னமே கேட்டோம்னு பெருமையா பீத்த வேண்டியது அப்பாலிக்கா ,தனி ஈழம்னு கேட்டால் ஆது தேசவிரோதம் என இலங்கை தேசப்பற்று பற்றி சொல்ல வேண்டியது , நேரத்துக்கு ஏற்றாப்போல பேச்சை மாத்திட்டே இரும் , பச்சோந்திக்கூட உம்மோட போட்டி போட முடியாது :-))
//இப்பொழுது அனைவருமே புரிந்துக்கொண்டிருப்பார்கள் ,உம்மை போன்றோரின் நிலையற்ற மன நிலை, மற்றும் தமிழக வெறுப்புணர்வை.//
நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும். நீங்கள் சொல்வது போல் எனக்கு தமிழகத்தில் அவ்வளவு வெறுப்புணர்வு அதனால் தான் மிக விரைவில் எனக்கு மனைவியாகப் போகிறவள் கூட அசல் தமிழ் நாட்டுப் பெண். உங்களுடைய உளறல்கள் எல்லாவற்றுக்கும் பதிலளித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நன்றி. :-)
//மிக விரைவில் எனக்கு மனைவியாகப் போகிறவள் கூட அசல் தமிழ் நாட்டுப் பெண்//
ஆஹா எனது வாழ்த்துக்கள் சகோ.
இந்தியர்- இலங்கை இயக்கர் நாகர் உறவுகள் தொடர்ந்து வளரட்டும்:)
பணத்தால்தான் வாக்கு வாங்க முடியும் நிலையயை உருவாக்கிய திராவிட நாய்களே ஓடிப்போயிரு தமிழன் வெல்லும் காலம் இது.. ஜெயலலிதா உனக்கு வேணும்னா அம்மா தமிழனுக்கு அவா சும்மா.. தமிழன் வாழ்க...
நான் வாரேன்டா. நாம் தமிழர்..
நான் வாரேன்டா. நாம் தமிழர்..
Post a Comment